• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Jan 29, 2025
Messages
111
அத்தியாயம் 20.

அரசி வேண்டுமென்றேதான் தண்ணீர் கொட்டியிருந்தாள்.இன்றைக்கு சாதனாவிற்கு பாடம் புகட்டியே ஆக வேண்டும் என்ற ரீதியில்.

சாதனா மின்விசிறியின் சுவிட்சை ஆன் செய்துவிட்டு திரும்பி ஒரு எட்டு வைக்கும் பொழுது சர்ரென்று கால் சறுக்கி அவள் "ஆ..."என்று கீழே விழப்போகும் சமயத்தில் இதழருவி அவளை தாங்கிப் பிடித்து நீள்விருக்கையில் அமரவைத்தாள்.

"ஏய் நீ எதுக்கு என்ன தாங்கி பிடிச்ச?"என்று வீடே அதிரும்படி கத்தியிருந்தாள் சாதனா.

"இல்ல நீ கீழ விழுந்துருக்கூடாதுன்னு.."என்று இதழருவி கூறி முடிப்பதற்குள்

"நான் கீழ விழுகாம இருக்க நீ என்ன தாங்கி பிடிச்சதற்கு பதிலாக நான் கீழே விழுந்திருந்தா ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பேன்."என்று வார்த்தைகள் இதழருவியை குத்திக் கிழித்தபடி சாதனா நீள்விருக்கையில் இருந்து படாரென்று எழுந்து வேகமாக நடந்த பொழுது,

கால் இடரி சுவற்றில் கீழே விழுந்தவளுக்கு நெற்றியில் காயம் பட்டு இரத்தம் பீறிடத் தொடங்கியது.

அதேநேரத்தில் நாச்சியாரும் நடுக் கூடத்திற்கு வந்திருந்தார்.சாதனாவின் நெற்றியின் ஓரத்தில் காயம் ஆகி இரத்தம் பீறிட்டு வருவதை பார்த்ததும் சற்றி பதறிதான் போனார் அவர்.

"உனக்கு அறிவே இல்ல சாதனா.பார்வை இல்லாதவங்க கூட கவனமா குச்சி வச்சு நடப்பாங்க.ஆனா நீ இருக்கியே மேலயே பார்த்து நடந்துட்டு.கொஞ்சம் கீழயும் பார்த்து நட இனிமேல்.

இப்ப பார்த்து உங்க அப்பா வேற வீட்டுல இல்ல.எப்படி நான் உன்ன ஹாஸ்பிடல் கூட்டிட்டு போவேன்."என்று அவர் சாதனா விடம் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது அரசி நாச்சியார் முன்பு வந்து தனக்கு கார் ஒட்டுத் தெரியும் என்பதை சைகையில் சொல்லவும்

"அரசி உனக்கு உண்மையாவே கார் ஓட்டத் தெரியுமா!"என்று ஆச்சரியமாக கேட்டபடி சாதானவின் நெற்றியின் ஒரத்தில் காயத்தில் வழிந்து கொண்டிருக்கும் இரத்தத்தை காட்டன் துணியை அதன் மேல் வைத்து சாதனாவை அழுத்தி பிடிக்கும்படி சொல்லிவிட்டு,

அரசியின் புறம் திரும்பியவர் "இதழருவி கார்.."என்று நாச்சியார் சொல்லி வருவதற்கு முன்பே "என்னால எல்லாம் அவளோட காருல வரமுடியாது."என்று அந்நிலையிலும் எரிச்சலாக கத்தியிருந்தாள் சாதனா.

ஏற்கனவே சாதனா அவளை வார்த்தையால் குத்தி கிழித்தற்கே இதழருவி வருத்தப்பட்டு கொண்டிருப்பவளுக்கு தற்போது இந்த பேச்சும் சேர்ந்துவிட மேலும் மனம் உடைந்தாள்.

கடினப்பட்டு தன் கண்ணீரை அடக்கியபடி வலியுடன் அவள் சாதனாவை பார்க்கவும்,

சாதனாவோ இதழருவி தன்னை பார்த்த மறுநொடி அவளை பார்க்க பிடிக்காமல் முகத்தை வேற புறமாக திருப்பிக் கொண்டாள்.

அரசிக்கு இதழருவியின் வாடிப்போன முகத்தை பார்க்க பார்க்க சாதனா வின் மேல் பயங்கர கோபம்தான் வந்தது அரசிக்கு.

"அரசி.. சாதனாவோட கார் கீ அவளோட ரூம்ல இருக்கும்.போய் எடுத்துட்டு வந்து கார ஸ்டார்ட் பண்ணு."என்று நாச்சியார் பதட்டமாக சொல்லவும் அவருக்காக சாதனாவின் அறைக்கு சென்று
கார் சாவியை எடுத்தபடி வேக நடையுடன் வீட்டின் வாயிலை கடந்து போர்டிகோவில் நின்றிருந்த சாதனாவின் மகிழுந்தில் ஏறி அமர்ந்து வாகனத்தை உயிர்பித்ததும்,

நாச்சியார் சாதனாவை கைத்தாங்கலாக அழைத்து வந்து பின் இருக்கையில் அமரவைத்து தானும் அமர,அதே நேரத்தில் இதழருவியும் ஒடி வந்து மகிழுந்தின் முன்னிருக்கையில் ஏறி அமர்ந்து கதவை சாற்றியிருந்தாள்.

இதழருவி ஒர் இதய அறுவை சிகிச்சை நிபுணர் என்பதை யாரும் அவளிடம் சொல்லவில்லை.தன் பழைய நினைவுகள் இல்லாததால் அவளுக்கும் தான் ஒரு மருத்துவர் என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

"இதழருவி உனக்கு எதுக்கும்மா வீணா அலைச்சல்?நாங்க போயிட்டு வந்தர்றோம்.நீ வீட்ல இரும்மா."என்று நாச்சியார் மென்மையாக சொல்லவும்

"அம்மா என்னதான் சாதனா என்ன வெறுத்தாலும் சரி என்ன ஒதுக்கி வெச்சாலும் சரி என்னால அவள விட்டுக்கொடுக்க முடியாதும்மா.

என்னதான் இருந்தாலும் அவ என் தங்கச்சி.நானும் கூட வரேன்மா.இதற்கு மேல எதுவும் பேசவேண்டாம்."என்று தன் மெல்லிய குரலில் கூறவும்

நாச்சியார் தான் பெற்றெடுக்காத மூத்த மகளை மெச்சுதலாக பார்த்தார்.இதழருவியின் இந்த பாச பினைப்பு பேச்சு சுத்தமாக சாதனாவிற்கு பிடிக்கவில்லைபோலும்.கோணலாக இதழ் வளைத்து சிரித்தவள்,

"அம்மா எனக்கு அடிபட்டு இரத்தம் வந்துட்டிருக்கு.இப்பகூட என்மேல உனக்கு அக்கறை இல்லாமா உன் பெரிய பொண் மேல அக்கறைய காமிச்சிட்டு இருக்க."என்று வலியில் பற்களை கடித்தபடி கத்தியிருந்தாள் சாதனா.

இவள் இப்படி கத்திய மறுநொடி அரசி வாகனத்தை செலுத்த ஆரம்பித்தாள்.அரைமணிநேரத்தில் தனது தம்பி சாகித்தியனின் மருத்துவமனையின் முன்பு வாகனத்தை நிறுத்தியிருந்தான்.

இரண்டு வருடம் கழித்து தன் தம்பியின் மருத்துவமனைக்கு மீண்டும் வந்திருக்கிறான் அரசி என்ற பெண் வேடத்தில் இருக்கும் இதழரசன்.

இதுவே தற்பொழுது தான் பெண் வேடத்தில் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் வேற மருத்துவமனைக்குதான் சென்றிருப்பான்.

நாச்சியார் சாதனாவை அழைத்துக்கொண்டு முன்னே செல்லவும் அரசியும் இதழருவியும் பின்னே சென்றனர்.

மருத்துவமனைக்குள் வரும் ஒருவித மருந்து வாசனை இதழருவி நுகர்ந்ததுமே அவளுக்குள் ஒருவித சிலிர்ப்பு தோன்றி மறைந்தது.

நாச்சியார் சாதாவை மருத்தவர் அறைக்குள் அழைத்துச் சென்றுவிட அரசியும் இதழருவியும் காரிடாரில் வரிசையாக போடப்பட்டிருக்கும்
நாற்காலியில் இருவரும் ஆளுக்கொரு நாற்காலியில் அமர்ந்தனர்.
 
Joined
Jan 29, 2025
Messages
111
மருத்துவர் அறையில்,

மருத்துவர் அறைக்குள் சாதானா சாகித்தியனை பார்த்ததும் அதிர்ச்சி.அவளுக்கு சாகித்தியன் ஒரு மருத்துவர் என்று இன்றுதான் அவனை பார்த்ததும்தான் தெரிந்துகொண்டாள்.

சாதனாவிற்கு வேண்டுமானால் சாகித்தியனை பற்றி எதுவும் தெரியாமல் இருக்கலாம்.ஆனால் சாதாவை பற்றி அவள் என்ன படித்திருக்கிறாள்? என்ன செய்கிறாள்?என்பதை கொஞ்சமாவது தெரிந்து வைத்திருந்தான் சாகித்தியன்.

"தம்பி.. இவளுக்கு கால் இடறி கீழே விழுந்து நெற்றியில காயம் ஆகிடுச்சு.இரத்தம் நிற்கவே மாட்டிங்குது.கொஞ்சம் என்ன ஏதுன்னு பாருப்பா?"என்று தவிப்பாக நாச்சியார் சொல்லவும்

"அத்தை.. நீங்க கொஞ்சம் வெளிய இருங்க.நான் பார்த்துட்டு கூப்டும்போது உள்ள வாங்க."என்று அவன் கூறியதும் நாச்சியார் அவ்வறையிலிருந்து வெளியேறி இருந்தார்.

'கடவுளே! நாம கேர்ளாவல பண்ண வேலைக்கு இப்ப இவன் நம்மள பழிவாங்கிடவானோ?'என்று மனத்திற்ள் பயந்தபடி வெளியில் சற்று தைரியமாக இருப்பது போல காட்டிக்கொண்டாள் சாதானா.

"எப்படி அடிபட்டுச்சு?"என்று கேட்டபடி பஞ்சை வைத்து அவளுக்கு வலிக்காதபடி காயத்தை சுத்தம் செய்ய ஆரம்பித்தான் சாகித்தியன்.

"அதுதான் அம்மா சொன்னாங்களே கால் இடறி கீழே விழுந்துட்டேன்னு."என்று மெல்லிய குரலில் கூறியிருந்தாள் சாதனா.

"என்ன படிச்சிருக்க?"எனக்கேட்டபடி காயத்தில் மருந்தை தடவினான்.

"எம்.பி.ஏ."என்று மெல்லிய குரலில் கூறியவள்,"நீங்க மருத்துவரா?"என்று அவள் அவனிடம் கேட்டிருக்க

"நான் மருத்துவர் என்பதாலதான் உனக்கு இப்ப வைத்தியம் பார்த்துட்டு இருக்கேன்."என்றபடி அவளின் நெற்றியில் காயம் பட்டிருந்த இடத்தின் மேல் ப்ளாஸ்திரியை ஓட்டும் பொழுது,

'ஸ்..' வலியில் அவள் மெதுவாக கத்தவும், "அவ்வளவுதான்"என்று கூறியபடி ப்ளாஸ்திரியை ஒட்டிமுடித்தவன் ப்ரிஸ்க்ரிப்ஷன் நோட்டிலிருந்து ஒரு பேப்பரை கிழித்து அவனே அவளின் பெயரையும் வயதையும் எழுதி வலி இல்லாமல் இருக்க காயம் குணமாக சில மருந்துகளை எழுதி ப்ரிஸ்க்ரிப்ஷன் பேப்பரை அவள் முன்பு நீட்டியபடி,

"இந்த மெடிசன ஒன்வீக் தொடர்ந்து எடுத்துக்கோ.காயத்தில் தண்ணீர் படாமல் பார்த்துக்கோ சீக்கிரம் சரியாயிடும்.

ஏதேனும் சந்தேகம் அப்படின்னா ப்ரிஸ்க்ரிப்ஷனல இருக்கர நம்பருக்கு போன் பண்ணு. அந்த நம்பர் என்னோடுதுதான்"என்று முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாது அவள் சொல்லவும் சாதனாவும் அமைதியாக அவனிடமிருந்த ப்ரிஸ்க்ரிப்ஷனை பெற்றபடி சரி என்பது போல் தலையாட்டினாள்.

சாதனா அவ்வறையில் இருந்து வெளியேறவும் அவளை தொடர்ந்து வெளியே வந்தவனுக்கு இதழருவியை பார்த்ததும் அப்படியொரு அதிர்ச்சி.

"இதழருவி என்னாச்சு உங்களுக்கு?ஏன் ஹாஸ்பெட்டலுக்கு இத்தன நாள் வரல?"என்று சாகித்தியன் இயல்பாக கேட்கவும் மழங்க மழங்க விழித்தாள் அவள்.

நாச்சியாருக்கு இதழருவி இரண்டு வருடமாக இங்குதான் பணிபுரிந்திருக்கிறாள் என்பது நொடியில் புரிந்து கொண்டவர்,

"தம்பி இதழருவிக்கு தலையில அடிபட்டதால பழைய நினைவுகள் இப்ப இல்லை.அவளுக்கு தான் ஒரு மருத்துவர் என்பதே தெரியாது."என்று நாச்சியார் அவரின் நிலைமையை எடுத்து சொல்லியிருக்க,

சாகித்தியன் இதழருவியை கவலையாக பார்த்தான்.'கடவுளே!சீக்கிரமா அவங்களுக்கு பழைய நினைவுகள் திரும்பி வரனும்.'என்று மனதில் இதழருவிக்காக கடவுளிடம் வேண்டுதல் வைத்துவிட்டு,

வெளியில் "எல்லாம் சீக்கிரமா சரியாயிடும் இதழருவி.நீங்க தைரிமயா இருங்க."என்று கூறியவனின் பார்வை அரசி மேல் பட்டு மீண்டது.

'அண்ணனுக்கு பொண்ணு வேசம் போட்டா அச்சு அசலாக இவங்கள மாதிரிதான் இருப்பாங்க.'என்று மனதில் நினைத்தவன்,நாச்சியாரிடம் சாதனாவிற்கு ஆழமான காயம் ஏற்பட்டிருக்க வில்லை,

ஒன்றும் பிரச்சனை இல்லை,தான் எழுதித் தந்த மருந்து மாத்திரைகளை ஒருவாரத்திற்கு எடுத்துக்கொள்ளும்படி கூறிவிட்டு அவர்களிடம் விடைபெற்று தனது கடமையை செய்வதற்கு மீண்டும் கேபினுக்குள் வந்திருந்தான்.

அரசி வாகனத்தை மருத்துவமனையில் இருந்து வீட்டை நோக்கி செலுத்தியிருந்தாள்.

'பழக்க தோசத்துல நம்ம வீட்டுக்கு போகக் கூடாது.ஏற்கனவே இந்த குட்டி சாத்தான் சாதனாவிற்கு நம்ம மேல சந்தேகம் வந்திருச்சு.

அதே நேரத்தில இந்த குட்டிசாத்தான்தான் என் தம்பி கல்யாணப்பண்ணிக்கர பொண்ணும் கூட.என்ன இருந்தாலும் இந்த குட்டி சாத்தான் எனக்கு வருங்கால கொழுந்தியா வேற.

இனிமேல் இந்த குட்டி சாத்தான் என்ன பேசினாலும் நாம காதிலயே வாங்கக் கூடாது.நான் இப்படி மாறுவேடத்தில் வந்துததே என் இதழுருவிக்காகதான்.
அதே நேரத்தில் ஒரு கேஷ் முடிவுக்கு வரப்போகுது.'பல சிந்தனைகளை தன் மனதில் ஓடவிட்டபடி சாலையிலும் கவனத்தை பதித்து மகிழுந்தை செலுத்திக் கொண்டிருந்தாள்.

ராஜேந்திரன் இல்லத்தில்,

'எங்க போயிட்டாங்க இவங்க.'என்று மனதில் நினைத்தபடி பின்கை கட்டியபடி வராண்டாவில் நடந்து கொண்டிருந்தார் ராஜேந்திரன்.

'அரசி கிட்ட சொல்லி இதழருவி மேல இன்னும் கூடுதல் கவனம் வைன்னு சொல்லனும்.இதழருவிக்கும் விக்ரமுக்கு திருமணம் நடக்கும் வரைதான் இந்த பாதுகாப்பு.'என்று மனதில் நினைத்தபடி எதிரிச்சையாக அவர் கேட்டை திரும்பி பார்க்க,சாதனாவின் கார் கேட்டை கடந்து உள்ளே வந்துகொண்டிருந்ததை புருவ முடிச்சுடன் பார்த்தார் ராஜேந்திரன்.

அரசி மகிழுந்தை போர்டிகோவில் நிறுத்தி ஓட்டுநர் இருக்கையில் இருந்து இறங்குவதை அதிர்ச்சியுடன் பார்த்தார் ராஜேந்திரன்.

சாதாரண தோட்டக்கார மகளுக்கு கார் ஓட்ட தெரியும் என்றால் அவருக்கு சற்று அதிர்ச்சியாகத்தானே இருக்கும்.

இதழரசன் பெண் மாறுவேடத்தில் ராஜேந்திரனை சந்தித்து தான் இங்கு முன்பு பணிபுரிந்த தோட்டக்காரன் நெல்லையப்பன் மகள் என்றும் அவருக்கு உடம்பு சரியில்லாமல் படுத்த படுக்கை சேர்ந்து விட்டதாகவும்,

அவருக்கு பதில் தனக்கு இங்க வேலை ஏதாவது தரும்படி தன்னிடம் கேட்டு நின்றவளுக்குதான் இதழருவியை கண்காணிக்கும் வேலையை அவளிடம் தந்து அதே நேரத்தில் வீட்டு வேலையும் செய்யும்படி கூறியிருந்தார் ராஜேந்திரன்.

'அடக்கடவுளே!இவனா?அன்னைக்கு படாத பாடு பட்டு லெட்டர்ல எழுதி காமிச்சு வேலை வாங்கரதுக்குள்ள நான் பட்ட பாடு எனக்கெல்ல தெரியும்.

அதுவும் இல்லாம இவன் பார்வையே சரியில்லை.அப்பப்போ நம்மள முழுங்கரமாறியே பார்க்கிறான்.இப்ப நாம கார ஓட்டிட்டு வந்துதால நம்ம மேல சந்தேகம் வந்திருக்கமோ?'என்று மனதில் நினைத்தபடி அமைதியாக வீட்டுக்குள் செல்வதற்கு
ள் 'அரசி'என்று தீர்க்கமாக அழைத்திருந்தார் ராஜேந்திரன்.

தொடரும்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top