• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Dec 23, 2024
Messages
41
கதைப்போமா 12

ஆராத்யா கீழே வராமல் இருப்பதும். அனைத்தும் அவன் கையாலேயே அவளுக்கு மேலே கொண்டு செல்வதும். சரஸ்வதிக்கு இன்னும் கடுப்பை ஏற்றி இருந்தது.

“என்ன அந்த மகாராணி கீழே வரமாட்டாங்களாமா?” மகனிடம் காட்ட முடியாத இயலாமையில் மகள் தலையைத் தான் உருட்டினார்.

“அம்மா அந்தப் பொண்ணு பாவம் தானே?? வாய் பேச முடியாத பொண்ணு. ஆனா நீங்கச் சும்மாவும் இருக்க மாட்டேங்குறீங்க, காலையில அந்தப் பொண்ணு வந்தா தானே??, நீங்க ஏதாவது பேசி வைக்க அது தேவையில்லாத பிரச்சினை தானே??, முதல்ல அந்தப் பொண்ணு யாரோ, ஆனா இப்ப நம்ம அபியோட மனைவி. புது பொண்ணு வேற, புது இடம் கொஞ்சம் பழகுவதற்கும் நேரமாகும். நம்ம சொந்தக்காரங்க எல்லாம் இருக்காங்க. நீங்க அடுத்தடுத்து செய்ய வேண்டிய முறைய சொல்லுங்க. தேவையில்லாம இதைப் பெருசாக்காதீங்க” என்றாள் ரிதன்யா .

“ அவனுக்குத் தான் சொக்குப்பொடி போட்டானு பாத்தா? உனக்கும் போட்டுட்டாளா??. போயும் போயும் நம்ம வீட்டுக்குத் தானா இவள் வரணும்??. இவனுக்குக் கல்யாணம் பண்ணி வச்சு. அடுத்து ஒரு வாரிசு பார்க்கலாம்னு நினைச்சேன். இப்ப இவள் வயித்துல பிறக்குற வாரிசு இவள மாதிரியே இருந்துட்டா என்ன பண்றது??” என்றார் சரஸ்வதி.

“ அம்மா நீங்கப் பேசறது எனக்கே கடுப்பா இருக்கு. அந்தப் பொண்ணு ஒன்னும் பிறவி ஊமை இல்ல. அப்படியே பிறவி ஊமையா இருந்தாலும் அது ஜெனிடிக்கலா அவங்களுக்கு பிறக்கப் போற குழந்தைகளைப் பாதிக்காது. சில வகை இருக்கு அது மட்டும் தான் ஜெனிடிக்கலா பாதிக்கும். ஆராதியாவிற்கு அந்த மாதிரி எதுவும் இல்ல. இடையில ஏற்பட்ட ஆக்சிடன்ட்னால குரல் போயிருக்கு. இதுக்கு நீங்க ஓவர் இமேஜினேஷனுக்கு போயிடாதீங்க அவளுக்குப் பிறக்குற குழந்தை நல்லபடியா இருக்கும்” என்று கூறிவிட்டு அவள் அங்கிருந்து அகன்று விட்டாள்.

ஒருவரை பிடிக்கவில்லை என்றால் இப்படி அநியாயத்திற்கு பேசினால் எப்படி??. முதலில் தாய் கூறும்போது அவளுக்கும் அந்த ஆதங்கம் இருந்தது. என் தம்பி ஏன் ஊமையான ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்?. சொந்தங்களில் எல்லோரும் அவர்களைக் கிண்டல் செய்வார்களே என்று யோசித்தாள். ஆனால் அபிமன்யு அவளைத்தான் திருமணம் செய்வேன் என்பதில் திடமாக இருந்துவிட. திருமணம் செய்து கொள்ளப் போகிறவனே அவளை முழு மனதாக ஏற்றுக் கொண்ட பிறகு. நாம் ஏன் அவளைத் தூரம் நிறுத்திப் பார்க்க வேண்டும் என்று நினைத்தாள். திருமணம், அதை ஒட்டிய சடங்குகள் என்று அவளுடன் இருக்கும்போது தான் தெரிந்தது அவள் மிகவும் நல்ல சுபாவம், அமைதியானவளும் என்று. அப்படிப்பட்டவளை இவர் கரித்து கொட்டிக் கொண்டே இருந்தால், அவளுடைய கணவன் எப்படி சும்மா இருப்பான்? அப்படி இருந்தால் அவன் நல்ல கணவனாக இருக்க முடியுமா?’ என்று மனதினுள் நினைத்தபடியே தன்னறைக்குள் வந்தவள்

“இந்த அம்மா கண்டிப்பா அபி கிட்ட வாங்கி கட்டிக்க போறாங்க. எவ்வளவு சொன்னாலும் வாயை மூடிக்கிட்டு இருக்க மாட்டேங்கிறாங்க” என்று கணவனிடம் புலம்போ புலம்பு என்று புலம்பித் தள்ளி விட்டாள்.

புதுமண தம்பதிகளைக் கோயிலுக்கு சென்று வரும்படி பெரியவர்கள் கூற. அவனும் தன் காரை எடுத்துக்கொண்டு மனைவி மகனை அழைத்துக் கொண்டு கோயிலுக்குச் சென்றான். வீட்டில் இன்னும் உறவினர்கள் இருக்க. அவர்களைப் பார்த்துக்கொள்ள வேண்டிய நிர்பந்தத்தால், தாயும் தமக்கையும் வீட்டில் இருக்கும்படி ஆகிவிட்டது.

அவன் வீட்டு அருகிலேயே இருக்கும் பெரிய கோயிலுக்குத் தான் அழைத்து வந்தான். அவள் தந்தையின் இறப்பு அவளுடைய விபத்து என்று கடவுள் நம்பிக்கையே அவளுக்குப் போய்விட்டது என்று சொல்லலாம். ஆனால் திருமணம் ஆன முதல்நாள் தம்பதி சமோதினராய் கோயிலுக்குச் செல்வது என்பது வழி வழியாக நடப்பது தானே??. ஆனால் இப்பொழுது நிறைவான கணவன், அன்பான மகன் என்று கிடைத்துவிட்ட நிம்மதியில் உண்மையில் கடவுளை வேண்டிக் கொள்ளவே சென்றவள். நீண்ட வருடங்களுக்குப் பிறகு மனமார கடவுளை வேண்டிக் கொண்டாள்.

அர்ச்சனை கூடையுடன் நின்றவளிடம் பூசாரி, “யார் பெயருக்கு அர்ச்சனை பண்ணனும்மா?” என்று கேட்க.

அவள் பரிதவிப்பாய் கணவனை ஏறிட்டுப் பார்த்தாள். “சாமி பேருக்கே பண்ணிடுங்க” என்றவனின் முகத்தில் மிக மெல்லிய புன்னகைக்கோடு.

அவளுடைய அந்தப் பார்வையை மனதின் உள்ளே ரசித்துக்கொண்டான். சிறு பிள்ளையிடம் எது கேட்டாலும் பெற்றவர்களைப் பார்க்குமே அதுபோல இருந்தது அவன் பார்வை.

ஆத்ரேஷ் தாயின் கையை விடுவதாக இல்லை. தாயைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தந்தை கூறியது அவன் மனதில் ஆழமாகப் பதிந்து விட. சிறு குழந்தைகளுக்கேயான குணமும் அவனிடம் ஒட்டிக்கொண்டது. எந்த ஒரு குழந்தையும் புதிதாக விளையாட்டுச் சாமான்கள் கிடைத்தால் அதனுடனே சுத்துமே அதைப் போல. இவனோ தாய்க்கு ஏங்கிக் கொண்டிருந்தவன். அழகான அவன் தாயின் உருவத்திலேயே ஒரு தாய் கிடைத்து விட. அவளைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பும் கிடைத்துவிட சிறியவன் (அவளை) அதனை கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்.

“ டேய் உங்க அம்மா எங்கேயும் போகமாட்டாங்க அநியாயத்துக்கு அவள் கையை ஏன்டா இப்படி இறுக்கி பிடித்து இருக்க?” என்று கேட்டவனுக்கு தன்னால் இவ்வளவு அவளிடம் உரிமையாகப் பழக முடியவில்லை என்ற ஏக்கம் மனதளவில் இருந்தது. அதே சமயத்தில் அது அவளுக்கு அசோகர்யத்தை கொடுக்குமே என்று நினைத்தான். ஆனால் ஆராத்யா அதை விரும்பி ஏற்றாள். மகனின் ஒட்டுதல் என்பது அவளுக்குப் பிடித்த ஒன்றாகத்தான் இருந்தது.

குடும்பமாகத் தெய்வ தரிசனத்தை முடித்துக் கொண்டு கோயிலைச் சுற்றி வளம் வந்தனர்.

“சார்” என்று ஒரு குரல் எங்கிருந்தோ கேட்க. அவன் நின்று திரும்பிப் பார்த்தான்.

அவனுடைய கல்லூரி மானவி தான் அவனைப் பார்த்ததும் ஓடி வந்துகொண்டிருந்தாள்.

மூச்சு வாங்க அவன் முன்னால் வந்து நின்றவள். “சார் இது உங்க குழந்தை தானே? அப்படியே உங்கள மாதிரியே இருக்கு. நீங்கக் கோயிலுக்கு எல்லாம் வருவீங்களா??. இவங்க இவங்க யாரு சார்” என்று அவளே கேள்விகளை அடுக்கிக் கொண்டிருந்தாலே தவிர அவனுக்குப் பேசுவதற்கு இடம் கொடுக்கவே இல்லை.

அவள் முடித்ததும் அவன் தொடர்ந்தான். “நானும் மனுஷன் தான். மனுஷங்க கோவிலுக்கு வரலாம் தானே??. இது என்னோட மகன் தான் இது என்னோட மனைவி” என்று கூறியபடியே ஆராதியாவின் தோள்களில் உரிமையாகக் கையை போட்டான்.

அவ்வளவு நேரம் அந்தப் பெண்ணின் முகத்தில் இருந்த மலர்வு அப்படியே துணி கொண்டு துடைத்தது போல மாறிவிட்டது. அந்தப் பெண்ணை அப்போதுதான் கவனித்தாள். அவள் கழுத்தில் இருக்கும் புது மஞ்சள் கயிறை பார்த்ததும் தெரிந்தது திருமணம் சமீபத்தில் தான் நடந்திருக்கிறது என்று.

“ஹோஒ சார் அதனால தான் லீவு போட்டு இருக்காரோ?’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவள். சிரமப்பட்டு தன் முகத்தை மாற்றி வைத்துக் கொண்டு. “அப்படியா சார் ரொம்ப சந்தோஷம். ஆனா உங்களோட திருமணத்துக்கு எங்களை இன்வைட் பண்ணவே இல்லையே?” என்று அவனிடமே கேள்வியைத் தொடுத்தாள்.

“எப்படி காலேஜ்ல இருக்க 600 பேரையும் இன்வைட் பண்ணனுமா?? இல்ல நான் மட்டும் கிளாஸ் எடுக்குற 150 பேரை இன்வைட் பண்ணனுமா??. எனக்கு அந்த மாதிரி ஆடம்பரமா திருமணம் செய்யுறதுல இன்ட்ரஸ்ட் இல்ல. அதனால கூப்பிடல. கூப்பிடனும்னு நெனச்சவங்கள கூப்பிட்டு இருக்கேன்” அழுத்தமாகக் கூறினான் அபிமன்யு.

அதற்குள் அவளை அவளுடைய தாயார் அழைக்க. அவளும் அவர்களிடம் விடை பெற்று சென்றாள். போகும்போது அவர்களை திரும்பிப் பார்த்துக் கொண்டே செல்வது அவனுக்கும் தெரிந்தது. ஆராத்யாவும் பார்த்தாள்.

பிறகு கோயிலில் ஆற அமர்ந்து மூவருமாக எதையெதையோ பேசிக்கொண்டு நேரத்தைச் செலவிட்டனர். பொறுமையாகத் தான் வீட்டிற்கு கிளம்பினார்கள்.

அன்றைய பொழுதும் எந்த மாற்றமும் இல்லாது சென்றது. அவள் அவர்களுடைய அறையிலேயே அபிலேஷுடன் விளையாடிக் கொண்டு, அவனுடைய சிறு வயது புகைப்படங்களை பார்த்துக்கொண்டிருந்தாள். அபிமன்யு கீழே சென்று சாப்பிட்டுவிட்டு அவர்களுக்கான உணவை அங்கேயே எடுத்து வந்து விட்டான். தன் மனைவிக்கும் மகனுக்கும் உணவு எடுத்து வர அவன் மற்றவர்களை ஏவவில்லை அதைக் கௌரவ குறைச்சலாக நினைக்கவும் இல்லை. அதனால் அவளுக்கானவற்றை அவனே செய்தான். மகனுக்கானவற்றை எப்பொழுதும் அவனே செய்துதான் பழக்கம். ஆனாலும் சரஸ்வதியின் வாய் சும்மா இருக்குமா என்ன?? புலம்பித் தள்ளிவிட்டார். சமையலறையில் அவருக்குத் துணையாக இருந்த அவருடைய சகோதரி, நாத்தனார் என்று அவருக்கு இன்னும் தூபம் போட்டுக் கொண்டு இருக்க. அவர்கள் பொழுதும் நன்றாகவே கழிந்தது. அன்று இரவும் வந்திருக்க. அபிமன்யு எதிர்பார்ப்பு இல்லாமல், முந்தைய நாள் போலவே அவன் இடத்தில் சென்று படுத்துக் கொண்டான்.

அபிலேஷ் உறங்கியவுடன் அவன் தலையை வருடிக் கொண்டே அவள் தயக்கத்தோடு அவனைப் பார்த்துக் கொண்டிருப்பது தெரிய, “ஏதாவது சொல்லனுமா?“ என்று கேட்டான்.
 
Member
Joined
Dec 23, 2024
Messages
41
“ஆமாம்” என்பது போல அவள் தலையாட்டினாள்.



“ என்கிட்ட சொல்றதுக்கு உனக்கு எதுக்கு தயக்கம்??. அப்படியே போன்ல டைப் பண்ணி அனுப்பி இருக்கலாமே? “ என்று அவன் புருவங்களை உயர்த்தி கேட்டான்.



அவளும் அவனிடம் பேச வேண்டியதை டைப் செய்து வைத்திருந்தாள். ஆனால் அவனுக்கு அனுப்பவில்லை அவ்வளவுதான். அவன் சொன்ன நொடி அவனுக்கு அனுப்பி வைத்தாள்.



“ வந்து நான் இப்படியே கீழே போகாம இருந்தா அது சரி இருக்காது. என்னை நீங்களே கொண்டு போயி சமையல் கட்டுல இன்ட்ரோ பண்ணிட்டு வந்துருங்க. நானும் இனிமேல் வேலைய பாக்கணும்னு நினைக்கிறேன். எனக்கு நல்லாவே சமைக்க தெரியும். அத்தை சொன்னா போதும் நானே எல்லாம் செஞ்சுருவேன். எனக்கு வாய் பேச முடியாததுனால அவங்களுக்கு தயக்கங்கள் இருக்கலாம். கொஞ்சம் நீங்கப் பேசி என்ன விட்டுட்டு வரிங்களா? “ என்ற அவள் எழுதி இருக்க. அவனுக்குச் சிரிப்பு தான் வந்தது.



பாடசாலைக்குச் செல்லும் குழந்தை கேட்பது போல இருந்தது அவளுடைய மெசேஜ். “யாரு எங்க அம்மாவுக்குத் தயக்கமா??, அவங்க எல்லாம் வாயைத் திறந்தாங்கன்னா மூடமாட்டாங்க உனக்கும் சேர்த்து அவங்களே பேசுவாங்க. உன்னால பேச முடிஞ்சிருந்தா கூட உனக்குப் பேசறதுக்கு அவங்க சான்ஸ் கொடுக்கமாட்டாங்க. அதனால நீ ரொம்ப யோசிக்காத. அதே சமயத்துல அவங்க சொல்ற எல்லாத்தையும் நீ பொறுத்துக்கனும்னு எந்த அவசியமும் இல்லை. அத கேட்டுக்கிட்டு நீ அங்கேயே இருக்கணும்னு எந்த அவசியமும் இல்ல. நீ அவங்களுக்கு பதில் கொடுத்துட்டு வந்தாலும் சரி, பதிலே கொடுக்காமல் வேலையும் செய்யாமல் வந்தாலும் சரி நான் உன்னைக் கேள்வி கேட்கமாட்டேன்” என்று கூறினான். அவள் சரி என்று தலையாட்டி அடுத்த நாள் தன்னை அறிமுகப்படுத்தச் சொல்லி மீண்டும் தட்டச்சு செய்தாள்.



அவன் சரி என்று ஒத்துக் கொண்டான். மறுநாளுடைய விடியலும் அப்படித்தான் இருந்தது. அவனுடைய கைகள் அவர்கள் இருவரின் கைகளையும் பிடித்திருந்தது பத்திரமாக. ஏதோ இரவில் கூட அவர்களைப் பத்திரமாக அவன் பாதுகாப்பது போல ஒரு மாயையை அவன் உருவாக்கிக் கொண்டானோ அல்லது அவர்களுக்கு உருவாக்க நினைத்தானோ அதை அவன் மட்டுமே அறிவான்.



அவள் குளித்துத் தயாராகி விட்டு அவன் கண் விழிப்பதற்காகக் காத்திருக்க. அவனும் கண் விழித்தான். மகன் இன்னும் கொஞ்ச நேரம் உறங்குவான். விடுமுறை தானே எடுத்திருக்கிறான் என்று மனைவிக்குச் சொல்லிவிட்டு அவளை அழைத்துக் கொண்டு சமையலறைக்கு வந்து சேர்ந்தான்.



அங்கே இருந்தவர்கள் அவ்வளவு காலையிலேயே திருமணத்தைப் பற்றித் தான் மென்று கொண்டிருந்தார்கள். வாசலிலேயே நின்று கண்களை மூடித் திறந்தவன். “அவசியமா உன்ன விடணும்னு சொல்றியா?? இன்னைக்கு நிறைய பேர் போயிடுவாங்க. நாளையிலிருந்து பாத்துக்கலாமே” என்றான்.



அவள் தன் நெஞ்சில் தன் வலது கையை வைத்து. கண்களை மூடி அமைதியாக. ‘நான் அனைத்தையும் பார்த்துக் கொள்கிறேன். பொறுத்துக் கொள்கிறேன்’ என்று அவளுக்குச் சமிஞ்சை செய்தாள்.



அவனுக்கும் அது புரிய, இதழ் பிரிக்காமல் மெல்லிய புன்னகை கீற்றை வெளிப்படுத்தினான். “நேத்து சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்குல்ல?, அவங்க பேசுறதை உன்னால டாலரேட் பண்ண முடியலனா, அமைதியா மேல வந்துரு. நான் பாத்துக்குறேன்’ என்றான்.



அவளும் பதிலுக்கு நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சமிஞ்சை செய்துவிட்டு மனதை திடப்படுத்திக் கொண்டு அவனுடன் சமையலறையில் நுழைந்தாள்.



ஆராதியாவிற்கு என்று இல்லாமல் புதிதாகத் திருமணம் செய்யும் ஒவ்வொரு பெண்ணுக்கும் இருக்கும் படபடப்பும். மற்றவர்களை எதிர்கொள்ளும் சஞ்சலமும் அவளுக்கும் அதிகமாகவே இருந்தது. ஆனால் எதிர்கொண்டு தானே ஆக வேண்டும்? எத்தனை நாள் ஓடி ஒளிய முடியும்.? ஒவ்வொரு பெண்ணும் இதை எதிர்நோக்கி தங்கலையே திடப்படுத்திக் கொண்டுதான் புக்ககம் செல்கிறார்கள்???.
 
Member
Joined
May 9, 2025
Messages
45
I think this old lady needs a fighting cock , at this era she should be happy that her daughter in law cannot talk. Please pack the relatives,reason for all the confusion.
 

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top