• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Jan 29, 2025
Messages
111
அத்தியாயம் 25.

ராஜேந்திரன் இல்லம்,

விக்ரம் "ஓகே அங்க்கிள்.நான் இதழருவியை பார்த்துவிட்டு கிளம்புறேன்."என்று கூறியபடி தான் அமர்ந்திருந்த நீள்விருக்கையில் மேலே எழுந்தவன் மனதிற்குள் ஏதோ ஒன்றை அசைபோட்டபடி மெதுவாக மாடிப்படிகளை ஏறத்துவங்கியிருந்தான்.

இதழருவியின் அறைக்கு முன்பு வந்து நின்றவன்,சாற்றியிருந்த அறைக்கதவை சில நிமிடங்கள் வெறித்து விட்டு 'தட்..தட்..'மூன்று முறை தட்டியிருந்தான் விக்ரம்.

இதழருவி 'யாராக இருக்கும்?'என்று மனதில் நினைத்தபடி தன் அறைக்கதவை திறந்தவள்,அறைக்கு வெளியில் விக்ரம் நின்றிருப்பதை பார்த்ததும் முதலில் அதிர்ந்தவள் ,

பின்பு,சுதாரித்தவளாக வரவழைக்கப்பட்ட புன்னகையுடன் விக்ரமை பார்த்து "என்ன விக்ரம் இப்பிடி என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லாம திடிரென்று வீட்டுக்கு வந்திருக்கிங்க?"என்றபடி விக்ரம் தன் அறைக்குள் வருவதற்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றாள் இதழருவி.

"என்ன பண்றது இதழி?உன்ன பார்க்கனும்னு தோனுச்சு.அதனால வீட்டுக்கு வந்தேன்.அதுமட்டும் இல்லாம நீதான் என்னோட ஃபோன் கால்ல ஏற்க வில்லையே? இன்னும் நம்ம கல்யாணத்துக்கு ஐந்து நாள்தான் இருக்கு.என்கோட கைபேசியில் பேசாமா இருந்தா என்ன அர்த்தம்?"என்று விக்ரம் இயல்பாக கேட்டிருக்க

'இந்தக் கல்யாணம் நடக்கக் கூடாதுன்னு அர்த்தம்.'என்று மனதில் நினைத்தவள் வெளியில் அவனின் கேள்விக்கு எந்த பதிலும் அளிக்காது அமைதியாகவே நின்றிருந்தாள் இதழருவி.

சமையலறையில் இருந்து வேகநடையுடன் தன் அறையை நோக்கி சென்று கொண்டிருந்த அரசியை "அரசி.."என்று தன் கணீர் குரலில் அழைத்திருந்தார் ராஜேந்திரன்.

'அட கடவுளே! இவரு இருக்கரது தெரியாம நாம பாட்டுக்கு வேகமா நடந்துட்டமே..'என்று மனத்திற்ள் நினைத்தபடி நின்ற இடத்திலிருந்து வரவழைக்கப்பட்ட புன்னகையுடன் திரும்பிப் பார்த்தாள் அரசி.

அரசியின் அந்த சிரிப்பு ராஜேந்திரனுக்கு ஏதோ பொறி தட்டுவது போல் இருந்தது."ஒன்னும் இல்ல.சும்மாதான் கூப்பிட்டேன்.நீ போ."என்று அவர் கூறியதும் மிக கவனமாக ஒரு பெண் எப்படி வேகமாக நடப்பாளோ அது மாதிரி கடினப்பட்டு வேக நடையுடன் தன் அறைக்குள் வந்திருந்தாள் அரசி.

தன் அறைக்குள் வந்ததும் தனது கைபேசி புலனில் வந்திருந்த செய்தியை பார்த்துவிட்டு மறுநொடி கார்த்திகேயனுக்கு அழைப்பு விடுத்து சில நிமிடங்கள் பேசி விட்டு பிறகு தன் தம்பிக்கு அழைப்பு விடுத்திருந்தான் அரசி என்ற பெண் வேடத்தில் இருக்கும் இதழரசன்.

கைபேசியின் மறுமுனையில் அழைப்பு ஏற்கப்பட்டு,"ஹலோ அண்ணா நான் அனுப்பன குறுஞ்செய்தியை பார்த்திங்களா?"என்று நிதானமாக கேட்டிருந்தான் சாகித்தியன்.

"நான் அந்த செய்தியை படிச்சு பார்த்திட்டுதான் உனக்கு அழைப்பு விடுத்தேன்.என்னால இப்ப உன் மருத்துவமனைக்கு வரமுடியாத சூழ்நிலை.நான் கார்த்திகேயனிடம் அந்த செய்தியை சொல்லியிருக்கேன்.

கார்த்திகேயன் உன் மருத்துவமனைக்கு வந்து அந்த பொண்ண விசாரிச்சு மேற்கொண்டு என்ன செய்யனுமோ அதை பண்ணவாரு."என்று இதழரன் அவசரமாக சொல்லவும்

"ஓகே அண்ணா."என்று கூறிவிட்டு மறுமுனை அழைப்பை கட் செய்திருந்தான் சாகித்தியன்.

இதழருவியின் அறையில்,

"என்ன இதழி நான் வந்து பத்து நிமிடம் ஆகுது.நீ எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தா என்ன அர்த்தம்?"என்றபடி அங்கிருந்த குஷன் சோபாவில் அமர்ந்தான் விக்ரம்.

'உன்கிட்ட எனக்கு பேச பிடிக்கலன்னு அர்த்தம்.'என்று மனதில் நினைத்தபடி இதழருவி,

வெளியில் "நீங்க திடுதிப்பென்று வீட்டுக்கு வந்து எனக்கு சர்ப்ரைஸ் கொடுத்துதால எனக்கு மகிழ்ச்சியில் பேச்சே வரவில்லை."என்று வரவழைக்கப்பட்ட இதழ் பிரிக்காத புன்னகையுடன் சன்ன குரலில் கூறினாள் இதழருவி.

இதழருவி கூறியதை விக்ரம் செவியில் விழுந்துதா இல்லையா?அது அவனுக்கே வெளிச்சம்.அவனின் பார்வை முழுவதும் அவளின் உடலில் தான் இருந்தது.

இதழருவிக்கு அவனின் பார்வை அறுவறுப்பை தந்தது.அவனை பார்த்தபடி தன் துப்பட்டாவை நன்றாக கீழே இழுத்து விட்டாள் பாவை.

அவளின் அந்த செயல் விக்ரமுக்கு எரிச்சலை தந்தது.'சே.. இவ என்ன உலக அழகியா? இவளுக்கு முன்னாடி எத்தனை பெண்களை அனுபவித்து கொன்று புதைத்திருப்பேன்?

ஆனா இவள என்னால கொல்ல முடியாது.காரணம் அந்த இதழரசன்.இவள கல்யாணம் பண்ணி அவன் முன்னாடி இவளோட நான் வாழனும்.வாழ்ந்தே ஆகனும்.அது இவளுக்கு பிடிக்கதோ இல்லையோ அதைப்பத்தி எனக்கு கவலை இல்லை.'என்று மனதில் நினைத்தபடி தன் தலையை அழுந்த கோதியவனின் விழிகளில் டேபிள் மீது கிளியோட எச்சம் படவும்,

"என்ன இதழி நீ கிளி வளர்க்கிறயா?"என்று அவன் கேட்டுக் கொண்டு இருக்கும் பொழுதே அரசி என்ற பஞ்ச வர்ண கிளி திறந்திருந்த ஜன்னல் வழியாக பறந்து வந்து இதழருவியின் வலது தோள்பட்டையில் அமர்ந்ததை பார்த்ததும் விக்ரமுக்கு ஏதோ பொறி தட்டியது.

'இந்தக் கிளி இதழரசன் வீட்டில் இருந்த கிளியாச்சே.. இங்க எங்க வந்தது? அதுவும் இதழருவியோட தோள்பட்டையில் உட்கார்ந்திருக்கன்னா கண்டிப்பா அவனும் இந்த வீட்டுலதா இருக்கனும்.
ஆனா அவன் இங்க இருக்கரதுக்கு ஒரு அறிகுறியும் இல்லையே ?'என்று அவன் மனத்திற்ள் நினைத்தபடி தன் தாடையை தடவிக் கொண்டிருந்த பொழுது,

அறைக்கதவை திறந்து கொண்டு அரசி என்ற பெண் வேடத்தில் இருக்கும் இதழரசன் உணவுத் தட்டுடன் உள்ளே வந்திருந்தான்.

அரசியின் முக ஜாடை விக்ரமுக்கு யாரையோ நினைவு படுத்தியது.'ஒரு வேளை இவன் பெண் வேடத்தில் இருந்தா என்ன பண்றது?'என்று மனத்திற்ள் நினைத்தவன் அதை உறுதி செய்ய நினைத்தவன்,

வேண்டுமென்றே இதழருவியின் இடையை பற்ற அவனின் கரங்கள் அவளின் இடையை நோக்கி பயணிக்கும் சமயத்தில்,அரசி தன்னை மறந்து விக்ரமின் கரத்தை அழுந்த பற்றியிருந்தாள்.

அப்பொழுதுதான் இதழருவிக்கு நிம்மதி யாக இருந்தது.அரசி விக்ரமனின் கரத்தை பற்றி தடுக்கவில்லை என்றாலும் இதழருவியே அவன் கரத்தை பற்றி தடுத்திருப்பாள்தான்.அதற்குள் முந்தி விட்டாள் அரசி.

'ஓ.. சார் பெண் வேடத்தில் இருக்கிறாரா?'என்று மனத்திற்ள் நினைத்தவன் வெளியில்,"நான் கட்டிக்க போற பொண்ணு.'என்று அழுத்தமாக சொல்லியிருந்தான் விக்ரம்.

"இன்னும் உங்களுக்கு கல்யாணம் ஆகவில்லை."என்று சைகையில் அரசி சொல்லவும்

"ஓ.. உங்களுக்கு வாய் பேச வராத?ஊமையா? இல்ல ஊமை மாதிரி நடிக்கரிங்களா?"உள் அர்த்துத்துடன் விக்ரம் கேட்கவும் இதழரசனுக்கு புரை ஏறியது.

"பார்த்து.. பார்த்து தண்ணீர் அருந்துங்க இதழரசன்."என்றபடி அருகிலிருந்த தண்ணீர் நிறைந்த கெண்டியை இதழரசன் முன்பு நீட்டியிருந்தான் விக்ரம்.

இதழருவி புருவ முடிச்சுடன் அரசியையே பார்த்திருந்தாள்.

கெண்டியை வாங்காது அழுத்தமாக விக்ரமை பார்த்திருந்தான் இதழரசன்.நான் எதற்கும் தயார் என்ற ரீதியில் இருந்தது இதழரசின் பார்வை.

"சாரிங்க நீங்க பார்க்க என்னோட எதிரி இதழரசன் முக ஜாடையில் இருந்துதால அவன்தான் பெண்வேசத்துல இங்க இருக்கான் என்று நினைச்சு உங்ககிட்ட ரொம்ப கடுமையா பேசிட்டேன்."என்று இதழருவியை ஒரு முறை பார்த்து விட்டு கூறியிருந்தான் விக்ரம்.

அவன் எதற்காக திடிரென்று மாற்றி பேசுகிறான் என்று விக்ரமுக்கு புரியாமல் இருக்குமா என்ன?இதழருவிக்கு நான் பெண் வேடத்தில் இருப்பது தெரியக்கூடாது என்பதற்காக
என்று இதழரசன் நன்கு அறிந்திருந்தான்.

"உங்க பேரு என்னங்க?"நக்கல் புன்னகையுடன் அரசியை பார்த்து கேட்டிருந்தான் விக்ரம்.

இம்முறை அரசி சைகையில் பதில் கூறுவதற்கு முன்பு "அரசி"என்று பதில் அளித்திருந்தாள் இதழருவி.

"அரசி நல்ல பேரா இருக்கு.நீங்க கீழ போய் எனக்கு சாப்பாடு எடுத்து வைங்க.நான் பின்னாடியே வரேன்."என்று தனுக்குள் இருந்த கோபத்தை அடக்கி வரவழைக்கப்பட்ட புன்னகையுடன் கூறியிருந்தான் விக்ரம்.

பெண் வேடத்தில் இருக்கும் இதழரசன் இதழருவியை ஒரு பார்வை பார்த்துவிட்டு அறையிலிருந்து வெளியேறினான்.

விக்ரம் இதழருவியை தொந்தரவு செய்தால் தான் வளர்த்த பஞ்ச வர்ண கிளி அவனை சும்மா விடாது என்ற காரணத்தில்தான் அவன் அந்த அறையில் இருந்து வெளியேறியதே.

சில நிமிடங்களில் விக்ரம் இதழருவி இருந்த அறையை சாற்றி வெளியில் தாழ்ப்பாள் போட்டு விட்டு மாடிப்படிகளில் தட்..தட்..என்று வேகமாக இறங்க ஆரம்பித்திருந்தான்.
 
Joined
Jan 29, 2025
Messages
111
சாகித்தியனின் மருத்துவமனையில்,

இதழரசன் கூறியதுமே மருத்துவமனைக்கு விரைந்திருந்தான் கார்த்திகேயன்.

"சாகித்தியன் அந்த பொண்ணு யாரு இங்க வந்து அட்மிட் பண்ணது?"என்று கேட்டிருந்தான் கார்த்திகேயன்.

அந்த பொண்ணு யாருன்னு எனக்கும் தெரியாது.அந்த பொண்ணு முதல்ல ஆர் எஸ் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு போயிருக்காங்க. இவங்களுக்கு பணம் செலவு செய்ய யாரமே இல்லை.அதுவும் இது ஒரு போலிஸ் கேஷ் என்பதால அங்க வைத்தியம் பார்க்கல.

அதனால அங்க பணிபுரியும் மருத்துவர்
நான் ஏழை எளியோர்க்கு இலவசமா மருத்துவம் பார்ப்பேன் தெரிந்துகொண்டு அவரு சொந்த பணத்தில் அந்த பொண்ண உடனடியா இங்க அனுப்பி வைத்திருக்கிறார்.

இனி நீங்கதான் அந்த பொண்ணு யாருன்னு என்ன ஏதுங்கிற விவரத்த விசாரிக்கனும்.எனக்கு தெரிந்த விவரத்த சொல்லிட்டேன்."என்று சாகித்தியன் கூறி முடிக்கவும்

"இப்ப அந்த பொண்ணு எப்படி இருக்காங்க? நான் போய் அந்த பொண்ண விசாரிக்கலாமா?"என்று கார்த்திகேயன் கேட்க,

"இப்ப அந்த பொண்ணு நல்லா இருக்காங்க.நீங்க வரதுக்கு கொஞ்ச நேரத்திற்கு முன்னாடிதான் மயக்கத்தில் இருந்து சுயநினைவுக்கு வந்திருக்காங்க.நீங்க தாராளமா விசாரனைய ஆரம்பிக்கலாம்."என்று சாகித்தியன் அனுமதி தர அந்த பெண்னை அட்மிட் செய்திருந்த அறைக்கு விரைந்தான் கார்த்திகேயன்.

"என் பெயர் கார்த்திகேயன்.இன்ஸ்பெக்டர் ஆஃப் போலிஷ்."என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவன் மேலும் தொடர்ந்தான்.

"உங்கள பெயர்?"அந்த பெண்ணிடம் கேட்டிருந்தான்.

"என் பெயர் அருவி."என்று தளர்ந்த குரலில் கூறி

"உங்கள பற்றியும் அண்ட் உங்க நிலைமைக்கு யார் காரணம்?"

"எனக்கு எந்த உறவுகளும் கிடையாது.நான் அனாதை ஆசிரமத்தில் தான் படிச்சது வளர்ந்தது எல்லாமே.இப்ப கொஞ்ச நாளா நான் தனியா வீடு எடுத்து தங்கியிருக்கேன்.

எனக்கு தோழி இருக்கா.அவள் விக்ரம் என்கிற தொழிலபதிர விரும்பின.அவரும் இவள விரும்பினாரு.

இரண்டு நாளைக்கு முன்னாடி அவரோட கடற்கரைக்கு போயிருந்தாள்.போனவ வரவே இல்ல.போன் பண்ணா சுவிட்ச் ஆப்.எனக்கு விக்ரம் வீடு எங்கிருக்குன்னு தெரியாது.நான் அவள தேடி நேற்று மாலை அந்த கடற்கரைக்கு போனேன்.

தூரத்தில ஒரு பீச் ஹவுஸ் தெரிஞ்சது.அதும் மட்டும் இல்லாம அந்த கடற்கரையில் விக்ரமுக்கு தனி ஹவுஸ் இருக்கரதா என் தோழி சொல்லி ஒரு தடவை கேட்டிருக்கேன்.

அதானல அந்த பீச் ஹவுஸ்க்கு பார்க்கலாம்னு அங்க போனேன்.நான் போய் அங்க பார்த்தப்போ விக்ரம் என் தோழிய சாகடிச்சு பீச் ஹவுஸ்க்கு பின்னாடி இருந்த நிலத்துல குழி தோண்டி புதைக்கிறத என் கண்ணால பார்த்தேன்.

அதை வீடியோவ என் கைபேசியல எடுத்து வைச்சிருக்கேன்.எப்படியோ அந்த விக்ரம் என்ன பார்த்துட்டான்.நானும் சுதாகரிச்சு அங்கிருந்து தப்பிச்சு என் வீட்டுக்கு வந்துட்டேன்.

இன்னைக்கு அதிகாலை நான்கு மணி இருக்கும்.என் வீட்டு கதவ யாரோ தட்டினாங்க.நானும் எதையும் யோசிக்காம கதவ திறந்துட்டேன்.இரண்டு பேர் கையில கத்தியை வைச்சிட்டு என்ன கொல்ல வந்தாங்க.

எப்படியோ அவங்கிட்டிருந்து தப்பிச்சு மெயின் ரோட்டல வேகமா ஓட ஆரம்பிச்சப்போ என்ன துரத்திட்டு வந்த இரண்டு நபர்களில் ஒருவர் நான் ஓடி வந்த திசைக்கு எதிரா தூரத்தில் மறைவா நின்று என்ன துப்பாக்கியால சுட்டதும் நான் மயங்கி அப்படியே சரிந்து
கீழே விழுந்து விட்டேன்.

தொடரும்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top