Well-known member
- Joined
- Feb 6, 2025
- Messages
- 111
- Thread Author
- #1
பகுதி 4
பின் தலையில் அடிபட்டு மயங்கிய ரோஜா கண் விழித்த போது, ஒரு அறையில் அவள் எதிரில் ஒரு ஆண் மகன் நிற்பதை உணர்ந்து, கொஞ்சம் கொஞ்சமாகத் தன் பார்வையைக் கூர்மையாக்கி நோக்கியவள் கண்களுக்கு, ஆறடி உயரம், கட்டுமஸ்தான தேகம், வசீகர முகம், வெள்ளை நிறம் என்று இப்படிப்பட்ட வர்ணனைக்கு எல்லாம் அப்பாற்பட்டவனாக ஒருவன் நின்று இருக்க, அவனை பார்த்ததும் கட்டிலில் இருந்து பொறுமையாக எழுந்து அமர்ந்த ரோஜா,
"துர்கா நீங்களா?" என்று ஆச்சரியமாகக் கேட்டாள்.
"ம்... ஆமா ரோஸ். நான் தான் துர்கா. பரவாயில்லையே என்னை இன்னுமா மறக்காம இருக்க" என்று அவன் இயல்பாக கேட்டாலும்,
"எப்படி உங்களை மறக்க முடியும்? என் கல்லூரி காலத்தின் கனவுக் கண்ணன் அல்லவா நீங்கள்" என்று தன் மனதில் எழுந்த பழைய நினைவுகளை சட்டென்று மறைத்து கொண்டவள், தன் பின் தலையில் கை வைத்து பார்க்க, வலி இருப்பதை உணர்ந்தாள்.
"என்ன ரோஸ் வலி ரொம்ப இருக்கா? டாக்டர் ஊசி போட்டு இருக்காரு. இன்னும் கொஞ்ச நேரத்துல வலி குறைஞ்சிடும்" என்று சொன்னவன், ரோஜாவின் கைப்பையை அவளிடம் கொடுத்தான்.
"துருவ் சார். உங்கள பெரிய ஐயா கூப்பிடுறாங்க" என்று ஒருவர் அழைத்ததும், "நீங்க போங்க. நான் இதோ வரேன்” என்று அவளிடம் திரும்பியவன், “ரோஸ் ஜஸ்ட் பைவ் மினிட்ஸ்" என்று சொல்லி வேகமாக அந்த அறையை விட்டு ஓடியவனின் பெயர் துர்வேஸ்வரன்.
துர்வா! நம் ரோஜா படித்த கல்லூரியின் சீனியர். கல்லூரி முதல் நாள் ராகிங் என்ற பெயரில் சீனியர்ஸ் அடிக்கும் கூத்துக்கு தாளம் தட்டாமல் தன்னை அவர்களிடம் இருந்து காப்பாற்றி, ஆறு வருடத்திற்கு முன்பே ரோஜாவின் மனதில் நாயகனாக மாறிய துர்வேஸ்வரனை ரோஜா மட்டும் துர்கா என்று அழைப்பது தான் வழக்கம்.
துர்வாவும், ரோஜாவும் ஒரே கல்லூரியில் படித்தாலும், சீனியர் ஜூனியர் என்ற வேற்பாடுகளால் அதிகமாக சந்திப்பதோ, ஒன்றாக நேரம் செலவிட்டதோ இல்லை. வாரத்தில் இரண்டு, மூன்று முறை கல்லூரி நூலகத்தில் பார்த்துக் கொண்டாலும் இவர்களின் உரையாடல் இன்றளவும் மனதிற்கு இனிமை பயர்த்ததாக தான் இருந்தது.
ஆறு வருடத்திற்கு பிறகு சென்னையில் துருவை சந்திப்போம் என்று சற்றும் எண்ணி பார்க்காத ரோஜாவிற்கு, இந்த நிகழ்வு எப்படி நடந்தது என்ற குழப்பம் மீண்டும் தலை வலியை அதிகரித்தது.
"அம்மா! அம்மா எழுந்துட்டீங்களா?" என்று அறை வாசலில் இருந்து சிறுமி ஒருத்தி ஓடி வர, ஏதும் புரியாதவளாக குழம்பி போனாள் ரோஜா.
"திக்ஷி ஓடாதமா நில்லு. பாட்டியாளா ஓட முடியல. நில்லுனு சொல்றேன் இல்ல" என்று அந்தச் சிறுமியை கெஞ்சியப்படியும் கொஞ்சியபடியும் வயதான பெண்மணி அறைக்குள் நுழைந்தார்.
வேகமாக ஓடி வந்த சிறுமி ரோஜாவின் கழுத்தை இறுக்கி கட்டிக்கொண்டு அவள் கன்னத்தில் முத்த மழை பொழிய, சிறுமியின் அன்பில் சப்தநாடியும் அடங்கியவளாக மாறிப்போனாள் ரோஜா..
"திக்ஷி என்ன பண்ற நீ? முதல்ல அவங்க மேல இருந்து கீழே இறங்கி வா. பாவம் அவங்க கையில வேற அடிபட்டு இருக்கு பாரு" என்று சற்று கண்டிப்பான குரலில் அந்த சிறுமியை கண்டித்தப்படி துர்வாவின் குரல் ஒலிக்க, அந்தச் சிறுமியோ எதையும் காதில் வாங்கி கொள்ளாமல் ரோஜாவின் மடியில் ஐக்கியமாகினாள்.
“சாரி ரோஸ். திக்ஷி இப்படி தான். பாட்டிம்மா பாப்பாவை உங்க ரூமுக்கு அழைச்சிட்டு போங்க. திக்ஷி நீ பாட்டி கூட போ. நான் இதோ வரேன் " என்று துர்வா சொன்னதும்,
"அம்மா நான் பாட்டி கூட போறேன். நீங்க அப்புறமா என்னை வந்து அழைச்சிட்டுப் போங்க" என்று சொன்ன சிறுமியை அழைத்து கொண்டு சென்றார் துருவின் வீட்டில் பணிபுரியும் வயதான பெண்மணி ஓருவர்.
"என்ன ரோஸ் அப்படி பாக்குற? நீ எப்படி இந்த வீட்டுல இருக்கன்னு யோசிக்கிறியா?" என்று ரோஜாவின் மனதில் எழுந்த கேள்விக்கு பதிலை அளிக்கும் இடத்தில் இருந்தான் துர்வா.
"அந்தக் குழந்தை என்னை அம்மான்னு கூப்பிட்டதும், ஒரு கார் அந்த பிள்ளையை இடிக்க வந்துச்சு. அப்போ நான் அந்த குழந்தையை தூக்கிகிட்டேன். அந்த சமயம் தான் நான் கீழே விழுந்து தலையில் அடிபட்டு மயங்கி விழுந்துட்டேன் போல" என்று ரோஜா நடந்த சம்பவத்தை விவரித்தாள்.
"ம் ஆமா ரோஸ். ஆனா நீ மயங்கிய பின்னாடி உனக்கு என்ன நடந்துச்சுனு உனக்கு தெரியணும்னா, அதை நான் தானே சொல்ல முடியும்" என்று சிரித்து கொண்டே சொன்ன துர்வா, கட்டிலில் அமர்ந்து இருந்த ரோஜாவின் அருகில் உள்ள நாற்காலியில் அமர்ந்தான்.
"உன்னை அம்மான்னு கூப்பிடுறாளே திக்ஷி அவ என் மகள் தான். போன வருடம் நடந்த ஒரு விபத்தில் என் அண்ணன் குடும்பமும், என் மனைவியும் இறந்துட்டாங்க. அப்போதுல இருந்து இந்த நொடி வரை நான் தான் அவளுக்கு எல்லாமே" என்று துர்வா கண்கள் கலங்கியப்படி அவனுடைய கடந்த காலக் கசப்பை எந்த வித சுவரசியமும் கலக்கமால் சொல்லி முடித்தான்.
“சாரி” என்று வருந்தியப்படி சொன்ன ரோஜா, "ஆனா என்னை ஏன் அந்த குழந்தை அம்மான்னு கூப்பிட்டாள்?" என்று கேக்க, அவள் கேள்விக்கு பதிலாக அமைந்தது திக்ஷித்தாவின் அன்னையின் புகைப்படம்.
அந்த புகைப்படத்தை பார்த்த ரோஜாவின் கண்களை அவளாலேயே நம்ப முடியவில்லை. காரணம் இந்த உலகத்தில் ஒருவரை போல ஏழு பேர் இருக்க வாய்ப்பு உள்ளது என்ற சொல்லுக்கு எடுத்துக்காட்டாக அந்த புகைப்படம் அமைந்து இருந்தது.
ஆமாம். துர்வாவின் மனைவி, திக்ஷிதாவின் அம்மாவுக்கு கிட்டத்தட்ட ரோஜாவின் முக சாயலே இருந்தது. ஏன் அவளின் நகல்தான் இவள் என்று சொல்லும் அளவுக்கு ஒற்றுமை இருந்ததை கண்டு ரோஜாவே வியந்து தான் போனாள்.
"என்ன ரோஸ் அப்படி பாக்குற? என் மனைவி போல தானே நீயும் இருக்க?" என்று துர்வா கேட்டான்.
கட்டிலில் இருந்து பொறுமையாக எழுந்த ரோஜா, "என்னை போல தான் அவங்க இருந்து இருக்காங்க" என்று சொன்னவள் கால் தடுமாறி கட்டிலில் மீண்டும் அமர்ந்தாள்.
"என்ன ரோஸ் மயக்கம் வருது போல இருக்கா? நான் மறுபடியும் டாக்டரை வர சொல்லவா?" என்று துர்வா பதறினான்.
"இல்ல இல்ல துர்கா. நான் ஓகே தான்" என்று திடமாக எழுந்த ரோஜா, தன் பையை எடுத்து கொண்டு அறையின் வாசலை நோக்கி அடி எடுத்து வைத்தாள்.
"ரோஸ் என்ன வீட்டுக்கு போறியா?" என்று துர்வன் கேட்டதும், அதிகமாக அவனிடம் பேச விரும்பாதவளாக, "ம் ஆமா துர்கா. நான் கிளம்புறேன். ஆமா உங்க குழந்தை எங்க? அவங்கள கூப்பிட்டீங்கன்னா செல்லம் கொஞ்சிட்டு போறேன்" என்று பொதுவாக அனைவர்க்கும் குழந்தைகள் மீது ஏற்படும் அன்பினால் ரோஜாவும் கேட்டாள்.