• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
Jun 27, 2025
Messages
21
கண்டேன் காதலை - 3

கண்டேன் காதலை-3


தேவிகா மெக்கானிக் தனது வண்டியை காயலான் கடையிலிருந்து வாங்கி ஒட்ட வைத்தது என்று சொன்னதும் கோபமடைந்தால் அவளின் மூக்கு விடைத்தது கோபத்தில்.

நவநீத் அண்ணா சீக்கிரம் ஒரு வேனை வரச் சொல்லி இந்த வண்டி தூக்கிட்டு போயிருங்கோ? இல்லைனா உங்களுக்கு இந்த வண்டியோட நிலைமை தான் சில்லு சில்லா பண்ணி போடுவா. என்று கூறி அவளை மெக்கானிக் கூட சண்டை போட விடாமல் தடுத்தான்.

மெக்கானிக் அண்ணா உங்க நிலைமை பாவம் தான் என்று நவநீத் பார்த்து சொல்லவும் மனதுக்குள் நினைத்துக் கொண்டான் அவனை ஏற்கனவே என் மேல காண்டில் இருக்கிறாள். இந்த அண்ணனும் வாய் வச்சுட்டு கம்முனு இருக்காம ஏதாவது சொல்லி எச்சா இவ கிட்ட அடி வாங்க வச்சிருவாரு போல இருக்குது. என்று மனதில் நினைத்தாலும் வெளியே அமைதியாக நின்று கொண்டான்.

வண்டியை எடுத்துச் சென்றதும் தேவிகாவை தன் இரு கரங்களில் அள்ளிச் சென்றவன் தனது வண்டியை ஏற்கனவே சென்டர் ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி வைத்ததால் அதில் இரு பக்கமும் காலை போட்டு உட்கார வைத்தான்.

டேய் எரும மாடு வலிக்குதுடா ஏன்டா இப்படி பண்ற நீ என்ன வேணா திட்டிக்க தேவிகா என்ன உனக்கு கால்ல அடிபட்டு இருக்குது. கொஞ்சம் வண்டியில பம்பர் இடிச்சதுக்கு இந்த கத்து கத்துகிறாய் கொஞ்ச நேரம் பொறுமையா இரு ஹாஸ்பிடல் போயிட்டு போலாம் என்று வண்டியை உயிர்ப்பித்தான்.

டே மாமா ஹாஸ்பிடல் போனா பெரிய கட்டா போட்டு விடுவார்களா?

ஏண்டி இப்படி பயப்படற

இதே சாக்கா வச்சுட்டு என்னை டீ போட்டு பேசுறியா நீ..

அப்படியா நீ என்னை சொல்லி கூப்பிடுற எருமை என்கிற வாடா போடா என்கிற நான் ஏதாவது உன்னை சொன்னேனா?

சரி இப்ப சொல்லு சாரிடா மாமா பெரிய கட்டா போட்டு விடுவாங்களா?

அது ஆமா உங்க கால் பாரு குனிஞ்சு எப்படி வீங்கிக் கிடக்கிறது.

அசைக்க முடியாத மாதிரி மாக்கட்டு போட்டு விட்டுருவாங்க அப்புறம் நீ நொண்டிக்கிட்டு
நடக்க வேண்டும்.
டேய் இந்த லோலாயம் தான் வேண்டாங்கிறது நானே எங்க அம்மா இனிமேல் என்கிட்ட வண்டி கொடுக்காதுன்னு நினைச்சுட்டு பீல் பண்ணி கேட்கிறேன் நீயும் என்னை எச்சா உசுப்பேத்தி பாக்கிறாயா?

முதல் உன் வண்டி ஓட்டுற அளவுக்கு ரெடியாகுமா என்று தெரியுமா உனக்கு?

ஏன்டா இப்படி சொல்ற அப்படினா நீ எனக்கு புது வண்டி வாங்கி தரியா?

இது உனக்கே ஓவரா தெரியலையாடி நான் புது வண்டி வாங்கி கொடுக்கிற நிலைமையிலே இப்ப இருக்குற நானே வேலையில்லாத பட்டதாரி மாதிரி சுத்திட்டு இருக்கேன்.

வேலையில்லாத பட்டதாரி மாதிரி இல்ல வேலை இல்லாத பட்டதாரி தான் நீ அப்பயே சொல்லி காமிக்கிற சொல்லி காமிக்கல டா ஏதாவது முயற்சி பண்ணா தான் ஆகுது நான் முயற்சி பண்ணலைங்கறது உனக்கு தெரியுமா?

டேய் என்னடா இந்த ஹாஸ்பிடல் கூப்பிடு வந்து இருக்குற ஐயோ நம்ம வீட்டுக்கு பக்கத்துல இருக்குற காவியா நர்ஸ் இங்க ஒர்க் பண்றாங்க நம்ம ரெண்டு பேரையும் சேர்ந்து பார்த்து அதுக்கு வேற ஏதாவது சொல்லுவாங்க.

லூசா நீ நான் உனக்கு பக்கத்து வீடு நீயா வாய்விட்டு சொன்னத நீயும் நானும் லவ் பண்ணுகிறேன் என்பதை தெரியும் .

உன்னை வழியில் பார்த்த மாதிரி நான் காண்பிச்சுக்கிறேன் போதுமா?

நிஜமா வாடா என்னை நீ வழியில் பார்த்த மாதிரி தான் நினைச்சிருக்கிற.

உன் மனசுல பதிய எது சொன்னாலும் நீ இப்படி ஒரு குறுக்கே கேள்வி கேட்டு இருக்குற விகா ஒன்ன மட்டும் நீ புரிஞ்சுக்கோ நான் வந்து எனக்கு மட்டும் பிரச்சனை வரும்னு பேசல உங்க அம்மாவை வளர்ப்பை யாராவது தப்பா சொல்லிடக் கூடாது அப்படிங்கிறத யோசிச்சு தாண்டி சொல்ற நானு நான் மட்டும் பேசிக்கிறேன். நீ எதுவுமே வாய் திறக்காத.

இப்பவே என்ற வாய்க்கு பூட்டு போடுகிறாயே மாமா.

ஐயோ உன்ன புரிஞ்சிக்கவே முடியலடி என்னடி சொல்லணும்னு நானும் உன்னைய லவ் பண்ணிட்டு இருக்கேன் சொல்லனுமா சரி நான் சொல்றேன் எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல நீ வேணா அதுக்கு பின்னால வர்ற பிரச்சனை பேஸ் பண்ணிக்கோ. நாளைக்கு வெளியில் தெரிஞ்சா நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிற வா டேய் வேலை இல்லடா ஏன் கல்யாணம் பண்ணா பொண்ணுதான் மாப்பிள்ளை வீட்டுக்கு போகணுமா நான் உங்க வீட்டுக்கு என்ன வந்துடுறேன் எனக்கு சோறு போட மாட்டியா டி .

என்னடா பேசுற நீ ஏதாவது நடக்கிற மாதிரி இருந்தா சொல்லு அதுதான் நீயே நடக்குற மாதிரி நான் இல்லையே நீயே நொண்டி அடிச்சுட்டு இருக்குற இன்னைக்கு என்னமோ அதை பாருடி.

சரிடா நான் வாய் திறந்தாலே சண்டை தான் வருது.

புரியுதுல்ல கம்முனு வா சண்டக்கோழி மாறியே திறியுரது எனக்கு இவளுக்கு இப்படி ஆயிருச்சு அப்படிங்கற கவலை இருக்கு .கொஞ்சம் யோசிக்க வில்லை வாயாடி ஆனாலும் உன்கிட்ட எனக்கு புடிச்சது இப்படி கூட கூட வாயடிக்கிறதும் இந்தத் திமிறும் தாண்டி பொண்டாட்டி.

என்னடா சொன்ன இப்போ உண்மை சொன்னேன் நீ முதல்ல படிப்பு முடி அப்புறம் பாருடி அள்ளிட்டு போயிருவ.

எதுக்கு?

எதுக்குன்னு உனக்கு தெரியாது நெஜமா தெரியாது.. அதுவா ரெண்டு பேருமே நிலாச்சோறு சாப்பிட.

எருமை எருமை எந்த நேரத்தில் எதைப் பேசறான்னு பாரு முதல்ல ஹாஸ்பிடல் கூட்டிட்டு போடா.

இருடி நான் கையில எடுத்து போகட்டா இல்ல வீல் சேர் வாங்கிட்டு வரட்டா. நான் இத்தன நேரம் சொல்லித்தாண்டா வந்த என்னடி சொன்ன சூ ஏதோ ஒன்னு பண்றா. பர்மிஷன் கொடுத்துட்டா.

எனக்கு சிரிப்பு தாண்டா வருது.

வரும் வரும் உனக்கு சிரிப்பு கால் எப்படி போய் பேத்து வச்சிருக்க எனக்கே பயமா இருக்குது .நீ இப்படி தூக்கிட்டு போவேன் தெரிஞ்சா நான் ஒண்ணுமே கால்முறிச்சிருப்பேன். அப்புறம் எப்படி போய் செமஸ்டர் எழுதுவ.

பேசிக்கொண்டே டாக்டர் அரைக்கும் சென்று அவளின் காலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது .ஆனால் நவநீத் பயப்படுத்தியதைப் போல தேவிகாவின் காலுக்கு மாவு கட்டலாம் போடவில்லை. சாதாரண சதை பிசகல்தான், இதை எல்லாம் நினைத்துப் பார்த்தவள் அப்படியே உறங்கி விட்டாள்.

இப்படித் தான் காதல் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்தது. பக்கத்து வீடு என்றாலும் யாருக்கும் சந்தேகம் வராதமாதிரி தான் இருவரும் காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன் என்று இருந்தார்கள்.

இதனிடையே நவநீத் தங்கை திருமணம் செய்ய வேண்டும் என்று நினைவில் அவனும் முமாமுரமாக வேலை தேடினான்.

நவநீத் அம்மா கலைவாணியின் தூரத்து சொந்தம் ஒருத்தர் ஒரு வரன் கொண்டு வந்தார்கள். ஆனால் அந்த வரன் அமைய வேண்டும் என்றால் பெண் கொடுத்து பெண் எடுக்க வேண்டும்.

நவநீத் சொந்தமாக தொழில் செய்வதற்கும் அவர்களே தொழில் வைத்து தருவதாக கூறியதால் கலைவாணிக்கு இரடிப்பு மகிழ்ச்சியாக இருந்தது.

இதை தனது மகனிடம் சொல்லாமல் இப்போதைக்கு மறைத்து தான் வைத்து இருந்தார். அவருக்கு தன் மகனின் பார்வை தேவிகா மேல் அடிக்கடி விழுவதை கண்டு கொண்டார். அதைத் தெரிந்தது போல் காண்பித்துக் கொள்ளவும் இல்லை.

தேவிகா சென்ற சிறிது நேரத்தில் தன் மகன் நவநீத் வண்டியை எடுத்துக் கொண்டு செல்வதைக் கண்டு கொண்டார். அவருக்கு தேவிகா மேல் எந்த வருத்தமும் இல்லை. கோபமும் இல்லை ஆனால் தன் மகளுக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்றால் இவர்கள் இருவரும் பிரிய வேண்டும் என்று தீர்மானித்து விட்டார்.

மாப்பிள்ளை வீட்டார் அடுத்த மாதம் வருகிறோம் என்று சொன்னதால் அதற்குள் தேவிகாவிடம் பேசி விட வேண்டும் என்று நேரம் பார்த்து கொண்டு இருந்தார்.

நவநீத் ஒரு இன்ட்ரிவ்யூ அட்டன் செய்ய வெளியூர் சென்றதை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்.

தேவிகா வழக்கம் போல் வண்டியை எடுத்துக் கொண்டு அருகில் இருக்கும் பார்க் சென்றாள். நவநீத் வருவான் என்று ஆனால் அவன் வரவில்லை.

நவநீத் வேலைகிடைத்த பிறகு வந்து தேவிகாவிக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாம் என்று நினைத்து இருந்ததால் அவளுக்கு தான் வேலை விடயமாக வெளியூர் செல்வதை சொல்லவில்லை.

இது என்ன நவநீத் இன்னும் காணம் என்று பார்க் வாசலை எட்டிப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

இவளின் எதிர்பார்ப்பு அத்தனை செய்கைகளையும் ஒரு மரத்தின் பின்னால் நின்று கொண்டு பார்த்து இருந்தார் கலைவாணி.

தேவிகா கிளம்பும் நேரம் அருகில் சென்றவர். என்னம்மா இங்கே என்ன செய்கிறாய்?

தேவிகா எதிர் பார்க்கவில்லை அங்கே நவநீத் அம்மாவை முதலில் அதிர்ச்சியை தனது கண்ணில் காண்பித்து விட்டு பிறகு சுதாரித்தவள் ஆண்ட்டி
சும்மா தான் ஒரு பிரண்ட் வருவானு பார்த்து காத்திருந்தேன். அவள் சொன்ன நேரத்திற்கு வரவில்லை அது தான் .

நீங்கள் வாக்கிங் வந்தீர்களா?

இல்லை உன்னைப் பார்க்கத்தான் வந்தேன். என்று முகத்தை கோவமாக வைத்துக் கொண்டு பேசினார்.

ஆண்ட்டி என்கிட்ட பேசுவது என்றால் வீட்டிற்கு வரச் சொல்லி இருந்தா நான் வந்து இருப்பேனே. இத்தனை தூரம் நீங்கள் வரவேண்டுமா? என்று உள்ளுக்குள் உதறல் இருந்தாலும் வெளியே சிரித்துக் கொண்டே பேசினாள்.

வீட்டிற்குள் யாரையும் நம்பி உள்ளே விடுவதற்கு பயமாக இருக்கிறது. முதலில் பொம்பளப் பிள்ளைகளை வைத்துக் கொண்டு தான் பயப்பட வேண்டும். ஆனால் இந்தக் காலத்தில் ஆம்பளைப் புள்ளைகளை தான் காபாத்த வேண்டியதா இருக்கிறது.

கண்ணுக்கு வாட்டசாட்டமா இருந்தா அதுவும் படிச்சு நல்ல எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாதபையன்களை எதைக் காட்டி மயக்கிவீங்களோ? தெரியலை. மந்திரித்து விட்ட
கோழி மாதிரி நீ அவனுக்கு கண்ணில் சிக்னல் கொடுப்பதும் அவனும் மகுடிக்கு கட்டுப்பட்ட பாம்பு போல் உன் பின்னாடி சுத்துவதும் என்ன இருந்தாலும்
ஆம்பளை இல்லாத வீடு என்பது சரியாகத்தான் இருக்கிறது.

அடிச்சு வளர்க்க ஆள் இல்லை என்றதும் தான் நீயே ஆம்பளை சுகம் தேடுதோ உன் வாலிப வயது. என்ன இரண்டு பேரும் எதுவும் வரம்பு மீறவில்லை தானே பிறகு வயித்தை தள்ளிக் கொண்டு வரக்கூடாது அதற்கு தான் இப்போது பேசவந்தேன்.

தேவிகா தலையைக் குனிந்து கொண்டு அழுது கொண்டிருந்தால் தான் அது மாதிரி பெண் இல்லை என்பதை எப்படி இந்த ஆண்ட்டிற்குப் புரிய வைப்பது என்பது தெரியவில்லை.


தொடரும்..
 
New member
Joined
Jun 4, 2025
Messages
15
ச்சைக் இப்படியா பேசுவது????
பாவம் தேவி🥺🥺🥺🥺🥺
 

Latest profile posts

வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top