• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
346
நீலகிரி..

மேடம்,அப்போ தாமரை அங்கே போய் விட்டால், நீங்க தனியா தான் இருப்பீங்களா?,என்ற மருதுவிடம் அதான் இத்தனை புள்ளைங்க இருக்கீங்களேப்பா என்ற வேதாவை, தோளோடு பவியும் கட்டிக்கொண்டாள்.

"நான் உங்களை விட்டு எங்கும் போக மாட்டேன் ஆன்ட்டி என்றவளிடம், ஆஹான்,இப்படி சொல்றவள் தான் முதல்ல கல்யாணம் பண்ணி கிட்டு புருஷன் வீட்டுக்கு போவாள் என்றார்.

"நோ.நோகல்யாணம் பண்ணிகிட்டாலும் இதே ஊர்லே தான் இருப்பேன், அதனால் தான் தாமரை கூட நான் படிக்கலை ஆன்ட்டி என்றவளின் தலையை தடவி விட்டவர்,உன்னை யாராவது டீச்சர்னு சொல்லுவாங்களாடா பவி? என்று சிரித்தார்.

"எனக்கும் அந்த சந்தேகம் இருக்குங்க மேடம்? என்றான் மருது.அடேய் மலமாடு என்ன கொழுப்பா என்றவளுக்கு,ஆமா குள்ள கத்திரிக்காய் என்க,இன்றைக்கு நீ செத்தடா என்றவள்,எழுந்து போய் அவன் தலை முடியை பிடித்து உலுக்க, மருதுவோ,ஏய் விடுடி குட்டி சைத்தான்னு கத்தினான்.

"முடியாதுடா என்று சொல்லிக்கொண்டே வேகமாக பண்ண,எந்திரிச்சேன் நீ தொலைஞ்சடி என்றவனுக்கு,போடா சிப்ஸ்னு கத்திவிட்டு உள்ளே ஓடிப்போய் கதவை அடைத்துக்கொண்டாள்.

"சிரிச்சி சிரிச்சி முடியலைப்பா என்ற வேதாவிடம் இன்னும் சின்ன புள்ளை தனமாகவே இருக்கா மேடம் என்க அப்பொழுது மருதண்ணாஆஆஆ மருதண்ணானு என கூப்பிடும் சத்தம் கேட்க,ஒரு நிமிஷம் மேடமென வெளியே வந்து பார்த்தான்.

வாசலில் பக்கத்து வீட்டு பையன் நிற்க, என்னடா என்க,அத்தை சாப்ட கூப்டுறாங்க என்று சொல்லி விட்டு ஓடினான்.உள்ளே வந்த மருது,அம்மா சாப்ட வர சொல்லிருக்கு என்றவன், பூட்டியிருக்கும் கதவு முன்பு நின்று,குட்டி பிசாசு சாய்ந்தரம் வீட்டுக்கு வரேன் என்றவன்,வேதாவிடம் தலையசைத்து வீட்டிற்கு செல்லும் பாதையில் நடந்தான்.

"எவ்வளவு ஆசையாக தன்னவளை பார்க்க வந்தோம்,கடைசியில் அவ ஊரில் இல்லையே என்று உள்ளுக்குள் வருத்தமானது.எப்படி அவளை பார்ப்பதென்று யோசித்துக்கொண்டே வீட்டின் உள்ளே வந்தான் மருது.

" மகன் வந்ததை பார்த்த மயிலா, வாப்பா,நேரம் எம்புட்டு ஆச்சினு பாரு என சொல்லிக்கொண்டே,அவனுக்கான காலை உணவை எடுத்து வைக்க, கையை கழுவி வந்து அமர்ந்தவனுக்கு, அம்மாவின் கைமணம் வழக்கம் போல ரசித்து சாப்பிட வைத்தது.

"நர்சம்மா,பாப்பாலாம் நல்லா இருக்காங்களாப்பா?என்றார் மயிலா. நல்லா இருக்காங்கம்மா, தாமரை இல்லை,ஊருக்கு போயிருக்கு என்க, அப்படியாப்பா என்றவர்,அப்போ வேதாம்மா தனியா இருக்காங்களா? என்க,ம்ம்,குட்டி சாத்தான் அங்க தான் இருக்கா மா என சாப்பிட்டுக்கிட்டே சொன்னான்.

" ஏம்ப்பா இப்படி...நல்ல புள்ளை பவி, பொம்பள புள்ளைய அப்படிலாம் சொல்லக்கூடாதுப்பா, ஹம் நல்லா சொல்லுங்கம்மா என்ற குரல் கேட்டு இருவரும் வாசலை பார்க்க,அங்கே பவி நின்று கொண்டிருந்தாள்.

"வாங்கம்மா டீச்சரம்மா என்றழைக்க, வந்தாச்சு வந்தாச்சு என்றவள், கையிலிருந்த மண்பாத்திரத்தை, அங்கிருந்த களிமண் மேடையில் வைத்து விட்டு,சமையல் நான் சொல்லி குடுத்த போல இல்லைனாலும் ஓரளவு சாப்டுற போல தான் இருந்துச்சி என்க, அதைக்கேட்டு சாப்பிட்டவனுக்கு சிரிப்பு வந்து புரையேறியது.

" தண்ணிய குடிடா மலைமாடு என்றவளை பார்த்தவன்,உன் மூட்டை அங்க இருக்கு பாரென்று காட்ட, திரும்பி பார்த்தவளின் கண்ணில் உரியில் தொங்கிய கவர் பட்டது.

கவரை எடுத்து திறந்து பார்க்க,போன முறை அவள் கேட்ட அத்தனையும் அதனுள் இருந்தது.ஹேய் மலமாடு தேங்க்யூ என்க,சரி டி என்று தனது சாப்பிடும் வேலையை தொடர்ந்தான்.

"இன்னும் கொஞ்சம் கிழங்கு வைக்குறேன் தம்பினு மயிலா சொல்ல, எம்மாஆஆஆ...போதும்,சாப்ட வச்சே மனுஷனை கொன்னுடுவ போலனு எழுந்து போய் கையை கழுவி விட்டு, தங்களது வீட்டு திண்ணையில் உட்கார்ந்து கொண்டு,இன்னும் இவன் வரலையாம்மா என்றான்.

"ஒரு நாள் தானே டா விளையாண்டுட்டு வரட்டுமே என்று சொல்லிக் கொண்டே பவியும் அங்கு வந்து திண்ணையில் அமர,மயிலாவும் தான் பின்னும் மூங்கில் கூடையோடு வந்து அவர்களோடே அமர்ந்து,பேசிக்கொண்டே கூடை பின்னும் வேலையை தொடர்ந்தார்.

சீமக்கரை...

"தாமரைக்கு தேவையான பொருட்கள் எல்லாம் வாங்கி முடிக்க, மேலும் ஒரு மணி நேரம் ஆனது.பிறகு தெரிஞ்சு ஆட்டோ ஒன்றை ஏற்பாடு செய்து, அதில் வாங்கிய பொருட்களை உள்ளே வைத்து விட்டு, தாமரையும் ஆட்டோவில் உட்கார்ந்து கொண்டாள்.

பின்னர் சிவாவும் தாமரையும் வளவனிடம் சொல்லிக் கொண்டு, சீமைக்கரையை நோக்கி சென்றனர் .ஆட்டோ முன்னாடியும் அதை பாலோ பண்ணிக் கொண்டு சிவா தனது வண்டியில் பின்னாடியே சென்றான்.

"ஆட்டோவில் சென்று கொண்டிருந்தவளுக்கு பவியிடம் இதுவரை பேசவில்லை என்ற நினைவு வந்தது.அச்சோ சொல்லாமல் வந்துட்டோமே,என்ன நினைக்க போறான்னு தெரியலையே? என்று யோசனையானவள்,முதலில் வேதாவுக்கு அழைக்க, அவர் அட்டென்ட் பண்ணி சொல்லுடா என்றார்.

"தேனூருக்கு வந்ததை பற்றி சொல்ல, அங்கு போயும் சும்மா இருக்க முடியலையா?,ஆமா சும்மாவே எவ்வளவு நேரம் இருக்கிறது? வந்த ஒரு நாளைக்கே, எனக்கு தல சுத்தி போயிடுச்சு வேதாம்மா என்று தாமரை சொல்ல,நீ தானே அங்க போகணும்னு ஆசைப்பட்டே என்றார்.

"ஆமாம்...அப்பா,அம்மா கூட இருக்கலாம் என்று ஆசையா தான் வந்தேன். இங்க வந்து சும்மா இருக்க முடியலையே என்ன பண்ண?,சரி இருக்கிற நாளை இப்படி ஓட்டலாம் என்று ஒரு யோசனை,அதான் செகன்ட் ஹேண்ட் மெஷின் வாங்கி கொண்டேன் என்றாள்.

"அங்கு கடை போட்டினா பிச்சிக்கிட்டு ஓடும் பாரு என்று வேதா சொல்ல, நான் என்ன கடை போடவா வந்துருக்கிறேன் என்ற தாமரைக்கு, சும்மா சொன்னேன் டா. சரி...உங்க தாத்தா பாட்டி எல்லாரைம் போய் பார்த்தியா?

இன்னும் போகலை. நாளைக்கு தான் போய் பார்க்கலாம் என்று இருக்கிறேன் என்றாள் தாமரை."மருமகள் சொன்னதை கேட்ட வேதாவோ,உனக்கு இரண்டு குடும்பத்துக்குள்ளும் நடந்த பிரச்சனை பற்றி தெரியாதே,நீ போனால், அங்கு இருப்பவர்கள் எப்படி உன்னை ட்ரீட் பண்ணுவாங்கன்னு தெரியலையே என்று நினைத்தவர் மருமகளிடம் எதையும் காட்டிக் கொள்ளவில்லை.

ஹலோ... ஹலோ... என தாமரை சத்தம் கேட்ட பின் நிகழ்வுக்கு வந்தவர், சொல்லுடா என்க, அத்தம்மா பவி வந்தாளா?

ம்ம் பவி வந்தா,மருது வந்திருக்கான் என்றவர் இருவரும் வந்து சென்ற விஷயத்தை பற்றி சொல்ல,அப்படியா ,நானும் இங்கு வந்ததில் இருந்து அவளுக்கு போன் பண்ணலை, அதனால் கோச்சிக்கிட்டாளானு தெரியலையே?.

"கோச்சிக்க மாட்டாள். உன் லெட்டர் காமிச்சேன் படிச்சு புரிஞ்சிக்கிட்டாள். இப்ப மருது வீட்டுக்கு தான் போயிருக்கா,போன் பண்ணி பாருடா. ரெண்டு பேரும் அங்க தான் இருக்கிறார்கள் என்று சொல்ல,சரிங்க அத்தம்மா என்றவள் வேதாவின் அழைப்பை கட் பண்ணி விட்டு, பவி நம்பருக்கு கால் பண்ணினாள்.

"மூன்று முறை கால் பண்ணியும் பவி எடுக்கவில்லை.ஓ...,மேடம் ரொம்ப கோவமா இருக்காங்களோ என்று நினைத்தவள்,மருதுவின் நம்பருக்கு போன் பண்ண,வீட்டின் உள்ளே தனது செல்போன் ரிங்டோன் சத்தம் கேட்க, வெளியே பேசிக்கொண்டிருந்தவன் உள்ளே வந்து எடுத்து பார்க்க,அவன் கண்ணில் பிரகாசம் வந்தது.

"அட்டென்ட் பண்ணியவன் எப்படி டி இருக்க? என்க,நல்லா இருக்கேன் மருது. நீ எப்படி இருக்கிற?என்கவும்,எங்கடி நல்லா இருக்க?,ஒரு மாசமா உன்னை பாக்கலைன்னு ஓடி வந்தா ஆள் இல்லை என்றவனுக்கு,கொஞ்ச நாள் நம்ப வீட்ல எல்லார் கூடயும் இருக்கலானு தோனுச்சி மருது, அதான் உடனே வந்துட்டேன் என்றாள்.

" அதற்கு,... ஓ என்றவன், லவ் யு டி என்கவும்,வழக்கம் போல சிரித்தவள், மிஸ் யூ டா என்றாள்.கிட்ட தட்ட நீ காலேஜ் போனதிலிருந்து இந்த வார்த்தையை சொல்லுறேன்டி, என்றைக்கு தான் டூ னு நீ சொல்லப்போறனு பாக்குறேன் என்றவன்,போனை எடுத்துக்கொண்டு வெளியே வர,யார்கிட்ட இவ்வளவு நேரம் ரகசியம் பேசுன மலமாடு? என்றாள்.

"மொபைல் ஸ்பீக்கரை ஆன் பண்ணியவன்,அம்மா தாமரை லைன்ல இருக்கா என்க,பாப்பா நல்லா இருக்கியாடா என மயிலா கேட்கவும், நல்லா இருக்கேன் ஆன்ட்டி, நீங்கள், அங்கிள்,மிலன் மூவரும் எப்படி இருக்கீங்க என்றாள்.

" எல்லாரும் சொகம் தான் பாப்பா, ஏன் சொல்லாமலே போய்ட்ட என கேட்க, திடீர்னு கிளம்புனேன் அதான் என்றவள், பவி என்று அழைக்க, யாரும் என்கிட்ட பேச வேண்டாம்.

" ஓகே என்ற தாமரை...ஆன்ட்டி... அத்தம்மாவ கொஞ்சம் பார்த்துக்குங்க என்றவளின் குரல் மாற்றத்தை அறிந்த மயிலா, பாப்பா... வெளிநாட்டுக்கு போய்ட்டால், இந்த அத்தைய மறந்துடுவனு மருது சொல்லுறானே நிசமாவா என்க,அடேய் தடி தாண்டவராயா,உன் மண்டைய பொளக்க போறேன் என்றாள் தாமரை.

" வாடி... வா.... நீ பொளக்குற வரைக்கும் என் கை பூவா பறிக்கும் என்ற மருதுக்கு, புண்ணாக்கு செய்வடா கொரங்கு. என்னடா சொல்லி வச்சிருக்க ஆன்ட்டி கிட்ட என்றவளுக்கு, உண்மையை சொன்னேன்டி வெண்டைக்காயென்றான்.

"இருவரின் பேச்சை கேட்டு,சத்த மிட்டு சிரித்த மயிலா,தாமரையின் சிந்தனையை மாற்றவே இந்த வேலையை செய்தார் என்பது மருதுக்கும், பவிக்கும் நன்கு புரிந்தது.

"ஆன்ட்டி.... என்றவளுக்கு, சொல்லுடா பாப்பா என்றவரிடம், அப்போ அப்போ கொஞ்சம் அத்தம்மாவை எட்டி பாருங்க, இவ்வளவு வருஷமும் அவங்க கூட இருந்துட்டு,இங்கே வந்தது ஏதோ சுயநலமா யோசித்த போல் எனக்கு இருக்கிறதென்றாள்.

அதைக்கேட்ட மருது, "அடடடாஆஆ... நீ உள்ளூரில் குப்ப கொட்டவே லாயக்கு இல்லை, இந்த லட்சணத்தில் உன்னை வெளிநாட்டுக்கு அனுப்புறாங்களே மேடம். இதை பற்றி என்னத்தை சொல்ல" என்றான்,

அதற்கு தாமரையோ, "என்னா? என்னால் முடியாதா? அடேய்... மல குரங்கே. நீ பார்க்க தான் போறடா. ம்கும்... இப்படி அத்தை, ஆட்டு குட்டினு புலம்பிட்டு இருந்தால் கேப்ப களி கிண்டிகிட்டு வீட்லதான்டி நீ இருக்க முடியும்" என்றான்.

மருது சொல்வதை கேட்டவளோ, "நீ கையில கிடைக்குற அன்றைக்கு உனக்கு இருக்குடா" என்றவள், "பவி டீச்சர் இப்பொழுது உங்களால் பேச முடியாது தானே. ஓகே, நீங்களும் இரண்டு நாள் சொல்லாமல் எங்கோ போய்டீங்க. அது மட்டும் சரி அப்படி தானே. ஓகே பைன்" என்றவள், "வீடு வந்துருச்சி நான் வைக்குறேன்" என்று அழைப்பை துண்டித்தாள்.

கண்மணி வருவாள்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top