• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Feb 6, 2025
Messages
111
பகுதி 4

பின் தலையில் அடிபட்டு மயங்கிய ரோஜா கண் விழித்த போது, ஒரு அறையில் அவள் எதிரில் ஒரு ஆண் மகன் நிற்பதை உணர்ந்து, கொஞ்சம் கொஞ்சமாகத் தன் பார்வையைக் கூர்மையாக்கி நோக்கியவள் கண்களுக்கு, ஆறடி உயரம், கட்டுமஸ்தான தேகம், வசீகர முகம், வெள்ளை நிறம் என்று இப்படிப்பட்ட வர்ணனைக்கு எல்லாம் அப்பாற்பட்டவனாக ஒருவன் நின்று இருக்க, அவனை பார்த்ததும் கட்டிலில் இருந்து பொறுமையாக எழுந்து அமர்ந்த ரோஜா,
"துர்கா நீங்களா?" என்று ஆச்சரியமாகக் கேட்டாள்.
"ம்... ஆமா ரோஸ். நான் தான் துர்கா. பரவாயில்லையே என்னை இன்னுமா மறக்காம இருக்க" என்று அவன் இயல்பாக கேட்டாலும்,
"எப்படி உங்களை மறக்க முடியும்? என் கல்லூரி காலத்தின் கனவுக் கண்ணன் அல்லவா நீங்கள்" என்று தன் மனதில் எழுந்த பழைய நினைவுகளை சட்டென்று மறைத்து கொண்டவள், தன் பின் தலையில் கை வைத்து பார்க்க, வலி இருப்பதை உணர்ந்தாள்.
"என்ன ரோஸ் வலி ரொம்ப இருக்கா? டாக்டர் ஊசி போட்டு இருக்காரு. இன்னும் கொஞ்ச நேரத்துல வலி குறைஞ்சிடும்" என்று சொன்னவன், ரோஜாவின் கைப்பையை அவளிடம் கொடுத்தான்.
"துருவ் சார். உங்கள பெரிய ஐயா கூப்பிடுறாங்க" என்று ஒருவர் அழைத்ததும், "நீங்க போங்க. நான் இதோ வரேன்” என்று அவளிடம் திரும்பியவன், “ரோஸ் ஜஸ்ட் பைவ் மினிட்ஸ்" என்று சொல்லி வேகமாக அந்த அறையை விட்டு ஓடியவனின் பெயர் துர்வேஸ்வரன்.
துர்வா! நம் ரோஜா படித்த கல்லூரியின் சீனியர். கல்லூரி முதல் நாள் ராகிங் என்ற பெயரில் சீனியர்ஸ் அடிக்கும் கூத்துக்கு தாளம் தட்டாமல் தன்னை அவர்களிடம் இருந்து காப்பாற்றி, ஆறு வருடத்திற்கு முன்பே ரோஜாவின் மனதில் நாயகனாக மாறிய துர்வேஸ்வரனை ரோஜா மட்டும் துர்கா என்று அழைப்பது தான் வழக்கம்.
துர்வாவும், ரோஜாவும் ஒரே கல்லூரியில் படித்தாலும், சீனியர் ஜூனியர் என்ற வேற்பாடுகளால் அதிகமாக சந்திப்பதோ, ஒன்றாக நேரம் செலவிட்டதோ இல்லை. வாரத்தில் இரண்டு, மூன்று முறை கல்லூரி நூலகத்தில் பார்த்துக் கொண்டாலும் இவர்களின் உரையாடல் இன்றளவும் மனதிற்கு இனிமை பயர்த்ததாக தான் இருந்தது.
ஆறு வருடத்திற்கு பிறகு சென்னையில் துருவை சந்திப்போம் என்று சற்றும் எண்ணி பார்க்காத ரோஜாவிற்கு, இந்த நிகழ்வு எப்படி நடந்தது என்ற குழப்பம் மீண்டும் தலை வலியை அதிகரித்தது.
"அம்மா! அம்மா எழுந்துட்டீங்களா?" என்று அறை வாசலில் இருந்து சிறுமி ஒருத்தி ஓடி வர, ஏதும் புரியாதவளாக குழம்பி போனாள் ரோஜா.
"திக்ஷி ஓடாதமா நில்லு. பாட்டியாளா ஓட முடியல. நில்லுனு சொல்றேன் இல்ல" என்று அந்தச் சிறுமியை கெஞ்சியப்படியும் கொஞ்சியபடியும் வயதான பெண்மணி அறைக்குள் நுழைந்தார்.
வேகமாக ஓடி வந்த சிறுமி ரோஜாவின் கழுத்தை இறுக்கி கட்டிக்கொண்டு அவள் கன்னத்தில் முத்த மழை பொழிய, சிறுமியின் அன்பில் சப்தநாடியும் அடங்கியவளாக மாறிப்போனாள் ரோஜா..
"திக்ஷி என்ன பண்ற நீ? முதல்ல அவங்க மேல இருந்து கீழே இறங்கி வா. பாவம் அவங்க கையில வேற அடிபட்டு இருக்கு பாரு" என்று சற்று கண்டிப்பான குரலில் அந்த சிறுமியை கண்டித்தப்படி துர்வாவின் குரல் ஒலிக்க, அந்தச் சிறுமியோ எதையும் காதில் வாங்கி கொள்ளாமல் ரோஜாவின் மடியில் ஐக்கியமாகினாள்.
“சாரி ரோஸ். திக்ஷி இப்படி தான். பாட்டிம்மா பாப்பாவை உங்க ரூமுக்கு அழைச்சிட்டு போங்க. திக்ஷி நீ பாட்டி கூட போ. நான் இதோ வரேன் " என்று துர்வா சொன்னதும்,
"அம்மா நான் பாட்டி கூட போறேன். நீங்க அப்புறமா என்னை வந்து அழைச்சிட்டுப் போங்க" என்று சொன்ன சிறுமியை அழைத்து கொண்டு சென்றார் துருவின் வீட்டில் பணிபுரியும் வயதான பெண்மணி ஓருவர்.
"என்ன ரோஸ் அப்படி பாக்குற? நீ எப்படி இந்த வீட்டுல இருக்கன்னு யோசிக்கிறியா?" என்று ரோஜாவின் மனதில் எழுந்த கேள்விக்கு பதிலை அளிக்கும் இடத்தில் இருந்தான் துர்வா.
"அந்தக் குழந்தை என்னை அம்மான்னு கூப்பிட்டதும், ஒரு கார் அந்த பிள்ளையை இடிக்க வந்துச்சு. அப்போ நான் அந்த குழந்தையை தூக்கிகிட்டேன். அந்த சமயம் தான் நான் கீழே விழுந்து தலையில் அடிபட்டு மயங்கி விழுந்துட்டேன் போல" என்று ரோஜா நடந்த சம்பவத்தை விவரித்தாள்.
"ம் ஆமா ரோஸ். ஆனா நீ மயங்கிய பின்னாடி உனக்கு என்ன நடந்துச்சுனு உனக்கு தெரியணும்னா, அதை நான் தானே சொல்ல முடியும்" என்று சிரித்து கொண்டே சொன்ன துர்வா, கட்டிலில் அமர்ந்து இருந்த ரோஜாவின் அருகில் உள்ள நாற்காலியில் அமர்ந்தான்.
"உன்னை அம்மான்னு கூப்பிடுறாளே திக்ஷி அவ என் மகள் தான். போன வருடம் நடந்த ஒரு விபத்தில் என் அண்ணன் குடும்பமும், என் மனைவியும் இறந்துட்டாங்க. அப்போதுல இருந்து இந்த நொடி வரை நான் தான் அவளுக்கு எல்லாமே" என்று துர்வா கண்கள் கலங்கியப்படி அவனுடைய கடந்த காலக் கசப்பை எந்த வித சுவரசியமும் கலக்கமால் சொல்லி முடித்தான்.
“சாரி” என்று வருந்தியப்படி சொன்ன ரோஜா, "ஆனா என்னை ஏன் அந்த குழந்தை அம்மான்னு கூப்பிட்டாள்?" என்று கேக்க, அவள் கேள்விக்கு பதிலாக அமைந்தது திக்ஷித்தாவின் அன்னையின் புகைப்படம்.
அந்த புகைப்படத்தை பார்த்த ரோஜாவின் கண்களை அவளாலேயே நம்ப முடியவில்லை. காரணம் இந்த உலகத்தில் ஒருவரை போல ஏழு பேர் இருக்க வாய்ப்பு உள்ளது என்ற சொல்லுக்கு எடுத்துக்காட்டாக அந்த புகைப்படம் அமைந்து இருந்தது.
ஆமாம். துர்வாவின் மனைவி, திக்ஷிதாவின் அம்மாவுக்கு கிட்டத்தட்ட ரோஜாவின் முக சாயலே இருந்தது. ஏன் அவளின் நகல்தான் இவள் என்று சொல்லும் அளவுக்கு ஒற்றுமை இருந்ததை கண்டு ரோஜாவே வியந்து தான் போனாள்.
"என்ன ரோஸ் அப்படி பாக்குற? என் மனைவி போல தானே நீயும் இருக்க?" என்று துர்வா கேட்டான்.
கட்டிலில் இருந்து பொறுமையாக எழுந்த ரோஜா, "என்னை போல தான் அவங்க இருந்து இருக்காங்க" என்று சொன்னவள் கால் தடுமாறி கட்டிலில் மீண்டும் அமர்ந்தாள்.
"என்ன ரோஸ் மயக்கம் வருது போல இருக்கா? நான் மறுபடியும் டாக்டரை வர சொல்லவா?" என்று துர்வா பதறினான்.
"இல்ல இல்ல துர்கா. நான் ஓகே தான்" என்று திடமாக எழுந்த ரோஜா, தன் பையை எடுத்து கொண்டு அறையின் வாசலை நோக்கி அடி எடுத்து வைத்தாள்.
"ரோஸ் என்ன வீட்டுக்கு போறியா?" என்று துர்வன் கேட்டதும், அதிகமாக அவனிடம் பேச விரும்பாதவளாக, "ம் ஆமா துர்கா. நான் கிளம்புறேன். ஆமா உங்க குழந்தை எங்க? அவங்கள கூப்பிட்டீங்கன்னா செல்லம் கொஞ்சிட்டு போறேன்" என்று பொதுவாக அனைவர்க்கும் குழந்தைகள் மீது ஏற்படும் அன்பினால் ரோஜாவும் கேட்டாள்.
 
Joined
Feb 6, 2025
Messages
111
“வேண்டாம் ரோஸ். திக்ஷி உன்ன மறுபடியும் பார்த்தா கண்டிப்பா அவ உன்ன இங்க இருந்து வெளியேற விடமாட்டாள். நீ சொல்லாம கிளம்புறது பெட்டர்" என்று துர்வா சொன்னான்.
அவன் பேச்சில் இருந்த எதார்த்தத்தை புரிந்து கொண்ட ரோஜா, "ம்... சரி நான் போய்ட்டு வரேன்" என்று சொன்னவள் அந்த அறையில் இருந்து வெளியே சென்றாள்.
"வா மா. என்ன அதுக்குள்ள கிளம்பிட்டியா? கையில வேற காயம் பட்டுருக்கு. இப்போ பின் தலையில ஒன்னும் வலி இல்லையே?" என்று ரோஜாவை அன்பாக விசாரித்த முதியவர் தான், துர்வாவின் தாத்தா என்று ரோஜாவிற்கு தெரிய வாய்ப்பில்லை.
"என்னமா அப்படிப் பாக்குற? நான் தான் துர்வாவோட தாத்தா. என் பெயர்... இல்ல வேணாம். நீ என்னை துர்காவின் தாத்தான்னே அழைக்கலாம்" என்று அந்த முதியவர் சொல்லும் தோரணையை வைத்தே தெரிந்தது, ரோஜாவை பற்றிய சில தகவலகள் அவர் அறிந்து இருப்பார் என்று.
"ரோஸ் இவர் தான் என் தாத்தா. திக்ஷியை நானும் இவரும் தான் மதியம் ஷாப்பிங் அழைச்சிட்டு போனோம். அப்போ தான் தூரத்தில் இருந்து உன்னை பார்த்துட்டு, எங்களை எல்லாம் கேளாமல் உன்கிட்ட ஓடி வந்தாள். அப்போ தான் உனக்கும் தலையில அடிபட்டு நீ மயங்கிட்ட. உன்னை இத்தன வருஷம் கடந்து அப்படி ஒரு சந்திரப்பத்தில் சந்திப்பேன்னு நான் நினைக்கவே இல்ல. மயங்கி இருந்த உன்னை பார்த்து திக்ஷி அழ தொடங்கிட்டாள். அவளை சமாதானம் செய்த பின், உன்னையும் எங்க கூட நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு வர வேண்டியதா போச்சு" என்று துர்வா விளக்கமாக சொல்லி முடித்தான்.
"ம்... புரிஞ்சிக்கிட்டேன். சரி துர்கா நான் கிளம்புறேன். தாத்தா என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க" என்று ரோஜா தாத்தாவின் காலில் விழ, அவளை மனதார வாழ்த்திய தாத்தா.
"நீ நம்ம காருலேயே போய் உன் வீட்டுல இறங்கிக்கோமா. துர்வா நம்ம டிரைவர்கிட்ட சொல்லி ரோஜாவை அழைச்சிட்டு போய் அவ வீட்ல விட சொல்லு" என்று அவர் சொல்ல, மறுத்திடலாம் இல்லாமல் ரோஜாவும் வாசலை நோக்கி நடந்தாள்.
ரோஜா வாசலில் போய் நின்றதும், "என்ன துர்வா? இவ எப்படி இந்த ஊருல?" என்று தாத்தா கேக்க..
"எனக்கும் தெரியல தாத்தா. ஆனா, அவ முகத்துல பழைய பொலிவு இல்லை. இவ புகுந்த வீடு கோவையில் இருக்குன்னு என் ப்ரெண்ட்ஸ் எல்லாம் சொன்னாங்க. ஆனா, இன்னைக்கு சென்னையில இருக்கா. இவ ஹஸ்பன்ட் என்ன பண்ணுறாரு? எத்தனை குழந்தை? இப்போ எங்க இருக்கா? இப்படி எந்த விவரமும் அவளா சொல்லல" என்று தன் தாத்தாவின் காதில் துர்வா கிசுகிசுத்தான்.

"நீ எந்த விவரமும் கேக்கலையா?" என்று தாத்தா துர்வனை கேட்டார்.
“நான் கேட்டு அவ சொல்லலைனா எனக்கு கஷ்டமா போயிடும் தாத்தா. அதான் நானும் கேக்கல" என்று பதில் சொன்ன துர்வன் வாசலை நோக்கி சென்றான்.
"டிரைவர் இவங்கள அவங்க சொல்ற அட்ரஸ்ல போய் இறக்கி விட்டுடுங்க" என்று அவன் சொல்ல,
ரோஜா காரின் பின் கதவை திறந்தவள், "துர்கா குழந்தையை பார்த்துக்கோங்க. ஹாங்! உங்களுக்கு பிரச்சனை இல்லைனா உங்களோட போன் நம்பர் தாங்க. நான் உங்க குழந்தை எப்படி இருக்கான்னு தெரிஞ்சிக்க வழியா இருக்கும்" என்று ரோஜா சொன்னதும் தன் பாக்கெட்டில் இருந்த விசிட்டிங் கார்டை எடுத்து நீட்டினான்.
"நானே உன் போன் நம்பர் கேட்க தான் நினைச்சேன். நான் கேட்டு நீ தரலைனாலோ, இல்லை உனக்கு ஏன் தரனும் சொல்லிட்டாலோ என்ன பண்றதுன்னு தயங்கி தான் கேக்கல" என்று துர்வா சொன்னான்.
அவன் நீட்டிய கார்டை வாங்கி தன் கைக்குள் பிடித்து வைத்தவள், "கேட்டுப் பார்த்தா தானே கிடைக்குமா கிடைக்காதான்னு தெரிய வரும்" என்று சொல்லிக்கொண்ட ரோஜா காரில் ஏறி அமர்ந்தாள்.
கார் துர்வாவின் வீட்டை விட்டு சீறிப் பாய்ந்தது. துர்வா கார் மறையும் வரை வாசலில் நின்றவன் எதேதோ எண்ணங்களை எண்ணியவாரே வீட்டுக்குள் நுழைந்தான்.
"என்ன துர்வா, ரோஜா கிளம்பிட்டாளா?" என்று தாத்தா கேட்கும் கேள்விக்கு
"ம்..." என்று தலையை அசைத்த துர்வன் தன் அறைக்குள் சென்றான். அறையின் மூலையில் உள்ள பீரோவைத் திறந்தவன்,ஆறு வருடத்திற்கு முன்பு தன் மனதில் உதித்த எண்ணங்களை எல்லாம் எழுத்தாக சேமித்து வைத்த கைக்குறிப்பு புத்தகத்தை எடுத்தான். அதில் காய்ந்த ரோஜா மலரின் கருமை நிறம் படர்ந்து இருந்த காகிதத்தில், அவளுக்காக எழுதிய எழுத்தின் மேல் கை வைத்து வருடினான்.
நான் பதியம் போடாமல்
என்னிதயத்தில்
தானாகத் துளிர்விட்ட
ரோஜா மலரே!
என் காதல் ரோஜாவே
உனை நான் ரசிக்கும் முன்னே
இன்னொருவன் கழுத்துக்கு
மாலையாகப் போனாயே!
ஏனென்றுரைப்பாயா மென் மலராளே!
என்ற எழுத்துக்களை வாசிக்கும் பொழுது அவன் இதய வலியை மூளை உணர்ந்தது.
துர்வாவின் காரில் கனகா வீட்டுக்கு சென்று இறங்கினாள் ரோஜா.
"ரொம்ப தேங்க்ஸ் சார்" என்று சிரித்த முகத்துடன் டிரைவரிடம் சொன்னவள், தன் பையில் இருந்த சாவியை கொண்டு கனகாவின் வீட்டு கதவை திறந்து உள்ளே நுழைந்தாள். பின், தன் பையை ஓரம் வைத்து சோர்வாக சோபாவில் அமர்ந்தவள் கண்களில் தானாக கண்ணீர் துளிகள் எட்டி பார்த்தது.
"என்ன ரோஜா? கதவை கூட லாக் பண்ணாம உள்ள என்ன பண்ற? பகல்ல கூட இந்த ஏரியால திருட்டு பயம் இருக்கும். எப்பவும் ஜாக்கிரதையாகவே இரு" என்று சொல்லிக்கொண்டே கதவை தாழிட்ட கனகா, அப்போது தான் வேலையில் இருந்து வீடு திரும்பினாள்.
சட்டென்று தன் கண்ணீரை துடைத்து கொண்ட ரோஜா, “சாரி நான் கதவை லாக் பண்ண மறந்துட்டேன்" என்று சோபாவில் இருந்து எழுந்தவளின் கையில் இருந்த பிளாஸ்டர் பார்த்து கனகா பதறினாள்.
"என்ன ரோஜா இது? என்ன காயம் இது? கையில் பேண்ட் எய்ட் போட்டுருக்கு? என்னாச்சுமா?" என்று பதறிய கனகாவிடம், மதியம் நடந்த சம்பவங்களை விவரித்து சொன்னாள் ரோஜா.
"என்ன உன் காலேஜ் சீனியரை இந்த ஊருல பார்த்தியா? அதுவும் அவரோட தாயில்லா பிள்ளையை நீ காப்பாற்றுனியா?" என்று கனகா கேள்வியை கூட ஆச்சிரியமாகக் கேட்டாள்.
"ம் ஆமா. ஆனா, அந்த குழந்தை பாவம். என்னை அம்மான்னு அவ அழைத்தது, என் இதயத்தின் ரத்த ஓட்டத்தை இரு மடங்காக பெருக்கியது" என்று ரோஜா கண்கள் கலங்கினாள்.
"சரி சரி. நீ ரொம்ப யோசிக்காத. முதல்ல மாடியில போய் நைட்டி சேன்ஜ் பண்ணு. நான் டின்னர் ரெடி பண்ணிட்டு மாடிக்கே உனக்கு சாப்பாடு கொண்டு வரேன்" என்று கனகா அக்கறையோடு சொன்னாள்.
"பரவாயில்ல நானே கொஞ்ச நேரத்துல கீழே இறங்கி வரேன்" என்று தன் கைப்பையுடன் மாடிக்கு ஏறினாள் ரோஜா.
இன்று தன் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை எல்லாம் நினைத்து பார்த்தப்படி குளிக்க சென்றவள், நைட்டியுடன் வெளியே வந்து தன் ஹாண்ட் பேகில் இருந்து அவள் போனை எடுக்க, தன் பையில் இருந்த
"நந்திபுரத்து நாயகி" என்ற புத்தகத்தை பார்த்து தானாக ரோஜாவின் இதழ்கள் மலர்ந்தது.
அமரர் கல்கி அவர்கள் பொன்னியின் செல்வன் புதினத்தின் தொடர்ச்சியாகவும், பொன்னியின் செல்வனில் வருகி்ன்ற கதாபாத்திரங்களை மையமாக கொண்டும், எழுத்தாளர் விக்கிரமன் எழுதிய புதினம் தான் நந்திபுரத்து நாயகி ஆகும். இந்த புதினம் மூன்று பாகங்களை கொண்டது.
"இந்த புத்தகம் எப்படி நம்ம பையில இந்த கதையின் மூன்றாம் பாகத்தை படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட கால கட்டத்தில், இதை தேடி எத்தனை நூலகத்துக்கு நான் நடையாக நடந்து இருப்பேன். ஆனா, இத்தனை வருஷம் கடந்து இந்த புத்தகம் என் கையில் எப்படி?" என்று யோசித்தவள் புத்தகத்தின் தலைப்பை வாசித்த பின் முதல் பக்கத்தை திருப்பி பார்த்தாள்.
"இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் ரோஸ்" என்று எழுதி இப்படிக்கு உன் துர்கா என்ற பெயரை பார்த்தவள், அந்த பக்கத்தின் கீழே உள்ள துர்வாவின் கையொப்பத்துடன் இணைந்து இருந்த தேதி தெளிவாக சொன்னது, இந்த புத்தகம் ரோஜாவின் பிறந்தநாள் பரிசாக தர வேண்டும் என்று துர்வா, ஆறு வருடத்திற்கு முன்பு வாங்கி வைத்திருந்ததை இன்றைக்கு தான் இவள் கையில், இல்லை இல்லை பையில் சேர்த்துள்ளான் என்று.
✍ தனக்காக படைக்கப்பட்ட அனைத்துமே தக்க சமயத்தில் நம்மை வந்து சேரும் என்பது தான் வாழ்க்கையின் அழகு!
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
346
ஹா ஹா... நான் தான் சொன்னனே... இனியாவது இருவரும் சேர்ந்து வாழட்டும்😩😩😩😩ஆனால் அந்த வீணா போன வெங்காயம் எதாவது குடைச்சல் குடுப்பானா எக்ஸ் புருஸ்
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top