Member
- Joined
- Jan 29, 2025
- Messages
- 111
- Thread Author
- #1
அத்தியாயம் 3.
கதிரவன் மேற்கில் சிறிது சிறிதாக தன்னை மறைத்துக் கொண்டிருந்தான்.வெயிலின் தாக்கம் சற்று மட்டு பட்டிருந்ததை தன் அறையில் ஜன்னல் வழியாக பார்த்தபடி நின்றிருந்தாள் இதழருவி.
சரியாக அந்நேரம் வீட்டிலிருந்த டெலி போன் சத்தத்தால் அவளின் கவனத்தை தன் திசைக்கு திருப்பியிருந்தது.தன் அறையிலிருந்து நடுக்கூடத்திற்கு வந்தவள் பெரிய திரை எல் ஜி டீவியின் அருகில் உள்ள மேசையின் மீது டெலிபோன் அடித்துக்கொண்டிருக்க,
அவள் அவ்வழைப்பை ஏற்று "ஹலோ"
"நான் இதழரசன்.கதவ திறங்க"என்று அப்பக்கத்திலிருந்து கனீர் குரலில் கட்டளையாக அவன் சொல்லியிருக்க,
அவளின் கால்கள் அவளின் அனுமதியின்றி வீட்டு வாயிலின் அதுவை நோக்கி நடை போட்டிருந்தது.
அவள் வீட்டு வாயிலின் கதவை திறந்து அவனுக்கு உள்ளே வர வழி விட்டு ஓரமாக சிறிது தயக்கத்துடன் நின்று இருந்தவள் அவனை காக்கி சட்டையில் பார்த்தவளுக்கு அப்படியொரு அதிர்ச்சி.
"நீங்க போலீஸா?"தன் விழிகளை விரித்து அதிர்வு அகலாத குரலில் அவள் கேட்டிருக்க
"ம்.."என்று ஒற்றை எழுத்தில் தன் கணீர் குரலில் பதில் அளித்தபடி அவளை கடந்து வீட்டுக்குள் வந்தவன் நேராக தன் அறைக்குள் சென்று கதவை சற்றி இருந்தான்.
அவன் சாதாரண உடைக்கு தாவி வெளியே வரும் வரை இதழருவி தான் நின்ற இடத்திலே ஏதோ யோசனை செய்தபடி நின்றிருந்தவளை புருவம் சுருக்கி அவளை பார்த்திருந்தான் இதழரசன்.
"ஹலோ மேடம் கதவை சாத்திட்டு இப்படி வந்து சோபாவுல உக்காருங்க"என்று அவன் சொல்லவும் தான் சுயநினைவு பெற்றவளாக வாயில் கதவை சாற்றி விட்டு நீள்விருக்கையில் வந்து அமைதியாக அமர்ந்தாள் இதழருவி.
"நீங்க மதியம் சாப்பிட்டீங்களா?"அவன் குரலில் உள்ள அக்கறை அவளை ஏதோ செய்தது.
"ம்..சாப்டேங்க.நீங்க?"
"சாப்டேன்.உங்களுக்கு வீட்டுக்குள்ளயே இருக்கரதுக்கு போர் அடிக்குதா?"அவளிடம் பேச வேண்டும் எண்ணத்தில் பேச்சை வழக்க கேட்டிருந்தான்.
"கொஞ்சம் போர்தான்."என்று தன் விழிகளை சுருக்கி தயக்கத்துடன் கூறியவளை சாதாரணமாக பார்த்திருந்தவன்,
"உங்க மெமரிஸ் திரும்ப வர வரைக்கும் நீங்க இங்க தான் இருக்கனும்.அதுமட்டுமல்லாக உங்களுக்கு வெளியே ஆபத்து இருக்கன்னு எனக்கு தோனுது.இந்த வீடுதான் உங்களுக்கு சேப்டி.
அதற்கு இருபத்தி நாலு மணி நேரமும் உங்க ரூம்லயே நான் இருக்க சொல்லல.
இந்த வீட்டுக்குள்ள நீங்க எங்க வேணாலும் போயிக்கலாம் வந்துக்கலாம்.அதுதான் இவ்வளவு பெரிய வீடு இருக்கே.உங்ககூட அரசி துனைக்கு வருவா.
அப்புறம் உங்களுக்கு இதற்கு மீறியும் போர் அடிச்சா நீங்க தப்பா எடுத்துக்கலன்னா எனக்கு போன் பண்ணி பேசலாம்.உங்க ரூம்ல புது டச் போன் சின்ன கபோர்டல இருக்கும்.அதை எடுத்து நீங்க யூஸ் பண்ணிக்கலாம்.
இந்தாங்க அந்த போன்ல இந்த சிம்
போட்டுக்குங்க "என்றவன் தன் வசமிடருந்த சிம்முடன் சிறு காகிதத்தாளையும் அவளின் வலக்கையில் திணித்திருந்தான்.
அவள் புருவ முடிச்சுடன் அந்த சிம்மையும் காகித தாளையும் எடுத்துக்கொண்டு மேலே எழுந்து நின்றவள் "ரொம்ப தேங்க்ஸ்.இதுக்கு மேல என்ன சொல்ரதுன்னு எனக்கு தெரியலிங்க.நான் என்னோட ரூம்க்கு போரேன்."என்று அவனிடம் சொல்லி விட்டு தன் அறைக்குள் சென்று கதவை சாற்றியிருந்தாள்.
இவன் வழக்கில் அடுத்து என்ன செய்யவேண்டும் என்று தீவிரமாக சிந்திக்க ஆரம்பித்திருந்தான்.
இதழருவி தன் அறைக்குள் வந்தவள் முதலில் அந்த சிறிய கபோர்டிக்குள் இருக்கும் அந்த புது அலைபேசியை வெளியில் எடுத்து அவன் கொடுத்த சிம்மை அதில் நுழைத்து அலைபேசியை உயிர்பித்தவள் அந்த காகித தாளில் இருக்கும் அவனின் பத்து இலக்க எண்களை அலைபேசியின் தொடர்பு பட்டியலில் சேமித்திருந்தாள்.
அறையில் சிறிது நேரம் கூட இதழருவியாள் இருக்க முடியவில்லை.மறுநொடி தன் அறைக்கதவை திறந்து நடுக்கூடத்திற்கு வந்தவள் அவனை தன் விழிகளால் தேடினாள்.அவள் விழிகளுக்கு அவன் அகப்படவில்லை.
'மறுபடியும் வெளிய போயிட்டார் போலிருக்கே'என்று மனதில் நினைத்தபடி சோர்வாக தன் இமைகளை அவள் தாழ்த்திய நொடியில் சமையலறையிலிருந்து விசுல் வரும் சத்தம் கேட்டதும் விழிகள் மின்ன சமையலறையை நோக்கி நடை போட்டிருந்தாள் இதழருவி.
"நீங்க எப்படி சமைக்க கத்துக்கிட்டிங்க?"ஆவலாக கேட்டபடி சமையலறைக்குள் வந்தவள் அவளை அறியாமல் அடப்படி மேடையில் ஏறி அமர்ந்தாள்.
அவன் நிமிர்ந்து அவள் அடுப்படி மேடையில் அமர்ந்திருப்பதை பார்த்தவன் மனதிற்குள் சிரித்துக் கொண்டான்.
அவன் தன்னை பார்க்கவும்தான் இதழருவி தான் அடுப்படிமேடையில் அமர்ந்திருப்பதை உணர்ந்து திடுக்கிட்டு போனவளாக "சாரிங்க.தெரியாம அடுப்பு மேடையில உட்கார்ந்துட்டேன்"என்று அவசரமாக கூறியபடி அவள் இறங்க முற்பட
"நோ ப்ராப்ளம்.நீங்க இறங்க வேண்டாம்.அங்கியே உட்கார்ந்துக்கோங்க"என்று மெல்லிய புன்னகையுடன் கூறியவன் குக்கரில் இருந்து மற்றொரு விசுல் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு சின்க்கில் உள்ள பாத்திரங்களை கழுவ ஆரம்பித்தான்.
"கொஞ்சம் தள்ளுங்களேன்.நான் இந்த பாத்திரங்களை கழுவிவெக்கரேன்"என்று அவள் அடுப்படி மேடையில் அமர்ந்து கொண்டு சிறிது தயக்கத்துடன் கூறவும்
அவனோ "தாராளமா"என்றபடி அவன் தன் கைகளை கழுவி தள்ளி நிற்கவும் அவளுக்கு அவன் அப்படி கூறியது ஆச்சரியத்தை வரவழைத்திருந்தது.
வேண்டாமென்று சொல்வான் என்று எதிர்பார்த்திருந்தவளுக்கு அவன் அப்படி கூறியது ஆச்சரியத்தைதான வரவழைத்திருக்கும்.
அவனை பார்த்தபடி அடிப்படி மேடையில் இருந்து கீழே இறங்கியவள் அமைதியாக சென்று சின்க்கிள் உள்ள பாத்திரங்களை கழுவ ஆரம்பிக்கவும்,
இதழரசன் தான் சமைத்ததை ஹாட் பாக்ஸில் எடுத்து போட்டு உணவு மேஜையில் கொண்டு போய் வைத்து விட்டு வந்தான்.
அவன் சமையலறைக்குள் வந்ததும்"ஏங்க பாத்திரத்த எல்லாம் கழுவி வெச்சுட்டேன்"என்று சிறு குரலில் கூறினாள் இதழருவி.
"ம்.. சரி வாங்க ஹால்ல போய் கொஞ்சம் நேரம் உட்கார்ந்துட்டு அப்புறமா சாப்பிடலாம்."என்றபடி அவன் நடக்கூடத்தை நோக்கி நடைபோட அவனை அமைதியாக பின்தொடர்ந்தாள் இதழருவி.
இதழரசன் நீள்விருக்கையில் நடு நாயகமாக மிடுக்குடன் அமர, அவன் இருக்கைக்கு எதிர் இருக்கையில் சிறிது தயக்கத்துடன் அமைதியாக அமர்ந்திருந்தாள் இதழருவி.
என்ன பேசவதென்று தெரியாமல் அவஸ்த்தையாக அமர்ந்திருந்தாள் இதழருவி.
அவளின் அவஸ்தை புரிந்து கொண்டவனாக"ரிலாக்ஸா இருங்க இதழருவி"என்று தனக்கு வராத மென்மையை இழுத்து வைத்து அவன் கூறவும்தான் அவள் நிதானத்திற்கு வந்தாள்.
"உங்களுக்கு பசிக்குதுதா?"அவன் குரலில் உள்ள இனிமை ஒரு நொடி அவளை அசைத்து தான் பார்த்தது.
"லைட்டா."என்று கண்களை சுருக்கி தன் வலக்கையில் உள்ள ஆள்காட்டி விரல் மேலும் பெரு விரல் கீழுமாக பிரித்து வைத்தபடி சிறிய அளவாக அவள் காட்டி கூறிய விதத்தில் சொக்கி தான் போனான்.
அதெல்லாம் ஒரு நிமிடம் தான்.மறுநொடி "சரி வாங்க சாப்பிடலாம்."தன் கனீர் குரலில் கூறியவன் உணவு மேஜையை நோக்கி நடை போட்டிருந்தான்.
ராஜேந்திரன் இல்லம்,
நாச்சியார் உணவு மேஜையில் அமைதியாக தன் கணவனுக்கு உணவு பரிமாறிக்கொண்டிருந்தார்.
"சாதனா எங்க?"என்றபடி உணவில் கவனம் செலுத்த ஆரம்பித்தார் ராஜேந்திரன்.
"அவ ரூம்ல இருக்கா."மெல்லிய குரலில் பதில் கூறினார் நாச்சியார்.
"சாப்ட்டாளா?"
"ம்.சாப்ட்டுதான் அவ ரூம்க்கு போயிருக்காங்க",
"ம்.."என்றபடி கடைசி
வாய் உணவையும் சாப்பிட்டு விட்டு தட்டிலே கை கழுவி கொண்டு அவ்விடத்திலிருந்து அகன்றிருந்தார் ராஜேந்திரன்.
'எவ்வளவு சீக்கிரமா முடியமோ அவ்வளவு சீக்கிரமா அவ கதையை முடிச்சே ஆகனும்.இல்ல எனக்கே அவ ஆபத்தா வந்து நிற்பா.சீக்கிரம் அவளோட கதைய முடிக்கனும்.'மனதில் வன்மமாக நினைத்தபடி யாருக்கோ அழைப்பு விடுத்து தன்னறையில் சில கட்டளைகளை பிறப்பித்திருந்தார் ராஜேந்திரன்.
இங்கு இதழரசன் இல்லத்தில்,
"நான் அப்பலயா கேட்ட கேள்விக்கு நீங்க இன்னும் பதில் சொல்லல?"என்று உணவை உண்டபடி இயல்பாக கேட்டிருந்தாள் இதழருவி.
"என்ன கேள்வி?"உணவை உண்டபடி புருவ முடிச்சுடன் கேட்டிருந்தான் இதழரசன்.
"நீங்க சமையல் எப்படி கத்துக்கிட்டிங்க?"
"ஓ.. யூடியூப் பார்த்து பார்த்து ஒவ்வொன்னா சமைக்க கத்துக்கிட்டேன்.அதவிடங்க.என் சமையல் எப்படி இருக்குன்னு நீங்க சொல்லவே இல்லையே?"என்று அவன் குறைபட்டுக்கொள்ள
"உங்க சமையல் அருமைங்க.ரொம்ப ருசியா இருக்கு.அதனாலதான் நீங்க எப்படி சமைக்க கத்துக்கிட்டிங்கன்னு கேட்டேன்"என்றாள் தோள்களை ஏற்றி இறக்கியபடி.
கடந்தகால நினைவுகள் இழந்தாலும் முன்பு போல் அவள் அவனிடம் இயல்பாக பேசுவது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.
இருவரும் பேசியபடி இரவு உணவை முடித்து விட்டு ஒருவருக்கொருவர் குட் நைட் சொல்லிவிட்டு தத்தமது அறைக்குள் சென்று தஞ்சமடைந்தனர்.
அன்றிறவு அப்படியே கழிந்தது.
ஆனந்தி இல்லம்,
"என்ன ஆனந்தி உன் சின்ன மகனுக்கு தினமும் பார்த்து பார்த்து சமைக்கிற நீ உன் பெரிய மகன நினைக்கிறது கூட இல்ல போலயே?"என்று இளக்கார குறலில் கூறியபடி சமையலறைக்குள் வந்தார் செந்தாமரை.
"அக்கா அவனபத்தி என்கிட்ட பேசாதிங்கன்னு பலமுறை சொல்லிட்டேன்"அழுத்தும் திருத்தமாக ஆனந்தியிடமிருந்து பதில் வரவும் உதட்டை சுழித்துக்கொண்டார் செந்தாமரை.
"நான் சொல்ரேன்னு தப்பா எடுத்துக்காத ஆனந்தி.என்ன இருந்தாலும் அவன் இந்த வீட்டோட வாரிசு.உன்னோட மூத்த மகன்.அவன நீ இப்படி வெறுக்கிறது நியாமே கிடையாது."என்று குறைபட்டுக்கொள்வதைபோல நடித்தார் சொந்தமாரை.
"அக்கா நடந்தது எல்லாம் தெரிஞ்சும் நீங்க அவனுக்கு சப்போர்ட் செஞ்சு பேசரதுதான் அந்நியாமா இருக்கு.ஃப்ளீஸ் அவன பத்தி என்கிட்ட பேசாதிங்க."என்றபடி தன் சிறிய மகனுக்கு காலை உணவை சமைத்து முடித்தார்.
அந்நேரம் சரியாக "என்ன பிங் மம்மியும் மை மம்மியும் சமையல் ரூம்ல ஏதோ ரகசியம் பேசரிங்க போலிருக்கே."கிண்டலாக கூறியபடி சமையல் அறைக்குள் வந்தான் சாகித்தியன்.
"ஆமாட உங்க அம்மா கிட்ட ரகசியம் பேசி நான் என்ன பண்ண போறேன்?எல்லாம் உன் அண்ணன பத்திதான் பேசிட்டிருந்தேன்.உங்க அம்மா பிடி கொடுக்கர மாதிரி இல்ல",என்று செந்தாமரை சலித்தபடி கூறவதை போல நடித்தார்.
"பெரியம்மா அம்மாக்கு பிடிக்காத விசயத்த பத்தி பேசவேண்டாமே",தன் விழிகளால் சாகித்தியன் இறஞ்சவும் அமைதியாக சமையல் அறையிலிருந்து வெளியேறியிருந்தார் செந்தாமரை.
'என்னையும் என் மகனையும் பிரிச்ச பாவம்தான் உன்னை இப்படி ஆட்டுவிக்கிது',என்று மனதில் நினைத்தபடி தன் அறையை நோக்கி நடை போட்டிருந்தார் செந்தாமரை.
அவர் சென்றதை உறுதிப்படுத்திவிட்டு தன் தாயிடம் பேசத்தொடங்கினான் சாகித்தியன்.
"ம்மா.. பெரியம்மா பேசினத பெரிசா எடுத்துக்காதிங்கம்மா.அவங்க ஏதோ அவன் மேல உள்ள அக்கறையில பேசிட்டாங்க.நீங்க எப்பவும் போல சந்தோஷமா இருங்க அம்மா",தன்மையாக தன் அன்னையிடம் கூறியிருக்க
"நான் என்னைக்கும் சந்தோஷமா இருக்காதபடி செஞ்சு வச்சுட்டு அவன் ஹாயா வீட்டு வெளிய போயிட்டானே.அவன நினைச்சாலே எனக்கு பத்திக்கிட்டு வருது"என்று எரிச்சலுடன் பேசியவர் நினைவு வந்தவராக
"சாரிடா.அவன பத்தி பேசி உன்கிட்ட கோபமா பேசிட்டேன்"என்று தன் மகனிடம் தன்மையாக கூறியிருக்க
"பரவாலம்மா"
"நான் கேட்கனும்னு நினைச்சேன்.என்ன அதிசியமா நேரத்திலே
எந்திருச்சுட்ட.என்ன விசயம்?"தன் புருவங்களை உயர்த்தி அவர் அவனிடம் கேட்டிருக்க
அடுத்து அவன் கூறிய பதிலில் எரிச்சலானார் ஆனந்தி.
தொடரும்.

Last edited: