• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Jan 29, 2025
Messages
111
அத்தியாயம் 26.

'அப்போ இந்த விக்ரம கைது செய்ய இந்த ஒரு ஆதாரம் போதுமே?'என்று மனதில் நினைத்தவன் வெளியில்

"நீங்க எங்க கூப்பிட்டாலும் வந்து சாட்சி சொல்வீங்கதான?"என்று அருவியிடம் கார்த்திகேயன் கேட்டிருந்தான்.

"கண்டிப்பா சார்."என்று அருவி உறுதியாக சொல்லவும்,

மேலும் சில விவரங்களை கேட்டு விட்டு அருவி அட்மிட் செய்யப்பட்ட அறையிலிருந்து வெளியே வந்தவன் நேராக சாகித்தியன் கேபினுக்கு வந்திருந்தான்.

நல்ல வேளையாக சாகித்தியன் தற்பொழுது அவனின் கேபினில் இருந்தான்.

"கார்த்திகேயன் நீங்க அந்த பொண்ணு கிட்ட விசாரிச்சிட்டிங்களா?"என்று சாகித்தியன் கார்த்திகேயனை பார்த்துதமே கேட்டிருக்க

"விசாரிச்சிட்டேன்.அந்த பொண்ணு பெயர் அருவி.வளர்ந்தது படிச்சது எல்லாமே அனாதை ஆசிரமம்தான்."என்று கூறியவன் நினைவு வந்தவனாக,

"சாகித்தியன் நீங்க ஒரு சின்ன உதவி செய்யனும்?"சாகித்தியனிடம் கோரிக்கையாக கேட்டிருந்தான் கார்த்திகேயன்.

"சொல்லுங்க.என்னால முடிந்த உதவியை கண்டிப்பா செய்யறேன்."உறுதியான குரலில் சாகித்தியன் கூறவும்

"நீங்க இந்த பொண்ண பத்திரமா நான் வரைக்கும் பார்த்துக்கனும்.இந்த பொண்ணு பாதிக்கப்பட்ட பொண்ணு.அது மட்டும் இல்லாம இந்த இங்க இருக்கரது யாருக்கும் தெரியக் கூடாது.

நான் இன்னும் சில ஆதாரங்களை தேடி போக வேண்டியது இருக்கு."என்று சாகித்தியனிடம் கூறி விட்டு இதழரசனுக்கு அழைப்பு விடுத்திருந்தான் கார்த்திகேயன்.

மறுமுனை அழைப்பு செல்லாது சுவிட்ச் ஆப் என்று வந்ததும் கார்த்திகேயனுக்கு ஏதோ தவறாக பட்டது.

ராஜேந்திரன் இல்லம்,

அரசி இதழருவி அறைக்கு சென்ற மறுநொடியே ராஜேந்திரன் சமையலறைக்குள் சென்றார்.

நாச்சியார் முன்புறமாக மதிய சமையலுக்கு காய்கறிகளை வெட்டிக் கொண்டிருந்தார்.

"நாச்சியா ஊர்ல அம்மாக்கு உடம்பு சரியில்லையாம்.இப்பதான் போன் வந்துச்சு."என்று ராஜேந்திரன் கூறியதுதான் தாமதம்

"என்னங்க சொல்ரிங்க? அத்தைக்கு என்ன ஆச்சு? நேத்து இரவு கூட என்கிட்ட நல்லதானா பேசுனாங்க."என்று படபடப்பாக அவர் சொல்லவும்

"அம்மாக்கு காய்ச்சல்.நீ இரண்டு நாள் அங்க போய் இருந்து பார்த்துக்கோ.சாதனா உன்கூட வருவா.நான் சாதனா கிட்ட பேசிட்டேன்."என்று ராஜேந்திரன் கூறவும்

"ஏங்க அப்போ இதழருவி..?"என்று அவர் தயக்கத்துடன் கேட்டிருக்க

"விக்ரம் நாளைக்கு இதழருவி துணிக்கடைக்கு கூட்டிட்டு போய் மூகூர்த்த பட்டுப்புடவை எடுக்கரதா என்கிட்ட சொல்லியிருக்கான்.

இன்னும் இவங்க கல்யாணத்துக்கு ஐந்து நாள் தான் இருக்கு.நீ ஒன்னும் பயப்படாத.இதழருவிய பார்த்துக்க அரசி இருக்காளே.அவ பார்த்துப்பா."என்று ராஜேந்திரன் சொல்லவும்

மெளனமாக தலையசைத்தபடி அமைதியாக சமையலறையிலிருந்து வெளியேறி தன் அறைக்கு வந்தவர் இரண்டு செட் துணிகளை எடுத்துக் கொண்டு நடுக் கூடத்திற்கு வந்திருந்தார்.

அப்பொழுதுதான் அரசி மாடிப்படிகளில் இறங்கி நடுக் கூடத்திற்கு வந்தவள் பையோடு நின்றிருந்த நாச்சியாரை புருவ முடிச்சுடன் பார்த்திருந்தாள்.

நாச்சியாரும் அரசியை பார்த்ததும் என் அத்தைக்கு உடம்பு சரியில்லை.அதனால நானும் சாதனாவும் ஊருக்கு போறோம்.இரண்டு நாள் கழிச்சு திரும்ப வருவோம்.

அதுவரை நீங்க இதழருவிய பார்த்துக்கோங்க."என்று சன்ன குரலில் நாச்சியார் கூறவும் பெண் வேடத்தில் இருந்த இதழரசன் மெளனமாக சரி என்பது போல் தலையை அசைத்திருந்தான்.

ராஜேந்திரனுக்கு தான் யார் என்று விசயம் தெரிந்து விட்டது அதனால் தான் அவசர அவசரமாக அவரின் மனைவி மகளை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கிறார் என்று.

சில நிமிடங்களில் சாதனாவும் சிறிய ட்ராலி பையுடன் வெளியே வந்தாள்.அதே நேரத்தில் ராஜேந்திரன் வேக நடையுடன் வீட்டிற்குள் வந்தவர்,

"இரண்டு பேரும் கிளம்பி ரெடியா இருந்தீர்கள் என்றால் மகிழுந்து நிறுத்தி வைக்கப்பட்ட இடத்திற்கு வர வேண்டியது தான?

உங்கள ஒரு ஆள் அழைக்கனுமா? டிரைவர் வாகனத்தை உயிர்ப்பித்து ரெடியா இருக்கான்."என்று அரிசியை அழுத்தமாக பார்த்தபடி பற்களை கடித்தபடி சொல்லவும்,

நாச்சியாரும் சாதானவும் அமைதியாக கைப் பையுடன் வீட்டின் முக வாயிலை கடந்து வெளியே வந்தவர்கள் மகிழுந்தில் ஏறி அமரவம் அந்த மகிழுந்து நொடியில் செல்ல ஆரம்பித்தது.

ராஜேந்திரன் திரும்பி வீட்டிற்குள் வருவதற்கு முன்பு இதழரசன் பெண் வேடத்தை களைந்து காக்கி உடையில் நடுக் கூடத்தில் போடப்பட்ட நீள்விருக்கையில் நடுநாயகமாக அமர்ந்திருந்தான்.

"என்னே வேசம்!என்னே நடிப்பு!அப்பப்பா எனக்கு தலையே சுற்றுகிறது."என்று தலையை உலுக்கியபடி இதழரசன் அமர்ந்திருந்த நேர் எதிர் நீள் விருக்கையில் கால் மேல் கால் போட்டபடி அமர்ந்திருந்தார் ராஜேந்திரன்.

"சும்மா சொல்லக்கூடாது அங்க்கிள்.இதழரசன் பெண் வேடத்துல இருக்கும் போது நச்சுன்னு இருந்தான்."நமட்டுச் சிரிப்புடன் ராஜேந்திரன் அருகில் அமர்ந்தான் விக்ரம்.

இதழரசன் அமைதியாகவே அமர்ந்திருந்தான்.

"அங்க்கிள் இவன் நம்மகிட்ட தனியா வந்து மாட்டியிருக்கான்.இந்த தடவ இந்த வாய்ப்ப நான் தவற விடவே மாட்டேன்.

அங்க்கிள் எனக்கும் இதழருவிக்கும் இவன் கண்ணு முன்னாடி இப்போ இந்த நிமிசமே கல்யாணம் நடக்கனும்.எங்க கல்யாணத்த பார்த்த பின்னாடிதான் இவன் உயிர் பிரியனும்."என்று விக்ரம் கூறிக் கொண்டிருக்கும் பொழுதே இதழரசன் ஓடி வந்து விக்ரமை எட்டி உதைத்து கீழே தள்ளியிருந்தான்.

அதற்குள் அங்கு முப்பதுக்கும் மேற்பட்ட ரவுடிகள் வீட்டிற்குள் நுழைந்து இதழரசனை தாக்குவதற்கு முயல ஆரம்பித்தனர்.

இதழரசனும் தன்னை தாக்க வந்த ரவுடிகளுடன் சண்டையிட ஆரம்பித்தான்.

அவன் அந்த ரவுடிகளுடன் முன்புறமாக சண்டையிட்டுக் கொண்டிருக்கும் பொழுது விக்ரம் பற்களை கடித்தபடி இரும்பு ராடைக் கொண்டு இதழரசனின் பின்னந் தலையில் ஓங்கி அடித்திருந்தான்.

இதழரசன் நிலை தடுமாறியபடி விக்ரமை தாக்க வந்தபொழுது அவனை எட்டி உதைத்து தள்ளியிருந்தான் விக்ரம்.

இதழரசன் மீண்டும் நிலைதடுமாறி கீழே விழுந்ததும் ரவுடிகள் இதழரசனை கன்னா பின்னாவென்று தாக்க ஆரம்பித்தனர்.

இதழரசன் வாயில் இரத்தம் கசிய ஆரம்பித்தது.

"டே..டே..அவன் செத்துரப் போரான்.அவனுக்கு தற்காலிகமா ஓய்வு கொடுங்க.எனக்கும் உங்க அண்ணிக்கும் திருமணம் நடந்த பிறகு அவனோட உயிர எடுத்துடங்க."என்று நக்கல் புன்னகையுடன் கூறினான் விக்ரம்.

அதே நேரத்தில் இதழரசன் ஆழ்ந்த மயக்கத்திற்கு சென்றிருந்தான்.

விக்ரம் மீண்டும் இதழருவி அறைக்கு வந்தவன் தாழ்ப்பாளை தள்ளி வேகமாக அறைக்குள் வந்தவன்,

"இதழருவி சீக்கிரமா நல்ல புடவையா கட்டிட்டு கீழ வா.நாம மூகூர்த்த புடவை எடுக்க இன்னைக்கே துணிக் கடைக்கு போகனும்.

நேரத்த வீணாக்கமா சீக்கிரமே கீழ வா.நான் உனக்காக கீழே வெயிட் பண்றேன்."என்று அவசர தொனியில் அவன் சொல்லவும் மெளனமாக சரி என்பது போல தலையை அசைத்திருந்தாள் இதழருவி.

இதழருவி சம்மதம் என்று தலையசைத்த மறுநொடி விருட்டென அந்த
அறையிலிருந்து வெளியேறியவன் வேகமாக படிகளில் தட்..தட்.. என்று இறங்கி நடுக் கூடத்திற்கு வந்தவன்,
 
Joined
Jan 29, 2025
Messages
111
"இதழருவி சீக்கிரமா நல்ல புடவையா கட்டிட்டு கீழ வா.நாம மூகூர்த்த புடவை எடுக்க இன்னைக்கே துணிக் கடைக்கு போகனும்.

நேரத்த வீணாக்கமா சீக்கிரமே கீழ வா.நான் உனக்காக கீழே வெயிட் பண்றேன்."என்று அவசர தொனியில் அவன் சொல்லவும் மெளனமாக சரி என்பது போல தலையை அசைத்திருந்தாள் இதழருவி.

இதழருவி சம்மதம் என்று தலையசைத்த மறுநொடி விருட்டென அந்த அறையிலிருந்து வெளியேறியவன் வேகமாக படிகளில் தட்..தட்.. என்று இறங்கி நடுக் கூடத்திற்கு வந்தவன்,

"அங்க்கிள் அப்பா இங்கதான் வந்துட்டு இருக்காரு.அங்க்கிள் தாலிக்கு என்ன பண்றது?"டென்சனில் நெற்றியை கீறியபடி விக்ரம் கேட்டிருந்தான் விக்ரம்.

"என் மனைவி நிறையா மஞ்சள் சரடுகளை பூஜை அறையில் வைத்திருப்பாள்.அதிலிருந்து ஒரு சரடை எடுத்து மஞ்சள் கிழங்கை அதோட கட்டி தரேன்."என்று ராஜேந்திரன் சொல்லவும்

"நன்றி மாமா."என்று அவரை ஆரத்தழுவிட்டு விலகி நின்றான் விக்ரம்.

சிறிது நேரத்தில் எளிமையான புடவை அணிந்து ஒப்பனை இல்லாத அழகு முகத்துடன் கீழே வந்திருந்தாள் இதழருவி.

கீழே வந்தவளுக்கு இதழரசனை அந்த நிலையில் பார்த்ததும் அப்பொடியொரு அதிர்ச்சி.அவளுக்கு இதழரசனை அந்த நிலையில் பார்த்ததும் மனது பிசையத் தொடங்கியது.

"இதழி இனிமேல் இவன் நமக்கு இடையில் வரவே மாட்டான்.இவனுக்கு என்ன திமிர் இருந்தா என்ன பழிவாங்க உன்ன கடத்தி கொண்டு போய் அவன் வீட்ல வைத்திருப்பான்?

இங்க பாரு இதழி,இப்போ உனக்கும் எனக்கும் இவன் கண்ணு முன்னாடி கல்யாணம் நடக்கப்போகுது."என்று விக்ரம் சொல்லவும் மனதிற்குள் அதிர்ந்து போய் ஒரு வித மிரட்சியுடன் அவனை பார்த்திருந்தாள் இதழருவி.

இதழரசன் அரை மயக்க நிலையில் விக்ரம் பேசிக் கொண்டிருந்ததை கேட்டுக் கொண்டிருந்தான்.

இதழரசனின் இரண்டு கைகளை பின்புறம் ஒன்று சேர்த்து கட்டி அவனை சுவற்றில் சாய வைத்து அமர வைத்திருந்தனர்.

அரை மயக்க நிலையில் அவனின் தலை கீழே தொங்கியிருந்தது.அவனின் வாயின் ஓரத்தில் இரத்தம் கசிந்து காயத் தொடங்கியிருந்தது.

"இல்ல எனக்கு உங்கள கல்யாணம் பண்ணிக்க விருப்பமில்லை."என்று அவள் கூறி முடிப்பதற்கு முன்பு அவளின் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தான் விக்ரம்.

அவன் அறைந்த அறையில் 'அம்மா..'என்ற அலறலுடன் மல்லாக்காக கீழே விழுந்திருந்தாள் இதழருவி.பின்னந்தலையில் சுருக்கென்று அடிபடவும் அவளுக்கு பழைய நினைவுகள் சிறிது சிறிதாக நினைவுக்கு வர ஆரம்பித்தது.

சிரமப்பட்டு மேல எழ அமர முயற்சித்துவளுக்கு தலை விண்..விண் என்று வலிக்க தொடங்கியது.

"உனக்கு விருப்பம் இருக்குதா இல்லையான்னு நான் கேக்கல.இந்த இடத்துல இவன் கண்ணு முன்னாடி நம்ம கல்யாணம் நடக்கனும்."என்றபடி இதழருவி முன்பு திமிராக நின்றிருந்தான் விக்ரம்.

இதழருவி மல்லாக்காக படுத்திருந்தவள் நெற்றியை இருக்கமாக பற்றியபடி விக்ரமையே வெறித்து பார்த்திருந்தாள்.

விக்ரம் அவள் மேலே எழ கைகொடுக்கவும் அவனின் கரத்தை வேகமாக தட்டிவிட்டு
தானே சிரமப்பட்டு மேலே எழுந்து அமர்ந்தவள்,

"நீ தயவு செய்து இங்கிருந்து போயிடு."என்றவளின் விழிகளில் ராஜேந்திரன் விழுந்தார்.

"இதழருவி விக்ரமதா நீ கல்யாணம் பண்ணிக்கனும்.அதுவும் இன்னைக்கே."என்று தன் கணீர் குரலில் ராஜேந்திரன் சொல்லவும்,

அவரை தீர்க்கமாக பார்த்திருந்தாள் இதழருவி.அவளுக்கு அனைத்தும் நினைவுக்கு வந்து விட்டது.

அரை மயக்கத்தில் இருந்து இதழரசனை ஒரு பார்வை பார்த்துவிட்டு "விக்ரம கல்யாணம் பண்ணிக்க எனக்கு சம்மதம் இல்ல."என்று அழுத்தமாக கூறியிருந்தாள் இதழருவி.

"இங்க பாரு இவனும் நீயும் மனசார இரண்டு வருடம் விரும்பியிருக்கிங்க.இப்ப திடிரென்று நீ கல்யாணம் வேண்டாம்னு சொன்னா எப்படி?"என்று நைச்சியமாக பேச ஆரம்பித்தார் ராஜேந்திரன்.

"நான் ஒருவேளை விக்ரம விரும்பி இருக்கலாம்.எனக்கு என்னோட பழைய நினைவுகள் திரும்பர வர வரைக்கும் கல்யாணத்த பத்தி யோசிக்க முடியாது."என்று அழுத்தமாக இதழருவி கூறிய மறு நொடி,

விக்ரம் இதழருவியை அடிப்பதற்கு பாய்ந்து கொண்டு வரும் பொழுது அவனை விஸ்வநாதன் தடுத்து நிறுத்தினார்.

தனக்கு பழைய நினைவுகள் திரும்பி வந்தது இவர்களுக்கு தெரியக்கூடாது என்பதில் தீவிரமாக இருந்தாள்.

"விக்ரம் நீயும் நானும் உண்மையாவே காதலிச்சமா? எனக்கு ரொம்ப சந்தேகமாக இருக்கு.

உனக்கு முனுக்குன்னா கோபம் வந்திடது.எனக்கு ஒன்னு புரியல?நாம இரண்டு வருசமா காதலிக்கும் போது இப்படிதான் என்னை அடிச்சியா?

அப்படி என்னை அடிச்சிருந்தா நிச்சயமா நமக்கு ப்ரேக் அப் ஆயிருக்கும்.எனக்கு என்னமோ நீ பொய் சொல்றியான்னு தோனுது.

எந்த ஆண்மகன் தான் உண்மையா நேசிச்ச பொண்ண கஷ்டப்படுத்த நினைக்க மாட்டாங்க.

அவங்க காதலிச்ச பொண்ணோட விருப்பம் என்னென்னு முதல் முன்னுரிமை கொடுத்து கேட்பாங்க.

ஆனா நீங்க இதுல ஒன்றில் கூட பொருந்தி போகல."நிதானமாக இதழருவி கூறவும்

"ஆமாடி நீயும் நானும் காதலிக்கல.நீ காதலிச்சது அதோ அங்க அடிவாங்கி அரை மயக்க நிலையில் இருக்கிற இதழரசனை போதுமா."என்று திமிராக கூறியிருந்தான் விக்ரம்.

தொடரும்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top