• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Feb 6, 2025
Messages
36
அத்தியாயம் - 14

கீழே விழுந்த புகைப்படங்களை மகதி கையில் எடுக்க,"என்னை விடுங்க, நான் அம்மாகிட்ட போகணும்"என்று சிறுவன் கதறினான்.

"அருண்... ஏய் என் பேரனை விடுடி கொலைகார பாவி"என்ற ராஜன் கையில் இருந்த தடியைக்கொண்டு ரம்யாவை அடிக்கப் போக, அவளோ ஆத்திரத்துடன் ராஜனை கீழே தள்ளிவிட்டாள்.

"ஐயோ..." என்று ராஜன் வலியால் அலறியதும்,"பொண்ணா நீ?" என்று கோவத்தில் மகதி ரம்யாவின் கன்னத்தில் அறைந்திருந்தாள்.

"என் மேலையா கை வச்ச!" என்ற ரம்யா, பதிலுக்கு மகதியை அடிக்கக் கை ஒங்க,

"ரம்மு... இந்தப் பொண்ணு தான் அருணுக்கு ரத்தம் கொடுத்தது" என்று ரம்யா வந்த காரின் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து இருக்கும் நடுத்தர வயதுடைய ஆடவன் ஒருவன் ரம்யாவிடம் கூறினான்.

"ஓ! இவ தானா அந்தத் தங்க முட்டையிடும் வாத்து..."என்று விஷமமாகச் சிரித்த ரம்யாவோ,
தன் அருகே இருந்த காவலரிடம் கண் அசைக்க, அவனோ கண் இமைக்கும் வேகத்தில் மகதியை காரில் இழுத்து வீசினான்.

"ஏய் விடுங்க என்னை" என்று மகதி கத்தியதும், "அம்மா... அம்மா என்னாச்சு உங்களுக்கு?"என்ற சிறுவன் பயத்தில் அலறினான்.

"சரண் வண்டியை எடு" என்று ரம்யா கட்டளையிட,"ஏய் கொலைகாரி என் பேரனையும் என் மருமகளையும் விடுடி பாவி" என்று கதறிய ராஜனின் குரல் காற்றோடு கரைந்து போக, கார் புழுதியை கிளப்பிக்கொண்டு அந்தத் தெருவிலிருந்து மறைந்து இருந்தது.

கண் இமைக்கும் நொடியில் தன் பேரனைத் தொலைத்து இருந்த ராஜன், சற்றும் தாமதிக்காமல் தன் மகன் வர்மனின் கைபேசிக்கு அழைக்க,
வர்மன் விமான நிலையத்தினுள் காத்து இருப்பு இருக்கையில் அமர்ந்து
இருந்தான்.

"வர்மா... இன்னும் பத்து நிமிஷத்துல போடிங் ஓபன் ஆகிடும்" என்று மாயன் சொல்ல, மீண்டும் ராஜனிடமிருந்து வர்மனுக்கு அழைப்பு வந்தது.

"வர்மா போன் ரிங் ஆகுது பாரு" என்று மாயன் சொல்ல,
"ப்ச் என் காதுல கேக்கவே இல்லடா" என்ற வர்மன்,
"ஹலோ அப்பா..." என்று தன் கைபேசியை உயிர்ப்பித்து பதில் அளித்தான்.

"வர்மா... வர்மா நம்ம அருணை...நம்ம அருணையும் மகதியையும்"என்று பதற்றத்தில் ராஜனின் வாயில் இருந்து வார்த்தை வராமல் தர்க்கம் செய்தது.

"அப்பா என்னாச்சு!? ஏன் பதட்டமா பேசுறீங்க, என்னப்பா ஆச்சு" என்று தன் தந்தையின் குரலைகேட்டு இடம் மறந்து பதறினான் வர்மன்.

"என்ன வர்மா யாருக்கு என்னாச்சு?" என்ற மாயன் கைபேசியை தன் வசம் வாங்கியவன்,
"சார் அருணுக்கு எதாவது பிரச்சனையா?" என்று சரியாகக் கேட்டான்.

மாயனின் கேள்வியில்"நம்ம அருணை அந்த ரம்யா வந்து தூக்கிட்டு போயிட்டா மாயா" என்று கதறி அழுதார் ராஜன்.

"என்ன? ரம்யாவா?" என்ற மாயனின் கண்கள் அதிர்ச்சியில் உறைந்து போக, "மாயா... நீங்கச் சீக்கிரமா வாங்க மாயா, என் பேரனை அவ தூக்கிட்டு போயிட்டா, வர்மா... வர்மாவை அழைச்சிட்டு சீக்கிரம் வா மாயா" என்ற ராஜனின் வார்த்தை முடியும் முன்னே, மாயனும் வர்மனும் விமான நிலையத்திலிருந்து மாயனின் காரில் வர்மனின் வீட்டை நோக்கி விரைந்து இருந்தார்கள்.

இதே தருணம் காவலர் ஒருவரின் உதவியோடு, ரம்யா அருணை காரில் வலுகட்டாயமாகக் கடத்தி செல்ல,
தன் அருகே அமர்ந்து இருந்த ரம்யாவை,
"ஏய் எங்கள விடு" என்று அடித்துக்கொண்டு இருந்தாள் மகதி.

"அம்மா... அம்மா யாரு இவங்கயெல்லாம்?" என்று அருண் ஒரு பக்கம் அலற,
"அருண்! நீ பயப்புடாத. இவளைக் கொன்னாவது அம்மா உன்னைக் காப்பாத்துறேன்" என்ற மகதி, இந்த முறை ரம்யாவின் கையை அழுத்தமாகக் கடித்து இருந்தாள்.

மகதி தன்னை கடித்ததும்,"ஆ..." என்று வலியால் கத்திய ரம்யா,
காரினுள் இருந்த கனமான பொருளைக்கொண்டு மகதியின் தலையில் ஓங்கி அடிக்க,"அப்பா..." என்று அலறிய மகதி அப்படியே இருக்கையில் மயங்கிச் சரிந்தாள்.

இதுநாள் வரை மகதியை அம்மா என்று அழைத்த சிறுவனுக்கு இன்று வேறொருவள் 'நான் தான் அருணின் அம்மா' என்று அறிமுகமாகி இருக்க,
சிறுவனுக்கோ தலை பகுதியில் அறுவை சிகிச்சை செய்த இடத்தில் ரத்தம் கசிந்துகொண்டு இருந்தது.

"சரண்... அந்தக் கிஷோருக்கு போன் பண்ணு, இந்த வாண்டுக்கூட இதோ இவளையும் டீல் பேசிக் கப்பல்ல ஏத்த சொல்லிடு" என்று ரம்யா காரின் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்த சரணிடம் கட்டளையிட்டாள்.

சரண் தன் அலைபேசியிலிருந்து கிஷோர் என்ற நபரை அழைக்க, எதிர்முனையிலிருந்து எந்த ஒரு பதிலும் வராமல் போனது.

"ரம்மி... அந்தக் கிஷோர் போனை எடுக்கல, இப்போ என்ன பண்ணுறது?"என்று சரண் கேட்க, ரம்யா ஒரு நொடி யோசித்தாள்.

"சரண்...நீ நேரா ரிசார்ட்க்கே போய்டு" என்று ரம்யா சொன்னதும், சரண் கே.கே. ரிசார்ட்டுக்கு காரை விரட்டினான்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் மாயனும் வர்மனும் தங்கள் வீட்டுக்குள் நுழைய, அங்கே ராஜன் கண்களில் கண்ணீருடன் அமர்ந்து இருந்தார்.

"அப்பா..." என்ற வர்மனின் குரலில் ராஜன் தன் மகனைக் கட்டி அணைத்து அழத் தொடங்கியவர்,

"வர்மா... வர்மா நம்ம அருணை ரம்யா தூக்கிட்டு போயிட்டா வர்மா. அருண் கூடவே மகதி! மகதியையும் காருல வளச்சுகிட்டு போயிட்டா வர்மா" என்று கதறி அழுதார் ராஜன்.

"என்ன அப்பா சொல்றிங்க ரம்யாவா!? ஆனா அவ! அவ இப்போ மலேசியால இருக்கான்னு தானே கேள்வி பட்டேன்" என்று வர்மன் சொல்ல,

"ஐயோ இல்ல வர்மா... அந்தப் பொண்ணு தான் அவளை ரம்யான்னு சொன்னாள்" என்ற ராஜன், நெஞ்சில் கை வைத்துக்கொண்டு அழுது புலம்பினார்.

"வர்மா...நம்ம சிசிடிவியை செக் பண்ணலாம்" என்ற மாயன் சற்று தாமதிக்காமல் அங்கிருந்த லேப்டாப்பில் சற்று முன் நடந்த நிகழ்வுகளைப் பார்க்க, "ஆமா வர்மா... ரம்யா தான்" என்றான் மாயன்.

"இங்க வாட்ச் மேன் இருந்தும் இவ எப்படி உள்ள வந்தா?" என்ற வர்மனின் முகம் கோவத்தில் சிவந்து இருக்க,

"அந்தப் பொண்ணுக்கூட போலீஸ் வந்ததும் எங்களுக்கு ஒண்ணுமே புரியல வர்மா...ஐயோ என் பேரனை அவ என்ன பண்ண போறாளோ!?" என்று ராஜன் புலம்பினார்.

சிசிடிவி வீடியோவில் ரம்யா என்ற பெண்மணியைப் பார்த்த வர்மனுக்கு சொல்ல முடியாத அளவுக்குக் கோவம் எழுந்த நிலையில், சற்றும் தாமதிக்காமல் வர்மன் அவனின் நம்பிக்கைக்குறிய காவல்துறை அதிகாரி சைத்ராவை கைபேசி வாயிலாக அழைத்தான்.

சைத்ராவை வர்மன் தனக்கு உதவுமாறு கேட்டுக்கொண்ட அடிப்படையில், அடுத்த சில நிமிடங்களில் கமிஷனர் சைத்ரா வர்மனின் வீட்டுக்கு வருகை தந்து இருந்தார்.

"என்னாச்சு வர்மா! அருணை பற்றி ரம்யாவுக்கு எப்படி தெரியும்?" என்று விசாரித்த சைத்ராவிற்கு, வர்மனின் வாழ்க்கையில் புதைந்து இருக்கும் எல்லா ரகசியமும் தெரிந்து தான் இருந்தது.

"எனக்கு ஒண்ணுமே புரியல சைத்ரா. அருணை மட்டுமில்லாமல், மாயன் சிஸ்டர் மகதியையும் அவ வலுகட்டாயமாக இழுத்துட்டு போய் இருக்கிறாள்" என்று வர்மன் சொன்னதும், CCTV கேமராவில் பதிவாகி இருந்த வீடியோவை உற்று கவனித்தாள் சைத்ரா.

ராஜன் தன் பேரனை நினைத்துக் கண்கள் கலங்க, வர்மன் தன் தந்தைக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் தவித்து இருந்தான்.

சூழ்நிலையைப் புரிந்து இருந்த சைத்ரா, தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி சில தகவல்களைச் சேகரிக்க,

"வர்மா... ரம்யா கூட உங்க வீட்டுக்கு வந்த போலீஸ்க்காரன் சஸ்பென்ஷன்ல இருக்குற ஆளு" என்று சைத்ரா சொன்னதும், ராஜன் மேலும் பயந்து போனார்.

"என்ன சொல்லுறிங்க சைத்ரா!?அப்போ ரம்யா சட்டப்படி அருணை அழைச்சிட்டு போகலையா?" என்று வர்மன் கேட்க,

"மலேசியாவில் ரம்யா மேல நிறைய கேஸ் இருக்கு வர்மா. அவ எப்படி இந்தியா வந்தானே எனக்குச் சந்தேகமா இருக்கு" என்ற சைத்ரா மீண்டும் தன் அலைபேசியில் சிலரை தொடர்புக் கொண்டாள்.

சிறுவனுக்கும் மகதிக்கும் என்னானது என்று அனைவரும் தவித்துப் போக,"வர்மா...ரம்யா வந்த கார் நம்பரை வச்சி சில டிட்டியல்ஸ் கிடைத்து இருக்கு. நீங்கக் கவலைப்படாதீங்க.

மறுபடியும் நானே அந்த ரம்யா கதையை முடிச்சு வைக்கிறேன்" என்ற சைத்ராவிற்கு ரம்யாவை பற்றிய எல்லா உண்மையும் தெரிந்து இருந்தது.

"சைத்ரா... நானும் உங்ககூட வரேன்.
அருண் ரொம்பவே பயந்து இருப்பான். அதுவும் இல்லாம மகதிக்கு எதாவதுனா அவங்க அப்பா உயிரோடவே இருக்க மாட்டாரு" என்ற வர்மன் வேகமாகத் தன் அறைக்குச் சென்றவன், அவனுடைய லைசென்ஸ் இருக்கும் துப்பாக்கியைத் தன்னுடன் எடுத்துக் கொண்டான்.

"வர்மா... நானும் வரேன் டா" என்ற மாயனும் இவர்களுடன் செல்ல முடிவு செய்ய. ராஜனுக்கு தைரியம் சொன்னபிறகு, கமிஷனர் சைத்ராவுடன் வர்மனும் மாயனும் மகதி அருணை தேடி விரைந்தார்கள்.

இதே சமயம் மயக்கத்தில் இருந்த மகதி கண்கள் விழித்துப் பார்க்க, அவள் ஒரு அறையில் இருப்பதை உணர்ந்தவளின் எதிரே ரம்யா அலைபேசியில் யாரிடமோ காரசாரமாகப் பேசிக்கொண்டு இருந்தாள்.

மயங்கிய விழிகளால் மகதி அருணை தேடி அலைய, "அப்பா...அப்பா" என்று பக்கத்து அறையிலிருந்து அருண் அழும் சத்தம் மகதியின் செவியில் ஒலித்தது.

சிறுவனின் அழகுரலை கேட்டு,"அருண்..." என்று அவனை அழைத்தபடி இந்த அறையிலிருந்து பக்கத்து அறைக்கு மகதி ஓட, அவளைக் கோவமாகப் பின் தொடர்ந்தாள் ரம்யா.

"அருண்..." என்ற அழைப்போடு மகதி சிறுவனைக் கட்டிக்கொள்ள,
"அம்மா... அம்மா நம்ம எங்க இருக்கோம்? எனக்கு இங்க இருக்க பயமா இருக்கு. அப்பா...அப்பா எங்க அம்மா?" என்று பதறிய சிறுவனை ஆறுதலாகக் கட்டிக்கொண்டாள் மகதி.

அருண் மகதியின் பாசபிணைப்பை பார்த்து,"அட!அடடா...இந்தப் பொடியணை பெற்ற எனக்குக்கூட இந்தப் பாசம் இல்லையே!" என்று உச்சு கொட்டும் ரம்யாவை அருவருப்பாகப் பார்த்தாள் மகதி.

"என்னடி அப்படி பாக்குற!? ஆமா நீ தான் வர்மனை கல்யாணம் பண்ணி இருக்கியா? ஆனா அந்தக் கிழவன் என்னவோ என் ரெண்டு பசங்களுக்கு நான் கல்யாணமே பண்ணி வைக்க மாட்டேன்னு! அந்தக் கதை பேசினான். இப்போ உன்னை மட்டும் எப்படி அருள் மொழி வர்மனுக்கு கல்யாணம் பண்ணி வச்சான்?" என்று திமிராகக் கேட்டாள் ரம்யா.

"ஏய்... மாமாவை மரியாதையா பேசு" என்று மகதி ரம்யாவை கண்டிக்க, "அந்தக் கிழவனுக்கு ஏன் நான் மரியாதை தரணும்!?" என்ற ரம்யாவின் கைபேசிக்கு கிஷோர் என்கிற நபரிடமிருந்து அழைப்பு வந்தது.

 
Joined
Feb 6, 2025
Messages
36

"ஹலோ கிஷோர்... நீ கேட்ட பொருள் ஒண்ணுக்கு ரெண்டா ரெடியா இருக்கு" என்ற ரம்யாவின் பார்வை மகதி மற்றும் அருணின் மீது படிய, ரம்யாவின் செயல்களைப் பார்த்து மகதி மேலும் குழம்பி போனாள்.

"என்ன சொல்லுற! ரெண்டு பொருளா!?" என்று எதிர்முனையில் பேசும் கிஷோர் கேட்க, "ஆமா...RH. null ரத்தம் இருக்குற இன்னோர் ஆள்க்கூட என்கிட்ட இருக்கு" என்று ரம்யா சொன்னாள்.

"அப்போ இனி நமக்கு நல்ல காலம் தான். சரி இன்னும் ஒரு மணி நேரத்துல நானே நேரா வந்து அவங்க ரெண்டு பேரையும் என் இடத்துக்கு தூக்கிட்டு போறேன். நீ லொகேஷனை எனக்கு அனுப்பி விடு" என்ற கிஷோர் கைபேசி இணைப்பைத் துண்டித்தான்.

கிஷோரிடம் பேசிய ரம்யா சிறு புன்னகையுடன், "ஏய் சரண்... இந்த ரிசார்ட் லொகேஷனை கிஷோர்க்கு சென்ட் பண்ணி விடு" என்று சொல்ல,
"ஓகே டார்லிங்..." என்ற சரணும் ரம்யா சொன்ன வேலையைச் செய்து முடித்தான்.

"இவனுக்கு ஒரு பத்து கோடி. உனக்கு ஒரு இருபது கோடி. மொத்தம் முப்பது கோடி பணம்" என்று சம்மந்தமே இல்லாமல் மகதியிடம் சொன்ன ரம்யா,சந்தோஷத்தில் துள்ளி குதிக்க, ரம்யாவின் செய்கையில் கோவம் கொண்டாள் மகதி.

"ஏய்... எங்களை ஏன் இங்க அடைச்சு வச்சி இருக்க? அருணுக்கு மருந்து கொடுக்கணும். அவன் வலி தாங்கமாட்டான்" என்ற மகதி சிறுவனைத் தன்னோடு அனைத்துக்கொண்டே கேட்க,
மகதியை பார்த்து ஏளனமாகச் சிரித்தாள் ரம்யா.

மகதியை முறைத்துக்கொண்டே ரம்யா தன் பேண்ட் பாக்கெட்டிலிருந்து சிகெரட்டை எடுத்து வாயில் வைத்துப் புகைக்க, அவளைப் பார்த்த மகதிக்கு மேலும் கோவம் அதிகரித்தது.

புகையிலையின் வாடையில் அருணுக்கு இருமல் ஏற்பட,"ஏய்...குழந்தைகள் அருகே சிகெரட் பிடிக்கக் கூடாதுனு உனக்குத் தெரியாதா!?" என்று மகதி கேட்க, இந்த முறை சிகெரட்டை உள் இழுத்து அதன் புகையை சிறுவனின் முகத்தில் ஊதினாள் ரம்யா.

ரம்யாவின் கேவலமான செயலைப் பார்த்து மகதி சிறுவனின் நாசியை தன் கரம் க்கொண்டு மூடிக்கொள்ள, "இந்தப் பொடியன் செத்து போயிட்டான்னு நினைச்சேன். ஆனா இவனை உயிரோட மறைச்சு வச்சி அந்த வர்மா என்னை நல்லா ஏமாத்தி இருக்கான்" என்ற ரம்யாவின் பார்வை அருணின் மீது அழுத்தமாகப் பதிந்தது.

"இங்க பாருங்க... உங்களுக்கும் வர்மனுக்கும் என்ன பிரச்சனைன்னு எனக்குத் தெரியாது.

ஆனா அருண் பாவம்.
குழந்தைக்காகவாது உங்களுடைய சண்டை சச்சரவை எல்லாம் ஏறக்கட்டிட்டு நீங்களும் வர்மனும் ஒன்னா சேர்ந்து வாழுங்கள்" என்று மகதி சொன்னதும், ரம்யாவின் புருவம் இடுங்கியது.

"என்ன! நானும் வர்மனும் ஒன்னா சேர்ந்து வாழனுமா?" என்று ரம்யா கேட்க,

"ஆமா! புருஷன் பொண்டாட்டி சண்டைல எதுக்காக உங்களுக்குப் பிறந்த குழந்தையின் வாழ்க்கையை அழிக்கிறீங்க?" என்ற மகதியின் வார்த்தையைக் கேட்டு ரம்யாவின் முகம் மேலும் கேள்வியாக மாறியது.

"ஏய்...நீ என்ன பைத்தியக்காரியா? வர்மனுக்கும் எனக்கும் பிறந்த குழந்தை தான் அருணுன்னு உனக்கு யார் சொன்னது?" என்று ரம்யா கேட்க,

"அப்போ வர்மனோட பொஞ்சாதி நீங்க இல்லையா?" என்று புரியாமல் கேட்டாள் மகதி.

"நான் வர்மனுடைய பொண்டாட்டி தான். ஆனா நீ நினைக்கிற மாதிரி நான் அருள்மொழி வர்மன்னோட பொண்டாட்டி இல்ல. நான் மயில் வர்மனோட பொண்டாட்டி" என்ற ரம்யாவின் வார்த்தையைக் கேட்டு மகதியின் மேலும் குழப்பத்திற்கு ஆளாகினாள்.

"என்ன அருண்மொழி வர்மனா? அவரு யாரு?"என்று மகதி கேட்க, அதேசமயம் இவர்கள் இருக்கும் அறையின் கதவை எட்டி உதைத்து கொண்டு சைத்ரா உள்ளே நுழைந்தாள்.

சைத்ராவை பார்த்த ரம்யா பேய் அறைந்ததைப் போல நின்றிருக்க. சைத்ராவின் பின்னே மாயனும் வர்மனும் உள்ளே நுழைந்தவர்கள், ரம்யாவை கொலை வெறியோடு நெருங்கினார்கள்.

வர்ம்னையும் சைத்ராவையும் அந்த இடத்தில் எதிர்பார்க்காத ரம்யா, சற்றும் தாமதிக்காமல் தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து அருகில் இருக்கும் சிறுவன் அருணின் நெற்றியில் வைத்தாள்.

"ஏய் யாரும் என்கிட்ட வராதீங்க.மீறி என்னை நெருங்கினீங்க! நீங்க எல்லாம் இத்தனை வருஷம் இந்தக் குழந்தை இறந்ததாகச் சொன்ன பொய்யை நான் உண்மையாக்கிடுவேன்" என்ற ரம்யாவின் முகத்தில் அப்படியொரு அறக்கத்தனம் தெரிந்தது.

"பெத்த குழந்தை நெத்தியில துப்பாக்கியை வைக்கிறியே நீ எல்லாம் ஒரு பொண்ணா!" என்று வர்மன் கேட்க,

"ஹ்ம்...அவ பெத்த குழந்தையைத் திரும்பிக் கூடப் பார்க்காம ஹாஸ்பிடல்ல அனாதையா போட்டுட்டு போன ஜென்மம் தானே இவள்" என்ற கமிஷனர் சைத்ராவிற்கு ரம்யாவை பற்றி ஆதியிலிருந்து அந்தம் வரை தெரிந்திருந்தது.

"ரம்யா...உனக்கு எவ்வளவு பணம் வேணும்னாலும் தரேன். என் குழந்தையை என்கிட்ட கொடுத்துடு"என்று வர்மன் பதற,

வர்மனின் குரலைக் கேட்டு,
"அப்பா அப்பா... "என்று சிறுவன் அருண் வர்மனை அழைக்க,
"அருண் நீ பயப்படாதே! அப்பா உன் கூடத் தான் இருக்கேன்" என்று தைரியம் சொன்னான் வர்மன்.

"என்ன அப்பாவா!? யார் குழந்தைக்கு யாருடா அப்பா? இவன் என் குழந்தை. எனக்கும் வர்மனுக்கும் பிறந்த குழந்தை. இவன் இனி எனக்குதான் சொந்தம். இத்தனை வருஷமா இந்தக் குழந்தை செத்ததா சொல்லி நீ ஆடுன நாடகத்துக்கு உனக்கு நான் சரியான தண்டனை கொடுக்கப் போறேன் வர்மா" என்ற ரம்யா, மேலும் தன் துப்பாக்கியை அருணின் நெற்றியில் அழுத்திப் பிடித்தாள்.

"போதும் நிறுத்துடி. முதல்ல குழந்தை மேல இருந்து துப்பாக்கியை எடு" என்று சைத்ரா எச்சரிக்க,

"ஏய்...ஆரம்பத்திலிருந்து நீ என் விஷயத்துல ரொம்ப தலையிடுற சைத்ரா.ஒழுங்கு மரியாதையா இங்கே இருந்து போயிடு. இல்ல உங்களுடைய ஆட்டத்திற்கெல்லாம் முடிவுக்கற்ற வகையில் இதோ இந்தக் குழந்தையைப் போட்டுத் தள்ளிடுவேன்" என்ற ரம்யாவின் நடவடிக்கையில் பெண்மைக்கு உண்டான கடுகு அளவு மென்மை கூட இல்லாமல் இருந்தது.

"ரம்யா மறுபடியும் மறுபடியும் தப்புக்கு மேல தப்பு பண்ணாத. ஒழுங்கா குழந்தையை எங்ககிட்ட கொடுத்துடு. நான் வேணா வர்மன் கிட்ட சொல்லி உனக்கு எவ்வளவு பணம் வேணுமோ! கொடுக்கச் சொல்றேன்" என்று மாயன் செல்ல, அந்த இடமே அதிரும்படி சத்தமாகச் சிரித்தாள் ரம்யா.

ரம்யாவின் கைப்பிடியில் சிக்கி இருக்கும் அருண், "அம்மா..." என்று அழுது கொண்டே இருக்க,

"என்ன!? நீங்க எனக்குப் பணம் கொடுப்பீங்களா!
என்ன ஒரு கோடி கொடுப்பீங்களா!?
இல்ல ரெண்டு கோடி கொடுப்பீங்களா!? ஆனா இப்போ நான் 30 கோடிக்குச் சொந்தக்காரி" என்ற ரம்யாவின் பார்வை அருண் மற்றும் மகதியின் மீது அழுத்தமாகப் பதிந்தது.

"என்ன 30 கோடியா!" என்று சைத்ரா புரியாமல் கேட்க,

"ஆமா...இதோ இங்க நிக்கிறாங்களே இவங்க ரெண்டு பேர், இவங்களுடைய பிளட் குரூப் அரிய வகையான ரத்த பிரிவு. இவங்க உடல் உறுப்புகளைக் கொடுக்க வேண்டிய இடத்துல கொடுத்தா கிட்டதட்ட 30கோடி பணம் கிடைக்கும்" என்ற ரம்யாவின் வார்த்தையை வைத்து இவள் மீண்டும் பணத்திற்காகத் தான் வந்து இருக்கின்றாள் என்பதை உணர்ந்து கொண்டான் வர்மன்.

"என்ன வர்மா அப்படி பார்க்கிற!?நீ கூட என் குழந்தை இறந்துட்டதா சொன்ன பொய்யை நான் உண்மைன்னு நம்பினேன்.

ஆனா ரெண்டு வாரத்துக்கு முன்னாடி உன்னைப் பற்றிய செய்தியை மீடியால பார்த்தேன்.

அப்போ உனக்கு எட்டு வயசுல ஒரு குழந்தை இருக்கிறதாவும், அந்தக் குழந்தைக்கு RH-null ரத்தம் வேணும்னு, நீ சண்டை போட்டுப் பிரிஞ்ச உன் மனைவி திரும்ப வந்ததாகவும் எழுதியிருந்தது.

எனக்குத் தெரிஞ்சு உனக்குத் தான் கல்யாணமே ஆகலையே! அப்போ இந்த எட்டு வயசு குழந்தை என்னோட குழந்தையா தான் இருக்கும்னு நான் நினைக்கும்பொழுது தான் என்னுடைய டார்லிங் சரண் இந்த RH- null வகை ரத்தத்துக்கு உண்டான டிமாண்ட் பற்றிச் சொன்னான்.

சரண் சொன்னதும் தான் நாங்க பிளான் பண்ணி நீ ஊர்ல இல்லாத சமயமா பார்த்து என் பையணை தூக்கலாமுன்னு உன் வீட்டுக்குள்ள நுழைஞ்சேன்.

ஆனா பாரு, இந்த இலவச இணைப்பு மாதிரி, இதோ இந்தப் பொண்ணும் எனக்கு ஃப்ரீயா கிடைச்சுட்டாள்.

ஆமா! இந்தப் பொண்ணு யாரு வர்மா!?
இவள நீ கல்யாணம் பண்ணிக்கிட்டியா?" என்ற ரம்யா, திமிராக மகதியை பார்த்தாள்.

"சைத்ரா மேடம்...இனி இவகிட்ட பேசிப் பிரயோஜனம் இல்லை.இவ கன்னத்துல நாலு காட்டுகாட்டி குழந்தையைக் காப்பாத்துங்க" என்று மாயன் சொல்ல,
அருணின் நெற்றியில் துப்பாக்கியை அழுத்திப் பிடித்து இருந்த ரம்யாவின் கையை மகதி சட்டென்று தட்டி விட்டாள்.

மகதியின் செயலில் ரம்யாவின் கையில் இருந்த துப்பாக்கி கீழே விழ,
சட்டென்று மகதி சிறுவன் அருணை தன்னோடு அனைத்துக் கொண்டாள்.

துப்பாக்கி கீழே விழுந்ததும், சைத்ரா ரம்யாவின் கன்னத்தில் ஓங்கி ஒரு அரை விட, அதே தருணம் இவர்கள் பின்னிருந்து உள்ளே நுழைந்த சரண் கீழே விழுந்த துப்பாக்கியை எடுத்துச் சைத்ராவை குறி வைத்தவனின் பார்வை தப்பி வர்மனின் வலது தோள்பட்டையை குண்டு தொலைதது.

குண்டடி பட்ட வர்மனை பார்த்து, "வர்மா..." என்று மகதி அலற,
"அம்மா... அம்மா அப்பாவுக்கு என்னாச்சு?" என்ற அருணை
ரம்யா எட்டி பிடிக்கப் போனவளின் காலைச் சைத்ரா குறி பார்த்துச் சுட்டதும், ரம்யா அதே இடத்தில் கீழே சரிந்து விழுந்தாள்.

குண்டடி பட்ட வர்மனுக்கு அதித ரத்தம் வெளியேற,"சரண்... அந்தக் குழந்தை இவங்களுக்கு கிடைக்க கூடாது, அந்தக் குழந்தையை மாடியிலிருந்து தூக்கி வீசு" என்ற ரம்யாவின் கொடூரமான பேச்சைக்கேட்டு சற்றும் தாமதிக்காமல் சரண் சிறுவனைத் தூக்கியவனை வர்மன் ஒரு கைகளால் தாக்கினான்.

இனி இங்கிருந்து தப்பிக்கவே முடியாது என்று எண்ணிய ரம்யா, அவள் அருகே இருந்த பூ ஜாடியை தூக்கி வர்மனை நோக்கி வீச,

அந்தப் பூ ஜாடி சிறுவனின் பின் தலையில் பட்டு,அருண் மயங்கிக் கீழே விழுந்தவனை பார்த்து"அருண்..."என்று அனைவரும் அலறிய நிலையில் சைத்ராவின் துப்பாக்கியில் இருந்து வெளிவந்த குண்டு ரம்யாவின் உடலில் இறங்கியது.





 
New member
Joined
Mar 12, 2025
Messages
18
அடடா வர்மனுக்கு அண்ணன் இருக்கானா. இந்த ட்விஸ்ட் நான் எதிர்பார்க்கவே இல்லை கதை நகர்வு மிக மிக அருமையாக இருக்கு சூப்பர் சூப்பர் யாருக்கும் எதுவும் ஆகக்கூடாது
 
New member
Joined
Feb 8, 2025
Messages
19
கொலைகார பாவி இவளை suma விடக்கூடாது பாவம் அருண்
 
New member
Joined
May 2, 2025
Messages
18
ஆமா ஆமா நீங்க முதலிலேயே ராஜனுக்கு இரண்டு குழந்தைங்கன்னு சொன்னீங்க இப்பதான் நான் போய் முதல் பாகத்தை படிச்சிட்டு வர சூப்பர் சூப்பர் இந்த திருப்பத்தை நான் எதிர்பார்க்கவே இல்லை குழந்தைக்கு வர்மனுக்கும் ஒண்ணும் ஆகக்கூடாது சீக்கிரம் மகதி அவன் காதலை வெச்சி காண வேண்டும்
 
New member
Joined
May 2, 2025
Messages
14
செம்ம mass எபிசொட் 😍ட்வின்ஸ் இருப்பாங்ணு எதிர்பார்க்கல 😍😍😍அருமை அருமை
 

sam

New member
Joined
May 5, 2025
Messages
20
ரம்யாவை சுட்டு தளுங்க பாவமா இருக்கு சின்ன பையன் வர்மாக்கு அண்ணன் இருக்கானா விருவிருப்பா இருக்கு கதை sup🥰🥰
 
Top