• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Nov 8, 2025
Messages
50
வல்லாளன், வேகவேகமாக வாழை மட்டையை, கல்லில் தட்டி சாறு பிழிந்து, பூரணம் அம்மையாரின் வாயில் ஊற்றினான்.

பூரணம் அம்மையார், பாம்பின் விஷத்தின் வீரியத்தால் தற்போது தலை சுற்றலில், உறக்க நிலைக்குச் சென்று கண்கள் சொருக படுத்திருந்தார்.

வல்லாளன், வாழை மட்டை சாற்றை, வாயில் ஊற்றும் போது... "உங்களுக்கு ஒன்னும் இல்லை பாட்டி அம்மா. நீங்க குணமாயிடுவீங்க இன்னைக்கு ஒரு நாள். அவரது தொண்டைப் பகுதியை மட்டும் உறங்காமல் முழிச்சிருந்தா போதும்." அவரை உறக்க நிலைக்குச் செல்லாமல் கன்னத்தில் தட்டிக் கொடுத்துக் கொண்டே இருந்தான்.

காதம்பரி, வல்லாளன், தன்னுடைய பாட்டியிடம் காட்டும் அக்கறையையும், பரிவையும் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அதே நேரத்தில் அவளையும் அறியாமல், அவளது மனது, வல்லாளனை நேசிக்க ஆரம்பித்திருந்தது.

வல்லாளன்," இளவரசி பாட்டியை உறங்கவிடாமல் ஏதாவது பேச்சு கொடுத்துக் கொண்டிருங்கள்." என்றதும்

காதம்பரி, பூரணத்தின் கையைப் பிடித்து, "பாட்டி என்னை பாரு. பாட்டி நல்லா முழிச்சு பாரு. இப்படி உறங்க போகாதே. இன்னைக்கு உறங்க கூடாது. உனக்காக இவர் எத்தனை பேர். பேர். பேர். பேர். பேர். பேர். பேர். போராட்டம், பிரயத்தனப்படுகிறார் என்று கண் திறந்து பரு பாட்டி."

பூரணம், கிரங்கிய நிலையில், "என்னால் முடிந்தால் முழிச்சு பார்க்க மாட்டேனா? கண் தானாகவே மூடிக்கொள்கிறதுடி" என்று நடுங்கும் குரலில் சொன்னார்.

சிவன், பயந்துகொண்டு, கோட்டை வாசலை எட்டிப் பார்த்து, உள்ளே இவர்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பது கண்டவன், பதட்டத்தோடு உள்ளே வந்தான்.

இளவரசி... இளவரசி. என் நண்பனை ஒன்றும் செய்து விடாதீர்கள். என்று நடுங்கிக் கொண்டே உள்ளே வந்தவனை, பேசாதே என்று சைகை காண்பித்தாள் காதம்பரி.

அதுவரை பித்து பிடித்தது போல இருந்த பூரணம் அம்மையார். "உன் நண்பனை இளவரசி என்ன செய்வார்? ஏன் இத்தனை பயம் நடுக்கம்?" என்று தெளிவாக கேள்வி கேட்டார்.

சிவன் மேலும் பயத்தில், "போன முறை வந்தவர்கள் இல்லை. இவன் வேறொருவன்." என்று உளறி கொட்டினான்.

காதம்பரி, சிவனை, "போதும் உன் நாடகத்தை நிறுத்து. பாட்டி இப்போது, நீ தெளிவாக கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டாய். உன்னை பழைய நிலைக்கு கொண்டு செல்லுங்கள். செல்லுங்கள். செல்லுங்கள். செல்லுங்கள். செல்லுங்கள். செல்லுங்கள். செல்லுங்கள். செல்லுங்கள். வருவதற்காக, அவனும் எத்தனை குட்டிகரணங்கள் போட்டு முடித்து விட்டான்." என்ற பேச்சை மடை மாற்றி இருந்தாள்.

வல்லாளன், "இளவரசி அழகு மட்டும் அல்ல அறிவாளியும் கூட" என்று எண்ணியவன் சிவனிடம், "நண்பா பாட்டியை பாம்பு தீண்டி இருந்தது. ஒரு வழியாக சுயநிலையை அடைந்து விட்டார். வா... நமது வேலை நிறைவு பெற்றது. என்ற பூரணம் அம்மாவின் அருகில் இருந்து எழுந்து, காதம்பரியை, "இளவரசி சூரிய உதயம் வரை தாங்கள், பாட்டியை உறங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். நாங்கள் வருகிறோம்." என்று விடை பெற்றுக் கொண்டான்.

சிவன், கோட்டை வாயிலை கடந்து வெளியே வரும்போது, "என்னை மன்னித்துவிடு வல்லாளா,. சென்ற இத்தனை நேரத்தில் என்னவானதோ ஏதானதோ" பயத்தில் நடுங்கிக் கொண்டு, இங்கே ஏமாந்து விட்டேன். உன்னை வந்து பார்க்க கூட என்னிடம் திராணி இல்லை. நான் எவ்வளவு பெரிய கோழியாக முடங்கி இருந்தேன். என்னை மன்னித்துவிடு." என்று மன்னிப்பை யாசித்தான்.

"இதற்கு பெயர் கோழைத்தனம் இல்லை உன் நண்பர்கள் உன்னை அரச குடும்பத்திடம் எப்படி நடந்து கொள்ள கூடாது என்று அறிவுறுத்தி சென்ற விதம், உன்னை விலகி இருக்க செய்துவிட்டது."

"என்னை நீ புரிந்து கொண்டதற்கு நன்றி வல்லாளா..." என்று நண்பனை ஆற தழுவி கட்டிக் கொண்டான் சிவன்.

"சரி பொழுது புலர புறப்பட்டு விட்டது. நான் புறப்படுகிறேன்." என்ற நண்பனிடம் விடை பெற்றுக் கொண்டு, தனது புறவையில் இருந்து புறப்பட்டு சென்றான் வல்லாளன்.

காதம்பரியை கன்னி மாதத்தில் பார்த்துவிட்டு வந்த பிறகு வல்லாளனுக்கு காதம்பரியின் நினைவாகவே இருந்தது

காதம்பரிக்கும் வல்லாளனின் நினைவுகள் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது.

கன்னி மாடத்தில் தனிமையில் இருந்த காதம்பரிக்கு, மூன்று மாத தீட்டுக் காலம் முழுமையாக பூர்த்தியாகி விட்டது. கன்னி மாடத்தில் சடங்கு சாங்கியங்களை முடித்துக் கொண்டு வீட்டிற்கு அழைத்து வர, கந்தவேலர் ஏற்பாடு செய்திருந்தார்.

அதன் பொருட்டு, அந்த தேசத்தில் இருந்து புரோகிதர் செளகண்டரை அழைத்து வந்து, பிரசன்னம் பார்த்து நாள் குறிக்க ஏற்பாடு செய்திருந்தார்.

செலகண்டர், வெளியிடங்கள் எங்கும் வருவதில்லை. தான் இருந்த இடத்திலேயே பிரசன்னம் பார்த்து நாள் குறித்து தருவதாக சொன்னார்.

கந்தவேலர், "சரி சாமி. வரும் திங்களோடு மூன்று மாத கால தீட்டு நிறைவு பெறுகிறது. நீங்கள் நாள் குறித்து சொல்லுங்கள்."

செலகண்டர், கண்களை மூடி தியானத்தில் அமர்ந்தார். தன் கை நிறைய சோழி முத்துக்களை இறுகப்பற்று இருந்தார். கண்களைத் திறந்து சோழியை தரையில் உருட்டினார்." நீங்கள் அரசர் இல்லை. உங்கள் தேசம் இனமாகப் பெற்றது. தற்போது பருவமடைந்திருக்கும் தங்களின் மகள்கள் உங்கள் ரத்தம் இல்லை. ராஜ வம்சத்தில் பிறந்த பெண்களுக்கு மட்டுமே இந்த தீட்டுக்காலம் அனுசரிக்கப்படும். நீங்கள்... உங்கள் விருப்பமான நாளில், சடங்கு சாங்கியங்களை செய்து கொள்ளுங்கள். தற்போது புறப்படுங்கள்." என்று அனுப்பி வைத்து விட்டார்.

கந்தவேலர், மனம் நொடிந்தாலும். மகளின் மனது வாடி விடக்கூடாது என்பதற்காக, "அதே திங்கட்கிழமையில் சடங்கு சாற்றுசெய்து. கன்னி மாடத்தை கலைத்து. அரண்மனைக்கு அழைத்து வர வேண்டும்." என்று தானாகவே மனதிற்குள் திட்டம் தீட்டிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டார்.

கந்தவேலர் சென்ற பிறகு செலகண்டர், " என்னை மன்னித்து விடுங்கள் சாமி . நான் பிரசன்னத்தில் கண்டதை உங்களிடம் முழுவதையும் சொல்லி இருந்தால்... உங்க மனது இக்கணப்பொழுது நொறுங்கி போய் இருக்கும். நீங்கள் இனமாக பெற்ற தேசத்தை வேண்டாம் என்று திருப்பித் தந்திருக்க வேண்டும். திருப்பி தந்திருந்தாலும் உங்களை பிடித்து இருக்கும் பிணி விலகாது. நீங்கள், நாடு நலம்பெற வேண்டும் என்று செய்த ஒரு காரியம். அந்த நாட்டையே சிதைப்பதற்கு காரணமாகி போகும். பிரமயட்சினி காத்த பொன் புதையலை, பிரகடனப்படுத்தி விட்டீர்கள். அதை எடுப்பதற்கு உரியவன் வல்லாளனாகவே இருந்தாலும். பிரம யட்சினிக்கு பொன் உரு செய்து தலை பலிகொடுத்திருக்க வேண்டும். தற்போது பார்க்க வந்த பிரசன்னத்தை அப்போதே நீங்கள் பார்த்திருக்க வேண்டும் யட்சினி உக்கிரம் கொண்டு மகாராணியின் தலைமேல் அமர்ந்து விட்டாள். முதலில் பலியாக மன்னனை காவு வாங்கி விட்டாள். இந்த தேசத்தை முழுமையாக அழிக்கும் வரை, அவள் உக்கிரம் குறையப்போவதில்லை. அதேபோல இவையெல்லாம் நடக்கப் போகிறது என்று என்னாலும் சொல்ல இயலாது. அப்படி நான் சொன்னால், அடுத்த கணமே என் உயிர் என்னை விட்டு போய்விடும். உயிர்த்தியாகம் செய்யும் பெரும் வீரன் நான் அல்ல. என்னை மன்னித்து விடுங்கள் கந்தவேலரே ..." என்று மானசீகமாக மன்னிப்பு கூறினார்.

வகுள ஆரண்யத் தேசத்தில், மகாராணி கமலி, பெட்டகத்தில் இருக்கும் பொன் உருக்கள் அனைத்தையும், யாருக்கும் தெரியாமல். வைத்தியன் குடும்பத்தின் உதவியோடு, பெட்டக அறையின் கீழ் சுரங்கம் அமைத்து சிறிது சிறிதாக அந்த சுரங்கத்தில் பதுக்கி வைத்து விட்டார் தற்போது எவர் வந்து கேட்டாலும் அங்கே தங்கம் இல்லை.

ஆனால் வல்லாளன், தன்னுடைய பெட்டகத்தில் பொன் இருப்பு குறையாமல் இருக்கிறது என்று எண்ணிக்கொண்டு இருக்கிறான்.

வல்லாளன், பொன்னை பற்றி எந்த ஒரு கேள்வியும் கேட்டு விடக்கூடாது. என்பதற்காக கமலி, அவனது தேவைகள் அத்தனையும் பூர்த்தி செய்து கொண்டே இருந்தாள்.


வல்லாளன், அரசி கமலியை சந்தித்து, "அம்மா எனக்கு கதம்பவன தேசத்தின் இளவரசி, காதம்பரியை மணமுடித்து வையுங்கள்." என்று தெரிவிக்க.

கமலி, "மகனே அவள் அந்த தேசத்து இளவரசி, ஆனால் அந்த தேசம் நமது தேசம். அந்த வகையில் கந்தவேலர், நமக்கு பங்காளி உறவு உடையவர் ஆகிறார். அதனால் அவள் உனக்கு மணமகள் உறவு முறை வரமாட்டாள். உனக்கு தங்கை முறை "

"அவள் வேண்டாம் என்பதற்காக, தாங்கள் யோசித்து வைத்திருந்த வாசகங்களாக இவை?"

"உனக்கு சந்தேகமாக இருந்தால் ராஜகுருவிடம் கேள்."

"ராஜகுரு உங்களது கைப்பாவை. அவர் எப்படி நிஜத்தை பேசுவார்?"

"ஒரு பெண்ணுக்காக பெற்றவளை உதாசினம் செய்து பேசுகிறாயே"

"அம்மா நான் உங்களை உதாசீனப் படுத்தவில்லை. உங்களுக்கு உண்மையான பிள்ளையாக, உங்களிடம், என்னுடைய எண்ணத்தை தெரிவித்தேன். காட்டிய பரிவை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை." என்று இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது, ராஜகுருவும் அங்கே இடையிட்டு பேசத் தொடங்கினார்.

"அரசியார் என்னை மன்னிக்க வேண்டும். தாய் மகன் பேச்சுக்கு இடையே இடையூறாக வந்ததற்கு, முதற்கண் நான் வருந்துகிறேன்."

கமலி, "இவன் என்ன பேசிக் கொண்டிருக்கிறான் என்று கேட்டீர்களா?"

குரு, நான் அனைத்தையும் கேட்டுவிட்டு தான் பேச வந்திருக்கிறேன் மகாராணி. தாங்கள் கூறுவது முற்றிலும் தவறு. அரசரின் உடன் பிறந்தவர்களுக்கு, பங்காய் கொடுத்த தேசம் தான்... பங்காளி தேசம். தானமாக கொடுத்தது, போர் புரிந்து நம்மிடமிருந்து அபகரித்த தேசமோ... பங்காளி தேசம் ஆகாது. அந்த வகையில், கதம்பவனம் நமது பங்காளி தேசம் இல்லை. அரசரின் வார்த்தைக்கு மதிப்பளித்து, தாங்கள் நல்ல பதிலைச் சொல்லுங்கள்."

வல்லாளன், "என்னை மன்னித்து விடுங்கள் குருவே நானும் உங்களை தவறாக எண்ணிவிட்டேன்".

அரசி கமலிக்கு, குருவின் பேச்சில் கோபம் இருந்தாலும், மகன் முன்னிலையில் காட்ட முடியவில்லை. பொறுமையாக, "சரி கதம்பவனத்தில் பெண் கேட்டு வந்து, நல்ல தகவல் சொல்லுங்கள்." என்று சொல்லிவிட்டு வேக வேகமாக அவரது அறைக்கு சென்று விட்டார்.

வல்லாளன், "அம்மா இப்படி கோபம் கொண்டு செல்கிறார்களே.... அவர்களுக்கு சம்மதமா? இல்லையா? என்று தெரியவில்லையே!"

குரு, "வருத்தம் வேண்டாம் அரசே. முதலில் கதம்பவனம் தேசத்தில் பெண் கேட்டு விட்டு வருகிறேன். அவர்களின் பதிலை பொறுத்து மகாராணியிடம் பேசலாம்"

"நீங்கள் சொல்வது சரிதான் குருவே. நீங்கள் இப்போது கதம்பவனம் செல்லுங்கள். நீங்கள் சென்றுவர நமது ரத்தத்தை எடுத்துச் செல்லுங்கள்."

"அப்படியே செய்கிறேன். நான் வருகிறேன். என்று குரு விடைபெற்று கடம்பவனம் நோக்கி சென்றார்.
 
Member
Joined
Nov 8, 2025
Messages
50
பாவத்தே 😩😩😩😩கந்தவேலர் நல்ல மனுஷன்
நல்லவனுகளை வாழவிடாதே உலகம்
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top