Member
- Joined
- Jan 29, 2025
- Messages
- 111
- Thread Author
- #1
அத்தியாயம் 21.
அரசி ராஜேந்திரனை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்கும் முன்பே தனது மகள் சாதனாவை பார்த்து பதறிப்போனவர்,"என்னம்மா நெற்றியில அடிபட்டிருக்கு?எப்படி ஆச்சு?"என்று பதட்டமாக கேட்டிருக்க
சாதனா பதில் சொல்வதற்கு முன்பே "கொஞ்சம் ஆச்சு கீழ பார்த்து நடக்கனும்.மேலயே பார்த்துட்டு நடந்தா இப்படிதான் ஆகும்."முந்திக்கொண்டு பதில் அளித்தார் நாச்சியார்.
இதற்கிடையில்'அப்பாடா நல்ல வேளை நம்ம வருங்கால அத்தை நம்மள காப்பாத்தி விட்டார்.'தன் மனதிற்குள் நினைத்து வெளியில் நிம்மதி பெறுமூச்சு விட்டாள் அரசி.
"என்னம்மா சாதனா கொஞ்சம் சூதானமா இருந்திருக்க வேண்டாமா?சரி பரவால விடு.இனிமேல் பார்த்து கவனமா இரு."என்று அக்கரையாக ராஜேந்திரன் சாதானவிடம் பேசிக் கொண்டிருப்பதை ஏக்கமாக பார்த்துக் கொண்டிருந்தாள் இதழருவி.
இதழருவியை பார்த்துக்கொண்டிருந்த அரிசிக்கு அவளின் ஏக்கம் புரிந்தது.மறுகனமே சைகையை காட்டி இதழருவியை தன்னுடன் அழைத்துச் சென்றாள் அரசி.
"சாதனா நான் பாட்டுக்கு பேசிட்டிருக்கே.நீ என்னடான்ன அமைதியா இருக்க.எதாதவது பதில் சொல்லு."தற்பொழுது அவரின் குரலில் கடுமை கூடியிருந்தது.
"இனிமேல் பார்த்து நடந்துக்கிரேன் அப்பா."என்று சன்ன குரலில் கூறிவிட்டு வீட்டிற்குள் சென்றாள் சாதனா.
நாச்சியார் தன் சிறிய மகளை பின்தொடர்ந்து வீட்டிற்குள் சென்றார்.
ராஜேந்திரனுக்கு தற்பொழுது அரசியை எதற்காக அழைத்தோம் என்பதையே சுத்தமாக மறந்து போயிருந்தார்.
"அரசி.. நீ நான் எழுதிக்கொடுக்கிற காய்கறிகள் மட்டும் வாங்கிட்டு வந்திடுமா."என்று மென்மையாக கூறியபடி வீட்டுக்கு தேவையான காய்கறிகளை அந்த காகிதத்தில் கொட்டை எழுத்துக்களாக தமிழில் எழுதி அவள் முன்பு அத்தாளை நீட்டியிருந்தார் நாச்சியார்.
அரசியும் தான் வாங்கி வருவதாக தலையை அசைத்து ஆமோதித்தபடி அவரிடம் இருந்து அந்த காகிதத்தை வாங்கியவள் கையுடன் ஒரு கட்டைப்பையை எடுத்துக்கொண்டு வீட்டின் மெயின் டோரை கடந்து வெளியேறி இருந்தாள்.
அவள் ஆட்டோக்காக வெளியே காத்திருக்கும் சமயத்தில் "அரசி.. இங்க நின்னு என்ன பண்ணிட்டு இருக்க?"என்று அவ்வழியாக வாக்கிங் சென்றுகொண்டிருந்த ராஜேந்திரன் கேட்டிருக்க,
தனது கையில் வைத்த கட்டுப்பையை காட்டி காகிதத்துண்டை அரசி அவரிடம் காண்பித்து தான் காய்கறிகள் வாங்க மார்க்கெட் சென்று வருவதாக சைகையில் கூறியிருக்க,
"அப்படியா சரி சரி.பார்த்து போயிட்டு வா."என்று ராஜேந்திரன் அவளிடம் பல்லை காட்டவும் அரசிக்கு 'ஐயோ' என்று இருந்தது.
'அடே படுபாவி பயலே நான் பொண்ணு இல்லடா பையன்.'என்று மனதில் நினைத்தபடி வெளியில் மிகவும் கடினப்பட்டு மோனகப் புன்னகையை அவரை நோக்கி வீசவும்தான் தாமதம் ,
"அரசி நீ மார்க்கெட்டுக்கு போயிட்டு வா.என்ன என்னோட ஆபிஸ் ரூம்ல வந்து பாரு.மறக்காம டீ எடுத்துட்டு வா."என்று மென்மையாக சொல்லவும் அரசிக்கு பகீர் என்றானது.
அதே நேரத்தில் தான் வந்த நோக்கத்தை நினைத்து பார்த்தவனுக்கு சிறிது மகிழ்ச்சியும் ஏற்பட்டிருந்தது.ராஜேந்திரன் எப்பொழுதும் மாலையில் வாக்கிங் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.அதனாலதான் தற்பொழுது அரசியை பார்க்க முடிந்தது.
இதழருவி தனது அறையில் சுவற்றை வெறித்தபடி கட்டிலில் அமர்ந்திருந்தாள்.அவளுக்கு தான் ஒரு இதய நிபுணர் என்று நினைக்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.அதே நேரத்தில் தனக்கு நினைவுகள் தப்பி தான் மருத்துவராக பணிபுரியாதது சற்று வருத்துத்தை தந்திருந்தது.
அப்பொழுது அவ்வறையின் திறந்திருந்த ஜன்னல் வழியாக பஞ்சவர்ண கிளி பறந்து வந்து அவளின் வலது தோளில் அமர்ந்ததும் அவளுக்கு அளவில்லாத மகிழ்ச்சி.
இதுவரை இருந்த வருத்தம் எங்கு காணோமல் போனதோ அது அவளுக்கே தெரியவில்லை."அரசி எப்படி இருக்க?நீ இங்க வருவேன்னு நான் சுத்தமா எதிர்பார்க்கல?
ஆனாலும் நீ வந்தது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.இதழரசன் சார் எப்படி இருக்காரு? என்னை ஏன் இதழரசன் சார் தேடி வரல?அவர நான் ரொம்ப மிஸ் பண்றேன்."என்று வருத்தமாக அரசி என்ற பஞ்ச வர்ண கிளியிடம் தன் மனப்பாரத்தை கூறிக்கொண்டிருந்தாள் இதழருவி.
இதழரசனை பற்றி விக்ரம் கூறியதை துளியும் நம்பவில்லை அவள்.முதலில் விக்ரம் கூறியதை கேட்டு குழம்பினாள்.ஆனால்,அவள் மனது அடித்து சொன்னது தன்னிடம் விக்ரம் கூறியது அனைத்தும் பொய் என்று.
ஆனால் எப்படி நீ சொல்வது பொய் என்று அவனிடம் கூறவது?அப்படி கூறினால் மேலும் தனக்கு பிரச்சினை ஏற்பட்டுவிடமோ? அதுவும் இல்லாமல் தனக்கு நினைவுகள் இல்லாத இந்த சமயத்தில் கூறுவது நல்லதல்ல என்று நினைத்துதான் தற்பொழுது வரை அமைதியாக இருக்கிறாள்.
அவன் கூறியதை தான் நம்புவது போல நடித்துக்கொண்டிருக்கிறாள் பாவை.விக்ரமுக்கு அது புரியாமல் இருக்குமா என்ன? அந்த காரணத்தாலதான அவன் அவளை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்று நினைவுகள் திரும்பி வர மெடிசன் வாங்கித் தருவதாக கூறி நினைவுகள் திரும்ப வராதபடி அவன் மெடிசன் வாங்கி தந்தது சுத்தமாக அவளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
அன்று அவன் அழைத்ததும் இதழருவி மருத்துவமனைக்கு சென்றது தன்னுடைய சுயநலத்துக்காக.எப்படியாவது தன் பழைய நினைவுகள் திரும்ப வந்தால் போதும்.அது யார் மூலமாக இருந்தால் என்ன? என்று நினைத்துதான் அன்று விக்ரமுடன் மருத்துவமனைக்கு போனது.அது விக்ரமுக்கு தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை.
இதழரசன் இல்லத்தில் இருபது நாட்களாக தங்கியிருந்தவளுக்கு அவனை பற்றி தெரியாமல் போகுமா என்ன? இதழரசன் அவளின் காட்டிய தூய்மையான அன்புதான் விக்ரம் கூறியதை நம்ப மறுத்துதற்கு முக்கிய காரணமே.
தற்பொழுதெல்லாம் அவளின் எண்ணங்கள் இதழசனை சுற்றியேதான் இருந்தது.அவனை எப்பொழுது பார்ப்போம் என்றிருந்தது அவளுக்கு.
எப்படியாவது தனக்கு அந்த விக்ரமுடன் திருமணம் நடப்பதற்கு முன்பு இதழரசனை பார்க்கவேண்டும்.அப்படி பார்த்தால் தன்னை இங்கிருந்து அழைத்துச் செல்லமாறு அவனிடம் சொல்ல வேண்டும் என்று உறுதியாக நினைத்துக்கொண்டிருந்தவளுக்கு அரசி என்ற பஞ்சவர்ணகிளியின் வருகை மகிழ்ச்சிதான்.
அக்கிளிக்கு தன்னிடம் கேட்ட இதழரசியின் கேள்விகள் புரிந்துதான் இருந்தது.அவளின் முகத்தில் ஏற்படும் உணர்ச்சிகளை வைத்து அவள் கேட்ட கேள்விகளை அது புரிந்து கொண்டிருந்தது.
அதுவும் இல்லாமல் அந்த கிளிக்கு இரண்டு வருடத்திற்கு முன்பே இதழருவி அதுக்கு மிகவும் பரிட்சியம் என்பதால் அவளின் மகிழ்வு,கோபம்,வருத்தம், போன்ற உணர்வுகளை அக்கிளி ஒரளவு அறிந்து வைத்திருந்தது.
தற்பொழுது அதன் விளைவாகத்தான் இதழருவியின் வருத்தமான கேள்விகளை புரிந்து கொண்டிருந்தது.அதற்கு மட்டும் பேசும் சக்தி இருந்தால் இதழரசன் பெண் வேடத்தில் உன்னுடன் இங்குதான் இருக்கிறான் என்று சொல்லியிருக்க கூடும்.