• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
சதாரா!

கூரை வீட்டையும், அதை சுற்றி இருக்கும் பூஞ்செடிகளை, அவ்வளவு கலைநயத்தோடு தத்ரூபமாக வரைந்திருந்தாள்.


ஓவியத்தின் மேல் அவளுக்குள் இருக்கும் ஈடுபாட்டை,இருவரும் புரிந்து கொண்டனர்.

நீ என்னவாக வேண்டுமென்று தாமரையிடம் வினி கேட்டாள். தாமரையோ, எல்லாரும் என் டிரஸை போடனுமென்றாள்.

அவள் சொன்னதற்கான அர்த்தம் புரிந்த வினி, வாவ்... ஏஞ்சல் நீ டிசைனராக வேண்டுமா என்க, ம்ம் என்று தலையாட்டினாள்.

ஓகே, முதலில் பள்ளி படிப்பை முடி, அப்பொழுதும் உனக்குள் இந்த ஆசை இருந்தால், அது சம்பந்தமாக மேற் படிப்பு படிக்கலாமென்று வினி சொல்லியது, தாமரையின் மனதில் நன்கு பதிந்து விட்டது.

வினி இந்தியாவிற்கு வந்து, இதோடு ஆறு மாதம் ஆகிவிட்டது.

இன்னும் ஒரு வாரத்தில் அவளுக்கான விசா முடியப்போகிறதென்று, எம்பசியில் இருந்து கால் வந்தது.

பின்னர் இருவரிடமும் சொல்லிக்கொண்டு மனதே இல்லாமல் லண்டனிற்கு வந்தவள், தனது சொத்துக்களை விற்று விட்டு, சிங்கப்பூருக்கு வந்தாள்.

அங்கிருந்த கல்லூரி நண்பன் ஒருவன் மூலயமாய்,சிறு இடத்தில் வி.வி.என்ற பெயரோடு பொட்டிக்கை ஆரம்பித்தாள்.
அவளின் கலெக்க்ஷன் ஒரு சில மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

பிறகு அங்கு உள்ள பலருக்கு அவளின் டிசைன் பிடிக்க, சில நிறுவனங்கள் தங்களுக்கு டிசைன் பண்ணித்தரச்சொல்லி வந்தனர்.ஆனால் யாருக்கும், தான் தான் வி.வி.என்பதை தெரிவிக்கவில்லை.

சிறியதாக ஆரம்பித்த பொட்டிக், ஐந்து வருடத்தில் அசூர வளர்ச்சியடைந்தது. சிங்கப்பூரை தாண்டி பலருக்கும் வி.வி.யின் ஆடைகள் விருப்பமானது.

ஐந்து வருடங்களுக்கு பிறகு முதல் முறையாக பேஷன் ஷோ காம்பிடேஷனில் வி.வி.யின் ஆடைகள் அறிமுகமானது.

அவரின் நேர்த்தியான வடிவமைப்பும், ஆடைகளின் நிறமும் கண்டு,சிறந்த டிசைனராக வி.வி தேர்ந்தெடுக்கப்பட, உலகம் முழுவதும் ஒரே நாளில் பிரபலமானார்.

அன்றிலிருந்து தொடர்ந்து வி.வி. தான் பெஸ்ட் டிசைனர் அவார்டை வாங்குவது. ஆனால்,அவார்டு பங்ஷனுக்கு தனது நண்பனை தான் அனுப்பி வைப்பார்.

எவ்வளவோ பத்திரிக்கையாளர்கள் கேட்டு விட்டனர்,யார் அந்த வி.வி என்று?, ஆனால் இதுவரை யாருக்கும் அவரை தெரியாது.

என்னுடைய பிறந்தநாளுக்கு அவர் அனுப்பும் டிசைனிங் புக்ஸ் தான் கிப்டா வரும்.

பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்வானதும் நான் பேஷன் டிசைனிங் படிக்க போவதாக சொல்ல, ஆல் த பெஸ்ட் என்று சொல்லியவர் படித்து முடிக்கும் வரை என்னிடம் பேசவில்லை.

அந்த வைராக்கியத்தை மனதில் வைத்துக்கொண்டு வகுப்பில் பெஸ்ட் ஸ்டுடண்டாக படித்து வெளியே வந்தேனென்றவள், சிறிது நிமிடம் தயங்கிவிட்டு, பின் சீமக்கரைக்கு சென்றதிலிருந்து,இங்கு வந்தவரை அனைத்தையும் சொல்லி முடித்தவளோ,சத்தமின்றி அழுதாள்.

தாமரை சொல்லிய விஷயங்களையெல்லாம் கேட்டவருக்கு, அதிர்ச்சியில் என்ன பேசுவதென்றே தெரியவில்லை.

அம்மாடி தாமரைனு அவள் தோளில் தட்டிக்கொடுத்தவர், காரணம் இல்லாமல் கடவுள் எதையும் நம்ம வாழ்க்கையில் நடக்க விடமாட்டார்.
இதை என் வாழ்க்கை அனுபவத்தில் புரிந்து கொண்டேன்.

படித்த பெண், ஆனாலும் உனக்குள் இருக்கும் நம் கலாச்சார சுவடு உன்னை விடாது.அதை நீயே உணர்ந்திருப்பாய். என்ன தான் கோவத்தில் நீ தாலியை கழட்டி வீசியிருந்தாலும், உன்னால் அதை மறந்து வேறு வாழ்க்கைக்குள் போக முடியாதுமா.இது தான் நம் தமிழ் பெண்களின் பெருமை.

கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷனென்று, முன்னோர்கள் சும்மா ஒன்றும் சொல்லி சொல்லவில்லை.
வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தில், ஏதோ ஒன்றை நோக்கி நம்மை இழுத்துக்கொண்டு போகின்றது.

என்னதான் அதிலிருந்து நாம் தப்பிக்க நினைத்தாலும் நம்மால் முடியாத ஒன்றுமா.இப்பொழுதுக்கு உன் மனசு இரண்டு நிலையில் இருக்கின்றது சரியா?.

ஆமாமீன்று தலையசைக்க, பூரணிக்கு தாலிக்கட்டும் போதும் நானும் நெருப்பின் மேல நிற்பது போல தான் உணர்ந்தேன் மா.அந்த நேரத்தில் நான் சூழ்நிலை கைதியாயிருந்த நிலமை யாருக்கும் தெரியாது.

ஆனால் பூரணி நான் சொன்னதும் புரிஞ்சிக்கிட்டாள். எனக்காக தனது ஆசைகளை விட்டு காத்திருந்தாள்.

வினிய தேடி பைத்தியக்காரன் போல அலைஞ்சேன். எங்கே போனாளென்று தெரியாமல்.

அனல் போல கொதிச்சிக்கிட்டு இருந்தவனை,அன்பால் அரவணைத்து கட்டி போட்டது பூரணியோட பேரன்பு மா.

என்றைக்கு பூரணிக்கு கணவனாக வாழ ஆரம்பித்தேனோ, அன்றிலிருந்து வினியிடம் மானசீகமா கடவுள் கிட்ட மன்னிப்பு கேட்பதை நான் நிறுத்த வில்லை.

சாவதற்குள் ஓர் முறை அவளை நேரில் பார்த்து, என் நிலமைய சொல்லி மன்னிப்பு கேட்க தான், இத்தனை வருஷம் கடவுள் கிட்ட வேண்டிக்கொண்டிருந்தேன்.சாட்சாத் அந்த மகாலெட்சுமியே உன் மூலயமாய் ,அவளை எனக்கு காட்டிட்டாருமா.அப்போ,நிச்சயமாக வினி என்னை புரிந்து கொள்வாளென்ற நம்பிக்கை இருக்குமா.

நிம்மதியாக தூங்கி முப்பது வருஷம் ஆகிட்டு. இன்று அவளை பார்த்த சந்தோஷத்தில் நான் நிம்மதியாக தூங்குவேனென்றவர், மனசை போட்டு குழப்பிக்கொள்ளாதே.

பொறுப்பை கடவுள் கிட்ட விடுமா.நேரம் ஆகிட்டு வா என்றவாறு வீட்டினுள் சென்றார்.

இதுவரை விஸ்வம் பேசியதை எல்லாம் ரெக்கார்ட் பண்ணிய தாமரை, அதை வி.வி.யின் பர்சனல் எண்ணிற்கு அனுப்பி வைக்க,அந்த மெசேஜ் பார்க்கப்பட்டதாக நீலக்கலரில் இரண்டு டிக் தெரிந்தது.

பின்னர் அவளும் உள்ளே வர விஸ்வம் பூஜையறையில் இருப்பது தெரிந்தது.

இருவருக்குமான உணவை எடுத்து வைத்து காத்திருக்க, விஸ்வமும் அங்கு வர, எதுவும் பேசாமல் இருவரும் அமைதியாக சாப்பிட்டு முடித்தனர்.

சீமக்கரை...

தம்பி அன்பு, மச்சான் அசாம் மாநிலத்தின் எம்.பி என்று செல்வம் சொல்ல, அதைக்கேட்டவர்கள் அதிர்ந்து பின்னர் மரியாதை நிமித்தமாக வணக்கம் வைத்தனர்.

வெற்றிவேல் நேரடியாக விஷயத்திற்கு வந்தார்.அம்மாடி கவிதா என்றவர், சிந்து எப்படியோ நீயும், பார்வதியும் அப்படி தான் எனக்கு.உங்கள் எல்லாரையும் எனக்கு முன்பே தெரியும்.

உங்கள் கோபம் நியாயமானது தான், ஆனால் இருப்பது ஒர் வாழ்க்கை, இதில் எதுக்கு வீண் விரோதங்கள்.மீண்டும் இங்கு யாரும் ஒன்றாக பிறக்கப்போவதில்லை. மறப்போம், மன்னிப்போம்.

நல்ல மனிதனுக்கு அழகு இது தான்.

இப்போ நான் அமைச்சராக இங்கு வரலை, உனக்கு அண்ணனாக வந்துருக்கேன்.இன்றைக்கு அய்யனார் கோயிலில் கிடா வெட்டு வச்சிருக்கு. நீ ,மச்சான் புள்ளைங்க, அத்தை,மாமாவை கூப்பிட்டுக்கொண்டு கண்டிப்பாக வரனும்.

உங்களுக்காக நான் காத்திட்டு இருப்பேன். அங்கு வந்து யார் கூடயும் உங்களை பேச சொல்ல வில்லை. குடும்பமாக எல்லாரும் கலந்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தான்.

குடும்பம் இல்லாதவர்களுக்கு தான் அதன் அருமை தெரியுமென்று சொல்லிக்கொண்டிருக்கும் போது வெளியிலிருந்த வேதா உள்ளே வர, அவரை பார்த்த வெற்றிவேல், சிஸ்டர்.வேதவள்ளி தானே நீங்களென்றார்.

வேதாவும் அங்கு வெற்றிவேலை எதிர்பார்க்கவில்லை.

சார் நீங்கள் எப்படி இங்கேனு வேதா அதிர,உனக்கு தெரியுமா அவர்களைனு அன்பு கேட்டார்.

தெரியுமாவா என்ற வெற்றிவேல், சிஸ்டர். நீங்கள் அசாமில் வேலை பார்த்ததை பற்றி எதுவும் சொல்லவில்லையா?

என்னாஆஆஆ வேதா அசாமில் வேலை பார்த்துச்சானு அன்பு அதிர,ஆமாணா, நான் ஐந்து வருஷம் அசாமில் தான் இருந்தேன்.உங்க கிட்ட சென்னையில் இருப்பதாக சொல்லிட்டேன் என்றார்.

மேலும் சிறிது நேரம் பேசி விட்டு, அவர்களிடம் சொல்லிக்கொண்டு வெற்றிவேல் அங்கிருந்து கிளம்பினார்.

உள்ளூரில் இருந்த சொந்தபந்தங்களை முத்துவும், வேலுவும் கிடா வெட்டுக்கு வரச்சொல்லி அழைத்தனர்.

ஜானிடம் விஷயத்தை சொல்ல, மதுரைக்கு அப்பாவை செக்கப்பிற்கு கூப்பிட்டு போவதாக சொன்னவன், மரியாதையாக என் பங்கை எடுத்து வைங்கணுமென்றான்.

இளைஞர்கள் உதவியோடு அய்யனார் கோயிலை சுத்தம் செய்து, பூஜைக்கு தயார் செய்தனர்.ஆளுக்கொரு வேலையாக பிரித்துக்கொள்ள, அடுத்தடுத்து ஆக வேண்டிய வேலைகளும் வேகமாக நடந்தது.

எல்லாரும் கோயிலுக்கு வந்திருந்தனர்.

சிவசாமி குடும்பம் வருமா? என்று ஆவலோட காத்திருந்தனர்.

நேரம் கடந்தது, கிடாவை வெட்டுவதற்கான நல்ல நேரம் ஆரம்பமாக, பூசாரி அருவாளோடு வர, அந்த நேரம் சிவசாமி குடும்பத்தோடு கோயிலுக்கு வந்தனர்.

வந்தவர்களை பார்த்து சிலருக்கு அதிர்ச்சி, கதிர் வீட்டினருக்கு பெரும் மகிழ்ச்சியாக இருந்தது.

வெற்றிவேல் சென்ற பின்னர் தாமரை வீட்டினர் அமைதியாக இருக்க, அந்த சார் எவ்வளவு பெரிய மனுஷனென்று தெரியுமா என்றபடி, வெற்றிவேலின் நேர்மையான குணத்தை சொல்லியவர், அவருக்காக போய் வாருங்கள் என்றார்.

நீ என்று அன்பு கேட்க, நீங்க எல்லாம் போய்ட்டு வாங்கணா என்றார்.

பிறகு தான் அனைவரும் கிளம்பி கோயிலுக்கு வந்தனர். வந்தவர்களை கதிர் வீட்டினர் வர வேற்க,எதுவும் சொல்லாமல் அமைதியாக அங்கு வந்து நின்றனர்.

பின்னர் கிடாவின் மேல் மஞ்சள் தண்ணீரை தெளிக்க, அய்யா உத்தரவு கொடு என்றபடியே அருவாளை ஓங்கி போட, தலை தனியாக தெரித்து ஓடியது. வெட்டிய ஆட்டை துண்டாக்கி, சமையல் வேலை ஒரு பக்கம் தொடங்கினர்.

வேதா வருவாரென்று முத்துவும் ஆவலோடு காத்திருக்க,அவர் வராதது உள்ளுக்குள் சுருக்கென்று தைத்தது.

சிறு பிள்ளைகள் ஒரு பக்கம் ஓடி, ஆடி விளையாண்டு கொண்டிருந்தனர்.
இளைஞர்கள் கூட்டம் கேளி கிண்டல்களோடு, சமையலுக்கு உதவி செய்து கொண்டிருந்தனர்.

ஆண்களோ என்ன பேசுவதென்று தெரியாமல் அமைதியாக இருந்தனர்.

அப்பொழுது வெற்றிவேலின் நம்பருக்கு கால் வர, அட்டென் பண்ணியவருக்கு அங்கு சொல்லப்பட்ட விஷயத்தைக்கேட்டு தேங்க்யூ என்று சொல்லி ஃபோனை வைத்தவர்,தாமரை இருக்கும் இடம் தெரிஞ்சிட்டு என்க, அவர் சொன்னதைக்கேட்டவர்கள் அப்படியா என்று சந்தோஷப்பட்டனர்.

அன்பு எழுந்து போய் அய்யனார் சிலையின் முன்பு கைகூப்பி வணங்கிக்கொண்டிருந்தார்.

அண்ணா என்று வெற்றிவேலை கவிதா கூப்பிட, கவலைப்படாதே, உண்மைய தான் சொல்லுறேன்.பூஜை நல்ல படியாக முடியட்டும், பிறகு பேசிக்கொள்ளலாம் என்றார்.

கதிரும் வேலுவும் சமையல் நடக்கும் இடத்தில் இருந்ததால் இந்த விஷயம் தெரியவில்லை.

அண்ணா, மருமகள் நல்லா இருக்காயென்று? பெருமாள் கேட்க, நல்லா இருக்கா.

நம்ம புள்ளைங்களை குடும்பமா வாழ வைக்கலாம் கலங்காதே.நேரம் வரும் போது நடப்பவையெல்லாம் நல்லதாகவே நடக்குமென்றார்.

எவ்வளவு பெரிய அமைச்சர், இப்படி சாதரணமாக பழகுவதை பார்த்து, அங்கிருந்த மக்களுக்கு அதிர்சியாக இருந்தது.

பின்னர் பொதுவான விஷயங்களை பேசி அரட்டை அடித்துக்கொண்டிருக்க, சமையல் ரெடியாகி விட்டதென்றனர்.

அய்யனாருக்கு முன்பு நீளமான தலைவாழை இலையை போட்டு, சமைத்தவைகளையும், கடையில் வாங்கிய மற்ற பொருட்களையும் இலையில் பரப்பி, பூஜையை சிறப்பாக பூசாரி செய்து முடிக்க, அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது.

பாகுபாடில்லாமல் அனைவரும் தரையில் உட்கார்ந்து சாப்பிடுவதை பார்த்த வெற்றிவேலோடு வந்த இரண்டு எஸ்கார்டுகளுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

இது தான் கிராமத்தின் பண்பாடென்று அவர்களின் ஆச்சர்ய பார்வையைக்கண்டு பெருமாள் சொன்னார்.

பின்னர் அவரவர் வீட்டிற்கு மனநிறைவோடு சென்றனர்.

வண்டியில் வந்ததால் முதல் ஆளாக வீட்டிற்குள் வந்த சிவா, அங்கு முற்றத்தில் படுத்திருந்த வேதாவை பார்த்து, எதுக்கு அத்தை வெறும் தரையில் படுத்திருக்க என்றவாறு எழுப்ப, வேதாவிடம் எந்த எதிர்வினையும் இல்லை.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
அத்தை அத்தை என்று சிவா கத்துவதை அப்பொழுது தான் வீட்டின் உள்ளே வந்தவர்கள் கேட்டு, என்னாச்சு என்று உள்ளே ஓடி வந்தனர்.

சிவா, உடனே வேலுக்கு ஃபோனை போட்டு, அந்த நவீன் தம்பி கார் வச்சிருக்கே, அதை எடுத்து வரச்சொல்லுடானு மகனிடம் சொல்லிக்கொண்டே, அம்மாடி வேதா, வேதா என்றபடியே, தனது தங்கையை எழுப்பிக்கொண்டிருந்தார்.

சிவாவும் ஃபோனை எடுத்து வேலுக்கு கால் பண்ண,அட்டென் பண்ணியவன்,என்னடா என்க,அண்ணா, அண்ணானு சிவா அழுவதைக்கேட்டு, என்னாச்சிடா சொல்லு என்று வேலு பதறுவது மற்றவர்களுக்கும் கேட்டது.

அத்தை பேச்சு மூச்சு இல்லாம இருக்குணா, அந்த நவீன் அண்ணா கிட்ட கார் இருக்கே, அதை எடுத்துக்கிட்டு அப்பா வரச்சொல்லுதுணானு அழுது கொண்டே சொன்னான்.

என்னாஆஆஆ என்று அதிர்ந்தவன், இதோ உடனே வரேனென்றவன், வேதா அத்தை பேச்சு மூச்சு இல்லாம கிடக்காம், கார் எடுத்துட்டு சிவா உடனே வரச்சொல்லுறான் என்க, மற்றவர்களும் அதிர்ந்தனர்.

நவீன் உடனே நீ சிவாக்கூட போ, நாங்க பின்னாடி வரோம் என்றார் வெற்றிவேல்.

நானும் வரேனென்று கதிரும் வளவனும் காரில் ஏறி, மூன்றே நிமிடத்தில் தாமரை வீட்டிற்கு வந்தனர்.

கதவை திறந்து உள்ளே ஓடி வந்த மூவரும், வேதாவை தூக்கிட்டு போய் காரின் பின் இருக்கையில் சாய்த்து உட்கார வைத்து, கவிதாவை அழைத்துக்கொண்டு, தேனூரில் இருக்கும் ஹாஸ்பிட்டலை நோக்கி வேகமாகச்சென்றனர்.

மற்றவர்களெல்லாரும் பைக்கில் அவர்களை தொடர்ந்து வந்தனர்.

எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகமாகவும், கவனமாகவும் காரை ஓட்டி வந்த நவீன்,அங்கிருந்த ஹாஸ்பிட்டலின் முன்பு வந்து நிறுத்தினான்.

அழுது கொண்டே வந்த கவிதாவை வேலு தான் சத்தம் போட்டு வாயை மூட வைத்திருந்தான்.

உள்ளே போன வளவன் வேதாவை பற்றி அங்கிருந்த சிஸ்டரிடம் சொல்ல, டாக்டரிடம் அவரும் விஷயத்தை சொன்னார்.

பேஷன்டை கூட்டி வாங்கயென்றதும் அங்கிருந்த வீல் சேரில் உட்கார வைத்து உள்ளே கொண்டு போய், பெட்டில் படுக்க வைத்தனர்.

டாக்டரும் செக் பண்ணி பார்த்து விட்டு, இன்ஜக்க்ஷன் போட்டு வெளியே வந்தவர், அவர்களையெல்லாம் பார்த்தவர், கேஸ் கொஞ்சம் சீரியஸ் தான்.

அவங்களுக்கு சிவியரான ஹார்ட் அட்டாக் வந்துருக்கு.

அதைக்கேட்டவர்களுக்கு வேதாவை நினைத்து ரொம்ப வேதனையாக இருந்தது.

நல்லவேளை இப்போவாது கொண்டு வந்தீங்களே, இன்னும் கொஞ்சம் நேரம் போயிருந்தால்,அவங்க கோமாக்கு போயிருப்பார்கள்.

அதற்குள் மற்றவர்களும் அங்கு வந்து சேர்ந்தனர்.எதற்கு இவ்வளவு கூட்டமென்று சத்தம் போட்டவர், உடனே மதுரைக்கு கூப்பிட்டு போக ஏற்பாடு பண்ணுங்களென்றார்.

ஓகே டாக்டர் என்ற நவீன்,தனது ஃபோனிலிருந்து யாருக்கோ கால் பண்ணி வேதா விஷயத்தை சொல்ல, அங்கு என்ன சொல்லப்பட்டதோ ஓகே என்று கட் பண்ணினான்.

பின்னர் அங்கிருந்தவர்களை ஒரு பார்வை பார்த்தவன், மாமா நான் அத்தைய கூப்பிட்டு மதுரைக்கு போறேன்.நிகிலேஷ் இன்றைக்கு காலையில் தான் செமினாருக்காக மதுரைக்கு வந்துருக்கான்.அவன் கிட்ட தான் இப்போ பேசுனேன்.

உடனே வரச்சொல்லுறான். நீங்க வேற கார் ஏற்பாடு பண்ணிக்கிட்டு அதில் வந்துருங்க என்க, எல்லாரும் ஒன்னாக போய்டலாம் என்றவர்,பெருமாளு இங்கே டிராவல்ஸ் எங்கே இருக்கென்றார்.

அண்ணா நமக்கு தெரிஞ்சவங்க வச்சிருக்காங்க என்றவர், டிராவல்ஸ் ஓனருக்கு கால் பண்ணி விஷயத்தை சொல்ல, உடனே அனுப்பி வைப்பதாக அவரும் சொன்னார்.

சிவா, நீ வீட்டுக்கு போ, அங்க ராதா, சீதா, மற்றவர்கள் இருக்காங்க. வேதாக்கு ஒன்னும் இல்லைனு வீட்ல சொல்லுப்பா என்றார் அன்பு.

சரிப்பா என்றவன், அத்தைக்கு எதுவும் ஆகக்கூடாதென அய்யனாரிடம் வேண்டிக்கொண்டு, அங்கிருந்து சீமக்கரையை நோக்கிச்சென்றான்.

அதேப்போல் டிராவலர் வேனும் சிறிது நிமிடத்தில் அந்த ஹாஸ்பிட்டலின் முன்பு வந்து நின்றது .

வேதாவை டிஸ்சார்ஜ் பண்ணிக்கொண்டு, டாக்டருக்கான பீஸை கதிர் கொடுத்தான்.பின்னர் வேலு கார் ஓட்டுவதாக சொல்லி டிரைவர் சீட்டில் அமர, நவீன் முன்பக்கம் உட்கார்ந்தான்.

அன்பு வேதா, கவிதா மூவரும் நடு சீட்டிலும், கடைசி சீட்டில் முத்துவும், கதிரும் உட்கார, காரை புயல் வேகத்தில் அங்கிருந்து கிளப்பினான்.

ஏண்டா இவ்வளவு வேகமென்று நவீன் சொல்ல, பயப்படாதண்ணா என்றவன் தன் வேலையில் கவனமாக இருந்தான்.

மாலை சூரியன் மேற்கே மறைவதற்குள், மதுரையின் எல்லையை தொட்டிருந்தான் வேலு.

ஹாஸ்பிட்டலின் லொக்கேஷனை அனுப்பச்சொல்லி நிகிலேஷிடம் கேட்க, அவனும் அனுப்பி வைத்தான்.

மதுரை டிராபிக்கில் அனாயசமாக காரை ஓட்டிக்கொண்டிருந்தவன், நவீன் சொன்ன கே. கே. மருத்துவமனையின் முன்பு வந்து காரை நிறுத்த, அங்கு தயராக இருந்த ஸ்டெச்சரில் வேதாவை தூக்கி வைத்து உள்ளே சென்றனர்.

இவர்களும் பின்னாடியே ஓடி வந்தனர்.

நேராக ஐசியுக்கு கொண்டு வரச்சொல்லிய நிகிலேஷ், வேதாவை கம்ப்ளீட் செக்கப் பண்ணி முடித்து, டெஸ்ட் ரிசல்டை பார்த்து முடிக்க, மேலும் ஒரு மணி நேரம் கடந்தது.

எப்போ அவன் வந்து நல்ல செய்தியை சொல்வானென்று, மற்றவர்கள் கவலையோடு காத்திருந்தனர்.

மற்றவர்களும் அங்கு வந்து சேர்ந்தனர்.

என்னாச்சு என்றவாறே அங்கு வந்த வெற்றிவேல், நிக்கி இன்னும் வரலையா?

இன்னும் இல்லை மாமானு நவீன் சொல்லும் போதே கதவை திறந்து வெளியே வந்தவன், அங்கிருந்த வெற்றிவேலை பார்த்து விட்டு, அங்கிளென்று அதிர்ந்தான்.

நிக்கி மற்றது அப்புறம் பேசிக்கலாம். முதல்ல வேதாவோட கன்டிஷனை பற்றி சொல்லுப்பா.

வாங்க நாம ரூம்ல போய் பேசலாம் என்றவன், அங்கிருந்து வலது பக்கம் திரும்பியவன், அந்த ஃப்ளோரின் கடைசியாக இருந்த அறைக்கதவை திறந்து உள்ளே செல்ல, மற்றவர்களும் அங்கு வந்தனர்.

வாங்க,உட்காருங்க என்றவன், கொஞ்சம் கிரிட்டிகல் ஸ்டேஜ் தான் அங்கிள்.சர்ஜரி பண்ணியாகனும்.

இவங்களுக்கு ஏற்கெனவே இரண்டு அட்டாக் வந்துருக்கனும். அதுக்கு மெடிசின் எடுக்குறாங்கனு நினைக்கிறேன்.இந்த முறை கொஞ்சம் சிவியரா அட்டாக் வந்துருக்கு. இனி மெடிசனால் குணப்படுத்த வழியில்லை.

சர்ஜரி ஒன்று தான் தீர்வு, அவங்களை டெஸ்ட் பண்ணி பார்த்ததில், மனதளவில் ரொம்ப உடைஞ்சி போயிருக்காங்க என்றார்.

நிக்கி ஆப்ரேஷன் பண்ணினால் ஒன்னும் பிரச்சினை இல்லையேனு நவீன் கேட்க,இல்லைடா. தாமதிக்காமல் அடுத்த கட்டத்துக்கு போக வேண்டி தான்.அதற்கு முதலில் பேஷன்டை தயார் பண்ணனும். இப்பொழுது அவர்கள் கண் திறக்க வாய்பு இல்லை.

ஏன்னா ஹெவி டோஸ் கொடுத்துருக்க. மே. பி. நள்ளிரவிலோ அல்லது, விடிந்து தான் அவங்கள் கான்ஷியஸ்கு வருவாங்கள்.

நிகிலேஷ் சொல்லியதை கேட்டவர்களுக்கு, எதுவும் சொல்ல முடியவில்லை.வேதாவிற்கு ஏன் இந்த தலையெழுத்து என்று வருத்தப்பட்டனர்.

ஆமாம் யாரு அவங்களென்று நிக்கி கேட்க, சுருக்கமாக விஷயத்தை நவீன் சொல்லி முடித்தான்.

அதையெல்லாம் கேட்டவன், சிறிது நொடிகள் யோசித்து விட்டு, தனது ஃபோனிலிருந்து இன்றைக்கு போட்ட டிக்கெட்டை கேன்சல் பண்ண சொன்னான்.

அப்படியே அசாமில் இருக்கும் பாட்டிக்கும் அழைத்து முக்கியமான சர்ஜரி இருப்பதால், இன்னும் ஒரு வாரம் நான் மதுரையில் தான் இருப்பேனென்றும், முடிந்தால் வர்ஷன், ஷாலினி மற்றும் பிள்ளைகளை பார்த்து வருவதாக சொல்லி விட்டு ஃபோனை வைத்தான்.

நிக்கி என்று வெற்றிவேல் அவன் கையை பிடிக்க, கவலை வேண்டாம் அங்கிள். ஆன்ட்டிய சீக்கிரம் குணமாக்கிடலாம்.

அப்போ வர்ஷன் சொல்லிய நிகிலேஷ் இவன் தான் என்பது கதிர் வீட்டிலிருந்து வந்த ஆண்களுக்கு புரிந்தது.

அப்பொழுது ஜானிடமிருந்து கதிருக்கு கால் வர,அட்டென் பண்ணியவன் லாரன்ஸ் பற்றி விசாரிக்க, அறிவுகெட்டவனே எங்கடா இருக்கயென்றான்.

வேதாவை பற்றி சொல்ல,அடேய் இப்போ தான் நானும் மிலிட்ரிக்கு செக்கப் முடிந்து கார் பார்கிங் வந்தோம்.அங்க நம்ப ஊர் டிராவலர் வேன் இருந்ததை பார்த்துட்டு,என்னனு விசாரிக்க,அவர் தான் சொன்னாருடா.

மூன்றாவது ஃப்ளோரில் கடைசி ரூமில் இருப்பதாக கதிர் சொல்லி வைக்க, சிறிது நிமிடத்தில் ஜானும், லாரன்ஸும் அங்கு வந்து சேர்ந்தனர்.

பின்னர் லாரன்ஸ் உடல் நிலை பற்றி கேட்க,டாக்டரை இப்போ தான் பார்த்தோம்டா.யாரோ நார்த்திலிருந்து ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட் செமினாருக்கு வந்திருந்தாராமாடா.

அந்த ஆளுக்கு மைக்கில் பேச வேற நாள் கிடைக்கவில்லை போல.
அதனால் லேட் ஆகிட்டென்று ஜான் சொல்ல,அதைக்கேட்டு மற்றவர்கள் நிகிலேஷை பார்த்தனர்.

அவன் மௌனமாக சிரித்து விட்டு, ஃபைலை குடு மேன் என்க, எந்த ஃபைலென்றான் ஜான்.

ம்ம்...உன் கையில் இருப்பதை தானென்று நிக்கி சொல்ல, யார்டா இந்த பால்வாடி பையனென்று வேலுவிடம் பொறுமையாக கேட்க, கொஞ்ச நேரத்துக்கு முன்ன சொன்னியே நார்த்திலிருந்து செமினார்கு டாக்டர் வந்துருக்காரென்று, அந்த டாக்டர் இவர்தானென்றான் வேலு.

அதைக்கேட்ட ஜான் எதேஏஏஏஏ டாக்டரா என்று அதிர, பார்த்து பனைமரம், எல்லாரும் உன் வாய்குள்ள போய்விடுவோம் போல, டோரை மூடுடா.

இவ்வளவு நேரம் அங்கிருந்த இருக்கமான மனநிலை மாறி, வேலு சொன்னதைக்கேட்டு மற்றவர்களுக்கு சிரிப்பு வந்தது.

அடேய் நீ இருக்கியேனு அவன் முதுகில் கதிர் ரெண்டு வைக்க, கிராதகா, சண்டாளா, உன் பங்காளி பண்ணியதுக்கு என்னை ஏண்டா அடிக்குற?

இது மூன்றும் திருந்தாத மாடுங்க தம்பி, நீங்கள் ஒன்னும் தப்பா நினைக்காதீங்க என்று பெருமாள் சொல்ல, ரொம்ப புகழாதீங்க மாமா, வெட்கமாக வருதென்று வேலு சொன்னான்.

அடேய் என்று லாரன்ஸ் சொல்ல, பொறுமை சாமி பொறுமை, உடம்பு இருக்குற கன்டிஷனுக்கு இப்படிலாம் சத்தம் போடக்கூடதென்று வேலு சொல்ல, ஓஓஓ ஜீசஸ் என லாரன்ஸ் சொல்ல,சத்தியமா என்னால் முடியலையென்று சொல்லிய நிகிலேஷ் சத்தமாக சிரித்து விட்டான்.

ஏண்டா வாய மூடவே மாட்டீங்களானு செல்வம் கேட்க,ஏன் எங்களுக்கு திக்கு வாயா?, இல்லை நாங்க மௌன விரதம் இருக்கோமா?. பேசுறது மனிதனின் தனி உரிமை, அதை யாரும் தடை செய்ய முடியாதென்றான் வேலு.

சிரித்து முடித்த நிகிலேஷ், மிஸ்டர். நான் டாக்டர் நிகிலேஷ், நம்பி ஃபைலை கொடுங்க என்க, கையிலிருந்த ஃபைலை ஜான் நீட்டவும், அதை வாங்கி படித்து பார்த்தவன், அங்கிள் இப்போ வந்தது உங்களுக்கு செகன்ட் அட்டாக், கரைக்டா? என்றான்.

ஆமாங்க டாக்டரென்று லாரன்ஸ் சொல்ல,நான் உரிமையா உங்களை அங்கிள்னு சொல்லுறேனென்று நிகிலேஷ் சொல்ல, ஆமாப்பா, நீ சொல்றது சரிதான்.

ரெண்டு மாசத்துக்கு முன்னாடி ஸ்கூல் விஷயமா மதுரைக்கு வந்தப்போ திடீர்னு இடது பக்கம் நெஞ்சு கிட்ட வலி. உடனே உடம்பெல்லாம் வேர்க்க ஆரம்பிச்சிட்டு.

நான் ஏதோ சாப்பாடு சேராமல் தான் இப்படி இருக்குனு இருந்துட்டேனென்றார்.

கண்மணி வருவாள்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top