• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Dec 23, 2024
Messages
40
கதைப்போமா 6


“எங்களுக்கெல்லாம் பிடிக்கணும்னு அவசியம் இல்ல, என் தங்கச்சிக்கு பிடிச்சா போதும். ஏன்னா நீங்க எங்க வீட்ல வாழப் போறது இல்ல. அவள் தான் உங்க வீட்ல வாழப் போறாள். ஆனா உங்க வீட்ல இருக்கவங்களுக்கு பிடிக்க வேண்டியது ரொம்ப முக்கியம். ஏன்னா அவள் உங்க வீட்ல வந்து வாழும்போது அவளை இதே மாதிரி அவங்க குத்தி காட்டி பேசுனாங்கனா அவள் ரொம்ப உடைஞ்சிடுவாள். அது ஒண்ணுத்துக்கு தான் நான் பயப்படுறேன். என் தங்கச்சிக்காக நான் பேசுவதற்கு காரணம். அவளால பேச முடியாது என்பதற்காக மட்டும் இல்ல, அவள் உண்மையிலேயே ரொம்ப அமைதியானவள். எல்லாத்தையும் பொறுத்துக்க கூடியவள். எதையும் வெளிப்படுத்தத் தெரியாதவள். பொதுவா நான் என் குடும்ப விஷயத்தைப் பற்றி வெளியே யார்கிட்டயும் பேசறது இல்ல. ஆனா என் தங்கச்சி உங்கள கணவனா முடிவு பண்ணியிருக்கனால இந்த விஷயத்தையும் பகிர்ந்துக்கிறேன். எங்க வீட்ல என் மனைவி ஆராதியாவை ஒரு சுமையா நினைக்கிறாள். அப்பப்ப ஏதாவது குத்தி காட்டி பேசுவாள். ரொம்ப கடுமையான சொற்களை எனக்குப் பயந்து அவள் உபயோகப்படுத்துவதில்லை. ஆனா கடும் சொற்கள் மட்டும்தான் மனதை வதைக்கும்னு சொல்ல முடியாது. சாதாரண வார்த்தைகள் கூட வதைக்கும். அவள் திருமணம் செஞ்சு போற இடம் அவளுக்கு நிம்மதியை கொடுக்கணும். சந்தோஷத்தைக் கொடுக்கணும்னு நான் நினைக்கிறேன். உங்க வீட்ல இருக்கிறவங்களுக்கு விருப்பமில்லாம நீங்கக் கூட்டிக்கிட்டு போனா நாளைக்கு என்னோட நிலைமை தான் உங்களுக்கும் வரும்” என்றான்.


“உங்க வீட்ல நீங்க முடிவெடுக்கறதுக்கு தயங்குவதற்கு காரணம். உங்க அப்பா இப்போ உயிரோட இல்ல. என் மனைவியை யாரும் எதுவும் சொல்ல விடாம என்னால பாத்துக்க முடியும். அப்படி மீறி என் மனைவி வருத்தப்படும்படியாக நடந்துச்சுன்னா கண்டிப்பா நான் தனி குடுத்தனம் போயிடுவேன். என் அம்மா அப்பாவுக்கு என்ன தேவையோ அதை என்னால தனியா இருந்தும் செய்ய முடியும். உங்களைப் போல அவங்கள பாத்துக்கிட்டே ஆகணும் என்கிற நிலைமை வரும்போது. அவங்க வீட்டுக்கு என் மனைவியைக் கூட்டிட்டு போகாம எங்க வீட்டுக்கு அவங்கள கூட்டிட்டு வருவேன்” என்று மிகத் தெளிவாகப் பேசினான்.


கவிச்சந்திராவை குற்றம் சாட்டவில்லை, சூழ்நிலையைப் புரிந்து கொண்டு பேசுகிறான். ஒருவேளை அவனுக்கு அப்படியொரு நிலை வந்தாலும் அடுத்து என்ன செய்வேன் என்றும் கூறுகிறான். மிகத் தெளிவான பேச்சு. அதற்கு மேல் என்ன பதில் சொல்லிவிட முடியும் கவிச்சந்திரனால்??


“சரி, அப்ப நான் கிளம்புறேன்” என்று எழுந்து நின்றான் கவிச்சந்திரன்.


அபிமன்யு அமர்ந்தபடியே அவனைப் பார்த்து.


“பதில் சொல்லாமல் போறீங்களே?” என்று கேட்டான்.


“நீங்க என்கிட்ட பதில் எதிர்பார்க்கலையே??என் தங்கச்சி கிட்ட தானே பதில் எதிர்பார்த்தீங்க?? அவள் உங்களுக்குச் சொல்வாள். நான் கிளம்புறேன்” என்று கூறிவிட்டு புன்னகை முகமாகவே அங்கிருந்து அகன்றவனின் முதுகையை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான் அபிமன்யு.


......


அன்று இரவே அவளிடமிருந்து மெசேஜ் வந்திருந்தது. “இது தான் என் நம்பர்” என்று.


அவன் அந்த நம்பரை மனைவி என்று சேமித்துக் கொண்டான்.


அடுத்த நொடி அவளிடமிருந்து வீடியோ கால் வந்தது. புத்திசாலி தான் என்று நினைத்துக் கொண்டவன். அதை அட்டென்ட் செய்தான்.


ஒரு நிமிடம் என்ன பேசுவது என்று தெரியாமல் விழித்தாள். பிறகு தனக்கு சம்மதம் என்று செய்கை மொழியால் கூறினாள். அது அவனுக்குப் புரிந்தது. ஆனாலும் எழுதி காட்ட சொன்னான்.

உடனே அவள் அங்கும் இங்கும் பரபரவென்று தேடி ஒரு நோட்டை எடுத்து அதில் எழுதி அலைபேசியை அதற்கு முன்பாகக் காட்டினாள்.


“எனக்குச் சம்மதம் எங்க வீட்ல இருக்கவங்களுக்கும் சம்மதம். உங்களுக்கும் என் மகனுக்கும் சம்மதம்னா உங்க வீட்ல பேசுங்க” என்று எழுதி இருந்தாள்..


“என் மகன்” என்ற அந்த வார்த்தையில் அவன் பார்வை அப்படியே நின்றது.


….....


“என்னடா சொல்ற??, ஊமை பொண்ண கட்டிக்க போறியா?? கல்யாணமே வேணாம்னு சொல்லி இந்தப் பொண்ணுக்கு தான் சம்மதம் சொன்ன, சரின்னு நாங்களும் ஒத்துக்கிட்டோம். ஆனா ஊமை பொண்ண கட்டிக்கிட்டு எப்படிடா குடும்பம் நடத்துவ?” என்று அம்பிகா கேட்க.


கேள்வி கேட்டுக் கொண்டிருந்த தன் தாயை அசட்டையாகப் பார்த்து வைத்தான்.


“என்னடா பேசிக்கிட்டே இருக்கேன். நீ அமைதியா இருக்க” என்று அவர் கேட்க.


“குடும்பம் நடத்துறதுக்கும், வாய் பேசுவதற்கும் என்னமா சம்பந்தம் இருக்கு?, அப்படியே சம்பந்தம் இருக்குனு நீங்க நினைச்சாலும், குடும்பம் நடத்த போறது நான்தானே நான் பார்த்துக்கிறேன்” என்றான் சாதாரணமாக..


அவர் வாயடைத்து போய்விட்டார்.


“என்ன பேச்சு இது அபி?“ என்று அவனுடைய தந்தையும் தன் பங்கிற்கு கேள்வி எழுப்பினார்.


பெற்றவர்களிடம் பேசுகிறோம் எனும்போது கொஞ்சம் அதிகப்படியாகப் பேசி விட்டோம் என்று தோன்றியது. “எனக்கு அந்தப் பொண்ண புடிச்சிருக்கு அப்பா. என் பையனுக்கும் புடிச்சிருக்கு. அவள் வாய் பேசாம இருக்கறதுனால அட்ஜஸ்ட் பண்ண போறது நான்தான். அதை நான் பார்த்துக்கிறேன்”, என்றான்.


“நானும் தான் அட்ஜஸ்ட் பண்ணனும்” என்று அம்பிகா காட்டமாகப் பேசினார்.


“அம்மா அவள் வேலைக்குப் போற பொண்ணு. சனி ஞாயிறுல மட்டும் தான் வீட்டில் இருப்பாள். மத்தபடி சாயங்கால நேரத்துல நானே அவளைப் பாத்துக்குறேன்” என்றான்.


“இப்படி சொல்லிட்டா சரியா போச்சா??, பொம்மனாட்டிங்க எங்களுக்கு அடுக்கலையில எவ்வளவோ வேலை இருக்கும், பேச்சு இருக்கும்” என்று அப்பொழுதும் அம்பிகா விடாது பேசினார்.


“அடுக்கலைக்குள்ள எதுக்கு பேச்சு?? நீங்கப் பேசுறத அவள் புரிஞ்சுக்க போறாள். சப்போஸ் அவள் அதிகப்படியா பேசினா, உங்களால் அதைப் பொறுத்துக்கவே முடியாது. அதனால அவள் அமைதியா இருக்கிறது ஒரு விதத்துல நல்லது தான்” என்றான்.


“உனக்கு எதுக்குடா அந்தத் தலை எழுத்து?? ராஜா மாதிரி இருக்குற. உனக்கு ராணி மாதிரி பொண்ண கொண்டு வந்து க்யூல நான் நிறுத்துவேன்” என்றார் அம்பிகா.


“ஏற்கனவே நிறுத்துனீங்க மா. எனக்கு ராணி தேவையில்லை, மனைவி போதும்” என்றான் அழுத்தமாய்.


“அவளுக்கு வாழ்க்கை கொடுக்கப் போறியா? என் பேச்சை மீறி நடக்க போறியா? “ என்று அம்பிகா பேச.


“நான் கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டு இருந்தேன். இந்தப் பொண்ணோட போட்டோவ பாத்துட்டு தான் சம்மதம் சொன்னேன். ஆக்சிடென்ட்ல அவளோட குரல் போனது அவளோட தப்பு கிடையாது. அன்னைக்கு என்னால திடீர்னு எல்லாம் முடிவையும் எடுக்க முடியல. யோசிச்சு பார்க்கும்போது கல்யாணம் பண்ணி அவள் கூட வாழப் போறது நான். அவளைத் தாயா ஏத்துக்க போறது என் மகன். நாங்க ரெண்டு பேரும் ஏத்துக்கிட்ட பிறகு. நீங்க எதுக்கு யோசிக்கிறீங்கன்னு எனக்குப் புரியல?”, என்றான்.


“அப்படி இல்லடா, இப்ப வாழ்க்கை கொடுக்கிறேன் அது இதுன்னு யோசிப்ப. அதுக்கப்புறம் உனக்கே அது தப்புன்னு தெரியும். நல்லா யோசிச்சு பாரு. நீ ஒரு வாத்தியாரு. உன் மனைவி ஒரு ஊமச்சியா இருந்தா எப்படிடா உன்னால வெளிய சொல்ல முடியும், நாலு இடத்துக்கு அவள கூட்டிட்டு போக முடியுமா?? அப்படியே கூட்டிட்டு போயி இவள் என் மனைவி, ஆனா பேச வராதுன்னு உன்னால அறிமுகப்படுத்தத் தான் முடியுமா?“ என்று கேட்டார்.


“நான் ஏம்மா காலேஜ்ல போய் என் மனைவியைப் பத்தி பேசிட்டு இருக்க போறேன்?. ஒருவேளை திருமணத்திற்கு பிறகு அவளுக்கு அந்த மாதிரியாகி இருந்தா??, இல்ல உங்களுக்கு ஆயிருந்தா அப்பா உங்களை விட்டுட்டு போயிருப்பாரா?? இல்லல்ல விபத்துன்றது எப்ப வேணா யாருக்கு வேணா நேரிடலாம். ஏன் எனக்குக் கூட நேரிடலாம்” என்று கூறும்போது தாயாக அம்பிகா பதறிவிட்டார்.


“வாய மூடுடா” என்று கத்தினார்.


“தீன்னு சொன்னா வாய் சுட்டுடாது மா. அதேபோல விபத்துன்னு சொன்னா உடனே நடந்திராது. வார்த்தைக்குச் சொல்றதுக்கே உங்களுக்கு மனசு துடிக்குது. தந்தையையும் இழந்துட்டு, தன் குரலையும் இழந்துட்டு துடிச்சிட்டு இருக்குற பொண்ணை நீங்கத் தரக்குறைவா பேசிட்டு வந்து இருக்கீங்க. நம்ம வீட்ல யாருக்காவது இப்படி நடந்தா தான் அந்த வலியும் வேதனையும் நமக்குத் தெரியும் அம்மா. ப்ரீத்தி வீட்ல எல்லாத்தையும் நம்மகிட்ட இருந்து மறச்சு செஞ்சாங்க. நம்மளோட கோபத்துக்கு அது தான் காரணம். ஆனா இவங்க அப்படி கிடையாது. தரகர் கிட்ட நான் பேசினேன் அம்மா. அவங்க எதையும் மறைக்கல. அவங்க உண்மைய சொல்லி இருக்காங்க.. தரகர் தான் நம்ம கிட்ட மறைச்சிருக்காரு. அவர் தான் நடுவுல சொதப்பி இருக்காரு. நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா இந்தப் பொண்ண மட்டும் தான் கட்டுவேன். உங்களுக்கு விருப்பம் இல்லன்னா விட்டுடுங்க. உங்களுக்கு எப்ப விருப்பமோ அப்பச் சொல்லுங்க. அப்ப நான் கல்யாணம் பண்ணிக்கிறேன். அதுவரைக்கும் வேறு எந்தப் பெண்ணையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். ஆனா அந்தப் பொண்ணு வீட்ல அதுவரைக்கும் காத்துட்டு இருப்பாங்களான்னு தெரியல”, என்றான்.
 
Member
Joined
Dec 23, 2024
Messages
40
“டேய் உன் புத்தி ஏன் இப்படி போகுது?. அவளைவிட நல்ல பொண்ணா பார்த்து உனக்குக் கட்டி வைக்கிறேன் டா” என்றார் அம்பிகா.


“உங்க மகன் கிட்ட ஒரு பெரிய குறை இருக்கு. அது அம்மாவா உங்களுக்குத் தெரியல போல. உங்க பையனுக்கு இது முதல் திருமணம் இல்லை, இரண்டாவது திருமணம். மூணு வயசுல உங்களுக்கு ஒரு பேரன் இருக்கான். அந்தப் பொண்ணு பெரிய மனசு பண்ணி என்னையும் என் மகனையும் பார்த்துக்குறதே பெரிய விஷயம். இதுல நீங்க வேற நடுவுல முட்டுக்கட்டை போட்டுக்கிட்டு இருக்கீங்க” என்றான்.


செந்தாமரை தன் மனைவியையும் மகனையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு

“அவன் தான் அவ்வளவு சொல்றானேமா விடு. நீ அவனுக்குத் துணை தேடுறியா??, இல்ல கிச்சன்ல பேசுறதுக்கு ஆள் தேடுறியா?” என்று கேட்டு வைத்தார்.

அம்பிகா வாயடைத்து போய்விட்டார். “என்னங்க நீங்களும் புரியாமல் இப்படி பேசுறீங்க?“ என்று கேட்டார்.

“அவன் இதுவரைக்கும் திருமணமே வேணாம்னு சொல்லிக்கிட்டு இருந்தான் கிட்டத்தட்ட மூன்று வருடமா அவங்க கிட்ட இதே போராட்டம் பண்ணிக்கிட்டு இருந்தோம். நாமெல்லாம் கேட்டுச் சம்மதிக்காம அவன் பையன் அம்மா வேணும்னு கேட்டதுக்கு அப்புறம் தான் ஒரு வழியா இதுக்கு சம்மதிச்சிருக்கான். அப்பயும் நீ காட்டுன எல்லா பெண்ணையும் அவன் ஓகே சொல்லல. நாம போய்ப் பாத்துட்டு வந்தோம். ஆனா அவன் பிடிக்கலைன்னு சொல்லிட்டான். அது இல்லாம நிறைய பிரச்சனைகளும் வந்துச்சு. இந்தப் பொண்ண தான் புடிச்சிருக்குன்னு அவனும் கூட வந்தான். கடைசில அந்தப் பொண்ணு ஊமைன்னு தெரிஞ்சது. இருந்தாலும் பரவால்ல எனக்கு அந்தப் பொண்ண புடிச்சிருக்குன்னு கேட்கிறான் விட்டுத் தள்ளுமா. வீட்ல ரெண்டு பொம்பளைங்க கத்திக்கிட்டு இருந்தா, எங்க காது சீக்கிரமா செவிடாயிடும். உன் ஒருத்தி பேச்சுக்கு என் காது இப்ப லேசா கேட்க மாட்டேங்குது” என்று பேசி அம்பிகாவின் முறைப்பை வாங்கி கட்டிக் கொண்டார்.

“எப்படியோ போங்க. நான் பேசுறது தான் உங்களுக்கு இப்ப குறையா போச்சா??. சைக்கிள் கேப்ல அவனுக்குச் சப்போர்ட் பண்றேன்னு என் கால வாரி விடுறீங்கல்ல. அப்பாவும் பையனும் பேரனும் எதையாச்சும் பண்ணுங்க” என்றார் அம்பிகா.

“நல்ல காரியம் பண்ணும்போது இப்படி மூக்கு சீந்துக்கிட்டு மனசு வருத்தப்பட்டுகிட்டு இருக்க கூடாது. நம்ம பையனுக்குப் பண்றோம். நல்லபடியா மனசார பண்ணி வைக்கணும். உனக்குப் புடிச்ச பெண்ண பாக்காம, அவனுக்கும் அவன் மகனுக்கும் புடிச்ச பொண்ண பாக்கலாம். எல்லாத்தையும் விட முக்கியம் அந்தப் பொண்ணு குணவதியா இருக்கணும் நம்ம பையனையும் பேரனையும் குறை இல்லாம பாத்துக்கணும். அதுதான் ரொம்ப முக்கியம்” என்றார் செந்தாமரை.

அதற்கு மேல் எதுவும் பேசவில்லை அம்பிகா அமைதியாகிவிட்டார்.


“பொண்ணு வீட்ல நீங்கப் பேசுறீங்களா இல்ல நான் பேசவான்னு சொல்லுங்க” என்று அடுத்த கட்ட பேச்சுக்கு அபிமன்யு தாவினான்.


“நானே பேசுறேன்பா” என்று செந்தாமரை முன் வந்தார்.

“வரதட்சணை அது இதுன்னு கேட்காதீங்கப்பா. அவங்க பொண்ணுக்கு அவங்க என்ன பண்றாங்களோ பண்ணட்டும். உங்க பையன விக்காதீங்க” என்று கூறிவிட்டு அவன் அகன்று விட்டான்.

வாயைப் பொத்திக்கொண்டு நின்றார் அம்பிகா.


அதிர்ந்து நின்ற மனைவியை நெருங்கியவர்.

“என்னங்க இப்படி எல்லாம் பேசுறான்? வரதட்சணை வாங்காம ஒரு ஊமை பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டா நம்ம பையனுக்குக் குறை இருக்கிறதா நாளைக்கு நாலு பேர் நாலு விதமா பேச ஆரம்பித்து விடமாட்டாங்களா?”, என்று படபடத்தார் அம்பிகா.

“ஏமா?, அவன் திருமணம் பண்ணாமலே மூன்றரை வருஷத்த கடத்திட்டான். எங்கே மகன் அப்படியே இருந்துட போறாநோன்னு நீ எவ்வளவு புழம்பி இருப்ப. இப்ப அவன் திருமணத்துக்கு ஒத்துக்கிட்டான். நீ எதுக்கு முட்டு கட்ட போடுற? நாம் அப்படியே நூறு வருஷத்துக்கு இருந்திட போறோமா என்ன?? நம்ம காலத்துக்கப்புறம் அவன் தனியா நிக்க கூடாதுன்னு தானே அவனுக்கு ஒரு துணையை தேடணும்னு நினைச்சோம். அந்தப் பொண்ணு ஆரோக்கியமா இருக்காள். பார்க்கும்போதே தெரியுது சாந்தமான குணம் உடையவளா தான் தெரிகிறாள். குழந்தையையும் நல்லா பார்த்துப்பாள். அந்த நம்பிக்கை அபிமன்யுவுக்கு வந்ததால் தான் இவ்வளவு திடமா பேசுறான். குரல் பேச முடியாததெல்லாம் ஒரு குறையா நினைச்சு யோசிக்காதம்மா. குரல் பேச வந்து நம்ம முதல் மருமகள் மாதிரி அவளுக்கு ஏதாவது உடலில் குறை இருந்தா என்ன பண்றது?“ என்று மனைவியைச் சமாதானப்படுத்தினார்.

கடந்த அந்த மூன்று வருடங்களாக அவனைத் திருமணத்திற்கு சம்மதிக்க வைக்க அவர் பட்ட பாடு அவருக்கு மட்டும் தான் தெரியும். அதனால் அதெல்லாம் ஞாபகம் வர. அவர் ஒருவாராகச் சமாதான படுத்திக்கொண்டார்.
 
Member
Joined
May 9, 2025
Messages
45
Why should you ask dowry and who are the4 people , they are stupid people.if someone ask, tell them straight to their face.going good
 
Member
Joined
Dec 23, 2024
Messages
40
Why should you ask dowry and who are the4 people , they are stupid people.if someone ask, tell them straight to their face.going good
❤️ நன்றி சகோதரி🙏🙏
 

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top