Member
- Joined
- Nov 16, 2024
- Messages
- 45
- Thread Author
- #1
அஞ்சலி வரைபடத்திற்கு முத்தம் கொடுத்து அதே நேரத்தில் வீரா கன்னத்தை தடவ அவனது செயலை டாக்டர் கண்டு கொண்டார்,
" அப்பா வீரா என்னடா செய்ற "
" ஒன்னும் இல்லையே டாக்டர் ஏன் டாக்டர்? "
" இல்ல இவ்வளவு நேரம் தலைய புடிச்சிட்டு டென்ஷன்னா உக்காந்துட்டு இருந்த, அப்புறம் திடீர்னு பார்த்தா முகமே மாறி லேசா சிரிச்சு கன்னத்தை தடவுனியே அதான் என்ன விஷயம்ன்னு கேட்டேன் "
" இல்லியே டாக்டர் நான் எப்பவும் போல தான இருக்கேன் "
" டேய் டேய் நீ உன் பிரண்ட்ஸ் கிட்ட சொல்ற மாதிரியே என்கிட்ட சொல்லாத நான் டாக்டர் டா, உன்னைத்தான் ரொம்ப நேரமா கவனிச்சுக்கிட்டு இருக்கேன், அதனால இந்த சினிமாவுல வர்ற மாதிரி டாக்டர் கிட்ட உண்மையைத்தான் சொல்லணும்னு என்னையும் வெட்டி டயலாக் பேச வைக்காத சரியா?, ஒழுங்கா என்னங்கற உண்மைய சொல்லு "
வீரா சங்கடமாய் நெளிய,
" டேய் என்ன நீ என்ன பொம்பள புள்ளையா கேட்ட உடனே நெளிச்சுட்டு இருக்க, ஆம்பள பையன் தானே "
" ம்ம்ம் ஆமா டாக்டர் "
" அப்புறம் என்ன டா வெக்கம் வேண்டி கிடக்கு எதா இருந்தாலும் ஓப்பனா சொல் டா "
" ஏன் டாக்டர் பொம்பள புள்ள மட்டும் தான் நெளியனுமா ஆம்பள பையன் நெளிய கூடாதா? பொம்பள பிள்ளைக்கு இருக்கிற மாதிரி ஆம்பள பையனுக்கும் வெக்கம் இருக்காதா என்ன? "
" இருக்கும்டா ஆனா அந்த அளவுக்கு இருக்கக் கூடாதுன்னு சொல்றேன் "
வீரா அதைக் கேட்டு மௌனமாக,
மீண்டும் டாக்டர் கேட்டார்,
" உண்மைய சொல்ல போறியா என்னடா வேணும். நீ உண்மைய சொன்னா தான்டா என்னால வேற ஏதாவது பண்ண முடியும். "
" அம்மு எனக்கு முத்தம் கொடுத்தா டாக்டர் அதான் " என்று வெட்கம் பொங்க சிரித்துக் கொண்டே சொன்னான்
" முத்தம்மா எப்போ எப்படிடா எதுக்கு கொடுத்தா "
" இப்பதான் டாக்டர் பழைய நினைவுகள மனசுல நினைச்சுட்டு அந்த நினைவுகளோட தாக்கத்தில முத்தம் கொடுத்திருக்கா " என்று சொல்லியவனிடம் மீண்டும் அதே வெட்கம்.
ஆனால் டாக்டரால் தான் அதை எப்படி புரிந்து கொள்வது என்று தெரியவில்லை, ஆனாலும் உண்மை அறியும் நோக்கில் அவரது கேள்வி தொடர்ந்தது,
" அப்போ அடிக்கடி இப்படி முத்தம் உண்டா டா? எப்போல்லோம் இந்த மாதிரி முத்தம் கிடைச்சிருக்கு.. "
" அடிக்கடியா போங்க டாக்டர் நீங்க வேற, நாங்க நேர்ல பாக்குற வரைக்கும் முத்தம் எல்லாம் கொடுத்தது இல்ல, ஆனா நேர்ல பார்த்ததுக்கு அப்புறம் ரெண்டு முறை முத்தம் கிடைச்சிருக்கு டாக்டர் "
" அப்போ உன்னை நேர்ல பாத்ததுக்கு அப்புறம் தான் அந்த பிள்ளை உன்னை பிஸிக்கல்லாவே டச் பண்றாளோ? " டாக்டர் யோசனையாய் கேட்க,
" ஆமா டாக்டர் அப்படித்தான் நானும் நினைக்கிறேன், ஏன்னா இதுவரைக்கும் இந்த மாதிரி உணர்வுகள் எதுவும் வந்தது கிடையாது இப்பதான் இந்த மாதிரி நினைவுகள் எல்லாம் வருது. "
" ஓகோ மனசுல ஆசை இருந்தா கூட அத காட்டிக்காம மனசோடவே வச்சிருக்கு அந்த புள்ள, இவன் நேர்ல வரவும் தான் முழுசா அவ ஆசையை கூட வெளிப்படுத்திருக்கா, ம்ம்ம் நல்ல பிள்ளை தான் " என்று டாக்டர் மனதில் நினைத்து கொண்டிருக்க,
" டாக்டர் " என்று அழைத்தான் ராஜா. வீரா முத்தம் என்று சொன்னதுமே மோகன் அந்த இடத்தை விட்டு வெளியே நகர்ந்து இருந்தான், ஏனோ அவனால் அதை முழு மனதோடு ஏற்று கொள்ள முடியவில்லை.
" என்ன டாக்டர் யோசனை? "
" யோசிக்க வேண்டிய விஷயம் தான ப்பா, அவனை எங்க வெளிய போய்ட்டானா? "
" ம்ம் ஆமா டாக்டர் " வீரா அப்போது தான் மோகன் இல்லாததை உணர்ந்தான்.
அவன் சென்ற காரணம் அறியவும் மேலும் கலங்கினான். அவன் இருப்பதை மறந்து முத்தம் பற்றி சொல்லி விட்டோமே அது அவனுக்கு எத்தனை வருத்தத்தை கொடுக்கும் என்ற நிதர்சனம் நினைக்கும் போது அது அவனை இன்னும் அதிகமாக கவலை அடைய செய்தது.
" இந்த கவலை தீர இந்த நிலையை சரி செய்ய வேண்டும். அதை சரி செய்யும் வழி என்ன? " என்று யோசிக்கும் போதே டாக்டர் யோசனை வந்தவராக
" ராஜா மோகனை கூப்டு " என்றார்
" டாக்டர் நாம அப்படியே வெளிய போவோமா? "
" சரி டா ப்பா வா போவோம், வீரா நீயும் வா "
" நானா "
" டேய் எந்திரிச்சி வா டா உன் உணர்வு எல்லாம் பாக்கும் போது எனக்கு வேற மாதிரி தோணுது என் எண்ணம் சரியா இருக்குதான்னு பாப்போம் வா " என்று அழைக்க
" எங்க டாக்டர்? "
" வா டா "
" எங்கன்னு சொல்லுங்க டாக்டர்? "
" உன் எண்ணம் தெளிவாகணும் தான டா "
" ஆமா டாக்டர் "
" அப்போ கிளம்பி வா "
" டேய் மோகனு, மோகனு எங்க டா இருக்க? " என்று கேட்டு கொண்டே வெளிய வந்தவர், அவனை பார்த்ததும்,
" என்ன டா நீ இப்படி இருக்க எல்லாத்தையும் ஸ்போட்டிவ்வா எடுத்துக்கோ டா, நீ பாட்டுக்கு வெளிய வந்துட்ட உன் நண்பன் தான கஷ்டபடுறான், நானும் தான் கஷ்டபடுறேன்னு நினைக்கியா?
உனக்கு இருக்குற கஷ்டம் மட்டும் டா அவனுக்கு குற்ற உணர்ச்சியும் கூட ஆனா அவன் குற்றமே செய்யலங்குறது தான் உண்மை. "
மோகன் அவரை பார்த்து கொண்டே நின்றான் பதில் ஏதும் பேசவில்லை.
" சரி பார்த்துட்டே நிக்காத நாம உடனே அந்த பொண்ணு வீட்டுக்கு போய் ஆகணும் வா " என்று டாக்டர் அழைக்க நண்பர்கள் மூவரும் அதிர்ந்து போனார்கள்,
" அங்க எதுக்கு டாக்டர்? "
" தொலைச்ச இடத்தில தேடணும்ன்னு சொல்லுவாங்க, அதே மாதிரி தான் இதுவும் இணையும் உணர்வுகளை தனி தனியே வச்சிட்டு நாம ஒரு தெளிவுக்கு வர முடியாது அப்படி தெளிவுக்கு வரணும்னா நாம அங்க போய் தான் ஆகணும் வாங்க போவோம்... " என்று சொல்லிய டாக்டர் அவர்களை அழைத்து கொண்டு அஞ்சலி வீட்டுக்கு கிளம்பினார்.
உண்மையும் வேண்டும் அதே நேரம் அஞ்சலி வீட்டுக்கு சென்றால் அவளை பார்க்கும் மோகனின் நிலை எப்படி இருக்கும், தன்னை பார்க்கும் அஞ்சலியின் அப்பாவின் நிலை எப்படி இருக்கும் என்ற உணர்வோடு அவர்களுடன் பயணபட்டு கொண்டிருந்தான் வீரா.....
மனம் கொடுத்த மன்னவன் வருவான்......