• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
346
சீமக்கரை..

மதுரைக்கு போனவர்கள், நல்ல பதிலோடு வருவார்களென்று நம்பிக்கையோடு வீட்டினர் காத்திருந்தனர்.

நால்வரும் விடியற்காலையில் தேனூருக்கு வந்து சேர்ந்தவர்கள் பின்னர் சைக்கிளை எடுத்துக்கொண்டு, ஊரை நோக்கி சென்றார்கள்.

மச்சான்,வள்ளியை எப்படி சமாளிக்கிறதென்று ஒரே கவலையாக இருக்கென்று, சைக்கிள் பின்னாடி அமர்ந்திருக்கும் பிரகாசம் வருத்தப்பட்ட
,அதேப்போல் பெருமாளின் சைக்கிளில் பின்னாடி உட்கார்ந்து வந்த சிவசாமியோ,வேற வழி இல்ல மச்சான், சமாளிச்சு தான் ஆகணும்.

புள்ளைய பற்றி நமக்கும் கவலையா தான் இருக்கு.அவங்க பொம்பளைங்க அழுது தீர்த்துக்குறாங்க.நாம ஆம்பள, கண்ணீர் விடல அவ்வளவு தான்.

சைக்கிளை நிறுத்திட்டு உள்ளே வந்தவர்கள், அங்கிருந்த முற்றத்தில் போய் சாய்ந்து உட்கார்ந்து கொண்டனர்.

போனது என்னாச்சுப்பானு வள்ளி கேட்க,செல்வமோ எதுவும் தெரியலை அத்தை என்க,அய்யோ....எம்மவளை உங்களாலையும் கண்டுபிடிக்க முடியலையானு நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறி அழுதார்.

நாட்களும் கடந்து சென்றது.

சிந்து தொலைந்ததிலிருந்து பார்வதியும்,கவிதாவும் பள்ளிக்கூடம் போக மாட்டோம் என்று சொல்லிவிட்டனர்.

காலேஜில் படித்துக் கொண்டிருந்த முத்துவும்,லாரன்ஸும் வீட்டிற்கு வர, அப்பொழுது தான் சிந்து காணமல் போன விஷயமே தெரிந்தது.கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் கடந்து சென்றிருந்தது.

போன வருட விவாசாயத்தில்,பண விஷயமாக பெருமாளுக்கு ஏதோ சந்தேகம் வர,அலமாரியில் அடுக்கியிருந்த நோட்டை எடுக்கும் போது, சில புத்தகங்கள் கீழே விழுந்தது.

எல்லாத்தையும் மீண்டும் எடுத்து அடுக்கும் போது, ஒரு நோட்டு மட்டும் அங்கிருந்த சேரின் கீழே விழுந்து கிடந்தது.

கீழே குனிந்து நோட்டை எடுக்கும் போது, முதல் பக்கத்தில் டாக்டர் சிந்து என்று எழுதியிருந்தது.அதை படித்ததும் தங்கையின் ஞாபகம் வர,குண்டு குண்டான கையெழுத்தில் இருக்கும் பக்கத்தை, சும்மா திருப்பி பார்த்தவரின் கண்ணில் பட்டது அது.

இதயம் வரைந்து அதனுள் வீர் என்று ஆங்கிலத்தில் எழுதியிருக்க, இதயத்திற்கு கீழே வித் யுவர் சிந்து என்று எழுதியிருந்தது.அதை பார்த்ததும் ,இத்தனை நாள் மனதிற்குள் உழன்டு கொண்டிருந்த கேள்விக்கான பதில் கிடைத்தது.

தங்கையின் மேல் கட்டுக்கடங்கா கோபம் வர, பாரு, பாரு என்று கூப்பிட்டுக்கொண்டே முற்றத்திற்கு வந்தார்.

பெருமாளின் குரலை கேட்டு, மாடுகளுக்கு புல்லு கட்டை போட்டுக்கொண்டிருந்த பார்வதியும், கவிதாவும் வேகமாக உள்ளே வந்தனர்.
அண்ணா என்று பார்வதி சொல்ல, இங்கே வா என்றார்.

பெருமாள் முகத்தில் இருந்த கோவத்தை பார்த்து, என்னாச்சுனு தெரியலையே??என்று நடுக்கம் வந்தது.

பயந்து கொண்டே பாருவும் அண்ணனிடம் செல்ல,உன் அக்கா எவன் கூட ஓடிப்போனாள்?.

அண்ணாஆஆஆஆ என்ன சொல்லுற என்றபடி பார்வதி அதிர,எல்லாரும் ஒன்னா தானே பள்ளிக்கூடம் போனீங்க?.அப்போ உங்களுக்கு தெரியாமல்,அவள் ஓடிப்போக வாய்ப்பே இல்லை.உண்மைய ரெண்டு பேரும் சொல்லிடுங்க.

நானே கண்டு பிடிச்சேன், ரெண்டு பேரும் செத்தீங்க என்றவாறு தங்கைகளை மிரட்டும் போது, வயலுக்கு சென்றிருந்த வள்ளியும், பிரகாசமும் வீட்டிற்குள் வந்தனர்.

பிள்ளைகளை பார்த்த பிரகாசம், என்னப்பா என்க, கையில் இருந்த நோட்டை எடுத்து வந்து பெற்றோரிடம் காட்டியவர், இதுங்களுக்கு உண்மை தெரியாம இருக்காதுப்பா.நானே அடிச்சி கொல்றதுக்கு முன்ன நீயே கேளு.

எம்மாடி உங்கக்கா பற்றி எதாவது தெரிஞ்சா சொல்லிடுங்கமானு வள்ளி கேட்க,சத்தியமா எங்களுக்கு இதைப்பற்றி எதுவும் தெரியாதென தங்கள் குல தெய்வத்தின் படத்தின் முன்பு போய் இருவரும் சத்தியம் செய்தனர்.

ஐயனார் மேல் பொய் சத்தியம் செய்தால் என்ன நடக்கும் என்று சிறு வயதில் அவர்கள் கேட்ட கதையால், எந்த சூழலிலும் சாமியின் மீது பொய்யாக சத்தியம் செய்யமாட்டார்கள்.

இருவரும் சொல்வது உண்மை என்று தெரிந்தவர்,சிந்துவின் ஆடைகள், படித்த புத்தகங்கள், அவள் பயன்படுத்திய பொருட்களை எல்லாம் எடுத்து போய் தோட்டத்தில் போட்டார்.பெரிய மகன் செய்வதையெல்லாம் கண்ணீரோடு பார்த்துக்கொண்டு தான் இருந்தனர் வள்ளியும், பிரகாசமும்.

கீழே போட்ட பொருட்களின் மேல், மண்ணெண்னைய் ஊற்றி தீயை வைத்தவர், இனி இதுங்க ரெண்டு பேர் மட்டும் தான் என் தங்கச்சிங்க.

இந்த நிமிஷத்தில் இருந்து அவள் செத்து போய்ட்டாள்னு, கிணற்றிலிருந்த தண்ணீரை இறைத்து, தனது தலையில் ஊற்றிக்கொண்ட பெருமாள் வீட்டின் உள்ளே சென்று விட்டான்.

பாருவும், கவிதாவும் எரிந்து கொண்டிருந்த தங்கள் அக்காவின் பொருட்களை பார்த்து, சத்தமில்லாமல் அழுது கொண்டிருந்தனர்.

வீட்டின் உள்ளே வந்த பெருமாளோ, தங்களது முன்னோர்கள் ஃபோட்டோ மாட்டியிருக்கும் இடத்தில், சிந்துவின் ஃபோட்டோவையும் மாட்டி, நெற்றியில் பொட்டை வைத்து சென்றான்.

தாமரையின் நினைவுகள்...

கார் தெருவிலிருந்து காட்டுப்பாதையை நோக்கிச்சென்று கொண்டிருந்தது.மேடம் என்று அந்த இளம்பெண் கூப்பிட, தாமரை என்றே சொல்லுங்க என்றாள்.

ஓகே என்றவள், இப்போ நாம் காரிலே நேராக சென்னையில் இருக்கும் மீனம்பாக்கம் ஏர்போர்டிற்கு போறோம் அங்கே உங்களுக்கு ஈவ்னிங் நாலு மணிக்கு ஃபிளைட்.

நீங்க பூனேல போய் இறங்கியதும், உங்களை பிக்கப் பண்ணிக்க ஆள் ரெடியாக இருப்பாங்கள்.இது தான் பிளான் என்றாள்.

ஓகே என்றவளிடம் புதிய செல்ஃபோனையும்,சிம்கார்டையும் கொடுத்தாள்.

அதை வாங்கியவள் தனது ஃபோனை ஆப் பண்ணி விட்டு, புது ஃபோனில், சிம்கார்டை பொருத்திய சிறிது நிமிடத்திலே, அந்த நம்பருக்கு வெளிநாட்டு நம்பரிலிருந்து கால் வந்தது.

" தாமரை அந்த பெண்ணை பார்க்க, நான் ஜெனி".

" அட்டென் பண்ணி பேசுங்க தாமரை".

" தயக்கத்தோடே அட்டென் பண்ணி காதில் வைக்க, ஹலோ தாமரை என்று லீனாவின் குரல் கேட்டது".

" நான் தான் லீனாக்கா என்க, சேப் தானே?, ஒன்னும் பிரச்சினை இல்லையே?".

" இல்லைங்கக்கா.சென்னைக்கு தான் போய்ட்டு இருக்கோம் என்க, ஜெனி என்னோட ஃப்ரண்டோட தங்கை தான்".

"தைரியமா போ, உனக்கு என்ன வேண்டுமோ நீ ஜெனி கிட்ட கேளு. அவ பார்த்துப்பாள் என்றவள், மேலும் சிறிது நிமிடம் தாமரையிடம் பேசி விட்டு ஃபோன் கால் கட்டானது".

" தாமரை, லீனாக்கா உன்னை பற்றி நிறைய சொல்லிருக்காங்க என்றாள் ஜெனி".

" அதற்கு சின்ன சிரிப்பை மட்டும் பதிலாக கொடுத்தவளிடம், நான் ஜெனி, கிரைம் பிரான்ச் இன் டெல்லி என்க, என்னாஆஆஆ போலிஸாஆஆஆ என்று அதிர்ந்தாள்".

" எஸ்சூஊஊஊ, ஏன் என்னையெல்லாம் போலிஸ்னு நம்ப முடியலையா?".

" அதற்கு தாமரையே, இல்லை நான் ஏதோ காலேஜ் படிக்கிற பொண்ணோனு நினைச்சிட்டேன்.நீங்க போலீஸ்னு சொன்னதும் கொஞ்சம் ஷாக், அவ்வளவு தான் என்றாள்".

" உன் வயசு தான் நானும். சோ நீ தாராளமா ஜெனினே கூப்பிடு என்க", ஓகே என்றவள், எப்படி இந்த ஊரை கண்டு பிடித்து வந்தீங்க? என்க, ஹாஹாஹா... கொஞ்சம் கஷ்டமாக தான் இருந்துச்சி.

பிறகு நம்ப கூகுள் மச்சி தான் வழி காட்டினாரு என்று ஜெனி சொல்ல, அவள் சொன்ன மாடுலேஷனை கேட்டு தாமரைக்கு இப்பொழுது சிரிப்பு வந்தது".

" கார் தேனூரை தாண்டி சென்னை செல்லும் ரோட்டில் இணைந்தது".அப்பொழுது, கார் ஓட்டிக்கொண்டிருந்த டிரைவர்,எம்மாடி ஜெனி, டீ, காஃபி குடிக்கிறீங்களா என்றார்".

" ஆமா டிரைவர்... இப்படியே பட்னி போட்டு கொல்லலானு முடிவு பண்ணிட்டீங்களா? என்ற ஜெனி,போற வழியில பார்த்து நிறுத்துங்க என்றவள்
லோட்டஸ் எனக்கு அபிஸியலா கொஞ்சம் மெயில் அனுப்ப வேண்டிய வேலை இருக்கு.

நீ கொஞ்சம் கண்ணை மூடி தூங்கு, நான் முடிச்சிட்டு வரேனென்று முன்பக்கம் இருந்த லேப்டாப்பை எட்டி எடுத்து, தனது வேலையை பார்க்க தொடங்கினாள்.

" கண்ணை மூடிய தாமரைக்கு,நேற்று கதிர் பண்ணிய செயல்தான் நினைவுக்கு வந்தது".இப்பொழுது தான் அவள் ஒரு உண்மையை உணர்ந்து கொண்டாள்".

" நேற்று அவள் கன்னத்தில் கதிர் மஞ்சள் பூசும் போது வந்த அதிர்வில்,இருட்டில் இடித்து விழுந்த போது வந்த சிலிர்ப்பும், ஏரிக்கரையில் நடந்த நிகழ்வில் வந்த உணர்வும், எல்லாம் ஒன்றாக இருந்தது".

" அப்போ மூன்று இடத்திலும் இருந்தது ஒருவன் தான் என்று தெரிந்து விட்டது".

" ஓஓஓ... நான் யாரென்று தெரிந்து தான், இப்படி நம்மை வேறு வழியில் வளைக்க முடிவு செய்திருக்கிறானென்று, அவளாகவே முடிவு செய்து கொண்டாள்".

" தாமரையோ கதிரின் முகத்தை நினைவு படுத்தி பார்த்தாள்".

"கடல் நீலத்தில் இரண்டு கைகளிலும் லேசாக மடித்து விட்டிருக்க, வெள்ளை வேஷ்டியும், இரண்டு புறமும் முறுக்கி விட்டிருந்த மீசையும், முகத்தில் அளவாக டிரிம் செய்திருந்த தாடியும் அவனை கம்பீரமான ஆண்மகனாக காட்டியது",

"அந்த நேரத்தில்,அவன் இருந்த உருவம், ஆழமாய் அவள் மனதில் பதிந்து விட்டதை, பாவம் தாமரை தான் உணரவில்லை".

" பட்டிக்காட்டான்".

சண்டியர் போல இருக்கான், அதான் இப்படி பண்ணிருக்கான் என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டவள், ச்சை இனி இதை நினைக்க கூடாத கண்ணை திறந்தவள் கடந்து சென்ற நிகழ்வுகளை நினைப்பதை தலையசைத்து கலைத்தாள்.

அம்மாடி... ஏ2பி ஹோட்டல் அங்க இருக்கு, போகலாமா என்றவாறே காரை ஓட்டிக்கொண்டிருந்தார் டிரைவர்.

வேலையில் மூழ்கியிருந்தவள், ம்ம் என்றபடியே தனது வேலையில் பிஸியாக இருந்தாள் ஜெனி.

லெப்ட் சைடு இன்டிகேட்டரை ஆன் பண்ணிய டிரைவர், காரை திருப்பி, திறந்திருந்த கேட் வழியாக உள்ளே சென்று பார்க்கிங்கில் காரை நிறுத்தினார்.

கார் நிற்பது கூட தெரியாமல் வேலையில் மூழ்கியிருந்தவளை, ஜெனி ஜெனினு தாமரை கூப்பிட,2 மினிட்ஸ் தாமரை.

மெயிலை அனுப்பி விட்டு லேட்டாப்பை ஃஆப் பண்ணியவள், போலாம் என்க, மூவரும் காரில் இருந்து இறங்கி, ஹோட்டலின் உள்ளே சென்றவர்கள் காலியாக இருந்த இருக்கையில் உட்கார, அவர்களிடம் வந்த சர்வர் என்ன வேண்டும் என்றார்?.

மனுஷன் குடிக்கிற போல, ஒட்டகப்பால்ல டீ ஒன்னு கொண்டு வாங்க என்றார் டிரைவர்.அவர் சொன்னதைக்கேட்ட பெண்கள் இருவருக்கும் சிரிப்பு வந்தது.

சர்வரோ டிரைவரை முறைத்து பார்க்க, சும்மாப்பா என்றவர், அவருக்கு தேவையானதை சொல்லியவர், நீங்களும் சொல்லுங்க.

இருவரும் அவர்களுக்கு வேண்டியதை சொல்லியதும், சர்வர் அங்கிருந்து சென்றுவிட.யோவ் மாமா, வாயை வச்சிக்கிட்டு சும்மா இருக்க மாட்டியா? என்றாள்.

எதே மாமாவாஆஆஆஆ என்று தாமரை அதிர,ஆமா தாமரை, என் உசுர வாங்கவே பொறந்து வளர்ந்த பிசாசு, அது மட்டுமில்லாமல், மூன்று முடிச்சி கழுத்தில் போட்ட புண்ணாக்கு புருஷனென்று ஜெனி சொல்ல,என்ன இவங்க உங்க புருஷனாஆஆஆஆ? என்று மீண்டும் அதிர்ந்தாள்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
346
அந்த நேரம் வீட்டிற்கு வந்த சிவசாமி, சிந்துவின் ஃபோட்டோவில் பொட்டு இருப்பதை பார்த்து, வள்ளி எம்மா வள்ளி என்று கூப்பிட்டுக் கொண்டே வீட்டின் முற்றத்திற்கு வந்தார்.

சிவசாமியின் குரலை கேட்டு, கவிதாவும், பார்வதியும்,அங்கு வந்தனர்.

அம்மாடி, வள்ளியும் மச்சானும் எங்கே? என்க, மணி அண்ணன் வீட்டு குழந்தைக்கு உடம்பு முடியலைனு, அப்பாவும், அம்மாவும் பார்க்க போயிருக்காங்க மாமா என்றாள் பாரு.

என்னத்தா?,சிந்து ஃபோட்டோவை மாட்டி, அதுக்கு போய் பொட்டு வச்சிருக்கு? என்று வருத்தமாக கேட்க, அப்பொழுது தனது அறையில் இருந்து வெளியே வந்த பெருமாள், வேற என்ன மாமா செய்யனும்?.சொல்லுங்க? என்றவன்,அவரிடம் நோட்டில் பார்த்த விஷயத்தை சொல்ல, சிவசாமியும் அதிர்ந்து தான் போனார்.

நம்ப சிந்துவா இப்படி?? என்று, அவரால் நம்ப முடியவில்லை.

இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது, வீட்டிற்குள் வந்து வள்ளியிடமும் பிரகாசத்திடமும், சிந்து பற்றிய விஷயத்தை சொல்லி, இனி மகள், மண்ணாங்கட்டினு ஏதாச்சும் இந்த வீட்டில் பேச்சு இருந்துச்சு, நடக்கிறதே வேறு என்று சொல்லி விட்டு, வெளியே சென்று விட்டார்.

மகன் சொல்லிப் போனதை கேட்டு, இருவருக்கும் வேதனையாக இருந்தது.

சிந்துவை தவிர,இதற்கு யாரும் பதில் சொல்ல முடியாது? .

இதற்கு, காலம் தான் பதில் என்று சொல்லியவாறே, தூணில் சாய்ந்து கண்ணை மூடிக்கொண்டார் பிரகாசம்.

பின்னர் வந்த நாட்களில்,மனதிற்குள் இருக்கும் கவலையை மறைத்துக்கொண்டு, நடமாட தொடங்கினர் பிரகாசமும், வள்ளியும்.

சிந்து எப்பொழுது ஓடிப்போனாள் என்று தெரிந்ததோ, அன்றிலிருந்து முன்னோர்களுக்கு அம்மாவாசைக்கு படைக்கும் போதெல்லாம், அவள் படத்திற்கும் மாலை போடுவதை பெருமாள் வழக்கமாக்கிக்கொண்டார்.

மகனின் செய்கையை தடுக்க முடியாமல், பெற்றோர்கள் இருவரும் தவித்தனர்.

நாட்களும், வாரங்களாகவும், மாதங்களாகவும்,பின்னர் வருடங்களாகவும் கடந்து சென்றது.

வேதாவும் பள்ளி படிப்பை முடித்தவள், நர்சிங் படிக்க விரும்புவதாக வீட்டில் சொல்ல,அதற்கு கலாவோ இவ்வளவு தூரம் உன்னை படிக்க விட்டதே பெரிது என்றார்.

அம்மா, அவங்க பண்ணியதற்கு நான் ஏன் என் படிப்பை பாதியில் நிறுத்தனும்?என்று வேதாவும்,தாயோடு சண்டை போட்டாள்.வேதாவின் படிப்பு விஷயம் பற்றி, பிரகாசம் வீட்டிற்கு தெரிந்தது.

பெருமாள் தான் தனது அத்தையிடம் பேசி, மதுரையில் இருந்த கல்லூரியில் வேதாவிற்கு அட்மிஷன் வாங்கித்தந்து, ஹாஸ்டலில் சேர்த்து விட்டவர், படித்து நல்லபடியா வாம்மா என்று சொல்லிச்சென்றார்.

லாரன்ஸும், முத்துவும் கல்லூரி படிப்பை முடித்தனர்.

கல்லூரியில் நடந்த கேம்பஸில் கலந்து கொண்டதில்,முத்துக்கு கோவையில் உள்ள கம்பெனியிலும்,லாரன்ஸிற்கு சென்னையிலும்,வேலை கிடைத்தது.

பிள்ளைகளுக்கு திருமண வயதும் வந்து விட்டதை உணர்ந்த பெற்றோர்கள், அதற்கான வேலையில் இறங்கினர்.

பார்வதியை தனது அண்ணன் மகன் செல்வத்திற்கு கட்ட விரும்புவதாக, கணவரிடம் வள்ளி சொல்ல, பாக்கலாம்,கடவுள் யாருக்கு, எங்கே முடிச்சு போட்டுருக்காறோ? என்றார் பிரகாசம்.

முதலில் பெருமாளுக்கு பொண்ணு பார்க்க ஆரம்பித்தனர்.

அப்பொழுது, ஏனாதி என்ற ஊரில், தூரத்து உறவில் பெண் இருப்பதாக தெரிய,இந்த நாளில் வரோம் என்று அவர்களுக்கு தகவல் அனுப்பினர்

ஏனாதி...

எம்மாடி சீதா, இன்றைக்கு ஒரு நாளாவது நீ வீட்ல இருத்தா.மாப்பிள்ளை வீட்ல இருந்து வரும் போது, நீ அப்போ இல்லைனா நல்லாவா இருக்கும்? என்றார் சீதாவின் அப்பா காளி.

ஏன் பா, நம்ப சூழ்நிலைய புரிஞ்சிக்கிறவங்க தான் மனுஷங்க.
வருஷ கணக்கா நமக்கு சோறு போடுற நிலம் பா.அதுல நடக்குற வேலைக்கு நான் போகாம, ஊட்டுல உட்கார்ந்து மோட்டு வளையவே பாத்துக்கிட்டு இருந்தா சரியா வருமா?.அம்மாவோட உசுரு அங்க தான் பா சுத்திக்கிட்டு கடக்கு.

அங்க போய் கால வச்சா, என் அம்மா கூட இருக்க போல இருக்குப்பா, தாய பாக்காம எப்படிப்பா என்னால் இருக்க முடியுமென்று கேட்டு, கண் கலங்கினாள்.

மகளின் பேச்சை கேட்ட காளி, எம்மாடி நீ போத்தா, போய் உன் ஆத்தாள பார்த்துட்டு வா.

அப்பா,சமைச்சது எல்லாம் உறியில இருக்கு.மறக்காம சாப்டுங்க, நடவு கொஞ்சம் நெருங்குனதும் நான் வந்துடுறேன் என்றுச் சொல்லிய சிதாவோ,நீராகரம் கலந்த மோரை வாளியில் எடுத்துக்கொண்டு, தங்களது நடவு வயலை நோக்கிச் சென்றாள்.

பிரகாசம், வள்ளி, பொன்னுரங்கன், மற்றும் சிவசாமி தம்பதியினர் ஐவரும் பதினோரு மணி பஸ்ஸில் வந்து ஏனாதியில் இறங்கினர்.வெயில் உச்சிக்கு ஏறும் நேரமென்பதால், சுள்ளென்று சுட்டெரித்தது.சீதாவின் வீட்டை விசாரித்துக்கொண்டே, அவள் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

வந்தவர்களை வாங்க என்று சொல்லிய காளி, காலையிலே சீதா கரைத்து வைத்துச்சென்ற மோரை எடுத்து வந்து கொடுத்தார்.கலாவும், வள்ளியும் வீட்டை பார்வையால் அலச, சுத்தம் பத்தமாக இருந்தது.

எப்படி உறவென்று காளியிடம் பேசிக்கொண்டிருக்கும் போது, வயலுக்கு சென்ற சீதாவும் தோட்டத்து வழியாக வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.

தோட்டத்தில் இருந்த குளியல் அறையில் வேக வேகமாக குளித்து முடித்தவள், உள்ளே வந்து புடவையை கட்டி,பொட்டு மட்டும் வைத்து, தலையை பின்னியவள், திண்ணையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பவர்களிடம் வந்தவள், வாங்க வாங்க என்றாள்.

அப்பா மோர் குடுத்தாங்களாமா? என்று கலாவையும், வள்ளியையும் பார்த்து கேட்க, ஆச்சுத்தா என்றவர்களிடம், வயல்ல நடவு போகுதுமா.நாம இல்லைனா வேலை சரியா ஆகாது, அதனால் தான் போய் விட்டேன்மா.
நீங்க வரும் போது வீட்டில் இல்லைனு தப்பா எடுத்துக்க வேண்டாம்.

சீதாவின் பேச்சும், பொறுப்பும், பாசாங்கு இல்லாமல் பழகும் விதமும்,பார்த்தவுடன் தங்கள் குடும்பத்திற்கு ஏற்ற பெண், இவள் தான் என்று அவர்களுக்கு திருப்தியானது.

அப்பொழுது மகளை பற்றி பேசினார் காளி.

ரெண்டு புள்ளைங்களுக்கு விவரம் தெரியாத வயசுலே என் மனைவி இறந்துட்டாள்.அப்போ இருந்து என் மகள் தான் அம்மாவா இந்த குடும்பத்தை தாங்குது.சின்ன புள்ள, பக்கத்து ஊர்ல படிக்குது.எனக்கு பிறகு, இருக்கும், நிலபுலன்கள் தன்னோட இரண்டு மகள்களுக்கு தான்.

கடவுள் தயவால, ரெண்டு புள்ளைங்களுக்கும் என்னால் முடிஞ்சதை சேர்த்து வச்சிருக்கேன்.
யாரும் ஒரு குறை சொல்ல வழியில்லாமல்,என் சக்திக்கு முடிஞ்சதை சீதனமா செய்யுறேங்க என்றார்.

அவர் பேச்சை கேட்ட பிரகாசம், ஊட்டுக்கு எனக்கு மருமகள் தான் வேண்டும்.மத்தது எல்லாம் அந்த ஐய்யனார் புண்ணியத்துல இருக்குங்க.
சொந்த பந்தம் ஊட்டுக்கு வந்தா, அனுசரித்து போகுற குணம் உள்ள பொண்ணு தான் நாங்க தேடுறது.
மருமவளை பார்த்ததும், என் மகனுக்கு ஏற்ற புள்ளை இதானு புரிஞ்சிட்டு என்றார்.

அதான் மச்சானே மருமகள்னு சொல்லிட்டாரே பங்காளி, இனி நாளை வளர்த்தாமல் ஆக வேண்டியதை பார்க்கலாம் ,அம்மாடி சீதா, உள்ள போய் தாம்பாலம் எடுத்துவாத்தா என்றார் சிவசாமி.

சீதாவும் தாம்பாலம் எடுத்து வந்து கொடுக்க, வாங்கிட்டு வந்த பூ, பழங்களை அதில் வைத்து காளியின் கையில் கொடுத்தனர்.

சரிங்க நாங்க கிளம்புறோம், சீக்கிரம் நல்ல சேதி சொல்லுறோம் என்று எழ, கண்டிப்பா சாப்பிட்டு தான் போகனும் என்று தந்தையும், மகளும் சொல்லி விட்டனர்.

அடுப்பங்கறைக்கு சென்ற சீதா, இரண்டு அடுப்பை பற்ற வைத்து, வேக வேகமாக சமையலை முடித்தவள், தோட்டத்திற்கு சென்று, ஆறு வாழை இலையை அறுத்து வந்தாள்.

ஆண்கள் நால்வரும், அரசியல் நிலவரத்தை பேசிக்கொண்டிருந்தனர். பெண்கள் இருவரும், அவர்கள் பேசுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.

வாசல் படியில் வந்து நின்றவள் அப்பா, எல்லாரையும் கூப்பிட்டு வாங்க சாப்பிடலாம் என்றாள்.

அனைவரும் கையை கழுவிட்டு வந்து உட்கார,இலையை போட்டு, சமைத்தவைகளை பரிமாற, அவளின் கை பக்குவத்தை பாராட்டிக்கொண்டே சாப்பிட்டு முடித்தனர்.

பின்னர் இருவரிடம் சொல்லிக் கொண்டு, ஐவரும் சீமக்கரைக்கு வந்து சேர்ந்தனர்.

பெருமாளிடம், பொண்ணையும், அவளின் குடும்பத்தை பற்றி பெருமையாக சொல்ல, உங்களுக்கு பிடித்திருந்தால் எனக்கும் சம்மதம் என்று சொல்லிவிட்டான்.

மச்சான் எனக்கு ஒரு யோசனை தோணுது என்று பொன்னுரங்கன் சொல்ல, என்னனு சொல்லு மச்சான்? என்றார் பிரகாசம்.

கண்ணன் வீடு...

அப்பா எனக்கு பார்வதியை தான் பிடிச்சிருக்கு.இத்தனை வருசமும் சிந்துவ கட்டிக்க சொல்லி உசுர வாங்குன.இப்போ, அந்த கவிதா புள்ளைய கட்டிக்க சொல்லிட்டு இருக்க.

எனக்கு கல்யாணம் நடந்தால் அது பார்வதியோட தான் என்று மகன் தீர்மானமாக சொல்வதைக்கேட்ட வேலுச்சாமி, என்னடா பைத்தியம் ஏதாவது புடிச்சிட்டா?.அப்பன்,ஆத்தா இல்லாத புள்ளைய கட்டி என்ன பண்ண போற நீ?.

நான் சொல்ற போல கேளு, உனக்கு நம்ப பிரசிடென்ட் பதவியும் கிடைக்கும், பொண்ணும் கிடைக்கும் என்றார்.

அப்பா, நான் சொல்றத முதல்ல நீ கேளு.பார்வதிய கட்டுனா, அவள் அப்பன் சொத்துக்கு பங்குக்கு வர ஆள் கிடையாது.இதே நீ சொல்லும் கவிதானா, அவளுக்கு ரெண்டு அண்ணனுங்க. பங்கு பிரியும். நல்லா யோசி என்றான் கண்ணன்.

மகன் சொன்னதை யோசித்தவர், நீ சொல்றதும் சரி தான் தம்பி.இப்பவே நான் போய் இதை பேசி முடித்துட்டு வரேன் என்று சொல்லி விட்டு, பிரகாசம் வீட்டிற்கு வந்தார் வேலுச்சாமி.

வாங்க மச்சான், ஏது இவ்வளவு தூரம்?.

நல்ல விஷயம், எதுக்கு அதை தள்ளி போடனும் என்று தான் வந்தேனென்று வேலுச்சாமி சொல்ல,விஷயத்தை சொல்லு பங்காளி, என்னனு நாங்களும் தெரிஞ்சிப்போம் என்றார் சிவசாமி.

நம்ப கண்ணனுக்கு பார்வதிய கேட்டு வந்துருக்கேன் என்று வேலுச்சாமி சொல்ல, அண்ணா, எம் மவளுக்கு, என் அண்ணன் மவன் செல்வத்தை, ஏற்கெனவே பேசி முடிச்சிட்டோமே என்று வள்ளி சொல்லிட,என்னமா சொல்லுறனு கண்ணனின் அப்பா பதற, ஆமாங்கண்ணா.என் பெரிய மவனுக்கு, ஏனாதில பொண்ணு பார்த்து முடிச்சிட்டோம்ணா.

செல்வம், அன்பு, பெருமாள் மூனு பேரும் ஒரே செட்டு புள்ளைங்க.சரி செல்வத்துக்கும், பெருமாளுக்கும் முதல்ல கல்யாணத்தை முடிச்சிடலானு பேசிக்கிட்டு இருந்தோம், நீங்க வந்தீங்க..

ஓஓஓ அப்படியா சங்கதியென்று சுரத்தேயில்லாமல் சொல்லியவர், ரெண்டு பொண்ணுல ஒரு பொண்ண, என் வீட்டுக்கு மருமகளா கொடுக்கலாமே தங்கச்சி? என்று, திரும்பவும் பேசி பார்த்தார்.

அண்ணா எனக்கும் உனக்கு பொண்ணு கொடுக்க ஆசை தான்.ஆனால் என்ன செய்ய?.கடவுள் எனக்கு ரெண்டு மகளை தானே கொடுத்து இருக்கிறார்.

என்ன மச்சான் தங்கச்சியே பேசிட்டு இருக்கு, நீங்க எதுவுமே சொல்லாம இருக்கிறீங்க? என்று பிரகாசத்திடம் வேலுசாமி கேட்டு பார்க்க,நான் சொன்னா என்ன, உன் தங்கச்சி சொன்ன என்ன மச்சான், விஷயம் ஒன்று தானே.

மச்சான் வீட்டிலிருந்து பொண்ணு எடுக்கலாம்னு ரொம்ப நம்பிக்கையோடு வந்தேன்,ஆனால் யாருக்கு எங்க முடிச்சு போட்டுருக்கோ என்று சொல்லிக் கொண்டவர்,சரிங்க மச்சான்.
நான் கிளம்புறேனென்று தனது ஏமாற்றத்தை அப்பட்டமாக முகத்தில் காட்டிக்கொண்ட வேலுச்சாமியும் அங்கிருந்து சென்றார் .

கண்மணி வருவாள்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top