• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
அசாம்!

ஃபோன் பேசி முடித்து உள்ளே வந்த நவீன், அங்கிருந்த பெண் வீட்டினரை பார்த்தவன் சிரமத்திற்கு மன்னிக்கனும், உங்கள் பொண்ணை எனக்கு பிடித்திருக்கின்றது.


இப்பொழுது நான் உடனடியே பர்சனல் வேலையா போயாகனும்.தப்பாக எடுத்துக்காதீங்க அங்கிள் என்கவும்,தம்பி என் பொண்ணை இன்னும் நீங்க பார்க்கவே இல்லையே?.

குணத்தை கேட்டேன் அங்கிள் அது போதும் என்றவனை,அங்கிருந்தவர்கள் புரியாமல் பார்த்தனர்.

நான் உள்ளே வரும் போது,வீட்டுக்கு நீ மட்டும் தான் மருமகள்.உன் ராஜியம் தான்.சொத்துக்கு எந்த பிக்கல் பிடுங்களுமில்லை, இனி நீ தான் அந்த வீட்டுக்கு மகாராணினு உங்க பொண்ணோட தோழிங்க சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

அதற்கு உங்க பொண்ணோ இல்லை என்னோட பொண்டாட்டி சொன்ன பதில், நான் நல்ல மனைவியா,மருமகளாக தான்டி இருக்கு ஆசைப்படுகிறேன். மகாராணியா இல்லைனு சொன்னாள்.

அந்த குணமே அவளோட வளர்ப்பு முறையை சொல்லி விட்டு என்றவன், தனது மாமா வெற்றிவேலை பார்த்து, கல்யாணத்துக்கு சம்மதம் மாமா என்க.

கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக அவனுக்காக பார்க்கும் பொண்ணுங்களையெல்லாம், எதாவது காரணம் சொல்லி தட்டிக்கழித்துக்கொண்டே வந்தவன் இன்று சம்மதம் சொன்னதைக்கேட்டு ஆனந்த அதிர்ச்சியாகினர்.

அம்மாடி சிந்து, நீ என்ன சொல்லுறனு வெற்றிவேல் கேட்க, அண்ணா எனக்கு நெஞ்சு வலிக்கிற போல இருக்கென்கவுப்,உனக்குமாடி என்றார் வெற்றிவேலின் மனைவி திலகா.

இருவரையும் பார்த்து நவீன் முறைக்க, அங்கிருந்த நவீனின் ஆருயிர் நண்பன் ஆதிக்கும்,அவன் மனைவிக்கும் சிரிப்பு தாங்கவில்லை.

அப்போ இதை நிச்சயமாக பண்ணிக்கலாமா? என்று வெற்றிவேல் கேட்க, தாராளமாக பண்ணிடலாமே என்றார் பொண்ணின் தந்தை.

எதற்கு இவ்வளவு மரியாதை என்க, ஆயிரம் தான் இருந்தாலும் நீங்க இந்த மாநிலத்தின் அமைச்சர்.அதற்காவது மரியாதை கொடுக்கணுமே..

வெற்றிவேல் அமைச்சர் என்பது வெளி உலகத்துக்காக தான்.என்னோட குடும்பத்துக்கு நான் எப்பவுமே வெற்றிவேல் தான் என்றவர்,ஆதி, நீயும்,ஜீவியும் போய் நிச்சயத்திற்கான நகையை வாங்கிட்டு வாங்க.

நான் மற்றதை பார்க்குறேன் என்க,அப்பா நீங்க இங்க இருந்து பார்த்துக்குங்க. எனக்கு தெரிஞ்ச கிளைன்ட் மேரேஜ் ஈவ்மென்ட் கம்பெனி வச்சிருக்காங்க.

அவங்க கிட்ட சொன்னால் போதும் ஒரு மணி நேரத்தில் எல்லாம் ரெடியாயிடும் என்றவனோ தங்கள் மூன்று வயது குழந்தையை அவர்களிடம் விட்டு விட்டு நகைக்கடைக்கு சென்றனர்.

அதைப்போல பங்ஷனுக்கான அலங்காரம் செய்ய ஆட்களும் வந்தனர்.
பெண் வீட்டு தோட்டமே பெரியதாக இருந்ததால், விரைவில் அலங்காரத்தை முடித்தனர்.

வர்ஷனுக்கும், மித்ரனுக்கும், லண்டனில் இருக்கும் மற்றொரு நண்பனுக்கும் நவீன் நிச்சயத்தை சொல்ல,அதைக்கேட்டு சந்தோஷப்பட்டனர்.கடைசி நேரத்தில் சொல்லியதைக்கேட்டு மூவரும் திட்ட, திடீர் பிளானை பற்றி சொன்னதும் அவர்களும் சரியென்றனர்.

நெருங்கிய உறவுகளுக்கு முன்னிலையில் நவீன்-மிஷா இருவருக்கும் நிச்சயம் நல்லபடியாக முடிந்தது.பின்னர் மிஷா வீட்டினரிடம் சொல்லிக்கொண்டு,வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

ஆதி லண்டனிலிருந்து வந்த பின்னர் இருவரின் சம்பாத்தியத்தை வைத்து, ஒரே மாடலில் அருகருகே இரண்டு வீட்டை கட்டி, இரண்டு குடும்பமும் புது வீட்டிற்கே குடி வந்து விட்டனர்.

வீட்டில் வந்து ஹாயாக ஷோஃபாவில் உட்கார,மாமா ஒரு விஷயம் என்றான்.சொல்லுப்பா என்று வெற்றிவேல் கேட்க, நைட் பன்னிரெண்டு மணிக்கு பிளைட், நீங்க மூன்று பேரும் ரெடியாக இருங்க.

வெற்றிவேல் மற்றும் ஆதியிடம் மிஷா வீட்டில் இருக்கும் போதே வர்ஷன் ஃபோன் பண்ணி பேசிய விஷயத்தை சொல்ல, ஆதியோ அதிர்ந்தான், அவனின் தந்தையோ எனக்கு இது தெரியும் என்ற தோரணையில் இருந்தார்.

அப்பா என்ன நீ பாட்டுக்கு புடிச்சு வச்ச சிலை போல போஸ் குடுக்குற?, எவ்வளவு பெரிய விஷயத்தை சொல்லிருக்கானென்று ஆதி கேட்க, அடேய் உங்களுக்கு நான் அப்பன்டா.
எனக்கு எப்படி இது தெரியாமல் இருக்கும்?

பிறகு தான் சீமக்கரைக்கு போவதற்காய், சென்னைக்கு போய்ட்டு, அங்கிருந்து மதுரைக்கு செல்ல ஃபிளைட் டிக்கெட் போட்டனர்.

எங்கே தான் போறோமென்று திலகாவும் சிந்துவும் கேட்க?,சொன்னா தான் இரண்டு மேடம் வருவீங்களோ என்றார் வெற்றிவேல்.

அப்படி இல்லை, ஓகே போகலாம் என்று அவரவர் பேகை ரெடி பண்ண சென்றனர்.

சீமக்கரை...

பொங்கல் லீவ் முடிந்து பள்ளி தொடங்கியது.வீட்டில் நடந்த களோபரத்தில் அடுத்து வந்த இரண்டு நாட்கள் அல்லி, நிலவன் மற்றும் செல்வி மூவரும் ஸ்கூலுக்கு செல்லவில்லை.

திங்கள் கிழமை விடியல் ஆரம்பமானது.வழக்கம் போல உள்ளுக்குள் வலியை மறைத்துக்கொண்டு வேலையை செய்தனர் இரண்டு வீட்டில் உள்ளவர்களும்

அங்கு அல்லியும், இங்கு நிலவன், மற்றும் செல்வி மூவரும், ஸ்கூலுக்கு செல்ல ரெடியாகிக்கொண்டிருந்தனர்.

இருவருக்குமான மதிய உணவை ராதா டிபன் பாக்ஸில் வைத்து அவர்களுக்குரிய பேகில் வைத்தார்.
அதற்குள் இருவரும் சீதா கொடுத்த டிபனை சாப்பிட்டு முடிக்க, வாசலில ஹாரன் சத்தம் கேட்க,இருவரும் வீட்டில் சொல்லிக்கொண்டு பேகை எடுத்து வெளியே வந்தனர்.

செல்வி வளவனின் பின்னால் உட்கார, நிலவன் அவனுடைய சைக்கிளை எடுத்துக்கொண்டான்.

மூவரும் அங்கிருந்து சீமக்கரை பஸ் ஸ்டாப்பை நோக்கிச்செல்லும் போது, அல்லியை அழைத்துக்கொண்டு சிவாவும் வண்டியில் வந்தான்.

நிலவனுடைய நண்பர்களும் அவனோடு சைக்கிளில் வந்து இணைந்து கொண்டனர்.

பஸ் வந்ததும் இருவரையும் ஏற்றி விட்டு வளவன் தனது கம்பெனிக்கும், சிவா அவனது காலேஜிக்கும் சென்றான்.
இருவரும் சிறிது நிமிடம் வரை அமைதியாகவே வண்டியில் வந்தனர்.
அப்பொழுது மாமா என்று சிவா கூப்பிட, ம்ம் சொல்லுடா.

ஒரு விஷயம் சொல்லனும் மாமா என்க, சொல்லுடானு வளவன் கேட்க, முதல் நாள் தனது வீட்டில் நடந்ததை பற்றி,சிவா சொல்ல தொடங்கினான்.

தாமரை வீடு...

பேசிக்கிட்டு இருக்கும் போது திடிரென்று ஃபோன் கால் கட் ஆனதும், மீண்டும் மூக்கையன் நம்பருக்கு வேதா கால் பண்ண, சுவிட்ச் ஆப் என்று வந்தது.

என்னாச்சி வேதா என்று அன்பு கேட்க, அண்ணா மருது கிட்ட விஷயத்தை சொல்லிக்கொண்டு இருக்கும் போது திடீர்னு கட் ஆகிட்டுணா.

திரும்ப கால் பண்ணுனேன் ஆஃப்ல இருக்குனு வருது.அப்புறம் ணா ஒரு விஷயம் சொல்லனும்.

ம்ம் சொல்லு வேதா?

மருதுக்கு பவி கூட கல்யாணம் ஆகிட்டுணா என்கவும்,என்ன வேதா சொல்லுறனு அதிர்ந்தனர்.

ஆமாணா என்றவர் நேரடியாக விஷயத்திற்கு வந்தார்.பவியோட அப்பா, அம்மா காதலிச்சி கல்யாணம் செய்து கொண்டதால் அவங்களை வீட்டில் சேர்க்கவில்லைனு உங்களுக்கு தெரியும் இல்லையா என்க,அன்புவோ ஆமாம்மா தெரியுமென்றார்.

தாமரை இங்க வருவதற்கு இரண்டு நாளைக்கு முன்னாடி பவியோட பாட்டிக்கு, அதாவது அப்பா வழி பாட்டிக்கு ரொம்ப உடம்பு சரியில்லைன்னு ஃபோன் வந்துருக்கு.

அதனால் அவங்க மூணு பேரும் கோயம்புத்தூர் போயி பார்த்து விட்டு, மூன்று நாள் சென்று நீலகிரிக்கு வந்து விட்டதாக பவி என் கிட்ட சொன்னாள்.

பிறகு பொங்கல் அன்றைக்கு அவங்களுக்கு திரும்பவும் உடம்பு முடியலைனு, பவிய என் கிட்ட விட்டுவிட்டு, அவங்க ரெண்டு பேரும் கோயம்புத்தூருக்கு போய்ட்டாங்க.

மறுநாள் மாட்டு பொங்கல் அன்றைக்கு அந்த அம்மாவை ஹாஸ்பிட்டல்ல காட்டுவதற்காக ஆட்டோல அனுப்பிட்டு, இவங்க ரெண்டு பேரும் வண்டியில வரும் போது, லாரிகாரன் மோதுனதில், பவியோட அப்பா ஸ்பார்ட்லே இறந்துட்டார்.அவ அம்மா சீரியஸா இருக்காங்கனு ஃபோன் வந்ததும்,எனக்கு கையும் ஓடல, காலும் ஓடலைணா.

அவள் கிட்ட பாட்டிக்கு சீரியஸ்னு சொல்லி, நான், மயிலா, மருது, பவி நாலு பேரும் அங்கிருந்து ஹாஸ்பிட்டலுக்கு போனப்போ, ஐசியுல இருந்தாங்க.

அங்க போன பிறகு தான் பவிக்கு விஷயம் தெரிஞ்சி கதற,கடைசி நேரத்தில் தனது மகளை அனாதையா விட்டு போகாமல், அவங்க தாலியை காட்டி மருதுவை கட்ட சொல்லி கையெடுத்து கும்பிட்டாங்க.

அதை பார்த்த மயிலா, தனது மகனை பவி கழுத்துல தாலி கட்ட நிர்பந்திக்க, வேற வழி இல்லாமல் அவன் கட்டி முடிச்சதும், உயிர் போயிட்டுணா.
பிறகு பாடிய எடுத்து வந்து நீலகிரில தான் எரிச்சது.

அன்றையில் இருந்து பவி எதுவும் பேசுறது இல்லைணா.சித்த பிரம்மை புடிச்ச போல இருக்காள்.அந்த சூழல்ல என்னால் உங்க கிட்டயும் விஷயத்தை சொல்ல முடியலைணா.

பவியோட தாத்தா அவர் மனைவி கிட்ட கூட மகன், மருமகள் இறந்த விஷயத்தை சொல்ல முடியாமல் தவிச்சிக்கிட்டு இருக்கார்ணானு நடந்த எல்லாவற்றையும் வேதா சொல்லக்கேட்டவர்களுக்கு பேரதிர்ச்சியாக தான் இருந்தது.

நம்ப வீட்டில் நடந்ததை விட பெருக்கொடுமை நடந்துருக்கேயென்று, கலா அப்பாயி சொல்லி வருத்தப்பட்டார்.

இதான் மாமா என்று வளவனிடம் சொல்ல,கேட்டவனுக்கும் பவிய நினைத்து பாவமாக இருந்தது.

நேரமும் கடந்து சென்றது.வேதா சாப்பிடவானு கவிதா கூப்பிட, எதுவுமே பதில் சொல்லாமல் இருந்தார்.

அப்பொழுது வேதா என்று குரல் கேட்டு திரும்பி பார்க்க, அங்கே ராதா, பார்வதி, சீதா மற்றும் வள்ளி அப்பாயி நான்கு பேரும் நிற்பது தெரிந்தது.

வேதா என்று வேகமாக வந்த பார்வதி கையை பிடிக்க, நீண்ட வருடங்களுக்கு பிறகு தனது தோழியை பார்த்த வேதாவிற்கு கண்கள் கலங்கியது.
எப்படிடி இருக்கிறயென்று பார்வதி கேட்க, உசுரோட தான் இருக்குறேன் பாரு.

வேதாவுக்கும் பார்வதிக்கும் மூன்று வருடம் வயது வித்தியாசம் இருந்தாலும் தோழியாக தான் இருவரும் பழகினர்.

ஏண்டி ஒரு வார்த்தை கூட சொல்லாம போனனு பார்வதி கேட்க,என் தலையெழுத்து பாரு.

அப்பொழுது வேதா என்று சீதா கூப்பிட, அவர் குரலைக்கேட்டு திரும்பி பார்க்காமல்,என் பொண்ணு காணும் என்றதால் தான் இங்கு வந்தேன்.
மற்றப்படி உங்க தங்கச்சி வாழ்க்கையை கெடுத்து, அதில் பங்கு போட நான் வரவில்லைனு வேதா சொல்லியதைக்கேட்டு வீட்டில் இருந்தவர்கள் மட்டுமல்ல, வயலுக்கு போய்விட்டு வீட்டிற்குள் வந்த அன்புவும் அதிர்ந்தார்.

அய்யோ வேதா என்னை மன்னிச்சிடு. உண்மை தெரியாமல் நானும் உன்னை தப்பா பேசிட்டேனென்று மன்னிப்புக்கேட்டு சீதா அழுதார்.

இப்போ என்ன சொன்ன வேதா? என்ற அன்புவின் குரல் கேட்டு,வேதாவிற்கு உள்ளுக்குள் புயல் அடித்தது.

சீதா என்ன விஷயம்மா?.

வளவனும் அன்னைக்கு தெரிஞ்சே அப்பாவும் பாவம் பண்ணிட்டாருனு மன்னிப்பு கேட்டான், இப்போ நீயும் கேட்குற?.

என்ன நடந்துச்சினு யாராவது சொல்லி தொலைங்க என்று கத்தினார்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
அண்ணா அது வந்து அது வந்துனு சீதா தடுமாற,என்ன சீதா சொல்லுமா.என் பொறுமைய ரொம்ப சோதிக்காதீங்கனு அன்பு சொல்ல,ஆத்தா நீ தான் காப்பாற்றனும்னு மனதிற்குள் அம்மனிடம் வேண்டிக்கொண்டார்.

அண்ணா, வேதாக்கும் முத்து தம்பிக்கும் கல்யாணம் ஆகி இருபத்தஞ்சி வருஷம் ஆகிடுச்சி.

அதைக்கேட்டு என்னாஆஆஆ என்று அதிர்ந்தனர்.

என்னமா சொல்லுறனு சிவசாமி தாத்தா கேட்க, ஆமாப்பா என்ற சீதா, முத்து சொல்லியதை அவர்களிடம் சொல்லி முடித்தவர், முத்துவும் வேதாவும் விரும்புகிறார்களென்று தெரிந்து தான், ராதா கழுத்தில் தாலி கட்ட விடாமல் தடுத்து பார்த்தேன்.

ஆனால் உறுதியா இருக்க வேண்டிய முத்து தம்பியோ,அவங்க அண்ணன் உசுரு தான் பெருசுனு நினைச்சிட்டு, அப்பவே ராதா கழுத்தில தாலிய கட்டிடுச்சி.சரி இது தான் கடவுள் சித்தமென்று நானும் மனசை தேத்திக்கிட்டேன் ணா.

அதேப்போல அவங்க வாழ்க்கையை ஆரம்பிச்சு, வளவனும் பிறந்துட்டான், அவனும் ஸ்கூல் போக ஆரம்பிச்சிட்டான்.அப்போ தான் வேதாவும் ஊருக்கு வந்திருந்துச்சி.

ரெண்டு,மூன்று முறை முத்துவும், வேதாவும் ஏரிக்கரை கிட்ட பேசிக்கிட்டு இருப்பதை, வயலுக்கு போகும் போது நான் பார்த்தேன். அந்த நேரத்திலெல்லாம் தம்பி வீட்டுக்கு கோவமா வருவதும், ராதா கூட சண்டை போடுவதை கவனிச்சேன்.

அப்போ நான் நினைச்சது என்னவென்றால், வேதா தான் முத்து தம்பி கிட்ட தானா வந்து பேசி, ராதா வாழ்க்கையில் பிரச்சினை பண்றாள்னு. இதை யார்கிட்ட சொல்லுறதுனு நான் கவலையா இருக்கும் போது, கலா சின்னம்மா கிட்ட சொன்னால் என்னனு தோனுச்சி.அதேப்போல விஷயத்தை அவங்க கிட்ட சொல்லிட்டேன்.

சரி இனி கையும் களவுமா நாம நேரில் பிடிக்கலானு சின்னம்மா சொல்லிட்டாங்க.

அதேப்போல இருவரும் ஏரி கரையில் பேசுவதை கவனிச்ச கலா சின்னம்மா, என்னையும் வர வைக்க, நாங்க ரெண்டு பேரும் போகும் போது, ஏரிக்கரை படிகட்டில் உட்கார்ந்து வேதா அழுது கிட்டு இருந்துச்சி.வேதா கிட்ட போன சின்னம்மா,அதோட தலைமுடியை புடிச்சி அடிக்க ஆரம்பிச்சிட்டாங்க.

அடுத்தவள் புருஷன் மேல ஆசைப்படுறியே நீயெல்லாம் என் பொண்ணா?,செத்து தொலைடி.ஊர் உலகத்துல வேற மாப்பிள்ளையே கிடைக்கலையா?என் அண்ணன் மவன் புள்ளை பெத்தவன் தான் ஆம்பிள்ளையா தெரியுதானு அசிங்கமாக திட்டிட்டாங்க.

நானும் என் தங்கச்சி வாழ்க்கையில் எதுக்கு விளையாடுற வேதா?, வேற யாரையாவது வயசு பையனை புடி.
அவள் வாழ்க்கையை கெடுக்காதேன்னு சொல்லிட்டு, சின்னம்மாவ கூப்பிட்டுக்கிட்டு வீட்டுக்கு வந்துட்டேன்.

மறு நாள் காலையில தான் வேதா ஊர விட்டு போனதுணா.முத்து தம்பியோட பொண்டாட்டி தான் வேதானு இத்தனை வருஷமும், எங்க யாருக்கும் தெரியாதுணா என்று சீதா அழுதார்.

அனைத்தையும் கேட்ட அன்பு, தனது அம்மாவிடம் வந்தவர், நீயெல்லாம் தாயா?.

ச்சை.... பெத்த பொண்ணு கிட்ட என்ன பேச்சு பேசியிருக்க? என்றவர், இவ்வளவு தான் உங்க குடும்பத்தில் உள்ள ஆண்களால் விளையாட முடியுமானு வள்ளி அப்பாயிடம் கேட்க,
அன்புவின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அவர்களெல்லாரும் கண்ணீரோடு நின்றனர்.

வேதா, அம்மாடி வேதா என்கவும்,அண்ணா என்று கதறிக்கொண்டு அவரிடம் வந்த வேதா, அன்புவின் கால்களை கட்டிக்கொண்டு கதறி அழுதவர் நான் யாரு வாழ்க்கையும் பங்கு போடலைணா.
அடுத்தவங்க வாழ்க்கையை அபகரிக்க நினைக்கின்ற பிறவி நான் இல்லைணானு அழும் தங்கையை, என்ன சொல்லி தேற்றுவதென்று அன்புக்கு தெரியவில்லை.

கலா என்று சிவசாமி கூப்பிட்டவர், உன் வயிற்றில் தானே வேதா பொறந்துச்சி?, அதை தப்பா பேசிருக்கியே, அப்போ உன் நடத்தை சரியில்லையானு கேட்க, அய்யோ சாமி, அப்படி சொல்லாதிங்க, என்று தலையில் அடித்துக்கொண்டு அழுதார்.

இந்த வயசில் சொன்னதுக்கே உனக்கு இப்படி இருக்கே, என் மவளை என்ன வார்த்தைடி சொல்லிருக்க?.உசுரோட என் மவளை கொன்னுட்டியேடி சண்டாளப்பாவி, இதனால் தான் இத்தனை வருஷமா என் மவள் இந்த வீட்டு வாசல் படியை மிதிக்கலையானு கண் கலங்கியவர், ஏம்மா வள்ளி உன் குடும்பத்துக்கு நான் என்னம்மா பாவம் பண்ணுனேன்?.

உன் பெரிய மவன் கேட்ட கேள்வியே இன்னும் எனக்கு மறக்கவில்லை.
உன் ரெண்டாவது மவன் தாலியை கட்டி, என் மவள் வாழ்கையை அழிச்சிட்டான்.
அடுத்து உன் மகன் வயிற்று பேரன், என் பேத்தி வாழ்க்கையை கெடுத்துட்டான்.
அப்படி என்ன எங்க மேல உன் குடும்பத்து ஆண்களுக்கு வஞ்சகம்?.

ஏம்மா சீதா, நீயும் ஒரு பொண்ணு தானேமா?,வேதாவை பற்றி உனக்கு தெரியாதா?.எம் மகளை பார்த்தால், உன் தங்கச்சி வாழ்க்கையை பங்கு போடுற போலவா இருக்கு?.

சரி என் மவளை கேட்டியே, இதேப்போல உன் கொழுந்தனை கேட்டியா? என்க, இல்லை என்று சீதா தலையசைத்தார்.

ஓஓஓ என் மவள் கேவலமானவள், உன் கொழுந்தன் யோக்கியன் அப்படி தானே உன் நியாயம்,ரொம்ப நல்ல நியாயம் மா.தன் வாழ்க்கையையே தொலைச்சிட்டு தனி மரமா என் மவள் நிக்கிறதுக்கு என்ன பதில் சொல்ல போறீங்கம்மா?.

உங்களையெல்லாம் உறவுனு சொல்லவே வாய் கூசுது, நான் கொலைகாரனா மாறுகிறதுக்குள் தயவு செய்து, இங்கிருந்து போய்டுங்கம்மானு சிவசாமி சொல்ல, கோவப்படாத மனுஷனே இன்று இப்படி சொல்கிறாரேனு அதிர்சியாக பார்த்தனர்.

சதாரா...

வரலெட்சுமி நோன்பு பூஜைக்காக, வழக்கம் போல தோழிகளை பூஜைக்கு வரச்சொல்வதற்காக, தாமரையையும் பூரணி கூப்பிட்டுச்சென்றார்.

அவர்களெல்லாரும் தாமரையை யாரென்று கேட்க,சொந்தக்கார பெண்ணென்றும், ஊரிலிருந்து வந்துருக்கிறாளென்றார்.

சிலரோ, மாறனுக்கு கட்டப்போகும் பெண்ணா? என்றும் கேட்க, சிரித்துக்கொண்டவர், கடவுள் சித்தம் என்க,அவர்கள் மராட்டியில் பேசியதால், தாமரைக்கு எதுவும் புரியவில்லை.

மறுநாள் மாறன், பூரணி, தாமரை மூவரும் விஸ்வத்திடம் சொல்லிக்கொண்டு டவுனிற்கு சென்றனர்.பூஜைக்கு தேவையானது மற்றும், வீட்டிற்கு வருபவர்களுக்கு கொடுப்பதற்கான பொருட்களையும் வாங்கி முடித்தனர்.

பின்னர்,அங்கிருந்த ஷாப்பிங் மால் உள்ளே சென்றவர், தாமரை இங்கு எல்லாம் கிடைக்கும், போய் பாரென்று அனுப்பி விட்டு, என்ட்ரன்ஸில் இருந்த ஷோஃபாவில் போய் பூரணி உட்கார்ந்து கொண்டார்.

ஆபீஸ்கு போட்டு போவதற்காக, சில குர்திகளையும், அதற்கு தேவையானவைகளை தேடி எடுத்தவள், அவைகளோடு பில் கவுன்டருக்கு வந்தாள்.அவளுக்கு முன்பாக சிலர் நின்று கொண்டிருந்தனர்.

கிப்ட் பொருட்களை பேக்கிங் செய்ய கொடுத்திருந்ததை வாங்க சென்ற மாறனும் அங்கு வந்து சேர்ந்தான்.

அம்மாவிற்கு கால் பண்ணியவன், எந்த ஃப்ளோரில் இருக்கீங்க? என்க, ஐந்தாவது என்கவும் சிறிது நிமிடந்தில் அங்கு வந்து சேர்ந்தவன், அம்மாவை பார்த்து விட்டு, இவள் எங்கே போனாளென்று கண்களை சுழற்றி தேட, பில் கவுன்டர் அருகில் தாமரை நிற்பது தெரிந்தது.

அவளருகில் சென்றவன் நீ போ நான் வாங்கிட்டு வரேனென்று சொல்ல, இந்தாங்க என்று தனது கார்டை நீட்டினாள்.அவளைப்பார்த்து பல்லை கடித்தவன், எல்லாரும் இவர்களை பார்ப்பதை பார்த்து, சீன் போடாமல் போடி என்றான்.

அவன் பேச்சில் அதிர்ந்தவள் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து பூரணியிடம் சென்றவள், கொழுப்பெடுத்தவன், ரொம்ப பேசுறான்னு மனதிற்குள் திட்டிக்கொண்டே உட்கார்ந்து கொண்டாள்.

என்னமா தேவையானதையெல்லாம் வாங்கினியானு பூரணி கேட்க, ஆபிஸ் போட்டு போக மட்டும் வாங்குனேன் மா.

ஓஓஓ... நம்ப வீட்டுக்கு பின்னாடி தெருவின் கடைசியில், ஒரு பொண்ணு பொட்டிக் வச்சிருக்காள்,அங்கு தான் லீனாவும் போய் வாங்குவாள்மா. இன்னொரு நாள் உன்னை அங்கு கூப்பிட்டு போறேனென்று பூரணி சொல்ல, சரிங்கம்மா என்றாள்.

இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது, அங்கு வந்த மாறன்,99-------00 என்று தாமரையிடம் சொல்ல,அவளோ என்ன இவன் உளரிட்டு இருக்கானென்று பார்த்தாள்.

பில்லை பார்த்து,அந்த நம்பருக்கு அமௌன்ட் ஜி பே பண்ணிடு என்றவன், அம்மா நான் போய் கார் எடுக்குறேன்னு சொல்லிக்கொண்டு அங்கிருந்து சென்றான்.

ஓஓஓ... இவன் ஃபோன் நம்பரை சொன்னானா என்று நினைத்தவள், அம்மா சார் நம்பர் என்ன என்க, அவன் விளையாண்டுட்டு போறான் டா.நீ வா என்றவாறு, அவளை அழைத்துக்கொண்டு வெளியே வர, அவர்களுக்கு முன்பு வந்து கார் நின்றது.

இருவரும் பின் சீட்டில் ஏறியதும், அம்மா சாப்பிட்டே போய்டலாமானு கேட்டுக்கொண்டே கார் டிரைவிங் பண்ண, சரிப்பா என்றார்.

அப்போ அங்கிளுக்கு ஆன்ட்டி என்று தாமரை கேட்க,உங்க அங்கிள் இன்றைக்கு அவருக்கு புடிச்சிதையெல்லாம் இவ்வளவு நேரம் வெளுத்து வாங்கிட்டு இருப்பார்.

பண்டிகை நாள் யாருக்கு கொண்டாட்டமோ இல்லையோ, இவனோட அப்பாக்கு ஜாலி தான் என்று பூரணி சொல்ல, அப்போவாது மனுஷன் நல்ல சாப்பாடு சாப்பிடட்டுமேமா என்றாள் தாமரை.

அவள் சொன்னதைக் கேட்டு மாறன் சிரித்து விட்டான்.

சில நொடி சென்ற பின்னர் தான், தாமரை சொன்னது பூரணிக்கு புரிய, வாலு, வாலு என்றவாறு அவள் கன்னத்தை கிள்ளினார்.

வழக்கமாக சாப்பிடும் ரெஸ்டாரன்ட்கு கூப்பிட்டு போனான். மூன்று பேரும் அவரவர்கு தேவையானதை சாப்பிட்டு முடித்து அங்கிருந்து கிளம்பி வீட்டுக்கு வர, இரவு பத்து மணி ஆனது.

அவர்களிடம் சொல்லிக்கொண்டு மேலே தனது அறைக்குள் வந்தவள், ஒரு குளியலை போட்டு விட்டு, இரவு உடையை போட்டுக்கொண்டு படுத்த சிறிது நிமிடத்திலே தூங்கி விட்டாள்.

நான் வந்தே தீருவேன் என்பது போல கிழக்கே உதயமானான் ஆதவனும்.

தூங்கி எழுந்தவள் தலை குளித்து, பெட்டியில் இருந்த உடையில் ஒன்றை எடுத்து போட்டுக்கொண்டு, ஈர முடியை நன்கு துடைத்தவள், சிறிது முடியை எடுத்து கிளிப் போட்டுக்கொண்டு கீழே வர, வாசலில் கோலம் போட்டிருந்தது.

வீட்டின் உள்ளே வரும் போது வாசல் அருகால் படியோ மாவிலை தோரணத்தில் சந்தனம், குங்குமம் வைத்து அழகாய் ஜொலித்துக்கொண்டிருந்தது.
அதை ரசித்து விட்டு உள்ளே வந்து பார்க்க, ஒரு பக்கம் விஸ்வம் மாவிலை தோரணம் செய்து கொண்டிருந்தார்.

இன்னொரு புறம் மாறன் அங்கிருந்த ஜன்னல்களில் பிளாஸ்டிக் பூக்களால் ஆன தோரணத்தை கட்டிக்கொண்டிருந்தான்.

குட்மார்னிங் அங்கிளென்று தாமரை சொல்ல,தலையசைத்து சிரித்தவர், பூரணி, தாமரை வந்திட்டாள் பாரென்றார்.

வந்துட்டேங்க என்றபடியே காஃபி டம்ளரோடு அங்கு வந்த பூரணி. இந்தாம்மா என்க, நானும் விரதம் இருக்கேன்மா என்றாள்.

அதைக்கேட்டவன், செய்த வேலையை விட்டு விட்டு அவளை திரும்பி பார்க்க, அவளோ அதை கண்டு கொள்ளவில்லை.

அப்படியா மா நல்லது, அந்த மஹாலெட்சுமி அருளால் நல்லா பையன் மாப்பிள்ளையா கிடைக்கட்டும் என்றவர், அப்போ நாம அம்மனை அலங்கரிக்கலாமா என்க, பண்ணலாம்மா என்றாள்.

சரி மா என்றவர், நேற்று பூஜைக்காக வாங்கியதுலாம் அங்கு இருக்கு பாரு, அதை கொண்டு வந்து பூஜையறையில் எடுத்து வை, இதோ நான் வந்துடுறேன் என்று சொல்லிச்சென்றார்

கண்மணி வருவாள்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top