Member
- Joined
- Nov 8, 2025
- Messages
- 50
- Thread Author
- #1
800 ஆண்டுகளுக்கு முன்பு நமது தமிழ் தேசத்தின் தென்கோடியில் உள்ள வகுள ஆரண்யத்தை வருணதீரர் ஆட்சி செய்தார். அவரது மகன் வல்லாளன், புதுக்கோட்டத்தில் இருக்கும் அருளாளன் முனிவரிடம் கல்வி கற்பதற்காக குருகுல வாசம் சென்று இருக்கிறான்.
வருண தீரர் அவையில், கந்தவேலன் முக்கிய அமைச்சராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.
கந்தவேலனுக்கும், வள்ளியம்மாளுக்கும் திருமணமாகி, நெடு நாட்களாக குழந்தை பேறு இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தனர்.
குழந்தை இல்லாத குறையை தீர்ப்பதற்காக இறைவன் திருவுள்ளம் கொண்டு.
ஒரு பவுர்ணமி இரவில், இருவரும் அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கும் வேளையில், அசரீரி ஒலியாக, "கந்தவேலா... நீயும் உன்னுடைய மனைவியும், செந்தூர் கோட்டம் சென்று, சிவகுமாரனை தரிசனம் செய்துவிட்டு வந்தீர்கள் ஆனால், உங்களது எண்ணம் ஈடேறும்". என்று கேட்க. இருவரும் திடுக்கிட்டு விழித்து எழுந்து அமர்ந்தார்கள்.
வள்ளி, "சுவாமி தங்களுக்கு இறைவனது அசரீரி கேட்டதா?"
கந்தவேலன், "ஆமாம் வள்ளி. அதனால்தான் இப்போது கண்விழித்தேன்."
"இறைவா... உன்னுடைய கருணையே கருணை! இப்போதே உன்னை தரிசனம் செய்ய, செந்தூர் கோட்டம் வருகிறோம்." என்று வள்ளி தலைக்கு மேல் கை குவித்து வணங்கி கொண்டார்."
அதே பௌர்ணமி நேரத்து இரவில், வகுள ஆரண்யம் முடிவுறும் எல்லையில், கந்த மகா பர்வதம் என்னும் சிறுமலை குன்று ஒன்று உள்ளது. அங்கே மந்தியின் முகத்தோடு விளங்கும், மந்தி மகாமுனிவர். தவம் இயற்றிக் கொண்டிருந்தார்.
அவரது தவத்தை கலைப்பது போல, சிறு பிள்ளையின் சிணுங்கல் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.
முனிவர், "இந்த அடர் வனத்துக்குள் குழந்தையின் அழுகுரல் கேட்கிறதே! எங்கிருந்து கேட்கிறது? யார் பெற்ற குழந்தை 7 எப்படி இங்கே வந்தது? சிந்தனைகள் ஓட, முதலில் குழந்தை எங்கிருந்து அழுதது என்பதை அறிய, கண்களை மூடி, ஞானக் கண்கள் வழியாக, தேடலை தொடங்கினார்.
அந்த தேடலில், "தாய் குரங்கு ஒன்று இறந்து கிடக்க, ஆதன் குட்டி அந்த சடலத்தின் மீது விழுந்து அழுது கொண்டிருந்தது".
முனிவரது உள்ளம் இளகி, வருத்தத்தோடு தவத்தை விட்டு எழுந்து, குரங்கின் சடலம் இருக்கும் இடத்தை நோக்கி நடந்து சென்றது. இறந்து கிடக்கும் சடலத்திற்கு உயிர் கொடுக்கும் வல்லமை, மந்தி மகாமுனிவருக்கு இருந்தாலும். அவர், அந்த குரங்குக்கு உயிர் கொடுக்கும் எண்ணம் தோன்றவில்லை. அந்த தாய்க்கு குரங்கின் ஆயுள் முழுவதும் முடிந்து போய்விட்டது.
அதனால் குட்டியை தேற்றுவதில் முனைப்பு காட்டினார்.
குரங்கு குட்டியை, குரங்கின் சடலத்திடமிருந்து பிரிக்க முடியவில்லை. ஒருவாராக பிரித்து, கைகளில் ஏந்தி கண்ணீரை துடைத்து, "வருத்தம் கொள்ளாதே செல்வமே! நீ என்னோடு இருக்கலாம். நானே உனக்கு தாய் போல் இருந்து காப்பேன்." என்று சொன்னார்.
ஆனால் குரங்கிற்கு அவர் கூறும் ஆறுதல் மொழிகளும் புரியவில்லை. இனி என்ன செய்யப் போகிறார் என்றும் விளங்கவில்லை. அது அழுகையை நிறுத்தவும் இல்லை.
முனிவருக்கும் வேறு வழி தோன்றவில்லை. கண்களை மூடி கடவுளை பிரார்த்தித்தார்.
மந்தி மகா முனிவர் கையில் இருக்கும் குரங்கு குட்டியை, அதன் தற்போதைய நினைவுகளை மறக்கச் செய்து விடும் படி கடவுளிடம் வேண்டினார். அதேபோல குரங்கு குட்டியை, மனித குழந்தையாக உருமாற்றம் பெறுமாறு ஜெபம் செய்தார். அதன்படியே அவர் கைகளில் இருந்த குரங்கு குட்டி, மனித குழந்தையாக, அழகான பெண் சிசுவாக உருமாற்றம் பெற்று அழுதது.. அந்த பெண் குழந்தையை எடுத்துக்கொண்டு, தனது குடிலுக்குள் வந்து, பால் புகட்டி பாதுகாப்பாய் பத்திரப்படுத்தி வைத்திருந்தார்.
கந்தவேலனும், வள்ளியம்மாளும் செந்தூர் கோட்டம் செல்வதற்கு தயாராகிக் கொண்டிருந்தார்கள்.
வள்ளி, வகுள ஆரண்யத்தில் இருந்து, செந்தூர் கோட்டம் வரை நடந்து செல்வதற்கு, நான்கு நாட்கள் பிடிக்கும் என்று கணக்கிட்டு. நான்கு நாட்களுக்கு தேவையான உணவாக, பதப்படுத்தப்பட்ட சிறு தானியங்களை தோளில் போடும், துண்டில் கட்டி, இருவரும் தோளில் போட்டுக் கொண்டார்கள். இரண்டு சுரக்காய் குடுகையில் தண்ணீர் நிரப்பிக் கொண்டு. திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக, கணவனும், மனைவியும் புறப்பட்டு சென்றனர்.
நடந்து செல்லும் வழி எல்லாம், கந்தனுக்கு அரோகரா. முருகனுக்கு அரோகரா. என்ற அரோகரா கோஷங்களும். முருகனின் பக்தி பாடல்களையும், கணவனும், மனைவியும் ஆக மனதார உச்சரித்துக் கொண்டு நடந்து கொண்டார்கள்.
வகுள ஆரண்யத்தின் எல்லையை தாண்டும் போது, பிரதமை திதி முடிந்து. துவிதியை திதி ஆரம்பமாகி இருந்தது. அதாவது ஒரு நாள் பயணம் முடித்திருந்தார்கள்.
இரண்டாவது நாளில், கந்தமாகா பருவதத்தை கடக்கும் வேளையில்... மந்தி மகா முனிவர் தங்கி இருக்கும் குடிசையை கண்டார்கள்.
இருவரும் குடிலின் வாயிலில் நின்று "தவப்பெருந்தகையே! தங்களை வணங்குகிறோம். நாங்கள் உங்கள் தரிசனத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறோம்." என்று அழைக்க.
மந்திமகா முனிவர் தம்பதியர் முன்பு பிரசன்னமானார்.
கந்தவேலனும், வள்ளியும், முனிவரின் குரங்கு முகத்தைக் கண்டு அதிர்ச்சியாய் விழித்தார்கள்.
மந்திமகாமுனிவர்," என்னைக் கண்டு பயம் கொள்ளாதீர்கள் குழந்தைகளே... நீங்கள் இருவரும் குழந்தை வரம் கேட்டு குமரனை தரிசிக்க, செந்தூர் கோட்டம் நோக்கி செல்கிறீர்கள் என்பதை, நான் அறிவேன். உங்கள் எண்ணத்தை ஈடேற்ற, இறைவன் என்னிடம் ஒரு குழந்தையை கொடுத்துவிட்டு சென்று இருக்கிறான். இந்த குழந்தையை ஏற்றுக்கொண்டு, குமரனை தரிசனம் செய்துவிட்டு வாருங்கள். நீங்கள் இருவரும் உங்கள் இல்லம் சென்றடையும் நேரத்தில், வள்ளியம்மை வயிற்றில். கருவாக குமரன் உதித்திருப்பான்."
முனிவரின் திருவாக்கை கேட்டு, தம்பதிகள் பூரித்துப் போனார்கள். இருவரும் ஒன்றாக கரம் கூப்பி, மிக்க நன்றி முனிவர் பெருமானே! எங்கள் வாழ்க்கையில் ஒளியேற்றிய உங்களுக்கு மிக்க நன்றி! என்று ஒன்றாக பணிந்து நின்றார்கள்.
முனிவர், தன்னிடம் இருக்கும் பெண் குழந்தையை, வள்ளியம்மையின் கையில் கொடுத்து, "இந்த பெண் சிசு, கந்த மகாபர்வதத்தில், கந்தனின் அனுக்கிரகத்தால் பிறந்தவள். அதன் காரணமாக, இவளுக்கு காதம்பரி என்று பெயர் இடுகிறேன்." என்று அந்த குழந்தைக்கு பெயர் சூட்டி அருளினார்.
குழந்தை காதம்பரியை கையில் வாங்கிய வள்ளி, தன்னை மறந்து கண்ணீர் சிந்தினார்.
கந்தவேலன், "ஏன் வள்ளி கிடைத்தற்கறிய பெரும் செல்வம் கையில் இருக்கும் போது கலங்குகிறாய்?"
வள்ளி, இது கலக்கம் இல்லை சுவாமி. என் சந்தோஷத்தின் வெளிப்பாடு.
முனிவர், "இருவரும் செந்தில் கோட்டம் புறப்படுங்கள். நீங்கள் இல்லம் திரும்பும் போது இவ்வழியே வந்தால் என்னை காண்பதற்கு முயற்சி செய்ய வேண்டாம். நான் இங்கிருந்து புறப்பட்டு போகிறேன். உங்களை காண, எனக்கு, இறைவன் எப்போது கட்டளையிடுகிறானோ அப்போது உங்களை சந்திக்கிறேன்."
கந்தவேலன், "கையில் குழந்தை கிடைத்தவுடன், கந்தனை மறந்து விட்டோம். எங்களை மன்னித்து விடுங்கள் சாமி. நீங்கள் சொன்னது போல நாங்கள் உங்களை இங்கே தேடி வர மாட்டோம்." என்று சொல்லிவிட்டு அவரிடம் இருந்து விடை பெற்று இருவரும் செந்தூர் கோட்டம் நோக்கிச் சென்றார்கள்.
கந்த வேலனும் வள்ளியும் சென்ற சிறிது நேரத்தில், மந்தி மகாமுனிவர் தென்திசை நோக்கி பயணப்பட்டார்.
சதுர்த்தி திதியில், திருச்செந்தூர் தளத்தில், கணவனும் மனைவியும் கால் பதித்திருந்தார்கள். கடலில் நீராடி விட்டு. கணவனும் மனைவியும் ஒன்றாக குமரனை வழிபாடு செய்து விட்டு. குழந்தையோடு தங்கள் இல்லம் நோக்கி புறப்பட்டார்கள் முனிவரின் வாக்குப்படி வள்ளி கருவுற்று இருந்தாள்.