Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 344
- Thread Author
- #1
சீமக்கரை.....
மூவரும் பேசிக்கொண்டே பக்கத்து டவுனாகிய தேனூருக்கு வந்தனர்.
தேனூர் தான் சுற்று வட்டாரத்தில் இருக்கும் அத்தனை கிராமத்திற்கும் பொதுவான டவுன்.
"எந்த பொருள் வேண்டுமென்றாலும் சுற்று வட்டார மக்கள் அனைவரும் இங்கு தான் வர வேண்டும். அதே போல் வெளி மாவட்டத்திற்கு செல்ல வேண்டுமென்றாலும், தங்கள் ஊருக்கு வரும் டவுன் பஸ்ஸில் ஏறி இங்கு தான் வர வேண்டும்.
"அதனால், தேனூர் எப்போதும் பரபரப்பாக தான் இருக்கும். அதற்கு முக்கிய காரணமும் அங்கிருக்கும் சர்க்கரை ஆலை மற்றும் நூல் கம்பெனி இரண்டும்.இன்னும் ஊரின் உள்ளே இருக்கும் கடைவீதிக்கு சென்றால் தான் தாமரை கேட்ட மெஷின் எல்லாம் கிடைக்கும் என்பதால்,மாமா ஒரு டீ குடிக்கலாமா என்று கேட்டான் சிவா வண்டியில் போகும்போது.
"சரிடா என்றவன் வழக்கமாக குடிக்கும் டீக்கடையின் அருகே சென்று வண்டியை நிறுத்தி விட்டு இறங்கியவர்கள், தாமரை பார்க்க,எனக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டாள்.பிறகு இருவரும் டீ யை குடித்து முடித்து பின் அதற்கான காசை கொடுத்து விட்டு, வண்டியில் ஏறி கடைதெருவை நோக்கி சென்றனர்.
" சாகித் தையல் மெஷின் சேல்ஸ்& அன்ட் சர்வீஸ்... என்ற கடையின் முன்னே வந்து வண்டியை நிறுத்தி விட்டு, மூவரும் உள்ளே சென்றனர். கடையினுள்ளே இருந்த நடுத்தர வயதானவரோ, சொல்லுங்கப்பா என்ன வேண்டும் என்று கேட்க, தையல் மெஷின் தான் வேண்டுமென்றாள் தாமரை.
" தாமரை சொன்னதைக் கேட்டு வளவனுக்கு சிரிப்பு வந்தது.தனது பக்கத்தில் நிற்கும் சிவாவின் காதில் என்னடா உங்க அக்கா காமெடி பண்றா?,மெஷின் கடைக்கு வந்து அதை தானே வாங்க முடியும் என்று சிரிக்க, மாமா,அவளை விட கூறு கெட்டவன் அந்த கடைக்காரர் தான். இந்த கடையில் காய்கறியா வாங்க வருவாங்க அவள போய் என்ன வேணும்னு கேக்குறான் என்று சிவா சொல்ல,இருவர் பேசுவதும் அவள் காதில் விழுந்தது.
"திரும்பிப் பார்த்தவளுக்கு ஒன்னும் இல்லை என்று இருவரும் தலையசைத்து சொல்ல, உள்ளே வாங்கமா என்றவர், அங்கிருந்து உள்ளே இருக்கும் கதவை திறந்து விட ,அவரோடு மூவரும் உள்ளே சென்று பார்க்க, அங்கு ஏராளமான புதிய மாடல் மெஷின்களும்,செகண்ட் ஹேண்ட் மெஷின்களும்,மிகவும் பழமையான மெஷின்களும் இருந்தது.
"இதில் உனக்கு என்ன வேணும்னு பாரும்மா என்று கடைக்காரர் சொல்ல சரிங்க ஐயா என்றவள், ஒவ்வொரு மெஷினாக பார்த்துக் கொண்டே சென்றாள் தாமரை.சிவா, உன் அக்கா பார்த்துட்டு வரட்டும் வாடா நாம வெளியில இருக்கலாம் என்க,சரி மாமா என்றவன், அக்கா நீ மெஷினை பார்த்துட்டு வா நாங்க வெளியில இருக்கோம் என்று சொல்லி விட்டு கதவை திறந்து இருவரும் வெளியே சென்றனர்.
"அரை மணி நேரம் சென்றது. கதவை திறந்து வந்தவளிடம் என்னமா உனக்கு எந்த மிஷின் வேணும்னு பாத்துட்டியா என்று கேட்க, பாத்துட்டேன் ஐயா என்று சொன்னவளிடம், வந்து காட்டும்மா என்று சொல்லி குடோன் உள்ளே சென்றவருக்கு மெஷினை காட்ட, இதோட விலை 7500 என்றவர்,இரண்டு வருஷத்து யூஸ் தான், ஆனால் புதுசு போலவே இருக்கு பாரும்மா என்றார்.
அவர் சொன்னதும் உண்மைதான். அதைப் பார்த்தால் இரண்டு வருடத்தின் மெஷின் போல தெரியவில்லை.புத்தம் புதுசாகத்தான் இருந்தது. அதிகமாக யூஸ் பண்ணவில்லை என்று பார்த்த உடனே கண்டுபிடித்து விட்டாள் தாமரை. சரிங்கைய்யா,விலையை குறைத்து சொல்லுங்கள் என்றவளுக்கு, நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன், இனி நீங்க தான் சொல்லனும்மா என்றார் அவர்.
"அஞ்சு 500 போட்டுக்கொள்ளுங்கள் என்றவளுக்கு, ரொம்ப விலைய குறைக்கிறியேம்மா என்றவர், இன்னும் 500 சேர்த்து ரவுண்டா குடுத்துடும்மா என்றவருக்கு, பரவாயில்ல எல்லாம் கட்டுபடி ஆகும் கொடுங்கள் என்றாள். சில நொடி யோசித்தவர், சரி மா காலையிலே முதல் வியாபாரம். உன்னை விடவும் எனக்கு மனசு வரலை. நீ கேட்ட விலையிலேயே தரேன் என்று சொன்னவர், வெளியே நின்ற கடைப்பையனை கூப்பிட்டு,
மெஷினை காட்டி, பேக் பண்ணி எடுத்துவர சொன்னார்.
" மெஷினின் விலையை கேட்டு,
அம்மா கொடுத்த பணத்தை எடுத்துக் கொடுத்தான் சிவா.அதை வாங்கியவர், மாஷா அல்லாஹ் என சொல்லி டிராவில் போட்டுக்கொண்டு, அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தார்.
" அவரிடமே நல்ல துணி மெட்டீரியல் எங்கு கிடைக்கும் என தாமரை கேட்க, தனக்கு தெரிந்த கடையின் பெயரை சொன்னவர், அதும் எங்களுடைய கடை தான் நீங்க போய் சொல்லுங்க சாதிக் பாய் அனுப்புனாங்கன்னு நான் போன்ல பேசிக்கிறேன் என்றார் சாதிக் பாய்.
அப்போ,முதல்ல துணி மெட்டீரியல், நூல் கண்டு எல்லாம் வாங்கிட்டு வந்துரலாம். பிறகு, இந்த மிஷினை எடுத்துக்கலாம் சிவா என்றவள், இது ஓகே தானே மாமா என வளவனிடம் கேட்க, அவள் மாமா என்று கூப்பிட்டதிலேயே இறக்கையின்றி ஆகாயத்தில் பறப்பதை போல உணர்ந்தான் வளவன்.
"மேலும் சிறிது நிமிடம் அழுத தேவி,எழுந்து தனது போனை எடுத்து கதிர் நம்பருக்கு அழைத்தாள்.மூன்று முறை அழைத்தும் அவன் எடுக்கவே இல்லை.மீண்டும் அவன் நம்பருக்கு கால் பண்ண,நாலாவது கால் அட்டென்ட் பண்ணியவன், சொல்லு தேவி என்ன விஷயம்? என்று கேட்க,மாமா நான் உயிரோடு இருக்கனுமா?, இல்லை வேண்டாமா?.
"என்ன முட்டாள் தனமாக பேசிட்டு இருக்க? எனக்கு வேலை இருக்கு சொல்லு,என்ன விஷயம் என்க, நீங்கள் எனக்கு இன்னைக்கு ஒரு பதில் சொல்லியே ஆகணும் என்றாள்.
"நாலு வருஷமா உனக்கு பதில் சொல்லிக்கிட்டு தான் இருக்கேன், இன்னும் என்ன பதில் என்கிட்ட எதிர்பார்க்கிற நீ என்றவன், பொண்டாட்டியா ஒரு போதும் உன்னை என்னால் நினைத்து பார்க்கவே முடியாது.உன்னால முடிஞ்சதை நீ பார்த்துக்கோ என்று சொல்லி கட் பண்ணியவன், பிறகு தனது போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டான்.
"மீண்டும் அவன் நம்பருக்கு அவள் கால் பண்ண சுவிட்ச் ஆஃப் சுவிட்ச் ஆஃப் என்ற குரல் தான் கேட்டது.மகளின் அறைக்கு வந்த வசந்தி,தேவி சாப்பிட வா என்க சாப்பாடு ஒன்னு தான் இப்போ எனக்கு குறைச்சலென்றாள்.
வீணாக மனசுல ஆசையை வளர்த்து கிட்டது நீ.அந்த தம்பிக்கு இஷ்டம் இல்லைனு தெரிஞ்சும் அந்த தம்பி தான் வேணும்னு அடம் பிடிப்பது உன் தப்பென்கும் அம்மாவை முறைத்து பார்த்தவள்,நீ எல்லாம் ஒரு அம்மாவா?..
"மகளுக்கு பிடிச்ச வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கனும்னு நினைக்காமல் அந்த மனுஷனுக்கு சப்போர்ட் பண்ணி பேசிட்டு இருக்கியே?
நீ மட்டும் ஆசைப்பட்டா போதாது.கதிர் தம்பிக்கும் இந்த எண்ணம் இருக்கனுமே, விருப்பமில்லாமல் கட்டிக்க யாருக்கு தான் பிடிக்கும்.
நீ ஆசைப்பட்டதும் வாங்கி கொடுக்க இது ஒன்றும் கடையில் விக்கின்ற பொருள் கிடையாது வாழ்க்கை உன்னோட விருப்பம் மட்டும் முக்கியம் கிடையாது என்றவர் ஒழுங்கா வந்து சாப்பிடு, இல்லை பட்னி கிடனு அங்கிருந்து சென்றார்.
"வயலில் நாற்று நடுபவர்களுக்கு , நாற்றுக்கட்டை எடுத்து வீசிக்கொண்டிருந்தவனின் சிந்தனைகள்,செல்லை ஆப் பண்ணி வச்சாலும் கிறுக்குத்தனமா எதையாவது செஞ்சு நம்ம உயிரை வாங்கிட போறாளோ?என்று தோன்றிக்கொண்டே இருந்தது.
"கடந்த சில நிமிடமாக பேரனின் முகத்தை கவனித்து கொண்டிருந்த பிரகாசம் என்னாச்சு இவனுக்கு? என யோசனையானார்.சரி,கத்திரிக்கா முத்தினால் கடைக்கு வந்து தானே ஆகணுமென்று முணுமுணுத்தவர், நடவை கவனிக்க தொடங்கினார்.
"சில பட்டத்தில் ஒவ்வொரு நாற்றுக்கும் அதிக இடைவெளி இருப்பதை கண்டு, எம்மா ரெண்டு ஆளு நடந்து போவலாம் போல,இன்னும் கொஞ்சம் நெருக்கி நடுங்கம்மா என பிரகாசம் சொல்ல, மாமனுக்கு கண்ணு நல்லா தெரியுதானு எங்களுக்குள் சின்ன போட்டி,அதான் சோதிச்சோம் மாமா என சொல்லிக்கொண்டே நாற்றை சேற்றில் நட்டார் நடுத்தர வயது உள்ள பெண்மணி ஒருவர்.
அதுசரி.... என்றவர்,உங்க அத்தைகாரி கிட்ட இந்த கேள்வியை கேளுங்கம்மா என்று சிரித்தார்.ம்ம்.அத்தை தானே, நல்லா சொல்லுவாங்க மாமா என்றார் இன்னொரு பெண்மணி.
"கதிருக்கு அவர்கள் பேசுவது எதுவும் காதில் விழவில்லை.அவன் சிந்தனைகளோ தேவி சொல்லியதிலே இருக்க,ஒரு கட்டத்தில் கையிலிருந்த நாற்று முடியை அப்படியே சேற்றில் போட்டு விட்டு கரையில் ஏறி,மரத்தடியில் தொங்கிக் கொண்டிருந்த தனது சட்டை பாக்கெட்டில் இருக்கும் செல்போனை எடுத்து ஆன் பண்ணியவன்,தேவ் நம்பருக்கு அழைத்தான்.
வண்டியில் சென்று கொண்டிருந்த தேவ்க்கு,பாக்கெட்டில் ஒலிக்கும் செல்போன் சத்தம் கேட்க,ஓரமாக நிறுத்தி விட்டு,யார் என்று பார்க்க அதில் கதிர் என்று வந்தது.
பின் அட்டென்ட் பண்ணி சொல்லுங்க மச்சான் என்க,மாமா எங்க இருக்கீங்க என்றான் கதிர்.டவுனுக்குதான் போறேன் மச்சான் சொல்லுங்க என்றான் தேவ்.
"பிறகு,தேவி போன் பண்ணி சொன்ன விஷயத்தை சொல்ல,அதைக்கேட்டவன், நீங்கள் இதை பெருசா எடுத்துக்காதீங்க மச்சான்,நான் பார்த்துக்கிறேன் என்று சொல்லி அழைப்பை கட் பண்ணியவனுக்கு தங்கையின் மீது கட்டுக்கடங்காமல் கோவம் வந்தது.முதல்ல இதுக்கு ஒரு முடிவு கட்டணும் என்று சொல்லியவன், வண்டியை திருப்பி வீட்டை நோக்கி சென்றான்.
"தேவ் கிட்ட விஷயத்தை சொல்லியவனோ,மீண்டும் செல் போனை பாக்கெட்டில் போட்டு விட்டு, தூரத்தில் நடக்கும் வேலையை பார்க்க, அங்கே ஆட்கள்,அண்டை வெட்டிக்கொண்டிருப்பது தெரிந்தது..
"பின்னர்,மீண்டும் நாற்று எடுத்துப்போடும் வேலையை தொடர்ந்தான்.நடவு நடும் பெண்களோ, பிரகாசம் தாத்தாவிடம் வம்பு இழுத்துக்கொண்டே வேலையை செய்ய,அவரும் அவர்களுக்கு சரிசமமாக பேச்சு கொடுத்துக்கொண்டிருந்தார்.
"உச்சியில் வெயில் ஏறும் போது, அனைவருக்கும் டீ யும், வடையும் முத்து எடுத்து வர,வேலை செய்து கொண்டிருந்த பெண்களெல்லாம் நடவு வயலுக்கு பக்கத்தில் ஓடும் சிறு வாய்காலில் கை,கால்களை கழுவி விட்டு,மரத்து நிழலில் அமர,ஒரு முதிய பெண்மணியோ அனைவருக்கும் டீ மற்றும் வடையை பகிர்ந்து கொடுத்தார்.
"சரிப்பா,நான் போய் அண்டை வெட்டுறவங்களுக்கு கொடுத்து வரேனென்று சொல்லியவன்,அங்கு வேலையாட்களுக்கு தேவையானதை எடுத்து போய் கொடுத்து விட்டு,இதுவரை அவர்கள் செய்த வேலையையும் கவனித்து விட்டு இங்கே வந்தவன் அவனது பங்கை எடுத்து சாப்பிட்டான்.
"மேலும் சிறிது நிமிடங்கள் ஓய்வு எடுத்த பெண்கள்,மீண்டும் எழுந்து போய் வேலையை தொடர்ந்தனர்.மரத்தின் நிழலில் உட்க்கார்ந்திருந்த பிரகாசத்திடம்,அப்பா ஒரு விஷயம் என்றார்.