• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Jan 29, 2025
Messages
111
அத்தியாயம் 22.

"ஹலோ மேடம் என்ன சத்தத்தையே காணோம்?"என்றபடி சில காய்கறிகளை கூடையில் எடுத்துப்போட்டு நிமிர்ந்து தன் மனைவியை பார்த்தான் செல்வ குமார்.

அவள் எங்கு அவளின் கணவன் கூறியதை கேட்டாள்? அவளின் கவனம் பார்வை முழுவதும் ஆனந்தி மேலே இருந்தது.
அவள் என்ன கனவா கண்டால் தான் இப்படி மாட்டுவோம் என்று.

"மேடம் சாரி.. நான் உண்மையை சொல்லலாம்னுதான் நினைச்சேன்.ஆனா செந்தாமரை மேடம் தான் எனக்கு பணத்த கொடுத்து பொய்யா அப்படி சொல்லுன்னு சொன்னாங்க."பயத்தில் அனைத்தையும் தன்னை அறியாமல் ஒப்புவித்திருந்தாள் தாரணி.

ஆனந்தி தாரணி யின் முகத்தை அழுத்தத்துடன் பார்த்திருந்தார்.அதே நேரத்தில் அரசியும் ஒரு முறை தாரணியை அழுத்தமாக பார்த்துவிட்டு காய்கறிகள் எடுப்பது போல அவர்கள் மேலும் பேசுவதை கேட்க தன் காதை தீட்டி வைத்தபடி காத்திருந்தாள்.

"நீ சொல்ரத நான் எப்படி நம்பறது?"தாரணியை பார்த்து அழுத்தமாக கேட்டார் ஆனந்தி.

மறுநொடியே தாரணி தன் கைபேசியில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட ஆடியோ ரெக்டாரை ஆன் செய்து நடுங்கிய கரங்களோடு ஆனந்தி அவர்களின் முன்பு நீட்டியிருந்தாள்.

அவளை முறைத்தபடி வெடுக்கென்று அவளின் வலது கரத்தில் இருக்கும் கைபேசியை வெடுக்கென்று பிடுங்கி தன் காதில் அருகில் அந்த கைபேசியை வைத்து ஆடியோவை கேட்க ஆரம்பித்தார் ஆனந்தி.

பொது இடம் என்பதால் தாரணி ஆடியோ ஒலியை குறைத்து தந்திருந்தாள்.

ஆடியோவை கேட்டு முடித்ததும் கையோடு அந்த ஆடியோவை நீக்கி அவளிடம் அவளின் கைபேசியை திரும்ப தந்திருந்தார் ஆனந்தி.

தாரணி யின் கணவன் செல்வ குமாருக்கு தற்போழுது அனைத்தும் விளங்கியிருந்தது.சமீபத்தில் செந்தாமரை கொடுத்த பணத்தில்தான இருவரும் சேர்ந்து கார் ஒன்றை வாங்கியிருந்தார்கள்.

இந்த காலத்தில் பணம் யாரிடம் இருக்கிறதோ அவர்களுக்குதான் மதிப்பு மரியாதை அனைத்தும்.

ஆனந்தி மீண்டும் ஒருமுறை தாரணியை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு தான் இதுவரை வாங்கியிருந்த காய்கறிகளை கட்டப் பையில் வேகமாக எடுத்து போட்டபடி அவ்விடத்தை விட்டு வெளியேறி இருந்தார்.

அரசி தன் பெரியம்மா இப்படி என்று கேட்டதும் மனதிற்குள் அதிர்ந்துதான் போனாள்.

'இவரை பற்றி தெரியாமல் போயும் போயும் இவரை நம்பி இருந்தேனே?என் புத்தியை செருப்பால் அடிக்கனும்.'என்று மனதிற்குள் நினைத்தவள் நேரம் ஆவதை உணர்ந்து அவளும் தான் வாங்கிய காய்கறிகளோட அவ்விடத்தை விட்டு வெளியேறி இருந்தாள்(ன்).

செந்தாமரை இப்படி செய்திருப்பார் என்று கணவிலும் நினைத்து பார்த்திருக்கவில்லை ஆனந்தி.அந்த ஆடியோவை கேட்பதற்கு முன்பு வரை தாரணி பொய் கூறுகிறாள் என்றுதான் நினைத்திருந்தார்.

அந்த ஆடியோவை கேட்டதும் தான் இதுவரை செந்தாமரை மேல் வைத்திருந்த நம்பிக்கை அனைத்தும் தவிடு பொடியாக்கியிருந்தது.

தவறே செய்யாத தன் மூத்த மகனிடம் இரண்டு வருடங்களாக தான் பேசாமல் இருப்பது சற்று அதிகம் என்று தோன்றியது அவருக்கு.

அவனின் பேச்சை காது கொடுத்து கேட்டிருக்க வேண்டும்,அவனை நம்பி இருக்க வேண்டும் என்று காலம் கடந்து வருத்தப்பட்டார் ஆனந்தி.

தன் மூத்த மகனை பற்றி சிந்தித்துபடியே எப்படியோ மகிழுந்தை ஓட்டியபடி வீட்டுக்கு வந்து விட்டார்.

காய்கறிகள் அடங்கிய கட்டைப் பையோடு அவர் இறங்கியதுதான் தாமதம்,

"என்ன ஆனந்தி மார்கெட் போயிருந்தியா? என்கிட்ட நீ மார்க்கெட் போரத பற்றி சொல்லியிருந்தா நானும் வந்திருப்பனே?"என்றபடி ஆனந்தியிடம் இருந்த கட்டப்பையை வாங்கி தங்கள் வீட்டு பணிப்பெண்ணிடம் எடுத்துக் கொண்டு போய் சமையல் அறைக்குள் வைக்குமாறு கொடுத்தனுப்பினார்.

ஆனந்தி "இல்ல, நீங்க தூங்கிட்டு இருந்திங்க.அதனாலதான் நானே போயிட்டு வரலாம்னு மார்கெட் போய் வந்தேன்."என்று முகத்தில் எந்த உணர்வும் காட்டாது பதிலளித்தபடி வீட்டிற்குள் சென்றார் ஆனந்தி.

ஆனந்தி செந்தாமரையின் மீது மலையளவு நம்பிக்கை வைத்திருந்தார்.ஏனோ ஆனந்திக்கு செந்தாமரையிடம் பேசவே பிடிக்கவில்லை.

'என்ன செய்வது?ஒரே குடும்பத்தில் இருந்து கொண்டு முகத்தை திருப்பிக் கொண்டு போனாள் நன்றாக இருக்குமா?'என்று பலவற்றை சிந்தித்துவிட்டு பெயரிற்காவது பேச வேண்டுமே என்ற ரீதியில் தற்பொழுது அவரிடம் ஆனந்தி பேசியது.

செந்தாமரை வேண்டுமானல் இதழரசன்,சாகித்தியனை தனது சொந்த மகன்களாக பாவிக்காமல் போயிருக்கலாம்.ஆனால், ஆனந்தி பூர்ணா,வினய் ஆகிய இருவரையும் தன் சொந்த பிள்ளைகளாக பாவித்து வருகிறார்.

வினய் செந்தாமரையின் இரண்டாவது மகன்.பூர்ணாவுக்கும் சரி வினய்க்கும் சரி சித்தி என்றால் கொள்ளை பிரியம்.அவர்களுக்காவது நாம் செந்தாமரையிடம் பெயரிற்காவது பேச வேண்டும் என்பது ஆனந்தியின் எண்ணம்.அதை செயல்படுத்தவும் ஆரம்பித்து விட்டார்.

வீட்டிற்குள் வந்தவர் நேராக தன் அறைக்குள் வந்தவர் கதவை சாற்றி விட்டு சாய்வு நாற்காலியில் அமர்ந்தவர் தனது பெரிய மகனை நினைத்து கண்ணீர் சிந்தினார்.

இதழரசனும் சாகித்தியனும் அவருக்கு இரண்டு கண்கள்.இருவரையுமே சமமாகத்தான் பார்ப்பார்.அதில்,வினய்,பூர்ணாவும் அடக்கம்.

வீட்டில் சமையல் பணிப்பெண் இருந்தாளும் இவர்கள் நான்கு பேருக்கு மூனு நேரமும் இவர்தான் சமைப்பார்.அவர்கள் நான்கு பேரும் பள்ளி முதல் கல்லுரி செல்லும் வரை இவர்தான் லன்ச் பேக் செய்து கொடுப்பார்.

அதுவும் அவரவர்களுக்கு பிடித்த உணவையே சமைத்துக் கொடுப்பார்.அவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பது அவர்களுடன் நீண்ட நேரம் செலவிடுவது அனைத்துமே இவர் மட்டும்தான்.

செந்தாமரை இருபத்தி நான்கு மணி நேரமும் வீட்டில் இருந்தாலும் ஒரு துரும்பை கூட தூக்கி போட மாட்டார்.தற்பொழுது செந்தாமரையை பொறுத்து போவதற்கு முக்கிய காரணம் செந்தாமரையின் கணவர் ரகுநாதன்.

அவர் ஆர்மியில் பணிபுரியும் பொழுது பத்து வருடங்களுக்கு முன்பு ஒரு போரில் இறந்துவிட்டார்.அவர் போர் புரிவதற்கு செல்லும் முன்பே "ஆனந்திம்மா என்னைக்கும் இல்லாம என் மனசு இன்னைக்கு சரியில்லை. ஒருவேளை நான் போரில் இறந்து விட்டாள் என் குடும்பத்த இனி நீதான் பார்த்துக்கனும்.

உன்னையும் என் தம்பியையும் நம்பி என் குடும்பத்த விட்டுட்டு வந்து இங்க நான் பணிபுரிகிறேன். அது மாறி ஒருவேளை போரில் என் உயிர் போய்விடும் நிலைமை வந்தால் நீயும் என் தம்பியும் இனிமேல் என் குடும்பத்த நல்லா பார்த்துக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில் நிம்மதியாக மடிவேன்."என்று குரல் பதிவு செய்து தனது தம்பி சாந்தகுமார்க்கும் ஆனந்திக்கும் புலனில் அனுப்பி விட்ட பின்புதான் அவர் போர் புரிவதற்கு சென்றதே.

ஆனந்திக்கு ரகுநாதன் மேல் பெரிய மதிப்பு இருக்கிறது.அவர் மிகவும் நல்ல மனிதர்.நேர்மையானவர்.தவறு என்றால் தவறுதான்.அது யாராக இருந்தாலும் சரி.மனதிற்குள் ஒன்றை வைத்து வெளியில் ஒன்றை பேசமாட்டார்.

எதுவென்றாலும் சரி.முகத்திற்கு நேராக சொல்லிவிடுவார்.அது அவரின் இயல்பு.அவரிற்கு நேர் எதிர் குணம் அவரின் மனைவி செந்தாமரை.அவரின் பிள்ளைகளின் குணம் அப்படியே ரகுநாதனின் குணத்தை பெற்றிருந்தார்கள்.

தன் கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு தனது மூத்த மகன் இதழரசனுக்கு அழைப்பை விடுத்திருந்தார்.ஆனால், அப்பக்கம் அழைப்பு சென்று கட்டானதே தவிர அவன் அழைப்பை ஏற்றபாடில்லை.

அவன் அழைப்பை ஏற்காமல் போகவும்,மறுநொடியே தன் இரண்டாவது மகன் சாகித்தியனுக்கு அழைப்பை விடுத்திருந்தார்.

அப்பக்கம் அழைப்பு ஏற்பட்டு "சொல்லுங்க அம்மா.ஏதாதவது முக்கியமான விசயமா?"என்று இயல்பாக கேட்டிருந்தான் சாகித்தியன்.

"இப்ப வேலையா இருக்கிறாயா?"என்று அவனின் தற்பொழுது சூழ்நிலையை அறிந்து கொள்வதற்காக கேட்டிருந்தார் ஆனந்தி.

"இல்லம்மா.இதுவரைக்கும் இருந்தவர்களுக்கு வைத்தியம் பார்த்து அனுப்பிட்டேன்.நான் இப்போ ஓய்வில்தான் இருக்கிறேன்.நீங்க சொல்ல வந்துத சொல்லுங்க."என்று கூறியிருந்தான் சாகித்தியன்.

"நான் தவறு செய்துவிட்டேன்?"கமறிய குரலில் கூறிவிட்டு மெளனமாக கண்ணீர் சிந்த ஆரம்பித்தார் ஆனந்தி.

அவரின் கமறிய குரலில் பேசியதை வைத்தே தன் அன்னை தற்பொழுது மெளனமாக கண்ணீர் சிந்திக்கொண்டிருப்பதை மருத்துவமனையில் இருக்கும் சாகித்தியனால் நன்கு அறிய முடிந்தது.

"அம்மா அழாதிங்க.முதல்ல என்ன விசயம்ன்னு சொல்லுங்க?"அப்பக்கம் தன்மையாக கேட்டிருந்தான் அவன்.

மார்க்கெட்டில் நடந்தை பாதி மறைத்து பாதி தன் சிறிய மகனிடம் கூறியிருந்தார் ஆனந்தி.

"நான் போன் பண்ணா அவன் அழைப்பை ஏற்கவில்லை."என்று அவர் கவலையாக கூறவும்,

"அம்மா.. அண்ணன் ஐபிஎஸ்.அவன் இப்போ கேஷ் விசயமா கூட வெளிய போயிருக்கலாம் இல்லையா? அதுவும் இல்லாம இப்ப அண்ணன் என்ன சூழ்நிலையில் இருக்கானோ நமக்கு தெரியாதுல்ல.

நீங்க அண்ணனுக்கு போன் பண்ணியிருக்கிங்க இல்லையா? உங்க தவறிய அழைப்பை பார்த்து விட்டு அண்ணன் மீண்டும் உங்களை நிச்சயமாக தொடர்பு கொள்வான்.நீங்கள் கவலைப்படாமல் இருங்கள்."என்று சாகித்தியன் தைரியம் அளிக்கவும்தான்,

ஆனந்தி சற்று தெளிவு பெற்றவராக "சரிடா.நான் போன வைக்கிறேன்.நீ வேலையை பாரு."என்று கூறிவிட்டு தன் அழைப்பை கட் செய்திருந்தார்.

இவர் அழைப்பை கட் செய்வதற்கும் சாந்த குமார் கதவை தட்டுவதற்கும் சரியாக இருந்தது.இவர் உடனே கலங்கியிருந்த தன் விழிகளை தனது புடவையின் முந்தானையை கொண்டு அழுத்தமாக துடைத்துவிட்டு பின்புதான் கதவை திறந்தார் ஆனந்தி.

"கதவை திறப்பதற்கு உனக்கு இவ்வளவு நேரமா?" இயல்பாக கேட்டபடி அறைக்குள் வந்தார் சாந்தகுமார்.

"இல்லிங்க கொஞ்சம் கண் அசந்துட்டேன்."வாய்க்கு வந்ததை அடித்து விட்டார் ஆனந்தி.

"பொய் சொல்லாத ஆனந்தி.நீ இந்நேரத்திற்கு எல்லாம் சமையல் அறையில நின்னு பசங்களுக்கு சமைச்சுட்டு இருப்ப.

அப்படி இருப்பவள் நீ அறையில் கண் அசந்துட்டேன் என்று பொய் சொல்ரது எனக்கு சரியாக படவில்லை.என்ன விசயம்?சொல்லு."என்று அழுத்தமாக கேட்டார் சாந்தகுமார்.

மார்க்கெட்டில் நடந்ததை அப்படியே தன் கணவனிடம் ஒப்புவித்திருந்தார் ஆனந்தி.
 
Joined
Jan 29, 2025
Messages
111
அவருக்கும் தன் அண்ணியின் மேல் கோபம் வருத்தம் இருந்தாலும் தனது அண்ணனுக்காக பொறுத்துப் போக வேண்டும் என்று முடிவு செய்து பொறுமையாக இருந்தார்.

"இந்த இரண்டு வருடத்துல நானும் அவனும் எதிர்பாராத விதமா இரண்டு முறை பார்த்திருக்கிறோம்.அப்பொழுதெல்லாம் அவன் ஏதோ என்னிடம் கூற வரும்பொழுது நான் அவன் கூற வந்ததை காது கொடுத்து கேட்காமல் சென்றுவிடுவேன்.

அது எவ்வளவு பெரிய தவறு என்று தற்போது எனக்கு புரிந்தது."என்று தன் கணவனின் நெஞ்சில் சாய்ந்து கூறியபடி மீண்டும் மெளனமாக கண்ணீர் சிந்த ஆரம்பித்தார் ஆனந்தி.

"விடும்மா.அவன் நமது மகன்.நிச்சியம் உன்னை புரிந்து கொள்வான்.வருத்தப்பட வேண்டாம்.அவனிடம் நான் பேசரேன்."என்று தன் மனைவியை தேற்றினார் சாந்தகுமார்.

நடுக் கூடத்தில் நீள்விருக்கையில் அமர்ந்திருந்த செந்தாமரைக்கு ஆனந்தி மேல் சந்தேகம் கூடியது.

'என்ன இவள் இந்நேரம் சரியாக சமையல் அறையில் நின்று சமைப்பவள் இன்னைக்கு என்ன நேர்ந்தது என்று தெரியவில்லையே? அறைக்குள் சென்று கதவை சாற்றியதற்கான காரணம் என்னவோ?'என்று மனதில் அவர் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது ஆனந்தி தன் அறைக்கதவை திறந்து கொண்டு வெளியே வந்தார்.

செந்தாமரை தன் மனதில் நினைத்ததை வாய் வழியாகவும் ஆனந்தியிடம் கேட்டிருந்தார்.

"ஆமாங்க அக்கா.எனக்கு கொஞ்சம் தலைவலி.அதனால அறைக்கு சென்று சிறிது நேரம் கண் அசந்துட்டேன்."என்று வரவழைத்த புன்னகையுடன் கூறிவிட்டு சமையல் அறைக்குள் சென்றிருந்தார் ஆனந்தி.

தொடரும்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top