New member
- Joined
- Nov 21, 2024
- Messages
- 4
- Thread Author
- #1
முன்னோக்கி செல்
அவன் “வேலன்!” இருபத்தி ஆறு வயது வாட்டசாட்டமான வாலிபன்.
கொஞ்சம் முன் கோவாக்காரன். மற்றபடி ஒரு குறையும் சொல்ல முடியாது. முதலாளிக்கு நல்ல வேலைக்காரன் அவன். ஆனால், அவனது கோவத்தால் அவனுக்கு கிடைக்க வேண்டிய
வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தட்டி கழிக்கப்படுகிறது. அவனால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
"என்னடா இது? தனக்கு மட்டும் கடவுள் இப்படியா எழுத வேண்டும்” என்று மனதோடு எண்ணியபடியே சாலையோரம் நடந்து வந்து கொண்டிருந்தான்.
சிந்தை முழுதும், 'நான் என்னதான் எனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்தாலும்;
எனக்கு மட்டும் பதவி உயர்வு இல்லையே? இதற்காகவா, நான் அரும்பாடு பட்டு வேலை செய்தேன்” என்று பாரமான மனதுடன் அந்த மரத்தடியில் இருந்த கல்மேடையில் அமர்ந்திருந்தான்.
சாலையோரம் இருந்த, அடர்ந்த அழகான மரம் அது. கிளைகளே தெரியாத தளிர் இலைகள் நிறைந்த அரசமரம். "என்னே அழகு!” என்று அந்த சாலை வழி வருவோர் போவோர்
ஒருநிமிடம் இந்த மரத்தின் அழகை ரசித்துவிட்டு, அது வீசும் தென்றலை அனுபவித்தே
செல்கின்றனர்.
ஆனால், அந்த மரத்தடியில் அமர்ந்திருந்த வேலனோ, அந்த அழகை ரசிக்கும்
மனநிலையில் இல்லை. அப்படியே மரத்தடியில் இருந்த கல்மேடையில் இருந்தவன்,
தனக்குள்ளே யோசித்தபடியே இருந்தான். எப்போதும் அவன் வேலைக்கு வந்து செல்லும் வழி என்பதாலும், பக்கத்தில் இருந்த மளிகை கடைக்கு பின்னால் இருக்கும் தெருவில் தான் அவன் வீடு என்பதால் சுற்றி வசிப்பவர்கள் வேலனுக்கு நல்ல பழக்கம். எப்போதுமே வேலை முடிந்து நேராகா வீடு செல்பவன், இன்று ஏதோ யோசனையில் மரத்தடியில் அமர்ந்திருக்க, அதை பார்த்த பெரியவர் ஒருவர், அவன் பக்கத்தில் மீதி இருந்த இடத்தில் அமர்ந்தார்.
அவரது அரவத்தில் நிமிர்ந்து பார்த்த வேலன், “வாங்க தாத்தா” என்றான்.
“என்ன வேலா... இன்றைக்கு என்னாச்சு? ஏன் இப்படி முகமே சோர்ந்து இருக்கு?"
அவர் அப்படி கேட்டதும் இதை யாரிடமாவது பகிர்ந்துக்கொள்ள வேண்டும்
போல் இருந்த வேலனும் சொல்ல ஆரம்பித்தான்.
தான் வேலை பார்க்கும் இடத்தில் தன்னை போல் ஆறு பேர்
வேலை செய்பவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் சேர்ந்து
தனக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய சில சலுகைகளை தடுப்பதாகவும், இது முதல் முறை இல்லை என்றும், ஏற்கனவே, இதுபோல் மூன்று முறை செய்ததாகவும்; இந்த முறையும் தனக்கு கிடைக்க இருந்த சலுகைகளை தடுத்து விட்டாதாகவும் மனமுடைந்து சொன்னான்.
அவன் பேசும் வரையில் அமைதியாக இருந்த பெரியவர். அவனிடம் சில வினாக்களை கேட்டார். முதலில், "வேலா, நீ இங்கு வேலைக்கு சேர்ந்து எத்தனை வருடங்கள்
இருக்கும்?”
"அது.. தாத்தா ஒன்றரை வருடம் இருக்கும்."
"சரி. உனக்கு இங்க வேலைக்கு சேரும்போதே இந்த
வேலை தெரியுமா?”
"இல்லை தாத்தா. இங்கு வந்து கற்றுகிட்டது தான்” .
"சரி அடுத்தது. நீ வேலைக்கு சேர்ந்ததும் வேலை பழகிவிட்டாயா?”
"இல்லை தாத்தா. உன்னால் இந்த வேலை செய்ய முடியாது நீ
ஊருக்கு கிளம்பு என்றார்கள். ஆனால், நான்.. என்னால் முடியும் என்று மூன்று மாதத்தில் நிரூபித்தேன். அதன்பின் தெரியாத வேலையை கற்றது மட்டும் இல்லாமல்,
அங்கே வேலை செய்பவர்கள் எல்லாரையும் விடவும்
சிறப்பாக செய்ய ஆரம்பித்து விட்டேன்.
அதுமட்டுமல்ல, எந்த வேலை எனக்கு தெரியாது நீ கிளம்பு
என்றார்களோ, அதே இடத்தில்.. வேலனுக்கு தெரியும் அவன்கிட்ட
கேட்டு செய்யுங்க என்று சொல்லும்படி செய்து விட்டேன்" என்றான்
பெருமையாக.
அவனது பெருமையில் சிரித்தவர், லேசாக அவன் தோளில் தட்டிக் கொடுத்த்தார். “சரிடா வேற?”
"அதான் தாத்தா. இதான் என் பிரச்சனையே. அங்கே என்னுடன் வேலை செய்பவர்கள்,
எப்போதுமே முதலாளி சொன்ன வேலையை மட்டும் செய்தவர்கள். ஆனால், இப்போதும் அவர்களுக்கு அதை தாண்டி செய்ய தெரியவில்லை. என்னிடம் கேட்டால் இப்படி செய்யுங்கள் என்றபடி
என் வேலையை செய்ய சென்றுவிடுவேன். ஆனால், அது அவர்களுக்கு கோவம். நேற்று வந்தவன்
தங்களை மதிக்கவில்லை. தாங்கள் தெரியாததை கேட்டால்
சொல்லி தரவில்லை. நேற்று வந்தவன் எங்களுக்கு மேல் அதிகாரியா முடியாது
என்று அதிக குற்றசாட்டு" என்றான் சோகமாக.
"சரி. இப்போ என்னதான் பண்ண போற?"
"அதான் தெரியல."
“சரி வா. அப்படியே கொஞ்ச தூரம் நடந்துட்டு வரலாம்" என்றபடியே
அவனை அழைத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தார்.
இருவரும் பேசியபடியே நடந்தனர். வேலன் கைப்பிடித்தப்படி வந்த தாத்தா, திடீரென அவர்களுக்கு எதிரே வந்த சைக்கிள் மீது வேலனை தள்ளி விட்டார்.
நொடியும் தாமதிக்காமல் மோதிவிடாமல் விலகினான் வேலன். வேலன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. தாத்தா இப்படி எதிரே
வந்த சைக்கிள் மீது தன்னை தள்ளிவிடுவார் என்று.
வந்த கோவத்தில், “தாத்தா என்ன இது இப்படியா பண்ணுவீங்க? நல்லவேளை சைக்கிளில் வந்தவரும் சுதாரித்து பிரேக் பிடித்து நிறுத்திவிட்டார். இல்லையென்றால், ஒன்று அவர் விழுந்திருப்பார் இல்லை என்மீது வண்டியை
விட்டுருப்பார்." அவன் உணர்ச்சி வேகத்தில் கத்திக்கொண்டே இருந்தான்.
அவன் கையை பிடித்தவர், “வேலா ஒரு நிமிடம்
பொறுமையா இரு. நான் சொல்லுறத கேளு" என்றார்.
“என்ன சொல்ல போறீங்க?” என்றான் அவரை முறைத்துக்கொண்டு.
அவன் முறைப்பில் சிரித்தவர் பேச தொடங்கினார். “வேலா, என்ன பிரச்சனை
வந்தாலும் நாம் அதை கடந்து செல்வதே சால சிறந்தது. உதாரணத்துக்கு, இப்போ நடந்ததேயே பாரு. நீயும் நானும் பேசியபடியே வந்தோம் . திடீரென எதிரில் வந்த வண்டி மீது நான் உன்னை தள்ளி விட்டேன். நீயும் சுதாரித்து விலகிவிட்டாய். அதுமட்டுமல்லாமல் அதை கடந்து, இங்க பாரு எவ்வளவு தூரம் வந்துவிட்டோம். பார்த்தாயா?" என்பது போல்
அவர்கள் கடந்து வந்த பாதையை காட்டினார்.
பாதையே பார்த்தவன் திரும்பி தாத்தாவின் முகத்தை பார்க்க,
“என்னடா புரியலயா?”
“ஆம்” என்பது போல் மேலும் கீழும் தலையாட்டினான் வேலன்.
தாத்தா முன்னோக்கி நடந்தபடியே பேச ஆரம்பித்தார். "வேலா முதலில் ஒரு விடயத்தை தெரிந்து கொள். என்ன நடந்தாலும் நாம் அதே இடத்தில் நிற்க முடியாது. கடந்து முன்னோக்கி சென்றுக்கொண்டே இருக்க வேண்டும். அதே போல், ஒரு தனி மனிதனாய் நீ உன்னயே திருத்திக்கொள்ள முடியுமே தவிர மற்றவர்களை மாற்ற முடியாது. உனக்கு பிடிக்கவில்லையா கடந்து செல். இப்படித்தான், நீ வேலை செய்யும் இடத்திலும் நடந்துக்கொள்ள வேண்டும். சில விடயத்தில் உன்னுடன் வேலை செய்பவர்களுடன் அவர்களுக்கு ஏற்றது போல் தான் செயல்பட வேண்டும். எப்போதுமே உடன் வேலை செய்பவர்களை பகைத்துக்கொள்ள கூடாது. அதுவே, நீ வேலை தெரியாதவர்களுக்கு கொஞ்சம் மெனக்கெட்டு கற்றுக்கொடு. அவர்களே உன்னை, உனது முயற்சிகளை ஊக்குவிப்பார்கள். யாரிடமும் உன் உடல் பலத்தையோ; இல்ல உனக்கு என்ன தெரியும் என்ற உனது திமிரான எகத்தாள பார்வையோ காட்டக்கூடாது. அவர்களை காயப்படுத்தினால் நிச்சயம் அது, உன்னுடைய முன்னேற்றத்தை தடுக்கும். எல்லாருக்கும் உனக்கு தெரிந்த விடையம் தெரிந்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு சிலர் இயல்பாக புத்திசாலியாக இருப்பர். மேலோட்டமாக சொன்னால் உடனே கற்று கொள்வர்.
ஆனால், எல்லாரும் அப்படி இருக்க வேண்டிய அவசியம் இல்லயே. நான் சொல்வது சரியா?" என்பது போல் வேலனை பார்த்தார்.
அவனும் ஆமோதிப்பாய் தலையசைத்தான். தாத்தாவுடன் பேசியதில் அவனுக்குமே நல்ல தெளிவு கிடைத்தது. அவனது மனதில் கூட, 'இனி தனது கோவத்தை ஒருக்கட்டுக்குள்
கொண்டு வரவேண்டும். தனது எண்ண ஓட்டத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்'
என்று உறுதி எடுத்துக்கொண்டான்.
தாத்தாவை அனைத்துக்கொண்ட வேலன் தாத்தாவிடம் நன்றி சொல்லி விடைபெற்றான்.
-------------------
இப்படியே நாட்கள் செல்ல...
இன்று வேலனுக்கு அவன் எதிர்ப்பார்த்த பதவி உயர்வு. அவன் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி. எத்தனை நாட்கள் கவலை பட்டிருப்பான்.. தனக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய பதவி உயர்வு கிடைக்க வில்லை என்று. ஆனால், இன்று அவன் ஆசைப்பட்ட வேலை அவன் கையில்.
சந்தோசமாக வந்தான், அதே மரத்தடிக்கு தாத்தாவை தேடி.
தாத்தாவோ வேலன் வந்ததை கவனிக்கவில்லை. அவர் கையில் இருந்த நாளிதழில்
மூழ்கி இருந்தார் .
அன்று தாத்தா அவன் பக்கத்தில் சென்று அமர்ந்தது போல்
இன்று வேலன் செய்தான். அவன் அரவத்தில் நிமிர்ந்த தாத்தா இவனை பார்த்ததும் ஆனந்தமாக அதிர்ந்தார். இப்போது கொஞ்ச நாட்களாகவே வேலனை பார்க்க முடியவில்லை. இன்று அவனே தன்னை தேடி வந்ததால் இந்த சந்தோஷம்.
அவரது முகத்தில் இருந்த சிரிப்பில், ஒரு துள்ளலுடன் கையில் இருந்த இனிப்பய்
தாத்தா வாயில் வைத்தான் வேலன். அவரும் சந்தோசமாக வாங்கிக்கொண்டார் . அவனே பேச ஆரம்பித்தான்.
"தாத்தா எனக்கு பதவி உயர்வு கிடைத்து இருக்கிறது. அது மட்டுமல்லாமல், எனக்கு என்கூட வேலை செய்பவர்கள் ஆதரவும் கிடைச்சிருக்கு. இது எல்லாமே உங்களால் எனக்கு கிடைச்சது. பெரிய பெரிய நன்றி தாத்தா!” என்று அவரை கட்டிக்கொண்டான்.
தாத்தா, “டேய்” “டேய் விடுடா படவா" என்றார் விளையாட்டாக.
ஒருவழியாக இருவரும் அமைதியாக பேச ஆரம்பித்தனர். "வேலா. நீ நான் சொன்னதைக் கேட்டு உன்னை திருத்திக்கிட்ட ரொம்ப சந்தோஷம். வாழ்க்கையில் நீ இன்னும் பயணிக்க வேண்டிய தூரம்
எவ்வளவோ இருக்கு. ஒவ்வொரு நாளும் ஒரு அனுபவம். எப்படி தண்ணீர் பள்ளத்தை நோக்கி ஓடுகிறதோ அப்படித்தான் நம் வாழ்க்கையும். நீ எங்கேயும் தேங்கி நிற்க கூடாது. அது முடியவும் முடியாது. அதை நீ புரிஞ்சுக்கணும். இதில் அனைவருக்கும் வாய்ப்புகள் கிடைக்கும் . நமக்கு என்ன வேண்டுமோ அதை நாம் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். உனக்கு உன்னுடைய திறமைக்கு
ஏற்றவாறு அந்த வாய்ப்புகளை பயன்படுத்திக்கனும். ஆனால், ஒருவரிடமும் தனிப்பட்ட பகை வளர்க்க கூடாது. அது உன்னை வளர விடாது" என்றார் தீர்க்கமாக அவன் கண்களை பார்த்தபடியே.
“நிச்சயமா தாத்தா” என்றான் வேலன்.
"முன்னோக்கி செல். தடைகளை கடந்து முன்னோக்கி செல்” என்றபடி சிரித்துக் கொண்டே அவனது தோள்களை தட்டிக் கொடுத்தார்.
- பவித்ராமுருகன்

Last edited by a moderator: