• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Nov 8, 2025
Messages
50
அன்று ஒரு பௌர்ணமி நன்னாள். முழு நிலவு நிறைந்த கார்கால மாதம்.
லேசான மேகமூட்டத்தோடு சிறு தூறல்கள் தூறிக் கொண்டிருக்க. அதிகாலைப் பொழுது காதம்பரிக்கு பிரசவ வலி ஏற்பட்டு விட்டது.

வைத்தியரின் மனைவி, "இளவரசி... மிதமான வலியாக இருக்கிறதா? அல்லது உயிர் போகும் வலியாக இருக்கிறதா?"

"மிதமான வலியாக இருக்கிறது"

"அப்படி என்றால் இந்த கர்ப்ப வாய் திறக்கவில்லை என்று அர்த்தம். மெல்ல நடந்து கொடுத்துக் கொண்டிருங்கள். வலியும் சற்று அதிகரிக்கும். உங்களால் தாங்கிக் கொள்ளுங்கள். கொள்ளுங்கள். கொள்ளுங்கள். கொள்ளுங்கள். கொள்ளுங்கள். கொள்ளுங்கள். கொள்ள முடியாத வலி ஏற்படும் போது. உங்களுக்கு உணர்வில் உருத்தல் தோன்றும்."

"சரி அம்மா..." என்ற காதம்பரி, மெல்ல மெல்ல நடந்து கொடுத்துக் கொண்டிருந்தாள்.

வள்ளி, அவளுக்கு தேவையான நூல் புடவைகளையும், விளக்கெண்ணெய் மஞ்சள் காப்பையும். பிரசவ மருந்தையும் தயார் படுத்திக் கொண்டிருந்தார்.

வருணனும், கந்தவேலரும், மகிழ்ச்சியோடு இருந்தாலும். காதம்பரி, பிரசவ வலியால் முகம் சுழித்துக் கொண்டிருப்பதை காண சகிக்காமல். அரண்மனையை விட்டு வெளியேறி. வீதிகளில் உலாத்திக் கொண்டிருந்தார்கள்.

சூரியன் உதிக்கும் நேரத்தில், காதம்பரிக்கு வலி, உயிர் போனது. மேற்கொண்டு நடக்க முடியாமல் அப்படியே உட்கார்ந்து விட்டாள். அடுத்த சில வினாடிகளில், குழந்தை அழும் சத்தம் அரண்மனையின் ஜன்னலில் கேட்க. கந்தவேலரும், வருணனும் வேக வேகமாக அரண்மனைக்கு ஓடி வந்தார்கள்.

வருணனும், கந்தவேலரும், அரண்மனையின் வாசலை மிதிக்க. வைத்தியரின் மனைவி வாசலில் அருகில் வந்து நின்றாள்.

கந்தவேலர், ''தாயும் சேயும் நலந்தானே'' என்று கேட்க.

வைத்தியரின் மனைவி, முக வாட்டத்தோடு, "இருவரும் நலமாக உள்ளனர். நான் வந்து வேலை முடிந்து விட்டது. செல்கிறேன்." என்ற அவர்களின் பதிலை எதிர்பாராமல் சென்று விட்டாள்.

கந்தவேலருக்கும், வருணனுக்கும் ஒன்றும் விளங்கவில்லை.

வருணன், கந்தவேலரிடம், "என்ன அவசரம் வந்துவிட்டது? இவர்கள் இத்தனை சீக்கிரத்தில் கிளம்பி விட்டார்கள்."

கந்தவேலர், எனக்கும் ஒன்றும் விளங்கவில்லை. வா... சென்று பார்க்கலாம்." என்று இருவரும் காதம்பரி இருக்கும் அறைக்கு விரைந்து செல்லுங்கள்.

வள்ளி கண்ணீர் கோலத்தோடு, "இருவரும் சற்று நிதானமாக இருங்கள். இந்த அறையை சுத்தப்படுத்தவில்லை. வைத்தியரின் மனைவி, குழந்தை பிறந்த மறுநொடி. வெளியேறி விட்டாள். நான் குழந்தையையும், காதம்பரியையும் சுத்தம் செய்துவிட்டு அழைக்கிறேன். அதுவரை சற்று தள்ளியே இருங்கள். என்று சொன்னவர் குழந்தையும் தாயையும் துடைத்த துணிகளை அள்ளி போட்டணம் போட்டுக்கொண்டு. வெளியில் சென்று வேறொரு இடத்தில் வைத்துவிட்டு வர.

வழிமறித்த கந்தவேலர், "அது சரி வள்ளி இந்த சந்தோஷமான நிகழ்விலும், நீ ஏன் சங்கடத்தோடு காட்சி அளிக்கிறாய்?"

வள்ளி, சொல்ல முடியாத துயரத்தில், முந்தானைச் சேலையை எடுத்து வாயை மூடிக் கொண்டு, "நாம் செய்த பிழை. காத்திருக்கிறதோ! வேலவனுக்கே வெளிச்சம். அந்த காட்சியை நீங்களே வந்து பாருங்கள்." என்று சொல்லி அறைக் கதவை திறந்து விட்டார்.

காதம்பரி அயற்சியால் உறங்கிக் கிடக்க. அருகில் ஒரு ஆண் சிசு அழாமல் கண்களை உருட்டிக்கொண்டு படுத்திருந்தது. அந்த குழந்தையின் கால் முதல் கழுத்து வரை மனித உடலாகவும். முகம் மட்டும் குரங்கின் முகமாகவும். வெள்ளை வெளேர் என்று ஆஞ்சநேயர் அவதரித்தது போல கிடந்தது.

அந்த குழந்தையை கண்ட வருணன், ஆச்சரியத்தோடு, "இதென்ன அதிசயமாக பிறந்திருக்கிறது?" என்று சொல்ல.

கந்தவேலர், வள்ளியை பார்த்து, "நாம் மறைத்து வைத்த ரகசியத்தை, மக்கள் மன்றத்தில் எடுத்துரைக்கும் படி. செய்து விட்டானே இந்த வேலவன்."

வள்ளி, மக்களை விட்டுத் தள்ளுங்கள் அவளது மன்னவரிடம் என்ன பதில் உரைப்பது? நாம் சொல்லும் பதிலை ஏற்றுக் கொள்வார்களா? இல்லை இதனால் ஏதேனும் பிரச்சினை உண்டாகுமா? பிரசவம் பார்க்க வந்த மருத்துவச்சி, குழந்தையை கண்ட உடனேயே, பொத்து என்று தரையில் போட்டு விட்டாள். இவள் சென்று மகாராணி இடம் விவரத்தைச் சொல்லும் போது, அவர்களின் மனநிலை என்னவாக இருக்குமோ தெரியவில்லை. இந்த குழந்தையை கொடுத்ததற்கு அந்த கடவுள், நமக்கு குழந்தை பேரு இல்லாமல் செய்திருக்கலாமே."

வருணன், "ஆயிரத்தில் ஒன்று அதிசய நிகழ்வாக நிகழ்வது இயல்புதான். நமக்கு கடவுளின் அனுக்கிரகம் உள்ளது... கடவுளே நமது அக்காவின் வயிற்றில் வந்து அவதரித்திருக்கிறார். இவர் ஆஞ்சநேயர் சுவாமிதான்."

கந்தவேலருக்கு, மகனிடம் சொல்வதற்கே பெரும் தயக்கம் கொண்டார். இந்த நிலையில் மக்களிடத்திலும், வள்ளலார் இடத்திலும், எப்படி விளக்கி சொல்ல போகிறாரோ தெரியவில்லை.

சிறிது நேரத்தில் கண் திறந்த கதம்பரி, குழந்தையை பார்த்து, "இது என்ன கொடுமை? என் வயிற்றில் குரங்கு குட்டியா இருந்தது?" என்று கேட்டு அழ தொடங்கி விட்டாள்.

வள்ளி, "பிறந்த குழந்தையை பழித்து பேசாதே அம்மா"

காதம்பரி, "இது என் குழந்தையே அல்ல. என்னுடைய அங்க லட்னமோ. என் மன்னவனின் அங்க லட்சணமும் இல்லாத குழந்தை. இந்த குழந்தை எனக்கு வேண்டாம்."

வருணன், "அக்கா இப்படிப்பட்ட குழந்தை, கோடியில் ஒருவருக்கு பிறக்கும். இது உன்னுடைய அதிர்ஷ்டம். கடவுள் ஆஞ்சநேயர் உனக்கு மகவாக பிறந்திருக்கிறாள். இதை கொண்டாடாமல் அழுது வடிந்து கொண்டிருக்கிறாயே!"

"இல்லை... இந்த குழந்தை எனக்கு வேண்டாம். இதை என்னுடைய மன்னவர் ஏற்றுக்கொள்ள மாட்டார். என் மன்னவரே ஏற்றுக் கொண்டாலும், அவரது தாயார் அவரை ஏற்காமல் தடுப்பார். விஷயம் வெளியில் தெரியும், இந்த குழந்தையை வனத்தில் கொண்டு வந்து விடுங்கள்". என்று கதறி அழுதாள் காதம்பரி.

ஆவேசமான கந்தவேலர், "ஒரு குரங்குக்கு, குரங்கு குட்டி தான் பிறக்கும். அல்லாமல் மனித குட்டி எவ்வாறு பிறக்கும்?"

காதம்பரிக்கு விளங்கவில்லை. தன்னுடைய தந்தை, தனது கணவரின் குணநலத்தை, குரங்கோடு ஒப்பிட்டு பேசுகிறார் என்று நினைத்த காதம்பரி. "என் மன்னவரை குறை கூறாதீர்கள் அவரைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?"

"நானும் அரசரை சொல்லவில்லை. உன்னை சொல்கிறேன்."

"உங்களின் அன்பு மகளை குரங்கென்று எவ்வாறு கூறமுடிகிறது.?"

"நீ எப்போதும் எனது அன்பு மகள் தாம். ஆனால் நீ பிறப்பால் ஒரு குரங்கு.." என்று சொன்ன கந்தவேலர் தனது முகத்தை பொத்திக்கொண்டு அழுதார்.

"என்ன சொல்கிறீர்கள் அப்பா..." என்று காதம்பரி கேட்க.

நடந்தவற்றை சொன்னார் கந்தவேலர் விளக்கிச் சொன்னார்.

"இத்தனை நடந்ததை இப்போது சொல்கிறீர்களே இது சரியா?"

வள்ளி, "எங்களுக்கே தற்போதுதான் தெரியும் அதுவும் மந்திமுகமுனிவர் நமது தேசம் வந்தபிறகு தான் தெரியும்."

அப்போதுதான் காதம்பரிக்கும் விளங்கியது. மந்தி முக முனிவர் மீது தனக்கு இருக்கும் அக்கறையையும் யோசித்துப் பார்த்தாள். ''இந்த விபரத்தை எல்லாம், என்னுடைய குடும்பத்தில் சொன்னால் ஏற்றுக் கொள்வார்களா? இல்லை இந்த மக்களிடம் சொன்னால்தான் ஏற்றுக்கொள்வார்களா? இதை நீங்கள் முன்னமே தெரிவித்திருந்தால், இப்படி ஒரு பிரச்சனை வந்திருக்காது. அதே நேரத்தில் நானும் பழிச்சொல்லை ஏற்காமல் இருந்திருப்பேனே. எதுவுமே இல்லை என்றால். எனக்கு திருமணமே வேண்டாம் என்று வாழ்ந்திருப்பேனே. இப்போது நான் என்ன செய்வது? பிஞ்சு குழந்தையை கொன்று விட்டு. நான் உயிரோடு வாழ்வது முறையா? நான் உயிரோடு இருந்தாலும் என் மன்னவர் என்னை ஏற்றுக் கொள்வார் என்பது மிகவும் கடினமே. இதற்கு ஒரே தீர்வு. நான் இறப்பது மட்டுமே." என்று அழுதாள் கதம்பரி.

வள்ளி, "உன்னை பலி கொடுக்கவா பார்த்து வளர்ந்தோம். உனது கணவனிடம் நிதானமாக எடுத்துச் சொல்லுவோம். அவர் கண்டிப்பாக ஏற்றுக் கொண்டார். பொறுமையாக இரு." என்று மகளை தேற்றி, பால் புகட்ட சொல்லி கையில் குழந்தையை தூக்கி விட்டு. கந்தவேலரும், வள்ளியும், வருணனும் அந்த அறையை விட்டு வெளியே வந்தனர்.

கதம்பவன தேசத்தில் இருந்து அதிகாலையில் புறப்பட்டு சென்ற மருத்துவச்சி மத்தியான வேளையில் உச்சிப் பொழுதில் வகுள ஆரண்ய தேசத்தின் அரண்மனைக்கு சென்று சேர்ந்தார்.

அரசி கமலி, "என்னுடைய குடும்ப வாரிசு பிறந்து விட்டதா? உன்னை யார் கொண்டு வந்து இங்கே விட்டுவிட்டு சென்றார்கள்? சிறு பெண் அவள், குழந்தையை குளிக்க வைக்க பழகும் வரை இருந்து பார்த்துவிட்டு வந்திருக்கலாமே. ஏன் இத்தனை அவசரமாக ஓட்டோடி வந்தாய்?"

மருத்துவச்சி, "குழந்தை இன்று அதிகாலையில் பிறந்து விட்டது. ஆனால் அக்குழந்தை, தங்களது குல வாரிசா என்பதுதான் எனக்கு ஐயம் ஏற்பட்டது."

கமலி,"என்ன உளறுகிறாய்?"

"ஆமாம் தாயே... தங்கள் மருமகளின் வயிற்றில் ஒரு குரங்கின் குட்டி இருந்தது. அதை பிரசவம் பார்த்து கையில் தூக்கி உடனே, பதறிப் போய் கைநழுவ விட்டேன். அது மனிதக் குழந்தையே அல்ல. ஒரு குரங்கு. இது எவ்வாறு நடந்திருக்கும் என்று எனக்கும் வியப்பாக இருக்கிறது. மேலும் அது குழந்தை இல்லாமல் ஏதாவது குட்டிச்சாத்தான் ஆக இருந்தால். திடீர் உருவ வளர்ச்சி பெற்று, என்னை கொன்று விடுமோ என்ற பயத்தில், அங்கிருந்து நழுவிக் கொண்டு ஓடி வந்திருக்கிறேன். என்னை நம்புங்கள்."
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top