• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
499
டேய் காட்டான் தூக்கி விடுடாயென்று தாமரை சொல்லிய பிறகே நிகழ்விற்கு வந்தவன்,தாமரை என்று பதறி போய் கீழே விழுந்து கிடப்பவளை தூக்கி அங்கிருந்த கட்டிலில் உட்கார வைத்தவன்,நிஜமா நீ தானாடி என்று அவள் முகத்தை தொட்டு பார்த்தவாறு வர அவள் வாயிடம் விரல்கள் வந்ததும் நன்கு கடித்து வைத்தாள்.

ஆஆஆ...என்று கத்தியவனை பார்த்து முறைத்தவள் ஏன்யா இப்படிதான் தள்ளி விடுவதா என்க...

ஏய் ரொம்ப அடி பட்டுடுச்சாடி என்று அவள் இடுப்பில் கை வைக்க போக ம்ம் என்று முறைத்தவளை பார்த்தவன் மன்னிச்சிக்கோ தாமரை.உண்மையிலே இது கனவா இல்ல நிஜமாடி என்றான்.

அடப்பாவி புருசா...

உன்னை பார்க்க அடிச்சி புடிச்சி அந்த நாட்டிலிருந்து ஓடி வந்தாள் இவன் என்ன இப்படி கேட்குறானென்று நினைத்தவள் எட்டி அவன் மீசையை பிடித்து திருக அதில் வலி வந்தது.

ஏன்டி என முகத்தை சுருக்கி கதிர் கேட்க, நிஜம் தான் யா நம்புயென்றாள்.

இரண்டு வருடங்களுக்கு பிறகு பார்த்த தனது காதல் மனைவியை இப்பொழுது தான் விளக்கின் வெளிச்சத்தில் விழிகளை சுருக்கி நன்கு உற்றுப் பார்த்தான்.கதிரின் லேசர் பார்வையில் தாமரைக்கு ஒருவித குறுகுறுப்பை ஏற்படுத்தியது.

இவ்வளவு நேரம் அடாவடி பெண்ணாக இருந்தவள் இப்பொழுது தன் கணவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் தலை குனிந்தாள்.
தாமரை என்று எட்டி அவள் கையை பிடித்து இழுக்க பல்லி போல அவன் நெஞ்சில் ஒட்டியவளுக்கு நடுக்கம் வந்தது.

கதிர் பனியன் போட்டிருந்ததால் அவன் நெஞ்சின் ரோமங்கள் தாமரையின் முகத்தில் பட்டு கூச்சத்தை குடுக்க,ம்ம் என அவனிடமிருந்த விலக போனவளை இறுக்கி அணைத்தவன் கொஞ்ச நேரம் சும்மா இருடி.உன்னை ஒன்னும் முழிங்கிடமாட்டேன் என்றான்.

ஆமாம் அப்படியே முழிங்கிட்டாலுமென்று தாமரை முணு முணுக்க, ஏய் என்னடி சொன்னயென்று அவள் காதோரம் கேட்க தாமரைக்கு தான் கணவனின் தீண்டல்கள் பெரும் அவஸ்தையாக இருந்தது.

அவன் அணைவிற்குள் இருந்தவள் நெளிய மேலும் அவளை சோதிக்க விடாமால் எப்படி இருக்கடி என்றான்.

ம்ம் என்று கோவம் பொங்க முறைத்தவள் ஏண்டா ஒருத்தி நாட்டை விட்டு போனாளே என்னாச்சி ஏதாச்சினு ஒரு போன் பண்ண உனக்கு துப்பு இல்லையா என்று தனது இரண்டு கைகளாலும் கணவனை அடித்தவள் அவன் நெஞ்சின் மீது சாய்ந்து அழுதாள்.

மாமா என்ன மறந்துட்டாய் தானே என்று தாமரை கேட்க,தன்னவள் முதன் முதலில் மாமா என்று அழைத்தது கதிருக்கு சில்லென்ற பனிக்காற்று வீசியது போல குளிர்ச்சியாக இருந்தது.

ஏய் இப்போ எப்படி கூப்பிட்ட மீண்டும் ஒருமுறை கூப்பிடு என்று சொல்ல அப்பொழுது தான் ஐயோ மனசுல பேசுவதாக நினைச்சுட்டு வாயை விட்டு பேசிட்டேனே என்று தனது நாக்கை கடித்துக்கொண்டாள்.

அடியேய் உன்னை தான்டி கேட்குறேன்?

எப்படி கூப்பிட்ட சொல்லு என்க, நான் ஒன்னும் சொல்லவில்லையே என்று சாதித்தவள் என்னை விடுங்க ரெஸ்ட் ரூம் போகணுமென்றாள். ம்ம் போகலாமே என்றான்.

ஹலோ மிஸ்டர் முறுக்கு மீசை உங்களோட ஜோடி போட்டு போக அது என்ன பார்க்கா.. போயா என்றவள் விட்டால் போதுமென்று வேகமாக கதவை திறந்து உள்ளே போய் தாழ்ப்பாள் போட்டவளுக்கு இவ்வளவு நேரம் கணவனின் அணைப்பில் இருந்தது வெட்கம் வர முகத்தை மூடியவள் அங்கிருந்த கதவில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டாள்.

கதிரோ சந்தோஷத்தில் துள்ளி குதித்தான். நிச்சயமா அவளுக்கு என் மேல் காதல் இருக்கு. அதனால் தான் இந்த நாளுக்கு சரியா வந்துட்டாள் என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன், அய்யனாரே காலையிலேயே என் பொண்டாட்டி கூட உன்ன பார்க்க வருகிறேன்யா என்று சொல்லிக் கொண்டு அங்கிருந்த கட்டில் மேல் உட்கார்ந்து கொண்டான்.

மேலும் சிறிது நிமிடங்கள் கடந்து செல்ல தாமரை வெளியில் வருவது போல தெரியவில்லை. இன்னும் என்ன பண்றா? ரெஸ்ட் ரூம் போனாளா இல்லை அங்கே பாய் போட்டு படுத்துட்டாளா என்றவாறு எழுந்து போய் கதவைத் தட்டியவன் அடியேய் இருக்கியா இல்லை உள்ளவே தூங்கிட்டியாடி என்றான்.

கதிரின் சத்தம் கேட்ட பிறகு தான் நிகழ்விற்கு வந்தவள் படிச்சிக்கிட்டு இருக்கேன் என்றாள்.

அதானே ஊர் திமிரு போகாதேயென்று முணுமுணுத்தவன் பாடம் சொல்லிதர வாத்தியார் நான் வெளியே இருக்கேன்டி என்க, போயா மக்கு வாத்தி என்று சிரித்தவள் இதோ வந்துட்டேன் என்று சொல்லிவிட்டு தலை குளித்து முடித்தவளுக்கு அப்பொழுது தான் மாற்றுடை எடுக்காமல் வந்தது நினைவு வந்தது.

அட அய்யனாரே என்று தலையில் கை வைத்தவள் நீங்க இங்க இருக்கீங்களா என்க, உள்ள தான் டி இருக்கேன் என்று சொன்னான்.

சரி வெளியே போங்களென்க,முடியாது வெளியே எல்லாரும் தூங்கிட்டு இருக்காங்க. ஒரு பக்கம் மழை பெய்ஞ்சிட்டு இருக்கு நான் எங்கையும் போக முடியாதுடி இந்த ரூம்ல தான் இருப்பேன் என்று சொல்ல, அய்யோ இந்த மனுஷன் வேறு புரிஞ்சுக்க மாட்டேங்குறாரே என்ன பண்றது என நினைத்தவள் சரி வேற வழியில்லை.

விஷயத்தை சொல்லித்தான் ஆகணும்.ஏங்க மாத்திக்க டிரஸ் எடுக்காமல் வந்தேட்டேன் ப்ளீஸ் வெளியில போங்க என்று சொல்ல, பால்கனியின் கதவை திறக்கும் சத்தம் கேட்டது.

வேகமாக கதவை திறந்து வெளியே வந்தவள்,கொடியில் இருந்த டவளை எடுத்து போர்த்த போக அதிர்ந்து போனாள்.

இந்த மழையில் எதுக்கு பச்ச தண்ணியில் குளிச்சடி என்றவாறு பனி துளிகள் போல அங்கங்கே இருக்கும் நீர் திவளையில் விரல்களால் கோலம் போட்டபடி கதிர் கேட்க, தாமரையோ வார்த்தை வராமல் வாயடைத்து போனாள்.

எவ்வளவு மென்மையா இருக்கடி என்றவாறு அவளின் கைகளில் கோலம் போட்டபடி விரல்களை பிடிக்க கோயிலுக்கு போகணுமென்றாள்.

போ...

உன்னை யாரு வேண்டாமென்று சொன்னாங்களென அவள் காதோரம் கேட்க, அது வந்து வந்து என்று வார்த்தைகள் வராமல் தடுமாற...

மேலும் மனைவியை சோதிக்க விரும்பாமல் சரி தலையை துவட்டிட்டு சீக்கிரமா டிரஸை மாத்துடி என்றவாறு பால்கனிக்கு சென்றவன் ஸ்சூஊஊஊஊ.... இவள் இப்படி இருந்தால் கதிரு உன் பாடு அதோ கதிதான் என்றவன் கண்களை மூடி சற்று முன்னர் மனைவி நிற்கும் கோலத்தை நினைத்து பார்க்க அந்த முறுக்கு மீசைக்காரனுக்கு சிரிப்பு வந்தது.

தனது சூட்கேஸை திறந்து வேக வேகமாக டிரஸை எடுத்து மாற்றியவள் கண்ணாடி முன்பு போய் நின்று நெற்றியில் பொட்டை வைத்து பார்க்க, ஏனோ இன்று புதிதாய் இருப்பது போல உணர்ந்தவள் தலையை துவட்டியபடியே பால்கனிக்கு வரவும், அங்கு கதிரோ தூணின் மேல் சாய்ந்த படி மழையை பார்க்க....

இப்பொழுது கணவனின் உருவத்தை ரசித்து பார்த்தவள் முரட்டுபயலா இருப்பான் போலவேடி என்று சொல்லிக்கொண்டாள்.

பொறுமையாக அவனருகில் சென்றவள் சிறிது இடைவெளி விட்டு நின்று மாமா என்க வெறும் காத்து மட்டும் தான் வந்தது.

ஆண்டவா சோதிக்காதேயென தனக்குள் சொல்லியவள் மாமா என்க பட்டென்று திரும்பினான்.

ஏய் இப்போ கூப்பிட்டதானடி என்க...

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் மாமா என்றாள்.தாமரையென்று அவளை தொட போக குளிச்சிட்டு கோயிலுக்கு போகணும் அழுக்கு பையனா இருக்கீங்க என்னை தொடாதீங்களென்றாள்.

நிலவை பார்த்து வானம்
சொன்னது என்னை தொடாதே
நிழலை பார்த்து பூமி என்னை தொடாதே என்று பாட...

ஹலோ.... மிஸ்டர் மாயாண்டி...இந்த நடிப்பை சிவாஜி படத்திலே பார்த்தாச்சு.

ரொம்ப எனக்கு படம் ஓட்டாதீங்க. போய் குளிச்சிட்டு வாங்களென்றாள்.

போறோன்டி போறேனென்று முணு முணுத்துக்கொண்டே அங்கிருந்து கதிர் சென்று விட, தாமரைக்கு சிரிப்பு வந்தது.

கதிரும் குளித்துவிட்டு வேறு உடையை மாற்றிக் கொள்ள, உள்ளே வந்தவள் தனது நீண்ட கூந்தலை பின்னி ஹேர்பேண்ட் போட்டு விட்டு கீழே போகலாம் மாமா என்றாள்.

ஏய் இப்படி சும்மா மாமா மாமா என்று கூப்பிட்டு உசுப்பேத்தாதடி என்றான்.

சரிடா மாயாண்டி என்றாள்...

எதே என்று கதிர் அதிர எஸ்சூஊஊஊ என்றவள் ம்ம் வாங்க என்றவாறு முன்கதவை திறந்தாள்.

பின்னர் இருவரும் இணைந்தே மாடிப்படியில் இறங்கி வர, காலடி சத்தம் கேட்டு டீ எடுத்து வந்த ராதா, கதிருதான் என்று நினைத்து கிச்சன் பக்கம் திரும்பி நின்று,அக்கா கதிருக்கும் டீ ஊற்று என்றவர் மீண்டும் மாடிப்படியை பார்க்க அங்கே வரும் மருமகளை பார்த்து தாமரைஐஐஐஐ என்று அதிர்ந்தார்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
499
கிச்சனில் இருந்த சீதாவோ தனது தங்கை ராதாவின் வார்த்தைகளை கேட்டு என்னாயென்று வேகமாக வந்தவரோ தான் காண்பது கனவு தானாயென்று கண்ணை துடைத்து பார்த்தார்.

அத்தை உண்மையாலே நான் தான் என்றவள் ரெண்டு பேரும் எப்படி இருக்கீங்கத்தை என்க...

அக்கா தங்கையோ அதிர்ச்சியில் இருந்து இன்னும் வெளிவரவில்லை.

அத்தை என்று இருவரின் தோளை தொட அம்மாடி நீ தானா என்கும் போது அவர்களுக்கு கண்கள் கலங்கியது.

ஆமாங்கத்தை..

உங்கள் மருகள் தாமரையே தான் என்றவள் ம்ம் என்று கணவனை பார்க்க இருவரும் அவர்கள் காலில் விழ நோய் நொடியின்றி பதினாறும் பெற்று பெருவாழ்வோடு வாழுங்கப்பா என்றார்கள்.

அத்தை இன்றைக்கு என்ன நாளென்று தெரியுமா என தாமரை கேட்க, ஏன் இல்லை?
எங்க ஊட்டுக்கு மகாலட்சுமி வந்த நாளாச்சே என்றார்.

வாங்கத்தை உங்க கையால் சூடா ஒரு இஞ்சி டீ குடுங்க என்றவள் இருவரோடும் கிச்சனிற்குள் சென்று விட கதிரும் அங்கிருந்த ஊஞ்சலில் உட்கார்ந்து கொண்டு டிவியை ஆன் பண்ணி பாட்டு சேனலை வைக்க வள்ளி அப்பாயியும் எழுந்து வெளியே வந்தார்.

அங்கிருந்த பேரனை பார்த்தவர் என்ன அப்பு உம்மாளுங்க டீ குடுக்கலையா என்க,அம்மா உள்ள தான் போயிருக்கென்கும் போது தனது மாமியாருக்கு நீராகர சொம்போடு வந்த ராதா இந்தாங்கத்தை என்க..

வாங்கி குடித்தவர் கொலுசு சத்தம் கேட்டு,அதுக்குள்ள உன் தங்கச்சி எந்திரிச்சிட்டாளாயென்றவாறு சத்தம் வந்த திசையில் பார்த்தவர் அங்கிருந்த தனது மகள் வயிற்று பேத்தி வருவதை கண்டு அதிர்ந்தார்.

அம்மாசாசியென்று வேகமாக வந்து அவரை கட்டி அண்ணைக்க தங்கமே தாமாரை...
வந்துட்டியாத்தா என்று பேத்தியை கன்னம் கிள்ளி முத்தமிட்டவர் எப்பத்தா வந்தா?
நல்லா இருக்கியா கண்ணு என்று கேட்க நல்லா இருக்கேன் அம்மாச்சி நீங்களென்றார்.

மற்றவர்களும் எழுந்து வந்து தாமரையை பார்த்து அதிர்ந்து தான் போனார்கள்.

பரஸ்பரம் நலம் விசாரித்துவிட்டு பேசிக் கொண்டிருக்கும் போது ராதா சீதா இருவரும் அவறவர் அறையில் குளித்துவிட்டு வந்து பூஜை அறைக்கு சென்றனர்.

இன்று தங்கள் வீட்டு தலைமகனின் கல்யாண நாள் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான்.

விளக்கை ஏற்றி தீபாரதனையை காட்ட கதிரும் தாமரையும் பூஜையறைக்கு சென்று சாமியை வணங்க அவர்கள் இருவரின் நெற்றியிலும் விபூதி குங்குமத்தை பூசி விட்டு காலை உணவை சமைக்க சென்றனர்.

அம்மா தாமரை என்று பெருமாள் கூப்பிட வரேன் மாமாயென்றபடியே அவரின் முன்பு போய் நிற்கவும்,உனக்காக இந்த மாமன் வாங்கி வைத்தது கண்ணு என்றார். தேங்க்ஸ் மாமா என்றவாறு பெட்டியை திறந்து பார்க்க அதில் இரண்டு விதமான பட்டுபுடவை இருக்க...

பார்த்தியாக்கா மருமகளுக்கு மாமாவோட பரிசையென்று ராதா சொல்ல அதான் பாரேன்டி.

ஆயிரம் தான் இருந்தாலும் தங்கச்சி மவள் இல்லையா அதானென்று சீதா சிரிக்க என் மாமா சண்டியருக்குள் இப்படி ஒரு பாசமலர் சிவாஜியா என்று சொல்லி ராதா சிரித்தார்.

ஏன் கண்ணு நீ வராயென்று ஒரு வார்த்தை கூட சொல்லவில்லையே என்க, உங்களுக்கெல்லாம் சர்ப்ரைஸ் கொடுக்கலாம் என்று தான் லீலா அக்கா கூட நானும் வந்தேன் பாட்டி.

அடுத்த வாரம் சதாராவில் லீலா அக்காக்கு கல்யாணம் இல்லையா அவங்களுக்கு ஆன்டி ரெண்டு மாசம் லீவ் கொடுத்துருக்காங்க.

லீலாக்காக்கு பார்த்திருக்க மாப்பிள்ளையும் டெக்ஸ்டைல்ஸ் பிசினஸ் தான்.மாறன் சாரோட பிரண்ட் தான் மாப்பிள்ளை.அவரும் சிங்கப்பூர்ல ஷோரூம் வைத்திருக்கிறார்கள்.

நான் தான் திடீர்னு கிளம்பினேன்.அவ்வப்போது கடைக்கு போகும் போதெல்லாம் உங்களுக்காக வாங்கிய பொருட்களும் இருந்தததா. அதை எடுத்துட்டு கிளம்பி வந்துட்டேன்.ஆன்டி கூட ராபர்ட்டும் அவன் வொய்ப் இருக்காங்கள் அதனால் பிரச்சினை இல்ல பாட்டி என்றாள்.

அப்படியா நல்லது கண்ணு என்கும் போது..வள்ளி வள்ளியென வந்தான் இந்த வேலு தான்...துள்ளி துள்ளி வரான் இந்த வேலுதான் என்று பாடியபடியே வீட்டிற்குள் வந்த வேலு செல்லம் எங்கே இருக்கயென்றவாறு பார்வையை சுழற்றியவன் அங்கிருந்த தாமரையை பார்த்து தாமரை என்று அதிர அண்ணா என்று கூப்பிட்டாள்.

வாடா எப்போ வந்த?

ஒரு வார்த்தை சொல்லவேயில்லையே என்க,டேய் டேய் போதும் டா நீ ஓட்டுன ரீல்.

தடிமாடு...நீ தான போய் மதுரையில் இருந்து உன் தங்கச்சியை கூப்பிட்டு வந்ததென்று பிரகாசம் தாத்தா சொல்ல, அதைக்கேட்ட வேலுவோ என்னாஆஆஆ நானாஆஆ...

சகலபாடி கனவு ஏதாவது காணுறீங்களா என்க..டேய் வந்தேன்டா வாய் இருக்காது என்றார் பிரகாசம் தாத்தா.

யாத்தே நாம போனது எப்படி தெரிஞ்சிது.நாம் தான் யாருக்கும் தெரியாம கிளம்பினமே என்று விரலை நெற்றியில் தட்டி யோசிக்க சொம்பு ஒன்னு வந்து அவன் காலில் விழுந்தது.

ஆத்தாடி கொலைகார கும்பலில் வந்து மாட்டிக்கிட்டோமே என்று சொம்பை பார்க்க அவனுக்கு எதிரில் ருத்ரமூர்த்தி போல கதிர் நின்று கொண்டிருந்தான்.

என்னடா மச்சான் தூங்கி எந்திரிச்சிட்டியா என்க இல்லடா இப்பதான் தூங்க போறேன் என்றான் .

சரி மச்சான் வெளியில் மழையா இருக்கு நீ போய் தூங்கு என்றவாறு சீதாத்தை என்ன சமையல் என்று கேட்டுக் கொண்டே கிச்சன் உள்ளே வேகமாக சென்று புகுந்து கொண்டான்.

அப்பாடா இந்த கும்பல் இருந்து தப்பிச்சு வர்றதுக்குள்ள என் பாடு இருக்கே பெரும்பாடு என்றவாறு அங்கிருந்த கிச்சன் சிலாபின் மேல் ஏறி உட்கார்ந்தவனை பார்த்த அக்கா தங்கை இருவரும் சத்தமாக சிரித்த்துவிட்டனர்.

அத்தை நீங்களுமாயென்க...

வேலு டீ என சீதா கேட்க,இப்போ வேண்டாத்தை.பஞ்சு மாமா கடையில் டீ குடிச்சிட்டு தான் வரேனென்றான்.

ஓஓஓ...

தூங்குனியா இல்லையா என்று ராதா கேட்க,எங்கத்தை.வந்ததே நைட் ரெண்டு மணிக்கு.

பாப்பாவை மாடி கதவு வழியாக உள்ளே அனுப்பிட்டு போய் படுத்தேன் தூக்கம் வரலை.சரினு போனை நோண்ட நம்ப கேப்டன் படம் சின்னகவுண்டர் யூடியூபில் வந்துச்சி.

ஆஹா தலைவானு பார்க்க நேரம் ஓடிட்டு. அந்த நேரத்தில் உங்கண்ணிய எழுப்பி டீ கேட்டா தொடப்பகட்டை தான் வரும்.
அதான் கடமை தவறாத மாமா பஞ்சு குட்டி இருக்காரேனே எந்திரிச்சி அங்க போனேன் மாமா அப்போ தான் அய்யனாருக்கு ஊதுபத்திய காட்டி அடுப்பை பத்தவச்சாரு.

முதல் போனிய பண்ணிட்டு இருக்க அத்தையும் வந்துச்சி என்கும் போது வாட்டர் பாட்டில் ஒன்னு அவன் தலையில் வந்து விழ ஆத்தாடி என்றவாரு வாசலை பார்க்க அங்கே கதிர் தான் நின்று கொண்டிருந்தான்.

மச்சான் ஒரு முடிவோட தான் இருக்கான் வேலு.உனக்கு பொங்கல் வைக்காம விடமாட்டான். எதுக்கும் உசாரு உசாரு என தனக்குள் சொல்லியவன் அத்தை பூரி மசாலா பண்ணுங்களேன் என்க..

அடேய் தின்னி மாடு இங்கே வாடாயென்று பிரகாசம் தாத்தா குரல் கொடுக்க,சகலபாடி அழைக்குது. போய் என்னதுனு கேட்டு வரேங்கத்தை என்றவாறு சிலாபின் மேலிருந்து இறங்கியவன் வாசலில் நிற்பவனை பார்த்து இரு மச்சான் வரேனென்று போனான்.

காத்திருந்தேன்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top