New member
- Joined
- Nov 29, 2024
- Messages
- 7
- Thread Author
- #1
மறு நாள் ,மலர் மிகவும் சோர்வாக காணப்பட்டால் அதை கண்ட ஆதி,என்ன மலர்? நீ இன்னுமா நேத்து நடந்ததை நினைச்சுட்டு இருக்க?
அது உன்னோட பிரம்மை என்க.
இல்ல,ஆதி நான் கண்டிப்பா அந்த தலை இல்லாத மனிதனை பார்த்தேன். அவன் என் எதிரே நடந்து வந்தான்.என்று மலர் சொல்ல..
சரி..சரி.. மறுபடியும் ஆரம்பிக்காத ,என்று ஆதி சொல்லும் போதே மல்லிகா ' மலர் என்று அழைத்தபடி உள்ளே வந்தாள்.
நம்ம வீட்ல இன்னைக்கு ஒரு சின்ன பூஜை ஏற்பாடு செஞ்சு இருக்கேன்,நீ வேற நேத்து எதையோ பார்த்து பயந்து இருக்க அது எனக்கு நல்லதா படல.என்று சொல்ல
அத்தை,இன்னைக்கு குல தெய்வ கோயிலுக்கு போகனும்னு சொன்னீங்க?? என்று கேட்க.
இல்ல மா , ' நாளைக்கு முழு பௌர்ணமி ' நாளைக்கு பூஜை செஞ்சா நம்ம வீட்ல இருக்குற திருஷ்டி, கெட்ட சக்தி எல்லாம் நம்மள விட்டு நீங்கும் அப்படின்னு பூசாரி சொல்லி இருக்காரு என்று சொல்லி விட்டு 'சீக்கிரம் கீழ வா ' என்று சொல்லி விட்டு செல்ல, பூஜை செய்ய பூசாரி ஆரம்பிக்க, வெளியே சக்தியின் அலறல் சத்தம் கேட்டு அனைவரும் ஓடி வந்தனர்.
என்னாச்சு?? சக்தி என்று அனைவரும் கேட்க அவள் கைகள் நடுங்க,அங்கு இருந்த கிணற்றை கை காட்ட, அங்கு ' முடிவு இல்லை ஆரம்பம் ' என்று இரத்தத்தால் எழுத பட்டு ,அதில் ஒரு முத்திரையும் காண பட்டது.அங்கு இருந்த மரத்தில் இரத்தம் சொட்ட சொட்ட சண்முகம் உடல் தொங்கி கொண்டு இருந்தது.
அந்த முத்திரை அனைவரையும் பீதி அடைய செய்ய, இது கண்டிப்பா அந்த தலை இல்லாத அரக்கன் செய்த வேளை தான் .இப்படி தான் கொஞ்ச வருடத்துக்கு முன்பு கூட அவன் நிறைய உயிர்களை காவு வாங்கி இருக்கு,இப்படி தான் நம்ம பெரியவர் கூட அந்த அரக்கணுக்கு பலி ஆகிட்டாரு என்று ஒவ்வருவரும் ஒவ்வரு மாதிரி பேச, அங்கு மான் கொம்பு பதிக்க பட்ட அந்த பழைய அம்பஸ்டர் கார் வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய நபரிடம் சண்முகம் இறப்பை பற்றி சொல்ல,அவன் அதிர்ச்சி அடைந்தாலும் அதை தன் முகத்தில் காட்டி கொள்ளாமல் அங்கு வந்து நின்று அனைத்தையும் கவனித்து கொண்டு நின்றது அந்த உருவம்.
இது பேய் செய்த வேளை இல்ல,ஏதோ நாய் செய்த வேளை .
எவனோ பழைய பகைல சண்முகத்தை கொலை பண்ணிட்டு ,இல்லாத பேய் மேல பலியை போட்டு தப்பிக்க பாக்குறாங்க என்று சொல்ல, சரியா பேசி இருக்க ஆதி , அவன் ஏற்கனவே குடிகாரன் தான் ,ஊர்ல நிறைய கடன் வாங்கி இருக்கான் . அவனுங்க ஏதாவது செஞ்ச வேலையா இருக்கும் என்று அந்த உருவம் சொல்ல.
' இதை தான் நானும் சொல்ல டிரை பண்றேன் மாணிக்கம் மாமா ' என்று ஆதி சொல்லி விட்டு,நான் இதுக்கு ஒரு முடிவு கட்டுகிறேன் எல்லாரும் இங்க இருந்து கிளம்புங்க. நீ தான் இது பெரிய பிரச்சனை ஆகாம இதை சரி பண்ணனும். என்று சொல்ல,
டேய், ஆதி அதை நான் பார்த்துக்கறேன்.அவள் 'என் தங்கச்சிடா ' என்று சொல்ல .. பெரு மூச்சு விட்ட படி அங்கு இருந்து சென்றான் ஆதி.
மலர் அடிக்கடி தூக்கத்தில் உலருவதும்,அடிக்கடி தூக்கத்தில் எழுந்து செல்வதையும் ,
அவள் அடிக்கடி தனியாக ஒரு இடத்தில் இருந்து சில பெயர்களை சொல்லி தனியாக பேசி விட்டு அழுது அங்கேயே உறங்கி விடுவதை ஆதி கவனிக்க தவறவில்லை.
அவளின் நடவடிக்கையை அவளுக்கே தெரியாமல் கவனிக்க ஆரம்பித்தான் ஆதி.
சில நாட்களில் அந்த வீட்டின் கணக்கு பிள்ளை, டிரைவரும் காணாமல் போய் மர்மமான முறையில் அந்த வீட்டு பின் புறம் இருந்த காட்டு பகுதியில் பிணமாக கிடைக்க,அந்த ஊர் முழுவதும் பயத்தில் உறைந்து இருந்தது.
அன்று, மலரும் ஆதியும் உறங்கி கொண்டு இருக்க ,அந்த அறை முழுவதும் ஒரு வித குளிர்ச்சி பரவியது. தன்னை ஒரு கருப்பு உருவம் துறத்த, மலர் பயந்து ஓட அங்கு அந்த உருவம் மலரின் முன்பு வந்து நின்றது. "தயவு செய்து என்னை விட்டுட்டு " பிளீஸ் ,என்று கத்த .. அந்த உருவம் ஒரு வித அரக்க தனமான சிரிப்பை உதிர்த்தது. அது மலரின் காதில் உடுறுவ அவள் திடுக்கிட்டு எழுந்தாள்.ஆதி நன்றாக தூங்க, அவள் அந்த இருட்டை நோக்கி நகர்ந்தாள்.
அவள் பார்ப்பதற்கு சற்று விநோதமாக இருந்தாள். அவளுக்கு இரவு நடந்தது எதுவும் நினைவில் இல்லை .காலையில் ஆதி எழுந்து பார்க்கும் போது அவனருகில் அவள் இருப்பதில்லை. சில நாட்கள் இப்படியே நகர்ந்தது . ஆதி இதை கண்டு பிடிக்க முடிவு செய்த்தான்.
இங்கு நிலைமை இவ்வாறு இருக்க, திடிரென்று மாறன் அங்கு வந்தான்.
அவனை கண்ட மாணிக்கம் , உன்னைய யாரு இங்க வர சொன்னா? இங்க இருக்கிற நிலை தெரியாம வந்துடியே,என்று சொல்ல
உங்களுக்கு உடம்பு சரி இல்லனு ஃபோன் வந்துச்சு அதான் வந்தேன் என்று மாறன் சொல்ல .
என்ன டா ?? பைத்தியம் மாதிரி பேசுமரண ற ?? என்று மாணிக்கம் அவனை திட்டும் போதே,ஆதி அங்கு வந்தான்.
இருவரும் பேச்சை நிறுத்தினர்.
ஆதி அவனை பார்த்து பேசி விட்டு சென்றான்.
அன்று முழு பௌர்ணமி, மாணிக்கம் தூங்கி கொண்டு இருக்க, திடீரென்று நாற்காலி நகரும் சப்தம் காதை உடுருவ.. அவன் கண் விழித்தான்.
ஜன்னல் வழியாக மெல்லிய குளிர்ந்த காற்று வீசியது. கடிகாரத்தின் முள் நகரும் சப்தம் கூட பயங்கரமாக கேட்டது.
அந்த அமைதி அவனுக்கு மரண பயத்தை காட்டியது.
அவன் பயத்தில் நடுங்கி கொண்டு இருக்க,அவனை நோக்கி ஒரு உருவம் வந்தது. அதை கண்ட மாணிக்கம் ,' வா ' மலர். என்று சொல்ல வாய் எடுத்தவன் அவள் கண்களை கண்டு ,நீ யாரு? என்று கேட்க.
அதற்கு அந்த மலர் உருவம் நல்லா யோசிச்சு பாரு ,நான் யாருனு தெரியும். என்று சொல்ல
அதற்கு அவன் யாராவது காப்பாத்துங்க.. காப்பாத்துங்க என்று சத்தம் போட..அனைவரும் அங்கு வந்தனர்.
அண்ணா ,என்னாச்சு?? எதுக்கு இப்படி சத்தம் போட்டீங்க?? என்று கேட்க
அது ...அது .... வந்து.. என்று மூச்சு வாங்கிய படி ,ஒன்னும் இல்ல கெட்ட கனவு என்று சொல்ல மாறனை தவிர, அனைவரும் களைந்து சென்றனர்.
டேய்,மாறா அவ திரும்பி வந்துட்டா டா என்று சொல்ல
யாரு??
அதான் அந்த பொண்ணு ..ஒரு பொண்ணை நீ உன் நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து கொண்ணு, அதை பார்த்த ஆதி அப்பாவையும் கொலை செய்தியே அந்த பொண்ணு டா என்று சொல்ல
ஹா... ஹா... என்று சத்தமாக சிரித்த மாறன் திடிரென்று தன் முகத்தை கோபமாக மாற்றி மாணிக்கத்தின் முகத்திற்கு அருகில் சென்று,
இந்த பாரு .."சும்மா பேய் ,பிசாசு அப்படி,இப்படினு நீயாவே ஏதாவது கற்பனை பண்ணி ,பழசை வெளிய கொண்டு வந்த" உன்ன அப்பானு கூட பாக்க மாட்டேன் .உன்னையும் கொன்றுவேன். நான் உருவாக்கின கதையை என் கிட்டவே சொல்றியா??
நான் தான் அந்த பொண்ணை கொன்றேன்.அழகா இருந்தா அனுபவிச்சேன். அவள் குடும்பத்துக்கு அது தெரிஞ்சு போச்சு,பணத்தை வாங்கிட்டு ஊரை விட்டு திரும்பி பாக்காம போக சொன்னா? அவன் பெரிய இவன் மாதிரி அந்த ஆதி அப்பா கிட்ட போய் எல்லாத்தையும் சொல்ல,
அவன் என்னான்னு பார்த்தா, "அரிச்சந்திரன் வீட்டுக்கு பக்கத்து வீடு" நான் பொய் சொல்ல மாட்டேன் அப்படி இப்படின்னு சொன்னான் அதான் அவனையும் அந்த பொண்ணு குடும்பத்தையும் சேர்த்து தடயம் இல்லாம எல்லாத்தையும் மேல அனுப்பிட்டு ,பலியை பேய் மேல போட்டுட்டேன். என்று சொல்லி முடித்தான்
ஆமா,இப்ப தான் எனக்கு ஒரு விசயம் தோணுது ,இந்த விசயம் உன்னையும்,என்னையும் தவிர வேற யாருக்கும் தெரியாதுன்னு நினைச்சேன் . ஆனா யாருக்கோ எல்லா விசயமும் தெரிஞ்சு இருக்கு,அதான் நான் பண்ணியதை அச்சு மாறாமல் செய்து பலியை அந்த தளையில்லாத அரக்கன் மேல போட்டு இருக்காங்க..
எங்கையோ எச்சத்தை மிச்சம் வச்சு இருக்கேன்.என்று சொல்லி முடிக்க,
மலர் அந்த அறைக்குள் நுழைந்தாள்.
அவளை கண்ட அவன் நீ....நீ....எப்படி? இங்க நீ.. தான் செ..செத்து.. இ..இல்ல..என்று உளறி கொண்டு இருக்க,அவள் பின்னால்
என்ன ?? ஒரே குழப்பமா இருக்கா? நான் எப்படி உயிரோட வந்தேனு?
நீ சொன்னது சரி தான் "நீ விட்ட எச்சத்தில் இருந்து உன்னை அழிக்க முளைத்தவள் டா "என்று சொல்லி விட்டு
அவளுடன் கூடவே வந்தவள் டா என்று சொல்ல , அவள் அருகில் இருந்த ' தலை இல்லாத உருவம்' கண்ணிமைக்கும் நேரத்தில் மாணிக்கத்தின் கதையை முடித்தது.
அடுத்து நீ தான் என்று சொல்ல..
மாறன் ,மலரை தள்ளி விட அவள் கீழே விழுந்து மயங்கினாள்.அவள் அருகில் இருந்த அந்த உருவத்திற்கும் மாறனுக்கும் சண்டை வர,மாறன் எதிரே இருந்தவனின் முகத்திரையை கிழிக்க அதில் இருந்தது சரண். அவன் தலையில் அடித்து விட்டு வெளியே வந்த மாறன்
என் கிட்டையே வா?? என்று சிரித்த படி நிற்க. அங்கு நின்ற "தலை இல்லாத மனிதனை பார்த்து அதிர்ச்சி அடைய "
என்ன? ஒரே குழப்பமா இருக்கா?? சஸ்பென்ஸ்ல சாவு என்று மாறன் கதையை முடித்தது அந்த உருவம்.
மலர் மயக்கத்தில் இருந்து. எழுந்து பார்க்க,
மாறனும் மாணிக்கமும் இறந்து விட்டதாகவும்,அவர்களை அந்த காட்டு பக்கத்தில் இருந்து வந்த பேய் தான் கொன்றதாகவும் அனைவரும் பேசி கொண்டு இருக்க, மலர் குழப்பத்தில் இருந்தாள்.
அங்கு வந்த சரண் ,மலர் ரெஸ்ட் இருக்கட்டும் எல்லாரும் போங்க என்று சொல்ல,மலர் ரொம்ப யோசிக்காத , நேத்து என்ன நடந்துச்சு ?? யாரு மாறனை கொலை பண்ணுனா?? அப்படின்னு எனக்கு தெரியாது. ஆனா நீ நினைச்ச மாதிரி கவிக்கும் உன் குடும்பத்துக்கும் நீதி கிடைச்சிட்டு.
மலர் ,இப்ப உனக்கு சந்தோசம் தானே நம்ம கவியோட ஆத்மா சாந்தி அடைந்து இருக்கும் "இனியாவது எல்லாத்தையும் மறந்து ஆதியோட நீயாச்சு சந்தோசமா வாழு " என்ற படி சரண் நிற்க.
சரண், நீ இல்லாம என்னால எதுவுமே பண்ணி இருக்க முடியாது.
உன்ன மாதிரி அன்பான லவ்வர் கிடைக்க கவி புண்ணியம் பண்ணி இருக்கணும்.
அவ போன பிறகும் ,நீ அவளையே எண்ணி கொண்டு இருக்கியே
அன்னைக்கு என் குடும்பமே என்னை விட்டு போய் நான் தனியா இருந்த போது,நீ தான் எனக்கு பாதுகாப்பு தந்த.. ஆனா நான் ஆதி கிட்ட எல்லாத்தையும் சொல்லி ஆகணும் என்று சொல்லும் போதே ஆதி அங்கு வந்தான்.
இங்க இருக்கிற அமானுஷ்ய சக்தியால்,மலர் உடலும்,மனமும் பாதிப்பு அடைந்தது இருக்கு ,அவளுக்கு ட்ரீட்மென்ட் எடுக்கணும் என்று சொல்லி அங்கு இருந்து ஆதி, மலரை கூட்டி கொண்டு செல்லும் போது ,
மலர் ,எனக்கு விசயம் எல்லாம் தெரிஞ்சு,மாறனை இங்க வர வைத்தது நான் தான். சட்டத்துக்கு முன்னாடி நீ பண்ணினது தப்பா இருக்கலாம்.ஆனா மனசாட்சி முன்னாடி இது "சரி" தான்.
இது மாதிரி மனித மிருகம் இந்த உலகத்துல இருக்குற வரைக்கும்
நாம பேய் பிசாசு கிட்ட ஜாக்கிரதையா இருக்க வேண்டாம். மாறாக,மனித மிருகத்து கிட்ட தான் ஜாக்கிரதையா இருக்கணும் மலர்.
ஊர் மக்கள் எண்ணம் போல ,இது பேய் செய்ததாக இருக்கட்டும் .
அப்ப தான் தப்பு பண்ண' பயம் ' வரும். என்று தன் மனதில் ஆதி எண்ணி கொண்டு தன் காரை ஸ்டார்ட் செய்தான்.