• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Jan 29, 2025
Messages
111
அத்தியாயம் 19.


ராஜேந்திரன் இல்லம்,

நான்கு நாட்கள் அப்படியே கழிந்திருந்தது.

அறையின் ஜன்னல் வழியாக தொலைவில் சூரியன் உதயமாவதை சில நிமிடம் வெறுமென நின்று பார்த்தவள்

தனது அறையில் போடப்பட்ட நாற்காலியில் அமர்ந்துகொண்டு வலதுகை மோதிர விரலில் விக்ரம் அணிவித்த மோதிரத்தையே வெறித்துக்கொண்டிருந்தாள் இதழருவி.

அவளுக்கு விக்ரமையும் விக்ரம் அணிவித்திருந்த மோதிரத்தையும் சுத்தமாக பிடிக்கவில்லை.ஏன்? எதனால்? என்று அவளுக்கு பழைய நினைவுகள் இல்லாததால் சரியாக பிடிபடவில்லை.

"தட்..தட்.."என்று கதவு தட்டும் ஓசை கேட்டதும் 'அரசியாகத்தான் இருக்கும்.'என்று உறுதியாக மனதில் நினைத்தபடி தன் அறைக்கதவை திறந்திருந்தாள் இதழருவி.

அரசி இரண்டு நாட்களுக்கு முன்பு
தான் அவ்வீட்டில் வேலைக்கு சேர்ந்திருந்தாள்.அவளாள் பேச இயலாது.

அரசி அறைக்குள் வந்தவள் இதழருவியின் முகத்தை ரசித்துபார்த்தபடி பால் நிறைந்த கண்ணாடி டம்ளரை காண்பித்து அருந்த அவளுக்கு சைகை காட்டியிருந்தாள் அரசி.

"அரசி நான் இன்னும் பல்தேய்க்கல.நீ அந்த டேபிள் மேல வெச்சுட்டு போ நான் பல் தேய்ச்சிட்டு அப்புறமா குடிச்சிக்கிறேன்."என்று மென்மையான குரலில் நிதானமாக இதழருவி சொல்லிவிட்டு குளியல் அறைக்குள் சென்று கதவை அடைத்த மறுநொடி,

அரசி அவ்வறையின் கதவை சத்தம் கேட்காதபடி சாற்றி தாழிட்டவள் வேகமாக செயல்பட்டாள்.இதழருவி நினைவுகள் திரும்ப தற்பொழுது எடுத்துக்கொண்டிருக்கும் மாத்திரைகளை வேகமாக மாற்றி வைத்தவள் நொடியும் தாமதிக்காமல் அவ்வறையின் கதவை சத்தம் வராது திறந்து வெளியே வந்தவள் வெறுமென சாற்றி விட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்திருத்தாள்.

"என்ன அரசி இதழருவிக்கு பால் கொண்டு குடுத்துட்டு வந்திட்டயா?"என்றபடி சமையலுக்கு தேவையான வெங்காயத்தை வெட்டிக்கொண்டிருந்தார் நாச்சியார்.

"என்ன பதிலயே காணோம்?"என்று நிமிர்ந்து அரசியின் முகத்தை பார்த்ததும்தான் அவருக்கு நினைவு வந்தது.

"சாரி அரசி ஏதோ ஒரு ஞாபகத்தல அப்படி கேட்டுட்டேன்."என்று அவர் வருத்தமாக சொல்லவும்

"பரவால்ல.இதுக்கெல்லாம் எதுக்கு மன்னிப்பு கேட்கிரிங்க?"என்று செய்கையில் அவரிடம் கேட்டிருந்தாள் அரசி.

அதற்கு நாச்சியார் புன்னகைக்கவும் அரசியோ தான் இதழுருவிக்கு பால் கொண்டுபோய் கொடுத்துவிட்டு வந்ததாக சைகயில் அவரிடம் சொல்லவிட்டு இனி நான் என்ன வேலை செய்யட்டும் என்று
சைகையில் கேட்டுவிட்டு அமைதியாக நின்றிருந்தாள்.

"வீட்டையெல்லாம் ஒட்டடை அடிச்சு கூட்டி தொடைக்கனும் அரசி.அதுவும் வாரத்துக்கு ஒருதடவ பண்ணுனா போதும்.போன வாரம் நானே பண்ணிட்டேன்.இந்தவாரம் நீ வந்துட்ட.இனி நீயே பாத்துக்கோ."என்று கூறிவிட்டு அவர் சமையல் வேலையை கவனிக்கவும்

அமைதியாக சமையலறையிலிருந்து வெளியேறி இருந்தாள் அரசி.அப்பொழுதுதான் சாதனா தன் அறையை விட்டு வெளியே வந்து நடுக் கூட்டத்தில் போடப்பட்ட நீள்விருக்கையில் கால்மேல் கால் போட்டு அமர்ந்திருந்தவள் அரசியை பார்த்ததும் சொடக்கிட்டு தன்னிடம் வரும்படி அழைத்திருந்தாள்.

'இந்த சாதனா பிசாசுக்கு எவ்வளவு திமிர் இருக்கனும்.' என்று மனதில் நினைத்தபடி சென்று அவள் முன்பு நின்றிருந்தாள் அரசி.

"ஏய்.. எனக்கு டபுள் ஸ்டராங்க டீ போட்டு எடுத்துட்டு வா."என்று அதிகாரமாக அவளின் குரல் வெளிவரவும்

'குட்டி சாத்தான்.'என்று மனதில் கருவியபடி மீண்டும் சமையலறைக்கு சென்று டீ போட்டு எடுத்து வந்து டீ நிறைந்த கோப்பையை அவள் முன்பு அரசி நீட்டியிருக்க

"ஹலோ.. நான்தான் கைபேசியில பிசியா இருக்கன்னு உனக்கு தெரியதல்ல ? டீபாய் மேல வெச்சுட்டு போ."என்று சாதனா முகத்தை சுருக்கி எரிந்து விழவும்

அமைதியாக பற்களை கடித்தபடி டீபாயின் மீது டீ கோப்பையை வைத்து விட்டு அவ்விடத்தை விட்டு அகன்றிருந்தாள் அரசி.

அவள் வேறொரு அறைக்கு வந்த பின்புதான் அவளின் கைபேசி வைப்ரேட் ஆனது.

"ஹலோ கார்த்தி இங்க எல்லாம் நாம நினைச்சபடிதான் போயிட்டு இருக்கு.காவல் நிலையத்தல நான் ஒரு கேஷ் விசயமா வெளியூர் போயிருக்கரதாவே நீ மெயின்டயின் பண்ணிக்கோ.

முக்கிய விசயம் இனிமேல் எனக்கு போண் பண்ணாத.அதற்கு பதிலா மெஸேஜ் பண்ணு.ரொம்ப எமர்ஜென்சியா இருந்தா மட்டும் கூப்பிடு."என்றதோடு அரசி அழைப்பை கட் செய்திருந்தாள்.

பின்பு தன்னை யாராவது கண்காணிக்கிறார்களா? என்று சுற்றியும் பார்வை ஓடவிட்டபின்பு
ஒட்டடை அடிக்க தொடங்கினாள் அரசி.

"அம்மா அரசி நடக்கிர நடை ஆம்பள மாதிரியே இருக்கு."என்றபடி காலிக்கோப்பையை சின்க்கிள் வைத்தாள் சாதனா.

"என்னடி லுசு மாறி உளறுகிறாய்?எனக்கொன்னும் அந்த மாதிரி தெரியல."என்றபடி ரசத்திற்கு அடுப்பில் கடாயை வைத்து தாளிக்க ஆரம்பித்திருந்தார் நாச்சியார்.

ஆனால் சாதானவிற்கு அரசியின் மீதிருந்த சந்தேகம் மட்டும் குறைந்தபாடில்லை.

இதழருவி தனது அறையில் அரிசி மேசையின் மேல் வைத்துச்சென்ற பாலை தற்பொழுதுதான் சிப் சிப்பாக அருந்த ஆரம்பித்திருந்தாள்.

தற்பொழுதெல்லாம் இதழருவி முழுநேரமும் அறையிலேதான் முடங்கி கிடக்கிறாள்.ஏதொ ஒன்று அவளின் மனதை போட்டு அழுத்திக்கொண்டிருந்தது.அது என்ன என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கிறாள் பேதை.

ராஜேந்திரன் தன் அலுவுலக அறைக்கு வந்தவர் அறையின் கதவை முழுதாக சாற்றி விட்ட பின்புதான் விக்ரமுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

'ச்சே.. அன்னைக்கு காலையிலும் இந்தமாதிரி ரூம் கதவ சாத்தி வெச்சுட்டு போன் பேசியிருந்தால் அந்த அனாத நாய் இதழருவி நான் பேசனத கேட்டிருந்துருக்காது.இப்ப இவ்வளவு பிரச்சனையும் வந்திருக்காது.'என்று மனதில் நினைத்தபடி அப்பக்கம் அழைப்பை ஏற்கும் வரை காத்திருந்தார்.

அப்பக்கம் அழைப்பு ஏற்கப்பட்டு விக்ரம்
"ஹலோ அங்க்கிள் காலை வணக்கம்."என்றுதான் தாமதம்

"அதெல்லாம் இருக்கட்டும் விக்ரம்.
நீ பாட்டுக்கு அவள டாக்டர்கிட்ட கூட்டிட்டு போய் பழைய நினைவுகள் திரும்ப வருவதற்கு மாத்திரை வாங்கி கொடுத்திருக்க?

இதழருவிக்கு பழைய நினைவுகள் மட்டும் திரும்புச்சு நாம கூண்டோ உள்ளதான் போகனும்.நான் சொல்ரது உனக்கு புரியும் நினைக்கிறேன்."என்று மூச்சுவிடாமல் படு சீரியஸாக ராஜேந்திரன் பேசவும்

கைபேசியின் அப்பக்கம் விக்கரம் "ஹஹஹஹ.."வெடித்து சிரிக்கும் சத்தத்தை கேட்டதும் இவருக்கு சற்று கடுப்பாகத்தான் இருந்தது.

"விக்ரம் நான் என்ன இப்ப காமெடி ஏதாதவது சொன்னனா?இப்படி விழுந்து விழுந்து சிரிச்சிட்டு இருக்க?"என்று எரிச்சலாக அவனிடம் கேட்டிருந்தார் ராஜேந்திரன்.

"ரிலாக்ஸ் அங்க்கில்.ஏங்க அங்க்கில் ஒரு முக்கியமான விசயத்தை மறந்துட்டிங்க.நீங்களே இவ்வளவு யோசிக்கும் போது நான் அவகூட காலம் முழுவதும் வாழப்போறவன்.அப்ப நான் எவ்வளவு யோசிச்சிருப்பேன்.

இதழருவிக்கு நான் பொய் சொல்ரனோனு சந்தேகம் தோனுக்கூடாதன்னுதான் அவளுக்கு பழைய நினைவுகள் திரும்பனும்னு நான் டாக்டர் கிட்ட கூட்டிட்டு போனதென்னவோ உண்மைதான்.
ஆனா அவளுக்கு பழைய நினைவுகள் திரும்பாது."என்று விக்ரம் அழுத்தமாக கூறவும் ராஜேந்திரனுக்கு ஏதோ புரிவது போல் இருந்தது.

"அப்போ.. அவளுக்கு பழைய நினைவுகள் திரும்பி வராதபடி மெடிசன் வாங்கி கொடுத்திருக்க?அப்படிதான?"என்று வெகு ஆவலாக கேட்டிருந்தார் ராஜேந்திரன்.

"ஆமாங்க அங்க்கிள்."என்று அவன் அப்பக்கம் சிரித்தபடி சொல்லவும்தான் இவருக்கு மனதில் நிம்மதி படர்ந்திருந்தது.

"அங்க்கிள் அப்புறம் முக்கியமான விசயம்.இன்னும் கல்யாணத்துக்கு ஆறுநாள்தான் இருக்கு.ரொம்ப கவனமா இதழருவிய பார்த்துக்கங்க.போனதவடமாறி ஆயிடப்போகுது."என்று விக்ரம் எச்சரிக்கையாக அவரிடம் சொல்லவும்

"ஒன்னும் பிரச்சினை இல்லை விக்ரம்.இந்த தடவ அவ எங்கயும் போகமுடியாது.இதழருவிய கண்காணிக்க நான் ஆள் போட்டிருக்கேன்."என்று ராஜேந்திரன் ஆழ்ந்த குரலில் கூறவும்

"ரொம்ப நல்ல முடிவு அங்க்கிள்.நான் இந்த முடிவ உங்களிடமிருந்து எதிர்பார்த்துதான்.சரி அங்க்கிள் எனக்கு வேலை இருக்கு."எ
ன்றபடி அவன் அப்பக்கம் அழைப்பை கட் செய்யத பின்புதான் இவர் நாற்காலியில் ஆயாசமாக அமர்ந்தார்.
 
Joined
Jan 29, 2025
Messages
111
ஆனந்தி இல்லம்,

சமைத்தபடி சாதனாவிற்கு அழைப்பு விடுத்திருந்தார் ஆனந்தி.அப்பக்கம் அழைப்பு சென்று கட்டானதே தவிர
அழைப்பை ஏற்கவில்லை.

'சாதனாகிட்ட எப்படியாச்சு சாகித்தியன பேச வைக்கனும்.'என்று மனதில் நினைத்தபடி அமைதியாக தனது கைபேசியை அதற்குரிய இடத்தில் வைத்துவிட்டு சமையல் வேலையில் மூழ்கிப் போனார் அவர்.

சாதனாவிற்கும் சாகித்தியனுக்கும் நிச்சியம் முடிந்து இத்துடன் ஆறு நாட்கள் ஆகிறது.இதுவரை அவனும் சரி அவளும் சரி கைபேசியிலும் கூட பேசிக்கொள்ளவில்லை.

இருவருக்குமே இத்திருமணத்தில் விருப்பம் இல்லையென்றால் எப்படி பேசிக்கொள்வார்கள்?

ஆனால், ஆனந்தியோ தன் மகனை எப்படியாவது சாதனாவிடம் பேச வைக்க வேண்டும் என்று முடிவாக இருக்கிறார்.

நடக்கூடத்தில் போடப்பட்ட நீள்விருக்கையில் சோர்வாக அமர்ந்திருந்தாள் பூர்ணா.இத்துடன் மூன்று முறை வாந்தி எடுத்தாகிவிட்டது.இந்த மூன்று முறைக்கே சோர்ந்து போய் இருந்தாள்.

இதற்கிடையில் பால் டம்ளருடன் அவளை நெருங்கியிருந்தான் சந்தோஷ்.

"இந்த பால் லில் சத்து பவுடர் கலக்கி எடுத்து வந்திருக்கேன்."என்றபடி சந்தோஷ் பால் டம்ளரை அவள் முன்பு நீட்டியிருக்கவும்

"நோ..இனி நான் எதுவும் சாப்பிடமாட்டேன்.சாப்பிட்டா எனக்கு வாந்தி வாந்தியா..வருது."என்று அயர்வுடன் அவள் கூறிக்கொண்டிருக்கும்பொழுது

"அப்படிதான் இருக்கும்.அதுக்காக குழந்தையை பட்டினி போட முடியாது.நீ உனக்காக இல்லன்னாலும் குழந்தைக்காக சாப்படத்தான் வேண்டும்.பேசாம மாப்பிள்ளை கிட்டிருந்த பால் டம்ளரை வாங்கி கொஞ்சம் கொஞ்சமா குடி."என்று ஆனந்தி சொல்லிய பிறகுதான் பூர்ணா தன் கணவனிடம் இருந்த பாலை வாங்கி மெது மெதுவாக அருந்த ஆரம்பித்தாள்.

"சந்தோஷ்.."என்று ஆனந்தி அழைக்கவும்

"சொல்லுங்க சின்ன அத்தை.ஏதாதவது முக்கிய விசயமா?"தீவிரமாக கேட்டான் சந்தோஷ்.

"முக்கியமான விசயம் எல்லாம் எதுவும் கிடையாது.நீங்கதான் சாகித்தியன்கிட்ட சாதனாவோட பேசச் சொல்லனும்.ஏன்னா இப்பவரைக்கும் அந்த பொண்ணு கிட்ட போன்ல பேசவே இல்ல.

அந்த பொண்ணும் இவனுக்கு போன் பண்ணி பேசல. நிச்சயதார்த்தலயே இவங்க இரண்டு பேரும் பேருக்கு கூட பேசிக்கவே இல்லை.அதை நான் கவனிச்சேன்."என்று கூறி முடித்தார் யோசனையாக.

"நானும் கவனிச்சேன் அத்தை.நானே உங்ககிட்ட இதப்பத்தி பேசலாம்னு இருந்தேன்.அதக்குள்ள நீங்களே பேசிட்டிங்க.நான் சாகித்தியன் கிட்ட பேசரேன்."என்று சந்தோஷ் சொல்லவும்தான் அவருக்கு சற்று நிம்மதியாக இருந்தது.

"அம்மா நான் போயிட்டு வரேன்."என்று ஸ்டதெஸ்கோப் டாக்டர் கோட்டுடன் நின்றவனை பார்த்தவருக்கு சலிப்புதான் தட்டியது ஆனந்திக்கு.

"ம்.சரிடா போயிட்டு வா."என்று முகத்தில் எந்த உணர்ச்சியும் வெளிப்படுத்தாது அவர் சொல்லவும்

"ஓ.கே.மா."என்றவன் பூர்ணாவிடம் தனது மாமன் சந்தோஷிடம் சொல்லிக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி இருந்தான் சாகித்தியன்.

ராஜேந்திரன் இல்லம்,

அரசி வேர்க்க விறுவிறுக்க வீட்டை தொடைத்துக் கொண்டிருக்கும் சமயத்தில் வேண்டுமென்றே மஞ்சள் பொடியை கைதவறுதலாக கொட்டுவதுபோல கொட்டியிருந்தாள் சாதனா.

அரசிக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.'உனக்கு இருக்கு குட்டி சாத்தான்.'என்று மனதில் நினைத்தபடி அமைதியாக தொடைத்துக் கொண்டிருந்தாள் அரசி.

சாதனா திருப்தியான புன்னகையுடன் மீண்டும் நீள்விருக்கையில் அமர்ந்தாள்.

"ஏய்.. அரசி அந்த மின்விசிறிய கொஞ்சம் வேகமா வை.அப்பதான் சீக்கிரமா அப்பதான் தரை காயும்.

அரசியோ அவள் சொல்வதை காதில் விழாதபோல் துடைப்பத்தை பக்கெட்டில் உள்ள தண்ணீரில் முக்கி பிழிந்து மீண்டும் வீட்டை தொடைக்க ஆரம்பித்திருந்தாள்.

சாதனாவிற்கு பொறுமை பறந்து போனது."இது டைல்ஸ் தரை.இன்னும் நல்லா தண்ணிய பிழிந்து விட்டுதான் துடைக்கனும்.அதுவும் நாங்க போட்டிருக்கர டைல்ஸ் ரொம்ப விலை அதிகானமது.

லைட்டா தண்ணீர் இருந்தாலும் வலுக்கிவிட்டும்."என்றுபடி அவளே சொன்று மின்விசிறியின் சுவிட்ச் போர்டில் உள்ள அதற்குரிய சுவிட்சை போடுவதற்குள் அரசி தண்ணீரை சிறிது தண்
ணீரை வேண்டும் என்றே கொட்டியிருந்தாள்.

தொடரும்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top