• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
346
கதிர் வீடு:

வழக்கமாய் படுத்ததும் உறங்குபவனுக்கு,இன்று ஏனோ எள்ளளவும் உறக்கம் வருவது போல தெரியவில்லை.தன்னை மோதி சென்றவளை பற்றியே யோசித்துக் கொண்டிருந்தவனோ மெல்லிய இரவு விளக்கின் வெளிச்சத்தில் நடந்து சென்று,சற்று நேரத்திற்கு முன்னர் மர பீரோவில் வைத்த அந்த செயினை எடுத்து வந்தவன் மீண்டும் கட்டில் மீது அமர்ந்து கொண்டு,கண் முன்னால் இருக்கும் செயினை பார்த்தவனுக்கு இதற்கு சொந்தமானவள் யார் என்ற கேள்வியே தொடர்ந்தது.

"இரவு விளக்கின் வெளிச்சத்தில் அந்த டாலர் சரியாக தெரியாததால், அருகிலிருக்கும் சுவிட்ச் பாக்ஸில் லைட்டை ஆன் பண்ணியவன்,இடது உள்ளங்கையில் வைத்துக்கொண்டு மீண்டும் அந்த செயினை பார்க்க, இப்பொழுது அது வித்யாசமாக தெரிந்தது.

பின் பார்வையை கூர்மையாக்கி அந்த டாலரை பார்த்தவனுக்கு,அதன் கலை நுட்பம் ஆச்சர்யத்தை தந்தது. சிறுதானியமான வரகு அரிசியால் அதில் தாமரை வடிவமும்,மற்ற இடங்களில் கேழ்வரகை கொண்டு நிரப்பட்டிருந்தது.நிச்சயமாக இதை உருவாக்கியவர் பெரும் ரசனைக்காரவங்களென்றான்.

"தன்னை அறியாமல் அந்த டாலரின் மேல் தன் உதட்டை பதித்தவன்,அடியேய்....யார்டி நீ?,எங்கே இருக்கிறடி?இப்படி என்னை புலம்ப வச்சிட்டியேடி என்று சொல்லிக் கொண்டிருந்தவன்,தன் மேல் அவள் விழுந்த போது,அவன் உடலில் மின்சாரம் தாக்கிய போல அதிர்வு வந்ததை நினைத்து பார்க்க ஒரு விதமான சிரிப்பு வந்தது.

"கதிர் பொதுவாகவே யாரிடமும் பேச மாட்டான்".அதும் முறைப்பொண்ணுங்கள் என்றால் சொல்லவே வேண்டாம்.பட்டும் படாமலும் பதில் சொல்வதே தேவிக்கு மட்டும் தான்.

"பின் லைட்டை ஆப் பண்ணியவன், அந்த டாலரை நெஞ்சில் மீது வைத்துக்கொண்டு,அவளை பற்றி யோசித்தான்.ஆளு அவ்வளவு எடையா இல்லை,பின்ன எப்படி அவள் மோதுன வேகத்தில் நாம கீழ விழுந்தோம் என சிந்தித்தவனுக்கு,அவள் இடையில் தனது கை பட்ட போது இருந்த மென்மையை கண்ணை மூடி நினைவில் கொண்டு வந்து கிறங்கியவன்,எப்போ உறங்கினான் என்று தெரியவில்லை.

"வழக்கம் போல் எழுந்தவனுக்கு கண் எரிவது போல இருக்க, அறையிலிருக்கும் கண்ணாடியில் பார்க்க,கண்கள் இரண்டும் சிவந்திருப்பது தெரிந்தது.பின்,குளித்து தயாராகி கீழே வந்தவன்,தம்பி இவ்வளவு சீக்கிரம் கிளம்பி இருப்பதை வித்தியாசமாக பார்த்தான் .

"அண்ணனும் தன்னை பார்பதை கண்டவன்,அடப்பாவி! சண்டாளா😡 என தனது அத்தை மகனை மனதிற்குள் திட்டிய வளவன்,ஏதாவது சொல்லி சமாளிடா, இல்லை என்றால் அப்பாயி உன்னை ஒரு வழி பண்ணிடும் என்று முணுமுணுத்தவன்,கொஞ்சம் வேலை இருக்கு அதனாலதான் சீக்கிரம் கிளம்பிட்டேன்.

"அப்பொழுது,சமையல் அறையில் இருந்து டீ எடுத்துக் கொண்டு வந்த செல்வி,என்னடா அதிசயம்!,ஆனால் உண்மை என்று வளவனை பார்த்து சொல்ல,சுண்டெலிக்குலாம் கொடுக்கு முளைக்கும்னு கனவா கண்டேன்.

"ஏய் அண்ணா,சமாளிக்காத சமாளிக்காத.இவ்வளவு சீக்கிரம் நீ எங்க கிளம்பிட்ட?,செகண்ட் ஷிப்ட் என்றாலே காலை பத்து மணி என்பது உனக்கு மிட் நைட் ஆச்சே என்க,மனுஷன் கொஞ்சம் சீக்கிரம் கிளம்பிட்டேன்.அது பொறுக்கலையா உங்களுக்கு என்றவன்,அம்மாஆஆ டீ குடுமா என்று குரல் கொடுத்துக் கொண்டே அங்கிருந்த டைனிங் சேரில் அமர்ந்தான்.

"வயலுக்கு சென்ற பிரகாசமும், முத்துவும் உள்ளே வர,அவர்களுக்கு நீராகரம் கலந்த மோர் தண்ணியும், மகன்களுக்கு டீயும் எடுத்து வந்து சீதா கொடுத்தார்"

"வளவனை பார்த்த பிரகாசம்,என்ன பா காலை ஷிப்ட்டா என்க,இல்லை பா, பேக்டிரியில் கொஞ்சம் பெண்டிங் வேலை இருக்கு,அதை முடிக்கலான்னு தான் என்க,ம்ம் சாப்பாடு ரெடியா?என மனைவியை பார்த்து கேட்க, இல்லைங்க என்றார்.

"காலையிலேயே வெறும் வயித்தோட அனுப்புறியே அறிவு இருக்கா,இல்லையா?என மனைவியை சத்தம் போட, அதற்கு வளவனோ அப்பா,நான் காலையிலே கிளம்பிடுவேன்னு அம்மாவுக்கு தெரியாது என்றான்.

"அதைக்கேட்டு ஓஓஓ என்றவர்,இரு எதாவது உங்கம்மா செஞ்சி தருவா சாப்பிட்டு கிளம்பு என்றவர்,தன் தாய் வள்ளி இருக்கும் பக்கம் திரும்பி,அம்மா கண்ணன் மச்சான் போன் பண்ணிருந்தார்.இன்னும் கொஞ்ச நேரத்தில் வீட்டுக்கு வரேன்,ஏதோ பேசனும்னு சொன்னாங்க.

"நேற்று நாம வயல்ல இருந்ததால் வந்து பார்த்திட்டு போய் விட்டதாக சொன்னார் என்க,அதைக்கேட்டு என்னவா இருக்கும் என வீட்டில் உள்ளவர்கள் யோசித்தனர்.

அடுப்பங்கறைக்கு சென்ற சீதா,இட்லி ஊத்தி அடுப்பில் வைக்க,ராதா சட்னியை தாளித்து முடித்து விட்டு, சாம்பாருக்கு தயார் செய்து,அதை அடுப்பில் வேக வைத்தார்.

"கால் மணி நேரத்தில் காலை உணவு தயாராக,வீட்டில் உள்ளவர்களுக்கும் பரிமாற,அவர்கள் சாப்பிட்டு முடிக்கவும், அங்கு கண்ணன் தனது மனைவி வசந்தியோடு வரவும் சரியாக இருந்தது.

"வணக்கம் மாப்பிள்ளை என சொல்லிக்கொண்டே உள்ளே வந்தவரை,வாங்க மாமா,வாம்மா வசந்தி என்றார்கள்,பெருமாளும், முத்துவும்.வரோம் என்று சொல்லியவர்கள்,உள்ளே வந்து சேரில் அமர்ந்தனர்,பின்னர் ஒரு முக்கியமான விஷயம் பேசிட்டு போலானு தான் வந்தோம்.

"அப்படியா,சொல்லுங்க மச்சான் என்ற பெருமாளுக்கு,பொண்ணோட கல்யாண விஷயம் பற்றி தான் என தயங்க, என்னா நம்ப தேவிக்கு இடம் அமைஞ்சிட்டா?,நல்ல விஷயம் தானே மச்சான்,அதுக்கு ஏன் தயங்குறீங்க என்க,அதைப்பற்றி தான் பேசனும்.

"எதா இருந்தாலும் சொல்லுங்க மாமா என்று முத்து சொல்ல,ஒரு சிரிப்பை உதிர்த்தவர்,தேவிக்கு நம்ப கதிரை தான் புடிச்சிருக்காம் என்று கண்ணன் சொல்லவும் அதைக்கேட்டவர்கள், என்னாஆஆ என்று அதிர்ச்சியாகினர், அங்கிருந்த கதிரை தவிர.

"பெருமாளோ கண்ணனை பார்த்து நீங்க என்ன சொல்றீங்க மாமா?என்க,ஆமாம் மாப்பிள்ளை.நேற்று தான் இந்த விஷயத்தை சொல்லுச்சி,கட்டுனா கதிர் மாமாவை தான் கட்டுவேன் இல்லை என்றால் கல்யாணமே வேண்டானு சொல்லுது.

"ஓஓஓ என்றவர் திரும்பி மகனை பார்க்க,மாமா எனக்கு தேவிய கல்யாணம் பண்ண விருப்பம் இல்லை, நீங்க வேற இடம் பாருங்கள் என்று பட்டென்று சொல்லி விட்டான். அதைக்கேட்டவருக்கு உள்ளுக்குள் திக்கென்றது.கல்யாணத்தை வைத்து எவ்வளவு பிளான் போட்டோம் மனசுக்குள்,எல்லாம் இவன் கெடுத்துருவான் போலையே.

"கதிரு...என்று கூப்பிட,இத பத்தி பேச வேண்டாம் மாமா.எனக்கு இஷ்டம் இல்லைனு உங்க பொண்ணு கிட்ட பலமுறை சொல்லிவிட்டேன் என்றவன், அப்பா நான் வயலுக்கு போறேன் நீங்க வந்துருங்க என்று சொல்லி விட்டு அங்கிருந்து வெளியே சென்று விட்டான்.

"மாப்பிள்ளை,நீங்க எதுவுமே சொல்லாம இருக்கீங்களே என்றவருக்கு,என் பேரனுக்கு விருப்பம் இல்லாதது இந்த வீட்ல நடக்காது கண்ணா என்றார் வள்ளி பாட்டி.அம்மா சொல்றதும் சரிதான்.பிள்ளைகளுக்கு அவரவர் விருப்பப்படி கல்யாணம் பண்ணனும்.

"வாழ போறது அவங்க தான். அவங்களுக்கு இஷ்டம் இல்லாததை செஞ்சு வைக்க எனக்கும் கொஞ்சம் கூட விருப்பமில்லைனு பெருமாளும் சொல்லி விட்டார் .

"இனியும் அவர்களிடம் சம்மதம் கேட்டு எதிர்பார்ப்பது வேஸ்ட் என்பது கண்ணனுக்கு நன்கு புரிந்து விட்டது. சரிங்க மாப்பிள்ளை,நாங்க போயிட்டு வரோம் என்று வீட்டை நோக்கி சென்றார்கள்.

"அவர்கள் சென்று சிறிதா நிமிடம் வரைக்கும் வீடு அமைதியாக இருந்தது. பிறகு பாட்டியே வாய் திறந்தார்.யாரு வீட்டுக்கு யாரு மருமகளா வர்றது என்க,என்னம்மா சொல்ற நீ என்று முத்து கேட்க,பின்ன,சின்ன வயசுல இருந்து அந்த தேவியை பார்த்துக்கிட்டு தானே இருக்கோம் அடக்கம்னா கடையில் எங்க விக்குதுன்னு கேட்கிறவ.

"எல்லாத்துக்கும் பிடிவாத குணம். அப்படியே,அவ அப்பனையும், தாத்தவையும் உரிச்சு வச்சு பிறந்து இருக்கிறாள்.அவ என் வீட்டுக்கு மூத்த மருமகளா வருவதா?என்று கோவமாக கேட்டார் மகனிடம்.

"நானும் வேறு ஏதோ ஒரு விஷயம் தான் சொல்ல வராங்கனு எதிர்பார்த்தேன்டா. நம்ம வீட்டுக்கு சம்பந்தம் எடுத்துட்டு வருவாங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை என்று பெருமாள் தனது தம்பியிடம் சொல்ல,அவங்க ஆசைப்படுவாங்க,நம்ம பிள்ளைக்கு விருப்பம் இல்லாம எப்படி முடியும் ணா? .

மாரியாத்தா என் பேத்தி தான் இந்த வீட்டுக்கு மருமகளா வரணும் அதுக்கு நீ தான் அருள் புரியணும் என்று "பாட்டியம்மாவோ தன் மனதிற்குள் மானசீகமாக வேண்டுதலை வைத்தார்.

"சரிப்பா நான் போயிட்டு வரேன் என்று சொல்லி வெளியே வந்த வளவன், தனது வண்டியில் ஏறி தெருவினுள் சென்றவன்,சிறிது தூரம் சென்று வண்டியை ஒரமாக நிறுத்திவிட்டு சிவாவிற்கு கால் பண்ணினான்.முதல் அழைப்பு கட் ஆகியது இரண்டாம் அழைப்பு ஏற்கப்பட்டது.

"டேய்...நான் ரெடியாயிட்டேன்,நீங்க ரெண்டு பேரும் எங்கே இருக்கீங்க?,நாங்களும் ரெடி ஆயிட்டோம் நீங்க வந்து கிட்டே இருங்க, நம்ம தெரு மூலையில் ஜாயின் பண்ணிக்கலாம் என்கவும் ஓகே டா என்று கட் பண்ணி விட்டு,வண்டியை ஸ்டார்ட் பண்ணினான்.

"சொன்னப்போலவே இருவரும் ஜாயின் பண்ணிக்கொண்டு டவுனை நோக்கி, இரண்டு வண்டியில் மூவரும் பேசிக் கொண்டே சென்றனர்.அடேய் உன்னால் இன்றைக்கு என் மானமே காத்துல பறந்துச்சுடா என்ற வளவனுக்கு,இது என்ன புதுசா மாமா என்று சிவா தனது வண்டியில் இருந்து கொண்டு சொல்ல, ஏண்டா சொல்ல மாட்டேன் நீனு என்று முறைத்துப் பார்த்தான் அத்தை மகனை.

"இருவரும் என்ன பேசுகிறார்கள் என்று புரியாததால் என்ன ஆச்சுனு?தாமரை தனது தம்பியிடம் கேட்க,காலையில் நடந்ததை பற்றி சொல்லி சிரித்தான்.
பின்னர் வளவனும் தனது வீட்டில் நடந்ததை சொல்ல சிவாவும் தாமரையும் சத்தமிட்டு சிரித்தனர்.

"அவளின் சிரிப்பை பார்த்தவனுக்கு ஒரு வித மகிழ்ச்சியாக இருந்தது உள்ளுக்குள்.அப்புறம் மாப்பிள்ளை ஒரு விஷயம் என்று வளவன் சொல்ல, சொல்லு மாமா என்ற சிவாவிற்கு, தேவியின் அப்பா,அம்மா வீட்டுக்கு வந்ததையும்,அவர்கள் வந்து பேசிய விஷயத்தையும்,அதற்கு கதிர் சொன்னதையும் சொல்ல,ஏன்,உங்க அண்ணனுக்கு எங்கேயாவது உலக அழகி பிறந்திருக்காங்களா?.

ஏன்டா டேய்...என் அண்ணனுக்கு என்னடா குறைச்சல்,கிராமத்து இளம் சிங்கம் என்று சொல்ல,அதற்கு சிவாவோ,ஆமா ஒரு குறைச்சலும் கிடையாது தான் என்று சொல்லியவன், எப்ப பார்த்தாலும் கஞ்சி போட்ட போல விரைப்பாகவே தெரியுறார்.யார்கிட்ட வசமா சிக்க போறாருனு தெரியவில்லை என்றான்.

"என் அண்ணன் காட்டாறுடா.அப்படி யார்கிட்டயும் சிக்க மாட்டார் என்று சொல்ல,காட்டறையே கைப்பிடியில் அடக்க ஆள் வரும் மாமா.அதை பார்க்க தானே போறீங்க என்று சிவா சொன்னான்.இருவரும் பேசிக் கொள்வதை கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு தனது பெரிய மாமன் மகன் கதிரை பற்றி தான் இருவரும் பேசுகிறார்கள் என புரிந்தது.

"அவ்வளவு பெரிய ஆளா அவன் என நினைத்தவள்,சிறு வயதில் பார்த்த முகத்தை நினைவு படுத்தி பார்க்க, அவன் இடது நெற்றி பக்கமிருக்கும் புருவத்தின் ஓரத்தில் இருக்கும் தழும்பு நினைவிற்கு வந்தது.மற்றபடி வேறு எதுவும் பெருசாக அவளுக்கு நினைவிலில்லை.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
346
தேவி வீடு...

"கதிர் வீட்டிற்கு பேச சென்ற பெற்றோர்கள் வருகைக்காக வாசலை எட்டி எட்டி,ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தாள் தேவி.போனவர்கள் இன்னும் வரலையே என்று வீட்டுக்கும் வாசலுக்கும் அவள் நடப்பதை தேவ் பார்த்துக் கொண்டுதான் இருந்தான். ஆனால் தங்கையை ஏதும் கேட்கவில்லை.

"சிறிநா நிமிடத்தில் கதவு திறக்கும் சத்தம் கேட்க,திரும்பி பார்த்தவள் அப்பா என்று ஓடிப் போய் தந்தையின் கையைப் பிடித்துக்கொள்ள,அமைதியாக உள்ளே போய் அங்கிருந்து சேரில் அமர்ந்து கொண்டார் கண்ணன்..

"என்னப்பா கதிருக்கு இஷ்டம் இல்லைன்னு சொல்லிட்டானா? என தேவ் கேட்க,எப்படிப்பா அங்கு நடந்ததை நேர்ல பார்த்த போலவே சொல்ற? என்று மகனிடம் கேட்டார்.அவன் பல முறை உங்க பொண்ணு கிட்ட சொல்லிட்டான் இஷ்டம் இல்லைன்னு,உங்க பொண்ணு தான் அவன இத்தனை வருஷமா தொந்தரவு பண்ணிட்டு இருக்காள்.

"ஆமாவா,இல்லையானு முதல்ல கேளுங்க என்று சொல்ல,அப்படியா என்று மகளை முறைத்துக் கொண்டே கேட்டார் கண்ணன்.அது வந்து, அது வந்து என்க,உண்மையை சொல்லு என அவர் அதட்ட,நாலு வருஷத்துக்கு முன்னாடியே மாமா இஷ்டம் இல்லைன்னு சொல்லிட்டாங்க. நானும் அவங்க மனசு மாறும் தான் இவ்வளவு நாள் காத்துகிட்டு இருந்தேன் என்று சொல்லி அழுதாள்.

"மகள் சொன்னதைக் கேட்டவர்,விருப்பம் இல்லைனு சொல்றவனை இழுத்துட்டு வந்தா கட்டி வைக்க முடியும்?,அவனுக்கு இஷ்டம் இல்லைனு சொன்னதை ஏன் சொல்லலை என கேட்டுக்கொண்டே எழுந்து நின்று மகளின் கன்னத்தில் பளாரென்று அறைந்தவர்,வரப்போற முகூர்த்தத்தில் நாங்க பார்க்கிற மாப்பிள்ளை கல்யாணம் பண்ணிட்டு குடும்பம் பண்ற வழிய பாரு.

திரும்ப போயி அவங்க வீட்ல நின்னு என்னால அவமானப்பட முடியாது என்று சொல்லி விட்டு அங்கிருந்து தனது அறைக்கு சென்று விட்டார்.

"தந்தை அறைந்ததில் அழுது கொண்டிருந்த தங்கையின் அருகில் வந்தவன்,தேவி,கதிர் பற்றி எனக்கு நல்லா தெரியும்.உன்னோட குணத்துக்கு அவன் ஒத்து வர மாட்டான், அப்பா சொல்ற போல கேளு என்க,உன் வேலையை பாரு என சொல்லி விட்டு அங்கிருந்து தனது அறைக்குள் சென்று மெத்தையில் விழுந்து கதறினாள்.

"அப்பா எப்படியாவது சம்மதம் வாங்கி விடுவார்கள் என்று தான் அவள் இவ்வளவு நேரம் எதிர்பார்த்திருந்தது. ஆனால் அவனே நேரடியாக முடியாது என்றும், அதற்கு அவன் தந்தையும் சரி என்று சொன்னதால் இனியும் இது நடக்க வாய்ப்பில்லை என்பது தேவிக்கு உறுதியாக விட்டது.

"ஆனாலும் அவனை விட அவளுக்கு மனசு இல்லை என்பதால்,பொறுத்தது போதும்டி தேவி,நீ ஆசைப்பட்ட போல கதிர் மாமா புருஷனா ஆகணும் என்றால்,இனி குறுக்கு வழியில் தான் ஏதாவது செய்யணும் என்று அவள் புத்தி யோசிக்க வைத்தது.

நீலகிரி:


"உட்காருப்பா மருது,பவி உனக்கு காஃபி எடுத்துக்கொண்டு வருவாள் என்று சொன்னவருக்கு,இருக்கட்டும் மேடம் என்றவன் சுவற்றின் மேல் சாய்ந்து நின்றான்.எவ்வளவு நேரம் தான் இப்படி நிற்ப,டியூஷன்ல தான் நான் உனக்கு டீச்சர்.இப்போ நீ படிச்சு முடிச்சு வேலைக்கு போய் சுயமா சம்பாதிக்க ஆரம்பிச்சிட்டேப்பா. இன்னும் என்ன உனக்கு பயம் என்று சிரித்தார் வேதா.

"இருக்கட்டும் டீச்சர் என்றவன், பார்வையை அந்த வீட்டினுள் சுழல விட, தாமரை அங்கு இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை,எங்கே போயிருப்பாள்?,இவ்வளவு நேரம் வீட்டுக்குள் அவள் சத்தமில்லாமல் இருக்காதே என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டான்.கடந்த ஒரு மாதமாக அவளை பார்க்காமல் இருப்பதே அவனுக்கு பெரும் கவலையாக இருந்தது.

"15 வருடங்களுக்கு முன்பு அவர் நர்ஸாக அந்த மலை கிராமத்திற்கு வேலைக்கு வரும் போது,இப்போது இருக்கும் அளவிற்கான வசதிகள் இல்லை.கருங்கற்களை அடுக்கி, அதன் மேல் காட்டு மூங்கிலை அரணாக போட்டு, தென்னை ஓலையால் மேலே மூடியிருந்தது.

"பெரும்பாலானர்கள் அங்கு வேலைக்கு வரவே பயந்தார்கள்.வேதா மட்டுமே அங்கு செல்ல விரும்பினார்.அவர் இங்கு வந்த பிறகு தான், பிள்ளைகளுக்கான பள்ளிக்கூடம், மருத்துவ உதவிக்கு சின்ன வேன் என்று பல வசதிகள் அவர் மூலமாய் வந்தது.

"இங்கிருக்கும் சூழ்நிலையை அரசாங்கத்திற்கு விரிவாக எழுதி, தொடர்ந்து லெட்டர் போட்டுக்கொண்டே இருந்தார். அதற்கு சில நாட்களில் நல்ல பதிலும் கிடைத்தது.அன்று ஓலை வேய்ந்த இடமோ இன்று சிமெண்ட் கட்டிடமாய் எழுந்து,சுற்றிலும் பசும் சோலை போல் காட்சியளிப்பதற்கு முதல் காரணி வேதாவே.

"மருதையன் கோயம்புத்தூரில் இருக்கும், பிரபலமான டெக்ஸ்டைல் கம்பெனியில் வேலை பார்க்கிறான். அவர்கள் இனத்திலே நன்கு படித்து வேலைக்கு போன முதலாம் நபர் அவன் தான்.இதற்கு முழுமுதற் காரணமே வேதாவின் முயற்சி என்பது அங்குள்ள மக்கள் அனைவருக்கும் நன்கு தெரியும்.

"மூன்று வருடங்களுக்கு மேலாக கோயம்புத்தூரில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான் மருதையன்.அவன் வாங்கிய முதல் சம்பளத்தில் வேதாவுக்கும்,அவனது அம்மாவுக்கு தான் புடவை வாங்கி கொடுத்தான்.

"இரண்டு வாரத்துக்கு ஒரு முறை தனது வீட்டிற்கு வந்து சனி,ஞாயிறு இரண்டு நாட்களும் இருந்து விட்டு திங்கட்கிழமை அதிகாலையில் கிளம்பி கோயம்புத்தூருக்கு சென்று விடுவான். பொங்கலுக்கு ஆர்டர்கள் நிறைய வந்ததால் அவனால் கடந்த ஒரு மாதமாக வர முடியவில்லை.

"ஓரளவுக்கு வேலை பளு குறைய இரண்டு நாள் கம்பெனியில் லீவு கேட்டுக் கொண்டு ஊருக்கு வந்தான். மகன் இரவு வந்துவிட்டது தெரிந்த பிறகு தான் மருதுவின் அப்பா மூக்கன் மகனுக்காக முயல் வேட்டைக்குச் சென்றார்.

"மருதுக்கு ஒரு தம்பி, தற்போது அவன் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறான்.காலையிலேயே மருதுவின் அம்மா மயிலா சமைத்த உணவை,நர்சம்மாக்கு கொடுத்துவிட்டு வர சொல்ல,அதை வாங்கியவன் தனது காதலியை பார்க்க ஆர்வமாக ஓடி வந்தவனுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.

"கிச்சனில் காபி போட்டுக் கொண்டிருந்தவளோ இரண்டு ஸ்பூன் மிளகுத்தூளையும்,இரண்டு ஸ்பூன் உப்பையும் அதில் போட்டு கலந்தவள், சிரித்துக்கொண்டே எடுத்து வந்து இந்தா என்று நீட்ட,அதை வாங்கி குடித்தவன் அடிப்பாவி என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு,அவளை நிமிர்ந்து பார்க்க,நண்பனின் பார்வையை கண்டு வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள் பவி.

"மிளகின் காரமும்,உப்பின் உவர்ப்பு சுவையும் அவனால் குடிக்கவும் முடியவில்லை,அதை வெளியில் துப்பவும் முடியாமல் தவித்தவனோ,ஒரு வழியாக குடித்து முடித்து கொஞ்சம் தண்ணி வேணும் என்று கேட்க,உள்ளே சென்றவள்,ஒரு டம்ளரில் எடுத்து வந்து கொடுத்தாள்.அதை வாங்கி குடித்தவனுக்கு காரமும்,உவர்ப்பும், நாக்கிலிருந்து மட்டுப்படுவது போல் தெரியவில்லை.

"வேதாவோ,பவி உள்ள போய் இரண்டு பிளேட் எடுத்துட்டு வா சாப்பிடலாம் என்று சொல்ல,சரிங்க ஆன்ட்டி என்றவள்,கிச்சனிலிருந்து தட்டும், இரண்டு கரண்டியையும் எடுத்துட்டு வர,அவளிடமிருந்து வாங்கியவர் இரண்டிலும் பரிமாறி ஒன்றை மருதையின் முன்பு நீட்ட,மேடம் நான் வீட்ல சாப்பிட்டுக்குறேன்.

நீங்க ரெண்டு பேரும் சாப்பிடுங்க என்று சொன்னவன், இனியும் மௌனமாக இருக்கக் கூடாது என்று நினைத்து எங்கே மேடம் தாமரையை காணும்? என்று எதார்த்தமாக கேட்பது போல் கேட்டான்.

"உன் தோழி ஊருக்கு போயிருக்கிறாள் பா என்று சொல்ல, எந்த ஊருக்கு? என்றான் மருதையன். எங்க ஊருக்கு தான் போயிருக்கா என்று சொல்லிய வேதாவிடம் இத்தனை வருஷமும் தாமரை அங்கு போனதே இல்லையே? என்று கேட்க,ஆமாப்பா,இந்த முறை தான் போயிருக்கிறாள் என்றவர் பவி அந்த லெட்டரை எடுத்துட்டு வந்து மருது கிட்ட கொடு.

"ம்ம் என்று,தாமரை ரூமிற்கு சென்றவள் அங்கிருந்த லெட்டரை எடுத்துட்டு வந்து மருதையனிடம் நீட்ட,அதை வாங்கி படித்தவனின் கண்கள் சந்தோஷத்தில் விரிந்தது.ஆம் தாமரையின் இத்தனை வருட கனவு பலிக்கப் போகிறதை படித்து முடித்தவன் ரொம்ப சந்தோஷமா இருக்கு மேடம் என்று சொல்ல,எல்லாம் அவளோட முயற்சி தான் என்றார்.

"பவியையும் மருதையும் பார்த்தவர் இன்னும் நீங்க சமாதானமாகவில்லை போல என்று சொல்லி தலையில் தட்டிக் கொண்டவர்,சின்ன பிள்ளைகளை விட ரொம்ப மோசமா இருக்குறீங்க.

"மேடம்,வேலை விஷயமா என்னால ஒரு மாசம் வர முடியலை.என்னமோ நான் வேணும்னு வந்து பாக்காத போல இவ கோச்சிட்டு இருக்கிறாள்,நீங்களே என்னன்னு கேளுங்க என்றான்.

"இருவரையும் பார்த்தவரின் நினைவுகள்,15 வருடங்களுக்கு முன்பு பார்த்த போல இருந்தது வேதாவுக்கு. அப்பொழுதுலாம் சின்ன சின்ன விஷயத்திற்கும் மூவரும் மாற்றி மாற்றி இப்படித்தான் கம்ப்ளைன்ட் தூக்கிக் கொண்டு வருவார்கள் அவரிடம்.

"ஹா ஹா என்று சிரித்தவரிடம், ஆன்ட்டி, வேலை தான் வர முடியலை, ஒரு போன் கூடவா பண்ண முடியலை என்று பவி குற்றப்பத்திரிக்கை வாசிக்க, இப்ப நான் வரலைங்குறதை விட,கோவை பேக்கரியில் இருந்து அவளுக்கு தீனி வாங்கிட்டு வரலை என்பது தான் பெரும் கவலையாக இருக்கும், அதான் கோபம் என்றான் மருதையன்.

"அவன் சொன்னதை கேட்டு சிரித்தவர், அப்படியா சங்கதி என்று,தனது அருகில் அமர்ந்திருப்பவளை பார்த்து விட்டு,நீ சொன்னதிலும் சந்தேகம் இல்லை தான் மருது.

ஓ இருவரும் கூட்டணியோ? என்றவள் போங்க,கோவமா நான் வீட்டுக்கு போறேன் என்று சொல்ல ஹா ஹா ஹா என்று சிரித்தவர்கள் வா பவி சாப்பிடு என்க,உங்களுக்காக சாப்பிடுகிறேன் ஆன்ட்டி என்றவள்,அவரிடமிருந்து தட்டை வாங்கி சாப்பிட தொடங்கினாள்.

"உணவின் ருசி அவளுக்கு வழக்கம்போல் மெய் மறந்து போனது. ஆம் மருதையனின் அம்மா மயிலா வைக்கும் எந்த சமையலா இருந்தாலும் அவ்வளவு ருசியாக இருக்கும்.சிறு வயதிலிருந்து அவர்கள் சமையலை இவர்கள் அதிகம் சாப்பிட்டு வளர்ந்திருக்கிறார்கள்.

"பவியோட அப்பா அம்மா பக்கத்து எஸ்டேட்டில் தான் வேலை பார்க்கிறார்கள்.அதனால் சிறு வயதிலிருந்து வேதா கூட இருந்து பழகிவிட்டாள்.தாமரையையும் பவியையும் பிரித்து பார்க்க மாட்டார் வேதா.அவளுக்கு எது வாங்கினாலும் இவளுக்கும் சேர்த்து தான் வாங்குவார்.

"அதே போல் தான் பவியின் பெற்றோர்களும்.தாமரையை அவர்கள் பிள்ளை போல தான் பார்த்துக் கொண்டனர்.அவர்கள் இருவருக்கும் காதல் திருமணம் என்பதால் பெற்றோர்கள் சேர்க்கவில்லை. மலைவாழ் மக்களும்,வேதா மற்றும் தாமரை தான் அவர்களுக்கு சொந்த பந்தம் எல்லாமே இத்தனை வருடமாக.

தற்ப்பொழுது உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் பொழுது தான்,மகன் மருமகளிடம் பேச்சு வார்த்தை வைத்துக் கொண்டிருக்கிறார்கள் பவியின் அப்பா வயிற்று தாத்தா, பாட்டி.அதும் பட்டும் படாமலுமே.

கண்மணி வருவாள்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top