• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Jan 29, 2025
Messages
46
அத்தியாயம்10.

'என்ன சொன்னாலும் நம்பறாளே.அதுவும் என் பேர வைச்சிட்டு.ரொம்ப பயந்த சுபாவம் போலிருக்கே.ஹோம்லியா இருக்கா.'என்று மனதில் நினைத்தபடி
அவள் நீட்டிய ப்ரிஸ்க்ரிப்ஷனை வாங்காது கண் சிமிட்டாது அவளின் முகத்தையே பார்த்திருந்தான் இதழரசன்.

"சார்.."என்று இதழருவி அவனின் முகத்தின் முன்பு தன் வலதுகரத்தை வலது இடது புறமாக ஆட்டிக்கொண்டிருக்கவும்தான் அவன் சுயநினைவு பெற்றவனாக "ஹாங்.. என்ன சொன்னிங்க?"புருவம் சுருக்கி கேட்க,

"நான் ரொம்ப நேரமா ப்ரிஸ்க்ரிப்ஷன நீட்டிட்டே இருக்கேன்.ஆனா நீங்க வாங்கவே இல்ல."என்று தன் முகத்தை சுருக்கி அப்பாவியாக அவள் சொல்லவும்

'எனக்கு மனைவியா வரப்போரவ ரொம்ப தைரியமா இருக்கனும்னு ரொம்ப கனவு கண்டேனே.. அதெல்லாம் இப்படி தவடி பொடி ஆகும்னு நான் நினைச்சு கூட பார்க்கலயே!'என்று மனதில் கவலையாக நினைத்தவன் அவளிடமிருந்த ப்ரிஸ்க்ரிப்ஷனை தன் கைக்கு இடம் மாற்றியிருந்தான்.

"நான் கிளம்புறேன்."சிறு குரலில் அவளிடம் சொல்லிவிட்டு அவன் அவ்வறையிலிருந்து வெளியேறவும்தான் தன் இருக்கையில் நிம்மதியாக அமர்ந்தாள் இதழருவி.

விஸ்வநாதன் இல்லம்,

"என்னப்பா சொல்ரிங்க? நீங்க அவ்வளவு தூரம் சொல்லியும் அவன் கேட்கலின்னா அவனுக்கு எவ்வளவு திமிர் இருக்கும்."ஆக்ரோசமாக அவ்வீட்டின் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான் விக்ரம்.

"விடு விக்கரம் அவனுக்கு கெட்ட நேரம் ஆரம்பிச்சுடுச்சு.நாம நம்ம வக்கீல் கெட்ட பேசி உன் தம்பிகள வெளியே எடுக்கலாம்."தன் பெரிய மகனுக்கு ஆறுதல் அளித்துவிட்டு தங்கள் குடும்ப வக்கீலிக்கு அழைப்பு விடுத்தார் விஸ்வநாதன்.

"அப்பா பேசிட்டிங்களா?
வக்கீல் என்ன சொல்ராரு?"ஒரு வித எதிர்பார்ப்புடன் கேட்டிருந்தான் விக்ரம்.

"வக்கீல் அவன் கிட்ட இருக்கர எவிடன்ச அழிச்சுடுங்க.மித்தத நான் பார்த்துக்கிரேன்னு நம்பிக்கையா சொல்ராரு."என்று நெற்றியை தேய்த்தபடி அவர் கவலையாக சொல்ல

"அப்பா இப்ப எதுக்கு ரொம்ப கவலையா இருக்கிங்க?"வருத்தம் இழையோடிய குரலில் கேட்டான்.

"பின்ன என்னடா அவனோட போனல இருக்கர வீடியோவ நாம எப்படி அழிக்க முடியும்?"

"நீங்க சொல்ரது சரிதான்.ஆனா,அவனோட போன நாம அழிக்க முடியும்."என்று நம்பிக்கையாக கூறினான் அவரின் தவப்புதல்வன்.

"அவன்கிட்ட இருந்து போன எடுக்கரது அவ்வளவு சுலபம் கிடையாது.அதுவும் இல்லாம இந்நேரம் அந்த வீடியோவ வேற பென்டிரைவ்ல கூட ஏத்தி பாதுகாப்பா வெச்சிருக்கலாம்."நெற்றியை சுருக்கி தனது யூகத்தை கூறினார்.

"அந்த காவல் நிலையத்தில வேலை செய்யுர நம்மாலு கிட்ட போன் பண்ணி விஷயத்த சொல்லுங்க.அங்க போதைப்பொருள் இருந்த இரண்டு சின்ன பாக்கெட்டயும் எதாவது எவிடன்ஸ் இருந்தா அதை அழிக்க சொல்லிடுங்க.

அந்த இதழரசனோட போன எடுத்து அழிக்கர வேலையை நான் பார்த்துக்கிறேன்."சுவற்றை வெறித்தபடி ஆழ்ந்த குரலில் கூறியவன் தன் கைபேசியை எடுத்து யாருக்கோ அழைப்பு விடுத்தவன் தன் வலது செவியில் வைத்தபடி மாடிப்படிகளில் ஏற ஆரம்பித்தான்.

"இந்த வைகாசி பொறந்தாவே அப்பப்போ மழை பேய ஆரம்பிச்சுடது சார்."என்று சலித்தபடி கார்த்திகேயன் கூறவும்

"மழைய என்ஜாய் பண்ணனும் கார்த்திகேயன்."மழையை ரசித்தபடி இதழரசன் சொல்ல

"எதுக்கு சார் சளி,காய்ச்சல், இருமல் வருவதற்கா?"என்று குறும்புடன் அவன் கேட்டிருக்க

"நல்லா பேசர கார்த்தி.சரி நீ நைட் இங்கிருந்து பார்த்துக்கோ.கவனமா இரு.ஏதாவது ப்ராப்ளமா இருந்தா எனக்கு ஃகால் பண்ணு."என்று கூறிவிட்டு தனது ஜீப்பில் ஏறி அமர்ந்து வாகனத்தை உயிர்பித்து சாலையில் செலுத்த ஆரம்பித்தான் இதழரசன்.

கதிரவன் ஓய்வை தேடி கடல் அண்னையின் மடியில் சாய ஆரம்பித்த நேரம் அது.

நெடுஞ்சாலையில் இதழரசன் தனது வாகனத்தை சற்று வேகம் குறைவாக செலுத்திக்கொண்டிருந்தான்.

மாலை நேரம் என்பதால் நெடுஞ்சாலையில் போக்கு வரத்து நெரிசல் காணப்பட்டது.

ஒரு கட்டத்தில் வாகங்களின் நெரிசல் அதிகமானது.இதழரசன் வாகன நெரிசலில் சிக்க வேண்டியதாக போயிற்று.அவனின் வாகனத்தின் அருகில் இருசக்கர வாகனத்தில் திருமணமான பெண் தன் மூன்று குழந்தையுடன் கணவனின் பின்பு அமர்ந்திருந்தாள்.

சற்று நேரத்தில் வாகன‌ நெரிசல் குறையத் தொடங்கியிருந்தது.

தற்பொழுது இதழரசன் தனது வாகனத்தை நன்றாக செலுத்த ஆரம்பித்திருந்தான்.

திடிரென்று தனது வாகனத்தை சடன் ப்ரேக் போட்டு நிறுத்தியிருந்தான்.

'தான் சற்று நேரத்திற்கு முன் இந்த பொண்ணு பார்த்தனே.இப்ப எதுக்கு இந்த பொண்ணு அழுதுட்டிருக்கு?'என்று மனதில் நினைத்தபடி முன்பக்க காரின் கதவை திறந்து கொண்டு இறங்கியவன்

"என்னம்மா ஆச்சு?"என்று தன் கணீர் குரலில் கேட்டிருக்க

"சார் என் குழந்தையா கடத்திட்டு போயிட்டாங்க.என்னோட கணவர் அவங்கள கடத்.."என்று அவள் முடிப்பதற்குள்

"எந்த பக்கமா போனாங்க? எவ்வளவு நேரம் ஆகிருக்கும்?"என்று வெகு அவசரமாக கேட்டான்.

"சார்.. நீங்க வரதுக்கு ஐந்து நிமிடத்திற்கு முன்னாடிதான் என்னோட குழந்தய கடத்திட்டு இந்த பக்கமா போனாங்க."கண்களில் கண்ணீரோடு அவள் அந்த திசையை தன் ஆள்காட்டி விரல் மூலம் சுட்டி காட்டியிருக்க

"நீங்க கவலப்படாம இருங்க."என்று சத்தமாக கூறியபடி அப்பெண் காட்டிய திசையில் ஓடி மறைந்தான்.

"சார் என் குழந்தைய விடுங்க ப்ளீஸ்."என்று குழந்தைய அனைத்துக்கொண்டு நடுத்தர வயது நிரம்பிய ஆண்மகன் அவ்விரு ரவுடிகளிடம் போராடிக்கொண்டிருந்தான்.

"ஒழுங்கா குழந்தைய கொடு.இல்ல உன்ன கொன்னுட்டு இந்த குழந்தயை நாங்க தூக்கிட்டு போவோம்."என்று அவ்விருவரில் ஒருவன் எச்சரிக்கை விடுத்தான்.

"நீங்க என்ன சொன்னா
லும் பரவால்ல.நான் என் குழந்தைய தரமாட்டேன்."அவனின் குரலில் அத்தனை உறுதி.
 
Joined
Jan 29, 2025
Messages
46
"உனக்கு சொன்னா புரியாது.இருடா செயல்ல காட்டுறேன்."என்று அவ்விரு ரவுடிகளில் ஒருவன் வன்மையாக கூறியபடி கால் சட்டை பாக்கெட்டில் இருந்து தான் ஒளித்து வைத்திருந்த கத்தியை எடுத்தவன்

"டே..அவன நல்லா புடிச்சுக்கோ."என்று மற்றொருவரிடம் கூறியபடி அவன் கழுத்தில் அறுக்க போகும் சமயத்தில் அவனை எட்டி உதைத்திருந்தான் இதழரசன்.

இதழரசன் அந்த ரவுடியை புறட்டி எடுத்த பயத்திலே மற்றொரு ரவுடி தான் பிடித்து வைத்த நபரை விட்டு தலைதெறிக்க ஓட ஆரம்பித்திருந்தான்.

இதழரசனிடம் அடிவாங்கிக்கொண்டிருந்த அந்த ரவுடியும் இதுதான் சமயம் என்று அவனிடமிருந்து எப்படியோ தப்பித்து ஓடியிருந்தான்.

அவனை துரத்திக்கொண்டு பாதி தூரம் ஓடியவன் "ச்சே"என்று கூறியபடி சூ காலோடு தரையில் உதைத்துவிட்டு திரும்பி வந்தவன்,

"உங்களுக்கும் உங்க குழந்தைக்கு ஒன்னும் ஆகலயே?"என்று அந்நபரிடம் இருந்த குழந்தைய ஆராய்ந்தபடி

"இல்ல சார்.நீங்க மட்டும் வரலின்னா என்ன கொன்றுவிட்டு என் குழந்தைய தூக்கிட்டு போயிருப்பாங்க.ரொம்ப நன்றி சார்."என்று உணர்ச்சி மிகுதியால் அந்நபர் சொல்லவும்

"சரி வாங்க."என்று இதழரசன் சொல்ல, இருவரும் திரும்பி தாங்கள் வந்த திசையில் நடக்க ஆரம்பிக்க அவரிகளின் எதிரில் அப்பெண் எட்டி எட்டி தூரத்தில் நடந்து வந்து கொண்டிருப்பது தெரிந்தது.

"என்னங்க என் குழந்தைக்கு ஒன்னும் ஆகலயை?"என்று பதட்டமாக கேட்டபடி தன் கணவனிடமிருந்த குழந்தையை வாங்கி முத்த மழை பொழிந்தாள்.

"ரொம்ப நன்றி சார்.கடவுள் போல தக்க சமயத்தில் எங்களுக்கு உதவி செஞ்சிருக்கிங்க."குழந்தை கிடைத்த மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீருடன் தன் நன்றியை அப்பெண் தெரிவித்திருக்க

"பரவால்லம்மா."என்று ஒற்றை வார்த்தையில் முடித்துக்கொண்டான்.

"உங்க வீடு எங்க இருக்கன்னு சொல்லுங்க.நான் உங்கள ட்ராப் பண்றேன்."

"இல்லிங்க சார்.என்னோட டூவிலர் அங்கதான் இருக்கு.நாங்க அதுல போயிக்கிரோம்."என்று அவளின் கணவன் கூறவும்

இதழரசனும் அவர்களை அனுப்பி வைத்துவிட்டு தன்னுடைய வாகனத்தில் ஏறி அமர்ந்து உயிர்ப்பித்து சாலையில் செலுத்த ஆரம்பித்திருந்தான்.

ராஜேந்திரன் இல்லம்,

நடுக்கத்தில் நீள்விருக்கையில் நடுநாயகமாக கால்மேல் கால் போட்டு அமர்ந்திருந்தாள் சாதனா.

அவளின் எதிர் சோபாவில் அவளின் தந்தையும் அப்படிதான் அமர்ந்திருந்தார்.

'அப்பனுக்கு பொண்ணு தப்பாம பிறந்திருக்கு.'என்று மனதில் நினைத்தபடி இருவருக்குமான டீ நிறைந்த இரு குவளைகளை டீபாயின் மீது வைத்து விட்டு சென்றார் நாச்சியார்.

"அப்பா.. நான் எம்.பி.ஏ யூ எஸ் ல பண்ணலாம்ன்னு இருக்கேன்.அங்க எனக்கு காலேஜ்ல சீட் கிடச்சடுச்சு.நாளைக்கு காலையில ஒன்பது மணிக்கு ஃப்ளைட்.நீங்களும் அம்மா மட்டும் என்று வார்த்தையை அழுத்தி கூறியவள் என்ன ஏர்போர்ட்ல சென்ட் ஆப் பண்ண வரனும்."என்றபடி டீ அடங்கிய குவளை ஒன்றை எடுத்து சிப் சிப்பாக அருந்த ஆரம்பித்தாள்.

"உனக்கு தேவையானத எல்லாம் எடுத்து வைச்சுட்டியா?"என்று தன் கணீர் குரலில் கேட்டிருந்தார் ராஜேந்திரன்.

"அதெல்லாம் நான் இன்னைக்கு காலையில எடுத்து வெச்சுட்டேன்.இனி நான் போக வேண்டியதுதான் பாக்கி."எனக்கூறியபடி காலிக் குவளையை தன் தந்தை வைக்கும் அதே சமயம் தானும் டீபாயின் மீது வைத்திருந்தாள்.

"ம்.."என்றபடி தன் கைபேசியை எடுத்துக் கொண்டு கார்டனை நோக்கி செல்ல ஆரம்பித்தார் அவர்.

இன்று ஏனோ மழை இடைவெளி விட்டு விட்டு தூறிக்கொண்டிருந்தது.

சிறிது நேரம் ஓய்வெடுத்த மழை தனது தூறலை தற்பொழுது மீண்டும் துவங்கியிருந்தது.

"அம்மா நாளைக்கு காலைல எனக்கு ஒன்பது மணிக்கு ஃப்ளைட்."என்றபடி தான் எடுத்த வந்த இரு காலிக்குவளைகளை சின்க்கில் வைத்தாள் சாதனா.

"ஏண்டி.. இங்கயே எம்.பி.ஏ பண்ணலாமே?இதுக்கு நீ அமெரிக்கா போகனுமா?"என்றார் கவலை தேய்ந்த குரலில் நாச்சியார்.

"ஏன்மா உங்க பெரிய பொண்ண எம்.எஸ் பண்ண அமெரிக்காவுக்குதான அனுப்பி படிக்க வெச்சிங்க.

நான் மட்டும் இங்கயே எம்.பி.ஏ பண்ணனுமா? அதுதான பார்த்தேன்.என்னவிட உங்களுக்கு உங்க பெரிய பொண்ணுதான உசத்தி.நீங்க இப்படியே இருங்க."என்று தன் தாயிடம் கத்தி விட்டு அவ்விடம் நீங்கியிருந்தாள்.

"ஏன்தான் இந்த பொண்ணு இப்படி இருக்காளோ?கூடப்பிறந்தவள கொஞ்சம் கூட மதிக்கரது கிடையாது.அவரும் இதழருவிய தன்னோட சொந்த பொண்ணா பார்க்கமாட்டிங்கராரு.

இவளும் அப்படிதான் இருக்கா.இவள சுமந்த அதே வைத்திலதான அவளையும் சுமந்து பெத்தேன்.அதெப்படி பாசம் இல்லாம போகும்? எனக்கு எதுவுமே புரியவில்லை?"என்று சன்ன குரலில் முனகியபடி இரவு உணவை தயாரிக்க ஆரம்பித்திருந்தார்.

இரவும் வந்தது.சாதனாவும் ராஜேந்திரன் உணவு மேஜையை நெருங்கி நாற்காலியை இழுத்து போட்டு அமர்ந்தனர்.

அப்பொழுது அவர்களை ஏக்கத்துடன் பார்த்தபடி அவர்களை கடந்து சமையலறைக்குள் சென்றாள் இதழருவி.

"இதழருவிம்மா வந்துட்டியா?உணக்கு பிடிக்குமேன்னு அம்மா நெய் தோசை சுட்டு வைச்சிருக்கேன்.அவங்க சாப்பிட்டு போனதுக்கப்புறம் நாம சாப்பிடலாம்."என்று நாச்சியார் சொல்ல அமைதியாக தலை சரி என்பது போல் ஆட்டியிருந்தாள்.

அவளுக்கும் தன் தாய், தந்தை,தங்கையுடன் சேர்ந்து சாப்பிட வேண்டும் என்று ஆசை இருந்தது.

'அது எப்பொழுது நடக்குமா?'என்று மனதில் நினைத்தவள் சமையல் திட்டில் ஏறி அமர்ந்தாள்.

"சரி.நான் அவங்களுக்கு பரிமாறிட்டு வரேன்."என்றபடி நாச்சியார் சமையலறையில் இருந்து உணவு மேஜையை நோக்கி நடை போட்டிருந்தார்.

அவர் மெளனமாக தந்தை மகளுக்கு பரிமாற ஆரம்பிக்க,

"ஏம்மா நாளைக்கு நான் யூஎஸ் போறேன்.இப்பவாச்சு நீங்க என்கோட உட்கார்ந்து சாப்பிடலாமே?"சிறிது ஏக்கத்துடன் கேட்டிருந்தாள் சாதனா.

"தாராளமா உட்கார்ந்து சாப்டரேன்.ஆனா, இதழருவியும் உட்கார்ந்து சாப்பிட்டா."என்ற வார்த்தையை அவர் அழுத்தி சொல்ல

"நீங்க என்கோட உட்கார்ந்து சாப்பிடவே வேண்டாம்.நான் தெரியாம கேட்டுட்டேன்."என்று முகத்தை உர்ரென்று வைத்தபடி கூறியவள் சாப்பாட்டில் கவனம் செலுத்த ஆரம்பித்தாள்.

தொடரும்.
 

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top