• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
சதாரா!

வேதாவின் நினைவில் அழுது கொண்டிருந்தவள்,எப்பொழுது தூங்கினாளென்று தெரியாது.


வழக்கம் போல் அதிகாலை விழிப்பு வரவும் குளித்து முடித்து நீண்ட கூந்தலை இரண்டு சைடிலிருந்தும் சிறிது முடியை எடுத்து கிளிப் போட்டவள், பின்னர் ஈரம் போக விரித்து விட்டு, கீழே வந்து வாசலை கூட்டி விட்டு கோலத்தை போட்டாள்.

அப்பொழுது முன் கதவை திறந்து வாக்கிங் போவதற்காக வந்த மாறன்,அங்கிருந்தவளை பார்த்து அசந்து போனான்.

நீண்ட முடி மயில் தோகை போல படர்ந்து விரிந்து தரையில் புரள, நளினமாக கோலம் போடுபவளை ரசித்து பார்க்காமல் இருக்க முடியவில்லை.

தனது அம்மா வரும் காலடி சத்தம் கேட்டு சுதாரித்தவன், அடேய் இது தப்புடா. உன்னை நம்பி தான், இவளை உன் தங்கச்சி அனுப்பி வைத்திருக்கிறாளென அங்கிருந்து வேகமாக சென்று விட்டான்.

வாசலுக்கு வந்த பூரணி எந்திரிச்சிட்டியாடாமா என்க,ஆமாம்மா. வழக்கம் போல விழிப்பு வந்துட்டு.இனி இந்த வேலையை நான் பார்த்துக்குறேன், நீங்க சிரமப்படாதீங்க.

சரிடாமா.வா காஃபி ரெடியா இருக்கு என்க, இதோ வந்துட்டேன் என்றபடியே அவரோடு உள்ளே வந்தாள்.

இரண்டு கப்பில் காஃபியோடு வந்தவர், டைனிங் டேபிளின் மீது வைத்து விட்டு, பூனாவில் கிடைக்கின்ற சினாக்ஸை எடுத்து வந்து வைத்தார்.

டீ, காஃபி கூட இதை சாப்பிட்டால் நல்லா இருக்கும் என்றவரிடம், இதற்கு பேர் என்னம்மா? என்க.

காரி,பட்டர்..நம்ப ஊர் சைடில் வறுக்கி போல தான், ஆனால் அவ்வளவு ஹார்டா இருக்காது சாப்பிட்டு பாரு.இது இல்லைனா லீனா வீட்டையோ ரெண்டாக்கிடுவாளென சிரித்தார்.

பின்னர் சமையலறைக்குள் வந்தவள், முதல் நாள் இரவு மாறன் கேட்டது போல பீட்ரூட் சப்பாத்தியும், பன்னீர் பட்டர் மசாலாவும் செய்தவள், விஸ்வத்திற்காக, உடைத்த கோதுமையில் புலாவும், அதற்கு தேங்காய் சட்னியையும் செய்து முடிக்க, அம்மா காஃபி என்றபடியே மாறன் வந்தான்.

சரிங்கம்மா நான் போய் ரெடியாகிட்டு வரேனென்றவள் அனார்கலி மாடல் சுடிதாரை போட்டுக்கொண்டு, காய்ந்த தலைமுடியை அழகாய் பின்னி அப்பாயின்மென்ட் லட்டரை எடுத்து ஹேண்ட் பேகில் வைத்துக்கொண்டாள்.

நெற்றியில் சின்ன பொட்டை மட்டும் வைத்தவள், பேகையும், ஃபோனையும் எடுத்துக்கொண்டு கீழே வர, விஸ்வம் பூஜையறையில் ஸ்லோகம் படித்துக்கொண்டிருந்தார்.

ஹேண்ட் பேகை டைனிங் டேபிளின் மேல் வைத்து விட்டு, சாமியறைக்கு முன்பு போய் கண் மூடி நிற்க,அம்மாடி தாமரை அபிராமி அந்தாதி ஒன்னு பாடென விஸ்வம் சொல்ல, நானா என்று அதிர்ந்து கண்ணை திறக்க,ம்ம் என்றவர், சாமியை நோக்கி வணங்க, சரணம் மட்டும் அவள் பாட, அந்த குரலில் மூவரும் மெய் மறந்து போயினர்.

சூடம் ஏந்திய தட்டோடு வெளியே வந்தவர், இனி நீதான் தினமும் சாமிக்கு முன்னாடி எதாவது சரணமோ இல்லை பல்லவியோ பாட வேண்டும்.

இதை உன்னுடைய வழக்கமாக வைத்துக் கொள்ளென தட்டிலிருந்த, விபூதி குங்குமத்தை அவள் நெற்றியில் பூசியவர்,தீர்க்க சுமங்கலியாக இருமா என்றார்.

அந்த சுமங்கலி என்ற வார்த்தையை கேட்டவள் அதிர்ந்து, பின் சுதாரித்து கொண்டாள்.பின்னர் இருவரும் சாப்பிட்டு காரில் ஏரி ஆபிஸை நோக்கிச்சென்றனர்.

கார் பார்க்கிங்கில் வந்து நிறுத்தியவன் ஆல் த பெஸ்ட் என்க, தேங்க்யூ சாரென சொல்லிக்கொண்டு கதவை திறந்து இறங்கியவள், அங்கிருந்த லிப்டில் ஏறி டிசைனிங் தளத்திற்கு சென்றாள்.

காரிலிருந்து இறங்கியவன், திமிரு புடிச்சவள், சாராம் சார். ஏன் மாறனு சொன்னாள் தேய்ஞ்சு போய்டுவாளோனு மனதிற்குள் திட்டிக்கொண்டே தனது தளத்திற்கு வந்தவன், அவன் வேலையை பார்க்க ஆரம்பித்தான்.

டிசைனிங் செக்க்ஷனுக்கு வந்தவள் அங்கிருந்த மேனேஜரிடம் அப்பாயின்மென்ட் லெட்டரை காட்ட, வாங்கி படித்தவர், அவரும் ஆல் த பெஸ்ட் சொல்லி விட்டு,வேலையில் முன் அனுபவம் இருந்தாலும் கம்பெனி ரூல்ஸ் படி ஒன் மந்த் டிரைனிங்கிற்கு அனுப்பி வைத்தனர்.

அவளோடு இன்னும் சிலரும் வந்து ஜாயின்ட் பண்ணிக்கொண்டார்கள்.

சீமக்கரை....

அதிர்ந்து நிற்கும் செல்வத்தை பார்த்த வீட்டினர்கள்,இருக்கும் சூழலை மறந்து சிரித்தனர்.

என்ன மச்சான் பேயறைஞ்ச போல நிக்குறனு பெருமாள் கேட்க,எலே நீங்க ரெண்டு பேரும் எப்போல வந்தீங்க என்கவும்,ம்ம் அது வந்து 30 வருஷம் ஆகிட்டு என்றான் ரிது வர்ஷன்.

எலே ரெண்டு புள்ளை பெத்துட்டாலும் உன் குசும்புக்கு கொறைச்சல் இல்லை என்ற செல்வமோ குடும்பத்தை பற்றி அவர்களிடம் விசாரித்தார்.

அங்கு வந்த ராதா சாப்பாடு ரெடி என்க,அப்பு முதல்ல சாப்டுங்க, பிறகு எல்லாத்தையும் பேசிக்கொள்ளலாம் என்றார் பிரகாசம் தாத்தா.

பார்வதி, சீதா, ராதா மூவரும் பரிமாற அனைவரும் சாப்பிட்டு முடித்ததும்
அம்மாடி நீங்களும் சாப்பிடுங்க என்றார் வள்ளி அப்பாயி.

மாப்பு என்று ரிது கூப்பிட,வெளியே போனவன் சிறிது நிமிடத்தில் கவரோடு உள்ளே வந்து, அதில் இருந்த பணத்தை நீட்ட, நீயே சாமிக்கிட்ட வச்சிடு அப்பு என்றார் பெருமாள்.

சரிங்க மாமா என்றவன் சாமி ஃபோட்டோக்கள் அருகில் சென்றவன், அங்கிருந்த சிந்து ஃபோட்டோவை பார்த்து, ரிது என்று கத்தினான்.

மித்ரனின் சத்தத்தில்,என்னாச்சு என்றபடி முற்றத்தின் அடுத்த பக்கத்தில் இருக்கும் சாமியறைக்கு ஓடி வந்தனர்.

என்னாச்சுடானு ரிதுவர்ஷன் கேட்க, கையை நீட்டி மித்ரன் காட்டியதை பார்த்த ரிது வர்ஷனும் அதிர்ந்தவனின் வாயிலிருந்து வந்த சிந்து ஆன்ட்டி என்ற பேரை கேட்டு வீட்டினர் அதிர்ந்தனர்.

அப்பு இப்போ நீ என்ன பேரு சொன்ன? என்று பிரகாசம் தாத்து கேட்க, தாத்தா இவங்க,இவங்க சிந்து ஆன்ட்டி.

ரிது உனக்கு இவங்களை தெரியுமா? அவனிடம் வந்து பார்வதி கேட்க,அய்யோ அத்தை ஆன்ட்டிய எங்களுக்கு நல்லா தெரியும்.

என்னப்பா சொல்லுற என்றபடியே நெஞ்சை பிடித்துக்கொண்டு வள்ளி அப்பாயி கீழே உட்கார,அத்தை உங்களுக்கு என்னாச்சென்று சீதா பதற,ஒன்னும் இல்லத்தா.

அப்பு நல்லா பார்த்து சொல்லு சாமி, உண்மையிலே உனக்கு இந்த ஃபோட்டோவில் இருக்கும் பெண்ணை தெரியுமானு மீண்டும் வள்ளி அப்பாயி கேட்க,ஆமா அப்பாயி.

அவர்கள் எல்லாரும் அதிர்ந்து நிற்பதை பார்த்து மித்ரனுக்கும், வர்ஷனுக்கும் ஒன்னும் புரியவில்லை.

உங்க எல்லாருக்கும் என்னாச்சு?.

எதுக்கு உயிரோட இருக்கும் ஆன்டிக்கு போய் மாலை போட்டு வச்சிருக்கீங்களென மித்ரன் கேட்க, என்ன சிந்து உயிரோட தான் இருக்கா என்று சந்தோஷத்தில் அதிர்ந்தனர்

ஆமாம்பா என்ற வர்ஷன், ஒரு நிமிஷம் இருங்க என்றபடியே தனது ஃபோனை எடுத்து, குழந்தைகள் பர்த்டேவில் எடுத்த ஃபோட்டோஸ், மற்றும், மித்ரன் நிச்சயத்தில் எடுத்த ஃபோட்டோவில் இருக்கும் சிந்துவை காட்டினான்.

பார்த்த வீட்டினருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

முதல்ல எனக்கு சொல்லுங்க,எதுக்கு இப்படி ஒரு செயலென்று வர்ஷன் கேட்க, மித்ரனுக்கும்,வர்ஷனுக்கும் மீண்டும் ஒரு முறை நடந்ததை எல்லாம் சொல்லி முடித்தனர்.

கேட்ட இருவருக்கும் அதிர்ச்சியே தான்.

கதிரை பார்த்த வர்ஷன், என்னைப்போலவே கல்யாணம் பண்ணிருக்கியேடானு மனசுக்குள் சொல்லிக்கொண்டான்.

அடேய் கதிர்,உங்கிட்ட இப்படி ஒரு செயலை நான் எதிர் பார்க்கவில்லை என்ற வர்ஷன், சரி இனி ஆக வேண்டியதை பாக்கலாம்.

உலகம் ரொம்ப சின்னதாகிட்டு, எந்த மூலையில் தாமரை இருந்தாலும் கண்டு பிடித்திடலாம் என்றவன், தனது ஃபோனிலிருந்து நவீனுக்கு கால் பண்ணினான்.

கடைசி ரிங் கட் ஆகுறதுக்குள் அட்டென் பண்ணிய நவீனிடம், எங்கடா இருக்க என்க,மாடு மேய்த்துக் கொண்டிருக்கிறேன் என்றான் நவீன்.

உனக்கு ஏற்ற வேலைதான், ஆன்ட்டி ஹாஸ்பிட்டலுக்கு போயாச்சானு வர்ஷன் கேட்க?,என்னடா வெறுப்பேத்துரியா?.மூனும் சேர்ந்து பொண்ணை பாரு, புண்ணாக்கை பாருனு இழுத்துட்டு வந்துருக்குங்கடா.
அவளுக்கு மேக்கப் ஐட்டம் வாங்கி கொடுக்கவே நான் இன்னும் ஓவர் டைம் பாக்கனுமென்று நவீன் புலம்பினான்.

நண்பன் சொன்னதைக்கேட்டு சிரித்த வர்ஷன், இன்னும் கொஞ்சம் வெய்ட் பண்ணுடா நேரடியா அறுபதாம் கல்யாணம் பண்ணிக்கலாம் என்கவும்,அடப்பாவி...

யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டுனு நவீன் பாட, மச்சி இந்த நடிப்பை எல்லாம் சிவாஜி காலத்திலே பார்த்தாச்சி பார்த்தாச்சி என்றவன் ஒரு முக்கியமான விஷயம் பேசனும்டா.

என்னவென்று சொல்லுடானு நவீன் கேட்க, கொஞ்சம் அங்கிருந்து எந்திரிச்சி வெளியே வா.ம்ம் என்று அதேப்போல வந்தவனிடம் சுருக்கமாக விஷயத்தை சொல்லி விட, அனைத்தையும் கேட்ட நவீனுக்கு அதிர்ச்சி தான்.

சரி மச்சி மீதிய நான் பார்த்துக்குறேன் தமிழ்நாட்டில் மீட் பண்ணலாம்டா என்றாவாறு கட் பண்ணினான்.

நவீன் தன்னோட பிஸ்னஸ் பார்ட்னர் என்றும் அனேகமா இன்னும் இரண்டு நாளில் நவீன் ஆன்ட்டியோடு இங்கு வருவான்.என்ன கேட்க்கனுமோ தாராளமா கேளுங்கப்பா.

ஆனால் அவங்களை வெறுத்துடாதீங்க என்ற வர்ஷன், மிஸ்டர்.ஜான் தியோல் எதற்கு அக்ரிமென்டில் சைன் பண்ணாம வந்தீங்க? என்றான்.

இது என்னடா புது குழப்பமென்று எல்லாரும் பார்த்தனர்.

அப்பு என்ன சொல்லுறனு வள்ளி அப்பாயி கேட்க,ஆமாம் அப்பாயி, ஜான் எனக்கு ஆஸ்திரேலியாவிலே தெரியும்.

அவரை இன்டர்வியூ பண்ணியதே நான் தான். எல்லாம் ஒத்து வந்த நேரத்தில் திடீர்னு ஆளைக்காணும்.கான்டக்ட் பண்ண முடியலை. அதும் இல்லாமல் யாருக்கும் இவரை பற்றிய முழு விவரமும் அங்கு தெரியலை என்க..

பின்னர் ஜானே தனது தந்தையின் உடல் நிலை பற்றி சொல்லியவன்,அதனால் தான் உங்கள் கூட பிஸ்னஸ் டீல் வைக்க முடியவில்லை.அப்போ இருந்த நிலமையில் என்னால் இன்பார்ம் பண்ண முடியவில்லை சார், சாரி என்று சொல்லி வருத்தப்பட,அச்சோ
இப்போ அங்கிளுக்கு எப்படி இருக்கென்று மித்ரனும், வர்ஷனும் கேட்க, சர்ஜரி பண்ணியாகனும்.

அதனால் தான் கிடைத்த டிக்கெட்டில் இந்தியாக்கு வந்துட்டேன் சார்.

அடேய் இவன் என்னடா ஸ்கூல் புள்ளைங்க போல சாரு மோருனு, அந்த ரெண்டு வளர்ந்த மாடுகளுக்கு எப்படியோ உனக்கும் அப்படிதானென்ற வர்ஷன், சர்ஜரி எங்கே பண்ணலானு இருக்கீங்க என்க.

மதுரையில் தான்.

சரி ஒன்னும் பிரச்சினை இல்லை. நம்ம சகலை கார்டியாலஜிஸ்ட் தான். அடுத்த வாரம் குன்னூருக்கு வரான்.அங்கிள் ரிப்போர்டை எனக்கு மெயில் பண்ணு, அவன் கிட்ட சஜசன் பண்ணிக்கலாம்.

அசாம்லே பேமஸ் கார்டியாலஜிஸ்ட் நிகிலேஷ் சந்தர். ஷாலினியோட அத்தைப்பையன் தான் என்ற வர்ஷன், மேலும் சிறிது நேரம் வீட்டினரோடு பேசிக்கொண்டிருந்து விட்டு,மித்ரனும், வர்ஷனும் அங்கிருந்து கிளம்பினர்.

டேய் பனைமரம், வர்ஷன் அண்ணா கம்பனிக்காடா டீலிங் பேச போயிருந்தனு அதிர்சியோடு வேலு கேட்க,என்னோட புராஜெக்ட் அவங்களுக்கு பிடிச்சிட்டுடா. மேற்கொண்டு இன்வெஸ்ட் பண்றதை பற்றி யோசித்து முடிவு பண்ணலானு இருக்கும் போது தான், மிலிட்ரிக்கு இப்படினு அம்மா கால் பண்ணி சொல்லுச்சி.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
இவங்க பிராஞ்ச் லண்டன்லையும், ஆஸ்திரேலியாலையும் இருக்கு. ஐந்து நாளைக்கு முன்ன தான் டா மிஸ்டர். வர்ஷனையும் அவரோட பார்ட்னர் ஆதியையும் பார்த்தேன்..

சரிடா அது இருக்கட்டும், இவங்களை எப்படி உங்களுக்கு தெரியும் என்றான் ஜான்?.

அடேய் பனைமரம் நம்ப காய்கறிங்கள், கம்பு, கடலை எல்லாம், கடந்த மூனு வருஷமா அவங்க கிட்ட தான் சேல்ஸ் பண்ணுறோம்னு வேலு சொன்னான்.

அப்படியா!.

அது மட்டும் இல்லப்பு, அவங்க குடும்பம் ஊருக்குள்ள பெரிய ஆளுங்கப்பு.பரம்பரை பரம்பரையா ஊரு மக்களுக்கு நல்லது மட்டுமே செஞ்சிட்டு வரும் பண்ணையார் குடும்பம்.

எவ்வளவு பெரிய கோடீஸ்வர ஊட்டு புள்ளைங்க தெரியுமா அவங்க ரெண்டு பேரும், ஆனால் பார்க்கவும் பழகவும் எம்புட்டு சாதாரணமா இருக்காங்க பாரு.
அது தான் அவங்க குணம், நல்ல வளர்ப்பு.மித்ரன் தம்பிக்கு இன்னும் கல்யாணம் ஆகலை. வர்ஷன் தம்பிக்கு கல்யாணம் ஆகி ரெட்டை புள்ளைங்கப்பு.

ரெண்டாவது வருஷம் புள்ளைங்க பொறந்தநாளுக்கு நம்ப ஊட்டுக்கு நேர்ல வந்து கூப்பிட்டாங்க.

எல்லாரும் போய்ட்டு வந்தோம்ப்பு. அங்க போன பொறவு தான் தெரிஞ்சிது, அவங்க எம்புட்டு பெரிய ஆளுங்கனு என்றார் வள்ளி அப்பாயி.

தனது நண்பர்கள் இருவரையும் பார்த்த ஜான்,அடேய் உங்களுக்கு எப்படி அவங்களை தெரிஞ்சிதுடா?.

அது ஒரு கதைடா என்றான் கதிர்.

அந்த வெங்காயத்தை தான் கேட்குறேனென்று ஜானும் முறைத்தான்.

அது வந்துடா பனைமரம், மூனு வருஷத்திற்கு முன்பு நாங்க தேனியில நடந்த விவசாய மாநாட்டிற்கு போயிருந்தோம்டா.தமிழ்நாட்டில் கடந்த ஆறு, ஏழு வருஷமா வர்ஷன் அண்ணாவுக்கும் மித்ரன் அண்ணாவுக்கும் தான் சிறந்த விவசாயி பட்டம் கொடுத்துட்டு இருக்காங்க.
அந்த வருஷமும் அவங்களுக்கு தான் அவார்டு கிடைச்சிதுடா.

எல்லாருக்கும் நைட்டுக்கு சாப்பாடும் ஏற்பாடு பண்ணிருந்தாங்க. நானு, மாப்பு, நம்ப பூசாரி மாமா, அப்புறம் தேவ் அண்ணன் நாலு பேரும் நம்ப ஊர்ல இருந்து போயிருந்தோம்.

அப்ப எங்களுக்கு முன்னாடி தான் மித்ரன் அண்ணாவும் வர்ஷன் அண்ணாவும் சாப்பிட்டுக்கிட்டு இருந்தாங்க.

நாங்க போய் வாழ்த்திட்டு பேசலானு பார்த்தால், ஏதோ ஃபோன் வந்துச்சினு அவங்க ரெண்டு பேரும் அவசரமா சாப்பிட்டு கிளம்பிட்டாங்க.

நாங்களும் அங்கிருந்து கார்ல திரும்ப ஊருக்கு வரும் போது, கார் ஒன்னு ரோட்டுல நின்னுட்டு இருந்துச்சி.

அதுல இருந்து கொஞ்ச தூரத்துல ரெண்டு பேருகிட்ட ஆளுங்கள் சண்டை போட்டுக்கிட்டு இருப்பது, கொஞ்சம் கிட்ட வரும் போது தெளிவா தெரிஞ்சிது.

யாருனு நாங்களும் கார்ல இருந்தே பார்த்துக்கிட்டு வர, இவங்க கூட பத்து, பன்னிரெண்டு பேரு சண்டை போட்டு கிட்டு இருக்கானுங்க.

அப்போ பார்த்து வர்ஷன் அண்ணாவ பின்னாடி இருந்து ஒருத்தன் வெட்ட போக, முன் சீட்டில் உட்கார்திருந்த மாப்பு தான் காரை நிறுத்து மச்சானு கத்தி சொல்ல, தேவ் அண்ணனும் நிறுத்த, கதவை திறந்து ஓடி போனவன், வெட்டப்போனவனை உதைச்சி தள்ளிட்டான்.

ஜெஸ்ட் மிஸ் டா.

பிறகு நாங்களும் காரிலிருந்து இறங்கி போக, பூசாரி மாமா சிலம்பம் சுத்துனாரு பாரு அட அட, கண்கொள்ளா காட்சியா இருந்துச்சுடா.

வீட்டில் இருந்து கிளம்பும் போது நான் கேட்டேன் எதுக்கு மாமா சிலம்பத்தை காரில் எடுத்து வச்சிருக்கிறேன்னு.ரொம்ப தூரம் போறோம் டா. கூட இருப்பது நமக்கு நல்லதுன்னு சொல்லி தான் கார் உள்ளார வச்சாரு.ஒரு வழியா எல்லா பயலுங்களையும் நாங்களும் அடிச்சி விரட்டுனோம்.

அப்போ யார் தம்பி இவங்கனு பூசாரி மாமா கேட்கும் போது, அவங்களுக்கு ஒரு ஃபோன் கால் வந்துச்சி.

அட்டென் பண்ணி பேசிய பிறகு யாரோ தொழில் எதிரியாம், அந்த ஆள் பண்ணுன வேலை தான்னு அவங்க சொல்ல,அதை கேட்ட எங்களுக்கும் அதிர்சி தான்.

உன்னை நேர்ல வந்து சந்திக்குறேன்டானு சொன்னபடியே, அவங்க அப்பாக்கு கால் பண்ணி என்னமோ சொன்னாரு.

அடுத்த அஞ்சு நிமிஷத்தில் மலமாடு போல ஒருத்தன், கார்ல இருந்து இறங்கி வந்தவனை பார்த்து,ஒரு சிரிப்பு சிரிச்சாரு பாருடா , எப்பா, பி.எஸ்.வீரப்பா, நம்பியார், அசோகன் எல்லாம் தோத்துடுவாங்க.அந்த ஆள் கெஞ்சி கதறுவதை பார்த்து பாவமாக தான் இருந்துச்சி.

ஆனால் இந்த அளவுக்கு இறங்குறான்னா இனி இவனை விட்டு வைப்பது தப்புனு, அவன் தொழில் சாம்ராஜ்யத்தையே தரைமட்டமாக்கிட்டாரு..

பிறகு எங்களை பற்றி விசாரித்து, பழகி,அப்படியே குடும்பமா ஆகியாச்சுனு அனைத்தையும் நண்பனிடம் வேலு சொல்லி முடிக்க, கேட்ட ஜானிற்கு இவ்வளவு பெரிய ஆளுங்களா என்று அதிர்சியாக இருந்தது..

நீலகிரி...

அழுத முகத்தை துடைத்துக்கொண்டு வீட்டின் உள்ளே வந்த மயிலா, அங்கிருந்த மண் சுவற்றின் மேலே சாய்ந்து உட்கார்ந்து கொண்டார்.

பவி வீட்டுக்கு போய் வரேனென்று சென்றவள், சிறிது நிமிடத்திலே திரும்பி வந்ததுமில்லாமல்,முகம் சோடை அடித்த போல இருக்கே?, என்ன விஷயமென்று மூக்கையன் யோசனையானார்.

சில நிமிடங்கள் கடந்து சென்று, மருதுவும் வீட்டிற்கு வர,அய்யா இந்த கோட்டிகார சிறுக்கிய மன்னிச்சிடு சாமி.

உன் வாழ்க்கையை நானே கெடுத்துட்டேனேனு மயிலா அழ,அதைக்கேட்ட மருதுவின் அப்பா, ஏப்புள்ள,என்னடி பினாத்தி கிட்டு கிடக்க?.

அய்யா, தப்பு பண்ணிட்டேன்யா, நம்ப புள்ளை வாழ்க்கையை நானே கெடுத்துட்டேன்னு மீண்டும் அழ,அடியேய் எந்திரிச்சேன் தோலை உரிச்சி போட்டுறுவேன்.விஷயம்னு சொல்லாமல் உம்பாட்டுக்கு ஒப்பாரி வச்சிக்கிட்டு கடக்க?.

எப்பா என்னாச்சி ஒம்மாளுக்கென மருதுவிடம் கேட்க,அவனும் எந்த பதிலும் சொல்லாமல் வெளியே போய்,மர நிழலில் கிடந்த கட்டிலில் கண்ணை மூடி படுத்துக்கொண்டான்.

ஏம்புள்ள, மனுசனை மண்டை காய வைக்காமல், என்ன சமாச்சாரம்னு சொல்லுட்டு அழுவுடி.

கணவரின் கோபக்குரலை கேட்ட மயிலா பவி வீட்டில் நடந்ததை சொல்ல, அதைக்கேட்டு தரையில் படுத்திருந்த மூக்கையன் என்ன புள்ள சொல்லுறனு பதறிப்போய் எழுந்து உட்கார்ந்தார்.

ஆமாயா, அந்த புள்ளை இத்தனை நாளும் நாடகமாடிருக்குயா..

அவசரப்பட்டு கல்யாணத்தை பண்ணி வச்சி, என் மவன் வாழ்க்கையை இப்படி நடுரோட்டுல நிக்க வச்சிட்டேனேனு, தலையில் அடித்துக்கொண்டு அழ, ம்கும் இப்போ அழுது என்ன புள்ள புண்ணியம்?

அந்த நேரத்தில் போற உசுரு நிம்மதியா போகட்டுமே என்ற எண்ணம் மட்டும் தான்யா எனக்கு இருந்துச்சி.
எம்புள்ளையோட ஆசை தெரிஞ்சும் மனச கல்லாக்கி கிட்டு தான் அந்த காரியத்தை நான் செய்ய சொன்னேன்.
ஆனால் இந்த பவி இப்படி நல்ல பாம்பா இருக்கும்னு, நான் நினைக்கலையா.

உனக்கு எத்தனை முறை சொல்லிருக்கேன்?.எதுலையும் அவசரப்படாத?, நிதானமா முடிவெடுனு?.பொம்பள புத்தி பின்புத்தினு காட்டிட்ட பார்த்தியா?.

அதேப்போல தான் தாமரைய பொண்ணு கேட்டு பேசி முடிச்சிட்டு வந்த,அவங்க வீட்டுக்கும் சேதிய சொல்லி சம்மதத்தை வாங்கியாச்சு.இப்போ இந்த விஷயம் அவங்களுக்கு தெரிஞ்சால்? என்ன நினைப்பாங்க.

வீட்டுல ஒரு ஆம்பிள்ளை இருக்கானே அவன் கிட்ட ஒரு வார்த்தை கேட்கனும்னு தோணலை?.

சரி மவன் ஆசைப்பட்டானேனு நீயும் அவசரப்பட்டேனு வச்சிக்கலாம்.உன் பாட்டுக்கு அவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்ட, அந்த இடத்தில் ஏன் உனக்கு மகன் ஆசை நினைவு வரலை?.

அப்போ ஊர்ல யாரு இந்த நிலையில் இருந்தாலும்,அவங்க மவளை என் மவனுக்கு கட்டி வச்சி அவங்க நிம்மதியா மேலே போகட்டும்னு இருப்பியானு சராமரியாக கேள்விகளை கேட்டு, மயிலாவை உண்டு இல்லைனு பண்ணி விட்டார்.

அப்படியே நாலாவது தெருக்குள்ள எந்த ஆம்பளையாவது சாக கிடக்கானானு பாரு, அவன் மவளுக்கு சின்னவனை கட்டி வச்சிடு.நீ தான் தியாகியாச்சே.

வேதா போய் சேர்ந்துச்சா என்னனே தெரியலை என்றவாறே, தலகாணிக்கு கீழே இருந்த ஃபோனை எடுத்தவர் வேதாவின் நம்பருக்கு கால் பண்ணினார்.

சீமக்கரை... தாமரையின் வீடு

தாமரை காணாமல் போய் இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. ஆனால் எங்கே சென்றாள் என்பது தான் வீட்டில் இருப்பவர்களுக்கு புரியாத புதிராய் இருந்தது.

வழக்கம் போல வீட்டில் வேலைகள் நடந்தாலும், யாரும் யாரிடமும் முகம் கொடுத்து பேசிக்கவில்லை.

பதினைந்து வருடங்களுக்கு பிறகு வந்த வீட்டில், நிம்மதியாக ஒரு நொடி கூட வேதாவால் இருக்க முடியவில்லை. வேதாவின் சிந்தனைகளெல்லாம் தன்னுடைய அண்ணன் மகளான தாமரை பற்றி தான்.எந்த கஷ்டமாக இருந்தாலும் இந்த அத்தையை தேடி தானே வந்திருக்கனும்.

அப்போ மகள் போல இத்தனை வருஷம் வளர்த்த என் மேல் அவளுக்கு பாசமில்லையா?, இல்லை நம்பிக்கை இல்லாமல் போய்விட்டாதானு உள்ளுக்குள் உடைந்து கொண்டிருந்தார்.

அப்பொழுது அத்தை, இந்த மோராவது குடி. நேற்று இருந்து பச்சை தண்ணீர் கூட இந்த வீட்டில் குடிக்கலை என்றாள் அல்லி.

வேண்டாம் மா என்றவர், நீ ஸ்கூலுக்கு கிளம்பளையா?, இன்றைக்கு தானே பொங்கல் லீவ் முடிந்து ஸ்கூல் ரீ-ஓப்பன்?

ஆமாத்தை.இன்னைக்கு வெள்ளிக்கிழமை அடுத்து ரெண்டு நாளும் லீவ் தான்.ஒரேடியா திங்கக்கிழமையிலிருந்து போயிக்குறேன்.அக்கா எங்க போச்சுனு தெரியாமல் எப்படித்தை ஸ்கூலுக்கு போவேன் என்று கண் கலங்கினாள்.

அப்பொழுது வேதாவின் நம்பருக்கு கால் வரும் சத்தம் கேட்டு, டேபிளின் மேலிருந்த ஃபோனை சிவா எடுத்து வந்து வேதாவிடம் கொடுத்தான்.

அதை வாங்கி பெயரை பார்க்க மருதுவின் அப்பா என்று தெரிந்தது. அட்டென் பண்ணியவர், அண்ணா என்க,அம்மா வேதா, நான் தான் அண்ணன் பேசுறேன்மா.

நல்லா இருக்கீங்களாணா என்றவர், நல்லபடியாக ஊருக்கு வந்து விட்டதை சொல்ல, அதை கேட்க தான் மா ஃபோன் பண்ணுனேன்.

அப்புறமா வீட்ல எல்லாரும் சுகமா? , இங்கு நடந்த விஷயத்தை சொல்லிட்டியாமா?

இல்லைணா.அதுக்கு முன்னாடி நான் ஒரு விஷயம் உங்க கிட்ட சொல்லனும் என்க, சொல்லு வேதமா.

அண்ணா அது வந்துணா என்று வேதா தயங்க, எதா இருந்தாலும் சொல்லுமா. எதுக்கு உனக்கு தயக்கமென்றார்.

அண்ணன் தாமரையை இரண்டு நாளா காணும். அதை கேள்வி பட்டு தான் நான் உடனே ஊருக்கு வந்தேனென்று வேதா சொல்லியதைக்கேட்டவர், என்னாஆஆஆ தாமரையை காணுமா?.

என்ன வேதா சொல்லுறனு மூக்கையன் பதற, ஆமாணா. இரண்டு நாளாச்சு. எங்க போனாளென்று யாருக்குமே தெரியலைனு வேதா அழுதார்.

வெளியே கட்டிலில் படித்துக் கொண்டிருந்த மருதுவோ அதைக்கேட்டு உள்ளே ஓடி வந்தவன் என்னாச்சுப்பா? என்க

தம்பி தாமரையை காணுமாப்பா, வேதா சொல்லிட்டு அழுவது.

அவரிடமிருந்து ஃபோனை வாங்கியவன் வேதாமா என்கவும்,அவள் எங்க போனாள்னே தெரியலப்பா என்றவர், சீமக்கரையில் நடந்ததை எல்லாம் சொல்ல,அதை கேட்டவன் கையிலிருந்த ஃபோன் நழுவி கீழே விழுந்தது.

மகனின் செயலை பார்த்த மயிலாவிற்கும், மூக்கையனுக்கும் என்னமோ அங்கு நடந்திருக்கென்பது புரிந்தது.


கண்மணி வருவாள்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top