• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Nov 16, 2024
Messages
45

வீராவிற்கு வருவது கனவு இல்லை என்று டாக்டர் சொன்னவுடன் அதிர்ந்து போனான் வீரா.

" என்ன டாக்டர் இப்படி சொல்றீங்க? கனவு இல்லனா அப்போ அது நிஜமா? "

" கண்டிப்பா "

" அய்யோ டாக்டர் ஏன் இப்படி பண்ணுறீங்க, அது நிஜம்ன்னா இப்போ நாம உட்கார்ந்து பேசிட்டு இருக்குறதுக்கு பேர் என்ன? "

" இதுவும் நிஜம் தான் " டாக்டர் சிரித்து கொண்டே கூற,

நண்பர்கள் மூவரும் விக்கித்து போனார்கள், யாருக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை, டாக்டர் என்ன பேசுகிறார் என்பதும் புரியவில்லை.

" டாக்டர் நிஜம்ன்னா நாம இங்க பிஸிக்கல்லா இருக்கோம், ஆனா அவன் சொல்லுற கணக்கு படி அஞ்சலிய அவன் பிஸிக்கல்லா பார்த்தது கூட இல்லையே, பிஸிக்கல்லா இல்லாத ஒன்னு எப்படி உண்மை ஆக முடியும்? " மோகன் கேக்க,

" பிஸிக்கல் மட்டும் தான் உண்மைன்னு யார் சொன்னது மோகனு? "

" பின்ன எத உண்மைன்னு சொல்லுறீங்க டாக்டர் " ராஜாவிடம் இருந்து கேள்வி வந்தது.
டாக்டரின் முகம் வீராவை பார்த்தது,

" ஆமா வீரா உனக்கு வர்றது நீ நினைச்ச மாதிரி கனவு கிடையாது.. "

" அப்போ அதுக்கு என்ன பெயர் டாக்டர்? "
டாக்டர் சிரித்துக் கொண்டே சொன்னார்
" அது ஒரு உணர்வோட தொடர்ச்சி '

" உணர்வோட தொடர்ச்சியா அப்படின்னா என்ன டாக்டர் எனக்கு புரியல "

" எனக்குமே இன்னும் முழுசா புரியலப்பா, உன்கிட்ட பேச பேச தான் எனக்கும் விஷயம் தெரியவரும் "

" என்ன டாக்டர் மேலும் மேலும் குழப்பிக்கிட்டே போறீங்க "

" நான் ஒன்னும் குழப்பி விடல ப்பா உன் விஷயம் அந்த மாதிரி இருக்கு அதுக்கு நான் என்ன பண்ண? "

" சரி டாக்டர் அப்போ நீங்களே சொல்லுங்க நான் என்ன பண்ணனும்ன்னு நான் அத பண்ண முயற்சி பண்றேன். "

" நீ ஒன்னும் பண்ண வேண்டாம் இப்ப நான் கேக்குற விஷயத்துக்கெல்லாம் பதில் சொல்லிவிட்டு வந்த மாதிரி பதில் சொல்லிக்கிட்டே வா நானே விஷயத்தை கண்டுபிடிக்கிறேன். "

" சரி அப்ப கேள்விக்கு வாங்க டாக்டர் நான் எனக்கு தெரிஞ்ச வகையில பதில் சொல்றேன். "

" உனக்கு வர்றது கனவெல்லாம் இல்லன்னு சொன்னம்ல "

" ஆமா சொன்னீங்க. "

" சரி, என் வீட்டுக்கு நீ வந்த உடனே ஒரு கேள்வி கேட்ட உனக்கு நினைவு இருக்கா? "

வீரா முழிக்க,

" வீட்ல நா மட்டும் தான் இருக்கேனான்னு கேட்டியே ப்பா "

" ஆமா சார், நீங்க கூட உருவமா நீங்க அருவமா உங்க குடும்பம் இருக்குன்னு சொன்னீங்க "

" குட், அத அப்படியே மனசுல வச்சுட்டு உன் நினைவுகளை பத்தி யோசி "

" அப்படின்னா அம்முவும் நானும் கனவா இல்லாம அருவமா எங்க கூட இருக்கோம்ன்னு சொல்ல வாறீங்களா டாக்டர்? "

" கான்பார்ம்மா சொல்லல ப்பா ஒரு யூகம் தான், அந்த யூகத்தை அப்படியே மனசுல வச்சுட்டு நா கேட்குற கேள்வி எல்லாம் உனக்கு நீயே கேட்டு பார்த்து பதில் சொல்ல முயற்சி பண்ணு, "

" என்ன கேள்வி டாக்டர்? "

" அந்த உணர்வு உனக்குள்ள எப்போ எப்படி ஏற்படுது இது தான் முதல் கேள்வி.

அந்த பொண்ணுக்கும் உனக்கும் என்ன தொடர்பு? இது ரெண்டாவது கேள்வி

அவளோட உணர்வு எப்படி உன்னோட உணர்வோட கனெக்ட் ஆகுது, அதே மாதிரி உன்னோட உணர்வு அவளுக்கு எப்படி கனெக்ட் ஆகுது? இது மூணாவது கேள்வி,

உணர்வுகள் கனெக்ட் ஆகுதுன்னா உங்க ரெண்டு பேருக்குள்ள என்ன சம்பந்தம், உங்க ரெண்டு பேருக்கும் இடையில என்ன உறவு இருக்கு? இது நான்காவது கேள்வி " என்று டாக்டர் கேள்விகளை அடுக்க அதிர்ந்து போனான் வீரா,

" டாக்டர் எனக்கு ஒண்ணுமே தெரியல நீங்க என்னடானா கேள்வி கேள்வியா கேட்டு அடுக்கிக்கிட்டே போறீங்க? "

" பதறாத பதறாத நான்தான் சொன்னேன்ல முதல்ல கேள்வி என்னன்னு தெரியணும் அப்பதான் பதில் என்னன்னு தெரியும் கேள்வியே தெரியாம பதிலை தேடினால் எந்த கேள்விக்கு என்ன பதில் சொல்லுவ? " டாக்டர் தெளிவாக விஷயத்திற்கு வந்திருக்கிறார் என்பது வீராவிற்கும் அவனது நண்பர்களுக்கும் தெளிவாக புரிந்தது.

" ஆனா டாக்டர் இந்த கேள்விகளுக்கெல்லாம் எப்படி பதில் கண்டுபிடிக்கிறது அவன் தூங்குறானா தூங்கலையான்னு கூட அவனுக்கு தெரியல இந்த லட்சணத்தில் இவ்வளவு கேள்விக்கு அவன் எங்க இருந்து பதில் சொல்ல இதை கண்டுபிடிக்கிறதுக்கு என்ன வழி இருக்கு " என்று ராஜா கேட்க அதே கேள்வியோடு டாக்டரின் முகத்தை பார்த்தான் மோகன்.

" டேய் அப்பா கொஞ்சம் பொறுங்கடா இதெல்லாம் உடனே உடனே கிடைக்கிறதுக்கு ஹோட்டல்ல ஆர்டர் பண்ணுன தோசைன்னு நினைச்சீங்களா கோட்டிக்கார பயலுவளா இது மனசு சம்பந்தப்பட்டது உணர்வு சம்பந்தப்பட்டது டா.
இந்த மாதிரி விஷயத்தை எல்லாம் சாப்ட்டா தான் டீல் பண்ணனும் அது மட்டும் இல்லாம இந்த மாதிரி விஷயத்தை டீல் பண்ணும் போது பொறுமை ரொம்ப அவசியம்.
பொறுமைய மீறி நாம நம்ம இஷ்டத்துக்கு கேள்வியை கேட்டுகிட்டே போனோம்னா கடைசியில் அது விபரீதமா போய் முடியுறதுக்கான வாய்ப்புகள் ரொம்ப அதிகம். "

" விபரீதமான எப்படி சொல்றீங்க டாக்டர்" என்று மோகன் கேட்க,

" ம்ம்ம் உன்னோட நண்பன் பைத்தியம் பிடிச்ச மாதிரி புடிச்ச மாதிரி என்ன பைத்தியம் பிடிச்சிரும், "

" என்ன டாக்டர் இப்பிடி சொல்றீங்க? "

" ஆமா ஒரு அளவுக்கு மேல நாம மூளைக்கு அழுத்தத்தை கொடுத்தோம்னா அதுதான் நடக்கும்.
எந்த விஷயமும் அப்படித்தானே அளவுக்கு அதிகமான அழுத்தத்தை கொடுக்கும் போது ஒன்னு அது ஒடஞ்சிடும் இல்ல வெடிச்சிடும் அந்த மாதிரி தான் நம்ம மூளையும் சிதஞ்சு போயிடும் அதுக்கு இடம் கொடுக்காம கொஞ்சம் நிதானமா நாம ஹேண்டில் பண்ணினா நாம நினைக்கிற விஷயம் நாம நினைச்சதை விட ரொம்ப சீக்கிரமாவும் தெளிவாவும் நமக்கு வந்து சேரும். "
என்று டாக்டர் சொல்ல அவர்கள் மூவரும் அவரையே பார்த்துக் கொண்டிருந்தார்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை அறியாமலே....

மனம் கொடுத்த மன்னவன் வருவான்.......
 
Member
Joined
Jun 3, 2025
Messages
74

நான் போய் ஒரு காபிய குடிக்கிறேன் இல்லை எனக்கு பைத்தியம் புடிச்சிடும்🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🚴‍♀️🚴‍♀️🚴‍♀️🚴‍♀️🚴‍♀️
 
Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top