Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 346
- Thread Author
- #1
கதிர் வீடு:
மாமியாரிடம் பேசிக்கொண்டே தோட்ட வேலைகளை முடித்த சீதா,அத்தை, நேரம் ஆகிட்டு வாங்க சாப்பிடலாம் என்றார்.
வரேன் தா,நீ போய் எடுத்து வை என்று சொல்லியவர்,சீவிய துடப்பத்தை முடிச்சி போட்டு,கீழே கிடக்கும் தென்னை ஓலைகள் அடுப்புக்கு தேவைப்படுமென்பதால் அதையும் அள்ளி முடிச்சிட்டு,எழுந்து சென்றவர், கிணற்றிலிருந்த வாளியில் நீரை இறைத்து கை,கால், முகத்தை கழுவிக்கொண்டு வீட்டின் உள்ளே வந்தார் வள்ளி பாட்டி.
பெருமாளும் குளித்து வெளியே வந்தவர்,சாமி ரூமிற்க்கு சென்று,சிறிது நேரம் கண்ணை மூடி வணங்கி விட்டு, தட்டில் இருந்த விபூதியை எடுத்து நெற்றியில் பட்டையை போட்டுக்கொண்டு கூடத்துக்கு வந்து சாப்பிட அமர,ராதா பரிமாறினார்.
"சீதாவோ அப்பளம் பொறித்து எடுத்து வந்தவர் கணவருக்கு வைத்து விட்டு, மாமியாருக்கும் சாப்பாடு,குழம்பு என தனித்தனியா போட்டு,வழக்கமாக அவர் உட்காரும் தூணின் அருகில் வைக்க, வள்ளி பாட்டியும் சாப்பிட அமர்ந்தார்.
"அப்பொழுது,கதிர் தனது அப்பாவிடம் நிலவனை பற்றி சொல்ல, அதைக்கேட்டுக் கொண்டிருந்த சீதா மற்றும் பாட்டிக்கும் தங்கள் வீட்டு பிள்ளையை நினைத்து பெருமையாக இருந்தது.
"ராதா சொன்னது போலவே பெருமாளும்,சின்னவன் விளையாட்டுலே இருக்கான்பா என்க,இந்த வயசுல விளையாடாமல் வேற எந்த வயசுல விளையாட சொல்லுறப்பா? என பெரிய மகனை கேட்டார் பாட்டி.
அம்மா நீயும் அவளும்(சீதா) கொம்பு சீவி,சீவி தான் இன்னிக்கு விளையாட்டு மட்டுமே உலகமென்ற நிலைமையில் வந்து நிற்கிறான் என்றார் பெருமாள்.
தம்பி,என் பேரன் அதெல்லாம் நல்லா படிப்பா.நீங்களாம் சொல்றப்போல படிக்காதவனா இருந்தால் உன் பெரியமவன் அனுப்புவான அவ்வளவு தூரத்துக்கு விளையாடப்போனு? இது ஏன் உனக்கும் அவளுக்கும் புரியவில்லை?என்றார் பெரிய மகனையும், சின்ன மருமகளையும் காட்டி.
நல்லா சொல்லுங்க அத்தை.நான் சொன்னாக்க எங்க இவங்க ரெண்டு பேரும் கேக்குறாங்க என்றார் சீதா.ஓஓஓஓ மாமியாரும் மருமகளும் ஒன்னு கூடிட்டீங்களா என்று சிரித்துக் கொண்டே சாப்பிட்டார் பெருமாள்.
"நாங்க என்னைக்கு அடிச்சிகிட்டோம் இன்றைக்கு கூடிக்க என்றவர்,வீட்டுக்கு வந்த மருமகளை மகளாக நடத்தினால் தான் அவங்களும் அம்மாவாக நம்பளை பாப்பாங்க.நாம மாமியாரா நடந்துக்கிட்டா?,அவங்க மருமகள் போல தான் நடவடிக்கையில் காட்டுவாங்க. எனக்கு ரெண்டு பேருமே மகள் தான் என சொல்லிக் கொண்டே வள்ளி பாட்டி சாப்பிட்டார்.
"அந்நேரம்...அடச்சை என்ன குடும்பம் இது?,என்னமோ நாடக கொட்டாயிக்கு வந்த போல இருக்கு,எங்கே பார்த்தாலும் கண்ணே மணியேனு அன்பு வெள்ளமா?,வாரத்தில் நாலு சண்டை நடக்கனும்,மாமியாரை பற்றி அப்பாகிட்ட சொல்லனும்,மருமகளை பற்றி மகன் கிட்ட கோலு மூட்டனும்,அப்போ தானே குடும்பம் ஜாலியா இருக்கும் என்று சொல்லிக்கொண்டே அங்கு வந்தாள் செல்வி.
மகளின் பேச்சை கேட்ட சீதா ஏண்டி உனக்கு இவ்ளோ நல்ல எண்ணம் என்று மகளின் தலையில் கொட்டினார்.அம்மா நீ இப்படி கொட்டி,கொட்டி தான் நான் கீழே போய்ட்டே இருக்கேன் என்று சொல்ல,எது நீ குள்ளமா என்று சிரித்தவர்,மகளின் தலையில் கட்டியிருக்கும் துண்டை அவிழ்த்து அவள் முடியில் உள்ள ஈரத்தை துவட்டினார்.
"இப்படி ஈரத்தோட துண்டை கட்டிக்கிட்டு வீட்டில் அலையாதடி,அப்புறம் தலை வலிக்குது, தலை வலிக்குதுனு நீ தானே புலம்பிக்கிட்டு இருப்ப என்று சொல்லிக் கொண்டே தலையை துவட்டி விட்டவர், உள்ளே சென்று,அடுப்பில் இருக்கும் நெருப்பை தூபக்காலில் எடுத்துக்கொண்டு,அதில் போடுவதற்கு சாம்பிராணியும்,உரித்து வைத்த பூண்டு தோலை எடுத்து வந்து,அங்கிருந்த வராண்டாவில் ஒரு பக்கம் அமர்ந்து விட்டு,இங்கு வந்து முன்னாடி உட்காரு செல்வி என்க.
செல்வியும் வந்து உட்கார,மகளின் நீண்ட கூந்தலுக்கு சாம்பிராணியும், பூண்டு தோலும் கலந்த புகையை காண்பித்து முடியை உலர்த்தி விட்டார்.
தாமரை வீடு...

"மகளின் பரிசை பார்த்து சந்தோஷத்தில் கவிதாவிற்கு கண்ணில் நீர் வழிந்தது.இதய வடிவில் இருக்கும் தங்க டாலரில்,கவிதாவும் அன்பழகனும் திருமண கோலத்தில் இருப்பது போல, எனாமலில் வரையப்பட்டு இருந்தது.
"இருவருக்கும் திருமணம் நடந்த போது போட்டோ எடுக்க முடியவில்லை. அதுவோ இத்தனை வருடமாகியும் மனதின் ஓரத்தில் குறையாகவே இருந்தது.அந்த ஏக்கத்தை மகள் இன்று நிறைவேற்றியதை நினைத்தே கவிதாவிற்கு ஆனந்தத்தில் வந்த கண்ணீர் தான் இது.
உனக்கு புடிச்சிருக்காமா என்ற மகளை, தோளோடு அணைத்து கொண்டு,24 வருஷமா என் மனசுக்குள்ள இருந்த கவலையை என் பொண்ணு போக்கிட்டாள் என்றவர்,மகளின் கன்னத்தை கிள்ளி முத்தமிட்டார்.
இதுக்குலாம் ரொம்ப பணம் ஆகிருக்குமே தாமரை என்ற கவிதாவிற்கு,அம்மா,நான் சம்பாரிச்ச பணத்தில் தான் வாங்குனேன்.இதை நானே டிசைன் பண்ணி செய்ய சொன்னேம்மா.
மகளின் திறமையை வேதா மூலமாக கேள்வி பட்டிருந்தவர் தற்போது நேரில் பார்க்க அம்மாவாக அவருக்கு பெருமையாக இருந்தது.ஆத்தா புண்ணியத்தில் உன் கனவு நல்ல படியா நிறைவேறட்டும்டா.
அதுக்கு இன்னும் நாலு இல்லை அஞ்சு மாசத்துக்கு மேல வெய்ட் பண்ணனும்மா.சரி சரி நல்லதே நடக்கும்னு நம்புவோம் என்றவர்,வா உள்ளே போகலாம் என்று மகளையும் அழைத்துக்கொண்டு வீட்டின் உள்ளே சென்றார்.
"தன் வீட்டில் உள்ளவர்களுக்கெல்லாம் மகள் வாங்கிட்டு வந்ததை காட்ட,அழகா இருக்குமா என்று தாமரையை அனைவரும் பாராட்டினார்கள். அப்பொழுது உள்ளே வந்த அல்லி, என்ன எல்லார் முகத்திலையும் சந்தோஷம் ஆறா ஓடுது?,என்னதுன்னு எனக்கும் சொல்லுங்க என்றாள்.
"அல்லியிடம்,தங்களுக்காய் தாமரை வாங்கிட்டு வந்த பொருட்களை எல்லாரும் காட்ட,எனக்கு? என்று கேட்டாள்.உனக்கு இல்லாததா டா என்று சொல்லி, இன்னொரு கவரை அவளிடம் கொடுத்தாள்.ஆர்வமாய் கவரை திறந்து பார்க்க,பட்டுத்துணியில் தைக்கப்பட்டிருந்த காக்ரா சோலி டிரஸ்ஸை பார்த்தவளுக்கு ரொம்ப பிடித்து விட்டது.வாவ் என்று சொல்லி அக்காவை கட்டிக் கொண்டாள்.
"தங்கள் வீட்டு பெண்ணின் கலை திறமையை கண்டு அவளை வெகுவாக பாராட்டி தள்ளினர்.ஓகே நான் தான் இன்றைக்கு சமைக்க போறேன் என்றவள்,சமையறைக்குள் சென்று என்ன பொருட்கள் இருக்கிறது என தெரிந்து கொண்டாள்.
அரிசி பருப்பு கலந்த கிச்சடியும்,அதுக்கு தொட்டுக்கொள்ள,கத்தரிக்காய், உருளை தொக்கையும் ரெடி பண்ண ஆரம்பித்தவள்,அரைமணி நேரத்தில் சமையலை முடித்து விட்டு வெளியே வந்தவள்,சாப்பாடு ரெடி என்று சொல்லி விட்டு,அப்பா உங்க கிட்ட ஒன்னு சொல்லனும்.
"மகளின் பேச்சை கேட்டவர்,சொல்லுமா என்றார் அன்பழகன்.எனக்கு தையல் மெஷின் வேண்டும்பா,செகண்ட் ஹேண்ட் இருந்தாலே போதும், அதான், வளவன் மாமாவை கூப்பிட்டு கிட்டு நாளைக்கு டவுன்ல போய் பாக்கலானு இருக்கேனென்றாள்.
"ஓஓஓ... வளவனை பார்த்தாச்சா என்றவரிடம்,காலையில் சின்னப்பு வந்தான். ம்ம் என்று சொல்லியவர்,நீ சின்ன வயசுல பார்த்திருப்பே, இப்போ உனக்கு வளவனை ஞாபகம் இருக்காது இல்லையாம்மா? என மகளிடம் கேட்டார் அன்பு( அன்பழகன்).
எனக்கு ஞாபகம் இல்லைங்கப்பா, அம்மா தான் சொன்னாங்க.சரி சரி, என்றவர் மனைவியிடம் கண்ணை காட்டி இரண்டு வீட்டு பிரச்சினை தெரியுமா என சைகையில் கேட்க,அவரோ இல்லை என்றார்.
சரி என சைகையில் சொன்னவர், போகும் போது சிவாவையும் கூப்பிட்டு போம்மா.தந்தை சம்மதம் சொன்னதை கேட்வள்,தேங்க்ஸ்ப்பா என்றாள் சிரித்துக்கொண்டே.
அக்கா... என் கிளாஸ்ல உள்ள பொண்ணுங்களெல்லாம் நீ தச்சி குடுத்த டிரஸ்ஸை நான் போட்டு போகும் போதெல்லாம் கேட்ப்பாங்கக்கா.எங்கே வாங்குன?,எவ்வளவு விலைடி?, நல்லா இருக்கேன்னு.
"அப்புறம்க்கா,அடுத்த வாரம் பொங்கல் வருதே அதுக்கு இந்த டிரஸ்ஸை போட்டுக்கட்டுமாக்கா என்ற தங்கைக்கு, போட்டுக்கோடி, இன்னும் ஒரு டிரஸ் உனக்கு ரெடி பண்ணி எடுத்துட்டு வந்துருக்கேன் டி,அதை ஸ்டிச்சிங் பண்ண தான் நாளைக்கு மெஷின் வாங்கப்போறேன்.
ஹைஐஐஐஐ... அக்கானா அக்கா தான் என தாமரையை கட்டிக்கொண்டு அவள் கன்னத்தில் முத்தம் வைத்தாள் அல்லி. தங்கையின் சந்தோஷத்தை பார்த்தவளுக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.
இப்படியே பேசிட்டே இருக்க போறீங்களா?இல்லை,ராவுக்கு சாப்ட ஏதாவது தருவீங்களா? என்க. அண்ணன் கேட்டதற்கு, முகத்தை முறுக்கி காட்டிய அல்லி, தின்னி மூட்டை, எப்போ பாரு சோறு சோறு சோறுனு தான் என்றாள்.
ஆமா.... நீ அப்படியே வேடிக்கை பார்ப்ப, நான் மட்டுமே சாப்டுவேன் இல்லையா கொரங்கு? என்றான் பதிலுக்கு சிவா. யாருடா கொரங்கு என்றவளுக்கு, உன்னை தான் டி குட்டி பிசாசு என்றான்.
தம்பி தங்கை இருவரின் வாய் சண்டையை வேடிக்கை பார்த்த தாமரைக்கு சிரிப்பு வந்தது.கலா பாட்டியோ,என்றைக்கு தான் இதுங்க இரண்டு பேர் வாய் ஓயுமோ கடவுளுக்கே வெளிச்சம் என்றார்.
இங்க பாரு அப்பாயி.... நடக்காத ஒன்றை பல வருஷமா கடவுள் கிட்ட எதுக்கு கேட்க்குற என்றான்.
அதை கேட்ட அல்லி நல்லா சொல்லுண்ணா என கூறி விட்டு , இந்தாடா ஹை பை என்று இரு கைகளை உயர்த்தி காட்ட,சிவாவும் தனது கைகளை உயர்த்தி தங்கைக்கு ஹை பை கொடுத்துக்கொண்டான்.
சரி.... வாங்க சாப்டலாம் என்ற கவிதா, உள்ளே போய்,தாமரை சமைத்ததை எடுத்து வந்து கூடத்தில் ஒரு பக்கம் வைக்க,எல்லாரும் கையை கழுவிட்டு வந்து அங்கு அமர்ந்தனர்.
தட்டில் பருப்பு கிச்சடியை போட்டு,அதன் மேல் தயிரை ஊற்றி,ஒரு கிண்ணத்தில் தொட்டுக்கொள்ள தொக்கையும், வறுத்த பச்ச மிளகாயையும் வைத்து எல்லாருக்கும் கொடுத்தாள்.
"அப்பாஆஆஆஆ என்று அல்லி இழுக்க, என்னம்மா என்ற அன்பழகனிடம், கோயில் கிட்ட பொம்மலாட்டம் போட்டுருக்காங்க,இன்னும் கொஞ்ச நேரத்தில் ஆரம்பிக்க போறாங்கப்பா, நானும் அக்காவும் போய்ட்டு வரோமே?.
"அதுலாம் ஒன்னும் வேண்டாம், சாப்ட்டு தூங்குற வேலைய பாருடி என்று கவிதா மகளை அதட்ட,கவிதா...விடு,போய் பார்த்துட்டு வரட்டும்.மறக்காமல் போனை எடுத்து போங்க என்றார்.
"சாப்பிட்டு முடித்து,சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தவர்கள்,அக்கா, வா,வா...எவ்வளவு நேரம் தான் என்று அல்லி பரபரக்க, இதோ டி என்றவள், வீட்டில் இருப்பவர்களிடம் சொல்லிக்கொண்டு மூன்றாவது தெருவில் இருக்கும் கோயிலை நோக்கி இருவரும் நடந்தனர் .
"ஊருக்குள் வித்தை காட்டுபவர்கள் வந்தால்" கோயில் முன்பு இருக்கும் மைதானத்தில் தான் நடக்கும்.
அக்கா தங்கை இருவரும் பேசிக்கொண்டே நடக்க,அவர்களுக்கு முன்னே சிலர் நடந்து செல்வது தெரிய,அங்கே தான் போகிறார்கள் என்று புரிந்தது.
" வழியில் பார்த்த சிலர்,அல்லியிடம் கூட வருவது யாரென்று கேட்க,தனது அக்கா என்றும்,ஊரிலிருந்து வந்திருக்கிறாளென்றும், வெளிநாட்டுக்கு போகப்போகிறாளென்று பெருமையாக சொல்லிக்கொண்டே வரும் தங்கையை, சின்ன சிரிப்போடு பார்த்துக்கொண்டே தாமரையும் நடந்து போனாள்.
"இரண்டு தெருவை தாண்டி மூன்றாவது தெருவிற்குள் செல்லும் போது, நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்த வளவன் தூரத்தில் நடந்துவரும் அத்தை மகள்களை பார்த்தவன்,இந்த நேரத்தில் எங்கே போகுதுங்க? என யோசித்தவனுக்கு,பொம்மலாட்டம் நினைவு வந்தது.
"இருவரும் அவனருகில் வர,எங்கே போறீங்க இரண்டு மேடமும்? என்றவனுக்கு,ம்ம்,எருமை மேய்க்க போறோம் மாமா என்றாள் அல்லி. தங்கை சொன்னதை கேட்டவளுக்கு சிரிப்பு வந்தது.
" ஓஓஓ என்றவன்,எருமை மேய்க்க தேவையான அத்தனை தகுதியும் உனக்கு இருக்குடி என சொல்லி சிரிக்க, யோவ் மாமா என்ன கொழுப்பா? என்றாள் அல்லி.ஆமாண்டி,நீ ஆக்கி போட்டதை சாப்பிட்டு கொழுப்பு ஏறிடுச்சி என்றவனுக்கு,அதுக்கு வேற ஆளை பாருய்யா என்றாள்.
" அத்த மகள் இருக்கும் போது நான் ஏண்டி வேற ஆளை பார்க்கனுமென்று, ஓரக்கண்ணால் தாமரையை பார்த்து சொன்னவனுக்கு,நினைப்பு தான் பொழப்பை கெடுக்குமாம் மாமா என்றவள்,பொம்மலாட்டம் பாக்க தான் போறோம் என்க,சரி பார்த்து போங்க என்றான்.
" தாமரையோ அவனை பார்த்து சின்ன தலையசைப்போடு கடந்து செல்ல, அவனருகில் வந்த நண்பர்கள், யாருடா அந்த புள்ளை, புதுசா இருக்கு?என கேட்க,முன்னே நடந்து செல்பவளை ரசித்து பார்த்து கொண்டே,என் அத்த மக தாமரைடா என்றான்.