• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Nov 16, 2024
Messages
24
அத்தியாயம் 6


வீராவை தனது பன்னிரண்டு வயதில் இருந்தே தெரியும் என்று அஞ்சலி சொல்லவும் அதிர்ந்து போனார் கிருஷ்ணன்.

" என்ன டா சொல்லுற, "

" ஆமா ப்பா "

" எப்படி டா அப்பாக்கு புரியல? "

" சார் அதெல்லாம் வீட்ல போய் பேசிக்கலாம் சார் " என்றான் வீரா

" ஏன் "

" இந்த விஷயம் எல்லாம் சொன்னா உங்களாலயே நம்ப முடியாது அப்போ மத்தவங்க எல்லாம் என்ன நினைப்பாங்க? ஆளாளுக்கு ஒரு கதையை கட்டிட்டு வருவாங்க, அவ பாவம் சார் ப்ளீஸ்... " என்று கெஞ்சி கேட்க,

அப்போதுதான் கிருஷ்ணனும் அதை யோசித்தார். வீரா சொல்வதில் இருந்த நியாயம் அவருக்கு புரிந்தது.

" என்ன நடக்கப் போகிறது?
இஷ்டத்திற்கு ஏதாவது கதை கட்டிவிடலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தவர்கள் ஏமாற்றம் அடையும் வண்ணம் அங்கு நடக்க கூட்டம் மெதுவாய் கலைந்தது.

" சார் நீங்க போங்க நா என் நண்பர்களை பார்த்து பேசிட்டு வந்துடுறேன், உங்க அட்ரஸ் மட்டும் கொடுங்க "

" என்ன சார் அட்ரஸ் என்கிட்ட கேக்கீங்க, உங்களுக்கு தான் கனவுலயே எல்லாம் தெரிஞ்சுருமே அப்புறம் எதுக்கு என்கிட்ட கேட்டுட்டு, நாளைக்கு கனவுல என் பொண்ண பாக்கும் போது அவ கிட்ட அட்ரஸ் கேட்டு வாங்கிட்டு என் வீட்டுக்கு வா "

வீரா அவரை பார்க்க,

" என்ன டா முழிக்க கனவுல காதல் மட்டும் தான் பண்ண முடியுமா? அட்ரஸ் எல்லாம் கேக்க முடியாதா? " கிருஷ்ணன் குரலில் ஏளனம்,

வீராவுக்கு அப்போது தான் அவரது எண்ணம் புரிந்தது, அவர் அவர்களது கனவு காதலை இன்னும் நம்பவில்லை, அவரது மகளின் உணர்வுக்கு மதிப்பு கொடுத்துள்ளார். அதன் காரணமாகவே அவரது மகளிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் என்பதும் அவனுக்கு புரிந்தது

அது புரிந்த நேரம் வீராவின் இதழ்களில் ஒரு சிறுநகை பூத்தது,

" சார் நா அவ கிட்ட அட்ரஸ் வாங்கிக்குறேன், ஆனா அப்படி வாங்குனா கூட நீங்க.... " இழுவையாக நிறுத்த

" டேய்.... " குரலில் ஆத்திரம் மேலோங்க கிருஷ்ணன் பார்க்க,

" வீட்டுக்கு போங்க சார், நா வரேன் என் காதலை உங்களுக்கு புரிய வைக்க... " நிதானமாகவும் தீர்க்கமாகவும் வந்தது வீராவின் குரல்.




மனம் கொடுத்த மன்னவன் வருவான்......
 

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top