• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Jan 29, 2025
Messages
111
அத்தியாயம் 23.

விக்ரம் இல்லம்,

'என்ன இந்த இதழரசன் ரொம்ப மிகவும் அமைதியாக இருக்கிறான்.ஏதோ தவறாக உள்ளது விரைவிலே கண்டறிய வேண்டும்.'என்று தன் மனதில் நினைத்துபடி தனது இடது கையின் ஆள்காட்டி விரல் பெருவிரலை நெற்றியில் விரித்து, அழுத்தமாக தேய்த்துக் கொண்டிருந்தான் விக்ரம்.

பெயர்தான் விக்ரம்.செய்கிற வேலை அக்கிரமம்!அந்நியாயம்! இவனும் இவனின் தந்தை மற்றும் ராஜேந்திரன் மூவரும் சேர்ந்து கொண்டு வேண்டுமென்றே சாலை விபத்துக்களை ஆட்களை வைத்து செய்து, அதில் மரணித்த நபர்களின் உடலில் இருந்து சட்ட விரோதமாக உடல் உறுப்புகளை திருடி 'ரெட்'மார்க்கெட் என்ற பெயரில் கோடிக் கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு வெளிநாட்டிற்கு அனுப்புகின்றனர்.

அதுமட்டுமா?ஆதரவு இல்லாத பெண்களை தக்க சமயம் பார்த்து கடத்தி வெளிநாட்டிற்கு விற்று விடுகின்றனர்.இது ஒரு பெரிய நெட்வொர்க்.

சமயம் பார்த்து குழந்தைகளை கடத்தி சென்று சாலை விபத்தாகவோ அல்லது ஆள் வைத்து கொண்றோ அவர்களின் கண்கள் மற்றும் உடல் உறுப்புகளை திருடி வெளிநாட்டில் விற்பனை செய்து வருகின்றனர்.

அது மட்டுமா குழந்தைகள் மற்றும் பெண்கள்,பெண்களின் உடல் உறுப்புகளுக்குதான் வெளிநாட்டில் அதீத டிமாண்ட்.

மேலும் போதை பொருள்களை உற்பத்தி செய்து வெளிநாட்டிலும்,ரகசியமாக உள்நாட்டிலும் விற்பனை செய்து வருகின்றர்.

அனைத்தையும் இவர்கள் மறைமுகமாகதான் செய்து வருகின்றார்கள்.எங்கும் இவர்கள் பெயர் அடிபடாமல் சாமார்த்தியமாக செயல்பட்டு வருகின்றனர்.

விக்ரம் வெளிநாட்டில் இருந்தவரை அவனுக்கு இதுதான் முக்கிய தொழிலாக இருந்தது.தன் தந்தை மற்றும் அங்க்கில் ராஜேந்திரன் சட்ட விரோதமாக கப்பலில் அனுப்பப்படும் உடல் உறுப்புகளை மறைமுகமாக வெளிநாட்டில் டீல் பேசி விற்று வந்துகொண்டிருந்தான்.

இவர்கள் மூவருமே வெறும் கண்‌ துடைப்புக்கா கார்மென்ட்ஸ், இரும்பு தொழிற்சாலை,வாகனங்களின் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை தனித்தனியாக நடத்தி வருகின்றனர்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு இதழரசன் மட்டும் அன்று விக்ரமின் தம்பிகளை போதைப் பொருள் வைத்திருந்தற்காக கைய்து செய்து சிறையில் அடைத்தது, விஸ்வநாதன் வந்து பேசி விடாமல் இருந்ததற்காக மட்டும்தான் விக்ரம் வெளிநாட்டில் இருந்து வந்ததே.

இங்கு வந்தவன் மீண்டும் வெளிட்டிற்கு போகவில்லை.இங்கிருந்தே அனைத்தையும் பார்த்துக்கொள்ளலாம் என்று தன் குடும்பத்துடன் சென்னையிலே தங்கி விட்டான்.

இவர்களுக்கு என்று சொந்தமாக நான்கு கப்பல்கள், இரண்டு ஹெலிகாப்டர்கள் இருக்கின்றன.

விக்ரமனின் கெட்ட நேரம் இதழரசியை பார்த்து காதல் வயப்பட்டது.ஆனால் நிச்சயமாக காதல் என்று சொல்லி விட முடியாது.அது மோகம் என்றுதான் சொல்ல வேண்டும்.அதுவும் இதழரசனின் காதலி என்று தெரிந்து கொண்டே அவளை திருமணம் செய்ய நினைப்பது.

கடந்த இரண்டு வருடங்களாக இதழரசனும் விக்ரமும் மறைமுகமாக மோதி வருகின்றனர்.

இதழரசன் கண் துடைப்புக்காக காவல் நிலையத்தில் ஏஎஸ்பியாக இருந்து வெளிப்படையாக விஸ்வநாதன் ,விக்ரம், ராஜேந்திரனை எதிர்த்தபடி அதே நேரத்தில் அண்டர் கவர் ஆப்ரேஷனில் ரகசியமாக பல ஆதாரங்களை தற்பொழுது திரட்ட வேண்டும் அதே சமயத்தில் இதழருவியையும் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அவன் பெண் வேடத்தில் ஊமை பெண்ணாக ராஜேந்திரன் இல்லத்தில் நுழைந்ததே.
 
Joined
Jan 29, 2025
Messages
111
"என்ன விக்ரம்?எதையோ ரொம்ப நேரமா யோசிச்சிட்டு இருக்கமாறி தெரியுது."என்றபடி நீள்விருக்கையில் தன் மகனின் அருகில் அமர்ந்தார் விஸ்வநாதன்.

"எனக்கு ஏதோ தப்பா படுது டாட்.அந்த இதழரசன் ரொம்ப அமைதியா இருக்கரது என் மனசுக்கு ஏதோ சரியில்லைன்னு உறுத்தது.ஆனா அது என்னென்ன தெரியாம என் தலையே வெடிக்கர மாதிரி இருக்கது டாட்."என்றபடி தலையை அழுத்தமாக கோதினான் விக்ரம்.

"விக்ரம் எதைப் பத்தியும் யோசிக்காம இரு.நான் இதழரசனை காவல் நிலையத்துல இருக்கர நம் ஆள் ஒருவர் கிட்ட கண்காணிக்க சொல்லியிருந்தேன்.அவர் அப்பப்போ தகவல் நமக்கு கொடுத்துட்டுதான் இருக்காரு.

அந்த இதழரசன் கேஷ் விசயமா வெளியூர் போயிருக்கானு அவர் சொல்ராரு.அதனால நீ ரிலாக்ஸாக இரு."என்று அவர் தன் மகனை தேற்றியபடி ஆறுதலாக தன் மகனின் முதுகில் தட்டிக்கொடுத்து விட்டு ஓய்வெடுக்க தனது அறைக்கு சென்றார் விஸ்வநாதன்.

ஆனால், விக்ரமுக்கு அவர் கூறிய 'இதழரசன் கேஷ் விசயமா வெளியூர் சென்றிருக்கிறான்.'என்பதை மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்த்தவனுக்கு ஏதோ தவறாக பட்டது.

தன் தாடையை தடவியபடி அதையே வெகு நேரம் யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு பசி எடுக்கவும் உணவு மேசைக்கு சென்று இரவு உணவை சாப்பிட்டு விட்டு தூக்கத்தை தழுவ தன் அறைக்கு சென்றிருந்தான்.

ராஜேந்திரன் இல்லம்,

இரவு உணவை எடுத்துக் கொண்டு இதழருவியின் அறைக்கு வந்திருந்தாள் அரசி.

அரசி இதழருவியின் அறைக்குள் வந்ததுமே தன்னுடைய கிளியை பார்த்துவிட்டாள்.

'அரசி என்ன தேடி இங்கியே வந்து விட்டாயா?'என்று மனதில் நினைத்தபடி இரவு உணவு அடங்கிய தட்டை அங்கிருந்த மேசையின் மீது வைப்பதற்கும் அக்கிளி அவளின் இடது தோள்பட்டையில் அமர்வதற்கும் சரியாக இருந்தது.

அதே நேரத்தில் குளியல் அறைக்கதவை திறந்தகொண்டு வெளியே வந்த இதழருவி,கிளி தங்கள் வீட்டு பணிப்பெண்ணின் இடது தோள்பட்டையில் அமர்ந்திருப்பதை பார்த்தவனுக்கு ஆச்சிரியத்தை வரவழைத்திருந்தது.

"என்ன அரசி,இவங்கள உனக்கு முன்பே தெரியுமா?"என்று கிளியிடம் இதழரசி கேட்கவும்,அரசி என்ற பெண் வேடத்தில் இருக்கும் இதழரசனுக்கு தூக்கி வாரிப் போட்டது.

இதழருவி அப்படி கேட்கவும்,அரசி என்ற பஞ்சவர்ணகிளி இதழரசனின் நிலையை புரிந்து கொண்டதோ என்னவோ பறந்து சென்று மீண்டும் உணவின் முன்பு அமர்ந்து விட்டது.

"இப்ப எனக்கு புரிஞ்சுடுச்சு.உனக்கு இப்ப பசிக்குது.அதனால பணிப்பெண் அரசி மேல உட்கார்ந்து எனக்கு சாப்பிட ஏதாவது வேண்டும் என்று எனக்கு உணர்த்தியிருக்க?"என்றபடி கொய்யாப்பழத்தை அக்கிளி முன்பு வைத்தாள் இதழருவி.

அரசி சைகையில் இதழருவியை சாப்பிட சொல்லிவிட்டு தாமதிக்காது அவ்வறையை விட்டு வெளியேறி இருந்தாள்.

அரசி மாடிப்படிகளை கடந்து சமையலறைக்குள் செல்லும் பொழுது "அரசி.."என்று தன் கணீர் குரலில் அழைத்திருந்தார் ராஜேந்திரன்.

'நானும் இதுக்குதான் வெயிட் பண்றேன்.'என்று மனதில் நினைத்தபடி ராஜேந்திரன் முன்பு போய் நின்றாள் அரசி.

"அரசி மறக்காம என்னோட ஆபிஸ் ரூம நாளைக்கு கூட்டி துடைத்து விடு."என்று தன் கணீர் குரலில் அவர் கூறுவதற்கும் அவரின் கைபேசி சினுங்கவதற்கும் சரியாக இருந்தது.

அரசி சரி என்பதைப் போல தலையை அசைக்கவும் ராஜேந்திரன் தன் கைபேசியை எடுத்துக் கொண்டு தனது அறைக்குள் சென்று கதவை சாற்றியிருந்தார்.

"அரசி இதழருவிக்கு உணவை எடுத்துக் கொண்டு போய் கொடுத்து விட்டாயா?"என்று கேட்டபடி உணவு மேசையில் இரு காலி தட்டுகளில் உணவை பறிமாறிக் கொண்டிருந்தார் நாச்சியார்.

அரசி தான் இதழருவிக்கு உணவை எடுத்துக் சென்று உணவை கொடுத்து விட்டதாக சைகையில் சொல்வதை பார்த்த நாச்சியார், "சரி உட்காரு.நாம சாப்பிடலாம்."என்று தன்மையாக கூறியபடி தானும் ஒரு நாற்காலியில் அமர்ந்தார் நாச்சியார்.

அரசி இங்கு வந்துதலிருந்து நாச்சியார் அவளுடன்தான் மூன்று வேளையும் சாப்டுகிறார்.

எப்பொழுதும் தான் பெறாத மூத்த மகளுடன் தான் காலையிலும் இரவும் உணவை சேர்ந்து சாப்பிடுவார்.ஆனால்,
தற்பொழுதுதான் இதழருவி தன் அறையை விட்டு வெளியே வருவதில்லையே.

அதனால்,அவர் அரசியுடன் சேர்ந்து சாப்டுகிறார் என்று எடுத்துக் கொள்ள முடியாது.இதழருவி இருந்தாலும் கூட அரசியை அவர்களுடன் சேர்த்துக் கொண்டு மூவருமாக சாப்பிடிருப்பார்கள்.

சாதனாவிற்கு நாச்சியாரே சென்று இரவு உணவை கொடுத்து வந்து விட்டார்.அவ்வீட்டில் அரசிக்கென்று சிறிது அறையை மாடியில் தந்திருக்கிறார் நாச்சியார்.

இருவரும் தங்களின் இரவு உணவை சாப்பிட்டு விட்டு உறங்குவதற்கு தத்தமது அறைக்கு சென்றிருந்தனர்.

அரசி தனக்கு கொடுக்கப்பட்ட அறைக்கு வந்ததும் படுக்கையில் தொப்பென்று விழுந்தாள்.காலையில் இருந்து ஒரே வேலை என்பதால் அவளுக்கு சற்று அசதியாக இருந்தது.

நினைவு வந்தவளாக தன் கைபேசியில் தவறிய அழைப்பை எடுத்துக் பார்த்தவளுக்கு அப்படியொரு ஆனந்த அதிர்ச்சி.

மறுநிமிடமே தாமதிக்காமல் தன் அன்னைக்கு அழைப்பு விடுத்திருந்தாள் அரசி.அப்பக்கம் அழைப்பு ஏற்கப்பட்டது.

"ஹலோ, இதழரசன் எப்படிடா இருக்க?"என்று ஆனந்தியின் கவலையான குரலை கேட்டவனுக்கு மனதில் துள்ளிக் குதிக்காத குறைதான்.

"அம்மா நான் நல்லா இருக்கேன்.ஒரு கேஷ் விசயமா வெளிய வந்திருக்கேன்.நீங்க கூப்டப்போ நான் ரொம்ப வேலையா இருந்தேன்.அதனாலதான் உங்க அழைப்பு என்னால ஏற்கமுடியாமல் போய்விட்டது."என்று கவலையாக பதில் கூறியிருந்தான் இதழரசன்.

"என்ன மன்னிச்சிடுப்பா."என்று மார்க்கெட்டில் நடந்ததை பாதி மறைத்து பாதி கூறியிருந்தார் ஆனந்தி.

ஆனால், அவனுக்கு அனைத்து விசயம் தெரியும் என்பது அவருக்கு தெரியாதல்லவா.அவருக்கு தெரியுமா என்ன?மார்க்கெட்டில் பெண் வேடத்தில் தன் அருகில் நின்றிருந்தது இதழரசன் என்று.

தனது அம்மா எதற்காக பாதி மறைத்து பாதி உண்மையை கூறினார் என்பதை நன்கு அறிவான் இதழரசன்.தன் பெரியம்மா செந்தாமரையை தான் வெறுத்திடக் கூடாதென்றுதான் அவர் அப்படி கூறுகிறார் என்று அவனுக்கு புரியாமல் இல்லை.

"சரிங்க அம்மா.இதுவரைக்கும் நடந்தத மறந்திடலாம்.இனி நடக்கப்போறத பார்க்கலாம்."என்று இதழரசின் நம்பிக்கையான குரலை கேட்டபின்புதான் ஆனந்தி நிம்மதியடைந்தார்.

"அம்மா இனிமேல் நீங்க எனக்கு கால் பண்ணனும்னா நைட் பத்து மணிக்கு மேல கூப்டுங்க."என்று இதழரசன் மிகத் தீவிரமான குரலில் தன் அன்னையிடம் கூறவும்

"சரிப்பா.பார்த்து கவனமா இரு."என்று அக்கறையாக கூறியவர்,

"இதழரசன் அப்பா உன்கிட்ட பேசனுமாம இரு உங்க அப்பா கிட்ட கொடுக்கிறேன்."என்று ஆனந்தி அப்பக்கம் தன் கணவரிடம் கைபேசியை தந்திருந்தார்.

பத்து நிமிடங்கள் தன் தந்தையிடம் பேசிவிட்டு அழைப்பு கட் செய்தவன் நினைவு வந்தவனாக தன் தம்பி சாகித்தியனுக்கு அழைப்பு விடுத்து பத்து நிமிடம் பேசிய பின்புதான் நீண்ட நாள் கழித்து நிம்மதியான உறக்கத்தை தழுவியிருந்தான்.

அன்றிரவு அப்படியே கழிந்தது.கதிரவன் மேகத் தாயிலிருந்து மெது மெதுவாக வெளியே வந்து ஒளியை கூட்ட ஆரம்பித்திருந்தான்.

அரசி ராஜேந்திரன் அலுவுலக அறையின் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றாள்.

அவள் நினைத்தது போல அவ்வறையில் எதுவும் இல்லை.மாறாக ஒரு டேபிள் சேர் மட்டும் தான் இருந்தது.அவளுக்கு அது பெறுத்த ஏமாற்றமாக இருந்தது.

'இங்க எந்த ஆதாரமும் கிடைக்காதா?'என்று மனதில் நினைத்தபடி எதிர்ச்சையாக திரும்பியவனின் விழிகளில் விழுந்தது ராஜேந்திரனின் ஆளுயர புகைப்படம்.

'அதை அகற்றினால் ஏதாவது துப்பு துலக்க முடியுமா?'என்று மனதில் நினைத்தை செயல் படுத்த விரும்பினாள் அரசி.

'ஆனால், இந்த ஆளுயர போட்டாவை அகற்றி சோதனை செய்ய வேண்டுமானால் அதீக நேரம் வேண்டுமே?

அதுவும் இல்லாமல் அந்நேரம் வீட்டில் யாரும் இருக்கக்கூடாது.முக்கியமாக ராஜேந்திரன்.வெகு சீக்கரமாக இதற்கொரு வழியை கண்டு பிடிக்க வேண்டும்.'என்று மனதில் நினைத்தபடி அவ்வறையை கூட்டி துடைத்து விட்டாள் அரசி.

அரசி கூட்டி துடைத்து அவ்வறையை விட்டு வெளியே வரும் பொழுது,"என்ன அரசி நான் சொன்ன வேலையை ரொம்ப கச்சிதமா செஞ்சிட்டயே."என்று ராஜேந்திரனின் கூறியபடி அவள் முன்பு நின்றிருந்தார்.

அரசி புன்சிரிப்புடன் தலையை மேலும் கீழுமாக வேகமாக அசைத்து இருந்தாள்.

தொடரும்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top