Member
- Joined
- Nov 16, 2024
- Messages
- 45
- Thread Author
- #1
வீராவிடம் பேசிய பின்பு ஓரளவு நிதானத்திற்கு வந்திருந்தாள் அஞ்சலி, இதற்கு முன்பு இருந்த அழுத்தமோ சோர்வோ குற்ற உணர்ச்சியோ இப்பொழுது அவளிடம் இல்லாமல் போயிருந்தது.
தனது அறையை விட்டு வெளியே வந்தாள்.
வீட்டில் இதற்கு முன்பு இருந்த கலகலப்பு இப்போது இல்லாமல் போயிருந்தது, யாரும் யாரிடம் பேசிக் கொண்டது போல் தெரியவில்லை வெளியே வந்த அஞ்சலியையும் யாரும் கண்டு கொள்ளவில்லை நேராக சமையலறைக்கு சென்றவள் ஒரு செம்பு தண்ணீரை எடுத்து குடித்துவிட்டு மீண்டும் தனது அறைக்குள் வந்து புகுந்து கொண்டாள்.
அவளது நினைவுகள் வீராவை சுற்றி வட்டம் அடிக்க ஆரம்பித்தது, அத்தனை மக்கள் கூடி இருந்த சபையில் எதைப்பற்றியும் யோசிக்காமல் அஞ்சலி ஓடிச்சென்று வீராவை கட்டிக் கொண்ட அந்த நிகழ்வை இன்னும் ஒரு முறை நினைத்து பார்த்தாள்,
தனக்குத்தானே சிரித்தும் கொண்டாள்.
" இது எப்படி சாத்தியம் நானா இப்படி செஞ்சேன் " அவளை அவளே இன்னொரு முறை கேட்டுக் கொண்டாள்.
" ஆம் நிச்சயமாக அதை செய்தது நாம் தான் நம்மை செய்ய வைத்தது அவனின் மீதான காதல், அவனைப் பார்த்த நொடியில் தான் அந்த காதலையே நாம் உணர்ந்திருக்கிறோம், அந்த உணர்வின் உச்சமே நம் செயல் என்று உறுதியோடு சொன்ன மனம், எத்தனை எத்தனை நிகழ்வுகள் அவனோடு நம் நினைவுகளில்.... " என்று நினைக்கவும் வைத்தது அவ்வாறு நினைக்கும் போதே அவளது கண்கள் கலங்கியது,
" இத்தனை காதல் இத்தனை உணர்வுகள் அவன் மீது இருந்தும் எப்படி திருமணத்திற்கு சம்மதித்தோம்? "
இப்போதுதான் அந்த யோசனை அவளுக்கு வந்தது.
யோசனை வந்த கணமே அவளது நினைவுகள் சற்று பின்னோக்கி ஓடியது, அவன் நிஜமாய் வந்து விட மாட்டானா என்று எண்ணி தவித்த அந்த நாட்களை நோக்கி.
பாவம் அவளும் வீராவை எங்கெல்லாம் தேடி இருப்பாள் அவனது சாயலில் யாராவது தெரிந்தால் கூட உடனே மனமானது,
" இது அவனாகத்தான் இருக்குமோ? என்று கிளப்பி விடும், அந்த எண்ணம் கிளம்பிய நிமிடம்,
அவனிடம் சென்று பேசி விடலாமா? என்ற உந்துதலை கொடுத்து,
பேசினால் அவன் என்ன நினைப்பான்? என்ற சிந்தனையையும் கொடுக்கும், பின்,
ஒருவேளை அது அவன் இல்லை என்றால்? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும், அத்தோடு விடுமா?
நாம் அவன் என்று நினைத்து பேசிய பின்பு, அது அவன் அல்லாமல் போக, அவன் தான் என்று எண்ணி நாம் பேசிய இவன் நம்மை தொந்தரவு செய்ய நேர்ந்தால்? என்று பயத்தையும் உள்ளுக்குள்ள பரப்பி விடும். " இப்படியாக எத்தனை எத்தனை யோசனை அவளிடம் வந்து சென்றிருக்கிறது.
அவனது உருவத்தை ஓரளவுக்கு அவளுக்கு அறியும். அறிந்த பின்னும் அவன் எங்கிருக்கிறான் என்று தெரியாமலே, தனக்கு முன்னால், பின்னால், சைடில் என்று தன்னை கடந்து போகும் ஒவ்வொரு ஆண்களையும் பார்த்து, பார்த்து கடப்பாள். அப்படி அவள் பார்ப்பதை அவள் தோழி பெண்களும் பார்த்து விடுவதும் உண்டு, அப்படி பார்த்தவர்கள் சும்மாவா இருப்பார்கள்? அவர்களின் கேலி கிண்டலுக்கு ஆளாகி தன் மீதான மதிப்பு மற்றவர்கள் மத்தியில் குறைந்த போதும் அதையும் கண்டு கொள்ளாமல் அவனை அவள் எத்தனை முறை தேடி இருப்பாள்? கணக்கில்லையே.
அது அவன் தான், அவனே தான் என நினைத்து அருகில் துள்ளளோடு சென்று, சென்ற பின்பு அது வேறு ஒருவராக தெரியும் போது அவள் எத்தனை, எத்தனை வேதனை அடைந்து இருப்பாள். அன்று அவள் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் இன்று அவனை கண்ணில் கண்ட பின்பு வரும் இந்த கண்ணீரோடு கரைந்து போய் இருந்தது...
இத்தனை நினைவுகளை கடந்து எப்படி கல்யாணம் பற்றி யோசித்தோம் மீண்டும் அவளிடம் பழைய கேள்வி தலை தூக்கியது,
அதற்கு விடை காணும் நோக்கொடு மீண்டும் நினைவுகளில்,
" நம் நினைவலைகளில் நம்மோடு கலந்துவிட்ட ஒருவன் உருவமாக நிஜத்தில் இருக்கிறான் என்பதை நாம் உறுதியாக அறிந்திருக்கவில்லையே, ஒருவேளை அவன் இருக்கிறான் என்பதை உறுதியாக அறிந்திருந்தால் நிச்சயம் இந்த திருமணத்திற்கு சம்மதம் சொல்லி இருக்க மாட்டோம் தானே..., " கேள்வியோடு நிறுத்தினால் அது தான் விடையும் என்று அறிந்து.
அடுத்த காரணம்,
" நமக்கும் வயது 25 முடிந்து 26 தொட்டு விட்டதே, பெண் பிள்ளையை எத்தனை நாள் வீட்டில் வைத்திருப்பீர்கள் என்று அக்கம்பக்கத்தினர் அன்னை தந்தையிடம் பேசிய பேச்சும், திருமணத்திற்கு பிடி கொடுக்காத நம் போக்கும், அதனால் அன்னை தந்தை அடைந்த வேதனையும் நிஜமாக நம் கண்ணுக்கு முன்னால் தெரிந்ததே... "
" நிஜமான வேதனையை கண்ணுக்கு முன்னால் வைத்துவிட்டு நிழலாக தெரிபவனை வாழ்க்கையாய் கருதி தேடித் தேடி அலைகிறேன் என்று சொன்னால் பெற்றோர் எத்தனை துயரம் அடைவார்கள்...
நிஜமாய் காட்டி இவன் தான் என்னவன் இவன் தான் எனக்கு வேண்டும் சொல்வதில் கூட நியாயம் இருக்கிறது, யாரென்று விளக்கி சொல்ல முடியாத என்னவனை பற்றி என்னாலும் எப்படி சொல்ல முடியும்? " இந்த எண்ணம் தானே நம்மை நம் பெற்றோரிடமும் பேச விடாமல் தடுத்து விட்டது, அவனை கொஞ்சம் முன் அறிந்திருந்தால் நிச்சயம் பெற்றோரிடம் பேசி அவனையே தேடி திருமணம் செய்து இருப்பேனே அதை அறிய தாமதமானதால் தானே இன்று இத்தனை துயரமும்.. "
இன்று இத்தனை துயரம் என்றதுமே அவளின் மனதில் மோகனின் நிலை அலையாடியது.......
மனம் கொடுத்த மன்னவன் வருவான்......