Member
- Joined
- Jan 29, 2025
- Messages
- 111
- Thread Author
- #1
அத்தியாயம் 8.
தோட்டத்தில் உள்ள ஊஞ்சலில் இதழருவி விடாது வேகமாக ஆடிக்கொண்டே இருக்கவும் ஒரு கட்டத்தில் நிலை தடுமாறி கீழே விழந்து மயங்க அவளை முகம் தெரியாத நான்கு பேர் தூக்கி சென்றிருந்தார்கள்.
மாலை நேரம் நெருங்கிக்கொண்டிருந்த சமயத்தில் வீட்டிற்குள் வந்தான் இதழரசன்.
“இதழ்.. இதழ்..”என்று அவளை கத்தி அழைக்கிறான்.
“....”
அவளிடமிருந்து பதில் வராமல் போகவும் பதட்டத்துடன் வீடு முழுக்க அவளை அழைத்தபடி தேடுகிறான்.
அப்பொழுது அரிசி என்ற பஞ்சவர்ணகிளி அவனுக்கு சிறகுகள் மூலம் உணர்த்தி தன்னை பின் தொடர செய்கிறது.
அரிசி தோட்டத்திற்கு பறந்து வந்து அங்கு போடப்பட்ட ஊஞ்சலில் வந்து அமர்ந்து நடந்ததை அவனுக்கு புரிய வைக்க முயன்றது.
இதழரசன் மறுநொடி தாமதிக்காது தோட்டத்தில் ரகசியமாக இருந்த கேமிரா புட்டேஜை தனது மொபைலில் சோதனை செய்ய ஆரம்பித்தான்.
அதில்,அவள் ஊஞ்சலில் வேகமாக ஆடி நிலைதடுமாறி கீழே விழுந்து மயங்கியதும் அவளை முகம் தெரியாத நான்கு பேர் அவளை தூக்கி சென்றதை பார்த்தவனுக்கு மனது நிலைகுலைந்து இடிந்து போய் கீழே மண்டியிட்டு அமர்ந்தவனுக்கு கண்ணீர் நிற்காமல் கன்னத்தில் வழிந்து கொண்டே இருந்தது.
அவனின் நினைவுகள்
இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்த நிகழ்வுகளை நோக்கி செல்ல ஆரம்பித்தது.
அன்று ஞாயிற்றுக்கிழமை,
முதன் முதலாக முதல் முதலாக
பரவசமாக பரவசமாக
உன் முகத்தில் நான் கண்டேன்
புதுமையா உன்னை நான் நேசித்தேன் என்று பாடலை முனுமுனுத்தபடி மகிழுந்தை செலுத்திக்கொண்டிருந்தாள் இதழருவி.
அவள் வாகனத்தை செலுத்திக் கொண்டிருக்கும் பொழுது சாலையின் குறுக்கே ஐந்து வயது நிரம்பிய சிறுவன் ஓடி வந்துதால் திடிரென்று சடன் ப்ரேக் அடித்து மகிழுந்தை நிறுத்திவிட்டாள்.
"ஏம்மா நடு ரோட்டல இப்படிதான் வண்டியை திடீர்னு நிறுத்துவியா?வளர்ந்து இருக்க உனக்கு அறிவு இல்லையா?"இவளின் வாகனத்திற்கு பின்பு வந்த லாரி ட்ரைவர் தன் வாகனத்தில் அமர்ந்துபடி கத்த ஆரம்பிக்க
'அவனிடம் பதில் சொல்வது வீண்.'என்று மனதில் நினைத்தவள் தன் மகிழுந்தில் ஏறி வாகனத்தை உயிர்பிக்க முன்று தோற்று போனாள்.
'அட கடவுளே! என்ன இந்த வண்டி ஸ்டார்ட் ஆகமாட்டிங்கதே? அந்த லாரிக் காரன் வேற காட்டு கத்து கத்துரான்.'என்று மனதில் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது ராயல் என்ஃபீல்டு உயர் ரக வாகனம் ஒன்று அவள் வாகனத்தின் முன்பு நின்றது.
அதில் இருந்து இறங்கினான் ஆறடி ஆண்மகன்.தனது டீசர்ட்டை சரி செய்தபடி இதழருவியை நெருங்கி "என்ன ப்ராப்ளம்?"என்று கேட்டிருந்தான்.
அவனிடம் இதழருவி நடந்ததை கூறினாள்.அந்நேரத்தில் லாரிக்காரன் மேலும் கத்தியதில் அதில் கடுப்படைந்தவன் "ஹலோ.. அதுதான் இவ்வளவு பெரிய ரோட் இருக்கே போக வேண்டியதுதான?
உங்க வண்டிக்கு பின்னாடி இருந்து வர்ர வாகனங்கள் எல்லாமே அப்படிதான போகுது.எதுக்கு இந்த பொண்ண டார்க்கெட் பண்ணி பேசர மாதிரி இருக்கு.
ஒழுங்கு மரியாதையா இங்கிருந்து கிளம்பி போயிடு.இல்ல உள்ள லாக்கப்ல தூக்கி போட்டுவேன்."என்று அவன் மிரட்டும் தொனியில் கூறவும் அந்த லாரிக்காரன் தன் வாகனத்தை உயிர்பித்து அவ்விடம் நீங்கியிருந்தான்.
"சரி.. நான் உங்க கார கொஞ்ச தூரம் தள்ளுரேன்.ஸ்டார்ட் ஆகுதானு பாருங்க."எனக்கூறி விட்டு காரின் பின் பகுதிக்கு சென்று தள்ள ஆரம்பித்தான்.
சிறிது தூரம் அவன் தள்ள ஆரம்பித்ததுமே மகிழுந்து ஸ்டார்ட் ஆகயிருக்க,
"ஏங்க..காரு ஸ்டார்ட் ஆகிடுச்சுங்க.ரொம்ப தேங்க்ஸ்."உற்கசாகமாக காரிலிருந்தே அவள் கத்தி கூறவும்
"இட்ஸ் ஓகே.நீங்க அப்படியே கிளம்பி போங்க.நானும் கிளம்புறேன்."என்று அவன் கத்தி கூறியபடி தன் இருசக்கர வாகனத்தில் அமர்ந்து புறப்பட்டிருந்தான் அவன்.
ராஜேந்திரன் இல்லம்,
"அம்மா..அவ வரவரைக்கும் எல்லாம் என்னால வெயிட் பண்ண முடியாது.மணி பத்தாகுது.எனக்கு ரொம்ப பசிக்குது.சீக்கிரமா சமைத்த டைனிங் டேபிள்ள எடுத்து வைங்க.நான் சாப்பிட்டு வெளிய போகனும்."என்றபடி உணவு மேஜையை நெருங்கி நாற்காலியை இழுத்து போட்டு அமர்ந்தாள் சாதனா.
"என்னடி இப்படி பேசுனா எப்படி?அவ உன்கூட பிறந்த அக்கா டி.அவ உன்மேல் ரொம்ப பாசமா இருக்கா.உனக்காக..."என்று நாச்சியார் மேலும் சொல்லி முடிப்பதற்குள்
"ம்மா.. போதும்.அவளோட புராணத்தயே பாடி என்ன கோபப்படுத்தாம இருங்க."வெறுப்புடன் கூறியவள் தன் அன்னையை தீர்க்கமாக பார்த்தவள் "இப்ப சாப்பாடு எடுத்து வைக்கிரிங்களா இல்ல நான் வெளிய போய் சாப்பிட்டுக்கவா?"என்று கத்தலாக கேட்டிருந்தாள் சாதனா.
சாதனா இப்படி கத்தலாக கூறவும் நாச்சியாரின் முகம் செத்து விட்டது.
"நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்."என்றபடி சமையலறைக்குள் சென்றார் நாச்சியார்.
தான் சமைத்ததை அமைதியாக உணவு மேஜையில் வைத்து விட்டு நடுக்கூடத்திற்கு வந்து நீள்விருக்கையில் அமர்ந்து விட்டார்.
"அதுதான பார்த்தேன்.உன் பெரிய பொண்ணுக்கு மட்டும் பாசத்தோடு பரிமாறுவ.எனக்கெல்லாம் பரிமாறுவியா?"என்று சத்தமாக கேட்டுவிட்டு தட்டில் சாதத்தை பரிமாறி மட்டன் குழம்பை ஊற்றி பிசைந்து சாப்பிட ஆரம்பித்தாள் சாதனா.
அப்பொழுதுதான் இதழருவி போர்டி கோவில் காரை நிறுத்தி விட்டு வீட்டிற்குள் வந்திருந்தாள்.
"அம்மா.."என்று இதழருவி தன் தாயை அழைத்திருக்க
"காலையிலயே எங்க போயிருந்த?"என்றபடி தான் அமர்ந்திருந்த இருக்கையிலிருந்து மேலே எழுந்தார் நாச்சியார்.
"ம்மா.. முதியோர் இல்லத்திற்கு போய் அங்கிருந்த எல்லாருக்கும் இலவசமா வைத்தியம் பார்த்து மாத்திரை எல்லாம் வாங்கி கொடுத்துவிட்டு இப்பதான் வீட்டுக்கே வந்தேன்.ஏம்மா எதாவது ப்ராபளமா?"என்று அப்பாவியாக கேட்டிருந்தாள் இதழருவி.
"ரொம்ப நல்ல விஷயம்தான் பண்ணிருக்கம்மா நீ.ரிப்ரஸ் ஆயிட்டு சாப்பிட வா."என்று நாச்சியார் சொல்ல அமைதியாக தன்னறையை நோக்கி நடை போட்டிருந்தாள் இதழருவி.
"என்னம்மா உன் பெரிய பொண்ணு வந்துட்டா போல?"என்று நக்கலாக கேட்டபடி தட்டிலே கையை கழுவிவிட்டு மேலே எழுந்தவள் தன் தாயின் அருகில் இருந்த மற்றொரு நீள்விருக்கையில் அமர்ந்தாள்.
"...."
"என்னம்மா இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம்?"என்று சாதனா கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது இதழருவி தன் அறையிலிருந்து அவ்விடம் வந்திருந்தாள்.
"ஹாய்..சாதனா."என்று இதழருவி உற்சாகத்துடன் தன் தங்கையை அழைத்திருக்க
"என்ன?"என்று எரிந்து விழுந்தாள் சாதனா.
"சாப்பிடயா?"அக்கறையுடன் பெரியவள் கேட்டிருந்தாள்.
"ம்.. சாப்ட சாப்ட.அம்மா நான் என் ப்ரண்ட் வீடு வரைக்கும் போயிட்டு வந்தர்றேன்."என்றபடி தன் கார் சாவியை ஆள்காட்டி விரலால் சுழட்டியபடி வீட்டின் தலை வாசலை கடந்து போர்டிகோவை நோக்கி நடை போட்டிருந்தாள் சாதனா.
"நாச்சியா..."என்று வீடே அதிரும்படி வீட்டிற்குள் நுழைந்திருந்தார் ராஜேந்திரன்.
"என்னங்க?"
"நான் சம்பாரிச்ச காச எடுத்து யாரும் தானம் தர்மம் பண்ண வேண்டாம்னு சொல்லிவை."இதழருவியின் முகத்தை ஏறெடுத்துப் பார்க்காது கூறியிருந்தார் ராஜேந்திரன்.
"அப்பா நான் உங்க பணத்தயே எடுக்கல.நான் சம்பாரிச்ச பணம் அது.அதுலதான் செலவு பண்ணேன்."என்று இதழருவி தலை குனிந்த படி சிறு குரலில் கூறினாள்.
"அப்படின்னா ரொம்ப சந்தோஷம்."என்று பட்டும் படாமல் கூறியபடி அவரின் அறைக்கு சென்று விட விழிகளில் தேங்கியிருந்த கண்ணீருடன் தன் தாயை பார்த்து சிரித்திருந்தாள் இதழருவி.
"அம்மா.. எனக்கு பசிக்குது.நீங்களும் இன்னும் சாப்டிருக்க மாட்டிங்க.வாங்க சாப்டலாம்."தன் கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்தபடி உணவு மேஜையை நோக்கி நடை போட்டிருந்தாள் இதழருவி.
"கண்டிப்பா உன்ன ஒரு நாள் அப்பா புரிஞ்சுக்குவாரு."என்று தன் பெரிய மகளுக்கு ஆறுதல் அளித்தார் நாச்சியார்.
"பரவால்லம்மா.எப்பவும் நடக்குரதுதான?"எனக்கூறிவிட்டு உணவில் கவனம் செலுத்த ஆரம்பித்தாள்.
காலை உணவை சாப்பிட்டு விட்டு தன் அறைக்கு வந்தவளுக்கு கண்ணீர் மட்டும் நிற்காமல் வந்து கொண்டே இருந்தது.
துடைக்க மனமின்றி குஷன் சோபாவில் அமர்ந்தவள் தன் மனகவலயை போக்க புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தாள்.
இதழருவி எப்பவும் இப்படிதான்.அதிகப்படியான கவலையோ சந்தோஷமாக இருந்தாள் புத்தகத்தில் தான் கவனம் செலுத்துவாள்.
"என்னங்க.."
"ம்.."
"நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கலாமா?"வருத்தம் இழையோடிய குரலில் தன் கணவனிடம் கேட்டிருந்தார் நாச்சியார்.
"இதழருவிய பத்தி பேசாம மத்த எதுப் பத்தி பேசரதா இருந்தா பேசலாம்."வீட்டின் மேற்கூறையை பார்த்தபடி கூறி
னார் ராஜேந்திரன்.
"இல்லிங்க நான் எதுவும் பேசல."வெறுமையான குரலில் கூறிவிட்டு அவ்வறையை விட்டு நீங்கி இருந்தார் நாச்சியார்.