• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
நீலகிரி.!

ஃபோன் கீழே விழுந்தது கூட தெரியாமல் அதிர்வில் இருந்த மகனின் தோளை தட்டிய மயிலா, தம்பி, தம்பி என்றார்.


தாயின் அழைப்பில் நிகழ்வுக்கு வந்தவன், அம்மா என்கும் போதே அவன் கண்ணிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

எப்பாடி என்னாச்சியா?, சொல்லுப்பா என்க,அம்மா தாமரை தாமரை என்க, சொல்லுய்யா தாமரைக்கு என்னாச்சினு மயிலா கேட்க, அவளுக்கு கல்யாணம் ஆகிட்டாமா.

என்னா கல்யாணம் ஆகிட்டா என்றவர், தெளிவா சொல்லுய்யா என்க, கதிர் தாலி கட்டியது, அதை கழற்றி அவன் முகத்தில் தூக்கி எறிந்தது, பின்னர் லெட்டர் எழுதி வைத்து விட்டு வீட்டை விட்டு சென்றது வரை சொல்லி முடித்தவன், ஏன் இந்த கடவுள் எங்களை இப்படி சோதிக்கிறார் மா?.

ஒருத்திய மனசார ஆசைப்பட்டேன், அவள் தான் வாழ்க்கைனு எத்தனை கனவு என்குள்ள இருந்துச்சி, அதை நீ நாசமாக்கிட்ட.

இப்போ அவ வாழ்க்கைய அங்க ஒருத்தன் நாசமாக்கிட்டான். ச்சை... என்ன வாழ்க்கை இது?.

உன் அவசர புத்தியால என் வாழ்க்கையில இப்போ என்ன நடந்துருக்கு பார்த்தியா? என்றவன், பெத்த மகன் ஆசையை விட,எவங்களோ ஒருவரோட உசுரு தான் உனக்கு பெருசா போகிட்டு இல்லை?.

அடுத்து எவனோ,இல்லை எவளாவது சாக கிடப்பாங்க, அவங்களுக்கும் மகள் இருந்தா முன்னாடியே போய் சொல்லி வச்சிடு, என் மகன் வாழ்க்கை கொடுப்பான்னு.

ஏன்னா உனக்கு தான் அடுத்தவங்க உசுரு நல்லா போகனும்னு பெரும் கவலையே என்றவன், ஏன்பா இதையெல்லாம் நான் தெரிஞ்சிக்க தான் என்னை வர வைத்தாயா?.

சொல்லுப்பா?, இப்போ உனக்கு சந்தோஷம் தானே?.

ஒருத்தி இத்தனை நாளா நடிச்சி ஏமாத்தியிருக்காள் அவளை கண்டு பிடிக்க துப்பு இல்லை, ஆனால் தியாகி பட்டம் வாங்க மட்டும் ரெடியா இருப்பீங்க இல்லையா?.

ஏன் டா இங்கு வந்தேனு இருக்கு ச்சை என்றவன், அப்பா இத்தனை நாளா என்னை வெளி நாட்டில் இருக்கும் முதலாளியோட இன்னொரு கார்மென்ட்ஸ்கு போறியானு கேட்டுக்கிட்டே இருந்தார்.அதுக்கான அவசியம் இதுவரை எனக்கு வரலை. இப்போ நான் போகனும்னு இருக்கேன்.

இப்போதைக்கு எனக்கு மன மாற்றம் வேண்டும். இந்த சூழலில் இருந்தால் நான் பைத்தியமாகுவேன், இல்லை வேற எதாவது முடிவெடுப்பேன். அதனால் நான் அங்கே போக முடிவு செய்துட்டேன்.என் முடிவில் எந்த மாற்றமும் இல்லை .

வேண்டும்னா அவளை டைவர்ஸ் பண்ணிட்டு, வேறு கல்யாணம் பண்ணிக்கொள்ள சொல்லுங்க.

எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அதுமில்லாமல் அவள் முகத்தை பார்க்க கூட எனக்கு பிடிக்கலைப்பா என்றவன், வேக வேகமாக தயாராகி பெற்றோர்களிடம் சொல்லிக்கொண்டு, அவர்கள் பதிலை கூட எதிர் பார்க்காமல் அங்கிருந்து சென்றான்.

போகும் மகனை தடுத்து நிறுத்த வழி இல்லாமல்,மயிலாவும், மூக்கையனும் பேயறைந்தது போல அதிர்ந்து போய் நின்றனர்!

சதாரா...

வேலை முடிந்து மாறனோடு வீட்டிற்கு வந்த தாமரை, தனது ரூமிற்கு சென்று ஃப்ரஷ் ஆகி கீழே வந்து சாப்பிட்டு முடித்து தனது அறைக்குள் வந்தவள், பின்னர் வி. வி கொடுத்த வேலையை தொடங்க,மனம் சஞ்சலமாக இருக்க,அவளால் ஓவியத்தில் கவனம் செலுத்த முடியவில்லை.

அதற்கு காரணம் இன்று அவளோடு டிரைனிங்கில் இருந்தவர்களெல்லாரும் அவளிடம் நீங்கள் மிஸ், ஆர் மிசஸ் தாமரையா என்க,எந்த பதிலையும் சொல்ல முடியவில்லை.வெறும் சிரிப்போடு ஐ ஆம் தாமரை என்று நிறுத்திக்கொண்டாள்.

அவள் நேரமோ என்னவோ தெரியவில்லை.இன்று அவர்கள் டிசைனிங் செக்க்ஷனுக்கு,திருமண லெகங்ஹா டிசைன் பார்க்க இரண்டு ஜோடிகள் வந்திருந்தனர்.

எல்லாம் சேர்ந்துக்கொண்டு கதிரின் நினைவுகளோ, தாமரையை வண்டாய் குடைய ஆரம்பித்தது.அதிலிருந்து தப்பித்து ஓடி வந்தும்,அவன் செய்த செயல்கள் நினைவில் வருவதை தடுக்க முடியாமல் உள்ளுக்குள் போராடிக்கொண்டிருக்க, வெளியே இயல்பாக இருப்பதைப்போல காட்டிக்கொண்டாள்.

ஒரு வழியாக வீட்டிற்கும் வந்தாச்சி, இனி தனது வேலையில் கவனத்தை செலுத்த நினைக்க, அவன் நினைவே வருதேனு தலையை பிடித்து கண்ணை மூட, ஏரிக்கரையில் அவன் கையை பிடித்து நிறுத்திய நினைவு வரவும் தன்னை மறந்து முரட்டுப்பயலென்று திட்டினாள்.

இனி வரைய முடியாது என்பது தோன்ற, அதையெல்லாம் எடுத்து வைத்து விட்டு, நைட் லேம்பை மட்டும் ஆன் பண்ணி மெத்தையில் படுத்துக்கொண்டாள்.

நேரமும் கடந்து சென்றும் தாமரைக்கு தூக்கம் வருவது போல தெரியவில்லை.

சிறிது நேரம் புரண்டு படுத்தவள், சரி கொஞ்ச நேரம் வாக் பண்ணினால் நன்றாக இருக்குமென்று தோன்ற, கதவை திறந்தவள், அங்கிருந்து மாடிக்கு சென்று பார்க்க, இரவு நேரமும், தூரத்தில் தெரியும் மின் விளக்கின் ஒளியும், வானில் இருந்த வெண்மதியும் அவளை வரவேற்றது.

நிலவின் வெளிச்சம் நன்கு தெரிந்தது. அப்பொழுது மாடிப்படியில் யாரோ வரும் காலடி சத்தம் கேட்டு பயந்தவள்,குரலில் தைரியத்தை வர வைத்துக்கொண்டு யாரு? என்றாள்.

நான் தான் என்றவாறே, மாறன் வந்து கொண்டிருந்தான்.

தூங்காமல் இந்த நேரத்தில் என்ன பண்ணுறீங்கனு இருவரும் ஒரே நேரத்தில் கேள்வியை கேட்டனர்.

தூக்கம் வரலை, சரி கொஞ்சம் வாக் பண்ணலானு மாடிக்கு வந்தேனென்றாள்.

ஓஓ என்றவன், கதவு திறக்கும் சத்தம் கேட்டது. வேறு யாரும் வர வாய்ப்பு இல்லை, இருந்தாலும் ஒரு சந்தேகம், அதனால் தான் வந்தேனென்றான் மாறனும்.

ம்ம் என்றவள் தூரத்து நிலவை வெறித்து பார்த்துக்கொண்டிருப்பதை கண்டவன், எதுவும் நிரந்தரமில்லை என்றான்.

யார் சொன்னாலென அவனை திரும்பி பார்க்காமலே கேட்டாள்.

குட் கொஸ்டீன் என்றவன், பழமொழி சொன்னால் கேட்டுக்கனும், ஆராய்ச்சி பண்ணக்கூடாது.என்ன பிரச்சினை உனக்கென்று நேரடியாக விஷயத்திற்கு வந்தான்.

மாறனின் கேள்வியில் திடுக்கிட்டவள், அப்படிலாம் ஒன்னும் இல்லையே.

ஆஹான் என்றவாறே அவளருகில் வந்தவன், எங்கே என்னை பார்த்து சொல்லு பார்க்கலாம் என்க, அருகில் கேட்ட மாறனின் குரலில் அதிர்ந்து திரும்ப,இரண்டடி இடைவெளியில் மாறன் நின்றிருந்தான்.

கமான் இப்போ சொல்லென்று அவளை தீர்கமாக பார்க்க, ஒரு முறை அவனை நிமிர்ந்து பார்த்தவள், தன்னைப்பற்றி சொல்லத்தொடங்கினாள்.

நான் தாமரை என்க, நெக்ஸ்ட் என்றான்.

பின்னர் ஏழு வயதில் தனது அத்தை வேதாவோடு நீலகிரிக்கு வந்ததையும், அங்குள்ள மலைவாழ் மக்களுக்கான சின்ன மருத்துவமனையில் வேதா நர்சாக இருப்பதாக சொன்னாள்.

பின்னர் அங்கு பவியும், மருதுவும் நண்பர்களானது, ஒரே பள்ளியில் மூவரும் படித்ததையும், மருது மூன்று வயது பெரியவனென்றாள்.

கல்லூரி வரை அங்கையே படித்து விட்டு கோவையில் இருக்கும் பிரபலமான டெக்ஸ்டைல்ஸில் ஆறு மாதம் வேலை பார்த்ததும், சிறு வயதில் இருந்து ஆசைப்பட்ட தனது லட்சியத்தை நோக்கி செல்ல வேண்டியதால், இரண்டு மாதம் தன்னை பெற்றவர்களோடு இருந்து விட்டு வர, வேதாவிடம் சொல்லிக்கொண்டு சீமக்கரைக்கு வந்ததும்,பொங்கல் பண்டிகையில் மஞ்சள் நீர் ஊற்றி விளையாடும் விழாவில் கதிர் தனக்கு தாலிக்கட்டியதையும் அவன் சொல்லிய காரணத்தையும், அவன் கட்டிய தாலியை கழற்றி எறிந்து விட்டதையும், இரு குடும்பத்திற்கும் உள்ள மனஸ்தாபத்தில், என் வாழ்க்கை கால் பந்தாகிவிட்டது என்று சொல்லி கண்கலங்கினாள்.

கேட்ட மாறனுக்கும் கதிரின் மேல் கோவம் வந்தது. பெரியவர்கள் பிரச்சினை என்றால் அவர்களிடம் மோத வேண்டும்.

அது என்ன பெண் பிள்ளை வாழ்க்கையில் விளையாடுவதென்று பல்லை கடித்தவன்,லீனாவை எப்படி தெரியுமென்று கேட்டான்.

அவன் கேள்வியில் உள்ளுக்குள் அதிர்ந்தவள்,என்ன சொல்வதென்று முழித்தவளோ பேஸ்புக் ப்ரண்ட் என்று அடித்து விட்டாள்.

ஓஓ என்றவன் அவள் பேஸ்புக்ல அக்கவுன்ட் வச்சிருக்காளானு கேட்கும் போதே மாறனின் முகம் கோவத்தில் சிவந்தது.

இல்லை இல்லை ... முன்னாடி இருந்தாங்க, இப்போ இல்லை என்கவும் அப்படியா?.

வீட்டில் என்னை எப்படி தெரியுமென்று விசாரித்தால் இப்படி எதாவது சொல்லென்று,லீனா தான் சொல்லிக்கொடுத்தது.

ஆமாம் என்றாள்...

சரி அடுத்து என்ன பிளான் என்றான்.

எதற்கென்று தாமரை கேட்க, அவளை ஒரு பார்வை பார்த்தவன், ம்ம் நம்ப கல்யாணத்துக்கென்றான்.

அவன் சொன்னதைக்கேட்டவள் என்னாஆஆ என்று கண்கள் விரிய அதிர, ஹேய் சும்மா சொன்னேன்.கல்யாணம் பண்ணுற ஐடியாலாம் இப்போதைக்கு எனக்கு கிடையாது என்றான்.

ம்ம்..கொஞ்ச நாள் போகட்டும்,பிறகு அடுத்தது என்னவென்று யோசிக்குறேனென்றாள்.

சரி.அதுவரை மேடம் என் கம்பெனியில் அடைக்கலமோ என்க,அது உங்க கம்பெனி தானென்று இன்டர்வியூவில் உங்களை பார்க்குற வரைக்கும் எனக்கு தெரியாதுங்களே சார்.

அதற்கு ஓஓ என்றவன்,எதுக்கு இந்த சாரை பிடித்து தொங்கிட்டு இருக்க?.
ஆபிஸ்ல தான் நான் உனக்கு சார்.ஆமாம் அந்த ஹீரோ பேரு என்ன?

எந்த ஹீரெவென்றாள்?.

ம்ம் உன் முன்னால் கணவனென்க, எதேஏஏஏ முன்னால் கணவனானு திகைத்தாள்!.

எஸ்... நீ தான் அவன் வேண்டாமென்று தாலியை கழட்டி தூக்கி எறிந்து விட்டாயே, அப்போ முன்னால் கணவன் தானேனு மாறன் சொல்ல,அவளால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை.

இப்போ நீங்க மிஸ் தாமரையா?, இல்லை மிசஸா? என்றான்.

ஒரு நொடி கண்ணை மூடி திறந்தவள், இப்போதைக்கு நான் தாமரை மட்டுமென்று சொல்லி விட்டு, படியிலிறங்கி கீழே சென்று விட்டாள்.

கீழே சென்றவள் சொல்லிச்சென்ற விஷயத்தை பற்றி தான் மாறன் யோசித்துக்கொண்டிருந்தான்.
எந்த பெண்ணுக்கும் ஏற்க முடியாத சூழல் தான்.

விரும்பி கல்யாணம் பண்ணுவது வேறு, இல்லை, ஒரு தலையாக காதலித்து அதற்காகவும் கல்யாணம் பண்ணிக்கொள்ளும் சிலரும் உண்டு.

ஆனால் இங்கு தாமரை விஷயத்தில் குடும்பத்தை பழி வாங்க நினைத்து பண்ணிருக்கானே இவனெல்லாம் என்ன ஆம்பளை?.நேரடியாக மோத தைரியம் இல்லாதவன் பொண்ணு கிட்ட போய் வீரத்தை காட்டிருக்கான் கோழைப்பயலென்று திட்டிக்கொண்டிருந்தான்.

அப்பொழுது மாறனின் மனசாட்சியோ,ஆமாம் நீ எதுக்கு இப்படி ஓவரா துள்ளுறாய்?.இது அவளோட பிரச்சினை. அதுக்கு என்ன முடிவு எடுக்கனுமென்று அவளுக்கு நல்லா தெரியும், உனக்கு என்ன வந்துச்சி?.

அது என்ன இத்தனை நாளும் இல்லாமல் எங்கிருந்தோ வந்த ஒருத்திக்காக உருகுற?, என்ன தம்பி லவ்வா என்றது?.

அப்படிலாம் ஒரு மண்ணும் இல்லை.

இந்த காதல் கன்றாவியெல்லாம் எனக்கு செட்டாகாது என்றவன், ஒரு மனிதாபிமான அடிப்படையில் தான் அவ கிட்ட கேட்டேனென்றான்.

அப்படி இருந்தால் நல்லது தானென்று மனசாட்சி செல்ல, சிறிது நிமிடம் நிலவை வெறித்து பார்த்தவன் பின்னர் கீழே சென்று விட்டான்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
சதாரா!

லீவ் என்பதாலும் வழமை போல கோலத்தை போட்டு வந்து படுத்தவள், தூங்கி எழு காலை பத்தானதா.


என்ன இவ்வளவு நேரம் தூங்கிட்டோமென்று எழுந்தவள், படுக்கையை சரி செய்து வைத்து விட்டு, குளிக்க சென்றாள்.

பினானர் பால்கனியில் இருந்த கொடியில் துணிகளை காய வைக்கும் போது, ஹாலிங் பெல் சத்தம் கேட்டது.

செய்த வேலையை விட்டவள், அங்கிருந்து போய் கதவை திறக்க, ஏண்டி அறிவில்லை?,எத்தனை கால் பண்ண?,என்னாச்சோ?, ஏதாச்சோனு பதறி போய் வந்துருக்கேனென்று மாறன் சொல்ல, தனது கைகளை கட்டிக்கொண்டு அவனை முறைத்து பார்த்தாள்.

கொஞ்சம் ஓவரா தான் போய்ட்டோமோ?? என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டவன், இல்லை, விடிந்து இவ்வளவு நேரமா உன்னை காணுமென்று அம்மா புலம்பிட்டு இருக்காங்க.

அதுவும் இல்லாமல், நள்ளிரவுல பேய் போல மொட்டை மாடியில் உலாத்திட்டு இருந்தியா, ஒரு வேளை மோகினி பேய் எதாவது தூக்கிட்டு போய்ட்டோனு...மாறன் சொல்லிய மாடுலேஷனை பார்த்தவளுக்கு சிரிப்பு வந்தது.

ஹப்பாடா சிரிச்சிட்டாளென்று உள்ளுக்குள் சொல்லிக்கொண்டவன், ரொம்ப தூக்கம் போல,ம்ம் என்றவள், இன்னும் 5 மினிட்ஸ்ல கீழே வரேன்னு அம்மா கிட்ட சொல்லுங்களென்று கதவை தாழிட்டவளோ விட்ட வேலையை தொடர்ந்தாள்.

ஏன் கதவு திறந்திருந்தால் இவளை கடத்திட்டு போய்டுவேனானு முணுமுணுத்துக்கொண்டே கீழே வந்தவன்,இன்னும் பை மினிட்ஸ்ல கீழே வருவாள்மா..

மாறா....இந்த டி போட்டு பேசுறதுலாம் இங்க உள்ள கல்சருக்கு செட்டாகும். தமிழ்நாட்டு பெண்களுக்கு உரிமையானவனை தவிர, வேறு யார் கூப்பிட்டாலும் பிடிக்காது.

அதனால் அவள்,இவள்னு தாமரையை சொல்லதப்பானு பூரணி கண்டித்துக்கொண்டிருக்கும் போது, தாமரையும் அங்கு வந்து சேர்ந்தாள்.

என்னம்மா ரொம்ப தூக்கமோ என்று கேட்டுக்கொண்டே கிச்சனிற்குள் சென்று தாமரைக்கு சூடாக காஃபியை எடுத்து வந்து கொடுத்தவர், இதை முதல்ல குடி என்றார்.

நைட் தூங்க லேட் ஆகிட்டுங்கம்மா அதான் எந்திரிக்கவும் நேரமாகிட்டென்க,
அம்மா இப்போவாது சாப்பிட எதாவது தருவியா?, இல்லையானு மாறன் முறைக்க,இதோப்பா என்றவாறே உள்ளே போனவர் சமைத்த டிபனை எடுத்து வந்து மாறனுக்கு பரிமாறிக்கொண்டே, நீயும் உட்காருமா என்க, இப்போ தானேம்மா காஃபி குடிச்சேன் வேண்டாமென்றாள்.

எங்கேம்மா அங்கிளை காணுமென்று தாமரை கேட்க,இது லைப்ரரிக்கு போகும் நேரம்மா.

நம்ப வீட்டுக்கும் பின்னாடி தெருவில் தானிருக்கு. அவரோட கூட்டாளிங்க கூட போயிருக்கார் என்றவாறு இன்னொரு தோசை ஊத்தட்டுமா என்க,ஏன் பூரணி, என்னையும் உன் புருசர் வயிறு போல,புல்டோசராக்க முடிவு பண்ணிட்டியா என்றான்.

டேய் படுவா, என் புருஷனுக்கு எங்கேடா தொப்பை இருக்கு?.

அதானே உண்மைய சொன்னால் இந்த உலகம் ஏத்துக்காதே என்று மாறன் சிரிக்க,நாளைக்கு பஜார் போகணும் பா. திங்கட்கிழமை பூஜைக்கு வருபவர்களுக்கு,வழக்கம் போல எதாவது வைத்து கொடுத்து அனுப்பனும் இல்லையானு பூரணி சொல்ல, ஆமாமா.எப்ப கிளம்பலாமென்று நீங்களே சொல்லுங்க போயிட்டு வந்துடலாம்.

அப்புறம் எல்லாரையும் கூப்பிட போகனுமேனு மாறன் சொல்ல, ஆமாப்பா,நானும் தாமரையும் ஈவ்னிங் போயிட்டு சொல்லிட்டு வந்துடறோம்.

என்ன பூஜையென்று அவளுக்கு தெரியாததால் அமைதியாக இருந்தாள்.

அவள் முகத்தை வைத்து அவளுக்கு பேசுவது என்னவென்று புரியவில்லை என்பது இருவருக்கும் புரிந்தது.

அம்மாடி தாமரை, திங்கட்கிழமை வரலட்சுமி நோன்பு வருதுமா. நம்ம வீட்டில் நடக்கும் பூஜைக்கு எனக்கு தெரிஞ்ச தோழிகள் எல்லாரும் பூஜைக்கு வருவாங்கமா.அன்றைய தினம் ஆபிஸ் எல்லாம், இங்கே நார்த் சைடில் லீவ்.உனக்கும் லீவ் தான்

இல்லைங்கம்மா எனக்கு அதெல்லாம் தெரியாதென்க,என்ன மாறா, வழக்கம் போல மெயில் அனுப்பிட்டு,நோட்டீஸ் போர்டில் போடலையா என்று பூரணி கேட்க, போட்டாச்சிமா.இவங்க பார்ககலை போல...

மாறன் சொன்னதைக் கேட்டு தனது ஃபோனில் இருந்து மெயிலை ஓபன் பண்ணி பார்க்க, நேற்று மாலையே திங்களன்று பூஜைக்காக லீவென்று மெயில் வந்திருந்தது.

அச்சோ இதை நாம பார்க்கவே இல்லையேனு புலம்பியவளின், முகத்தை பார்த்த இருவருக்கும் சிரிப்பு வந்து விட்டது.

சீமக்கரை....தேவி வீடு..

ச்சை,உங்களை அப்பானு சொல்லவே கேவலமாயிருக்கு.அப்போ சொத்துக்காக கொலை பண்ண கூட தயங்க மாட்டீங்க அப்படி தானே?உங்களுக்கு போய் புள்ளையா பொறந்ததை நினைத்து வெட்கமாக இருக்கென்றவனோ தந்தையிடமிருந்து பிடிங்கி எறிந்த பெல்டை தேடி எடுத்து,அழுது கொண்டிருந்த தேவியிடம் வந்தவன்,என்ன பண்ணுனனு நீயே மரியாதையா சொல்லிடு என்றான்.

அண்ணா என்று அவள் பின்னாடி நகர, என்னை கொலைகாரனா ஆக்காதேனு தேவ் சொல்ல, சொல்றேண்ணா, சொல்லுறேன்.கதிர் மாமாவை தவிர, வேறு யாரையும் என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை.நேர் வழியில் கேட்டு பார்த்தும் புண்ணியம் இல்லை. இனி குறுக்கு வழியில் தான் போகனும்னு முடிவு பண்ணுனேன்.

அப்போ பக்கத்து ஊர்ல போதை மாத்திரைங்க விக்கிறாங்கனு, நான் இன்டர்வியூக்கு போன போது பேசிக்கிட்டாங்க.எந்த கடைனு விசாரித்து அங்க போனேன்.அந்த நேரம் ஒரு குடிகாரன் வந்தான். அவனை கூப்பிட்டு நான் சொல்லுற பொருளை வாங்கிட்டு வா, உனக்கு பணம் தருகிறேன்னு சொல்ல, சரின்னு சொன்னான்.என் முகத்துல மாஸ்க் போட்டிருந்ததால், நான் யாருனு அவனுக்கு தெரியாமல் போனது.

சொன்னப்போலவே அவன் வாங்கிட்டு வந்து கொடுக்கவும், அந்த கடைக்கு போலிஸ் வந்துச்சி.மாத்திரைய வாங்கி கிட்டு, அந்த குடிகாரனுக்கும் பணத்தை குடுத்துட்டு வீட்டுக்கு வந்துட்டேன்.

போதை மாத்திரையை கலந்து கொடுத்துவிட்டால் நடக்குறது எதுவும் தெரியாது, மாமா தப்பா நடந்துக்கிட்டாறென்று சொல்லி, அவரையே கட்டிக்கலானு முடிவு பண்ணிட்டு தான், மாத்திரையை வாங்கிட்டு வந்தேன்.

அப்போ யாரின் மூலயமாய் இதை கதிர் மாமாக்கு கொடுக்கலானு யோசிக்கும் போது தான், நம்ப தோட்டத்தில் வேலை பார்க்கும் குப்பன்ணன் வந்தாரு.

என்ன பாப்பா சோகமா இருக்கேன்னு கேட்கும் போது, இவரு மூலமாக தான் காரியத்தை சாதித்துக் கொள்ள வேண்டுமென்று முடிவு பண்ணிக் கொண்டேன்.கதிர் மாமா இல்லாமல் என்னால வாழ முடியாது. அதனால தற்கொலை பண்ணிக்க போறேன்னு அழுதுகொண்டே அவர்கிட்டே சொல்ல, அவரும் அதை நம்பிட்டாரு.

ஏன் பாப்பா இப்படி சொல்ற. கதிர் நல்ல தம்பி தான். வீட்ல கேட்டு கல்யாணம் பண்ணிக்கலாமேனு சொன்னாரு.

அப்பா போய் பேசி பார்த்தாங்க, அதற்கு மாமா தான் ஒத்துக்கொள்ளவில்லை. மாமா இல்லாம நான் எதுக்கு வாழனும்?, அதான் சாகப் போறேன்னு சொல்ல, ஐயையோ அப்படிலாம் பண்ணாத பாப்பானு பதறுனாறு.

அவர் பதற்றத்தை பார்த்ததும், நீங்க நினைச்சா நடக்கும்ணானு நான் சொல்ல, நீ நல்லா வாழனுமென்றால் நான் என்ன வேணாலும் செய்வேன் பாப்பா.சொல்லு, உனக்கு என்ன பண்ணனும்னு கேட்க.

பெருசா ஒன்னும் இல்லன்ணா. இந்த மாத்திரை மட்டும் மாமா குடிக்கிறதில் எதிலையாவது கலந்து கொடுத்துடுங்க.
அப்ப மாமாக்கு சுயநினைவு இருக்காது மற்றதை நான் பாத்துக்குறேன். அதாவது மாமா என் மேல ஆசை வச்சு இருக்கிற போல, நான் ஏதாவது பண்ணிக்கிறேன் அப்படின்னு சொன்னேன்.

நான் சொன்னதை அவரும் நம்பி மாத்திரையை வாங்கிட்டு போயிட்டாரு. அந்த வேலைக்காக வீட்டில் இருந்து கொஞ்சம் பணத்தையும் எடுத்து கொடுத்தேனென்றாள்.

வசந்தியோ அங்கே ஓரமாக கிடந்ததை எடுத்து வந்தவர் என்ன வேலைடி பண்ணி வச்சிருக்கயென்று விளக்கமாற்றால் விலாசி எடுத்து விட்டார்.

அம்மா வலிக்குது அடிக்காத அடிக்காத என்று அவளும் அழ, நீ இருக்கிறதை விட செத்து தொலைடி.சொத்து, பணம், நகை நட்டு பெருசு இல்லை. மானம், மரியாதை தான் ஒரு பொண்ணுக்கு முதலில் தேவை.அதையே இழக்க துணிந்திட்ட என்றால்,நீ எல்லாம் என்ன ஒரு கேவலமான ஜென்மமா இருப்பாய்?.

அப்படியே உன் அப்பனோட சாக்கடை புத்தி தான் உனக்கு வந்திருக்கு தூ என்று துப்பியவர், நீ ஒவ்வொரு விஷயத்துக்கும் பிடிவாதம் பிடிக்கும் போது, க, அப்பவே இந்த தொடப்பக்கட்டை எடுத்து உன்னை நான் உதைச்சிருந்தா, இந்த அளவுக்கு வந்திருக்காது.

வழி வழியா அடுத்தவங்க குடும்பத்தை கெடுத்து வாழனும்னு நினைக்கிறீங்களே, எவ்வளவு மட்டமான புத்தி உங்களுக்கெல்லாமென்று கணவனை பார்த்து கேட்டவர், அப்போ எவனாச்சு பணம் தருகிறேன்னு சொன்னால் உன் அம்மாவை அனுப்பிருப்பியோ? என்க,மனைவியின் கேள்விகள் சாட்டையடியாக வந்து விழுந்தது.

கண்ணனால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை.மகள் இப்படி செய்வாளென எதிர்பார்க்காத ஒன்றென்றதால் அவருக்கும் பேரதிர்ச்சியே.

அப்பாடி பெரியவனேனு வசந்தி கூப்பிட, சொல்லுமா என்றான். இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால், இந்த ரெண்டு பாவிங்களை கொன்னாலும் கொன்னுடுவேன்.

தயவு செய்து என்னை எங்கையாவது ஆசிரமத்தில் விட்டுருப்பா. இருக்குற கொஞ்ச காலத்தை அங்க போக்கிக்கிறேனென்று வசந்தி அழ, உன் மகன் உசுரோட தான் இருக்கேன்.

நீ செய்யலைனா நானே அதை செய்வேன் என்றவன், உன் மகன் சொந்த சம்பாத்தியத்தில் வாங்குன வீடு இருக்கு, வா நாம போகலாமென்று மாடிக்கு போனவன் கையில் ஒரு சாவியை மட்டும் எடுத்து வந்து,தனது தாயை கூப்பிட்டுக்கொண்டு வெளியே வந்தவனோ அவன் உழைப்பில் வாங்கி, இத்தனை நாட்கள் மூடியே இருந்த காரை வெளியே எடுத்தான்.அதில் வந்து வசந்தியும் உட்கார்ந்து கொண்டார்.

காரை ஓட்டிக்கொண்டிருந்த தேவ்,அம்மா, மாமா வீட்டுக்கு போய் விட்டு, பிறகு அங்கிருந்து கிளம்பலாமா என்க, நானும் அதான்பா நினைத்தேன்.

சரிமா என்று நேராக கதிர் வீட்டை நோக்கிச்சென்றவன் சிறிது நிமிடத்தில் அங்கு வந்து சேர்ந்தான்.பின்னர் இருவரும் காரிலிருந்து இறங்கி, வீட்டின் உள்ளே வந்தவர்கள், அம்மா என்று வசந்தி கூப்பிட,அந்த குரலில் அங்கிருந்தவர்களெல்லாரும் திரும்பி பார்த்தனர்.

வாம்மா வசந்தி, வாப்பா தேவ் என்று அந்த சூழலிலும் இருவரையும் வரவேற்றனர்.

நடந்த எல்லாத்திற்கும் அந்த ஆளும், அவரோட பொண்ணும் தான் காரணம்னு இப்போ தான் எங்களுக்கு தெரிஞ்சிது.அந்த ரெண்டு பாவிங்களால் தான் உங்க குடும்பத்திற்கு இந்த நிலமை. அந்த பாவிங்களை மன்னிச்சிடுங்கனு சொல்ல வில்லை.

அதை நினைத்து உங்க சந்தோஷத்தை கெடுத்துக்காதீங்க.தேவ் கூட நான் மதுரைக்கு போறேன்.இனி எந்த காலம் உங்களையெல்லாம் பார்ப்பேனென்று தெரியவில்லை என்று வசந்தி கண் கலங்க,ஏன்மா இந்த முடிவு?.அவசரப்படாதத்தா என்றார் பிரகாசம் தாத்தா.

இல்லைப்பா மனசு எனக்கு வெறுத்துடுச்சிப்பா. இந்த இடைவெளி தேவைனு படுது என்றவர்,பிறகு அவர்களிடம் சொல்லிக்கொண்டு வாழ்க்கையின் புது அத்தியாயத்தை தொடங்க,அந்த ஊரை விட்டுச்சென்றனர்.

கண்மணி வருவாள்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top