• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
529
சீமக்க ரை:

மாமா என்றவாறு வளவனிடம் வந்தவள் எப்படி இருக்கீங்களென்று கேட்க நல்லா இருக்கேன் டா.நீ எப்படி தாமரை இருக்க என்றான்.

நல்லா இருக்கேன் மாமா.உங்க வேலையெல்லாம் எப்படி போகுது?.

ம்ம் நல்லா தான் போகுது. ஆமாம் ஒரு வார்த்தை கூட சொல்லலையைடா என்றவனுக்கு சர்ப்ரைஸ் மாமா என்றாள்.

சரி போய் குளிச்சிட்டு வாங்க மாமா சாப்பிடலாமென்றவளிடம் திருமணநாள் வாழ்த்துக்கள்டா தாமரை என்க தேங்க்யூ மாமா. நீங்கள் எப்போ கல்யாணம் பண்ணபோற ஐடியா என்க,வளவனுக்கு அத்தை மகள் கேட்ட கேள்விகளால் வெண்ணிலாவின் நினைவு வந்தது.

வளவனின் முகம் மாற்றத்தை கவனித்தவள் ஏதோ விஷயம் இருக்கு போல என்று நினைத்து சரிங்க மாமா நீங்க போயிட்டு ப்ர்ஷ் ஆகிட்டு வாங்க என்றவாறு கிச்சனுக்கு சென்றாள்.

அத்தை எல்லாருக்கும் டிபனை எடுத்து வைக்கட்டுமா என்க,சரி தாமரை.
உங்க அம்மாச்சிக்கு பூரி புடிக்காது. அங்க கேப்பை களியும் சுண்ட குழம்பும் வச்சிருக்கேன் பாரு அதை குடுத்து என்ற சீதா,ராதா நீ வடைக்கு உளுந்து ஊற வை என்றவாறு பூரியை பொரித்து முடித்தார்.

தாமரையும் சீதா சொன்னதை போல செய்தவள் நிலன் எப்படி படிக்கிறாங்கத்தை என்க,நல்லா படிக்கிறான் தாமரை. அடுத்த வாரம் கோயில் திருவிழா வருது இல்லையா வரேன்னு சொல்லியிருக்கான்னு ராதா சொல்ல சரிங்கத்தை என்றவள் அப்புறங்கத்தை என தயங்க...

சொல்லுமா..

ஏன் தயங்குறயென்று ராதா கேட்க...

அத்தை இன்னைக்கு சாயந்தரமா அங்க நீலகிரிக்கு கூப்பிட்டு போறேன்னு உங்க பையன் சொல்லுறாங்க என்றாள்.

நானே சொல்லணும்னு நினைச்சேன் என்ற சீதா தாராளமா போ..முதல்ல வேதாவை பார்த்துவிட்டு வாம்மா.
வேதாவுக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கும் அதை நீ யோசிக்கவே இல்ல பாரு இந்த விஷயத்துல உன் மேல எனக்கு வருத்தம் தான் தாமரை என்றார்.

தப்பு பண்ணிட்டேன் அத்தை என தாமரை வருத்தப்பட சரி நல்ல நாள் அதுவுமா எதுக்கு வருத்தப்படுற கண்ணு போய் உன் மாமாக்களுக்கு சாப்பாடு பார்த்து பரிமாறு போ என்ற ராதா மருமகளை அனுப்பி வைத்தார்.

தாமரையும் எல்லாருக்கும் பார்த்து பார்த்து பரிமாற அத்தை எனக்கு டீ என்று வேலு சொல்ல...

ஏன் மாடு...

இப்ப தானடா சாப்பிட்ட அதுக்குள்ள என்ன உனக்கு டீ கேக்குது என்று பிரகாசம் தாத்தா கேட்க சகல பாடி...
டீயை குடிக்க போறது என் தொண்ட உள்ள போறது என் வயிறு உனக்கு எங்கு பத்திக்கிட்டு எரியுது என்றான்.

அடேய் வந்தேனா தலையை திருகிடுவேன் என்றவர் எல்லாம் உன்னால் வந்ததுடி. அவனுக்கு டீயை பழக்கம் பண்ணாதேனு தலபாடா அடிச்சிக்கிட்டேன்.எங்கையாவது கேட்டியாயென்று தனது மனைவி வள்ளியை கடிந்து கொண்டார்.

அய்யா வேலு...

செத்த நேரம் போயி குடிய்யா என்க அதற்கு வேலுவோ சரி செல்லம் என்றான்.

ஏண்டி இதை தானடி நானும் அவனுக்கு சொன்னேன் என்று பிரகாசம் தாத்தா முறைக்க...

சரி ..விடு விடு விடு....

கார்த்திகைல மழை வருவதும் ஆடியில் ஆபர் போடுவதும் உலக வழக்கம் தானேயென்ற வேலு, தாத்தாவோடா ஊஞ்சல் வந்து உட்கார்ந்தவன்,தாத்தா தாத்தா என்றான்.

ம்ம் காது தான் கேட்குதே சொல்லுடா என்றவருக்கு இப்போ ஒருத்தன் பொண்டாட்டிய பரிகுடுத்த போல வருவான் பாரு என்கவும், அந்நேரம் வளவனும் முகத்தை சோகமாக வைத்தபடி கீழே வந்தான்.

ஏண்டா இவன் என்னமோ பரிகொடுத்த போல இருக்கிறான் என்று சொல்ல அதான் நான் சொல்லலை பொண்டாட்டியை பரிகொடுத்தான் போல வருவான் பாருன்னு.

என்ன சங்கதி என்று நீயே கூப்பிட்டு விசாரி தாத்தா என்ற வேலு வேறு பக்கம் திரும்பி கொண்டு போனால் போகட்டும் போடா என்ற பாட்டு பாட அது வளவன் காதில் விழவும், தனது அத்தை மகனை முறைத்து பார்த்தான்.

நான் தாமரையை கோயிலுக்கு கூப்பிட்டு போய்வாரேனென்று கதிர் சொல்ல கூப்டு போய்ட்டுவாப்பு என்றனர்.

வாயென்று மனைவியை பார்த்து தலையசைக்க தாமரையும் வீட்டினரை பார்க்க போய்ட்டு வாமா என்றனர்.

நான் என்ன இவளை கடத்திட்டா போறேன் இப்படி பாக்குறாள்?
கல்யாணம் பண்ணி ரெண்டு வருஷமா இன்னும் கன்னி பையனாவே இருக்கிறேன். ஊர் உலகத்துல எந்த புருஷனாவது இப்படி இருப்பானா என்று கதிர் தனக்குள்ளே முணுமுணுத்துக் கொண்டு வெளில போக தியாகி பட்டம் வாங்கணும்னாக்கு இதெல்லாம் அனுபவிச்சு தான் ஆகணும் என்றது அவனின் மனசாட்சி.

எதேஏஏஏ தியாகி பட்டமா என் பொண்டாட்டியோட ஆசைய நிறைவேத்தும் நெனச்சது ஒரு குற்றமா என்று கேட்க, அது தப்புன்னு நான் எங்கடா சொன்னேன் என்றது.

இப்ப நீதானே தியாகி என்று சொன்ன என்று கதிர் கேட்க ஒரு ப்ளோவில் வந்துருச்சுடா அதுக்கு உடனே சண்டியர் வரிஞ்சு கட்டிக்கிட்டு வருவ சரி சரி இனியாவது ரெண்டு பேரும் ஒண்ணா சந்தோஷமா இருங்கடா என்று மனசாட்சி அங்கிருந்து ஓடியது.

வெளியே வந்தவன் கொட்டாயில் இருந்த தனது புல்லட்டை எடுத்து வாசலுக்கு வர தாமரையும் வாசலுக்கு வந்தாள்.

பார்வையாலோ வண்டியில் உட்காரென்று சொல்ல, இதுதான் கணவனோடு செல்லும் முதல் பயணம் என்பதால் தாமரைக்கு படபடப்பாக இருந்தது.

பொறுமையாக வந்தவள் ஏறி உட்கார இருவருக்கும் இருக்கும் கேப்பை பார்த்தவன் ஏண்டி உன் தங்கச்சி உட்கார போறாளா என்க...

உங்களுக்கு நானே பெருசு இதில் என் தங்கச்சி ஒன்னு தான் கேடு என்று கோவமாக சொல்லி முகத்தை திருப்பிக் கொண்டாள்...

ஓஓஓஓ...

ஏண்டி எனக்கென்னடி குறைச்சலென்று கதிர் கேட்க அதற்கு தாமரையோ யாருக்கு தெரியுமென்றாள்.

மாமனை இன்னும் முழுசா தெரிஞ்சிக்காமலே நீயே முடிவு பண்ணாதடி என்றவாறு புல்லட்டை ஓட்டியவன் இடது பக்கத்தில் இருக்கும் கண்ணாடியை சரி பண்ண அதில் மலர்ந்த முகத்தோடு பின்னாடி உட்கார்ந்திருக்கும் தாமரை தெரிந்தாள்.

காற்றின் சதியால் அவளின் முடிகள் லேசாக பறக்க காதில் இருக்கும் லோலாக்கு லேசாக முன்னும் பின்னும் ஆடியது.அவன் மனசாட்சியோ அடேய் சண்டியரே நீ கோயிலுக்கு போறடா என்று தலையில் குட்டு வைக்க...

ம்ம் என்றவன் கோயிலுக்கு செல்லும் ஏரிக்கரை பக்கம் வண்டியை திருப்ப தாமரைக்கு அந்த ஏரியை பார்த்ததும் பழைய நினைவுகள் வந்து வெட்கத்தை குடுத்தது.

இடது பக்கம் திரும்பி தாமரை பூ நிறைந்த ஏரியை பார்க்க அவளின் தேகம் உறசியதில் ஆண் மகனுக்கு தான் அவஸ்தையாக இருந்தது.

ஏனோ அந்த தண்ணீரில் கால் நனைக்க வேண்டும் போல தாமரைக்கு தோண அந்நேரம் கதிரும் சரியாக அந்த படிக்கட்டு இருக்கும் இடத்தில் போய் வண்டியை நிறுத்தினான்.

என்ன...

மேடம்கு எதாவது ஞாபகம் இருக்கா என்று விஷமமாக கேட்க என்ன ஞாபகம், அப்படி எதுவும் எனக்கு நினைவில் இல்லையே என்றாள்.

அதைக்கேட்டவன் ஓஓஓஓ அப்படியா சரிடி. எனக்கு இங்க வந்தாலே ஒரு விஷயம் ஞாபகம் வந்துடும் என்கவும் சரி அதுக்கு என்னவென்று தாமரை படபடப்பாக கேட்க...

கொய்யால யார்க்கிட்டடி என் ராங்கி பொண்டாட்டி என்று தனக்குள் சொல்லியவன் இப்போ பாருடி என்று நினைத்தவன்...ஒரு நாள் நான் இங்க குளிக்க வந்தேனா என்று ஆரம்பிக்க... கோயிலுக்கு நேரத்தோட போகணும் கிளம்புங்க என்றாள்.

கண்ணாடி வழியாக அவள் வெட்க சிவப்பை பார்த்தவன்
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
529
ஓராயிரம் பேர் இருந்தும்
மயங்காத மனமோ உன்
ஒருத்தி சிந்திய கள்ள
சிரிப்பில் சிக்கி தவித்து
சிறையுண்டது......

இதயம் இருக்கிறது
ஆனால் எனக்கு சொந்தம்
இல்லாமல் எப்படி சாத்தியம்?

பார்வையிலே என்னை
கைது செய்த கள்ளியே
உன் வசம் நான் மயங்கிய
நேரத்தில் இதயத்தில்
இடம் பிடித்து இதயமாகவே
மாறி நான் நீயாகிவிட்டாய்....

உன்னை தவிர கண்கள்
வேறொன்றையும்
ரசிக்க விரும்பவில்லை....

உன்னிடம் பேசாத வாய்கள்
மௌனபாஷையை
தத்தெடுத்து கொள்கிறது...

உன் குரல் கேட்காமல்
காதுகள் மந்தமாய்
மாறுகின்றது....

உன்னுடன் நான்
கனவிலும் கற்பனையிலும்
சேர்ந்து சிரித்த நிமிடங்கள்
இதயத்தில் எத்தனை
குளிர்ச்சி என நீ
நன்கு அறிவாயாடி....

தொட்டு தழுவும் தென்றல்போல
என்னை தொடமாலே
குளீரூட்டும் கொதிகலனே
போதுமடி உன் சோதனை..

இப்பாவியின்
பக்திக்கு விமோச்சனம்
கொடுத்தென்னை
ஏற்றுக்கொள்வாயா
என் உயிர் கண்மணியே!


தனது கணவனின் வார்ததைகளை கேட்வள் விழிகள் விரித்து அதிர்ந்து போனாள்.

வார்த்தைகள் அத்தனையும் அவனுக்குள் இருக்கும் காதலையும் தவிப்பையும் அப்பட்டமாக சொல்ல பெண்ணவளக்கு தான் என்ன சொல்வது என்று புரியவில்லை.

மாமா என்று சொல்ல ம்ம் என்றான்.

நம்ம கோயிலுக்கு போகலாமென்று தாமரை சொல்ல ஏண்டி நம்ம என்ன சாமியாராக போறோம்? கோயிலுக்கு தான் போறோம். காலையிலிருந்து இதே பாட்டு தான் படிச்சிட்டு இருக்க கோயிலுக்கு கோயிலுக்கு.

இப்போ என்ன உனக்கு அய்யனாரை பாக்கணும் அவ்வளவு தானே வா தாயே உன்னை கூப்பிட்டு போறேன் என்னறவன் வண்டியை ஸ்டார்ட் பண்ணி வேகமாக அய்யனார் கோயில் செல்லும் பாதையில் சென்றான்.

தாமரைக்கு தான் கணவனின் கோவ குரலை கேட்டு அட ஆண்டவா என்று ஆனது...

நீலகிரி:

மிலன் சாப்ட வாடா என்னும் வேதாவின் குரல் கேட்டு இதோ வரேன்மா என்றவாறு ஸ்கூல் பேகோடு வெளியே வந்தவனை பார்த்தவர் மணி பாரு??ன

எப்போ சாப்ட்டு எப்போ நீ ஸ்கூலுக்கு போகடா என்றவாறு அவனுக்கு டிபனை ஊட்ட அக்கா உங்க செல்லத்தில் தான் இவன் வாழைப்பழ சோம்பேறியா இருக்கானென்றார் மயிலா.

விடு மயிலா...

சின்னவன் தானே...

அடுத்த வருஷம் படிக்க வெளியே போய்டுவான் அப்போ இதையெல்லாம் நாமளும் தான் மிஸ் பண்ணுவோம் என்றபடியே ஊட்டியவர் கண்ணா டெஸ்ட் ஒழுங்கா பண்ணு என்க...

அம்மா அந்த நாலவது தேரம் தான் குழப்புது என்றான்.

அப்படியா...

மதியம் தானே டெஸ்ட். இன்றைக்கு தான் பி. ஈ. டி பீரியட் இருக்கே விளையாட போகாமல் அதில் படி என்க...

அம்மா எல்லாரும் விளையாடுவாங்களே என முகத்தை சோகமாக வைத்தவாறு மிலன் சொல்ல...

நோ மிலன்.

போன முறையே மேத்ஸ்ல மார்க் குறைவா இருக்குனு அண்ணன் சத்தம் போட்டான் ஞாபகம் இருக்கு தானே என்று கேட்டார்.

மருதுவின் பெயரை கேட்டவுடனே சரிங்கம்மா என்றவன் மயிலா-வேதா இருவரிடமும் சொல்லிக் கொண்டு ஸ்கூலிற்கு சென்றான்.

அக்கா நீங்க கிளம்புங்க நான் பார்த்துக்குறேனென்று மயில் சொல்ல...

சரி மயிலா நான் வர எப்படியும் நைட் ஆகிடும். கடைசி பஸ்ஸுக்கு வந்துடுறேன் என்றவாறு தனது அறைக்கு சென்றவர் சிறிது நிமிடத்தில் தயாராகி வெளியே வந்தவருக்கு மயிலா டிபனை பரிமாற சாப்பிட்டு எழுந்தவர் சரி நான் வரேன்.

நீயும் சாப்பிட்டு வேலையை பாரு.
ஜம்பு வருவான் சாவியை கொடுத்திடு என்க..

சரிங்கக்கா நான் பார்த்துக்குறேன் நீங்கள் கிளம்புங்க. பஸ் வர நேரம் ஆகிட்டென்றார்.

ம்ம் என்றவாறு வேதா அங்கிருந்து பஸ் ஸ்டாப்பிற்கு சென்ற சில நிமிடத்தில் கோவைக்கு போகும் பஸ் வர அதில் ஏறினார்.

தெரிந்தவர்களோ என்ன நர்ஸம்மா மீட்டிங்கா என்க ஆமாம் என்றார்.

அந்நேரம் வேதாவின் போனிற்கு கால் வர ஹேண்ட் பேகை திறந்து போனை எடுத்து பார்க்க மருது என்று வந்தது.

சொல்லுப்பா நல்லா இருக்கியா?

நல்லா இருக்கேன் மா.

நீங்க கிளம்பிட்டீங்களா என்றான். ம்ம் பஸ்ல தான் இருக்கேன்யா என்றவரிடம் அம்மா ஒரு விஷயம் என்றான்...

சொல்லுய்யா என்று வேதா கேட்க நான் ஊருக்கு வரேன் மா.மூணு மாசம் லீவ் கிடைச்சிருக்குமாயென்று மருது சொல்ல அப்படியா... சந்தோஷம்யா எப்போ உனக்கு ப்ளைட் என்றார். அங்க தான் ரெடியாகிட்டு இருக்கேன் மா என்றவனிடம் சரிய்யா பார்த்து வாயென்று மேலும் சிறிது நிமிடம் பேசி விட்டு போனை வைத்தார்.

தொடரும்
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top