• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Dec 26, 2024
Messages
40
அத்தியாயம் 29 (இறுதி அத்தியாயம்)

திடீரென சேகர் லட்சுமியை திருமணம் செய்து கொண்டு வந்து வாசலில் நிற்க, அனைவருக்குமே அதிர்ச்சி தான். அதில் முதலில் தெளிந்த கண்மணி அவர்களை இன்முகத்தோடு ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து வந்தாள், அதன் பிறகு வாசுகியும் தெளிந்து, அவர்களை பூஜை அறைக்கு அழைத்துச் சென்றார்.

கிருஷ்ணமூர்த்திக்கு வருத்தம் தான் என்றாலும், தன் தங்கை மகன் அவன் விருப்பப்படியே நன்றாக இருக்க வேண்டும், என்று நினைத்து அவர்களுக்கு ஆசி வழங்கினார்.

ஆனால் ரங்கநாயகி தான் ஒப்பாரி வைத்து ஊரையே கூட்டி விட்டார். அதோடு இடை இடையே லட்சுமியை ஜாடையாக வசை பாடவும் மறக்கவில்லை. தனது மகனின் அதட்டலுக்கு பிறகே வாயை மூடினார்.

தனது மகளின் வாழ்வு என்ன ஆகும் என்ற யோசனையிலேயே, இரண்டு நாட்கள் சுற்றிக் கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தி, ஒரு நாள் திடீரென நெஞ்சை பிடித்துக் கொண்டு மயங்கி விழுந்தார்.

ஹாஸ்பிடலில் அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவருக்கு இது முதல் ஹார்ட் அட்டாக் என்று கூற, குடும்பம் மொத்தமும் அதிர்ந்து போனது.

அதோடு அதிகமான மனஅழுத்தத்தால் தான் இது ஏற்பட்டிருப்பதாக அவர்கள் கூற, கண்மணி அதற்கு தான் தான் காரணம் என்று தெரிந்ததால் நொறுங்கிப் போனாள்.

ஏனென்றால் இரண்டு நாட்களாக அவளை பார்க்கும் போதெல்லாம்,

“பாப்பா என்ன மன்னிச்சிடும்மா, சின்ன வயசுல இருந்து உனக்கு இவன் தான் மாப்பிள்ளைன்னு, சொல்லி சொல்லியே உன் மனசுல ஆசையை வளர்த்துட்டேன். இப்ப திடீர்னு அவன் வேறொரு கல்யாணம் பண்ணிக்கிட்டான். என்னால உன் வாழ்க்கையே வீணா போச்சே டா.”

“ ஐயோ அப்பா எதுக்காக இப்படி பெரிய பெரிய வார்த்தையெல்லாம் பேசறீங்க? நிஜமாவே நான் இந்த நிமிஷம் வரைக்கும் மாமாவை அந்த கண்ணோட்டத்துல பார்த்ததே இல்ல, ஒருவேளை நீங்க இந்த கல்யாணத்தை எனக்கு பண்ணி வச்சிருந்தா, அது தான் எனக்கு ரொம்ப வலியை கொடுத்திருக்கும்.”

என்று கூறி கண்மணி அவரை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தாள். ஆனால் அவள் தனக்காகத் தான் இப்படி சொல்கிறாள், என்று நினைத்துக் கொண்டவர். அவளைப் பற்றிய கவலையில் ஆழ்ந்து இதயத்தை பலவீனமாக்கிக் கொண்டார்.

சிலநாள் பெட் ரெஸ்ட்க்கு பிறகு அவர் வீடு திருப்பி இருக்க, அதன் பிறகு தான் கண்மணி தன்னை சரி செய்து கொண்டு, தன் தந்தைக்காகவே வீட்டில் கலகலப்பாக வலம் வரத் தொடங்கினாள்.

இரண்டு வாரங்கள் சென்றிருக்கும், ரங்கநாயகி தனக்கு தெரிந்த மாப்பிள்ளை வீட்டார், கண்மணியை பெண் பார்க்க வரப் போவதாகக் கூற, கண்மணி பொறுமை இழந்து கத்தத் தொடங்கி விட்டாள்.

“யாரைக் கேட்டு இந்த ஏற்பாட்டை பண்ணறீங்க? ஏற்கனவே உங்க பேரனை கல்யாணம் பண்ணியே ஆகனும்னு சொல்லி, நீங்க ஆரம்பிச்சு வைச்ச பிரச்சனை தான் எங்க அப்பா ஹார்ட்டையே பாதிக்கிற நிலையில கொண்டு வந்து விட்டுடுச்சு. இதுக்கும் மேல என்ன தான் வேணும் உங்களுக்கு?”

“ இங்க பாரு என் பேரனை நான் தான் கூட்டிட்டு வந்தேன், ஒத்துக்கறேன். ஆனா அதனால ஒன்னும் என் பையனுக்கு ஹார்ட் அட்டாக் வரல, உன்னை நினைச்சு நினைச்சு தான் என் மக கலங்கி போறான். அப்பறம் இப்ப உன்னை பார்க்க வரப் போற மாப்பிள்ளை பையனை, உங்க அப்பாவுக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சு.

அதனால தான் உடனே பொண்ணு பார்க்க வரச் சொல்லி இருக்கான். ஆத்தா மகராசி இந்த தடவையும் என் பேரனுக்கு பண்ணியது போல, திட்டம் போட்டு கல்யாணத்தை நிறுத்தி மறுபடியும் என் மகன் உசுரோட விளையாடாத.”

அவர் வார்த்தைகளில் உள்ள உண்மை அவளை சுட்டாலும், தேவ்வை தவிர யாரையும் ஏற்றுக் கொள்ள மனம் மறுத்தது.

அவள் பயந்த அந்த நாளும் வந்தது, மாப்பிள்ளை வீட்டார் ஹாலில் அமர்திருக்க, கண்மணியின் இதயம் இங்கு துடித்துக் கொண்டிருந்தது. எப்படியாவது மாப்பிள்ளையிடம் தனியாக பேச சந்தர்ப்பம் வாய்த்தால், தனது நிலையை அவருக்கு புரிய வைக்க முடியும் என்று நம்பினாள். காப்பி ட்ரேவோடு ஹாலை நோக்கிச் சென்றவள், அங்கு அமர்ந்திருந்த ராம்சிங்கை கண்டு திடுக்கிட்டாள்.

பிறகு அவனை கூர்மையாகப் பார்த்தவள்,

“அப்பா எனக்கு மாப்பிள்ளை கிட்ட தனியா பேசனும்.”

என்று கண்மணி கூற, ரங்கநாயகி ஒத்த கொள்ள மாட்டேன் என்று அடம்பிடித்தார் ஆனால் அதற்குள், ராம் எழுந்து அவளை நோக்கி முன்னே வந்தவன், போலாம் என்று கூறி அவளின் பின்னே சென்றான்.

மாடியில் உள்ள பால்கனிக்கு கண்மணி அவனை அழைத்துச் செல்ல, பின்னால் வந்த ரங்கநாயகி அவர்கள் பேசுவது கேட்கும் தொலைவில் நின்று கொண்டு, அவர்களைத் தான் பார்த்துக் கொண்டிருந்தார். தனியாக சென்றதும் கண்மணி கேட்ட முதல் கேள்வி,

“என்ன தைரியத்துல என்னை கல்யாணம் பண்ணிக்க வந்த?”

“ஏன் அதுக்கு அளவுகோல் எதுவும் இருக்குதா என்ன? பார்த்ததும் பிடிச்சிருந்தது, உன்னை இல்ல உன் பாட்டியை, அவங்களுக்காக தான் உன்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதமுன்னு சொன்னேன். ”

“அப்படியா அப்போ அந்த கிழவியையே கட்டிக்க நான் எதுக்கு எக்ஸ்ட்ரா லக்கேஜ்ஜா. ஜோக்ஸ் அப்பார்ட், எனக்கு கல்யாணத்துல சுத்தமா இஷ்டம் இல்ல, அதையும் மீறி நான் தான் வேணும்னா, பின் விளைவுகள் பயங்கரமா இருக்கும்.
என் கழுத்துல உன் கையால கட்டப் போற தாலி ஏறும் முன்னவே, நீ ஹாஸ்பிடல் பெட்ல பலமுறை அட்மிட் ஆக வேண்டி இருக்கும்.”

“ஆஹான்…அதையும் தான் பார்ப்போமே?”

அவன் பதிலில் கடுப்பானவள்,

“ என் கழுத்துகிட்ட உன் கை போனா கூட, கைய உடைச்சு போடுவேன், இந்த கண்மணியை என்ன நினைச்ச? என்னை கட்டிக்கணும்னு நினைச்சதுக்கே என் மாமனுக்கு பேதி மாத்திரையை கலந்து கொடுத்து, கல்யாணத்தையே நிறுத்தினேன். இவ்வளவு செஞ்சு எனக்கு உனக்கு கொடுக்க போகும் பால்ல பாய்ஷனை கலக்க தெரியாதா என்ன?“

என்று கூறிவிட்டு அவள் வேகமாக வெளியே செல்ல,

“ஹேய் பட்டர் ஸ்காட்ச், அப்ப நான் உனக்கு வேணாமா?”

என்று குரலில் திடுக்கிட்டவள் வேகமாக திரும்ப, அங்கே தலையில் இருந்த டர்பனையும், ஒட்டு தாடியையும் கழட்டி வைத்துவிட்டு, புன்னகையுடன் நின்று கொண்டிருந்தான் தேவ். கண்களில் கண்ணீர் கரை புரண்டோட, ஓடி வந்து அவனை தாவி அணைத்துக் கொண்டாள் தேவ்வின் பட்டர் ஸ்காட்ச். காற்றுக் கூட புகா வண்ணம் அவளை அள்ளி அணைத்துக் கொண்டவன். அவளது உச்சந்தலையில் முத்தமிட, அவளோ அழுதபடி அவன் நெஞ்சத்தில் அழுத்தமான முத்தம் ஒன்றை கொடுத்திருந்தாள்.

அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று ஒட்டு கேட்பதற்காக அருகே நின்றிருந்த ரங்கநாயகி, இந்த காட்சியை கண்டு வாயை பிளந்தபடி அப்படியே அமர்ந்து விட்டார்.

மூன்று வருடங்கள் கழித்து தேவ்வை தான் சந்திப்பதாக கண்மணி சொன்ன, அதே பிப்ரவரி பதினாலாம் தேதி, மணமேடையில் மாப்பிள்ளை கோலத்தில் அமர்ந்திருந்த தேவ்வின் கண்கள் தன்னவளின் வருகைக்காக ஏங்கிக் கொண்டிருந்தது.

அழகோவியமாக பட்டுடுத்தி கண்ணங்கள் செம்மையுற மணமேடை ஏறியவள், தன்னவன் அருகில் அமர்ந்த போது, அவள் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி. தேவ் அவளையே கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருக்க, கண்மணி வெட்கத்தில் நெளிந்தாள். ஐயர் மாங்கல்யத்தோடு அட்சதையை ஆசிர்வாதம் பெற்று வர அனுப்பி இருக்க, கண்மணிக்கு தங்களது முதல் திருமண நிகழ்வு மனதில் நிழலாடியது.

அதே நேரம் தனது கைகளில் பத்திரமாக வைத்திருந்த கருகமணியை அவள் கழுத்தில் முதலில் கட்டிய தேவ், பிறகு தாலிக்கயிற்றோடு கூடி மாங்கல்யத்தையும் அவளது கழுத்தில் கட்டினான். .

அவன் காதருகில் குனிந்தவளோ மெல்லிய குரலில்,

“மூனு தடவை என் கழுத்துல தாலி கட்டிட்டீங்க சார், இனி இந்த ஜென்மத்தில் நீங்க என்கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது. காதல் கணவா…உந்தன் கரத்தை நான் விடவே மாட்டேன்.”

“சத்தியம் சத்தியம் இது சத்தியமே! பட்டர் ஸ்காட்ச்.”
 

Latest profile posts

வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top