- Joined
- Aug 31, 2024
- Messages
- 958
- Thread Author
- #1
19
“அனுமா” என தடுத்த மாமியாரை கோவமாக முறைத்தாள்.
“சாரி அனுமா. அது...” என விளக்கம் கொடுக்க வந்தவரை கைநீட்டித் தடுத்தவள், “ஏமாத்திட்டீங்க அத்தை. எதுக்காக இருந்தாலும் பெத்த பிள்ளையை... நான் போறேன். குழந்தை பிறந்ததும் வந்து வாங்கிட்டுப் போங்க. அதுக்குத்தான இவ்வளவும். அதுக்கு ஏன் கல்யாணம்? இன்னும் புரியலை எனக்கு. உங்களை நம்பினேன். ஆனா...” கண்கலங்க நின்றிருந்தவள் அருகே வந்த தாயிடம், “வாங்கம்மா போகலாம். அரவிந்த்” என்றழைக்கவும் வந்து நின்ற தம்பியையும் அழைத்து வெளியே வர, “அக்கா கார்ல போகலாம் வாங்க” என்றான் அரவிந்த்.
“இங்க உள்ள எதுவும் வேண்டாம் அரவிந்தா. வா’’ என்றதும்தான் தன் கையைப் பார்த்து அவன் சூட்டிய வளையலை கழட்டப்போக, “அனுமா” என்று அதட்டலிட்ட சாரதா, “நல்ல நாள் அதுவுமா குழந்தைக்காகப் போட்டதை கழட்டப்போற. இதுதான் நான் உனக்குச் சொல்லிக் கொடுத்ததா? டெலிவரி டைம்லதான் கழட்டணும். அதுவரை அதில் கை வைக்காத” என்றார்.
“இது அவங்க போட்டதும்மா.”
“தாலி கூடதான். அதுக்காக அதையும்...”
“அம்மா ப்ளீஸ். நான் எதுவும் செய்யலை வாங்க போகலாம். நீ காரை எடுடா” என்று ஏறி அமர்ந்ததும் அரவிந்த் சந்தோஷமாகக் காரை எடுக்க, சென்னை நெருக்கடி தாண்டி அரைமணி நேரத்தில் வீட்டு வாசல் முன் நிறுத்தினான்.
அவ்வளவு நேரம் கணவன், அவன் குடும்பம் பற்றிய யோசனையில் இருந்தவள் வீட்டைப் பார்த்ததும், “யார் வீடுடா? எந்த ஏரியா இது? இங்க ஏன் நிப்பாட்டியிருக்க?” என்று கேட்டாள்.
அக்காவின் தொடர் கேள்வியில், “உள்ள வந்து பேசலாம்கா. அம்மா கதவைத் திறங்க” என்று தாயிடம் சாவியை எடுத்துக் கொடுத்தான்.
“இது உன் மச்சான் வேலையா?” என கேட்க,
“அதான் தெரியுதுல்ல. குழந்தை பிறக்கற வரை நம்ம வீடு பூட்டிக்கிடக்கும். இல்லை வாடகைக்கு விடணும்னாலும் ஓகே” என்றான்.
ஏனென்பதாய் பார்க்க, “கல்யாணம் முடித்த இரண்டு மாசத்துல வளைகாப்பு வச்சா ஊர் என்னென்ன பேசும்னு தெரியாதா? மருமகன்தான் என் பொண்டாட்டியை அடுத்தவன் பேச சந்தர்ப்பம் கொடுக்கக்கூடாதுன்னு இங்க இருக்கச் சொன்னாங்க” என்றார் சாரதா.
“சரி. இது யார் வீடு?”
“அது தெரியலைமா. நம்ம வீடு மாதிரின்னு மட்டும் சொன்னார். டெலிவரி முடிந்து நாலு மாதம் இங்கயிருந்தா போதும். அப்புறம் நம்ம வீட்டுக்கே போயிக்கலாம்னு சொன்னார்.”
“ஓ...” என்றவளுக்கு ‘நீ போனால்தான் சரியா...’ ‘இருக்குமென்று’ சொல்ல வந்ததே மனதில் ஓடியது. அவளுக்கும் ஓரளவு அவனின் நிலை புரிகிறதுதான். ‘அதற்காக என்னை வெளியே அனுப்புவது சரியா? நொடியும் என்னை விட்டு விலகாதிருப்பவன், இப்பொழுது இருந்துவிடுவானா?’ என மனதிடம் கேட்டவளுக்கு, ‘தான் இருந்து விடுவோமா?’ என்று கேட்கத் தோன்றவில்லையோ!
‘எப்பப்பாரு கண்ணு முன்னாடியே அலைவான். ரூம்குள்ள இருந்தாலும் ஆயிரத்தெட்டு காரணம் கண்டுபிடிச்சி வருவான். இப்ப யாரை சைட்டடிப்பானாம்?’ என மனதினுள் கணவனைத் திட்ட, அப்பொழுதுதான் ஆனந்தன் அதட்டிக் கொடுத்த பழச்சாறை அருந்திக் கொண்டிருந்தவனுக்குப் புரையேற, மூக்கின் வழியாக வந்து தொடர்ந்து இருமலும் வந்தது.
“பார்த்து அறிவா” என்ற அபிராமி அவனின் கையில் இருந்ததை வாங்கி, தண்ணீரை குடிக்கக் கொடுத்து முதுகில் தட்டிவிட்டார்.
சில நிமிடங்களில் நிதானத்திற்கு வந்து முகம் கழுவி வந்தமர்ந்தவன், “பார்க்காததாலதான்மா உங்க மருமகள், அதாவது மிஸஸ்.அறிவழகன் என்னைத் திட்டிட்டிருக்காங்க” என்றான் புன்னகையுடன்.
“அறிவா நான் அனுகிட்ட ஒரு பொய் சொல்லிட்டேன்டா” என்றார் அபிராமி குற்றவுணர்வுடன்.
“பிக்கா? ஸ்மாலா?” என்றான் அதே புன்னகையுடன்.
“வெரி பிக்” என்றவர் முகத்தில் அதன் தாக்கம் தெரிய, யோசனையுடன், “என்ன பொய்?” என கேட்டான்.
அதேநேரம், “அத்தை ஏன்மா அவங்க பையன் உயிரோட இல்லைன்னு பொய் சொன்னாங்க? ஒரு தாயா இதைச் செய்யலாமா?” தாயிடம் கேட்டாள் அனுரதி.
“எனக்கும் புரியலை அனுமா. ஆனா, அதுல உன் நல்லது மட்டும் இருக்கும்னு நினைக்குறேன். மருமகனுக்குத் தெரிஞ்சும் ஏன் மறைக்கணும்? உன்கிட்ட பக்குவமா சொல்லியிருக்கலாமே?”
“அவங்களுக்குத் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லைம்மா. அத்தையும், அவங்க அண்ணனும் குழந்தைக்காக, என்னோட மனநிலையையும் புரிஞ்சி இந்த பொய்யைச் சொல்லியிருக்கணும் ஷண்மதி அக்கா தாலி, மெட்டின்னு எதுவும் எடுக்கலை. அப்பவே அத்தைகிட்ட கேட்டேன். மழுப்பிட்டாங்க” என்றாள் அனுரதி.
“அ...அ...அது அறிவா...” என்று திக்கித் திணறிக் கொண்டிருந்த தாயை மகன் புரியாது பார்க்க,
“அத்தை” என்ற ஷண்மதியின் அலறலில் கவனம் மாற, “என்னாச்சி மதி? ஏன் கத்துற?” என்றார் அபிராமி.
“நான் கத்துறேனா? அனுவை இங்க வந்து என் குழந்தையைக் பொடுத்துட்டுப் போகச் சொல்லுங்க அத்தை. மதி அத்தான்கிட்டச் சொன்னா எதுவும் பேசமாட்டேன்றாங்க. குழந்தையை வாங்கிட்டு வரச்சொல்லியும் பார்த்துட்டேன். என்கிட்ட பேசவே மாட்டேன்றாங்க. குழந்தை வந்துட்டா பேசுவாங்கள்ல” என்றாள் அழுதபடி.
“மதிமா அவன் குணமாகி இப்பதான வந்திருக்கான். நிதானமா பேசலாம். நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு.”
“இல்ல. நீங்க வந்து பேசுங்க. வாங்க” என்று அபிராமியுடன் ஆனந்தனையும் அழைத்துச் சென்றாள்.
அறிவழகனுக்கோ மனமெல்லாம் காயம் கொண்டு கதறித் தவித்தது. கைபேசியில் மனைவியின் முகத்தைப் பார்த்திருந்தவன், “சாரி ரதிமா. சாரி இந்த மாதிரிப் பிரச்சனை வந்துரக் கூடாதுன்னுதான், அவசரமா வளைகாப்பு வச்சி விரட்டாத குறையா அனுப்ப நினைச்சேன். யாரை நீ பார்க்குற சூழ்நிலை வரக்கூடாதுன்னு வளைகாப்பு வைத்தேனோ, அவனே கண்முன் நிற்கிறான். என்ன செய்யுறது? எப்படி சமாளிக்குறது? எப்படி சரி செய்யுறது எதுவும் தெரியலை? பைத்தியமாகிருவேன் போல ரதிமா” என்று புலம்ப,
அப்பொழுது புலனம் (வாட்சப்) வழி வந்த செய்தியைக் கண்டதும் ஆனந்த அதிர்ச்சியடைந்து, சிறிதாக மூச்சை இழுத்துவிட, மனம் அமைதியடைவதை உணர்ந்தான்.
ஆசையாகத் திரும்பவும் அதைப்படிக்க, ஹாய்! ஹலோ எதுவுமில்லாது, “போ போன்னு சொன்னல்ல போயிட்டேன். இப்ப உனக்கு சந்தோஷமா?” என்று தன் கோவத்தைக் கணவன் மேல் கொட்டியிருந்தாள் அனுரதி.
‘நீ நிம்மதியா இருக்கணும்னுதான் அனுப்பினேன் ரதிமா. ஆனா, அப்படி இல்லைபோல. என்னைத் தேடுறியா நீ?’ மனதில் நினைக்கையில் மனம் உற்சாகமாக, ‘நீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன். போ போ போ’ என்ற பாடல் வரிகளை அனுப்பினான்.
‘வந்தன்னா கொன்னுருவேன் உன்னை. என்னை வேண்டாம்னு அனுப்பிட்டு பின்னாடியே வருவியா?’ என கேட்டிருந்தாள்.
‘உனக்காக வருவேன். உயிர்ப்பூவைத் தருவேன்’ என்றனுப்ப, அதைப் பார்த்த எதிர்ப்புறம் சில நிமிடங்கள் கழிய, டைப்பிங் என்று மேலே வந்தது. ‘ம்... என்ன சொல்லப்போகிறாள்?’ என்ற எதிர்பார்ப்பில் அறிவழகன் காத்திருக்க,
‘எனக்காக நீ வரவேண்டாம். நீ யாரோ! நான் யாரோ!’ என்ற பதில் அவன் காத்திருப்புக்கு பலனாய்.
‘நீ என்பதே நான்தானமா. நான் என்பதே நாம்தானமா. உயிர் கேட்பினும் தருவேன் என் ரதிக்கு’ என்று இதயம் ஸ்மைலி அனுப்பினான்.
எதிரில் அவளுள் பல தடுமாற்றம். இப்பொழுதெல்லாம் இத்தடுமாற்றம் அடிக்கடி வருவதை உணர்கிறாள். ஆனால், இன்று கணவன் சரியில்லையோ என்ற எண்ணம் எழ, அவனை சற்று தெளிய வைக்கவே செய்தி அனுப்பினாள். முதலில் கோவமாக அனுப்பினாலும், பின் புன்னகை எழ, ‘அதுவும் உயிர் கேட்பினும் தருவேன் என் ரதிக்கு’ என்கையில் கண்ணீர் உருவாகியது. ஏனோ அதற்கு மேல் பதிலளிக்க அவளாலும் முடியவில்லை.
பதில் வராதென்று தெரிந்திருந்தும் கைபேசியையே பார்த்திருந்தான் அறிவழகன். இருவருக்கும் இடையில் கண்ணாமூச்சியாய் ஒரு புரிதல்.
“முதலில் அண்ணனின் அந்த முடிவுக்கு என்ன காரணம் என்று விளக்கம் கேட்டு, பிரச்சனையை முடிச்சிட்டு வர்றேன்” என்று மதியழகன் அறை நோக்கிச் சென்றவன் அண்ணன் எதிரே அமர்ந்து நேரடியாகவே, “உன் பிரச்சனை என்னண்ணா?” என்று கேட்க, எதுவும் சொல்லாது அமைதியாக அமர்ந்திருந்தவனிடம், “அமைதியா இருந்தா செஞ்சதெல்லாம் சரின்னு ஆகிராது. உன்னால அண்ணி எந்த நிலையில் இருக்காங்கன்னு தெரியுமா? உன்னை நம்பி வந்த பொண்ணை பைத்தியக்காரி ஆக்கியிருக்க. இப்ப நல்லா இருந்தாலும், சில நேரம் எமோஷனலாகிட்டா என்ன பண்றாங்கன்னு அவங்களுக்கே தெரியலை. எதுக்காக இந்த முடிவெடுத்த? என்னதான் பிரச்சனை உனக்கு? சொல்லுண்ணா?” என்றான்.
‘சொல்லமாட்டேன்’ என்பதாய் தலையசைக்க, கோவத்தில் விருட்டென எழுந்தவன், “உடம்பு சரியில்லாதவன்னு பார்க்கிறேன். இல்ல” என விரல் நீட்டி எச்சரித்தான்.
தம்பியின் பேச்சை காதில் ஏற்காது, “எப்ப கல்யாணமாச்சி?” என்றான் சைகையில்.
“இரண்டு மாதம்” என்றதும் மதியழகன் அதிர்ந்து அவனைப் பார்க்க, “என்ன லுக்கு? அதுக்குள்ள வளைகாப்பு எப்படின்னு பார்க்குறியா?”
“ம்...” என தலையசைக்க,
“அது பெரிய கதை ப்ரோ.”
‘பரவாயில்லை சொல்லு’ என்பதாய்ப் பார்க்க, மனைவி பற்றிய பேச்சில் மற்றது மறக்க தன் காதல் கதையைச் சொல்லலானான் அறிவழகன்.