• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Jan 29, 2025
Messages
111
அத்தியாயம் 11.

தன் தாயுடன் சேர்ந்து இரவு உணவை பெயரிற்கு சிறிது சாப்பிட்டு விட்டு தன்னறைக்கு வந்து கதவை சாற்றியிருந்தாள் இதழருவி.

அழுகை அழுகையாக வந்தது அவளுக்கு.கன்னத்தில் வழிந்த கண்ணீரை புறங்கையால் துடைத்துக் கொண்டவள் அமைதியாக கீழே அமர்ந்தவள் சுவற்றில் தன் முதுகை சாய்த்தாள்.

தன் கால்களை நன்றாக நீட்டி கொண்டாள். 'இந்த வீட்டில் தனக்கு ஆதரவாக தன் தாய் மட்டும் இல்லையென்றால் என் நிலைமை..'என்று நினைத்து கூட பார்க்க முடியவில்லை அவளாள்.

'கடவுளோ!நாளைக்கு சாதனா எம்.பி.ஏ பண்ண யூ எஸ் போகிறாள்.அவள் அங்கு படிப்பு முடிச்சிட்டு திரும்பி வரவரைக்கும் நீங்கதான் அவளுக்கு துணையா பாதுகாப்பா இருக்கனும்.'என்று கடவுளிடம் கோரிக்கை வைத்துவிட்டு அமைதியாக இமைகளை மூட கண்ணீர் நிற்காமல் கன்னத்தில் வழிந்த கொண்டே இருந்தது.

அப்பொழுது அவளின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தது கைபேசி.புது எண்ணாக இருந்ததை பார்த்தவள் 'யாராக இருக்கும்?'என்று மனதில் நினைத்தவள் புருவங்களை சுருக்கி அந்த அழைப்பை ஏற்று "ஹலோ."என்றாள்.

"நான் இதழரசன் பேசறேன்."என்று அப்பக்கம் கூறியதும் இவளுக்கு பதட்டம் ஆனது.

"சார்.. எதுக்கு இந்த டைம் கூப்பிட்டு இருக்கிங்க?"என்று அவளின் பதட்டமான குரலை கேட்டதும் அவனுக்கு சிரிப்புதான் வந்தது.

"நிதானமா இருங்க.கேஷ் விசயமா இல்ல.சும்மா உங்களோட பேசனும்னு தோணுச்சு.அதுதான் உங்களுக்கு போன் பண்ணேன்."

"இங்க பாருங்க கேஷ் விசயமா இருந்தா பேசுங்க.நான் பதில் சொல்றேன்.ஆனா அதை தவிர்த்து வேற எதுவும் என்கிட்ட பேச வேண்டாமே ப்ளீஸ்."சிறிது தயக்கத்துடன் தான் கூற வந்ததை அவன் மனது நோகாதபடி சொல்லி முடித்திருந்தாள்.

"சாரி."என்று சிறு குரலில் கூறிவிட்டு அப்பக்கம் பட்டென்று அழைப்பை கட் செய்துவிட இவளுக்கு தான் ஒரு மாதிரி ஆகி விட்டது.

மீண்டும் அவனுக்கு அவள் அழைப்பு விடுக்க,அப்பக்கம் அழைப்பு சென்று நின்றதே தவிர அவன் எடுத்த பாடில்லை.

அவனின் என்னை தன் கைபேசியில் சேமித்து புலனில் "ஹாய்.. நான் ரொம்ப அப்செட் ல இருந்தேன்.நான் சொன்னது உங்கள ஹர்ட் பண்ணி இருந்தால் ரொம்ப சாரி.குட் நைட்."என்று செய்தி அனுப்பிவிட்டு கைபேசியை ஓரமாக வைத்தவள் தலை காணியை கீழே போட்டதும் வெறும் தரையிலே படுத்து உறங்க ஆரம்பித்தாள்.

மலை முகடுகளில் மறைந்திருந்த கதிரவன் மெது மெதுவாக வானில் எட்டிப்பார்க்க ஆரம்பித்திருந்தான்.

"நாச்சியா நீ மட்டும் ஏர்போர்ட்க்கு எங்க கூட வா.நாம சாதனாவ வழியனுப்பி வெச்சுட்டு வரலாம்."என்றார் தன் கணீர் குரலில் ராஜேந்திரன்.

'அம்மா நான் வராட்டி என்ன? நீங்க அவளுக்காக இல்லைன்னாலும் எனக்காக ஏர்போர்ட் போய் சாதனாவ சந்தோஷமா வழியனுப்பி வெச்சுட்டு வரனும்.'என்று நேற்றிரவு சாப்பிடும் பொழுது தன் பெரிய மகள் சொன்னது நினைவு வர அமைதியாக மகிழுந்தில் ஏறி அமர்ந்தார் நாச்சியார்.

"ரொம்ப தேங்க்ஸ்மா."என்று மகிழ்ச்சியாக தன் தாயை கட்டி அணைத்து விடுவித்தாள் சாதனா.

"டிரைவர் வண்டியை எடுப்பா."என்று ராஜேந்திரன் கட்டளையிட,அந்த வாகனம் வீட்டின் வாசலை கடந்து சாலையில் இறங்கி ஏர்போர்ட்டை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது.

பால்கனி வராண்டாவில் நின்று வெளியேறிய அந்த வாகனத்தை சிறிது ஏக்கத்துடன் பார்த்தவள் பின் கசந்த புன்னகையுடன் மாடிப்படிகளில் இறங்க ஆரம்பித்தாள்.

அப்பொழுது அவளின் கைபேசியில் இருந்து டொங்..டொங் என்று சத்தம் வந்தது.

'புலன் செய்தி சத்தம்.'என்று மனதில் நினைத்தவள் போர்டிகோவை தளர்ந்த நடையில் அடைந்து இருந்தாள்.

வெறுமையான மனநிலையில் மகிழுந்தில் ஏறி அமர்ந்து வாகனத்தை உயிர்ப்பித்து செலுத்த ஆரம்பித்தாள்.

அவளின் வாகனம் மருத்துவமனையை நோக்கி ஓடிக்கொண்டிருந்தது.இன்று ஏனோ மருத்துமனைக்கு அரைமணி நேரத்திற்கு முன்பாகவே வந்து விட்டிருந்தாள்.

கனத்த மனதுடன் மருத்துவமனைக்குள் சென்றிருந்தாள்.தனது கேபினை அடைந்ததும் தன் இருக்கையில் அமர்ந்து தன் விழிகளை மூடி தன் மனதை ஒரு நிலைப்
படுத்திய பின்பு தனது வேலையை தொடங்கினாள்.
 
Joined
Jan 29, 2025
Messages
111
காவல் நிலையத்தில்,

"அதெப்படி கார்த்திகேயன் சரியா இங்க போதைப் பொருள் ஆதாரமும் என் போனில் இருந்த ஆதாரமும் அழிச்சிருக்காங்க.
இப்ப பாரு அவங்க சுலபமா வக்கீல் வெச்சு பேசி வெளிய போயிட்டாங்க."என்று கோபமாக கூறியவன் ஆவேசத்துடன் தன் மேசையில் ஓங்கி அடித்தான்.

"அதுதான் சார் எனக்கும் ஒன்னும் புரியல."என்றவன் குரல் ஏமாற்றமாக உள் ஒலித்தது.

"எனக்கென்னமோ இங்கொரு கருப்பு ஆடு இருக்கன்னு தோணுது.அது யாருன்னு முதல்ல கண்டுபிடிச்சு தூக்கனும்."என்று சிறு குரலில் கூறினான் கார்த்திகேயன்.

"அந்த கருப்பாடு யாருன்னு கண்டுபிடிக்கலாம்.ஆனா தூக்க வேண்டாம்.அந்த கருப்பாட வெச்சுதான் அவங்கள பிடிக்கனும்.

எனக்கென்னமோ தன் அப்பா அண்ணன் உறு துணையா இருக்கர தைரியத்தல அந்த பசங்க மறுபடியும் ஏதாவது குற்றம் புரிந்து நிச்சயமா வழக்கல மாட்டாமயா போவாங்க?"என்று சன்ன குரலில் இதழரசன் கூறியதை ஆமோதிப்பாக தலையை அசைத்திருந்தான் கார்த்திகேயன்.

விஸ்வநாதன் இல்லம்,

விக்ரமும் அவனின் இரண்டு தம்பிகளும் மிகுந்த மகிழ்ச்சியில் கேரம் போர்டு ஆடிக் கொண்டிருந்தனர்.

"அண்ணா நீங்க மட்டும் ஆதாரத்த அழிக்காட்டி நாங்க ஐந்து வருடமோ ஏழு வருடமோ சிறைச்சாலையில இருந்திருப்போம் அண்ணா.நினைக்கவே பயமா இருக்கு."தலையை உலுக்கியபடி என்றான் சந்தோஷ்.

"அண்ணா ரொம்பவே நாங்க பயந்துபோயிட்டோம்.ரொம்ப தேங்க்ஸ்."என்று விக்ரமனின் முதல் தம்பி விக்னேஷ் கூறினான்.

"டே.. உங்களுக்கு எதாவதுன்னா என்னால அமைதியா இருக்க முடியுமா?"என்றபடி தன் இரு இளைய சகோதர்களை நெஞ்சில் சாய்த்துக் கொண்டான் விக்ரம்.

விக்ரமுக்கு அவனின் தந்தை இரு தம்பிகள் மட்டும்தான் உலகம்.

"நீங்க இரண்டு பேரும் கொஞ்ச நாள் அமைதியாக இருங்க.அந்த போலிஷ்காரன் உங்கமேல ஒரு கண் வெச்சுட்டேதான் இருப்பான்.அதனால இரண்டு பேரும் படிப்பல மட்டும் கவனம் செலுத்தனும்."என்றவனின் கட்டளையில் இருவரும் அமைதியாக சரி என்பது போல் தலையசைத்திருந்தனர்.

"அண்ணா நீங்க கல்யாணம் பண்ணிக்கனும்."என்று சற்று தயங்கிய குரலில் தான் கூறினான் சந்தோஷ்.

"...."

"அண்ணா எங்களுக்கும் இந்த வீட்டுக்கு அண்ணி வரனும்னு ஆசை இருக்காதா?"

"இங்கபாரு சந்தோஷ்.எனக்கு கல்யாணம் பண்ற ஐடியாவே இல்ல."என்று கூறியபடி தான் அமர்ந்திருந்த இருக்கையில் எழுந்தவன் தன் அறையை நோக்கி நடை போட்டிருந்தான் விக்ரம்.

"டே.. நீங்க இரண்டு பேரும் கவலப்படாதிங்க.இரண்டு வருசம் போகட்டும்.உங்க அண்ணனுக்கு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி வெக்கிறது என்னோட பொறுப்பு."என்று உறுதியான குரலில் கூறிவிட்டு வெளியே சென்றார் விஸ்வநாதன்.

காய்கறிகள் சந்தையில்,

"ஏன் கார்த்தி உன்ன கட்டிக்க போர பொண்ணு ரொம்ப குடுத்து வைச்சிருக்கனும்."என்று மெலிதாக புன்னகைத்தபடி இதழரசன் சொல்லவும்

"ஏன் சார்?"

"பின்ன இவ்வளவு தரமா சமைக்க காய்கறிகள பார்த்து பார்த்து வாங்குரியே அதை வெச்சு தான் சொன்னேன்."

"அம்மா அப்பா டெல்லியில இருக்காங்க.அம்மா அப்பாவ விட்டுட்டு இங்க வரமாட்டேன்னு சொல்லிட்டாங்க.அவங்க இருந்தா வாய்க்கு ருசியா சமைச்சு தருவாங்க.

என்ன பண்றது? நான்தான சார் என்ன பாத்துக்கணும்.கடையில டெய்லி சாப்பிட்டா உடம்பு கெட்டுப்போயிடும்.அதனாலதான் நானே சமைச்சு சாப்டரேன்."ஒரு பெருமூச்சுடன் சொல்லி முடித்தான் கார்த்திகேயன்.

"கார்த்தி நீ எப்படி சமைக்க கத்துக்கட்ட?"

"சார் இருக்கவே இருக்கு யூடியூப்.அத பார்த்து பார்த்து கத்துக்கிட்டேன்.அப்புறம் அம்மா சமைக்கிறத பார்த்திருக்கேன்.ஏன் சார் நீங்களும் சமைக்கப்போறிங்களா?"வெகு ஆர்வத்துடன் அவன் கேட்டிருக்க

"ஆமா கார்த்தி.இனிமேல் நானும் உன்ன மாதிரி என்ன நான்தான் பார்த்தக்கனும்.இதே வீட்ல இருந்தா எங்க அம்மா மூனு வேளையும் வாய்க்கு ருசியா சமைச்சு தந்திருப்பாங்க.

எந்நேரம் வீட்ட விட்டு வெளியே வரமாறி ஆயிருச்சு.நடந்தது நடந்து போச்சு.இப்ப வரைக்கும் என் தம்பிக்கு போன் பண்ணா எடுக்கவே மாட்டிங்குரான்."என்று கவலையாக கூறியபடி தனக்கும் சமைக்க காய்கறிகளை வாங்க ஆரம்பித்திருந்தான்.

"விடுங்க சார் அதெல்லாம் ஒருநாள் சரியாகும்."என்று ஆறுதல் அளித்தான் கார்த்திகேயன்.

வெண்டங்காய பொறுக்கி எடுத்தபடி "உனக்கு என் அம்மாவ பத்தி சரியா தெரியாது கார்த்தி.அம்மாவுக்கு பயங்கர பிடிவாதம்.அவ்வளவு சீக்கிரமா மனசு மாறமாட்டாங்க."என்றான் இதழரசன்.

"சார் உங்க மம்மிய கம்பேர் பண்ணி பார்த்தா எங்க அம்மா பரவால்ல சார்.பட் எங்க அப்பா ரொம்ப டெரர்.எனக்கும் அவருக்கும் ஆகாவே ஆகாது."என்றபடி தான் வாங்கிய காய்கறிகளுக்கு பணத்தை கொடுத்தான் கார்த்திகேயன்.

"சார் இவ்வளவு நேரமா நாம காய்கறி மார்க்கெட்லதான் இருக்கோம்.எனக்கென்னவோ இங்க நமக்கு தகவல் கிடைச்ச மாதிரி எதுவும் இருக்காதுன்னு தோணுது சார்."

"அப்படி சொல்லாத கார்த்தி.கேசுவலா பார்க்கரமாறி பின்னாடி திரும்பி பாரு."என்று தாடயை தடவியபடி சன்ன குரலில் இதழரசன் சொல்லவும்

"சார்.. நீங்க சொல்றது ரொம்ப சரி.நீங்க சரின்னு ஒரு வார்த்தை சொன்னிங்கன்னா அவன கோழி அமுக்கரமாறி பிடிச்சடலாம் சார்."

"வேண்டாம் கார்த்தி.இன்னும் யாராவது வருவாங்களான்னு பார்க்கலாம்.அதுவரைக்கும் நாம இப்படி மாறுவேசத்தல இன்னும் காய்கறிவாங்கறமாறி நடிச்சுதான் ஆகனும்."என்றான் உறுதியான குரலில்.

"அண்ணே கேரட் இரண்டு கேரட் இரண்டு."ஒருவன் கேரட் வேண்டும் என்று இரண்டு முறை அழுத்தி கேட்டுவிட்டு இரண்டாயிரம் பணத்தை நீட்டியிருந்தான்.

"பேங் கொண்டு வந்திருக்கியா?"என்றார் காய்கறி விற்பவன்.

"இந்தாங்க."என்று தான் கொண்டு வந்த துணிப்பையை நீட்டியிருந்தான் அவன்.

விற்பவனும் அந்த பேங்கை வாங்கி யாரும் பார்க்காத வண்ணம் சின்ன பாக்கெட் போதைப்பொருள் ஒன்றை அந்தப் பையில் போட்டு அவனிடம் கொடுத்திருந்தான்.

"அண்ணே.. என்ன கேரட் ரொம்ப சின்னதா இருக்கு?"என்று துணிப்பையை திறந்து பார்த்தபடி சன்ன குரலில் கேட்டிருந்தான்.

"நீ கொடுத்த காசுக்கு இவ்வளவுதான் வரும்ப்பா.சீக்கிரமா இடத்த காலி பண்ணுப்பா."என்று விரட்டினார் கடைக்காரர்.

"சார்.. அந்த பையன் வாங்கிட்டு போரான்.அவன் லைப்பே ஸ்பாயில் ஆயிடும்."என்றான் கவலை நிறைந்த குரலில் கார்த்திகேயன்.

"அந்த பையன அவங்க அம்மா அப்பா பாத்துக்குவாங்க."இரும்பு குரலில் கூறியிருந்தான் இதழரசன்.

"சார் அந்தாலு கடைய விட்டுட்டு எங்கயோ போரான்."

"கார்த்தி இதுதான் சரியான சமயம்.நீ அந்தாளு கடையில சர்ச் பண்ணு.நான் அவன ஃபாலே பண்ணி போரேன்."என்று சிறு குரலில் கூறிவிட்டு அந்த கடைக்காரனை அவனுக்கு தெரியாமல் மாறுவேடத்தில் பின்தொடர ஆரம்பித்தான் இதழரசன்.

"இந்த விக் என்ன ரொம்ப அரிக்குது?"என்று தனுக்குள் முனகியபடி காய்கறிகள் எடுப்பதுபோல சோதனை செய்ய ஆரம்பித்தான் கார்த்திகேயன்.

சிறிது நேரம் கடந்திருக்கும்.
"யாருப்பா நீ?காய்கறி எடுக்க வந்தா அங்கதான நீ எடுக்கனும்.அதவிட்டுட்டு நான் சாக்குல போட்டு வெச்ச கேரட் நீ எதுக்கு நீ ஒவ்வொன்னா வெளியே எடுத்து போட்டுட்டு இருக்க?

நீ முதல்ல இந்தப்பக்கம் வெளிய வாப்பா."என்று கடுமையான குரலில் கூறியபடி கார்த்திகேயனின் வலக்கரத்தை பற்றி இழுக்க

"அண்ணே..எனக்கு நல்ல கேரட் வேனும்.நீங்க ரேட்ட சொல்லுங்க.மொத்தமா நானே வாங்கிக்கிறேன்."என்று சிரித்தபடி நிதானமாக கூறியிருந்தான் கார்த்திகேயன்.

உடனே அவரின் முகம் பளிச்சிட்டது."சரிப்பா நீயே இரண்டு லட்சத்து எடுத்து வைச்சுட்டு மொத்த கேரட்ட நீயே எடுத்துட்டு போ."என்று சிறு குரலில் விழிகள் மின்ன கூறியிருந்தார்.

"நீங்க கண்ண மூடிட்டு உங்க கைய நீட்டு
ங்க அண்ணே."என்று கார்த்திகேயன் சொன்னதை மறுக்காது செய்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top