• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Jan 29, 2025
Messages
111
அத்தியாயம் 27.

'அதுதான் எனக்கு பழைய நினைவுகள் அனைத்தும் நினைவுக்கு வந்துவிட்டதே.'என்று மனதிற்குள் நினைத்தபடி அமைதியாக விக்ரமை பார்த்திருந்தாள் இதழருவி.

'இவள் இப்படி அமைதியா பார்க்கரத பார்த்தா இவளுக்கு பழைய நினைவுகள் திரும்பி விட்டதா என்ன?ஆனா உனக்கு பழைய நினைவுகள் திரும்ப வாய்ப்பே இல்லையே?'என்று மனத்திற்ள் நினைத்தவன்,

இதழருவிக்கு பழைய நினைவுகள் திரும்பி விட்டதை உறுதி படுத்திக் கொள்ள திடிரென்று வேக நடையில் சமையலறைக்குள் சென்றவனை புருவம் சுருங்க பார்த்திருந்தாள் இதழருவி.

விஸ்வநாதன், ராஜேந்திரன் மற்றும் அங்கிருந்த ரவுடிகள் அனைவருமே திடிரென்று விக்ரம் வேக நடையுடன் சமையலறைக்குள் சென்றதை குழப்பமாக பார்த்திருந்தனர்.

அவன் சமையலறைக்கு சென்று காய்கறிகள் நறுக்க பயன்படுத்தும் கத்தியை எடுத்துக் கொண்டு திரும்பி வரும் வரை அவன் சென்ற திசையையே அங்கிருந்த அனைவரும் புருவ முடிச்சுடன் பார்த்திருந்தார்கள்.

"விக்ரம் எதுக்கு இப்ப கத்தி எடுத்துட்டு வந்திருக்கிற?"என்று விஸ்வநாதன் கேட்கவும்

"எல்லாம் காரணமாக தான் டாட்."என்று சொல்லிவிட்டு வேகநடையுடன் இதழரசனை நெருங்கியவன் அவனுக்கு எதிராக குத்துக்காலிட்டு அமர்ந்தவன் தனது இடது கையால் அவனின் தலை முடியை கொத்தாக பற்றி தலையை உயர்த்தியவன்

தன் வலது கையில் இருந்த கத்தியை இறுகப் பற்றியவன் பற்களை கடித்தபடி தன் வலது கையை வேகமாக பின்னுக்கு இழுத்து இதழரசனின் நெஞ்சில் குத்த விக்ரம் அதே வேகத்தில் கத்தியை வேகமாக முன்னோக்கி கொண்டு செல்லும் சமயத்தில்,

"இதழரசன்...."அந்த வீடே அதிரும்படி தன் கண்களை மூடி தன்னை மறந்து கத்தியிருந்தாள் இதழருவி.

இதழருவி 'இதழரசன்...'என்று கத்திய கத்தலில் அரைமயக்க நிலையில் இருந்த இதழரசன் சுயநினைவு பெற்றிருந்தான்.

விக்ரம் இதழரசனை கத்தியால் குத்தாமல் இதழருவியையே வெறித்து பார்த்திருந்தான்.

"சாபஷ்..அப்போ உனக்கு பழைய நினைவுகள் திரும்பியதிற்கு முக்கிய காரணம் இவன்தான் இருப்பான்னு எனக்கு நல்ல தெரியும் "என்று இதழரசனை தன் ஆள்காட்டி விரலை கொண்டு சுட்டிக்காட்டி காட்டு கத்தலாக கத்தியிருந்தான் விக்ரம்.

விக்ரம் இந்த உண்மையை கூறிய மறுநொடி ராஜேந்திரன் இதழருவியை வெறித்து பார்த்தார்.

"எனக்கு கிடைக்காத நீ இவனுக்கு கிடைக்கவே கூடாது."என்று பற்களை கடித்தபடி இதழரசனை சுட்டி காட்டவும்,

இதழருவி ஒருவித பயத்துடன் விக்ரமை பார்த்திருந்தாள்.

"ஹான்.. இந்த பயம்... எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு."என்று தன் கண்களை பெரிதாக விரித்து தலையை இடது வலது புறமாக இழுத்து மாறி மாறி அசைத்து பற்களை கடித்தபடி முழு சைகோவாக மாறிய விக்ரமை மிரண்ட விழிகளுடன் பயந்து போய் பார்த்திருந்தாள் இதழருவி.

"சொல்லுங்க.. சொல்லுங்க..உங்க இரண்டு பேருல யாரு முதல்ல சாக போறிங்க?

நீ முதல்ல உயிர விடரியா? இல்ல அவன் முதல்ல உயிர விடனுமான்னு சீட்டு போட்டு பார்க்கலாமா..."கண்களை விரித்து பேய் போல சிரிக்க ஆரம்பித்திருந்தான் விக்ரம்.

"டாடி.. டாடி..ஓ..மை..டாடி
இரண்டு சீட்டு.. போட்டு பாருங்க டாடி.."இதழருவியை வெறித்தபடி ஆழ்ந்த குரலில் கூறியிருந்தான் விக்ரம்.

தற்போது நடந்து கொண்டிருந்த அனைத்தையும் இதழரசன் மயக்க நிலையில் இருப்பது போன்று நடித்தபடி அவதானித்துக் கொண்டிருந்தான்.

விஸ்வநாதன் இரண்டு சீட்டுக்களை குலுக்கி போட்டதும் விக்ரம் ஓடிச்சென்று இரண்டு சீட்டுக்களில் ஒன்றை எடுத்தான்.

"இதழருவி...இதழரசனுக்கு ஏற்ற இந்த இதழருவி தான் முதல்ல உயிர விடனும்னு போட்டிருக்கு.
நீ உயிர விடரதுக்கு முன்னாடி உன்ன ஆச தீர அனுபவிச்சிட்டு கொன்னுடரேன்."என்று பேய் போல தொடர்ந்து சிரித்தபடி இதழருவியை நோக்கி விக்ரம் நடை போட ஆரம்பிக்க,

இதழருவி அமர்ந்தபடியே இரண்டு கைகளை தரையில் ஊன்றி ஊன்றி விக்ரமை மிரட்சியுடன்
பார்த்தபடி பின்னால் நகர ஆரம்பித்திருந்தாள்.
 
Joined
Jan 29, 2025
Messages
111
"அப்பா.. நான் உங்களுக்கு பிடிக்காத பொண்ணாக இருந்தாலும் கூட நானும் உங்க இரத்தம் தான அப்பா.

அப்பா அன்னைக்கு நீங்க பேசினத நான் யார் கிட்டயும் சொல்ல மாட்டேன்.இவன் கிட்டிருந்து என்னையும் இதழரசனையும் காப்பாத்துங்க அப்பா.நாங்க எங்காவது போயிடரோம்."என்று கதறி அழுதபடி கைகளை தரையில் ஊன்றி பின்னால் நகர்ந்து கொண்டிருந்தாள் இதழருவி.

"நீ என்னோட இரத்தம் இல்லை.நீ ஒரு அனாதை."என்று ஒரே போடாக சத்தமாக ராஜேந்திரன் கத்தவும்,அவரை விக்கித்துபோய் பார்த்திருந்தாள் இதழருவி.

இதழருவிக்கு இந்த விசயம் புதிது.'தன்னை உயிருக்கு உயிராக பார்த்துக்கொண்ட தன் தாய் உண்மையான அம்மா இல்லையா?'என்று அவள் நினைக்கும் பொழுதே மனதளவில் நொறுங்கிப் போயிருந்தாள் பாவை.

விக்ரம் இதழருவியின் முடியை கொத்தாக பற்றி அவன் அவளை இழுத்துச் சொல்ல ஆரம்பிக்கவும்,

"இதழரசன்..ஆ..ஆ.. எனக்கு ரொம்ப வலிக்குது என்ன இவன் கிட்டிருந்து காப்பாத்துங்க."பின்னந் தலையை அழுத்தமாக தன் இரண்டு கைகளால் பற்றியபடி கதறலாக தன்னவனை அழைக்க ஆரம்பித்தாள் பாவை.

"அவனனையும் உனக்கு துணையா அனுப்பி வைக்கிறேன்.கவலப்படாம இரு.அதுக்கு முன்னாடி என்னோட வேலையை முடிச்சிடரேன்."என்று பற்களை கடித்தபடி கூறியபடி விக்ரம் இதழருவியை அறைக்குள் இழுத்து செல்ல முயலும் நேரத்தில்,

இதழரசன் 'ஆ...'என்று வெறிபிடித்தவன் போல் கத்தியபடி விருட்டென்று மேலே எழுந்து வேகமாக ஓடிச்சென்று விக்ரமை எட்டி உதைத்து கீழே தள்ளியிருந்தான்.

"டேய்..இவனோட கையை பின்னாடி இழுத்து நல்லா கட்டுசொன்னா..இப்படி லூசா எவண்டா இவனோட கையை கட்டனது?"என்று காட்டு கத்தலாக கத்தியபடி தான் விழுந்த இடத்திலிருந்து தைரியமாக நெஞ்சை நிமிர்த்தி மேலே எழுந்து நின்றான் விக்ரம்.

"டேய்..என்னடா என்னையும் இவனையுமே வெறித்து அப்படி பார்க்கிரிங்க?
இந்த சினிமாவுல வில்லன் சொல்வானே..ஹான் ஞாபகம் வந்துவிட்டது.

நானும் இவன் மட்டும் தான் சண்டை போடுவோம்.நீங்க யாரும் வரக்கூடாதுன்னு நான் சொல்வேன்னு நீங்க எதிர் பார்க்காதிங்கடா..
நான் வேற மாதிரி.

இவன வந்து அடிச்சு நொறுக்குங்கட.எனக்கு எப்பவும் முதுகுல குத்துறதா வழக்கம்."என்று பற்களை கடித்தபடி விக்ரம் கண் அசைக்கவும்

அந்த ரவுடிகள் அனைவரும் இதழரசனை சூழ்ந்து தாக்குவதற்கு முயற்சித்தார்கள்.

நொடி நேரத்தில் தன் முழு பலத்தையும் ஒன்று திரட்டி பற்களை கடித்தபடி அந்து முப்பது ரவுடிகளையும் அடித்து துவைக்க ஆரம்பித்திருந்தான் இதழரசன்.

தான் கத்து வைத்திருந்த அனைத்து தற்காப்பு கலைகளையும் வெறிப் பிடித்தவன் போல பயன்படுத்தியிருந்தான் இதழரசன்.

இம்முறை விக்ரம் இதழரசனை பின்னால் தாக்க வரும் பொழுது நிமிடத்தில் திரும்பி விக்ரமை தாக்கியிருந்தான் இதழரசன்.

தன் வாயில் வழிந்த இரத்தத்தை துடைத்து விட்டு நிமிர்ந்து நின்று இதழரசனை எதிர் கொள்ள தயாராக இருந்தான்.

"என் வாழ்க்கையில முதல் தடவையாக மறைந்து தாக்கமாக நேருக்கு நேர் நின்னு தாக்கப்போரேன்."என்று பேய் போல சிரித்தபடி இதழரசன் எதிர்பார்க்காத சமயத்தில் ஓடி வந்து விக்ரம் தாக்க முற்படும் பொழுது,

அதை இதழரசன் லாவகமாக தடுத்து விக்ரமின் வலது கன்னத்தில் ஓங்கி பன்ச் வைத்திருந்தான்.

உனக்கு சளைத்தவன் நானில்லை என்பதை போல விக்ரம் இதழசனை எட்டி உதைத்திருந்தான்.

இவர்கள் இருவரும் ஒருபக்கம் தீவிரமாக சண்டையிட ஆரம்பிக்க, ராஜேந்திரன் இதழருவியின் வாயில் கைவைத்து அழுத்தி இதழருவியை ஒரு அறைக்குள் தள்ளி விட்டு கதவை சாற்ற முற்படும் நேரத்தில்,

அவரின் பின்னந்தலையில் ஓங்கி கட்டியால் அடித்திருந்தாள் சாதனா.

ராஜேந்திரன் வலியில் இதழருவி வாயின் மேல் தான் வைத்திருந்த கரத்தை தன்னிச்சையாக அகற்றி திரும்பி தன் மகளை பார்த்தவருக்கு அப்படியொரு அதிர்ச்சி.

"சாதனா..."

"சீ.. உங்க வாயால என்ன அப்படி கூப்டாதிங்க.
குறிப்பா நீங்களும் அதோ அம்மா கிட்ட அடிவாங்கிட்டு இருக்கானே அந்த ஆளு பேசனத நானும் அம்மாவும் கேட்டோம்.

நீயும் அந்த ஆளும் இதழருவிய கொன்று அவ உறுப்புகள வெளிநாட்டுக்கு அனுப்புலாம்னு எப்ப முடிவு பண்ணி நீ இதழருவிய நெருங்கும் பொழுது நானும் அம்மாவும் வீட்டுக்குள்ள வந்துட்டோம்."என்று கத்தியபடி மீண்டும் ஓங்கி அவரின் தலையின் நடுப்பகுதியில் அடித்திருந்தாள் சாதனா.

"என்னடா காருல ஊருக்கு போயிட்டு இருந்தவங்க எப்படி திடிரென்று திரும்பி வந்தாங்கன்னு உங்களுக்கு சந்தேகமா இருக்கா?"என்று ஆழ்ந்த குரலில் தன் தந்தையை பார்த்து கேட்டவள் மேலும் தொடர்ந்தாள்.

உங்க நடக்கவடிக்கையில் எனக்கு கொஞ்ச நாளா சந்தேகம்.அதுவும் இல்லாம உங்க அலுவுலக அறை மட்டும் இந்த நடுக்கூடத்துல உங்களுக்கே தெரியாம நான் ரகசிய கேமரா வெச்சிருந்தேன்.

இப்ப உங்களுக்கு எல்லாம் புரிந்து இருக்கும் என்று நான் நம்புகிறேன்."என்றபடி கன்னத்தில் வழிந்த கண்ணீரோடு ஓங்கி அடித்திருந்தாள் சாதனா.

"என்ன மன்னிச்சிடுங்க அப்பா.நீ யாரு கையாலயும் சாகக்கூடாது "என்று அவள் பேசிக்கொண்டிருக்கும் பொழுது தன் முழு பலத்தையும் ஒன்று திரட்டி தன் மகளை எட்டி உதைத்திருந்தார் ராஜேந்திரன்.

அவள் எட்டி உதைத்த வேகத்தில் சாதனாவின் நெற்றி மேசையின் முனையில் பலமாக இடித்து அப்படியே மயங்கி கீழே விழுந்தாள்.

"எனக்கென்னு வந்து சேருது பாரு.."என்று அவர் சாதனாவை பார்த்து எரிச்சலுடன் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது இதழருவி தன் கையில் வைத்திருந்த மரக்கட்டையை இறுக்கமாக பற்றி தன் பலத்தை ஒன்று திரட்டி அவரை பின்னந்தலையில் ஓங்கி அடித்திருந்தாள்.

ராஜேந்திரன் அப்படியே மயங்கி கீழே சரிந்தார்.அதே நேரத்தில் இதழரசன் விக்ரமை வீழ்த்தி அவனின் கரங்களில் கை விலங்கை மாட்டியிருந்தான்.

கார்த்திகேயன் போலிஷ் போர்ஸ்டன் சரியான நேரத்திற்கு அங்கு வந்து அங்கிருந்த அனைத்து ரவுடிகளையும் கைசெய்து அவர்களை ஒரு மினி பஸ்ஸில் அடைக்க ஆரம்பித்திருந்தார்கள்.

இறுதியில் விஸ்வநாதன், விக்ரம், ராஜேந்திரன் மூவரை கைது செய்து அவர்களை ஜீப்பில் ஏற்றி மருத்துவ மனைக்கு பலத்த பாதுகாப்புடன் அனுப்பியிருந்தார்கள்.

"வெல்டன்.. கார்த்திகேயன் சரியான நேரத்தில் இங்க வந்ததற்கு."என்று அவனின் தோளை தட்டியபடி இதழரன் சொல்லவும்,

"சார்..நீங்க போன சுவிட் ஆப் பண்ணி ஃகுளு குடுத்துதால மட்டும்தான் இங்க நான் சரியான நேரத்திற்கு வரமுடிந்தது."என்று மெலிதாக புன்னகைத்திருந்தான் கார்த்திகேயன்.

"சார் இதழருவி அழுற சத்தம் கேட்கது.."என்றபடி இதழருவி அமர்ந்திருந்த திசையை கார்த்திகேயன் கைகாட்டியிருக்க,

இதழரசன் ஓடிவந்து இதழருவியின் அருகில் அமர்ந்தவன் "என்னாச்சு இதழ்.."என்று அன்புடன் கேட்டதுதான் தாமதம்

"சீக்கிரம் அம்மாவ ஹாஸ்பிடல் கொண்டு போகனும்.இல்லின்னா அவங்களோட உயிருக்கு ஆபத்தாகி விடும்."என்று இதழருவி கூறிய மறுநொடி,

"இதழ் நீ முதல்ல வெளிய போய் உன்னோட கார ஸ்டார்ட் பண்ணி ரெடியா இரு."என்றபடி நாச்சியாரை தன் கரங்களில் ஏந்தி வேகமாக நடக்க ஆரம்பித்தான் இதழரசன்.

நாச்சியாரை காரின் பின் பகுதி இருக்கையில் கிடத்திவிட்டு இதழருவியை பின்னால் அமரச் சொல்லிவிட்டு தான் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து வாகனத்தை செலுத்த ஆரம்பித்தான்.

செல்வதற்கு முன்பு சாதனாவை தன் தம்பியின் மருத்துவமனைக்கு அழைத்து வரும்
படி அவசர தொனியில் சொல்லி விட்டுதான் வாகனத்தையே செலுத்த ஆரம்பித்திருந்தான்.

தொடரும்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top