Member
- Joined
- Jan 29, 2025
- Messages
- 111
- Thread Author
- #1
அத்தியாயம் 5.
"இல்லிங்க கேஸ் ஸ்மெல் வந்தமாறி இருந்தது.அதுதான் சமையலறையை நோக்கி போனதல உங்கள கவனிக்காம விட்டுட்டேன்."என்று அப்பாவியாக அவர் முகத்தை வைத்தபடி கூறவும்தான் போனால் போகட்டும் என்று அமைதியானவர் "சரி சாதனா எங்க போனா?"இம்முறை தன் மனைவியிடம் தன்மையாக கேட்டிருந்தார் ராஜேந்திரன்.
"அவ ஆபிஸ் போரதா சொல்லிட்டு போனாங்க."
"சரி நீ போய் வேலையை பாரு."எனக் கூறியவர் தன் மகளுக்கு அழைப்பை விடுத்திருந்தார்.
அப்பக்கம் அழைப்பு சென்று கட்டானதே தவிர அழைப்பு ஏற்கப்படவில்லை.அதில் கடுப்படைந்தவர் அவரின் அலுவுலகத்திற்கு அழைப்பு விடுத்து பேசியவருக்கு கோபத்தால் கண்களே சிவந்து போனது.
'முதல்ல இவளுக்கு கால் கட்டு போடனும்.அதற்கு என்ன வழியோ அத பாக்கரேன்.'என்று மனதில் நினைத்தவர் தரகருக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
அவரின் கோபத்திற்கு ஆளானவளோ ஹை ஸ்பீடில் மகிழுந்தை செலுத்தியபடி கேரளா பார்டருக்குள் சென்று திருவனந்தபுரத்தில் உள்ள வர்கலாவை நோக்கி மகிழுந்தை செலுத்திக் கொண்டிருந்தாள்.
"ஏய் மெதுவா போடி.நீ கார் ஓட்டரத பார்த்தா எனக்கு ரொம்ப பயமா இருக்கு."பயத்தில் வார்த்தைகள் வரவில்லை அவளின் தோழி நிவேதாவிற்கு.
ஒவ்வொரு வார்த்தைகளையும் கோர்த்து திக்கி திணறி கூறவும்தான் மகிழுந்தின் வேகத்தை மட்டுப்படுத்தியிருந்தாள் சாதனா.
"ப்ச்..என்னடி நீ இப்படி தொடநடங்கியா இருக்க?"என்று சலித்துக்கொண்டாள் சாதனா.
"நீ எப்படி வேணா என்ன சொல்லிக்கோ.ஆனா இங்கிருந்து திரும்பி வீட்டுக்கு போரவரைக்கும் இதே வேகத்த மெயின்டைன் பண்ணு.அப்படி இல்ல இதுதான் நான் உன்கோட வர்ர லாஸ்ட் ட்ரிப்."என்று சிறு குரலில் மிரட்டல் விடுத்திருக்க,
"ம்.. சரிடி.என்னோட ஒரே பெஸ்ட் ப்ரண்ட் நீதான்.நீ சொல்லி நான் கேட்காம இருப்பனா?இதே வேகத்த வீட்டுக்கு போற வரைக்கும் மெயின்டைன் பண்றேன் போதுமா."என்று தனது தோழியிடம் வாக்குறுதியாக கூறியவள் மிதமான வேகத்தில் தனது மகிழுந்தை செலுத்திக் கொண்டிருந்தாள் சாதனா.
"எனக்கொரு டவுட்?"அரிசி முறுக்கை ஒரு கடி கடித்தபடி
பலத்த பீடிகை போட்டிருந்தாள் நிவேதா.
"என்ன?"மகிழுந்தை செலுத்தியபடி கேட்டிருந்தாள் சாதனா.
"இல்ல எங்க வீட்டல என் அம்மா அப்பா கிட்ட சொல்லி ப்ரமிசன் வாங்கி கேரளாவள இருக்கிற வர்கலாவ சுத்தி பார்க்க கூட்டிந்து வந்த நீ உன் வீட்டுல சொல்லிட்டு வந்தியா?"
"சொன்னா என்ன மாலை மரியாதை செஞ்சு அனுப்பி வைப்பாங்க பாரு.அட போடி நீ வேற.என் அம்மாகிட்ட ஆபிஸ் போயிட்டு வர்றேன் சொல்லிட்டுதான் வந்திருக்கேன்.
நான் கேரளாவள இருக்கிற வர்கலா ட்ரிப் போறது என் அம்மா அப்பாவுக்கும் தெரியாது.ஆனா இந்நேரம் எங்க அப்பா கண்டுபிடிச்சிருப்பாரு.சோ நோ ப்ராப்ளம்."என்றபடி மகிழுந்தை ஒரு டீ கடையின் முன்பு நிறுத்தினாள்.
"இப்ப எதுக்கு வண்டிய நிறுத்தின?"என்றபடி மகிழுந்தின் கதவை திறந்து கொண்டு இறங்கினாள் நிவேதா.
"ரொம்ப நோரமா வண்டி ஓட்டி ரொம்ப டயார்டா இருக்கு.அதனால டீ சாப்பிட்டு போகலாம்."என்றபடி டீக்கடைக்குள் நுழைந்தாள் சாதனா.
"ஹே..உனக்கு டயார்ட இருக்கரதா சொல்லியிருந்தா நான் கார் ட்ரைவ் பண்ணிருப்பனே."என்று அக்கறையாக நிவேதா கூறியபடி அங்குள்ள நாற்காலியில் அமரவும்,
அவளை முறைப்புடன் பார்த்த சாதனா "எதுக்கு நீ கார் ஓட்டரேன் பேர்ல உருட்டிட்டு போறதுக்கா? "நக்கலாக கேட்டபடி தன் தோழியின் அருகில் அமர்ந்தாள்.
இருவரும் டீ அருந்தி கொண்டிருக்கும் பொழுது அவர்களின் வாகனத்திற்கு பின்பு மற்றொரு உயர்ரக மகிழுந்து வந்து நின்றது.அவ்வாகனத்திலிருந்து சாகித்தியனும் அவனின் தோழன் கதிர் இறங்கியவர்கள் டீ கடையை நோக்கி நடைபோட்டிருந்தனர்.
சாகித்தியன் டீ கடைக்குள் நுழைவதற்கு முன்பே சாதனாவை பார்த்து விட்டு தன் தோழனிடம் "டேய் மச்சி.அந்த பொண்ணுதாண்டா திடீர்னு நடுரோட்டல கார சடன் ப்ரேக் போட்டது.நான் பேசிட்டிருக்க பேசிட்டிருக்க அவ பாட்டுல கார்ல ஏறி போய்ட்டாட.
சரியான திமிர் பிடிச்சவளா இருப்பா போல.அவள பார்த்தாலே எனக்கு செம காண்டாகுது."என்று அவன் கடுப்பாக கூறவும்
"டே நீ வாய மூடிட்டு அமைதியா வா.அந்த பொண்ணு பார்த்தா ரொம்ப டெரரா தெரியது.தேவையில்லாத பிரச்சனை வேண்டாம்."என்று கதிர் சிறு குரலில் தன் நண்பனுக்கு எச்சரிக்கை விடுக்கவும்தான் சாகித்தியன் அமைதியானான்.
தோழர்கள் இருவரும் டீக்கடைக்குள் சென்று அமர்ந்தனர்.
சாதனாவும் சாகித்தியனை பார்த்து விட்டாள்.ஆனால், பெரிதாக கண்டுகொள்ளாமல் டீ அருந்துவதிலயே முனைப்பாக இருந்தாள்.
"நிவேதா நீ டீ குடிச்சு முடிச்சிட்டியா?"
"இங்க பாருடி.உன்ன மாதிரி சூடா இருக்கிற டீயை என்னால வேக வேகமா குடிக்க முடியாது.நான் மெதுவாதா டீ குடிப்பேன்."எனக்கூறி மெதுவாக ஒவ்வொரு சிப்பாய் டீ அருந்த ஆரம்பித்தாள் நிவேதா.
"சரி சரி நீ மெதுவாவே குடி.நான் வெயிட் பண்றேன்."எனக்கூறியபடி தன் கைபேசியில் கவனம் செலுத்த ஆரம்பித்தாள்.
சாகித்தியன் அமைதியாக ஒரு முறை சாதனாவை பார்த்து விட்டு டீ யை அருந்த ஆரம்பித்தான்.
நிவேதா டீயை அருந்தி முடிப்பதற்குள் சாகித்தியனும் கதிரும் டீ அருந்தி முடித்து விட்டு அதற்கான பணத்தை செலுத்தி விட்டு தங்களின் மகிழுந்தில் ஏறி பயணத்தை தொடங்கியிருந்தனர்.
சாதனா தன் தோழியின் பின்னந்தலையில் வலிக்காதுபடி அடித்துவிட்டு "அங்க பாருடி நமக்கு பின்னாடி வந்தவங்க டீ குடிச்சு முடிச்சிட்டு கிளம்பி போறாங்க.ஆனா நீ ஆறிப்போன டீயை அரைமணி நேரமா குடிச்சிட்டு இருக்க.சீக்கிரம் டீயை குடி."என்று அவசரபடுத்த
"ஏண்டி சுடிதண்ணிய காலுல ஊத்தனமாறி என்ன பாடா படுத்துற?"புலம்பலாக கூறியவள்
ஆறிப்போன டீயை முழு மூச்சாக குடித்து முடித்திருந்தாள் நிவேதா.
ஆனந்தி இல்லம்,
"என்ன ஆனந்தி நினைச்சத சாதிச்சிட்டியே?"என்றபடி நடுக்கூடத்திற்கு வந்து நீள்விருக்கையில் அமர்ந்தார் செந்தாமரை.
"என்ன சொல்ரிங்க அக்கா?எனக்கு எதுவும் புரியல."புருவ முடிச்சுடன் குழப்பமாக கேட்டிருந்தார் ஆனந்தி.
"சாகித்தியன அவன் பாட்டி வீட்டுக்கு போகவிடாம செஞ்சியே அதைதான் சொன்னேன்.
எப்படியோ சாகித்தியன் பிறந்த நாள காரணம் காட்டி அவனுக்கு கேரளாவள இருக்கிர வர்கலாவ சுத்தி பார்க்க எல்லா அரேஞ்ச்மென்ட் பண்ணி அவன அவன் ப்ரண்டோட அனுப்பி வெச்சுட்டியே!"பொய்யாக ஆச்சரியப்பட்டார்.
"ஆமாக்கா மூனுநாள் ட்ரிப்.எனக்கு இதவிட்ட வேற வழி தெரியல.அவன் இதுக்கே ஹாஸ்பிடல் விட்டுட்டு போக மாட்டேன்னு ரொம்ப அடம்பிடிச்சான்.
நான்தான் என்னோட பிறந்த நாள் பரிசு.நீ கண்டிப்பா போகனும்.இல்லின்னா நான் உன்கோட பேசமாட்டேன்னு சொன்னேன்.அதுக்கப்புறம்தான் மனசே இல்லாம போயிருக்கான்."எனக்கூறி விட்டு நிம்மதி பெருமூச்சு விட்டிருந்தார் ஆனந்தி.
"சரி ஆனந்தி.தரகர்கிட்ட சாகித்தியனுக்கு பொண்ணு பார்க்க சொல்லிட்டியா?"
"அதெல்லாம் சொல்லிட்டேன் அக்கா.நீ ஃகாபி குடிக்கிரிங்களா? நான் எனக்கு ஃகாபி போடப்போரேன்."எனக்கூறி அவரின் விருப்பத்தை கேட்டிருந்தார் ஆனந்தி.
"நீ அமைதியா இப்படி உட்காரு.அதுதான் சமையல்காரங்க இருக்காங்களே அவங்க போட்டு எடுத்துட்டு வரட்டும்."எனக்கூறிய செந்தாமரை தங்கள் வீட்டில் பணிபுரியும் சமையல்செய்யும் பெண்னை சத்தமாக அழைத்திருந்தார்.
"சொல்லுங்க அம்மா."என்றபடி அவர்களின் முன்பு பவ்வியமாக நின்றாள்.
"எனக்கும் என் தங்கச்சிக்கும் ஸ்ட்ராங்கா ஃகாபி போட்டு எடுத்துட்டு வா."என்று அதிகாரமாக அவர் கூறவும் அப்பெண்மணி சரி என்று தலையசைத்துவிட்டு சமையளறையை நோக்கி வேகமாக நடை போட்டிருந்தாள்.
"பூர்ணா ரூம்ல தூங்கிட்டு இருக்காளா அக்கா?"
"ஆமா ஆனந்தி மருமகன் நாளைக்கு வெளியூர்ல இருந்து வந்துருவாராம்.அவளுக்கு போன் பண்ணி சொன்னதா என்கிட்ட சாப்பிடம்போது சொன்னா."
"அப்படின்னா சரிக்கா.மாப்ளைக்கு விருந்து ஏற்பாடு செஞ்சரலாம்."என்று ஆனந்தி மகிழ்ச்சியுடன் சொல்லவும் பெயருக்கு சிரித்து வைத்தார் செந்தாமரை.
பூர்ணாவின் கணவர் சந்தோஷ்.வீட்டோட மாப்பிள்ளை.சொந்தமாக நான்கு ரிசார்ட்களை வைத்து நடத்தி வருகிறார்.
அந்தி மாலை நேரம் தொடங்கியிருந்தது.
இதழரசன் இல்லத்தில்,
இதழரசனும் இதழருவியும் பால்கனியில் அமைதியாக நின்று சூரியன் மறையும் காட்சியை பார்த்துக்கொண்டிருந்தனர்.
அவர்களுக்கு இடையில் சிறு இடைவெளி இருந்தது.பலத்த அமைதியும் நீடித்துக் கொண்டிருந்தது.மாடி கைபிடி சுவற்றின் மேல் காலி இரண்டு குவளைகள் இருந்தது.அது அவர்கள் டீ அருந்தி விட்டு வைத்ததை சொல்லாமல் பறைசாற்றிக்கொண்டிருந்தது.
கதிரவன் தன்னை முழுவதுமாக மறைத்து சந்திரனுக்கு வழி விட்டிருந்த நேரம் அது.
"இதழருவி வாங்க கீழ போலாம்."கணீர் குரலில் இதழரசன் கூறவும்தான் அமைதியாக அவன் புறம் திரும்பியவள்
"இன்னும் கொஞ்ச நேரம் இங்கிருந்துட்டு வரேங்க.உங்களுக்கு எதாவது வொர்க் இருந்தா நீங்க போய் பாருங்க.ட்ரை டூ அண்டர்ஸ்டேன்ட் மீ."என்று சிறு குரலில் கூறினாள் இதழருவி.
"வொர்க் எல்லாம் எதுவும் இல்லங்க.உங்களுக்கு எப்ப போகனும்னு தோனுதோ அப்ப கீழ போலாம்."என்றவன் பால்கனியில் போடப்பட்ட நாற்காலியில் சென்று அமர்ந்து கொண்டான்.
அவளுக்கு இந்த பால்கனி மிகவும் பிடித்திருந்தது. அந்த இரவில் பால்கனி மேற்கூரையில் ஆங்காங்கே பொருத்தியிருந்த விளக்குகள் பல வண்ணங்களில் ஒளிர்ந்து கொண்டிருந்தது.
சிறிது நேரம் நின்றிருந்தவள் மனதே இல்லாமல் இதழரசன் புறம் திரும்பியவள் "ஏங்க நாம கீழ போலாம்."என்று சிறு குரலில் அவள் கூறவும்தான் தன் கைபேசியை கால் சட்டையின் பாக்கெட்டில் திணித்தபடி மேலே எழுந்து நின்றான் இதழரசன்.
"ம்.."எனக்கூறிவிட்டு மாடிப்படிகளில் இறங்க ஆரம்பித்தான்.அவனை பின்தொடர்ந்தாள் இதழருவி.
இதழருவி நடுக்கூடத்திற்கு வந்தவள் நீள்விருக்கையில் அமர்ந்து கொண்டாள்.அவளை தொந்தரவு செய்யாமல் இதழரசன் சமையலறை சென்று இருவருக்கும் சேர்ந்து இரவு உணவை தயாரிக்க ஆரம்பித்தான்.
ஒரு மணிநேரம் கடந்திருக்கும்.தான் சமைத்த சப்பாத்தியும் பன்னீர் கிரேவியை உணவு மேஜையில் கொண்டு சென்று வைத்தவன் அமைதியாக அவள் அமர்ந்திருக்கும் எதிர் நீள்விருக்கையில் அமைதியாக அமர்ந்தான்.
அவன் அவளுக்கு எதிரில் உள்ள நீள்விருக்கையில் அமர்ந்தது கூட தெரியாமல் தமிழ் கதை புத்தகத்தை வாசிப்பதில் முன்புறமாக இருந்தாள்.
இதழரசனோ தன் முன்னாள் எழிலோவியமாய் நீள்விருக்கையில் அமர்ந்திருக்கும் அவளை தன்னை மறந்து ரசித்துக் கொண்டிருந்தான்.
இன்று கண்களை உறுத்தாத வகையில் லைட் புளூ வண்ணதில் காட்டன் புடவை அணிந்திருந்தாள்.தலைக்கு குளித்திருப்பாள் போலும்.கூந்தலை ப்ரியாக விரித்து விட்டு இரு பக்கமும் முடி எடுத்து க்ளிப் போட்டிருந்தாள்.
புத்தகத்தை சுவராஸ்யமாக படித்துக் கொண்டிருக்கும் பொழுது அடிக்கொரு முறை தான் கழுத்தில் அணிந்திருந்த மெல்லிய தங்கச் செயினின் டாலரை வாயில் வைத்து மெலிதாக கடித்துக்கொண்டதை பார்த்தவன்,
" ஹலோ மேடம் "என்று திடீரென தன் கணீர் குரலில் அவன் அவளை அழைக்கவும் அதில் திடுக்கிட்டு போனவளாக நிமிர்ந்து அவனை பார்த்திருந்தாள் இதழருவி.
"ரிலாக்ஸ்.இல்ல ரொம்ப நேரமா ஸ்டோரி ஃபுக் படிச்சிட்டு இருக்கிங்க.அதுவும் பசிய மறந்து படிச்சிட்டு இருக்கிங்க."என்று மெலிதாக அவன் சிரித்தபடி கூறவும்தான் அவள் தனக்கு பசியெடுப்பதையே உணர்ந்தாள்.
"நீங்க வாங்கிவைச்சிருந்த தமிழ் இங்கிலிஷ் கலக்ஷென் ஸ்டோரி புக்ஸ் படிக்க படிக்க ரொம்ப ஆர்வமா இருக்கு.நீங்க வரவரைக்கும் நான் அந்த புக்ஸ்தான் படிச்சிட்டிருந்தேன்.டைம் போனதே தெரியல."மெல்லிய புன்னகையுடன் அவள் கூறவும்
'அங்கிருக்கிற எல்லா புக்ஸ் கலக்ஸ்சனும் நீ வாங்கி வெச்சதுடி
.அதை இப்ப உன்கிட்ட சொல்ல முடியாத நிலையில இருக்கேன்டி.'என்று மனதில் நினைத்தபடி வருத்தமாக அவளை பார்த்திருந்தான் இதழரசன்.
தொடரும்.