• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Nov 16, 2024
Messages
45

மோகன் தனக்கு இருக்கும் குழப்பம் நீங்க ஏதாவது விடை கிடைக்கும் என்று எண்ணி டாக்டரின் வீட்டை அணுகி இருக்க அவர் இன்னும் அவனை குழம்பி போக செய்திருந்தார்.

அதன் விளைவாய் தலையில் கையை வைத்து உக்காந்து விட்ட மோகனைப் பார்த்த டாக்டர்,

" அப்பா மோகனு ஏன் இப்படி தலைய பிடிச்சுட்டு உக்காந்துட்டு இருக்க உனக்கு என்ன கேட்கணுமோ அதை தெளிவாத்தான் கேளேன்... "

" என்ன எங்க டாக்டர் தெளிவா கேட்க விடுறீங்க மாத்தி மாத்தி பேசி கொலப்பித்தான் விடுறீங்க "

" அட நா எங்கப்பா குழப்பி விட்டேன், முதல்ல உன்னோட கேள்விய நீ தெளிவா கேட்டியா? "

மோகன் அவரை பார்க்க,

" தெளிவா கேட்காமலே குழப்பிவிடறேன்னு நீயா சொல்லிக்கிட்டா என்ன அர்த்தம்.
உன்னோட கேள்வி என்ன அதை முதல்ல குழப்பம் இல்லாம தெளிவா கேளு அதைக் கேட்டு பழகிட்டனாலே உனக்கு விடையும் தெளிவா கிடைச்சுரும் புரியுதா? "

" ஸ்ஸ்ஷப்பா முடியல டாக்டர் முடியல " என்று சொல்லிக் கொண்டு அருகில் இருந்த ஒரு சொம்பு தண்ணீரை எடுத்து மடக் மடக்கென்று குடித்து முடித்தான்
பின் தலையை சிலுப்பி விட்டுக்கொண்டு இப்பொழுது டாக்டரை பார்த்து கேட்டான்,

" டாக்டர் இந்தா இருக்கான்ல வீரா இவன் எனக்கு கிளோஸ் பிரண்டு நான் கட்டிக்க போற பொண்ணும், இவனும் கனவுல பார்த்து காதலிச்சேன்னு சொல்றான், அந்த புள்ளையும் அப்படித்தான் சொல்லுது, கல்யாணத்துக்கு சம்பந்தம் சொல்லி கல்யாண மேடை வரைக்கும் வந்துட்டு இவனை பார்க்கவும் அந்த பிள்ளை இவனை பார்த்து ஓடிப்போயிட்டு இவனும் அவளை இறுக்கி கட்டி பிடிச்சுகிட்டான்.

டேய் என்னடா ன்னு கேட்டா, நாங்க காதலர்கள்ன்னு சொல்லுறான், எப்படிடா ன்னு கேட்டா இப்படி டா ன்னு நம்ப முடியாத வகையில சொல்லுறான், விஷயம் நம்ப முடியாத விஷயம் ஆனா அத சொல்லுறது என்னோட உயிர் நண்பன் கண்டிப்பா இவன் பொய் சொல்ல மாட்டான்னு எனக்கு தெரியும் ஆனாலும் என்னால இவன் சொல்ற கனவுங்குற விஷயத்தை மட்டும் நம்ப முடியல,
உண்மையிலேயே இந்த மாதிரி கனவு வருமா?
இப்படி எல்லாம் கனவுல வந்த விஷயம் நேர்லயும் வந்து அவங்க நினைச்ச மாதிரியே நடக்குமா?
அப்படி நடக்குறதுக்கு ஏதாவது வாய்ப்பு உண்டா?
இது தான் என் கேள்வி டாக்டர் "

" சரி உன் நண்பன கூப்பிடு அவன்கிட்டயும் பேசி தான் பாப்போம் "

" இந்த உக்காந்து இருக்கான் இல்ல இவன்தான் டாக்டர் " என்று வீராவை கை காட்டினான் ராஜா

" டேய் அப்பா கொஞ்சம் முன்னாடி வரியா? நான் கொஞ்சம் வயசானவன்டா அதனால நீ தான் எழுந்து வாயேன், ஏன் கூப்டுற அளவுக்கு வைக்குற "

வீரா சிரித்துக்கொண்டே அவரின் அருகில் வந்த அமர்ந்தான்

" ஏன்டா ப்பா இந்த பய சொல்றதெல்லாம் உண்மையா நிஜமாவே நீ கனவுல தான் காதலிச்சியா? "

" ஆமா டாக்டர் "

" அது எப்படிப்பா கனவுல காதல் கொஞ்சம் புரியிற மாதிரி சொல்லேன் கேட்போம் "

" டாக்டர் அப்ப எனக்கு ஒரு 13 14 வயசு இருக்கும் எங்க தோட்டத்துல வாழை மரம் உண்டு, அதுக்கு தண்ணீர் பாச்ச போனேன், மோட்டர போட்டு விட்டு பக்கத்துல இருந்த வேப்ப மரத்து அடியில படுத்து தூங்கிட்டு இருந்தேன் அப்போ என் காதில் ஏதோ ஒரு சின்ன புள்ளையோட முணங்கள் சத்தம் கேட்டுச்சு, பாவம் ஏதோ வலில துடிக்குற போல இருந்துச்சு, என்னன்னு யோசிச்சு பார்த்தா அது ஒரு ஸ்கூல் கிளாஸ் ரூம், அங்க ரெட்டை சடை போட்டுட்டு, அந்த பெரிய நெத்தியில ஒரு குட்டி பொட்டு, அதுக்கு மேல ஒரு திருநீறு கீற்று வச்சி பாக்கவே செம்ம அழகா இருந்துச்சு, கொஞ்சம் கீழ இறங்கி பாக்க கண்ணுல இருந்து கண்ணீர் ஒழுகுது, என்னன்னு கேட்டா, ரொம்ப வயிறு வலிக்குதுன்னு அந்த புள்ள ஒரே அழுகை, ஏன்னு கேட்டா சொல்லாம முழிச்சது, அப்போவே எனக்கு புரிஞ்சிட்டு அந்த புள்ள பெரிய மனுஷி ஆகிட்டு அதான் முதல் முறை அந்த வலி தாங்க முடியாம அழுகுறான்னு, ஆனா அந்த விஷயம் எனக்கு எப்படி அந்த வயசுல புரிஞ்சதுன்னு தெரியல டாக்டர், அவளோட பேசுனேன், அந்த வலி மறந்து போற அளவுக்கு பேசுனேன், அவ தைரியம் ஆகி அந்த வலியை மறந்து சிரிக்குற அளவுக்கு, இது எப்படி சாத்தியம், நா எப்படி அப்படி பேசுனேன்னு எனக்கு தெரியல டாக்டர் ஆனா நான்தான் எல்லா விஷயமும் பேசினேன் " என்று அன்னைக்கு அஞ்சலி அவளது தந்தையிடம் சொல்லிய விஷயம் அனைத்தையும் அப்படியே சொன்னான். அவர்கள் அனைவரும் அவன் அந்த வயதில் அத்தனை தெளிவாக பேசினான் என்று சொன்னதை நம்ப முடியாமல் தான் பார்த்தனர், அவனே அதை நம்பவில்லை என்ற போது நண்பர்கள் நம்பாதது யாருக்கும் வியப்பை தரவில்லை.

டாக்டர் அமைதியாக, முகத்தில் எந்த உணர்வும் காட்டாமல் பார்த்து கொண்டிருந்தார். வீரா விஷயத்தை சொல்லி முடித்தான், அவனும் டாக்டரின் முகம் பார்த்தான்.

சில நிமிட மௌனம். பின் மௌனம் கலைத்த டாக்டர்,

" தம்பி வீரா "

" ம்ம் டாக்டர் "

" இப்போ நீ சொன்னியே இதெல்லாம் நீ தூக்கிட்டு இருக்கும் போது நடந்துச்சா இல்ல முழிச்சுட்டு இருக்கும் போதா? "

" தூக்கிட்டு இருக்கும் போது டாக்டர் என்று சொன்ன வீரா சட்டென முழிச்சுட்டு இருக்கும் போது டாக்டர் " என்றான்.

" டேய் யப்பா ஏன் டா உளறுற, தெளிவா சொல்லு "

வீரா யோசிக்க ஆரம்பித்தான், குழப்பம் அவனை சூழ்ந்தது, தூங்கிட்டு இருந்தேனா? இல்ல முழிச்சிட்டா? அவனுக்கு அவனே கேட்டு கொண்டான், தெளிவு பெற முடியாத நிலை வரவும்,

" தெரியல டாக்டர் " என்று வீரா சொல்ல நண்பர்கள் இருவரும் என்ன சொல்வது என்று தெரியாமல் அதிர்ந்து முழித்தனர்,

மனம் கொடுத்த மன்னவன் வருவான்......
 
Member
Joined
Jun 3, 2025
Messages
74

நானும் ஒரு கனவு பற்றி டாக்டர் கிட்ட கேட்டேன் அவங்க மிராக்கிள் இத்தனை வருஷத்தில் நான் இப்போது கேள்வி படலை மெடிக்கல் லைன்லனு சொன்னாங்க 😟😟😟😒😒
 
Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top