Member
- Joined
- Nov 16, 2024
- Messages
- 45
- Thread Author
- #1
அஞ்சலி தனது தந்தையிடம் பேசிவிட்டு அறைக்குள் நுழைந்த அதே தருணத்தில் நண்பர்களுடன் அந்த டாக்டரின் வீட்டிற்குள் நுழைந்தான் வீரா.
டாக்டர் அவர்களின் வருகைக்காக காத்துக் கொண்டுதான் இருந்தார் அவர்கள் உள்ளே நுழையவும் அனைவரையும் இன்முகத்தோடு வரவேற்றார்.
" வாங்கப்பா வாங்க எல்லாரும் வாங்க, "
அனைவரும் அங்கு போடப்பட்டிருந்த சோபாவில் அமர சொல்லிவிட்டு, அவர்களுக்கு டீயை கொண்டு வந்து கொடுத்தார் டாக்டர்
அதை வாங்கி குடித்துக்கொண்டு வீரா கேட்டான்,
" என்ன டாக்டர் வீட்ல வேற யாரையும் காணோம் எல்லாம் வெளிய போய்ட்டாங்களா? நீங்க மட்டும் தான் இருக்கீங்களா? "
" ஆமாம் பா உருவமா நான் இருக்கேன் அருவமா என் குடும்பம் என் கூடவே இருக்கு " அவர் சொன்ன பதிலில் ஒரு நிமிடம் அனைவரும் அதிர்ந்து போனார்கள், வாயால் உறிந்த டீயை தொண்டைக்குள் இறக்காமல் அவரை பார்க்க,
" என்னப்பா முழிக்கிறீங்க ஒரு டாக்டரா இருந்துட்டு இப்படி பேசுறன்னு யோசிக்கிறீங்களா? "
அவர்கள் அவரையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருக்க கலகலவென சிரித்தார் டாக்டர்.
" உடலுக்கு தான் தம்பி அழிவு உணர்வுக்கு இல்லல அவங்க எல்லாரும் இப்படியே என்கூடவே இருக்குறது மாதிரி தான் எனக்கு தோணும் தம்பி நானும் எவ்வளவோ முயற்சி பண்ணி பார்த்துட்டேன் அவங்க என்னை விட்டுட்டு போய்ட்டாங்கன்னு, ஆனா அப்படி என்னை நான் நம்ப வைக்க நினைக்கும் போதெல்லாம் அப்படி இல்லனு புரிய வைக்க எதாவது ஒரு விஷயத்தை நடத்துவாங்க, முதல்ல இதெல்லாம் அமானுஷ்யமா தெரிஞ்சது, அப்புறம் அதுவே உணர்வு பூர்வமா மாறிருச்சு நானும் அப்படியே வாழ பழகிட்டேன். " என்று டாக்டர் சொல்லவும் நண்பர்கள் மூவரும் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அப்படியே அமைதியாக இருந்தனர். டாக்டர் தொடர்ந்தார்,
" ஆயிரம் தான் இங்க அறிவியலும் விஞ்ஞானமும் வளர்ந்துகிட்டே போனாலும் சில விஷயங்களை நம்மளால ஆதாரப்பூர்வமா நிரூபிக்க முடியாது, ஆணித்தராம இல்லன்னு மறுக்கவும் முடியாது, எப்படி எல்லா செயலிலும் நன்மையும் தீமையும் கலந்து இருக்குமோ அதே போல தான் ஒவ்வொரு நிகழ்வுலயும் உண்மையும் பொய்யும் கலந்து இருக்கும்.
இதை உணர்ந்து கொள்ளவும் புரிஞ்சுக்கவும் கஷ்டமாகத்தான் இருக்கும் ஆனா அத உணரவங்களுக்கு மட்டும் தான் உண்மையா தெரியும். " டாக்டர் பேச்சு வாக்கில் எங்கே வருகிறார் என்பது மோகனுக்கு தெளிவாக புரிந்தது
வீராவும் அதே நிலையில் தான் இருக்கிறான் என்பதனால் அவரது பேச்சு அவனை மெதுவாக ஈர்த்து இருந்தது.
அதனால் மௌனம் கலைக்கும் விதமாக,
" ஏன் டாக்டர் யார் வீட்டுக்கு வந்தாலும் இப்படித்தான் பேசுவீங்களா? "
" டேய் இப்படி தானான்னா எப்படி டா கேக்குற? " குரலில் குறும்பு காட்டி கேட்க,
" அய்யோ டாக்டர் அப்படி இல்ல, " அவசரமாக வீரா மறுக்க,
" கிடையாதுப்பா எனக்கு யார புடிச்சிருக்கோ எனக்கு யாரு நெருக்கமா இருக்காங்களோ அவங்க கிட்ட தான் பேசுவேன். " வீராவின் பதட்டம் புரிந்து பதில் சொன்ன டாக்டர் மேலும் தொடர்ந்தார்,
" இந்தா இருக்கானே மோகனு இவன் எனக்கு கொஞ்ச நாளாவே ரொம்ப நெருக்கமா தெரியும்னு வச்சுக்கோயேன், வயசு வித்தியாசம் பாக்காம பேசுவான் பழகுவான் சிரிப்பான் விளையாடுவான் எல்லாம் பண்ணுவான் என் கூட, ஆனா அவனும் இதுவரைக்கும் என் வீட்டுக்கு வந்தது கிடையாது நானும் அவனை வான்னு கூப்பிட்டது கிடையாது இன்னைக்கு தற்செயலா உன்னைய பத்தி விசாரிப்பதற்காக என்கிட்ட கேட்டான் உடனே வீட்டுக்கு வாடான்னு சொன்னேன். "
" டாக்டர் நா இவனை பத்தி தான் கேட்க போறேன்னு உங்களுக்கு எப்படி தெரியும்? "
" நீதான ப்பா சொன்ன. "
" நானா? "
" ம்ம்ம் "
" எப்ப? "
" அதான் சொன்னியே ப்பா உன் நம்பிக்கைக்கு உரியவன்னு "
" ஆமா சொன்னேன் "
" அதோட உருவம் இவன் தான? "
" ம்ம்ம் டாக்டர் ஆனா எப்படி? "
" நான்தான் சொன்னேனே உணர்வுகள்... "
" உனக்கு புரியிற மாதிரி சொல்லனும்னா இந்த சாமியார் எல்லாம் குறி சொல்லுவாங்க இல்ல அந்த மாதிரின்னு வச்சுக்கோ. "
மோகன் நம்பாத பார்வை பார்க்க,
" நான் ஒரு டாக்டர் பா உங்க எல்லாரையும் நான் கவனிச்சுக் கொண்டு தான இருந்தேன். நீங்க சொல்லலைன்னா கூட உங்க முகத்தை வச்சும் உங்க ரியாக்ஷன வச்சும் என்னால கண்டுபிடிக்க முடியாதா? "
முதலில் மறுத்து பேசியவன் இப்போது மறுப்பு தெரிவிக்கவில்லை.
" பார்த்தியா இது தான் விஞ்சான பவர், நா குறின்னு சொல்லும் போது நீ நம்பல அதுவே நா டாக்டர் என்னால அத கண்டுபிடிக்க முடியும்ன்னு சொல்லவும் நம்புற.. " என்று டாக்டர் சொல்லவும் மோகன் பதில் சொல்ல முடியாமல் முழித்தான்.
" ஏன்னா கண்ணுக்கு தெரியாத உண்மையான உணர்வை விட கண்ணுக்கு தெரிகிற பொய்யான உருவத்துக்கு தான் இங்க மதிப்பு அதிகம். " என்று சொல்லிய டாக்டர் எதையோ மோகனுக்கு புரிய வைக்க முயற்சி செய்து கொண்டிருந்தார்.
" டாக்டர் எனக்கு முழுசா புரியல, நீங்க ஏதோ எனக்கு புரிய வைக்க முயற்சி பண்ணுறீங்கன்னு மட்டும் புரியுது, ஆனா இந்த விஷயம் எல்லாம் ஹாஸ்பிடல்ல வச்சு பேசி இருக்கலாமே ஏன் வீட்டுக்கு வர சொன்னீங்க? "
" ஏன்னா இங்க வச்சு தான் சில விஷயங்களை நிதானமாகவும் பொறுமையாகவும் பேச முடியும்னு எனக்கு தோணுச்சு அதனாலதான் உன்னோட அவனையும் வரச் சொன்னேன். "
" அப்போ என் நிலைமைய புரிஞ்சுகிட்டு அதை உணர வைக்கிறதுக்காக தான் நீங்க முன்னாடியே பிரிப்பேர் ஆகி இருந்தீங்களா டாக்டர்? " மோகனின் கேள்வி அவரின் மீது நம்பிக்கை இல்லை என்பதை காட்டியது
" மோகன் மோகன் " சிரித்துக்கொண்டார்,
" அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் அதேபோலத்தான் நம்பிக்கை இல்லாதவன் பார்வைக்கு எதையுமே நம்ப முடியாது. பிரிப்பேர் ஆகி பேசுற அளவுக்கு வீராவுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் உண்டு?
எனக்கு முன்னாடி இருந்தே உன்னைய தெரியுமா இல்ல வீராவை தெரியுமா?
நம்ம ஊர்ல என்னைக்குமே நமக்கு தெரிஞ்சவங்களுக்கு தான் சப்போர்ட் பண்ணுவோம் அது நல்லதோ கெட்டதோ அதல்லாம் இரண்டாவது முதல்ல நமக்கு தெரிஞ்சவன் அது மட்டும் தான் முக்கியம்.
அப்படி எனக்கு தெரிஞ்சவன் பழக்கமானவன் நீ தான் ஏன் நான் உன்னை விட்டு அவனுக்கு சப்போட்டா பேச போறேன் யோசிச்சு பாரு?
ஏன்னா நா அப்படி பேசுறேன்னு நீ நினைக்கிற, அதுக்கு காரணம் நான் சொல்ற விஷயம் உனக்கு பாதகமானது அவனுக்கு சாதகமானது அதாவது உண்மையானது, திடமாக வந்தது டாக்டரின் குரல்.
மனம் கொடுத்த மன்னவன் வருவான்.......