Member
- Joined
- Nov 16, 2024
- Messages
- 45
- Thread Author
- #1
அஞ்சலி கொஞ்சம் சுதந்திரமாக வீட்டில் அலைய அதை கிருஷ்ணன் கவனித்து கொண்டு தான் இருந்தார், ஏனோ அவருக்கு அவளிடம் பேச விருப்பம் இல்லை
தன் பேச்சை கேட்காத பிள்ளையிடம் பேசி என்ன ஆகப்போகிறது என்று நினைத்தாரோ என்னவோ தெரியவில்லை, அஞ்சலியை எப்போதும் கொண்டாடும் தந்தை இப்பொழுதெல்லாம் கண்டு கொள்வதில்லை, ஆனால் அவளை கண்காணிப்பதை அவர் விடவில்லை, அவளது அசைவுகள் ஒவ்வொன்றையும் பார்த்துக் கொண்டுதான் இருந்தார்.
நிகழ்வுகள் நடந்து வாரம் ஒன்றைக் கடந்து இருக்க அஞ்சலியிடம் உற்சாகம் மட்டும் குறைந்தபாடில்லை அதையும் கிருஷ்ணன் கவனித்துக் கொண்டுதான் இருந்தார் சில நாட்களுக்கு பின் அவளிடம் இருக்கும் பழைய உற்சாகம் தான் அது,
என்றைக்கு கல்யாணம் என்று பேச ஆரம்பித்தோமோ அப்போதே அவளது முகம் கொஞ்சம் மாறிப்போனது. அதன் பின்பு அவளது முகம் சாதாரணமாக அவருக்கு தெரியவில்லை, இருந்தும் கல்யாணம் என்று சொன்னவுடன் அனைத்து பெண்களின் நிலையும் அப்படித்தானே இருக்கும் என்ற பொதுவான நிலைப்பாட்டில் கிருஷ்ணன் அதை பெரிதாக கண்டு கொள்ளவில்லை.
ஆனால் அவளின் அந்நாளைய நிலை இன்று அவருக்கு விளங்க ஆரம்பித்தது என்று தான் சொல்ல வேண்டும்.
ஆனாலும் அவர்கள் காதலுக்கு அவர்கள் சொன்ன கதையை மட்டும் அவரால் நம்ப முடியவில்லை.
அதை பற்றி என்ன ஏது என்று மகளிடம் விசாரிக்கலாம் என்று தோன்றினாலும் அவள் சொல்லும் விஷயம் எதுவும் நம்ப தகுந்ததாக இல்லையே என்ற எண்ணம் அவரைப் பேசவிடாமல் தடை செய்து வைத்திருந்தது...
வாரம் ஒன்றை கடந்திருந்ததால் அஞ்சலி தந்தையிடம் பேசி விடலாம் என்ற எண்ணத்திற்கு வந்திருந்தாள்.
அவளுக்கு நன்றாக தெரியும் எப்படியும் நம் தந்தை நம்மோடு அத்தனை எளிதில் பேசி விட மாட்டார் என்பது, இதற்கு முடிவு நாம் சென்று பேசுவது மட்டும் தான் என்ற எண்ணத்தில் இன்று தைரியமாக முன்னேறி சென்றாள்.
" அப்பா "
அவர் பதிலுக்கு எதுவும் பேசவில்லை அமைதியாக அவளது முகத்தை பார்த்தார்.
" ப்பா உன்ன தான் கூப்பிடுறேன்.. "
"........... "
" ப்பா பேச போறியா இல்லையா? "
"............ "
" எத்தனை நாளைக்கு ப்பா இப்படியே இருக்க முடியும் நினைக்கிற? "
" இல்ல இப்படியே இருந்திடலாம்ங்குற முடிவுக்கு வந்துட்டியா? "
மீண்டும் அவரிடம் அமைதி...
" இப்படி அமைதியாவே இருப்பதினால யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லப்பா உனக்கு என்ன திட்டனும்ன்னு தோணுச்சுன்னா திட்டு, இப்படி மூஞ்ச வச்சுட்டே அலையாத "
அப்போதும் அவரிடம் வார்த்தைகள் எதுவும் வரவில்லை
" ப்பா ஒரு பொண்ணுக்கு எப்பவுமே முதல் ஹீரோ அவளோட அப்பாவ தான் இருக்கும் அந்த அப்பாவையே ஒருத்தன் ஓவர் டேக் பண்ணாம்ன்னா அவன் எந்த அளவுக்கு அந்த பொண்ணுக்கு நெருக்கமானவனா இருப்பான் நீயே கொஞ்சம் யோசிச்சு பாரு... "
அவர் எதுவும் பேசவில்லை அவள் பேசுவதை கேட்டுக்கொண்டு மட்டும் அமர்ந்திருந்தார்.
" இத எப்படி சொல்லன்னு எனக்கு தெரியலப்பா ஆனா இத சொல்லுறேன் நீயும் தெரிஞ்சுக்கோ. இத தெரிஞ்சுக்கிட்டா அவன் என் மனசுக்கு எப்போ எப்படி நெருக்கம் ஆனான்னு உனக்கு தெரிய வாய்ப்பு இருக்கு."
அவரது முகத்தை பார்த்தாள் அவர் அப்போதும் அப்படியே இருந்தார், பேசவில்லையே தவிர அவள் சொல்ல வருவதை கேட்க தயாராக தான் இருந்தார்.
" உனக்கே தெரியும் பா நான் வயசுக்கு வரும்போது எனக்கு 12 வயசு இருக்கும், ஸ்கூல்ல இருக்கும் போது தான் வயசுக்கு வந்தேன், திடீர்னு வயிறு வலிக்க ஆரம்பிச்சுட்டு, ஒரு பொம்பள பிள்ளைக்கு வயிறு வலிக்குன்னு அத்தனை பசங்க முன்னாடி சொல்றது ரொம்ப சங்கடமா இருக்கும்.
அதையும் மீறி அப்படி சொன்னா கூட பசங்க பிள்ளைங்க எல்லாருமே கேலி கிண்டல் பண்ணி சிரிப்பாங்க,
சரி அதெல்லாம் பரவா இல்ல பாத்துக்கலாம்ன்னு நினைச்சா அன்னைக்கு எனக்கு கிளாஸ் எடுத்தது ஒரு சார், அவர் ரொம்ப ஜாலியான டைப் எல்லாத்தையும் காமெடியா தான் எடுத்துப்பாரு, அவர்கிட்ட சொன்னா அவரே பேசி சிரிக்க தான் செய்வார்,
அவர் இல்லாம லேடி டீச்சரா இருந்தா தயக்கம் இல்லாம போய் சொல்லி இருப்பேன்,
ஆனா அந்த நேரத்துல அதுக்கும் வழி இல்லாம போச்சு,
என்ன செய்யணும்னு தெரியாம வழியில்லாம முழிச்சிட்டு உக்காந்துட்டு இருந்தேன். நேரமும் கொஞ்சம் கொஞ்சமா கடந்து போச்சு,
பத்து, பதினஞ்சு நிமிஷம் கழிச்சு அது என் டிரஸ்ல கறை படிய ஆரம்பிச்சது, அந்த உணர்வை எப்படி சொல்லன்னு இப்பவும் கூட தெரியல ப்பா, "
அஞ்சலியிடம் இப்போது கூட அந்த நினைவுகளை நினைக்கும் போது கண்கள் வியர்க்க ஆரம்பித்தது.
மகளின் கண்ணீரை கண்டவர் மனம் பிசைய அவர் பேச முனைந்த நேரம் அஞ்சலி கண்களை துடைத்து கொண்டு,
" அப்பா "
" ம்ம்ம் " அவரை கேட்காமலே குரல் வந்தது...
" உங்க பொண்ணு நா இப்போ இந்த நிலையில உட்கார்ந்து இருக்கேன் பா நீங்க என்ன சொல்லுவீங்க? "
" ஹான்... "
" சொல்லு ப்பா என்ன சொல்லுவ உன் மகளுக்கு... "
" அஞ்சு மா முன்னாடி இருக்குறது உன் வாத்தியார் ம்மா அவர் உனக்கு அப்பா மாதிரி டா தயங்காம உன் பிரண்ட் கிட்ட சொல்லி சொல்ல சொல்லு டா, அதெல்லாம் யாரும் சிரிக்க மாட்டாங்கன்னு உனக்கு ஆறுதலா பேசிருப்பேன் டா "
அஞ்சலி சிரித்தாள்,
" ஆனா அவன் என்ன சொன்னான் தெரியுமா ப்பா? "
" என்ன சொன்னான்? "
" அம்மு... " முதல் முறை அவன் குரல் என் காதுல கேட்டுச்சு ப்பா, கீச்சு குரல் தான் பா, அவனுக்கும் கூட என் வயசு தான் இருக்கும் இல்ல ஒன்னு இரண்டு வயசு அதிகமா இருக்கும், சிரிச்சிட்டே குழந்தை மாதிரி இருக்குற அவனோட முகம் எனக்கு தெரிஞ்சது, அவனை முதல் முறை நா உணர்ந்தேன் பா உருவமே இல்லாம " அதை சொல்லும் போதே அவளது முகம் மின்னியது.
" ஏன் அழகுற அம்மு, நீ பெரிய மனுஷி ஆகிட்ட, இனிமேல் மாசம் மாசம் இதே மாதிரி சூழலை நீ எதிர்கொள்ள வேண்டி வரும், மாசம் மாசம் இப்படி தான் அழுதுட்டு இருப்பியா? பொண்ணுங்குறவ சக்தி மொத்த ஆற்றலோட உருவம், அப்படியா பட்ட நீ அழலாமா? முதல்ல கண்ணை தொடை தைரியமா உட்கார், உன் பிரண்ட் யாராவது பெரிய மனுஷி இருக்காளா? நா அவனை பாத்துட்டே இருந்தேன், சொல்லு அம்முன்னு மறுபடியும் கேட்டான், நா ம்ம் சொன்னேன் அப்போ அவளை கூப்டுன்னு சொன்னான், கூப்பிட்டேன், நானும் பெரிய புள்ள ஆகிட்டேன் போல டி போய் மிஸ் கிட்ட சொல்லி கூப்டு வான்னு சொல்லி சொல்ல சொன்னான், அப்படியே சொன்னேன், அப்புறம் தான் உங்களுக்கு கால் பண்ணி சொன்னாங்க, நீயும் அம்மாவும் வந்தீங்க, அன்னைக்கு ஒரு வார்த்தை சொன்ன பா உனக்கு நினைவு இருக்கா? "
" என்ன டா? "
" பாத்தியா டி என் பொண்ண எல்லா புள்ளைங்களும் வலி தாங்க முடியாம அழுகும் ஆனா என் புள்ள எவ்ளோ தைரியமா இருக்கா பாருன்னு... "
" ம்ம்ம் " என்று ஆமோதிக்க,
" அந்த தைரியம் அவன் கொடுத்தது ப்பா "
கிருஷ்ணன் நிமிர்ந்து பார்த்தார்,
" ஆமா பா நீ சொன்னது பலகீனமா இருக்குற எனக்கு ஆறுதல் சொன்ன, ஆனா அவன் அத சமளிக்குற வழியை சொல்லி சக்தி கொடுத்தான். நீயே சொல்லு ப்பா அந்த நேரத்தில எனக்கு எது தேவை பா ஆறுதலா? இல்ல எதையும் சமளிக்குற சக்தியா? "
" எதையும் சமளிக்குற சக்தி தான் டா "
" அப்போ அத கொடுத்த அவன் உன்ன ஓவர் டேக் பண்ணிட்டான் தான பா? "
கிருஷ்ணன் மௌனம் காக்க,
" நீயே யோசிச்சு பாரு பா " என்று சொல்லிய அஞ்சலி அங்கிருந்து நகர்ந்து தனது அறைக்கு வந்தாள்.
கிருஷ்ணன் மனம் தனது மகள் சொல்லிய நிகழ்வை அசைப்போட ஆரம்பித்தார்......
மனம் கொடுத்த மன்னவன் வருவான்.......