Member
- Joined
- Nov 8, 2025
- Messages
- 50
- Thread Author
- #1
தலைக்கு மேல் செல்வம் இருந்தால், அதற்கு நாம் அடிமை.
அப்படித்தான் கமலை நாச்சியார் கொட்டிக் கிடக்கும் பொன்னை, யாருக்கும் கொடுத்து, இழந்து விடக்கூடாது என்று. மன்னர் செய்யும் செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டுக் கொண்டு இருந்தாள்.
மன்னருக்கும், அரசியின் மேல் சந்தேகம் எழுந்து விட்டது. அதனால் அரசியின் கை ஓங்கும் முன்பு, செய்ய நினைத்த நற்காரியங்களை செய்து விட வேண்டுமென்று.
மறுநாள்.
பொழுது புலந்தது, கதம்பவன தேசத்தின் அரண்மனைக்கு, வாஸ்து கால் நடத்தப்பட்டது. அப்போதே பொதுமக்கள், கட்டுமான பணியை தொடங்கி வைத்தார்கள்.
வருண தீரர், அமைச்சர் செண்பகராமனை அழைத்து, அவரது எடைக்கு நிகரான பொன்னை வழங்கினார். இந்த அரண்மனை கட்டி முடிக்கும் வரை, மக்களுக்கு ஊதியம் கொடுப்பதற்கும், கட்டுமான பொருட்கள் தருவதற்கும், பயன்படுத்திக்கொள்ள சொல்லிவிட்டு. மற்றொரு அமைச்சரான நாகேந்திரனை அழைத்து, அவரது எடைக்கு நிகரான பொன்னை கொடுத்து நீர்த்தேக்க அணை கட்டும் வரை, இதை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று தெரிவித்து விட்டு.
தேசத்தின் மக்களை இரண்டு குழுக்களாக பிரித்து, அரண்மனை கட்டுமானத்திற்கும், நீர் தேக்க அணைக் கட்டுமானத்திற்கும் இரண்டு குழு பகிர்ந்து கொடுத்த வேலையை தொடங்கிவைத்தார்.
அரசி, இதை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. மக்களுக்கு பகிர்ந்து கொடுக்கும் முன்பு. மன்னரை முடக்க திட்டமிட்டார்.
அதன்படி அரண்மனையின் வைத்தியரை அழைத்து தனக்கு "மூன்று நாட்களாக மலம் மண்டி கிடக்கிறது. மூன்று நாட்களாக வெளியேற மறுக்கிறது. அதற்காக மருந்து தர வேண்டும்." என்று கேட்டுக் கொண்டார்.
“அரசியாரே... இதற்கு தாங்களே கை பக்குவமாக, சுக்கு, குப்பைமேனி போன்றவற்றை உண்டு வெளியேற்றி இருக்கலாமே.
"நானும், மூன்று நாட்களாக இந்த மருந்துகளை உண்டுதான் பார்க்கிறேன். அது உள்ளே செல்லாமல் வாய் வழியே வெளியேறி விடுகிறது. வயிற்றின் வலி மட்டும் நின்ற பாடு இல்லை."
"தேவி மலையாள தேசத்தில் இருந்து, வரவழைக்கப்பட்ட சூரணம் இருக்கிறது. அதை நானும் முறையாக சோதித்துப் பார்க்கவில்லை. அதைக் கொணர்ந்து கொடுத்தவர், எந்த பாதிப்பு இல்லாமல் தவறுதலாக உட்கொண்டு விட்டால், கை கால் முடக்கம் வரை சென்று விடும். என்று சொல்லிவிட்டு சென்றிருக்கிறார். அதனால் தான் கொஞ்சம் பயமாக இருக்கிறது."
"எந்தத் தவறும் நடந்து விடாது. எனக்குத்தான் வியாதி இருக்கிறதே. அப்படி என்றால் அந்த வியாதியை தானே கட்டுப்படுத்தும். குறைத்து உண்டு பார்க்கிறேன்."
"சரி தாயே! நாளை பகல் உங்களிடம் கொண்டு வந்து கொடுக்கிறேன்." என்று சொல்லிவிட்டு வைத்தியர் புறப்பட்டு சென்றார்.
அரசி கமலை, "இதைத்தான் நானும் எதிர்பார்த்தேன். அவர் முடங்கி படுத்திருந்தால் மட்டும்தான், நான் நினைத்தபடி சாதிக்க முடியும்." என்று தன் மனக்கோட்டையில் திட்டம் தீட்டினாள்.
அரசி எதிர்பார்த்தபடி, மறுநாள் கைக்கு மருந்து வந்து சேர்ந்தது.
அணை கட்டுமான பணியும், அரண்மனை கட்டுமான பணியும், ஒரு சேர நடந்து கொண்டிருந்தது. அதோடு அரசருக்கும், தினம் ஒரு வியாதி வந்து மிகவும் தளர்ந்து போனார்.
கந்தவேலர், வீட்டில் வளரும் காதம்பரி, தவழும் குழந்தையாக 4 மாதங்களில், தொட்டு இருந்தாள். அதைப்போல அவரது மனைவியின் வயிற்றில் இருக்கும் கரு நான்கு மாத வளர்ச்சி கண்டிருந்தது.
தங்ககளுக்காக கட்டிக் கொண்டிருக்கும் அரண்மனையின் கட்டுமானப் பணிகள், பார்வையிட ஆசை கொண்ட வள்ளி, காதம்பரியை இடுப்பில் வைத்துக்கொண்டு, ஊரின் எல்லையைத் தாண்டி இருக்கும், கதம்ப வன தேசம் நோக்கி நடந்து வரும்போது, மசக்கையின் அயர்ச்சியால்... தலைசுற்றல் ஏற்பட குழந்தையை தரையில் அமர்த்திவிட்டு, தானும் மரத்தில் சாய்ந்து அமர்ந்திருந்தார். கண்ணடைத்துக் கொண்டு, மயங்கி விழுந்து விட்டார்.
காதம்பரி, அவளது தாயை பிஞ்சு கரங்களால் தடவி, அழுது கொண்டிருந்தாள்.
வனத்தில் இருந்த குரங்குகள், அங்கே கூட்டமாய் வந்து குழுமின.
மயங்கி கிடக்கும் தாயின் அருகில், குழந்தை அழுவதை பார்த்த குரங்குகள் தலையை சொரிந்தபடி, என்ன செய்வதென்று சுற்றி சுற்றி வந்தது.
கடைசியில் சில குரங்குகள், வேகவேகமாக எல்லையில் நடக்கும் கட்டுமானப் பணித் தொழிலாளர்களைப் பார்க்க ஓடிச் சென்றது.
அங்கே வேலை செய்து கொண்டிருந்த பெண்களின் சேலையை இழுத்துக் கொண்டு, செல்லும் பாதையைக் காண்பித்தது.
சில பெண்கள் பயந்து ஓடினார்கள். சிலர் குரங்கு ஏதோ சொல்ல வருகிறது என்று அந்த பாதையில் நடந்து சென்றார்கள். சிறிது தூரம் சென்றதுமே குழந்தையின் அழுகுரல் கேட்க. வேகமாக ஓடிச் சென்று அவ்விடத்தைப் பார்க்கிறார்கள்.
அங்கே வள்ளி மயக்க நிலையில் இருக்க, காதம்பரி அழுது கொண்டிருந்தாள்.
உடனடியாக குழந்தையை தூக்கிக்கொண்டு, வள்ளியின் கன்னத்தில் தட்டி எழுப்பி பார்த்தார்கள். மயங்கி நிலையில் இருந்து சிறிதும் அசையவில்லை.
பின்பு தங்களோடு வேலையில் இருக்கும் மருத்துவச்சியை, வரவழைக்க சில பெண்கள் ஓடினர். மருத்துவச்சி அழைத்து வரப்பட்டார். அவர் வந்து சில மூலிகைகளை கசக்கி வள்ளியின் மூக்கில் நுகர செய்தார்.
அதன் பிறகே வள்ளி கண் விழித்தார்.
வள்ளியை சுற்றி, நாலைந்து பெண்களும், சில குரங்குகளும். இருப்பதை பார்த்து அதிர்ச்சியாய், "நான் இங்கே இருப்பது உங்களுக்கு எப்படி தெரியும்?" என்று வினவினார்.
"வள்ளி... நீ மயக்கமா இருந்தபோது, இந்த குரங்குகள், எங்களை இங்கே அழைக்க, என்னவெல்லாம் செய்தது தெரியுமா? உன்னை காக்க எத்தனை கஷ்டப்பட்டது தெரியுமா?"
குரங்குகளைப் பார்த்துக் கை எடுத்து வணங்கினார் வள்ளி.
குரங்குகள் தங்கள் வேலை முடிந்துவிட்டதேன புறப்பட்டு சென்றதுகள்.
ஏன் வள்ளி, இங்கு எதற்காக வந்தாய் என்று மருத்துவச்சி கேட்க
கட்டுமான வேலைகள், எந்த அளவுக்கு முடிந்திருக்கிறது. என்று தெரிந்து கொள்வதற்காகவும், சுற்றிப் பார்ப்பதற்காகவும் புறப்பட்டு வந்தேன். ஆனால் திடீரென்று மயக்கம் ஏற்பட்டு, இங்கே கீழே விழுந்து விடுவோமோ என்று தோன்றியது. அதனால் இப்படி ஓரமாக அமர்ந்திருந்தேன். என்னையும் மீறி அயர்ந்து விட்டேன்.
"நீ வர நினைத்திருந்தால் எங்களுடனே காலையிலேயே வந்திருக்கலாம். எதற்காக நீ மட்டும் தனியாக வந்து இப்படி இக்கட்டில் மாட்டிக் கொண்டாய்? சரி வா... எங்களோடு வந்து, உனக்காக கட்டும் அரண்மனையை பார்." என்று அங்கிருந்த பெண்கள் வள்ளியை கைத்தாங்கலாக அழைத்துக் கொண்டு, காதம்பரியை ஒருவர் தூக்கிக்கொண்டு நடந்து சென்றார்கள்.
குழந்தை காதம்பரி மற்றவர்களோடு அத்தனை இனக்கம் காட்டவில்லை. வேறு வழியில்லாமல் வள்ளியே இடுப்பில் சுமந்து கொண்டு நடந்து வந்தார்.
நீர்த்தேக்க அணையின் கட்டுமானத்தை பார்க்க சென்ற வருண தீரர், நிற்க முடியாமல் மயங்கி சரிந்தார்.
மக்கள் அனைவரும் பதறி அடித்துக் கொண்டு, அரசரை தூக்கிக் கொண்டு வந்து, பத்திரமாக அரண்மனைச் சேர்ப்பித்தார்கள்.
அப்போழுதே மன்னருக்கு வாய் ஒருபுறம் இழுத்துக் கொண்டது.. பேச்சு சற்று குளறலாக வெளிப்பட ஆரம்பித்தது.
அரண்மனையின் வைத்தியர், மன்னரை சோதித்துப் பார்த்து. மன்னரின் உடலுக்கு ஒவ்வாத எதையோ புகட்டி இருக்கிறார்கள் என்று புரிந்து கொண்டார்.
அதே நேரத்தில் ராணிக்கு தான் கொடுத்த சூரணத்தின் ஞாபகம் அப்போது வந்தது.
வைத்தியருக்கு விளங்கி விட்டது. ராணி சூரணத்தை தனக்காகக் கேட்டுப் பெறவில்லை. மன்னரை முடக்குவதற்காகப் பெற்றிருக்கிறார்.
மன்னரிடம் விஷயத்தை சொன்னாலும், அவரால் எதுவும் செய்ய முடியாது. மக்களிடம் சொன்னால் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டு, நிலைமை மோசமாகி போகும். அதனால் மனதிற்குள்ளேயே புதைத்துக் கொண்டார் ரகசியத்தை.
கந்தவேலர், வைத்தியரை சந்தித்து, "மன்னரின் நிலை என்ன?" என்று கேட்க.
வைத்தியர், "மன்னரது உடலுக்கு ஒவ்வாத மருந்தை, இத்தனை காலம் புகட்டி, அவரை செயலிழக்க செய்து விட்டார்கள்."
கந்தவேலர், "இப்படி ஒரு கொடூர செயலை, யார் செய்திருப்பார்கள் என்று, உங்களால் யூகிக்க முடிகிறதா வைத்தியரே?"
வைத்தியர், கந்தவேலரிடம் உண்மையைச் சொன்னால்... ராணியால் தனக்கு ஆபத்து நேர்ந்துவிடும் என்று பயந்து, அரண்மனையில் பணி புரியும், அரண்மனை வாசிகளை தவிர வேறு யாராக இருக்க முடியும்? அரசியார் அங்கு சமைப்பதோ, பரிமாறுவதோ இல்லை. இந்த வேலைகளை எல்லாம் செய்து கொண்டிருப்பது யாரோ ஒரு கருப்பு ஆடு. அது இன்னும் அரண்மனைக்குள் உலாத்திக் கொண்டிருக்கிறது."
"அப்படி என்றால் அவர்களின் அடுத்த இலக்கு, ராணியாகத்தானே இருக்கும். ராணியை காப்பாற்ற வேண்டும் என்றால், அரண்மனை வாசிகளை உடனடியாக அப்புறப்படுத்தியாக வேண்டும்." என்று கந்தவேலர் கொந்தளிப்பாக சொன்னதைக் கேட்ட
வைத்தியர், "மந்திரியாரே சற்று பொறுமையாக இருங்கள்". என்று தடுத்து நிறுத்தி நான்கு மாதங்களுக்கு முன்பு அரசியின் வயிற்று வலிக்கு மருந்து கொடுத்து விட்டு வந்தேன். அந்த மருந்தை வியாதி இல்லாத ஒருவர் உட்கொண்டால், இப்படி முடக்கிவிடும் என்று கூறி விட்டு வந்தேன். இப்போது மன்னர் முடங்கி கிடக்கிறார்."
"அப்படியென்றால் இதை செய்தது அரசியார் என்று சொல்கிறீர்களா?"
"எனக்கு சரியாக தெரியவில்லை. நீங்கள் இதை ஆராய நினைத்தால், என் உயிருக்கு ஆபத்து வந்துவிடும். தயவு செய்து என் பிள்ளை, குட்டிகளுக்காக என்னை வாழ விடுங்கள்." என்று கையெடுத்து வணங்கினார். மந்திரி கந்தவேலர் அமைதியாக அங்கிருந்து சென்று விட்டார்