• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Jan 29, 2025
Messages
111
அத்தியாயம் 12.

"நீ.. நீங்க.. யாரு?"என்று பயத்தில் குலறலாக வந்தது கடைக்காரனின் வார்த்தைகள்.நெற்றியில் உதித்த வேர்வை முத்துக்களை துடைக்ககூட மனம் வரவில்லை அவனுக்கு.

'நல்ல மாட்டிட்டனே!'என்று மனதில் நினைத்தவன் வெளிறிப்போன முகத்துடன் தன் கையில் மாட்டப் பட்டிருந்த விலங்கை மீண்டும் ஒருமுறை பார்த்துவிட்டு நிமிர்ந்து கார்த்திகேயனை பார்க்க,

அந்நேரத்தில்,"குட் கார்த்தி."தன் கனீர் குரலில் கூறியபடி டோப்பா முடியையும் தாடையில் ஒட்டியிருந்த டோப்பா குறுந்தாடையை நீக்கியபடி கடைக்குள் வந்தான் இதழரசன்.

சுற்றியுள்ள கடைக்காரர்கள், பொதுமக்களின் பார்வைகள் இந்தக் கடையில் நின்றிருந்த இவர்களை மொய்க்க ஆரம்பித்தது.

"கார்த்தி..இவன கூட்டிட்டு போ.ஜீப் சந்தைக்கு எதிரலதான் இருக்கு.நான்என்னோட பைக்ல வந்துர்ரேன்."என்றான் அதிகாரத் தோனியில்.

கார்த்திகேயன் அந்தக்கடைக்காரனை இழுத்து சென்று பிறகு,
"இந்த சந்தையில காய்கறி விற்கரங்க பேருல இந்தமாதிரி போதைப்பொருள் விற்பனை யாராவது செய்ரதா தெரிஞ்சா உடனடியாக போலிஷ்க்கு சொல்லுங்க.

காவல்துறை மட்டும் உங்களுக்கு நண்பன் கிடையாது.நீங்களும் காவல்துறைக்கு நண்பன்தான்.நான் சொல்ரது உங்களுக்கு புரிஞ்சிருக்கும்."என்று அழுத்தமான வார்த்தைகளை வீசிவிட்டு தன் பைக்கை நோக்கி நிமிர்ந்த நடையுடன் நடைபோட்டிருந்தான் இதழரசன்.

கதிரவன் ஒளி தேய ஆரம்பித்திருந்த மாலை நேரம் அது.

குழைந்தகள் விளையாடும் பார்க்கிற்கு வந்திருந்தாள் இதழருவி.அங்கு போடப்பட்ட பென்ச்சில் அமைதியாக அமர்ந்து பார்க்கில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளுக்கு மனச்சோர்வு ஏற்படும் போது இந்தப் பார்க்கிற்கு வருவது வழக்கம்.

'ச்சே..எந்தக் கவலையும் இல்லாம குழந்தையாவே இருந்திருக்கலாம்.'என்று மனதில் நினைத்தபடி கைப்பையில் இருந்த தனது கைபேசியை வெளியே எடுத்தாள்.

'காலையில ஏதோ புலனில் செய்தி வந்துதா செய்தி இசை சத்தம் வந்துதே.'என்று மனதில் நினைத்தபடி தொடுதிரையில் வலதுபுறம் ஒதுங்கி இருந்த புலன் செயலியை திறந்து உள்ளே சென்றாள்.

இதழரசனிடம் 'குட் மார்னிங்.'என்ற செய்தி காலையில் வந்திருப்பதை பார்த்தவள் பதிலுக்கு தானும் குட் ஈவினிங் என்று செய்தியை புலனில் தட்டிவிட்டு நிமிர்ந்தவளுக்கு அதிர்ச்சி.

இதழரசன் தான் அவன் எதிரில் நின்று இருந்தான்.

"சார்.. நீங்க?"என்றபடி மேலே எழ முயற்சிப்பவளை கீழே அமரும்படி சைகை காட்டி விட்டு அவளுக்கு எதிர் பென்ச்சில் அமர்ந்தவன்

"இங்க பாருங்க எனக்கு இந்த சினிமாவுல வர மாதிரி எல்லாம் லவ் ப்ரோபஸ் பண்ண தெரியாது.

நான் உங்கள காதலிக்கிரேன்.உங்கள பார்த்த செகன்ட்டே எனக்கு பிடிச்சிடுச்சு.உங்களுடைய விருப்பத்த சொல்லுங்கன்னு இப்பவே சொல்லனும்னு அவசியம் இல்லை.டைம் எடுத்துக்கோங்க.நல்ல செய்தியா சொல்லுங்க."என்று நிறுத்தி நிதானமாக கூறியவன் அவ்வளவுதான் என்பதுபோல் அவ்விடத்தை விட்டு சென்றிருந்தான்.

'என்ன சொல்லிட்டு போரான் லூசு.அறிவுகெட்டவன்.இவனுக்கு போய் நான் செய்தி அனுப்புனேன்பாரு என்ன செருப்பால அடிக்கனும்.'என்று மனதில் இதழரசனை திட்டியபடி அவனின் எண்னை ப்ளாக்கில் போட்டு விட்டு அவ்விடத்தை விட்டு அகன்றிருந்தாள் இதழருவி.

"இதழருவி..நில்லுடி."என்று தன் தோழி கத்திய கத்தலில்தான் தன் நடையை மட்டுப்படுத்தி நின்றாள் இதழருவி.

"இவ்வளவு நேரமா அதோ அந்த பென்ச்சலதான் உட்கார்ந்திருந்தேன்.அதற்குள்ள ஒரு எருமை மாடு வந்து என்னோட மூட் கெடுத்து விட்டுட்டு போயிருச்சு."என்றவள் மேலும் தொடர்ந்தாள்.

"அது சரி.நீ என்ன திடீர்னு இங்க வந்திருக்க?"தன் தோழி ஸ்வேதாவிடம் கேட்டிருந்தாள்.

"அதோ அந்த ஊஞ்சல்ல ஆடிட்டு இருக்காளே அவதா எங்க அக்கா பொண்ணு மது.அவ பார்க்ல போய் விளையாடனும் சொன்னதால இங்க கூட்டிட்டு வந்தேன்."என்றாள் புன்னகை முகத்துடன் ஸ்வேதா.

"சரி டி டைம் ஆகுது. நான் வீட்டுக்கு கிளம்புறேன்."என்று தன் தோழியிடம் விடைபெற்று இதழருவி முன்னோக்கி என்ற செல்ல,அவளின் முதுகையே வெறித்து பார்த்திருந்தாள் ஸ்வேதா.

'அதெப்படி இவளுக்கு மட்டும் எங்கிருந்து வறான்களோ?ஆனா அவன உனக்கு கிடைக்க நான் விடமாட்டேன்.நானும் பார்த்துட்டுதான இருந்தேன் எல்லாத்தையும்.

அவன் உன்கிட்ட காதலை சொன்னதுமே உன்னோட முகத்துல மைக்ரோ செகண்ட்ல மின்னல் மின்னுறமாற சந்தோஷம் வந்து மறஞ்சத அவன் பார்த்தானோ இல்லையோ நான் பார்த்தேன்.'என்று மனதில் பொறுமையபடி பற்களை நரநரவென்று கடித்தாள்.

அதென்னமோ தெரியவில்லை.இந்த ஸ்வேதாவிற்கு தன்னோடு நெருங்கிய தோழியாக இருந்தாலும் அவளுக்கு கீழ்தான் இருக்க வேண்டும் என்று எண்ணுவாள்.

சதா எந்நேரமும் ஏதோ ஒரு பிரச்சினை என்று அவளிடம் போய் நிற்க வேண்டும் என்று நினைக்கக் கூடிய ரகம் அவள்.

அவளின் எதிர்பார்ப்பையும் எண்ணத்தையும் தவிடு பொடியாக்கியவள் இதழருவி.

அதனாலயே அவள் மீது அதிக பொறாமை கொள்ள ஆரம்பித்தாள்.அந்த பொறாமை பகையாக மாறியது.ஆனால் சண்டை வளர்க்காது அதற்கு மாறாக உடன் இருந்து குழி பறிக்கும் விளையாட்டை ஆடத் தொடங்கினாள்.

அவள் சந்தோஷமாக ஒரு நேரம் இருந்துவிட்டால் போதும் இவளுக்கு வயிறு தகதகவென்று எரிய ஆரம்பிக்கும்.

இதுவரை உள்ளுக்குள் பொறாமை பகையும் உதட்டளவில் நட்புறவை நீடித்துக் கொண்டிருக்கிறாள் அவள்.

இதழரசனுக்கு தன் காதலை சொல்லிவிட்டு மகிழ்ச்சியில்
விசில் அடித்தபடி வாகனத்தை செலுத்திக் கொண்டிருந்தான் அவன்.
 
Joined
Jan 29, 2025
Messages
111
ராஜேந்திரன் இல்லம்,

நடுக்கூடத்தில் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அமர்ந்திருந்த தன் அன்னையை பார்த்தவள்

'அம்மாவுக்கு அப்பாவுக்கு சண்டை வந்திருக்கும் போல'என்று மனதில் நினைத்தபடி வீட்டிற்குள் வந்தாள் இதழருவி.

கால்மணி நேரத்தில் தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு மாற்றுடைக்கு தாவியவள் நேராக வந்தது தன் அன்னையிடம்தான்.

"அம்மா.."தன் மெல்லிய குரலில் தன் தாயை அழைத்திருந்தாள்.

"நீ எப்ப வந்த?"தன் மகளுக்காக தன் இறுக்கத்தை தளர்த்தி கனிவான குரலில் பேசினார் நாச்சியார்.

"ம்மா.. நான் உள்ள வந்தது கூட நீங்க கவனிக்கமாக இருக்கிங்கன்னா..அப்போ உங்க சிந்தனை வேற எங்கயோ அடமானம் வெச்சுட்டுதான அர்த்தம்?"சன்ன குரலில் நிதானமாக கேட்டபடி தன் அன்னையின் அருகில் அமர்ந்தாள்.

'ஆமாடி.. என் சிந்தனையெல்லாம் உனக்கு நல்ல வரனா பார்த்து நல்லவன் கையில பிடிச்சுக் கொடுக்கறதுதான்.
எங்க உங்க அப்பா உன் கல்யாணத்த பத்தி பேச்சே எடுக்க மாட்டிங்குறார்.'என்று நினைத்தவரின் நினைவுகள் மதியம் தனக்கும் தன் கணவனுக்கும் நடந்த உரையாடலில் வந்து நின்றது.

நண்பகல் நேரம்,

அப்பொழுதுதான் ராஜேந்திரன் மதிய உணவை சாப்பிட்டுவிட்டு ஊஞ்சலில் சென்று அமர்ந்திருந்தார்.

"என்னங்க.."தயக்கமாக ஒலித்தது நாச்சியாரின் குரல்.

"என்ன விஷயம்?"ஊஞ்சலில் ஆடியபடி அசட்டையாக கேட்டார் அவரின் கணவன் ராஜேந்திரன்.

"நம்ம இதழருவிக்கு நல்ல வரன் வந்திருக்கு."சன்ன குரலில் தான் கூறவந்ததை தெளிவாக கூறியிருந்தார்.

"இப்ப அதுக்கு என்னப்போ?"எரிச்சலாக வந்தது ராஜேந்திரன் வார்த்தைகள்.

"என்னங்க இப்படி கேட்கறிங்க?இந்த வரன் நல்ல வரனா இருந்தா இதழருவி.."என்று அவர் சொல்லி முடிப்பதற்குள்

"நானும் நீ சொல்ரதுக்கு முன்னாடி அவ ஜாதகத்த எடுத்துட்டு போய் ஜோசியர் கிட்ட காட்டினேன்.

இனி இரண்டு வருசம் கழிச்சுதான் கல்யாணம் ஆகும்னு சொல்லிட்டாரு.அதக்கு முன்னாடி கல்யாணம் நடந்தா அவ வாழ்க்கை நல்லபடியா அமையாதுன்னு சொல்லிட்டார்.இதுக்கப்புறம் உன் விருப்பம்."என்று பெரிய இடியாக அவரின் தலையில் போட்டுவிட்டு ஹாயாக அவர் வெளியே சென்றுவிட,
நாச்சியாருக்கு கோபம்தான் வந்தது.

மகளுக்கு ஜாதகம் பார்க்க சென்றபோது தன்னை ஏன் அழைத்துப் போகவில்லை?என்று கோபம் அவருக்கு.கோபத்தில் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு நீள்விருக்கையில் அமர்ந்தவர்க்கு தன் கணவனின் மேல் சந்தேகம் கூடியது.தற்பொழுது இதழருவி வந்து அவரிடம் பேசும் வரை அப்படியேதான் அமர்ந்திருந்தார்.

"அம்மா நான் பாட்டுக்கு பேசிட்டே இருக்கேன்.நீங்க பதிலே பேசாமா அப்படி என்னதான் சிந்தனை உங்களுக்கு?"என்று கேட்டபடி தன் தாயின் கரத்தை அவள் சுரண்டவும் தான் நிகழ்காலத்திற்கு வந்தார் நாச்சியார்.

"அது ஒன்னுமில்லடி.எல்லாம் உன் கல்யாணத்த பத்திதான் எனக்கு கவலை."கவலை நிறைந்த குரலில் கூறினார்.

"ப்ச்..அம்மா இதுக்கு எதுக்கு நீங்க கவலப்படனும்.அப்பா எனக்கு நல்ல வரனா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கமாட்டார் என்ன?

என்னதான் அவருக்கு நான் பிடிக்காத மகளா இருந்தாளும் அப்பா நான் நல்லா இருக்கனும்தான் நினைப்பாரு.அப்பாக்கு தெரியும் எத எப்ப செய்யனும்னு.நீங்க கவலப்படாம இருங்க."புன்னகை முகத்துடன் தன் தந்தை மீதுள்ள நம்பிக்கையில் கூறினாள் இதழருவி.

அவள் இப்படி கூறியதும் நாச்சியார் குழம்பி விட்டார். 'அப்படியும் இருக்குமோ? ச்சே..நாம்தான் தேவையில்லாத சந்தேகத்தை நினைத்து கவலப்படரோம்.தன் மகள் கூறியது சரிதான்.'என்று மனதில் பலவாறு நினைத்து ஒரு முடிவுக்கு வந்தவர்

"நீ சொல்ரது சரி தான்மா."முழு மனதாக கூறினார் நாச்சியார்.

இதழரசன் இல்லம்,

'ஓ..மேடம் என்னோட நம்பர ப்ளாக்கல போட்டுட்டாங்க போல.'என்று முனகியபடி கைபேசியை தன் அறையிலிருந்த மேசையின் மீது வைத்தான் இதழரசன்.

'பேசாம அம்மாட்ட எல்லா உண்மையை சொல்லி சாரி கேட்கலான்னு பார்த்தா அவங்க என் பேச்சயே கேட்க தயாரா இல்லையே.

சரி தம்பிக்கிட்ட சொல்லலான்னு பார்த்தா அவனும் என்னோட நம்பர ப்ளாக்ல போட்டுட்டான்.

ஒன்னு செய்லாம் பெரியம்மா கிட்ட சொல்லலாம?'என்று மனதில் நினைத்தவன் மறுகனம் செந்தாமரைக்கு அழைப்பு விடுத்திருந்தான்.

இரண்டு முறை அழைப்பு சென்று பிறகுதான் அப்பக்கம் செந்தாமரை அவனின் அழைப்பை ஏற்றிருந்தார்.

"ஹலோ..சொல்லுப்பா."தேனொழுகும் குரலில் இன்று வேதனை பிரதிபலித்தது.

இவன் தன் கல்யாணத்தில் என்ன நடந்தது என்று அவரிடம் தெளிவாக சொல்லி முடிக்க அப்பக்கம் பெறும் நிசப்தம் ஏற்பட்டிருந்தது.

"பெரியம்மா லைன்ல இருக்கிங்களா?"சத்தமாக கேட்டான்.

"ஆங்..இருக்கேன்டா.நான் நீ சொன்னத உங்கம்மாகிட்ட சொல்லி பார்க்கிறேன்.அவ பிடி கொடுப்பாளுன்னு தெரியல.எதுக்கும் உனக்காக பேசரேன்."அவரின் நம்பிக்கையான குரலை கேட்டதும் தான் இவனுக்கு மனதில் சிறு நிம்மதி பிறந்தது.

"ரொம்ப தேங்க்ஸ் பெரியம்மா."நன்றி உணர்வுடன் அவன் கூறவும்

"இதுக்கெல்லாம் எதுக்குடா தேங்க்ஸ்?நான் யாரு உன் பெரியம்மாடா.நானே உனக்கு போன் பண்ணலாம்னு நினைச்சேன்.அதற்குள்ள நீயே எனக்கு போன் பண்ணிட்ட.சரி நான் வைக்கிரேன்."என்று அப்பக்கம் செந்தாமரை அழைப்பை கட்செய்விட இப்பக்கம் இவனின் முகத்தில் சிறு மகிழ்ச்சி தோன்றி மறைந்தது.

ஆனந்தி இல்லம்,

தனது கைபேசியையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தார் செந்தாமரை.

'ச்சே.. என்ன இப்படி ஆகிடுச்சு.'என்று மனதில் நினைத்தவர் மறுநிமிடமே

'கஷ்டப்பட்டு அம்மாவையும் மூத்த மகனையும் பிரிச்ச எனக்கு எப்படி அவங்கள சேர்த்து வைப்பேன்?

முட்டாள்!அது தெரியாம எனக்கு போன் பண்ணிருக்கான்.அதுவும் நல்லதுதான்.'என்று மனதில் நினைத்தவர் பலத்த யோசனைக்கு சென்றார்.

சமையலறையில்,

"என்னக்கா விசயம்?"என்று செந்தாமரையை வந்ததை திரும்பி பார்க்காமலே சப்பாத்தியை முன்புறமாக சுட்டபடி கேட்டார் ஆனந்தி.

செந்தாமரை இதழரசன் கூறியதை அப்படியே ஆனந்திடம் கூறினார்.

"....."

"ஆனந்தி நான் என்ன சொல்ல வரேன்னா.."என்று செந்தாமரை சொல்ல வருவதற்குள்

"அக்கா அவன் சொல்ர கட்டுகதைய நீங்க வேணா நம்பலாம்.நான் நம்பத் தயாரா இல்ல.
அந்த பேச்ச விடுங்க." முகத்தில் கடுமை கூட்டி சிடுசிடுப்புடன் என்றவர் சப்பாத்திகளை ஹாட்பாக்ஸில் போட்டு அடைத்தார்.

"என்ன ஆனந்தி இது? சரி விடு. நாம அந்த பொண்ணுகிட்ட என்ன நடந்ததுன்னு கேட்கலாம்."

"அக்கா அந்த பொண்ணு எங்க இருக்காளன்னே தெரியல.அதுவும் இல்லாம அந்தப் பொண்ணுக்கு கல்யாணம் ஆகிடுச்சு."சற்று தயங்கினார்.

"கல்யாணம் ஆனா என்ன?அந்த பொண்ண தேடி நான் கூட்டிட்டு வரேன்.அது என்னோட பொறுப்பு."என்று உறுதியாக
வாக்களித்தார் செந்தாமரை.

அவரின் உறுதியான வாக்கிற்கு பின் மர்மம் என்னவோ?

தொடரும்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top