• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
958
31


“இது என்னன்னு சொல்லுடி?”

தன் முன் கிடந்த திருமணப் பத்திரிக்கையை அமைதியாகப் பார்த்து, தோழியின் துளைத்தெடுக்கும் கேள்விக் கணையைத் தாங்கியபடி நின்றிருந்தாள் மின்னல் பெண்.

“நதீரா! இந்த கேரக்டர் என் வாழ்க்கையில் வந்ததில் இருந்து, எல்லாமே தப்புத் தப்பாதான் நடக்குது. யார் நதீரான்னு கேட்டா யார்கிட்டேயும் பதில் இல்லை. அப்ப நதீரான்னு ஒருத்தி இல்லவே இல்லையோன்னு தோணுது. நீயும் ஏன்டி என்னை ஏமாத்தின?” கோவத்தில் வந்து விழுந்தன நட்சத்திரப் பெண்ணின் வார்த்தைகள்.

சட்டென்று அடிபட்ட பார்வை பார்த்த மின்னல், “நதி நான் உன்னை ஏமாத்துவேனா? நீ இந்த வீட்டு மருமகளா ஆகுறதுக்கு என்ன செய்யணுமோ அதை மட்டும்தான் செய்தேன். நீ சொல்லு, என் அண்ணனைத் தவிர வேற யாரையாவது உன்னால கல்யாணம்... கல்யாணம் கூட வேண்டாம். அந்த இடத்துல இன்னொருத்தனை வச்சிப்பார்க்க முடியுமா? அப்படி ஒரு சூழ்நிலை வந்தா நீ செத்துருவடி. அதை எங்களை வேடிக்கை பார்க்கச் சொல்றியா?”

நட்சத்திராவின் மனமோ உண்மைதானே என்பதை உணர்த்த அமைதியாக இருந்தாள்.

“உங்க கல்யாணம் நடக்க எத்தனை பேர் இஷ்டப்பட்டு, கஷ்டப்பட்டுருக்காங்க தெரியுமா? பொண்ணு பையனுக்குத் தெரியாம பத்திரிக்கை அடிச்சி கல்யாணம் முடிக்குறது லேசுப்பட்ட வேலை நினைச்சியா? பொண்ணு மாப்பிள்ளையைப் பக்கத்துலயே வச்சிக்கிட்டு சாத்தியமான்னு யோசி. அதுவும் பிரபல வக்கீல் ரவிச்சந்திரன் குடும்பத்துல.! எல்லாம் யாருக்காக? உங்களுக்காக மட்டுமே! அன்னைக்கே சொன்னேன்.. கண்டதையும் யோசிக்காம உன் வாழ்க்கையை நீ வாழ்னு.”

“நா... நான் என்னடி பண்ணுவேன்” என்று கட்டிலில் ஓய்ந்துபோய் அமர்ந்து முகம் மூடி அழும் தோழியின் அருகில் அமர்ந்து, அவளைத் தன் தோள்சாய்த்து “என்ன குழப்பம் நட்டுமா உனக்கு?” என்றாள் மென்மையான குரலில்.

“எல்லாமே குழப்பம் கொடி. என்னை வேண்டாம் சொன்ன உன் அண்ணன்! இன்னொருத்தியை உயிரா விரும்பிய உன் அண்ணன்! எங்களுக்குக் கல்யாணம்னு தெரிஞ்சும் நாடகமாடிய உன் அண்ணன்! என்னிடம் பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் அன்பை மட்டுமே தரும் உன் அண்ணன்! கல்யாண மேடையிலேயே ஐ லவ் யூ சொன்ன உன் அண்ணன்! இன்னுமின்னும் எவ்வளவோ சொல்லலாம். என்னால ஜஸ்ட் லைக் தட்னு தூக்கிப் போட்டுட்டுப் போக முடியலடி. ரொம்ப குழம்பிப் போயிருக்கேன். நான் எப்படி ஃபீல் பண்ணனும்னு நீயே சொல்லு?”

“உனக்கேத் தெரியுது, உன் அண்ணன் இல்லன்னா நான் செத்துருவேன்னு. அப்படிப்பட்ட என்கிட்ட உண்மையைச் சொல்லியிருக்கலாமே! நதீரான்னு ஒரு கேரக்டர் இல்லன்னா, உங்க சர்ப்ரைஸ் கல்யாணத்துல எல்லாரையும் விட அதிகம் சந்தோஷப்பட்டிருப்பவள் நான்தான். யாரோ ஒருத்திக்குப் பதிலா நானான்னு வந்தப்ப, நான் எவ்வளவு துடிச்சிருப்பேன். அதை ஏன் யாரும் புரிஞ்சிக்கலை? உன் அண்ணன் பெயரோட என் பெயரைப் பார்த்தப்ப, அதிர்ச்சி, சந்தோஷம் தாண்டி கேள்விதான் நிற்குது.”

“பழையதை மறந்திருன்னு ஈஸியா சொல்லிட்டாங்க. அப்ப உன் அண்ணன்மேல நான் வச்ச காதலும் அந்த லிஸ்ட்ல போயிரும்தான? இது ஏன்டி உன் அண்ணனுக்குப் புரியலை? ஏன் என்னை ஏமாத்தினாங்க?” என்றவள் குரலில் ஏமாற்றம் மட்டுமே!

“ந...நதிமா?” பேச முடியா தவிப்பு மின்னல் பெண்ணிடம்.

“நதீரா யார்?” அழுத்தமாக வந்தன வார்த்தைகள்.

“அண்ணன்கிட்ட கேட்டுக்கோயேன்” என்றாள் கெஞ்சலாக.

“ஏன் யாரும் என்கிட்ட சொல்லக்கூடாதுன்னு சொல்லிருக்காங்களா? விடு நான் மாமாகிட்ட கேட்டுக்கறேன்” என்று மின்னலின் அறையில் இருந்து வரவேற்பறையில் இருந்த மாமனாரைத் தேடி வந்தாள்.

“நதி... ஏய் நதி வேண்டாம்.” என்ன தடுத்தும் நிற்காமல் செல்லும் தோழியை இயலாமையுடன் பார்த்தபடி பின்னாடியே வந்தாள்.

தொலைக்காட்சியில் செய்தி பார்த்தபடி அமர்ந்திருந்த ரவிச்சந்திரன் முன்னால் வந்து நட்சத்திரா நிற்க, தகப்பன் அறியாமல் நட்சத்திராவின் கைபிடித்து, “வேண்டாம் நதி. எதுவாயிருந்தாலும் பேசிக்கலாம்” என்றாள் மெல்லிய குரலில்.

“பேசத்தான் வந்திருக்கேன். மாமாவாவது சொல்றாங்களா பார்க்கிறேன்” என்று மின்னலிடம் முணுமுணுத்தாள்.

“என்ன ரெண்டு பேரும் குசுகுசுன்னு பேசிட்டிருக்கீங்க? என்னமா நட்சத்திரா? ஏன் டென்ஷனாயிருக்க? ஏதாவது பிரச்சனையா?” என கேட்டார்.

“அப்பா நான்தான் டென்ஷனா இருக்கேன். அவள் கிடையாது” என்று மகள் இடையிட,

“என்னாச்சி என் பொண்ணுக்கு? திடீர் டென்ஷன் ஏன்? நான் மாப்பிள்ளை பார்க்கிறேன்னு சொல்லவேயில்லையே? அப்புறம் டென்சனுக்கு என்ன வேலை?” என்றார் கிண்டலாக.

“டேடி...” என சிணுங்க.

“ஹா...ஹா என்ன விஷயம்? ரொம்ப டீப் டிஸ்கஸனா இருக்கு. என்கிட்ட கேட்க என்ன தயக்கம்?”

“அப்படிலாம் எதுவும் இல்லப்பா.”

“நீ சொல்லுமா நட்சத்திரா?” என்று கேள்வியை மருமகளிடம் திருப்பினார்.

“நதீரா யார் மாமா? பட்டென்று அவள் கேட்டுவிட,

“நதீரா யார்னு உனக்குத் தெரியாதா?” வியப்பாய் புருவம் உயர்த்தி யோசனையில் ஆழ,

“யாராவது ஒருத்தர் சொன்னால்தான மாமா தெரியும். அத்தையில் தொடங்கி பாட்டி, அப்பா, அம்மா தாண்டி, இதோ இவள் கூட என்கிட்டே மறைக்கிறா. நீங்க சொல்லுங்க மாமா?” என்றாள்.

‘இந்த அரி பையன் திருந்தவே மாட்டானா? எல்லாத்துலயும் சொதப்பல்.’ மகனை மனதார திட்டி, “மறைக்கிறது அவங்க எண்ணமா இருக்காதுமா. எதுக்குத் தேவையில்லாததைப் பேசணும்னு நினைச்சிருக்கலாம்” என்றார் நிதானமாக.

“நதீரா எப்படி மாமா தேவையில்லாதவளா ஆவா?”

அவளை ஆழ்ந்து பார்த்து, “உனக்கு நதீராவைத் தெரிஞ்சிருச்சி போல?” என்றார்.

“கன்பார்மா தெரியாது. இதுதான்னு ஒரு கெஸ்ஸிங் மட்டும் இருக்கு.”

அதில் புன்னகை எழ, “சம்பந்தப்பட்டவனை விட்டுட்டு மத்தவங்ககிட்ட கேள்வியா கேட்டுத் தள்ளுறியா? எல்லார் மூஞ்சிலும் ஒரு மிரட்சி தெரியுது.”

“மனசுக்குக் கஷ்டமாயிருக்கு மாமா. இந்தக் கொடி அவள் அண்ணனோட சேர்ந்து நிறைய மறைச்சிருக்கா” என்று குற்றம் சாட்டினாள்.

“ஏய் விட்டா எல்லாமே நான்தான் செஞ்சேன்னு சொல்லிருவ போல? எங்க கேள்வி கேட்டுருவியோன்னு இன்னும் வராமல் இருக்கிற உன் புருஷனைக் கேளு. ஊருக்கு இளைச்சவன்... அதென்ன பழமொழி க்ரேன்மா?” என்றாள் பாட்டியிடம்.

“ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோவில் ஆண்டி மின்னல்மா.”

“ஹான் அதேதான். நீங்க அடிக்கிற லூட்டிக்கு நானெப்படி பொறுப்பாக முடியும்?”

“வேணாம் மயிலு ரொம்பப் பேசின ரெக்கையை உடைச்சிருவேன்” என்று நட்சத்திரா விரல் நீட்டி மிரட்டிட,

“உடைக்கிற வரை நாங்க ஊறுகாயா சாப்பிட்டுட்டு இருப்போம். போவியா!” என அசால்ட்டாகத் தட்டிவிட்டாள்.

“அத்தை பாருங்கத்தை” என்று மாமியாரிடம் செல்ல,

“அடடா புருஷன் எவ்வழியோ பொண்டாட்டியும் அவ்வழியா? ஒற்றுமை பிரமாதம் நதிமா” என மின்னல் கிண்டலில் இறங்கினாள்.

“அமைதியா இரு மின்னல். புள்ள ஏற்கனவே பயந்திருக்கு” என்று சகுந்தலா மகளை அடக்க,

“அப்பா” என்று கண்ணைக் கசக்க,

“என்னடா ஹார்ட் பஞ்சராகிருச்சா?”

“எஸ் டேட்.”

“அப்ப பஞ்சரடைக்க ஆள் பிடிச்சிரலாமா?” என்றார் புன்னகையுடன்.

“ஐயய்யே! ஐம் பெர்பெக்ட்லி ஆல்ரைட் டேட்” என்று அலறவும் அனைத்தும் மறந்து நட்சத்திரா புன்னகைத்தாள்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
958
“நட்சத்திரா இங்க வாமா” எனவும் தயங்கியவளை, “உன் அப்பா பக்கத்துல உட்கார இவ்வளவு யோசிப்பியா? மாமாவும் அப்பாதான்” என்றார்.

“சாரி மாமா. நான் உங்களை அப்பா ஸ்தானத்தில்தான் பார்க்கிறேன்” என்றபடி அவர் அருகில் உட்கார்ந்தாள்.

“ஒருவேளை உன் சந்தேகம் பொய்யா இருந்தால் கூட, இந்த வீட்டு மருமகளா உன்னைத்தான் நிறுத்தியிருப்பேன். நான் கொஞ்சம் பழைமைவாதிதான்மா. வேற்று மதத்துப் பெண்ணைப் பையனுக்கு முடிக்கிற அளவுக்கு ப்ராட் மைண்டட் கிடையாது” என்று யதார்த்தம் சொன்னார்.

“அதுக்காக விரும்பினவங்களை...”

அவளை முடிக்கவிடாமல், “இந்த விவாதமே தேவையில்லைன்றப்ப அதை ஏன்மா பேசிட்டிருக்கணும். தனக்கு மிஞ்சிதான் தானமும் தர்மமும்னு பெரியவங்க சொல்லி இருக்காங்க. உனக்கு நல்லது நடந்திருக்கு. அதுவரை சந்தோஷப்படு. சரி மணி ஒன்பதாகுது சாப்பிட்டுப் படுக்கப் போங்க” என்றவர் மகளிடம் திரும்பி, “சாப்பிட்டதும் ஒரு கேஸ்கு பாய்ண்ட் எடுக்க அப்பாவுக்கு ஹெல்ப் பண்ண வாமா” என்றார்.

“சரிப்பா வர்றேன்” என்றாள்.

“பாட்டி சாப்பிட்டாச்சா கேட்டு, அவங்களையும் சாப்பிடச் சொல்லு” என்று அவர்களை அனுப்பினார்.

நட்சத்திராவையும் சாப்பிடும் இடத்திற்கு இழுத்துச் செல்ல, “எனக்கு வேண்டாம் கொடி. நீ சாப்பிடு” என்றாள்.

“என் அண்ணனைக் கேள்வி கேட்க தெம்பு வேண்டாமா?”

“விட்டா கம்பெடுத்துத் தந்து அடிடின்னு சொல்வபோல?” என்றாள் புன்னகையுடன்.

“அது செகண்ட் லெவல்டா நதிமா.”

“சாப்பிட்டா நம்ம கோவத்தின் அளவு பாதியா குறைஞ்சிரும். அப்புறம் உன் அண்ணன்கிட்ட கேட்க வேண்டியதை மறந்திருவேன்” என்றாள்.

‘அதுக்குத்தான வயிற்றை நிரப்ப முயற்சிக்கிறேன்.’ மின்னலவளோ மனதிற்குள் முனகினாள்.

“என்ன கொடி சத்தத்தையே காணோம்?”

“ஒண்ணுமில்லீங்க எசமான்” என்று பவ்யம் காட்ட,

சின்னப் புன்னகையுடன், “கொடி ஐ லவ் யூ” என்றாள்.

மின்னலுக்கு சந்தோஷச் சாரலென்றால், அவர்களைக் கடந்து சென்றவனுக்கோ பக்கென்றானது. ‘அடிப்பாவி! உன் உயிரே நான்தான்ற புருஷன் என்கிட்ட, ஒரு லைக் யூ கூடக் கிடையாது. அந்த மின்னலுக்கு லவ் யூவா?’ காதோரம் புகை அதிகமாகவே வெளியேறியது அவனிடம் இருந்து.

“லவ் யூ நட்டுமா” என்று செல்லம் கொஞ்சிய தங்கையைப் பொறாமையுடன் முறைத்தான்.

“அவங்ககிட்ட எப்படிப் பேச்சை ஆரம்பிக்கிறது தெரியலை” என்று விரல் நகத்தை ஆராய,

“என்கிட்ட மட்டும் அவ்வளவு வேகமா கேட்ட. உன் புருஷன்கிட்டயும் அதே வேகத்தைக் காட்டு.”

“நீ... நீ என் க்ளோஸ் ஃப்ரண்ட். அவங்க ஹஸ்பண்ட். வித்தியாசம் இருக்குல்ல.”

“என்னைவிட அவன்தான் நட்டுமா உசத்தி.”

“அவங்க எந்தளவுக்கு உசத்தியோ, அதே ஈக்வல்தான் நீயும்” என்றாள் வேகமாக.

“அப்படின்னா போய்க் கேளு” என்றாள் மின்னல் பெண்.

‘அடிப்பாவி! என்னை கோர்த்து விடுறாளே. டேய் அர்ஸ்! உன் பொண்டாட்டியை சமாளிக்க எதாவது ஐடியா செய்’ என்றபடி தங்கள் அறைக்குள் சென்று குளித்துத் தயாராகி சாப்பிடும் இடம் வந்து, அவன் பார்வை படும் இடத்தில் அமர்ந்திருந்தவர்களிடம், “ஹாய் நதி! ஹாய் மின்னல்” என்று பல்லைக்காட்டி, “அம்மா டிபன்” என்று கத்தினான்.

“ஏய் நதி! போய்க் கேளு” என்று அண்ணன் மனைவியைத் தூண்டி விட.

மின்னலின் வார்த்தையில் கேட்க ஆயத்தமானவள் அவன் சாப்பிட அமர்ந்ததைக் கண்டு, ‘சாப்பிடட்டும்’ என்றாள் ஜாடையாக.

ஒரு சில நிமிடங்களில் நட்சத்திரா எழ, “என்ன நதி எழுந்துட்ட?” என மின்னல் கேட்க, கணவனின் தட்டைக் காண்பித்து அடுப்படி செல்ல, அவள் பின்னே வேகமாக வந்தவள், “நீயெல்லாம் எப்படிடி கேள்வி கேட்கப்போற? உன் வீரமெல்லாம் என்கிட்ட மட்டும்தான்” என்று கோவத்தில் சத்தமில்லாமல் கத்தினாள்.

“அவங்க முகம் வாடுறதைப் பார்த்துட்டு இருக்கச் சொல்றியா? அந்தளவு கல் மனசா இருந்திருந்தா, அவங்களுக்குப் பிடித்த பெண்ணை கல்யாணம் பண்ணிவைக்கச் சொல்லி இருப்பேனா? நானே அவங்கதான் வேணும்னு கேட்டுருக்க மாட்டேன். அவங்க முகம் பார்த்து கண்ணைக் கண்டா எனக்கு எல்லாம் மறந்திரும் கொடி” என்றாள் காதலுடன்.

“அப்புறம் என்னத்துக்கு கேள்வி கேட்குறேன்னு நிற்கிற? உன் சந்துருவோட சந்தோஷமா இரு. கண்டதையும் கேட்டு அவனையும் கஷ்டப்படுத்தி, நீயும் கஷ்டப்படாத நதிமா.”

“ப்ச்... அதைக் கேட்காமல் விட்டா காலத்துக்கும் உறுத்திட்டிருக்கும். உறுத்தல் அதிகமானா கோவம் வரும். அதைக் கட்டுப்படுத்தினா மெண்டலி டிஸ்டர்பாகும். அது அதிகமாகும்போது வார்த்தைகள் தவறாக விழும். அப்புறம் லைஃப் எப்பவும் சண்டை சச்சரவுன்னு போகும். இன்னைக்கு பேசலன்னா, எங்க லைஃப்ல அது பெரிய பள்ளமா இருக்கும் கொடி. அதை நிரப்ப எரிச்சல், கோவம், ஆத்திரம்னு எல்லாத்தையும் பயன்படுத்த வேண்டி வரும்.”

“ஆத்தா நீ இப்பவே பேசிரு. இல்ல இன்னும் முப்பது வருஷத்துக் கதையை இழுப்ப” என்று கிண்டலடிக்க நேரமும் கடந்தது.

பத்து மணிபோல் தன் அறைக்கு வந்தவளை பின்னிருந்து அணைக்க, “நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்று அவள் விலக யத்தனிக்க, “ம்... காலையில் பேசிக்கலாம் நதி” என்றான் ஹஸ்கி குரலில்.

“எனக்கு இப்பவே பேசணும்ங்க” என்று வலுக்கட்டாயமாக விலகி அவன்புறம் திரும்ப, பட்டென்று ஒரு முத்தம் அவள் கன்னத்தில்.

“நான் சொல்ல வர்ற...” அடுத்த கன்னத்தில் அதைவிட வேகமான முத்தம். “நான் என்ன...” முத்தாய்ப்பாய் அவள் மூக்குத்தியின் மேலொரு முத்தம். “நான்...” வாய் பேச முடியாதொரு முத்தம். அதில் அவள் சித்தம் கலங்கியதோ! கேட்க வந்த கேள்விகள் யாவும் மாயமாய் மறைய அவர்களின் உயிர்த்தேடல் மட்டும் அங்கே! திரும்பவும் “நான்...” என ஆரம்பிக்கும் போதே தன் முத்தத்தை விடாது தொடர்ந்து, தன்னை மட்டுமே நினைத்திருக்க வைத்தான் அரிச்சந்திரன்.

தான் செய்வது தவறென்பது அவனுக்குத் தெரிகிறதுதான். அவள் கேள்விக்கான பதிலை அமைதியாக இருக்கும்போதே கொடுக்க நினைக்கிறான். அவசரத்தில் செய்யும் யாவும் தீமையில் முடியும் என்பதாலா!

அவன் அறியவில்லை. புதையப் புதையதான் எதுவும் பூகம்பமாய் வெடிக்குமென்று!

காலையில் வழக்கம்போல் எழுந்து குளித்து வந்து கண்ணாடி பார்க்கையில்தான், முன்தினம் கேட்க வந்தது, அதனை கேட்க விடாதா கணவனின் செய்கைகள் நினைவு வர, ஏதோ ஒரு உணர்வு அவளை பலமாய்த் தாக்கியது. கணவன் முகம்காண அவனோ நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தான்.

“ஏன் சந்துரு? என் கேள்வியில் இருந்து தப்பிக்கதான் இந்த வழியைத் தேர்ந்தெடுத்தீங்களா? தப்புமேல தப்புப் பண்றீங்க. சாதாரணமா பேசி முடிக்க வேண்டிய விஷயத்தை பெருசாக்குறீங்கன்னு தோணுது. உண்மையை மறைக்க மறைக்க அது பெரிய இக்கட்டுல கொண்டு விட்டுவிடாதா. வக்கீல் நீங்களே இப்படிப் பக்குவம் இல்லாமல் நடந்துக்கலாமா?” என்றவள் மூச்சை இழுத்துவிட்டு, “இட்ஸ் ஆல்ரைட். இனி நீங்களா விளக்கம் கொடுக்கிறவரை நான் எதுவும் கேட்கல. ஆனா, என்னை சமாதானப்படுத்த இதுதான் வழின்னா எனக்கு கொஞ்சமும் பிடிக்கலைங்க. சோ...” மனதினுள் முடிவெடுத்து தயாராகி வெளியே வர, அங்கோ நகம் கடித்தபடி அமர்ந்திருந்தாள் மின்னல் கொடி.

‘அவள் ஏன் அப்படி இருக்கிறாள்’ என்ற நினைவு வர, ‘என் தோழி!’ சிறு கர்வம் மனதினுள். நேரே அடுப்படி சென்று காஃபி போட்டு எடுத்து வந்து மின்னலிடம் ஒன்றை நீட்ட, நிமிர்ந்து நட்சத்திராவின் முகம் கண்ட மின்னல் ஒன்றும் புரியாமல் குழம்பினாள்.

“நதி!”

“முதல்ல காஃபி குடி” என்று கையில் கொடுத்து, “ஏய் பல் தேய்ச்சிட்டியா?” என கேட்டாள்.

“தேய்க்கலன்னா என்ன செய்யப்போற?” என கடுப்படித்து, “குளிக்க மட்டும்தான் செய்யல” என்று காஃபி குடித்தபடி “பேசிட்டியா?” என்றாள்.

“இல்ல கொடி. அதுக்கான சந்தர்ப்பம் அவங்க கொடுக்கலை.” வரவா என நின்ற அழுகையைக் கட்டுப்படுத்த,

புரிந்த மின்னலுக்கோ ‘சே.. ஏன் இந்த அண்ணன் இப்படி சொதப்புறான்’ என்று திட்டத்தான் தோன்றியது. “சரி நதி. இப்ப என்ன, எழுந்ததும் கேட்டுக்கோ” என்றாள்.

“இல்லடி. நான் அம்மா வீட்டுக்குப் போறேன். அத்தை மாமாகிட்ட பெர்மிஷன் வாங்கிக்கொடு.”

“ம்... சரி நதி. அவன்கிட்ட கோவிச்சிட்டு நீ ஏன் போறன்னுதான் இருக்கு.”

“கோவம் இல்ல கொடி. வருத்தம்தான் அதிகம். என்னை எப்படி சமாதானப்படுத்தனும்னு தெரியாம, அதுக்கு அவங்க தேர்ந்தெடுக்கிற வழி எனக்குப் பிடிக்கலை. அவங்களே தெளிவாகி தன் மனசுல உள்ளதை என்கிட்ட சொல்றவரை, நானா எதுவும் கேட்கிறதாயில்ல. இங்க இருந்தா பிரச்சனை இன்னும் பெருசாக சான்ஸ் இருக்கு. எப்படியும் நாள் கணக்குல விட்டுட்டு இருக்கமாட்டாங்க. சோ நான்...” என்று நிறுத்த,

“போயிட்டு வா நதிமா” என்று அவர்கள் பேசுவதைக் கேட்டபடி வந்த பாக்கியவதி சொன்னார்.

“பாட்டி” என்று இருவரும் பதறி எழுந்தார்கள்.

“பாட்டிதான் சொல்றேன். எந்தப் பிரச்சனையையும் ஆரம்பத்துலயே சரி பண்ணிடறது வாழ்க்கைக்கு நல்லது.”

“ஆமா நதிமா. நீ முன்னாடி போனா என் பையன் பின்னாடியே வரப்போறான். இதுக்கு ஏன் ஃபீல் பண்ணனும்?” மாமியாரின் நேர்மறையான அணுகுமுறை அவர்மேல் இன்னும் மதிப்பை ஏற்படுத்த, “புரிஞ்சிக்கிட்டதுக்கு நன்றி பாட்டி! நன்றி அத்தை” என்றாள்.

“அரியை நீயும் கொஞ்சம் புரிஞ்சிக்கமா. அவன் உன்மேல் உயிரையே வச்சிருக்கான்” என்றார் தாயாய்.

“ம்... தெரியும் அத்தை.” தோழியிடம் திரும்பி. “தேங்க்ஸ் கொடி” என்று மனதார சற்று நெகிழ்வுடன் சொன்னாள்.

“நானா எதுவும் செய்யலை நதி. நீ பார்த்துப் பிடிச்சிருக்கு சொன்ன. அது என் அண்ணன்னு தெரிஞ்சதால என்னால உங்களைச் சேர்த்து வைக்க முடிஞ்சது. நீ என் அண்ணனைப் பார்க்கவே இல்லன்னா உன்னை என் அண்ணியாக்க தோணியிருக்குமான்னா கிடையாதுதான். எப்பவும் நீ என் தோழியா மட்டுமே இருந்திருப்ப” என்றாள்.

“ஆமா கொடி. இப்படி ஒரு குடும்பத்தை மிஸ் பண்ணியிருப்பேன். சரி நான் கிளம்புறேன். உன் அண்ணன் கேட்டா சொல்லு. மறக்காம மாமாகிட்டயும் சொல்லிரு” என்று சென்றுவிட்டாள்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top