New member
- Joined
- Jun 27, 2025
- Messages
- 21
- Thread Author
- #1
கண்டேன் காதலை விழிகள்
நிறைந்தே! - 9
நிறைந்தே! - 9
கலைவாணி வாயோயாமல் பேசிக்கொண்டே இருந்தார். ஆனால் ஒன்று மட்டும் அவனை உறுதியாக தெரிந்து கொண்டான் நான் இல்லாத நேரத்தில் அதை பயன்படுத்திக் கொண்ட தனது அம்மா தேவிகாவை எதுவோ சொல்லி காயப்படுத்தி அதனால் அவள் இங்கிருந்து சென்று இருக்கிறாள்.
அதோடு மட்டுமில்லாமல் என் அலைபேசி எண்ணை பிளாக் செய்துள்ளா,என்பதை புரிந்து கொண்டவன் இப்போது தன் அம்மாவிடம் எதை சொன்னாலும் ஏற்றுக்கொள்ள மாட்டார். என்பதை தெரிந்து கொண்டான் அதனால் அமைதியாக கண்ணை மூடி படுத்துக் கொண்டான்.
நாளைக்கு தெரிஞ்சுக்கலாம் உண்மை என்னன்னு தெரியாம வேண்டாம் யாரையுமே காயப்படுத்த வேண்டாம். அவனுக்கு கண்ணை மூடி படுத்து இருந்தான் ஆனால் தூக்கம் என்பது அவனது விழிகளை எட்டவில்லை.
பேசிப் பேசி ஓய்ந்தவர் நீ மட்டும் இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கலனா நான் உயிரோட இருக்க மாட்டேன் என்று கடைசியாக ஒரு செக் வைத்தார்.
ஆனால் அவர் அறியாதது ஒன்று இருக்கிறது ஆம் நதியா வேறு ஒருவருடன் பழகிக் கொண்டு இருக்கிறாள். அவளுக்கு இன்னமும் தனது அம்மா திருமணம் முடித்து வைக்க வரன் தேடிக் கொண்டிருக்கிறார் என்பது தெரியாது .
ஆனால் அதற்கு முன்பாகவே கலைவாணி நவனீத் தின் காதலை அவனது கனவை சிதைத்து விட்டார். முதலில் நதியா இப்போது எதுவும் தன்னுடைய அம்மாவுக்கு காதல் பத்தி தெரிந்தால் அண்ணனின் நிலைமை தான் தனக்கும் என்பதை உணர்ந்தவள் கடைசி வரைக்கும் அமைதியாகவே இருந்தாள்.
இதே முடிவை உறுதி கொண்டு இருந்தால் இப்போது என் அம்மாவிடம் பேசினால் என் காதலையும் சிதைத்து விடுவார். அதனால் தான் தன் காதலனிடம் அமைதியாக இருக்கச் சொல்லிவிட்டாள்.
கலைவாணி நினைத்துக் கொண்டிருக்கிறார் நதியாவுக்கு எதுவுமே தெரியாது இன்னும் சின்ன பெண் என்று ஆனால் அவள் தான் அவருடைய மானத்தை பல பேர் முன் கேலிக்கூத்தாக்கி விட்டு சென்று விடுவாள் என்பதை அறியாமலேயே திருமண ஏற்பாட்டை செய்ய முடிவெடுக்கிறார்.
அதேபோல் அடுத்த வாரத்தில் மாப்பிள்ளை வீட்டாறை வரவைக்கிறார் இதுக்கு எனக்கு என்னமோ சம்மந்தம் இல்லை என்பதைப் போல் நவநீத் சென்று விடுகிறான் பெங்களூரு ,ஆம் அவன் இப்போ தேவிகாவை பற்றி தெரிந்து கொள்ள அவள் தோழி வேதாவை கேட்க சென்ற அன்று வேதா அவளும் வேறு ஊருக்கு சென்று இருந்தால் அதனால் அவனுக்கு தேவிகாவை பற்றி எந்த ஒரு தகவலும் தெரியவில்லை.
நதியா சொன்னா என்று பக்கத்து வீட்டிலும் கேட்க முடியாது ஏனென்றால் கலைவாணி கண்கொத்தி பாம்பாக கவனித்துக் கொண்டிருந்தார்.
நான் பாட்டுக்கு போய் விசாரிச்சு அவங்க இல்லாதது பிரச்சனைக்கு கண் மூக்கு வச்சு பேச ஆரம்பிச்சிடுவாங்க நாம் இங்க இருந்தா தானே அம்மா நம்மளுக்கு திருமணம் செஞ்சு வைக்கிற என ஒத்த காலில் நிற்பாங்க..
அதுக்கு வழியே இல்லாம அவனோடது உடைமைகளை எடுத்துக் கொண்டு அவன் பெங்களூரு விரைந்து விட்டான்.
தேவிகா யசோதா இருவரும் கோவையில் அழகான ஒரு வீட்டில் தங்களுடைய வாழ்வை இயல்பாக்கி கொண்டு இருந்தனர்.
என்னதான் தேவிகா வெளியில் சிரித்துக் கொண்டிருந்தாலும் அவளது அறைக்குள் சென்ற பின்னால் அவளால் அவளுடைய முதல் காதலை மறக்க முடியாமல் தினமும் கண்ணீர் உகுத்துக் கொண்டும் இருந்தால் அவள் அறியாதது அல்லவா நவனீத்தும் இவளை நினைத்துக் கொண்டுதான் இருக்கிறான்.
என்பது அவளுக்கு ஒரு நிமிடம் ஆச்சரியமாக இருந்தது என்னை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவன் நினைக்கவில்லையே ? நான் தான் அவனைப் பற்றி ஏன் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
அவன் அவனுடைய எதிர்காலம் முக்கியம் வசதி வாய்ப்பு இதை பார்த்து வேற ஒருத்தியை திருமணம் செய்து சந்தோஷமா வாழப் போறான். இப்படி மாறிட்ட இருக்கிற உன்னை நினைச்ச மனசுல என்னால வேற யாரையுமே நினைக்க முடியலையே நவனீத்..
நதியா தன்னை அலங்காரப் படுத்திக் கொண்டு மாப்பிள்ளை வீட்டார் முன் நின்றாள். மாட்டேன் என்று சொன்னால் தன் அம்மா தன்னை வெளியில் விடாமல் வீட்டோட சிறையில் வைத்து விடுவார் .என்பதை அவர் அறிவாள்.
வந்திருந்த மாப்பிள்ளை வீட்டார் எங்கேங்க சம்பந்தி அம்மா உங்க பையன காணோம் நாங்க வர்றதை முதலில் சொல்லலையா?
அவருகிட்ட கலைவாணி அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க .அவனுக்கு எல்லாம் தெரியும் நானும் பொண்ணு மருமக போட்டோவ காமிச்சதுமே அவனுக்கு புடிச்சு போச்சுங்க எல்லா ஏற்பாடும் பண்ணுங்க நான் தாலி கட்ட நேரத்துக்கு வரேன்னு சொல்லிட்டு தான் அம்மா இப்பதான் புதுசா சேர்ந்திருக்கிறேன். உடனே லீவு கொடுக்க மாட்டாங்க..அதனால தானுங்க...நாம ஆக வேண்டிய வேலையெல்லாம் பார்க்கலாம் கண்டிப்பா நீங்க மருமகளுக்கு செய்றேன்னு சொன்னா சீர் செனத்தை எல்லாம் செஞ்சுருவீங்களா? அதிலேயே சுனக்கம் பண்ணிற மாட்டீங்களோ?
ஏன்னா நானும் சொன்னேன் அடுத்தவங்க கைகட்டி நிற்கிறது நல்லாவா இருக்குதுங்க. நீங்க சொன்னீங்கன்னு தரகர சொன்னாங்க மாப்பிள்ளைக்கு பிசினஸ் பண்ணி தரேன்னு சொன்னீங்களாமா? அதையே கல்யாணத்துக்கு பின்னால் பண்றது முன்னாலேயே ஏற்படும் வாங்கி கொடுத்தீங்கன்னா? பையனும்இங்கேயோ வந்துடப்போறான்.
அவர் சீர் வாங்குவதிலேயே குறியாக இருந்தார் அவர் பேசிய விதத்திலேயே மாப்பிள்ளை வீட்டாருக்கு கலைவாணியின் உள்நோக்கம் புரிய ஆரம்பித்தது.
இதில் ஏதாவது வில்லங்கம் இருக்குது இந்த அம்மா மறைக்குது என்னனு தெரியாம நாமோ பிள்ளை கொண்டு வந்திங்க சிக்க வைக்க கூடாது. எதுக்கு இந்த தரகரை நம்பி நாமளும் விட்டுட்டோமே நல்லா தீவிரமா விசாரிச்சு பாக்காம இவ்வளவு தூரம் வந்துட்டோமே சரி வந்தது வந்தாச்சு பொண்ண பார்த்துட்டு போயிருவோம். பிறகு பதில் சொல்றோம் அப்படின்னு சொல்லிட்டு போக வேண்டியதுதான் என்று அவர்களுக்குள் குசு குசு என்று பேசிக்கொண்டனர்.
ஏனுங்கோ நான் கேட்டதுக்கு எந்த பதிலுமே சொல்லலைங்க உங்களுக்கு பொண்ண புடிக்கலையோ? எது வந்தாலும் நேருக்கு நேரா சொல்லுங்க தங்க மாட்ட பொண்ணு இருக்குது பாருங்க கிளியாட்டம் வளத்தி இருக்கிறேன்.
புள்ளைக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லைங்க ஆமாங்கோ ஆனா சொன்னா அதுக்கு மறுவேச்சில்லிங்கோ ரெண்டு பேருமே பையனும் பிள்ளை ரெண்டு பேருமே என்ற கோட்டை தாண்ட மாட்டார்கள்.
என்னம்மா சொல்ற கோட்டையா இல்லைங்கோ நான் பெத்தவங்களுக்கு மரியாதை கொடுப்பாங்க பெரியவங்கள மதிச்சு நடப்பாங்கன்னு சொல்ல வந்தானுங்கோ .
என்ன மா நீ தான் அப்படி வளர்த்து வெச்சி இருக்கீங்க மத்த வீட்ல எல்லாம் ஏனோதானோ வளத்தி வச்சிருப்பாங்க என்னமோ நீ தான் அதிசியமா புள்ள பெத்து வளர்த்து வச்ச மாதிரி பேசுறியே மா என்ற அங்கு வந்திருந்த பெரிய வயது பெண்மணி ஒருவர் சொல்லவும்.
எங்க புள்ளைக்கு நாங்க போடுற சீர பத்தி நீ கேட்டுக்குறியே? உன் மகளுக்குக்கு என்ன நீ கொடுப்பேன் அதையும் சொல்லிரு இப்பவே பேசிக்கலாம்.
அது வந்துட்டு அது நீங்க கேக்கற அளவுக்கெல்லாம் பெருசு ஒன்னும் இல்லைங்க. ஒரு இருபது பவுண் போடணும்.
என்னது 20 பவுனா நாங்க ஒன்ற பையனுக்கு தொழில் பண்ணி கொடுக்கணும். கார் வாங்கி கொடுக்கணும். இதையெல்லாம் கேக்குறியே அப்ப நாங்களும் பிள்ளைக்கு எவ்வளவு போடுவேன் கேட்கலாம் இல்ல.
அது மட்டும் குறைவா சொல்ற இது உனக்கு நியாயமா படுதா?
என்னங்க இப்படி பேசறீங்க என்கிட்ட வச்சிட்டு நான் இல்லைனா சொல்றேன்ங்க? பழைய நகை எல்லாம் சேர்த்து ஒரு 20 பவுண் அப்ப பின்னால செய்யத்தான போறங்க நீங்க பிசினஸ் வச்சு கொடுத்தா என் பையனும் சம்பாதிச்சு அதுலயும் புள்ளைக்கு செய்யத்தான் உங்களுக்கு செய்யாமல் விட்டுவிடுவார்களா?.
எங்க போன கட்டி கொடுத்துட்டு பிசினஸும் உங்களுக்கு வச்சு கொடுத்தா அதுல வர்ற பணத்தை வைத்துவிட்டு உங்க புள்ளை சீர் செய்வேன்னு சொல்ற நீ இது எந்த ஊரு நியாயம் என் புள்ள பொழைக்க வேண்டாமா அப்புறம் என்னமோ உங்க குடும்பத்து சுமைய தூக்கி வைக்கிறதுக்கு எங்க புள்ளே கட்டி கொடுத்து எல்லாமே பண்ணுவான்னு இப்பவே நீ இந்த பேச்சு பேசுறியே கல்யாணமான பின்னர் நீ பணம் பணம் திரியிற உனக்கென்னமோ நீ புள்ளைக்கா மாப்பிள்ளையும் உங்க பக்கம் இழுத்துக்கல பையன் வெளிநாட்டில் பிசினஸ் பண்ற அவனை உன் பக்கத்தில் இழுத்துக்கல புள்ளைங்க கட்டி குடுத்துட்டு குடுத்துட்டு உங்க எங்க சொத்த பூரா உங்களுக்கு தரவாது கொடுக்கணும்னு நினைச்சிட்டியாக்கு.
நீ இது மாதிரி ஒரு பொம்பளையும் நாங்க பார்த்ததே இல்லை சரி எது வந்தாலும் நாங்க வீட்ல போய் கலந்த ஆலோசனை செய்துட்டு அப்புறமா உனக்கு சொல்றேன்.
அது வீட்டு போகாட்டி என்னங்க பொண்ணு பாருங்க சித்திரம் மாட்டாங்க உனக்கும் சேர்ந்து பொண்ணு பார்க்க பொண்ணு கொடுக்க போறாங்க அவங்கள மதிச்சு நீ இருக்காம வேலைக்கு போகாதடான்னு சொன்ன அந்த பையன் எங்க கேக்குறானுங்கோ இந்த காலத்தில் புள்ள பையங்க எல்லாம் நம்ம சொல்ற பேச்சி காதுலையே வாங்கறது இல்ல நாம அவிங்க நல்லதுக்கு தான் சொல்லுவோம்ங்கறது தெரியுதுங்களா?
அவனுக்கு என்னன்னா இத்தனை அவசரமா வேலைக்கு போனான்னா நம்ம வீட்டுக்கு ரொம்ப சிறுசா இருக்குது கொஞ்சம் வீடு பெருசா மாத்தி கட்டவன்னு கல்யாணம் தலைக்கு மேல வச்சுட்டு நானும் ஊரில் இருந்தா நல்லாவா இருக்குமுனு போயிட்டானுங்க நான் என்ன பண்றதுக்கும் என்று இல்லாத பீத்தல் எல்லாம் பீத்திக் கொண்டிருந்தார் கலைவாணி.
நதியாவுக்கு அப்போதும் தன் அம்மா எப்படி எல்லாம் நடிக்கிறாங்க சரியான தில்லாலங்கடி இருக்கிறாள்.
உனக்கே நானு பெரியதாக ஒன்று கொடுத்து போறேன் அண்ணனும் தேவிகமும் உயிருக்கு உயிரா பழகிட்டு இருந்தாங்க உனக்கு எப்படிமா மனசு வந்து அதை பிரிச்சிட்டு இப்படி நாடகமாடுகிறாய்?
இந்த சொட்டை தலையை நான் கட்டிக்கணுமா உன்ற பணத்தாசைக்கு ஒரு அளவில்ல அவங்க பொண்ண பாரு இவ்ளோ கருப்பா இருக்குது பணத்துக்காக எங்க வாழ்க்கையோட நீங்க விளையாடுறியா அம்மா என்று மனதில் நினைத்துக் கொண்டு அமைதியாக நின்றிருந்தால்.
இங்கு நடப்பதை அனைத்தையும் தினமும் தன் அம்மாவுக்கு தெரியாமல் சொல்லிவிடுவாள் நவநீதனுக்கு. அவனும் நானும்
தேவிகாவைத் தான் எனது நட்பு வட்டத்தில் சொல்லி தேடிக் கொண்டு இருக்கிறேன் என்று அவளுக்கு தெரியப்படுத்தி இருந்தான்.
நதியா தனது நண்பனைத் தான் காதலிக்கிறாள் என்பதும் நவநீத்திற்கு தெரியும்..
தொடரும்...