• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Nov 16, 2024
Messages
42
ட்ரீட்மெண்ட் முடிந்து உடல் நலம் தேறி இருந்த மோகனின் உடலை மறுநாள் காலை வந்து செக் செய்து கொண்டிருந்தார் டாக்டர்.

" என்ன ப்பா தம்பி உடம்புக்கு இப்போ எப்படி இருக்கு? "

" அத நீங்க தான் டாக்டர் சொல்லணும், என்கிட்ட கேட்டா எனக்கு என்ன தெரியும்? "

" ம்ம் எத பத்தியும் யோசிக்காம குடிக்க தெரிஞ்சவனுக்கு இது தெரியாதா? "

" அய்யோ டாக்டர் நீங்களும் ஆரம்பிக்காதீங்க ஏற்கனவே ஓவர் அட்வைஸ் மழையா போய்ட்டு இருக்கு "

" என்ன ஒரே அட்வைஸ்சா போகுதா? "

" ம்ம் ஆமா டாக்டர் கடுப்பு அடிக்குது "

" ஏய் யாரப்பா அது டாக்டர் இருக்கும் போது அடுத்தவங்க அட்வைஸ் பண்றது. அப்புறம் டாக்டர்க்கு என்ன வேலை இருக்கு? "

" சரி விடுங்க, டாக்டர் எல்லாருமே அட்வைஸ் தான் பண்றாங்க நீங்களாவது அதை பண்ணாம இருங்களேன்... "

" அப்படியா சொல்ற சரி அதுவும் சரிதான் எல்லாரும் பண்றத நாமளும் எதுக்கு பண்ணனும்... " என்று சொல்லி பேச்சை நிறுத்திவிட்ட டாக்டர் அவரது வேலையை பார்க்க ஆரம்பித்தார்.

வேலையை பார்த்து கொண்டே இடையில் மோகனின் முகத்தை கவனிக்க அவனோ ஏதோ நீண்ட யோசனையில் இருப்பது அவரது கண்களுக்கு புலப்பட்டது.

" அப்பா மோகனு என்னப்பா ரொம்ப யோசனையா இருக்க? "

" ஆமா டாக்டர் "

" ஏதாவது சந்தேகமா கேளு டாக்டருங்க சொல்ல முடியாத தீர்வு கூட நாட்டில் இருக்கா என்ன? " என்றவர் கேட்க,

டக்கென மோகனின் மண்டையில் ஒரு மின்னல் வெட்டியது.

" கரெக்டா சொன்னீங்க கரெக்ட்டா உங்ககிட்ட கேட்டா சரியா இருக்கும்னு தான் நினைக்கிறேன் டாக்டர். "

" சரியா இருக்கும்ன்னு நினைச்சிட்ட இல்ல அப்புறம் கேக்காம எதுக்கு முழிச்சிகிட்டு இருக்க கேளு டக்குனு "

" இது கொஞ்சம் வேற மாதிரி நினைக்க வைக்க கூடிய மேட்டர் டாக்டர், அதான் அத கேட்டா நீங்க எப்படி எடுத்துப்பீங்கன்னு தெரியலையே... சும்மாவே நீங்க ரொம்ப பேசுறீங்க இதுல நான் சொல்ல போற விஷயம் வேற கேலியும் கிண்டலும் பண்ண கூடிய விஷயம், நீங்க அட்வைஸ் டாக்டரா இல்லாம கொஞ்சம் அலைப்பறை டாக்டரா இருக்கீங்க, உங்ககிட்ட அந்த குணம் வேற நிறைய உண்டு அதான் ஒரு சின்ன யோசனை... "

" கேலியும் கிண்டலும் பண்ண கூடிய விஷயமா? "

" ஏன்டா அப்பா நீ இன்னும் கல்யாணம் முடிக்கல அதுக்குள்ள என்னடா உனக்கு பயம்? "

" அட ச்ச டாக்டர் அது இல்ல டாக்டர்... "

" அது இல்லையா இப்ப நாட்டுல இருக்கிற உன்ன மாதிரி பசங்களுக்கு முக்கால்வாசி பேருக்கு இதுதான பிரச்சனை அதான் கேட்டேன் ஆனா நீ அதுவும் இல்லைங்கிற அப்போ இதைவிட கேலியும் கிண்டலும் பண்ண கூடிய சீரியஸான விஷயம் வேற என்ன இருக்கு? "

" நீங்க ரொம்ப எல்லாம் ஒன்னும் யோசிக்க வேண்டாம் டாக்டர் நானே நேரடியா விஷயத்தை சொல்றேன். "

" அட சொல்லித்தான் தொலையேண்டா ரொம்ப நேரமா பீடிகை போட்டு இழுத்துட்டு கிடக்க, எனக்குஇன்னும் கொஞ்சம் வியாபாரம் வேற பெண்டிங் கிடக்கு "

" வியாபாரம் பெண்டிங் கிடக்கா? என்ன டாக்டர் வரவர உங்க பேச்சை வித்தியாசமா இருக்கு? "

" அது எங்க அப்பா மளிகை கடை வைச்சிருந்தார் அந்த பழக்கம். அதை நீ கண்டுக்காத நீ சொல்ல வந்த விஷயத்தை சொல்லு "

" டாக்டர் கனவு வராத பத்தி என்ன நினைக்குறீங்க? "

" கனவு தூக்கத்துல வராத இல்ல கலாம் அய்யா சொன்ன மாதிரி தூங்க விடாம வருதா ப்பா? "

" டாக்டர் இது அந்த மாதிரி எல்லாம் வேற மாதிரி, எப்படி சொல்ல? " சிறிது நேரம் யோசிப்பது போல பார்க்க,

" யப்பா பார்த்தா எல்லாம் தெரியாது வாயை தொறந்து சொல்லு.. "

" உண்மையா நடக்கிறது கனவா வருமா?
கனவு மாதிரி இருக்கிற ஒரு விஷயம் நிஜமாகவும் நடக்குமா?
இப்படி எல்லாம் நடக்குதுன்னு யாராவது ஒருத்தங்க வந்து சொன்னா அதை நம்பலாமா?
நம்ப கூடாதா?
இதெல்லாம் நம்பாத டா, அப்படி எல்லாம் நடக்க சான்சே இல்லன்னு ஒரு மனசு சொல்லுது,
ஆனா சொன்னவன் நம்பக்கூடிய இடத்துல இருக்கக்கூடிய ஒருத்தன்.
இவனை நம்பாம வேற யாரை நம்ப அப்படின்னு சொல்லக்கூடிய நண்பன். இப்போ அத எப்படி உண்மை தான்னு முழுசா மனசை நம்ப வைக்க? இதுக்கு ஒரு வழி சொல்லுங்க டாக்டர் " என்று கடகடவென சொல்லி முடித்தான் மோகன்.

அவனை ஆழமாய் பார்த்தார் அந்த டாக்டர்

" என்ன டாக்டர் எவ்ளோ முக்கியமான சந்தேகம் கேட்டுட்டு இருக்கேன் நீங்க என்னடான்னா என் மூஞ்சிய பாத்துட்டு இருக்கீங்க... "

" இப்போ நீ ரொம்ப குழம்பி போய் இருக்கியா அதனால இப்ப உன்கிட்ட விஷயத்தை சொன்னா உனக்கு சரியா மண்டையில ஏறுமா ஏறாதன்னு யோசிச்சிட்டு இருக்கேன் வேற ஒன்னும் இல்ல. " என்று டாக்டர் சொல்ல,

மோகன் அவரையே தான் பார்த்து கொண்டிருந்தான்.

" அந்த நண்பனும் நீயும் இன்னைக்கு சாயங்காலம் என் வீட்டுக்கு வாங்க முடிவு என்னங்கிறது இன்னைக்கே உங்களுக்கு தெரிஞ்சிரும். "

" எப்படி டாக்டர் " ஆர்வமாக கேட்டான் மோகன்.

" முதல்ல வா ப்பா "

" சரி டாக்டர் கண்டிப்பா வாரோம் "


மனம் கொடுத்த மன்னவன் வருவான்......
 

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top