Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 344
- Thread Author
- #1
ஏனாதி!
இரவெல்லாம் தூங்காமல், தந்தையின் நினைவிலேயே, அக்கா தங்கை இருவரும் அழுது கொண்டே இருந்தார்கள்.
சீதாவையும்,ராதாவையும், சொந்தக்காரர் பெண்மணிகள் எவ்வளவோ சமாதானப்படுத்தி பார்த்தனர்,ஆனால் எதற்கும் அசரவில்லை.
விடியலும் ஆரம்பமாகியது.ரொம்ப தூரத்தில் இருக்கும் உறவினர்களும், காளியின் இறுதி சடங்கிற்கு வந்து சேர்ந்தனர்.
யாருப்பா கொள்ளி வைக்கிறது? என்னும் பேச்சு வந்தது.
காளிக்கு இரண்டும் பெண் பிள்ளைகள் என்பதால், பங்காளி வீட்டில் உள்ள பையனை வைக்க சொல்லி,ஒரு பக்கம் பேச்சுவார்த்தை நடந்து கொண்டது.
ஆனால் சீதாவோ, தந்தைக்கு தான் தான் கொள்ளி வைப்பேனென்று, உறுதியாக சொல்லி விட்டாள்.
சில பல பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு, சீதாவே கொள்ளி வைப்பதாகவும், சில அடி தூரம் எடுத்துட்டு வந்து கொடுத்து விட்டு, பிறகு வீட்டுக்கு சென்று விடனுமென ஒரு மனதாக முடிவெடுத்தனர்.
இதெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சீதாவின் தூரத்து அத்தை குடும்பம், முதல் பொண்ணை தான் நமக்கு கொடுக்கல.ரெண்டாவது பொண்ணை தனது மகனுக்கு கட்டி,இருக்கும் சொத்தை கைப்பற்றிக் கொள்ளலாமென்று திட்டம் போட்டனர்.
முத்துவோ, இரண்டு நாள் லீவுக்காக சீமக்கரைக்கு வந்திருக்க,எங்கே யாரையும் காணுமென்று தோட்டத்துக்கு வர,அண்ணியின் தந்தை இறந்து விட்டதால் எல்லாரும் ஏனாதிக்கு போயிருப்பதாக பார்வதி சொன்னாள்.
பின்னர்,மறுநாள் ஊரிலிருக்கும் சிலரை கூப்பிட்டுக்கொண்டு ஏனாதிக்கு வந்து சேர்ந்தனர்.
பிரேதத்தை குளிப்பாட்டுவதற்கு, தண்ணீர் கொண்டு வர, ஊர் முக்கியஸ்தர்கள் ஏற்பாடு பண்ணினார்.
பங்காளி வீட்டில் சில பெண்களோடு, சீதா,ராதாவும் ஊர் குளத்தில் இருந்து தண்ணீர் எடுத்துட்டு வந்தனர்.
பிறகு காளியின் உடலுக்கு,வழக்கமாக செய்யும் சடங்குகளை செய்ததும்
தயாராக இருந்த பாடையில் காளியின் உடலை தூக்கி வைத்து, சீதாவின் கையில் கொள்ளியை கொடுத்து, சுடுகாட்டை நோக்கி சென்றனர்.
சில அடி தூரம் சென்ற பின்பு,அழுது கொண்டே தந்தைக்கு கொள்ளி தூக்கி வந்த சீதாவிடமிருந்து, வேறொருவர் வாங்கிக்கொண்டு, திரும்பி பார்க்காமல் நீ வீட்டுக்கு போம்மா என்று அனுப்பி வைத்தனர்.
அப்பா இப்படி பாதியிலே நம்பல அனாதையா விட்டுட்டு போயிட்டாரேடினு தங்கையை கட்டிக்கொண்டு அழுதாள்
சில பெண்கள் கீழே கிடந்த பூக்களை எல்லாம் கூட்டி குப்பையில் கொட்டி விட்டு, வீட்டை கழுவி விட்டனர்.
அரை மணி நேரம் மேலானது சுடுகாட்டுக்கு சென்றவர்கள் திரும்பி வருவதற்கு.சில முக்கியமானவர்கள் மட்டும் அங்கிருந்தனர்.அப்பொழுது, காரியம் எப்போ வைத்துக்கொள்ளலாம் என்ற பேச்சு எழுந்தது.
பதினாறாம் நாள் வைத்துக்கொள்ளலாமென்று முடிவு செய்தனர்.காரியம் முடிந்ததும்,ராதாவை எங்கள் வீட்டிற்கு கூப்பிட்டு போறோம் என்றார் பெருமாள்.
அதற்கு சீதாவின் தூரத்து வழி அத்தையோ,அது எப்படிப்பா சரி வரும் ? ராதா வயசு பொண்ணு.உன் வீட்ல வயசு பையன வச்சிருக்க. நாளைக்கு ஒன்னு கிடக்க ஒன்னு ஆகிட்டால், என் அண்ணன் பெயருக்கு தான் கெட்ட பேரு.அதனால் 16 ஆம் நாள் காரியம் முடிந்த பிறகு, இரண்டாவது பொண்ணை என் பையனுக்கு கட்டி வையுங்க.வீட்டோட மாப்பிள்ளையா இருந்துக்கிறோம்.பெரியவளுக்கும் ஒத்தாசையாக இருக்குமென்றார்.
அவர் சொல்லியது சிலருக்கு சரியாக இருந்தது.சிலருக்கு சரியாக படவில்லை.
அதெல்லாம் சரிப்பட்டு வராதுமா. என் மச்சினிச்சிக்கு வெளியில பையனை பார்த்து கட்டி வைக்கிறோமென்று பெருமாள் சொல்ல, அது எப்படிப்பா?.
முறை பையன் என் பையன் இருக்கும் போது, நீ எப்படி வெளியில பார்க்கனும்னு சொல்லலாமென்க, பதிலுக்கு பெருமாளும் பேச, சுற்றி இருப்பவர்கள் இருவரையும் தடுத்து பார்த்தனர்.ஆனால்,வாக்குவாதம் முத்தி சண்டை வந்தது.
அப்பொழுது, இவ்வளவு பேசுறியே நீ, உன் தம்பிக்கு கட்டி வைப்பியானு அந்த அம்மா கேட்க, இப்பவே என் தம்பிக்கு என் மச்சினிச்சிய கட்டி வைக்கிறேனென்று, அத்தனை பேருக்கு முன்னாடி வாக்கு கொடுத்து விட்டார்.
அதைக் கேட்டு சீதாவும்,முத்துவும் அதிர்ந்தனர்.மற்றவர்களுக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. அண்ணா எதுக்கு இந்த அவசரமென்று முத்து கேட்க,நீ சும்மா இருடா, அந்த அம்மா எப்படிலாம் பேசுது?.இந்த அண்ணனோட மானம் மரியாதையெல்லாம் உன் கையில தானிருக்கு.ஏய் சீதா போய் உங்கம்மா தாலிய கொண்டு வா.
என்னங்க நடக்குது இங்கே?.
எங்க அப்பா செத்து ஒரு நாள் கூட ஆகலை, அதற்குள் என்ன பேச்சு இதெல்லாம்.
இங்க இவ்வளவு நடக்குதே நீங்க எல்லாம் அமைதியாக இருந்தால் என்ன அர்த்தமென்று மாமனார், மாமியாரிடம் கேட்க,பெரியவனே என்று பிரகாசம் சொல்ல,அப்பா இது உங்க மகனோட மான பிரச்சினை.நான் என்ன வக்கில்லாத பயலுக்கா பொண்ண கட்டி வைக்க சொல்லுறேன்?.
என் தம்பிக்கு தானே என்றவர்,வீட்டின் உள்ளே போய், சீதாவுடைய அம்மாவின் ஃபோட்டோவில் தொங்கி கொண்டிருந்த தாலியை எடுத்து வந்து தம்பியின் முன்பு நீட்டினார்.
அண்ணாஆஆ என்று முத்து அதிர,இது உன் கையால் தங்கச்சி கழுத்துல ஏறலை,அக்கா கழுத்துல தாலி இருக்காதென்று சொல்ல, அதைக்கேட்டு எல்லாரும் அதிர்ந்தனர்.
கணவனின் வார்த்தையை கேட்ட சீதாவோ,அதற்கு பின்னர் எதுவும் பேசாமல் அமைதியாக திண்ணையின் ஓரத்தில் போய் உட்கார்ந்து கொண்டார்.
கட்டுடா என்க,கண்ணீரோடு கையில் வாங்கிய முத்துவோ,அண்ணனின் உசுரு தான் பெருசென்று, அங்கே அழுது கொண்டிருந்த ராதாவின் கழுத்தில் மூன்று முடிச்சை போட்டு விட்டு, அங்கிருந்து சென்று விட்டான்.
இப்படி அதிரடியாக பெருமாள் செயல்படுவார் என்பதை அத்தை குடும்பமும் எதிர் பார்க்கவில்லை.
அப்புறம் என்னம்மா, தம்பி சொன்ன போல செஞ்சுட்டு என்றார் கூட்டத்தில் ஒருவர்.
அதற்கு சீதாவின் அத்தையோ,எப்படியோ என் அண்ணன் மவளுக்கு நல்லது நடந்தால் சரியென்று, ஏமாற்றத்தை மறைத்துக்கொண்டு அங்கிருந்து சென்றார்.
மனைவியிடம் வந்த பெருமாள்,பத்திரமா இருங்க, ரெண்டு நாளைக்கு ஒரு முறை வந்து பாக்குறேனென்று சொல்லி விட்டு, தனது தாய் தந்தை, மற்றும் சொந்தத்தை கூட்டிக்கொண்டு சீமக்கரைக்கு கிளம்பிவிட்டார்.
நாட்களும் ஓடியது. ஏழாம் நாள் துக்கம் முடிந்தது.இரண்டு வாரங்கள் கடந்திருந்தது.விடிந்தால் கருமாதி என்பதால், வீட்டில் கொஞ்சம் பரபரப்பாக வேலை நடந்தது.
மறுநாள் பண்டாரத்தை வைத்து சடங்கை செய்து முடித்து, வந்திருந்தவர்களுக்கு கறி விருந்து வைத்தனர்.
ஏனாதியில் இருக்கும் காளியின் வீட்டையும், நிலத்தையும் அந்த ஊரில் இருக்கும் தெரிந்தவர் ஒருவருடைய பாதுகாப்பில் விட்ட பெருமாள், மனைவியையும், மச்சினிச்சியையும் அழைத்துக்கொண்டு சீமக்கரைக்கு வந்தார்.அம்மா, போய் ஆரத்தி எடுத்துட்டு, முத்துவை கூப்பிட்டுவா என்றார் பெருமாள்.
பெரியவனே, நல்லவன் கொஞ்ச நேரத்துக்கு முன்ன தான் வேலை பாக்குற இடத்தில் இருந்து கடுதாசி வந்துருந்துச்சினு கிளம்பி போயாச்சே.
சரிமா நம்ப ஊட்டு புள்ளை,நீ உள்ள கூப்பிட்டு போ என்க, வாத்தா என்று சின்ன மருமகளை அழைத்துச்சென்றார்.ராதாவும் சீமக்கரைக்கு வந்து ஒரு மாதம் கடந்திருக்க, போஸ்ட்மேன் வந்து வாசலில் பெல் அடித்தார்.
சத்தம் கேட்டு யாரென்று வெளியே போய் பார்க்க, ராதாவிடம் லட்டர் வந்துருக்குமா என்றார் .
கிட்ட போய் வாங்கிய ராதா, யாரிடமிருந்து வந்துருக்கென்று அனுப்புனர் பெயரை பார்க்க, முத்துவிடமிருந்து தான் லட்டர் வந்திருந்தது .
மாமாவா என உள்ளுக்குள் சொல்லிக்கொண்டவள், வீட்டினுள் வந்தவள் சீதா, முத்து மாமா தான் லட்டர் போட்டுருக்காருடி.
முத்துவா என யோசனையோடே தங்கையிடமிருந்து கடிதத்தை வாங்கி பிரித்து படிக்க, எதிர் பார்த்த விஷயம் தான்.எத்தனை நாளுக்கு ஓடி ஒளிவீங்க கொழுந்தனாரேனு, உள்ளுக்குள் சொல்லிக்கொண்டவர், இந்தாடி.உன் புருஷன் லட்டரை நீயே படி.
அக்காவிடமிருந்து வாங்கி படிக்க ஆரம்பித்தாள் ராதா..
அன்புள்ள அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி, மற்றும் ராதாவிற்கு, முத்து எழுதுவது.
நான் இங்கு நலமாக இருக்கிறேன். நீங்களும் அங்கு நலமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன்.
கம்பெனியிலிருந்து என்னை ஒரு வருடம் அக்ரிமெண்டில் வடநாட்டிற்கு அனுப்புகின்றனர்.
இது தவிர்க்க முடியாத பயணமென்பதால் நான் போய் தான் ஆக வேண்டும்.நேரில் வந்து சொல்ல முடியவில்லை.
இந்த கடிதம் உங்களிடம் கிடைக்கும் போது, நான் ட்ரெயினில் இருந்தாலும் இருப்பேன்.
அங்கு போய் சேர்ந்து விட்டு உங்களுக்கு கடிதம் போடுகின்றேன். எல்லாரும் உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள். பிள்ளைகள் கவனம்.
ராதா ஆசைப்பட்டால் மேற்கொண்டு படிக்க வைக்கவும்.
இப்படிக்கு முத்து..
என்று எழுதியிருந்தது...
குழந்தைகளோடு வயலுக்கு சென்றிருந்த ஜூலி, வள்ளி, மற்றும் பிரகாசமும் வீட்டிற்கு வந்தனர்.
அவர்களிடம் முத்து அனுப்பிய லட்டரை பற்றி ராதா சொல்ல, வள்ளிக்கு மட்டும் மகனை நினைத்து யோசனையானது.
இருந்தாலும் மகன் மேல் உள்ள நம்பிக்கையால், நடப்பது நடக்கட்டுமென்று இருந்து விட்டார்.
நாட்களும் வேகமாக ஓடியது.
அப்பொழுது லாரன்ஸிற்கு மிலிட்ரியில் வேலை கிடைத்திருப்பதாக தந்தி வந்தது.எல்லாரும் போய், லாரன்ஸை காஷ்மீருக்கு அனுப்பி வைத்தனர்.
முத்து சொன்ன போலவே நல்லபடியாக அஸாமிற்கு வந்து விட்டதாக லட்டர் போட்டார்.
ஒரு நாள் வேலையாக இருந்த ராதாவை கூப்பிட்ட பெருமாள்,மேற்கொண்டு படிக்கிறியாமா? என்று ராதாவிடம் கேட்க, வேண்டாம் மாமா என்று சொல்லி விட்டாள்.
நீ எது ஆசைப்பட்டாலும் மாமன் படிக்க வைக்கிறேன்.அப்பா இல்லைனா என்னம்மா?.அந்த ஸ்தானத்தில் அப்பனா நான் இருக்கிறேன். நீ படிம்மா என்க,அதற்கு ராதாவோ,நான் அக்காங்க, பசங்களோடே இருக்கேன் மாமா என்று உறுதியாக சொல்ல, சரி என்று விட்டு விட்டார்.
மாதம் தவறாமல், லட்டர் போடுவதை மட்டும் முத்து நிறுத்தவில்லை.
லாரன்ஸிற்கு நல்ல படியாக டிரைனிங்கும் முடிந்தது.காஷ்மீர் பார்டரிலே வேலை கிடைத்திருப்பதாக தந்தி அனுப்பியிருந்தார்.இதோ ஒன்னரை வருடங்கள் கண் மூடி கண் திறப்பதற்குள் ஓடி விட்டது.
விடிந்தால் உலகமெங்கும் தீபாவளி....
அதிகாலையில் ஊருக்குள் சிறு பிள்ளைகள் வெடி வெடிக்கும் சத்தம் பலரின் தூக்கத்தை கலைத்தது.
ராதா,வழக்கம் போல எழுந்து வாசலை கூட்ட போக, வாசல் படலை திறந்து உள்ளே வந்து கொண்டிருந்தார் முத்து.
ஒன்னறை வருடங்களுக்கு பிறகு கணவனை பார்த்த, ராதாவிற்கு அழுகையாக வந்தது.மனைவியை பார்த்தவர், ராதா என்க,மாமா என்று உள்ளே ஓடி விட, முத்துவோ சிரித்துக்கொண்டே உள்ளே வந்தான்.
அப்பொழுது தான் வள்ளியும் துங்கி எழ உள்ளே வந்த மகனை பார்த்து, எப்பாடி வந்துட்டியா என்று மகனை கட்டிக்கொண்டார்.
எப்படிமா இருக்க? என்க, நான் நல்லா இருக்கேன் ராசா.நீ எப்படிப்பா இருக்க?.
இருவரின் பேச்சுக்குரலை கேட்டு பெருமாளும் வெளியே வந்து பார்க்க, அங்கு நின்ற தம்பி கண்டு முத்து என்று அதிர்ந்தார்.